குழல் - 22
முகம் முழுக்க கோபத்துடன் மாடியில் இருந்து விறுவிறுவென இறங்கி வேகநடை போட்டு தோட்டப் பகுதிக்கு சென்று நின்றிருந்தான் இளங்கோ.
காலையில் இருந்து இனிக்க இனிக்க சிரித்தபடி வலம் வந்து கொண்டிருந்தவன் கண்கள் சிவந்து கொதிக்கும் முகத்துடன் வெளியே செல்வதை கவனித்த ரஞ்சனி அவனை பின் தொடர்ந்து வெளியே சென்றாள். பிடரியை அழுத்தமாக நீவியபடியே இங்கும் அங்கும் நடந்து கொண்டிருந்தான் இளங்கோ.
“என்னாச்சு இளா..? ஏன் இவ்வளவு கோபமா இங்கே வந்து நிக்கிறீங்க..?”
கோபம் குறையாமல் திரும்பியவன் “அந்த பரதேசி நாய்க்கு பைத்தியம் பிடிச்சு கிடக்குது…”
பற்களை நறநறத்தபடி சத்தமாகக் கூற “அய்யோ… என்ன இது இவ்வளவு கோபம்..? முதல்ல அமைதியா பேசுங்க…” என்றபடி அவன் கைப்பிடித்து அங்கிருந்த சிமெண்ட் மேடையில் அமர்த்தி தானும் அருகில் அமர்ந்து கொண்டாள்.
“அமர் அண்ணா கூட ஏதாவது பிரச்சனையா..?”
“அவன் என்னடி இப்படி இருக்கான்..?”
எரிச்சலாக கூறி பட்டென தன் தலையில் அடித்துக் கொண்டான்.
“என்னன்னு சொன்னாதானே எனக்கும் புரியும்…”
“இன்னைக்கு என்ன நாள்டி..? காலையிலதானே திலோ கழுத்துல தாலி கட்டினான். நியாயமா இன்னைக்கு நைட் அவங்களுக்குள்ள என்ன நடக்கணும்..? அவன துரத்தி துரத்தி வந்து அவன் மனசை அசைச்சு அவனுக்கு பொண்டாட்டியும் ஆகி சந்தோஷமா சுத்திட்டு இருக்கா திலோ. இந்த நாயும் ஆசைப்பட்டுதானே அவளை கட்டிக்கிட்டான். அவன் வாழ்க்கை இனிமே திலோகூட நிம்மதியா சந்தோசமா அமையப் போகுதுன்னு நான் காலையில இருந்து அவ்வளவு சந்தோஷமா சுத்திட்டு இருக்கேன்… இப்ப என்னை கூப்பிட்டு என்ன சொன்னான் தெரியுமா..?”
“என்ன சொன்னார்..?” என்றவளின் இதயம் படபடத்தது.
“இன்னைக்கு சாந்தி முகூர்த்தத்துக்கு எந்த அரேஞ்ச்மெண்ட்டும் பண்ணக் கூடாதாம். இப்போதைக்கு பண்ணவே கூடாதாம்… அவனுக்கு கண் பார்வை வந்ததுக்கு அப்புறம்தான் எல்லாமாம்… இந்த மாதிரி சடங்கு சம்பிரதாயம் எல்லாம் நாங்க பார்த்துக்கிறோம்… வேற எந்த வேலையும் பண்ண வேணாம்னு பைத்தியம் மாதிரி உளறிட்டு இருக்கான்…”
“ஏன் திடீர்னு இப்படி..?”
“திலோகிட்ட இது விஷயமா முதலிலேயே பேசிட்டானாம்… அவளும் சரின்னு சொல்லிட்டாளாம்… அவன் கேட்கும்போது முடியாது எல்லாம் உடனே நடக்கணும்னு ஒரு பொம்பளப்புள்ள சொல்லுவாளா..? வாழ்க்கையை ஆரம்பிக்கிறதுக்கும் பார்வை வர்றதுக்கும் என்னடி சம்பந்தம்..? ஒருவேளை பார்வை திரும்பாமலே போயிட்டா காலம் முழுக்க அவளை தண்டிக்கப் போறானா..?”
“ஏன் இப்படி நெகட்டிவா பேசுறீங்க இளா..? அவருக்கு பார்வை நிச்சயமா வந்துரும்…”
“வரட்டும்டி… வரணும்னுதானே எனக்கும் ஆசை... திலோவும் ஏதோ தீவிரமா அதுக்கான வேலை எல்லாம் செஞ்சு அவளும் நம்பிக்கையோடதானே இருக்கா. ஆனா இவன் சொல்ற இந்த ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ் சரி வருமா..?”
“இந்த விஷயத்துல நீங்களும் நானும் ரொம்ப டீப்பா இறங்கி எதுவும் பேச முடியாது… அவங்க ரெண்டு பேருமே ஒரு விஷயத்தை பேசி முடிவு பண்ணதுக்கு அப்புறம் அவங்களே இதெல்லாம் பார்த்துக்கட்டும்… நீங்க ஏன் இப்படி கொதிச்சுப் போய் இருக்கீங்க..? கூல் ஆகுங்க. திலோ அதெல்லாம் பாத்துப்பா…”
அவன் விரல் கோர்த்து மென்மையாக வருடியபடியே அமைதியான குரலில் கூற கோபம் சற்று தணிந்து இழுத்து பெருமூச்சு விட்டான் இளங்கோ.
“இப்போ என்ன..? பழையபடி அவ எதிர் வீட்ல போய் குடி இருக்கணும்னு வேற சொல்லி வச்சிருக்காரா..?”
“அப்படி மட்டும் சொல்லி இருந்தான்னா மூஞ்சி மொகரையெல்லாம் பேத்து விட்ருப்பேன்… ஒரே அறைக்குள்ள இருப்பாங்களாம்… கணவன் மனைவியா எல்லா உரிமையும் எடுத்துப்பாங்களாம்… அது மட்டும் அப்புறம்தானாம்…”
“அப்புறம் என்ன..? பொண்டாட்டியை பக்கத்துல வச்சுக்கிட்டு வேடிக்கை பார்த்துட்டே உட்கார்ந்து இருப்பாரா..? இனி அவங்க பாடு… இப்போ அவங்க புருஷன் பொண்டாட்டி… ஒரு எல்லைக்கு மேல நீங்களும் நானும் மூக்கை நுழைக்கக் கூடாது… புரிஞ்சுதா..?”
உரிமையோடு சொன்னவளிடம் புன்சிரிப்புடன் திரும்பினான் இளங்கோ.
“நான்கூடதான் உன்னை பக்கத்துல வச்சுட்டு எதுவுமே பண்ணாம ரொம்ப ரொம்ப நல்ல பையனா இருக்கேன்…”
உதட்டை குவித்து ஒரு மார்க்கமாய் சிரித்தபடி கூறியவனை செல்லமாய் முறைத்தாள் ரஞ்சனி.
“நான் இன்னும் உங்க பொண்டாட்டியாகல சார்…”
“இருந்தாலும் காதலியா, கைப்பிடிக்கப் போற மனைவியா சில உரிமைகள் உரிமை மீறல்கள் இதெல்லாம் பண்ணினாதானே லைஃப் கொஞ்சம் கிக்கா இருக்கும்…” என்றவன் ஒற்றைக் கண் சிமிட்டி சிரிக்க,
“கல்யாணம் முடிஞ்ச அன்னைக்கு நானும் அமர் அண்ணா மாதிரி இப்படி ரூல்ஸ் போட்டா என்ன பண்ணுவீங்க..?” குறும்புச் சிரிப்பை அடக்கியபடி கேட்டாள் ரஞ்சனி.
“ரூல்ஸ் போட்ட வாயை பேசவே முடியாதபடி என்னோட ஸ்டைல்ல பஞ்சர் பண்ணி விட்டுடுவேன்… கையை காலை கட்டி தூக்கிட்டுப் போய் கற்பழிப்புதான்…” என்றவன் அடக்க முடியாமல் சிரிக்கத் தொடங்க அவளோ அடிக்கத் தொடங்கியிருந்தாள்.
அந்த தனி அறையில் கணவன் மனைவியாக மாறிப் போயிருந்த திரு அண்ட் திருமதி அமரவர்மன். எவ்வித அலங்காரங்களும் இல்லை… அந்த அகன்று விரிந்த கட்டிலில் ஆளுக்கு ஒரு மூலையில் முதுகு காட்டி உறங்கப் போகிறவர்களுக்கு அலங்காரம்தான் ஒரு கேடோ..?
எக்கேடோ கெட்டு ஒழியுங்கள் என்று ரஞ்சனி திலோ குடியிருந்த எதிர் வீட்டு மாடிக்கு சென்றுவிட இளங்கோ அங்கிருந்த அவனது அறைக்குள்ளேயே முடங்கிக் கொண்டான்.
அந்த இரவு நேரத்தில் அமரனின் மனைவியாக அவனது அறையில் அவனது படுக்கையில் அவனது அருகில் அமர்ந்திருப்பதே பேரானந்தத்தை தோற்றுவித்திருந்தது திலோத்தமாவிற்கு.
அவன் கேட்டுக் கொண்ட விஷயத்திற்கு அவளிடம் ஒரு துளியும் உடன்பாடு இல்லை என்றாலும் அதனை மறுதலித்து பேச மனமும் இல்லை. பார்த்துக் கொள்ளலாம்… இன்றைய இரவுபோல் அனைத்து இரவுகளும் தொடர்ந்து விடுமா என்ன என்று தனக்குள் ஒரு எண்ணத்தை விதைத்துக் கொண்டாள்.
“என்மேல கோபமோ வருத்தமோ உனக்கு இல்லையே…”
அவள் முகவடிவை கையில் ஏந்தி அளந்தபடி பொத்தாம் பொதுவாக அவளை பார்த்தபடியே கேட்டான் அமரன்.
“அதெல்லாம் ஒன்னும் கிடையாது அமர்… எனக்கு ஒரே ஒரு விஷயத்துக்கு மட்டும் அனுமதி கொடுத்தா போதும்…”
“என்ன..?”
தினமும் தூங்கும்போது உங்களை அணைச்சுக்கிட்டு உங்க நெஞ்சில தலைவச்சு படுக்கணும்… அதுக்கு அனுமதிப்பீங்களா..?”
“என்னடி இது..?”
அவள் கேட்டதில் அவனுமே சங்கடமாகி அவள் முகத்தை இழுத்து நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டு இருந்தான். அவள் ஆசைப்பட்டது போன்றே அவளை இழுத்து இறுக்கி அணைத்து நெஞ்சில் போட்டபடியே கண்மூடிக் கொண்டான்.
இருவரும் தவக்கோலம் பூண்ட முனிவர்கள் அல்லவே… உணர்வுகளை கட்டுப்படுத்தத் தெரிந்த ரிஷிகளும் அல்லவே… இயல்பான உணர்வுகள் அவர்களுக்குள்ளும் துள்ளிக் கொண்டுதான் எழும்பின. இதழ் முத்தத்திற்குள் இறங்காத வரையில் தனது உணர்வுகள் தன் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் என்ற பெரிய நம்பிக்கை அமரனுக்கு.
சிலிர்க்கும் உணர்வுகளை தனக்குள் கட்டுப்படுத்தி அவள் கன்னத்தில் முத்தமிட்டு உறங்க முயற்சி செய்தான். அவனது அணைப்பு தந்த இதத்தில் சிறிது நேரம் கிளர்ச்சியோடு மனம் அலை பாய்ந்தாலும் ஒரு கட்டத்தில் உறங்கிப் போயிருந்தாள் திலோத்தமா. அவளை அணைத்துப் படுத்தவுடன் உடலில் தோன்றிய மாற்றமும் இதயத்தில் ஏற்பட்ட படபடப்பும் மெல்ல மெல்ல தணிய தன்னை சமநிலைப்படுத்தி தானும் உறங்கி இருந்தான் அமரன்.
இதோ அடுத்தடுத்த மூன்று நான்கு நாட்கள் ஓடியிருந்தன. ரஞ்சனி தனது வேலையை பார்க்க தனது இடம் நோக்கி கிளம்பி இருந்தாள். புதுமணப்பெண் என்பதால் ஐந்து நாட்கள் வேலைக்கு விடுப்பு எடுத்து இருந்தாள் திலோத்தமா.
திருமணம் முடிந்த மறுநாளே முதல் ஆளாக கிளம்பி தயாராகி நின்ற நண்பனை எரிச்சலும் கோபமுமாய் பார்த்தான் இளங்கோ.
“டேய் வெண்ண… நீ எந்த ஆணியும் புடுங்கலைன்னு வெளில இருக்குற எல்லாருக்கும் தெரியணும்னு அவசியம் இல்ல… எப்படியும் ஹனிமூன் கிடையாது… அதுக்கு வாய்ப்பே இல்ல… வாயை மூடிக்கிட்டு அஞ்சு நாளாவது வீட்ல இரு…”
“நிறைய ப்ரோக்ராம்ஸ் இருக்குதுடா…”
நீ ஒருத்தன்தான் உலகத்திலேயே இசை ஆட்சி பண்றவனா..? ராஜா அண்ணா உனக்கு பதிலா வேற ஒருத்தனை தனியா ஏற்பாடு பண்ணி வச்சிருக்கார். நீயே கிளம்பி வந்து எல்லாரும் கேள்வி கேக்குற மாதிரி பண்ணிடாதே. ரெண்டு பேரும் தனியா இருந்தாலும் இங்கே எதுவும் நடக்கப் போறது இல்லேல்ல. சும்மா பேசி சிரிச்சாவது அவகூட டைம் ஸ்பென்ட் பண்ணுடா எரும…”
பல்லை கடித்து உறுமியவன் தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு பறந்திருந்தான்.
“அண்ணா செம காண்டுல இருக்காங்க போல…” சிரித்தபடியே அவன் அருகில் வந்து அமர்ந்தாள் திலோ.
“ஆமாடி… அவன் அப்படித்தான்… சரியாயிடுவான் விடு…”
இப்படித்தான் இருவரும் தனிமையில் ஒன்றாக சமைத்து பேசி விளையாடி கிள்ளி முத்தமிட்டு அவளை மடியில் அமர்த்தி அவள் தோள் வளைவுக்குள் புதைந்து என்று மற்ற அழகான சிறு சிறு சீண்டல்களும் சந்தோஷங்களும் குறைவே இல்லாமல் அவர்களுக்குள் நடந்து கொண்டுதான் இருந்தன… அந்த ஒன்றை தவிர.
தன்னவனின் அந்த அருகாமையும் காதலும் தன் கணவன் என்ற எண்ணமும் அந்த வீட்டில் உரிமையாக வலம் வரும் ஒவ்வொரு சூழலும் தன் ஆசைப்பட்ட கற்பனை உலகத்திற்குள் விரும்பிய வாழ்க்கைக்குள் நுழைந்துவிட்ட எண்ணத்தை திலோவிற்குள் விதைத்திருந்தன. மகிழ்ந்து பூரித்துக் கிடந்தாள். தன்னவனின் இன்னும் நெருக்கம் கலந்த ஸ்பரிசங்களையும் முத்தங்களையும் மனம் எதிர்பார்த்தாலும் தானாக நெருங்கிச் சென்று அவனோடு இழைய அவளது பெண்மை இடம் கொடுக்கவில்லை.
தினமும் ஒரே கட்டிலில் ஒருவரை ஒருவர் அணைத்தபடிதான் உறங்கிக் கொண்டிருக்கின்றனர். வரைமுறை தாண்டாமல் அவனும் தான் நினைத்ததை நிகழ்த்திக் கொண்டிருக்கிறான். அவளுக்குள் அது பெரும் பாரமாக அழுத்திக் கொண்டுதான் இருக்கிறது. மாற்றத்தை தேடி தன்னை நாடி வரவேண்டும் என்று ஏக்கத்தோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாள்.
அமரனின் நிலையும் கவலைக்கிடம்தான். தனது எண்ணத்தை அவரளிடம் வெளிப்படுத்தி விட்டான். ஆனால் அவளது இத்தனை நெருக்கமான அருகாமையில் அவள் வாசம் அவனுக்குள் பெரும் கிறக்கத்தை உருவாக்கிக் கொண்டிருக்கின்றது ஒவ்வொரு இரவும் கடுமையாக கழிகின்றன.
தேவையற்ற பிடிவாதமான எண்ணத்தை மனதில் பதித்துக் கொண்டோமோ என்று தோன்றாமல் இல்லை. காதலும் இளமையும் உடலுக்குள் போதையை அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. அவள் அவனை நெருங்கி படுத்து இறுக அணைத்துக் கொள்ளும்போது உறங்கிக் கொண்டிருக்கும் உணர்வுகள் விழித்து அவனை ஆட்டிப் படைக்கின்றன. இரவுகள் கொடுமையாகின்றன… தானாக விரும்பி தேடிக் கொண்டதுதானே.
‘இது உனக்கு தேவையாடா..? உனக்காக அவ எவ்ளோ பண்ணிருக்கா… இன்னும் எவ்வளவோ பண்ண காத்திருக்கா… ஒரு வகையில நீ அவளுக்கு தண்டனை கொடுக்கிற. உன்ன காதலிச்சு கட்டிக்கிட்ட பாவத்துக்கு உன் ஆசை எல்லாத்துக்கும் அவ தலையாட்டுறா. உனக்குள்ள ஏற்பட்ட இதே உணர்வு மாற்றங்கள் அவளுக்கும் இருக்கும்தானே. ஒரு பொண்ணா என்னதான் உன் பொண்டாட்டியா இருந்தாலும் அவளோட ஆசையை உன்கிட்ட வெளிப்படுத்துவாளா..? இந்த விஷயத்தை கொஞ்சம் கன்சிடர் பண்ணுங்க அமர்..’
சபலம் கொண்ட மனது அவனை திசைதிருப்ப முயற்சித்துக் கொண்டிருந்தது. இப்பொழுதெல்லாம் அவளை அணைக்கும்போது விரல்கள் வேண்டத்தகாத பகுதிக்குள் பயணிக்க முயற்சிக்கின்றன… முத்தமிடும் இதழ்கள் எங்கெங்கோ ஊர்ந்து எல்லை மீறத் துடிக்கின்றன.
அவன் வகுத்த எல்லையை அவன் மனமே உடைக்க தயாராகித்தான் நின்றது. அவனுக்குள் ஏற்படும் அவஸ்தைகளை கண்ணுற்றபடிதான் இருந்தாள் திலோ.
‘உன்னால முடியாது… எனக்கு தெரியும்… வந்துடுடா… நீ வருவ… அதுக்கப்புறம் உன்னால என்னை விட்டு விலக முடியாது…’
குறும்புச் சிரிப்புடன் அதற்கான சமயத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள் திலோ. அவள் எண்ணத்தை ஈடற்ற இந்த விலகலான நாட்களை இன்னும் நீட்டித்துக் கொண்டிருக்க முடியாதே.
அன்று ஒரு ரெக்கார்டிங் வேலையாக இளங்கோவும் அமரனும் காலையிலேயே கிளம்பிச் சென்றிருந்தனர். திலோவும் வழக்கம் போன்று பணியில் சேர்ந்திருந்தாள்.
மாலை மூவருமே சில நிமிடங்கள் வித்தியாசத்தில் உள்ளே நுழைந்திருந்தனர். இரவு உறங்கப் போகும் முன்பு குளிக்கும் வழக்கம் இருவருக்குமே உண்டு. இரவு உணவு முடித்து மூவரும் ஒன்றாக அமர்ந்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு வழக்கம் போன்று ரஞ்சனியுடன் கைப்பேசியில் பேசியபடியே இளங்கோ மாடி ஏறி இருந்தான். திலோ சமையல் அறையை சுத்தம் செய்து கொண்டிருக்க அமரன் குளித்து முடித்து வந்திருந்தான். தன் வேலையை முடித்துக் கொண்டு அறைக்குள் நுழைந்தவள் தானும் குளியலறைக்குள் நுழைந்திருந்தாள்.
பாதி குளியலில் சத்தமிட்டு கத்தியபடியே அவள் வெளியே ஓடி வந்திருக்க, படுக்கையில் தளர்வாக அமர்ந்திருந்தவன் பதட்டத்தோடு அவளை நோக்கி ஓட, ஒருவரோடு ஒருவர் மோதி தடுமாறி விழுந்திருந்தனர்… இதற்கு முன் சந்திக்காத ஒரு பரிமாணத்தில்… அவள் கீழே… அவன் மேலே…
இனி..????
(தொடரும்)