குழல் - 25
காலியான வயிற்றோடு ஊர் வந்து சேர்ந்தவள் இதயத்தில் பாரம் ஏற்றி தாங்க முடியாத துயரத்தோடுதான் நடமாடிக் கொண்டிருந்தாள். நெஞ்சுக்கும் தொண்டைக்கும் இடையில் ஏதோ அடைத்துக் கொண்டதுபோல் எந்நேரமும் அவளுக்குள் தீராத வலி. தன்னவனுக்கு பார்வை மீண்டுவிட்டால் இந்த வேதனையில் இருந்து வெளியே வந்துவிட முடியும் என்று மெல்ல தன்னை தேற்றவும் தொடங்கினாள்.
“டாக்டர்… என் ஹஸ்பெண்டை எப்போ அங்கே கூட்டிட்டு வரணும்..? நாட்கள் ஓடிட்டே இருக்கே…” ரேஷ்மாவிற்கு அழைத்து பேசியிருந்தாள் திலோ.
“நான்தான் ரெண்டு மாசம் டைம் கேட்டேனேம்மா… உன் கருவில இருந்து எடுக்கப்பட்ட செல்கள் இன்னும் பல செல்களா பிரிய தொடங்கி இருக்கு.. எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமான செல்களா பிரிய ஆரம்பிக்குதோ அதுக்கு தகுந்த மாதிரி வீரியம் இன்னும் அதிகமா இருக்கும்… உறுதியா உன் கணவனுக்கு பார்வை திரும்பிடும்… கொஞ்சம் பொறுமையா இரு… நானே உனக்கு கால் பண்றேன்…”
அவர் சொன்னதைக் கேட்டு பெரிய நிம்மதி. ஆனால் ஒவ்வொரு நாளையும் நெட்டித் தள்ள படாதபாடு பட்டாள். கணவனின் கை வளைவும் அவனது அணைப்பிற்குள் சிக்கி இருக்கும் அந்த பொழுதுகளும் தான் அவளுக்கு பெரும் ஆசுவாசம். அவள் வயிற்றிலிருந்து செல்கள் எடுக்கப்பட்ட பின்பு முழுமையாக வயிற்றை சுத்தம் செய்து அனுப்பி இருந்ததால் சில நாட்கள் கணவனோடு உடலுறவு வேண்டாம் என்ற வலியுறுத்தலோடு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தாள்.
ஆனால் ஒவ்வொரு நாளும் கணவன் ஆசையாக நெருங்கி வரும்போது அவனை தள்ளி வைக்க அவள் பட்ட பாடுகள் கொஞ்ச நஞ்சமல்ல.
“என்ன ஆச்சுடி..? தினமும் ஏதோ ஒன்னு சொல்லி என்னை அவாய்ட் பண்ற மாதிரியே இருக்கு. இதுக்குதான்… இப்படி எல்லாம் ஒரு மயக்கத்துக்கு நான் ஆளாயிடுவேன்னுதான் பார்வை வந்ததுக்கப்புறம் எல்லாம் பண்ணிக்கலாம்னு இருந்தேன்… ப்ச்... அந்த ஒருநாள் அந்த ஒரு அணைப்பு அந்த ஒரு முத்தம் என்னை என் கண்ட்ரோலை விட்டு மொத்தமா வெளியே கொண்டு வந்துடுச்சு. போதாக்குறைக்கு நீயும் ஏதேதோ பண்ணி என்னை போதைக்கு அடிமையான மாதிரி உனக்கு அடிமையாக்கி வச்சுட்ட. உனக்கு இப்பவெல்லாம் இன்ட்ரஸ்ட் இல்லாம போயிடுச்சா திலோ..? உனக்கு விருப்பம் இல்லையா..?”
எரிச்சலாக ஆரம்பித்து இயலாமையோடு கேட்டவனை இறுக்கமாய் அணைத்துக் கொண்டாள் திலோத்தமா.
“ஏன் அப்படி எல்லாம் யோசிக்கிறீங்க அமர்..? நீங்க என்னோட உயிர்… உண்மையை சொல்லிடுறேன்… உங்களுக்காக நான் இப்போ விரதம் இருக்கிறேன்… ஒரு மாசத்துக்கு நீங்களும் நானும் தள்ளிதான் இருக்கணும்… இது உங்களுக்காக நான் வச்ச வேண்டுதல்…”
அடுத்த நம்பும்படியான ஒரு பொய்யை கூறி இருந்தாள்.
“இதை முன்னாடியே சொல்லி இருக்கலாமேடி… தினமும் தவிக்க வைக்கணுமா..?”
“சாரி… எல்லாம் உங்களுக்காகத்தானே… விரதம் முடிச்சதுக்கு அப்புறம் நீங்களே தடுத்தாலும் உங்களை விட்டு நான் பிரிய மாட்டேன்…”
அவனை அழுத்தமாக அணைத்து முகம் முழுக்க முத்தமிட அவளை தன்னில் இருந்து விலக்கி நகர்ந்து படுத்துக் கொண்டான் அமரன்.
“விரதம் இருக்கிறேன்னு சொல்லி இப்படி முத்தமா கொடுத்து என்னை டெம்ப்ட் பண்ணாதடி… என்கிட்ட வராம கொஞ்ச நாள் தள்ளியே படு…”
கோபமாகவெல்லாம் பேசவில்லை சாதாரணமாகத்தான் கூறினான்.
“உங்களுக்கு ஒன்னும் கோபம் இல்லையே…”
மெல்ல புன்னகைத்து கையை எட்டி அவள் கன்னத்தை மென்மையாக வருடியவன் “உன்மேல கோபப்பட என்னடி இருக்கு..? நீ பண்ற ஒவ்வொரு விஷயமும் என்மேல இருக்கிற காதலைதானே ப்ரூவ் பண்ணிக்கிட்டே இருக்கு. நான் ரொம்ப அதிர்ஷ்டக்காரன் பேபி. என்னைப்பத்தி நான் இனி கவலைப்படவே வேண்டாம். அதுக்குதான் நீ இருக்கியே… உன்னைப்பத்தி வேணா நிறைய அக்கறை பட்டுக்கிறேன்…” என்று சிரித்து எக்கி அவள் நெற்றியில் முத்தமிட்டு அமைதியாக படுத்துக் கொண்டான்.
ஆயிற்று… ரேஷ்மா குறித்து கொடுத்த இரண்டு மாதங்களை கடந்தாயிற்று. மறுநாள் விடிந்தால் அனைவரும் மும்பை நோக்கி பயணிக்கின்றனர். அன்று இரவு அவளுக்கு என்ன தோன்றியதோ… மொத்த காதலையும் அவன்மேல் திணித்து திகட்ட திகட்ட அவனோடு கலந்து கிடந்தாள். அவளது வேகத்திலும் முத்தங்களின் அழுத்தத்திலும் அமரனே சற்று தடுமாறித்தான் போனான். மனைவியின் இந்த வேகம் நிறைந்த மோகமும்கூட அவனுக்கு அத்தனை பிடித்தது.
சிகிச்சை அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தான் அமரன். அனைத்து பரிசோதனைகளும் முறையாக எடுக்கப்பட்டன. மறுநாள் காலை அறுவை சிகிச்சை என்று முடிவு செய்யப்பட்டது. அந்த வெளிநாட்டு மருத்துவரும் வந்து இறங்கி அவனை முழுமையாக பரிசோதித்து திருப்திகரமாக தலையாட்டி இருந்தார்.
இளங்கோ மட்டும் அவர்களோடு வந்திருந்தான். ரஞ்சனிக்கு முக்கிய ப்ராஜெக்ட் முடிவை நோக்கிச் சென்று கொண்டிருந்ததால் விடுமுறை எடுக்க முடியாமல் போனது. கூடுதலாக இது ஒரு வகையில் ரகசியமான அறுவை சிகிச்சைதான். இளங்கோவை பற்றி தெளிவாக அறிந்த பின்புதான் அவனே அங்கு வர அனுமதித்திருந்தனர்.
“எதுக்காகடி இவ்ளோ ரெஸ்ட்ரிக்ஷன்..? நமக்கு யாரும் இல்ல… அதனால வரல… இதுவே குடும்பமா இருக்குறவங்க என்ன பண்ணுவாங்க..? ஏன் பெருசா யாரையும் அனுமதிக்க மாட்டேங்கிறாங்க..?”
சந்தேகத்தோடு கேட்டான் அமரன்.
“அப்படியெல்லாம் பெருசா ஒன்னும் இல்ல அமர்… கண் சம்பந்தப்பட்ட விஷயம் இல்லையா..? சின்ன இன்ஃபெக்சன்கூட உங்களை பாதிச்சிடக் கூடாது… அதுக்காகத்தான் இவ்வளவு ரெஸ்ட்ரிக்ஷன்…”
அவன் கேள்விகளுக்கு தெளிவாகவே பதில் சொல்லி சமாளிக்க கற்றும் இருந்தாள் திலோத்தமா.
அங்கேயே ஒரு தனி அறையை இளங்கோவுக்கும் அவளுக்கும் ஏற்பாடு செய்து கொடுத்திருந்தனர். ஆனால் முதல்நாள் இரவு முன் பாதுகாப்புக்காக அவனுக்கென்று கொடுக்கப்பட்ட மருந்துகளுடன் அவன் அறையில் இருக்க ரேஷ்மாவின் அனுமதியோடு அன்று இரவு அவனுடனே தங்கிக் கொண்டாள் திலோத்தமா.
“கவனம்மா… பிசிகல் ரிலேஷன்ஷிப் கண்டிப்பா கூடாது… ஆப்ரேஷன் முடிஞ்சதுக்கு அப்புறமும் குறைஞ்சது 20 நாள் இது கூடாது…”
“தெரியும் மேடம்… என் அமரோட பார்வைக்கு முன்னால எனக்கு இதெல்லாம் பெரிய விஷயமே இல்ல… ஜஸ்ட் நான் அவர்கூட இருக்கணும்னு அவரும் ஆசைப்படுறார்… எனக்கு பெரிய நம்பிக்கை இருக்கு… நாளைக்கு ஆபரேஷன் முடிஞ்ச உடனே என் அமரால இந்த உலகத்தை பார்க்க முடியும்… என்னை பார்க்க முடியும்… ஒரு மாதிரி படபடப்பா இருக்கு…” சொல்லும்போதே அவள் கண்களில் கண்ணீர் பெருகி இருந்தது.
மெல்ல நெருங்கி அவளை தோளோடு அணைத்துக் கொண்டார் ரேஷ்மா.
“யூ ஆர் எ ஜெம்… இப்படி ஒரு காதலா..? யார் இந்த அளவுக்கு எல்லாம் யோசிப்பாங்க..? அமரவர்மனுக்காக இல்லைன்னாலும் உனக்காக அவரோட பார்வையை எப்படியும் மீட்டு கொடுத்துடுவோம்… ஏன்னா அந்த பார்வை கிடைக்கத்தானே அவரோட குழந்தையே பலியாகி இருக்கு…”
இதனைக் கேட்டவளுக்கு கடகடவென கண்களில் கண்ணீர் பெருகி வழிந்தது.
“அப்படி சொல்லாதீங்க மேடம்… அவர் கண் வழியா என் குழந்தை உயிரோடதானே இருக்கப் போகுது…”
“நிச்சயமாடா… நீ சொல்றது நூத்துக்கு நூறு நிஜம்… உன் குழந்தை அவர் வாழும் காலம்வரை உயிரோடதான் இருக்கப் போகுது… அப்புறம் இந்த டாக்குமெண்ட்ஸ் எல்லாத்துலயும் அவர் கையெழுத்து போடணும்… நானே தெளிவா படிச்சு காட்டி கையெழுத்து வாங்கிட்டு வந்துடறேன்…” என்று அவர் நகர திடுக்கென இதயம் அதிர்ந்து வேகமாய் அவரை மறித்தபடி சென்று நின்றாள் திலோத்தமா.
“கையெழுத்துதானே மேடம்… நா..நானே வாங்கிட்டு வந்துடறேன்…”
“சம்மதம் வாங்கணும் தானேம்மா… அதுதானே எங்க ப்ரொசீஜர்..”
“அ..அதான் அன்னைக்கு போன்லயும் வாங்கிட்டீங்க… இன்னைக்கு நேர்லயும் சொல்லிட்டாரே…”
இன்னும் ஏதேதோ அவரிடம் பேசி ஒரு வழியாக அந்த காகிதங்களை அவரிடம் இருந்து வாங்கி தனது அறைக்குள் ஓடி வந்திருந்தாள் திலோத்தமா.
அவனிடமும் வழக்கம் போன்று நம்பும் படியாக பேசி இது ஒவ்வொரு நோயாளிடமும் நடத்தப்படும் முறையான மருத்துவமனை விதிமுறைதான் என்று கூறி அனைத்திலும் கையொப்பம் பெற்று தான் நினைத்ததை குழப்பம் இன்றி முடித்தும் இருந்தாள்.
அவனை அணைத்தபடியே அருகில் படுத்துக் கொண்டாள். அவள் உடம்பில் சொல்ல முடியாத ஒரு நடுக்கம்… ஒரு பதட்டம்… அவனுக்காக அவள் எடுத்த முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெற்று இன்று இறுதி முயற்சியாக எதற்காக இத்தனை மெனக்கெட்டாளோ அந்த முயற்சி வெற்றிகரமாக அமைய வேண்டுமே. நிச்சயமாக அமையும் என்று மனம் கூறினாலும் ஒருவித படபடப்பு அவளை ஆட்கொள்ளததான் செய்தது. சம்பந்தப்பட்டவனோ மெல்லிய புன்னகையோடு அவளை நெஞ்சோடு அணைத்து அமைதியாக படுத்திருந்தான்.
அவனுக்காக அவள் துடிக்கும்போது அவன் எதற்கு பதட்டமோ படபடப்போ கொள்ளப் போகிறான்.
“பேபி…”
“ம்ம்…”
என்னோட ஆப்ரேஷன் முடிஞ்சு கண் கட்டை அவிழ்ப்பாங்க இல்லையா… அப்போ நீயும் இளங்கோவும் என் முன்னால நிக்கணும். என்மேல நீ கொண்ட காதலால என் பார்வைக்காக நீ நிறைய மெனக்கெட்டு இருக்க… அவன் இத்தனை காலமும் எனக்கு பார்வையாவே வாழ்ந்திருக்கான்… நீங்க ரெண்டு பேரும் என் வாழ்க்கையில ரொம்ப ரொம்ப முக்கியமானவங்கடி… என் ரெண்டு கண்ணால உங்க ரெண்டு பேரையுமே நான் பாக்கணும். எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு… என்னோட போக்கிரி அவளோட காதலால கண்டிப்பா என் பார்வையை மீட்டு கொடுத்துடுவா…”
சிரித்தபடியே கூறியவன் அவன் நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டான்.
மறுநாள் அதிகாலையிலேயே ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்துச் செல்லப்பட்டான் அமரன். நண்பன் ஒரு கையையும் மனைவி மறு கையையும் அழுத்தமாக பிடித்துக் கொண்டனர்… இருவரின் கண்களிலுமே கண்ணீர்.
“சக்சஸ்ஃபுல்லா திரும்பி வருவேன்… இப்போ அழறீங்கதானே… அப்பவும் சந்தோசத்தில அழுவீங்க ரெண்டு பேரும்…” என்று சிரித்துக் கொண்டவன் தன் நண்பனின் கையை மெல்ல வருடி மனைவியின் புறங்கையில் முத்தமிட்டு சம்பந்தப்பட்ட அறைக்குள் அழைத்துச் செல்லப்பட்டிருந்தான்.
நான்கு மணி நேரங்கள் தொடர்ந்து அறுவைசிகிச்சை நடைபெற்றுக் கொண்டிருந்தது. நேரம் செல்லச் செல்ல இளங்கோவை நெருங்கி அமர்ந்து அவன் விரல்களை கோர்த்துக் கொண்டாள் திலோத்தமா. உடல் அதிகமாக வியர்த்தது.
“என்னாச்சுடா..?”
ஆதரமாய் கேட்டு அவளை தன் தோளில் சாய்த்துக் கொண்டான் இளங்கோ. அவன் குரலும்கூட மெலிதாக கமறி இருந்தது.
“எல்லாம் சக்ஸஸ்ஃபுல்லா முடிஞ்சிடும்தானே அண்ணா… நிறைய நம்பிக்கையோட இருக்கேன்… அவருக்கும் நிறைய நம்பிக்கை கொடுத்து வச்சிருக்கேன். திரும்பவும் ஏதாவது குறை வந்துட்டா சத்தியமா என்னால தாங்கிக்கவே முடியாது… எ..என் அமருக்கு பார்வை கண்டிப்பா வரணும்…”
சொல்லும்போதே தொண்டை அடைத்து கண்ணீர் பெருகியது. அவளை நிமிர்த்து கண்களை துடைத்தான் இளங்கோ.
“மருத்துவத்தை நம்பறதைவிட நான் உன் காதலை நம்புறேன்டா… உன் காதலுக்கு சக்தி அதிகம்… அந்த சக்தி அவன் பார்வையை கொஞ்சமும் குறை இல்லாம மீட்டுக் கொடுக்கும்…தைரியமா இரு…”
அவளை தோளோடு அணைத்து இதமாக வருடினான். இடையிடையே ரஞ்சனியும் அவனுக்கு அழைத்து அங்கு நடக்கும் நிலவரங்களை கேட்டுக் கொண்டேதான் இருந்தாள்.
அறுவை சிகிச்சை முடிந்து மருத்துவர்கள் இருவரும் வெளியேறி வந்தனர். படபடப்புடன் இருவரும் எழுந்து சென்று அவர்களின் எதிரே நின்றனர்.
ரேஷ்மா பெருவிரலை உயர்த்தி சிரிக்க அப்படியே அவர் காலில் மண்டியிட்டு விழுந்திருந்தாள் திலோ. அவர் காலை பிடித்தபடி கதறி அழுதவளை அள்ளித் தூக்கி தன்னோடு அணைத்துக் கொண்டார் ரேஷ்மா.
“இப்போ அவர் மயக்கத்துல இருக்கார்… இன்னைக்கு முழுக்க மயக்கத்துலதான் இருப்பார். நாளைக்கு காலையிலதான் மயக்கம் தெளியும். அதே நேரம் ரெண்டு நாள் கழிச்சுதான் கண் கட்டை அவிழ்ப்போம்…”
“இன்னும் ரெண்டுநாள் ஆகுமா டாக்டர்..?”
இதனை கேட்டு சிரித்தார் ரேஷ்மா.
“இத்தனை நாள் காத்திருந்தவளுக்கு ரெண்டு நாள் காத்திருக்க முடியாதா..? கண்டிப்பா ரெண்டு நாள் ஆகும். இந்த ரெண்டு நாளும் அவர் அதிர்ந்து பேசக்கூடாது… ஏன் பேசவே கூடாது… அவருக்கு கொடுக்கிற உணவுவரை எல்லாமே எங்க ஆளுங்க பாத்துப்பாங்க… நீங்க தூரத்தில இருந்து மட்டும்தான் அவரை பார்க்க முடியும். கண் கட்டு அவிழ்க்கும் போதுதான் நீ அவர் எதிர்ல போய் நிக்க முடியும்… புரிஞ்சுதா..?”
சரி என்றவள் மகிழ்வாய் தலையாட்டி அந்த வெளிநாட்டு மருத்துவரையும் ஆதுரமாக அணைத்து தனது நன்றியை தெரிவித்து இளங்கோவை திரும்பிப் பார்க்க, முகம் விகசித்து ஆனந்தக் கண்ணீருடன் நின்றிருந்தவன் தன் தங்கையை ஆனந்தமாக அணைத்துக் கொண்டான்.
(தொடரும்)