குழல் - 29
மூட்டை முடிச்சுகளை கட்டி தயார் நிலையில் இருந்தான் இளங்கோ. இன்னும் சறிது நேரத்தில் இறுதிச் செக்கப் முடித்து மீண்டும் சென்னை நோக்கி பயணிக்கப் போகின்றனர் அமரன் இளங்கோ இருவரும்.
ரேஷ்மாவிற்கு அத்தனை மகிழ்ச்சி. இனி வாழ்நாள் முழுக்க அவன் பார்வைக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்பதை தெளிவுபடுத்தி அவருக்கே பார்வை வந்ததுபோல் அத்தனை மகிழ்ந்திருந்தார்.
“திலோ ஊருக்கு போனதும் ஒருவகையில நல்லதுதான் அமரன். அவங்க பக்கத்துல இல்லாதனாலதான் நீங்க எமோஷனல் ஆகாம கண்ட்ரோலபிளா உங்க கண்ணை இவ்வளவு தூரம் பாதுகாத்துட்டீங்க. இனி ஒன்னும் பிரச்சனை இல்ல. இனி மத்தவங்க மாதிரியே உங்களால நார்மலா இருக்க முடியும். இதெல்லாம் தெரிஞ்சுதான் மனசை கல்லாக்கிட்டு அவளே ஊருக்கு போயிட்டா போல…” என்று சிரித்தவரிடம் இவனும் ஒரு சிரிப்பை மட்டுமே பதிலாக்கி இருந்தான்.
அவருக்கு நன்றி கூறி விடைபெற்று இருவரும் கிளம்பி விமான நிலையம் நோக்கி பயணிக்கத் தொடங்கினார்.
“ரஞ்சனிகிட்ட பேசினியாடா..?”
“நாம இன்னைக்கு அங்க வர்றது தெரியும். அவ கண்டிப்பா திலோவே நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வரமாட்டா…”
“நாம நம்ம வீட்டுக்கு போகலையே…. ரஞ்சனி வீட்டுக்குதானே போறோம்… அங்கேதானே என் திலோ இருக்கா… ஹாஸ்பிடல் போயிட்டு வந்தாளா..? அதைப்பத்தி ஏதாவது கேட்டியா..?”
இரண்டு மூன்று நாட்களாக இதனையேதான் அடிக்கடி கேட்டுக் கொண்டிருக்கிறான் அமரன்.
“அந்த அளவுக்கு அவ ரொம்ப வீக் ஆகலடா… தைரியமா நிம்மதியாதான் இருக்கா… நேர்ல போய் நாமதான் எல்லாம் பேசப் போறோமே…”
அமரனின் மனக்குமுறல் புரியாமல் அவனும் பதில் அளிக்க உதட்டை கடித்து அமைதியாக அமர்ந்து கொண்டான் அமரன். ஆனால் மனம் முழுக்க போராட்டம். அதை தாண்டி ஏதோ ஒரு உணர்வு.
“இருக்கும்… நிச்சயமா இருக்கும்… எனக்கு தெரியும்…”
ஆழ்மனம் இதையேதான் விடாமல் அசரீரி போல் சொல்லிக் கொண்டே இருந்தது.
“எங்கேடி அவசரமா கிளம்பிட்டு இருக்க..?”
துப்பட்டாவை தோளில் போட்டு கண்ணாடி முன் நின்று தலைவாரி கொண்டிருந்தவளை அருகில் வந்து நின்றபடி எரிச்சலாய் கேட்டாள் ரஞ்சனி.
“வேற எங்கே..? என் வீட்டுக்குதான்…”
“எதுடி உன் வீடு..?”
“இல்லைன்னு சொன்னாலும் ஆயிரம் கோபம் இருந்தாலும் அவரோட வீடுதான் என்னோட வீடு… அவர் என் புருஷன்… ஞாபகம் இருக்கா..?”
“நீ எல்லாம் திருந்தவே மாட்ட அப்படித்தானடி… அங்க போய் மூக்கு உடைபட்டு திரும்பி வரப்போறியா..?”
“கோபம் உன் கண்ணை மறைச்சு உன் மூளையை யோசிக்க விடாம செய்யுதுடி. என் அமர் காரணம் இல்லாம என்னை தள்ளி வச்சிருக்க மாட்டார்…”
“வேணாம் திலோ… இதைப்பத்தி நாம நிறைய பேசிட்டோம்… சரி… நானும் வரேன்… அவரைப் பார்த்து நிறைய கேள்வி கேட்க வேண்டியது இருக்கு…”
“ரஞ்சு…”
“வாய மூடிக்கிட்டு கிளம்பு… நானும் வருவேன்… டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வந்துடறேன்… கொஞ்சம் வெயிட் பண்ணு…”
கறாராக கூறி தனது அறைக்குள் நுழைந்து உடைமாற்றி மீண்டும் திலோவின் அறைக்குள் நுழைந்தவள் பதட்டமாய் “திலோ…” என்று சத்தமிட்டபடி அதிர்ச்சியோடு அவளை நோக்கி ஓடினாள்.
சென்னை விமான நிலையத்தில் இறங்கி வெளியேறி வந்திருந்தனர் நண்பர்கள் இருவரும்.
இத்தனை நேரம் இன்டர்நெட் இணைப்பை விட்டு விலக்கி வைக்கப்பட்டிருந்த இருவரது கைப்பேசியும் மீண்டும் உயிர் பெற்றிருந்தன.
செல்போனை ஆன் செய்த அடுத்த நொடி இளங்கோவின் போன் அலறியது.
அவன் எடுத்துப் பேசும் முன் வேகமாக வாங்கி இணைப்பை ஏற்று காதில் வைத்திருந்தான் அமரன்.
“இ..இளங்கோ… இவ்வளவு நேரம் உங்க போன் ரீச் ஆகவே இல்ல… இ..இப்போ நீங்க சென்னை வந்துட்டீங்களா..? திலோ மயக்கம் ஆயிட்டா… அவசரத்துக்கு பக்கத்து பிளாட்ல இருந்த டாக்டர் வந்து செக் பண்ணினாங்க… அவ… அவ…”
“பிரக்னென்ட்டா இருக்கா… சரிதானே..?”
உடையத் தயாரான குரலை இறுக்கிப் பிடித்து கேட்டிருந்தான் அமரன். அவள் இருந்த பதட்டத்தில் பேசுவது அமரனா இளங்கோவா என்று பிரித்தறியவில்லை.
“ஆ..ஆமா…”
அடுத்த நொடி இணைப்பை துண்டித்தவன் விழிகள் நிறைந்த கண்ணீருடன் தன் நண்பனை திரும்பிப் பார்த்தான்.
சிரிப்பும் அழுகையும் ஒருங்கே கலந்து அவனை இறுக்கி அணைத்துக் கொண்டான்.
“இ..இளங்கோ… இளங்கோ… நான்… நான்…”
பேச முடியாமல் தொண்டை விக்கிக் கொள்ள அவன் தோளோடு முகம் புதைத்து கதறி அழுதான் அமரன்.
அவன் அழுகையில் பதறி அவனை தன்னில் இருந்து விலக்கியவன் “என்னாச்சுடா..? ஏதாவது பிரச்சனையா..?” பதட்டத்தோடு கேட்டான்.
இல்லை என்றவன் அழுது கொண்டே மீண்டும் சிரித்தான்.
“அமர்…”
“அ..அவ தவத்துக்கான பலன் எனக்கு கிடைச்சது… என் தவத்துக்கான பலன் அவளுக்கும் கிடைச்சிருச்சுடா… எதுக்காக எந்த விஷயத்துக்காக என் மனசை இரும்பாக்கி இந்த 40 நாளும் வேள்வித் தீயில உட்கார்ந்து இருந்தேனோ… அது நடந்துருச்சு… என் நம்பிக்கை வீண்போகல. அவகிட்ட இருந்து எடுத்த விஷயத்தை அவளுக்கு திரும்ப கொடுத்துதான் அவளை பாக்கணும்னு எனக்குள்ள ஒரு வைராக்கியத்தை வச்சிருந்தேன்… அ..அது நடந்துருச்சுடா…”
“இந்த விஷயத்துல நான் கடவுள்மேல நம்பிக்கை வைக்கல. என் காதல்மேல மட்டும்தான் நம்பிக்கை வச்சேன். நான்… நான் ஜெயிச்சுட்டேன்டா… என் திலோவை பாக்குறதுக்கான முழு தகுதியும் இப்போ எனக்கு இருக்கு…”
“அமர்…”
“நா..நான் தி..திரும்பவும் அப்பா ஆகிட்டேன்டா… எஸ்… மை பேபி கேம் பேக்…”
இதழ் பிரித்து சிரித்தபடியே கொட்டும் கண்ணீருடன் நின்றவனை தாவி அணைத்திருந்தான் இளங்கோ.
ஒவ்வொரு நாளையும் எண்ணி தினமும் நாட்காட்டியில் தேதி பார்த்தபடி அமர்ந்திருந்த காரணமும், அவளைப் பார்ப்பதற்கு இத்தனை நாட்களை தள்ளிப் போட்டு தனக்குள் தெளிவான வைராக்கியத்தை வகுத்து வைத்திருந்ததும் தெரிய வந்த இளங்கோவிற்குள் நண்பனை நினைக்கையில் பெருமையாகவும் பெருமிதமாகவும் இருந்தது. திலோவின் காதல்தான் அளப்பரியது என்று ஆச்சரியத்துக் கிடந்தவன் தன் நண்பனின் காதலில் நெக்குருகிப் போனான்.
உண்மைதான்… இவன் மேற்கொண்டதும் ஒரு தவம்தானே...
கார் விரைந்து பயணித்து ரஞ்சனியின் வீட்டை அடைந்தது.
“நான் சொல்றதை கேளுடி… இப்போ அங்கே கிளம்பி போக முடியாது… நீ என்ன கண்டிஷன்ல இருக்கேன்னு தெரியுதா..?”
“என்ன கண்டிஷனா இருந்தாலும் என்னால முடியும்… நான் என் அமரை பார்க்கணும்… அவரை பார்த்தே ஆகணும். என்னோட முதல் அனுபவத்தை அவர்கிட்ட பகிர்ந்துக்க முடியாம நான் பட்ட கஷ்டத்தை வெளியே சொல்லவே முடியாது. இப்போ நான் அவரை பார்க்கணும். என்னை அவர்கிட்ட கூட்டிட்டு போ…”
“பேசப் பேச லைன் கட் ஆயிடுச்சு… அதுக்கப்புறம் இளங்கோவுக்கும் லைன் கிடைக்கல. நீ கொஞ்சம் ரெஸ்ட் எடு. நான் பேசிட்டு சொல்றேன்…” அவளை அமைதிஅபடுத்த முயன்றாள் ரஞ்சனி.
“சரிடி… நீ வர வேணாம்… நான் போய்க்கிறேன்…”
கோபமாக அறையை விட்டு வெளியேறி கூடத்திற்கு வந்தவள் அங்கேயே ஸ்தம்பித்து நின்றாள்.
கூடத்து வாசலைத் தாண்டி வேகமாக உள்ளே நுழைந்திருந்த அமரனும் அடுத்த அடி எடுத்து வைக்க முடியாமல் அதே இடத்தில் நின்றிருந்தான். நான்கு விழிகளும் நங்கூரமிட்டு நின்றன.
புகைப்படத்தில் தன்னவளை 40 நாட்களாக பார்த்து முழுமையாக உள்ளே இறக்கி வைத்திருந்தவன் இன்று முழு ஓவியமாக உயிருள்ள சிற்பமாக தன் எதிரில் நிற்பதை பார்த்து ஒரு நொடி தடுமாற அவன் கையை தாங்கிப் பிடித்திருந்தான் இளங்கோ.
அவனுக்காகவே இறைவன் படைத்து அனுப்பி வைத்த தேவதை…
அவன் வாழ்வின் சொர்க்கம்…
அவன் காதலின் அகராதி…
இத்தனை நாட்களாக வர்ணம் மாறி இருந்த அந்த வறண்ட வழிகளை பார்த்தவள் இன்று முழுமை பெற்ற உயிர்ப்பான விழிகளையும், அதில் தெறித்து வந்த பார்வை வீச்சையும் அது கொடுத்த வீரியத்தையும் தன்னுள் உணர்ந்து தன்னவன் தன்னை பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பதை மூளை அறிந்து உள்ளுக்குள் அளவுகடந்த உணர்வுத் தாக்கம் கிளம்ப தடுமாறி சரியப் போனவளை ஓடிச்சென்று தாங்கிப் பிடித்திருந்தான் அவளது அனைத்துமானவன்.
“அ..ம..ர்…”
அவன் விழிகளோடு விழிகள் கலந்து காதலோடு அவள் அழைத்த அந்த அழைப்பில் அவளை மடிந்து அமர்ந்த நிலையிலேயே அழுத்தமாக அணைத்திருந்தான் அமரன்.
ஆஆஆ…
சத்தமிட்ட உடைந்த குரலில் உரக்க கதறினான். அதிர்ச்சியோடு ஓடி வந்து நின்ற ரஞ்சனியும் விழிகள் அகற்றாமல் அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“மை பேபி… திலோஓஓஓ…”
சிந்தி சிதறிய வார்த்தைகளோடு இன்னும் சத்தமாய் அழுதான். அழுகையோடு அவளை அள்ளி அணைத்து அறுநூறு முத்தங்கள்.
அந்தக் கதறல், அந்த முத்தங்கள், அந்த கண்ணீர் என்று அனைத்திலும் கரைந்து அசையாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் திலோத்தமா.
“உன்னை கஷ்டப்படுத்திட்டேனாடா..? உன்னை துடிக்க வச்சுட்டேனா..? உன்னைவிட நான் அதிகமா துடிச்சேனேடி. இந்த நாளுக்காக இப்படி ஒரு நிமிஷத்துக்காகத்தான் வைராக்கியத்தோட உட்கார்ந்து இருந்தேன்…”
அவள் முகம் ஏந்தி தனது கண்ணீரால் அவள் கன்னத்தை நிறைத்தவன் மீண்டும் அவள் முகம் முழுக்க முத்தமிட அசைவற்று அவனை பார்த்துக் கொண்டிருந்தாள் திலோ.
“தோள் உயர்த்திய தன் கண்களை துடைத்துக் கொண்டவன் தன் வலது கையை இறக்கி அவள் மணிவயிற்றில் வைத்தான்.
“உன்கிட்ட இருந்து பறிச்ச நம்ம வாரிசை திரும்பவும் உனக்கு பரிசா கொடுத்துதான் உன்னை பார்க்கணும்னு தவம் இருந்தேன்டி என் தங்கமே…”
சொன்னவன் அவள் மடியில் விழுந்து அவள் வயிற்றில் அழுத்தமாய் முத்தமிட்டான்.
அவன் சொன்ன அந்த ஒற்றை வார்த்தையில் ரஞ்சனிக்கும் அனைத்தும் புரிந்துபோனது. விழிகள் கலங்க அருகில் நின்றிருந்த இளங்கோவை அவள் திரும்பிப் பார்க்க அவனும் கண்மூடித் திறந்து கண்ணீரோடு ஆமோதித்தான்.
திலோத்தமாவின் நிலையை சொல்லவும் வேண்டுமா..?
தன் உயிரானவன் தன்னை விலக்கி வைத்தான் என்ற நிலையில்கூட அவன்மேல் அவளுக்கு கோபம் எழவில்லை. அவன் தன்னை வெறுத்திருப்பான் என்று உள்மனம் நம்பவும் இல்லை. ஏதோ காரணத்தை அவன் தேக்கி வைத்திருக்கிறான் என்று மட்டும் திடமாக நம்பினாள். அதனால்தானே உயிரோடு உலவினாள். அவன் வேண்டாம் என்று விலக்கி இருந்தால் அந்த நொடியே இதயம் நின்று போயிருக்குமே.
ஆனால் உன்னைவிட என் காதல் இன்னும் ஒரு படி உயர்ந்தது என்று சொல்லாமல் சொல்லிவிட்டானே… இதோ இந்த நொடி நிரூபித்து கொண்டிருக்கிறானே.
“அமர்…”
கண்ணீரோடு அவனை அள்ளித் தூக்கி அவன் கன்னங்களை கைகளில் ஏந்திக் கொண்டாள்.
அ..அப்போ உங்களுக்கு என்மேல கோபம் இல்லையே… வெறுப்பு இல்லையே…”
உதடு நடுங்க கேட்டவளின் முகத்தில் இன்னும் 30 முத்தங்கள்.
“கோபமா..? வெறுப்பா..? அதெல்லாம் உன்கிட்ட காட்டினா நான் மனுஷனா இருக்க முடியுமாடி..? நீ என் தேவதை… இதோ இந்த கண் இந்த பார்வை இத்தனையும் நீயும் நம்ம பிள்ளையும்தானே எனக்கு கொடுத்திருக்கீங்க. நம்ம குழந்தையோட உயிர் தியாகத்தை நான் அசிங்கமா நிராகரிச்சுடுவேனா.? வலிக்குதுடி… இல்லைன்னு சொல்லல… நம்ம குழந்தையை பலி கொடுத்துதான் இந்த உலகமே எனக்கு விடியலாகி இருக்குதுன்னு நினைக்கும்போது ரொம்ப வலிக்குது. ஆனா இந்த பார்வையில நம்ம குழந்தை உயிரோடதான் இருக்கு. நான் உன்னை முதல்முறை பார்க்கும்போது திரும்பவும் நம்ம வாரிசு உன் வயித்துல வளர்ந்து நிக்கணும்னுதான் இத்தனை நாளும் தள்ளி இருந்தேன். நான் தப்பு பண்ணிட்டதா நினைக்கிறியாடி..? உன்னை தள்ளி வச்சதா நினைக்கிறியா..?’
ஆதங்கத்தோடு கேட்டவனை அழுத்தமாக அணைத்து அவன் கொடுத்தவற்றை எல்லாம் திருப்பி கொடுத்துக் கொண்டிருந்தாள் திலோத்தமா.
ரஞ்சனியின் கையை அழுத்தமாக பற்றினான் இளங்கோ.
திரும்பிப் பார்த்தவளிடம் “நாம இப்போ நம்ம வீட்டுக்கு போகலாம்… அவங்களுக்கு இப்போ தனிமை வேணும்…” என்றான்.
“அவங்களுக்கு மட்டும்தானா..??” என்று சிரித்தவளிடம்
“நமக்கும்தான்…” என்றவன் அவள் கையை கோர்த்துக் கொண்டு வேகமாக அங்கிருந்து வெளியேறியிருந்தான்.
சுற்றம் மறந்து சூழல் மறந்து முகத்தோடு முகம் முட்ட விழிகள் நான்கும் விசைத்திறனோடு ஈர்த்துக் கொண்ட தேவ நொடிகள்.
ஆடாது அசையாது அவள் அழகை பார்த்துக் கொண்டே இருந்தான் அமரன். தன் மன்னவனின் விழிகளில் தெறித்து வந்த காதலை உள்ளம்வரை உணர்ந்து பூரித்து சிவந்திருந்தாள் பெண்ணவள்.
அவன் அணைப்பிலும் வருடலிலும் வார்த்தைகளிலும் காதலை உணர்ந்தவளுக்கு அந்த கண்களின் வழியே காதலை பார்ப்பது என்பது தெய்வீக கனமல்லவா. அதை உணர எந்த பெண்ணுக்கும் ஆழ்மனதில் ஆசை ஓடிக்கொண்டுதானே இருக்கும். இதுவரை அதனை அனுபவித்திராதவள் இந்த தருணத்தில் அதில் ஆழ்ந்து மூழ்கிப் போனாள்.
மோகமற்ற காதல் முத்தங்களோடு அந்த தெய்வீக தருணம் நீண்டு கொண்டே இருந்தது.
(தொடரும்)