குழல் - 8
கண்களில் பூத்து நின்ற கண்ணீரைத் துடைத்துக் கொண்டு இளங்கோவை நிமிர்ந்து பார்த்தாள் திலோ.
“இயற்கையாவே குருடா பிறந்தவங்களோட நிலை வேற…
அவங்க கற்பனையும், எண்ணமும், வடிவங்களுக்கு அவங்க உருவாக்குற உயிரும் வேறு மாதிரிதான் இருக்கும். ஆனா பத்து வயசுவரைக்கும் உலகத்தோட மொத்த அழகையும் பார்த்த ஒருத்தர் இப்படி ஒரு நிலைமையில வாழ்ந்துட்டு இருக்கிறது…” என்று நிறுத்தியவள் மேற்கொண்டு பேச முடியாமல் குரல் கமறினாள்.
“டாக்டரை அதுக்கப்புறம் அவர் சந்திக்கவே இல்லையா..? பார்வை திரும்ப கிடைக்கிறதுக்கு வாய்ப்பே இல்லையா..?”
வேதனையோடு கேட்டவளை இயலாமையோடு பார்த்தான் இளங்கோவின் இதழ்களில் கசந்த புன்னகை.
மூனு வேளை சோறும், படிப்பும், தங்குறதுக்கு இடமும், உடையும் இப்படி அத்தியாவசியமான தேவைகள் கஷ்டமில்லாம கிடைச்சதே எங்களுக்கு எல்லாம் கிடைச்ச வரம். காலேஜ் முடிக்கிற வரைக்கும் எங்க ஹோம்ல முடிஞ்ச அளவுக்கு குறை இல்லாமதான் எங்களை பார்த்துக்கிட்டாங்க. அதை தாண்டி அவங்களால எதுவும் செய்ய முடியாது. அவ்வளவு பணம் செலவு பண்ண எங்ககிட்டயும் அவங்ககிட்டயும் வசதி இல்லையே…”
“இப்போதான் கை நிறைய சம்பாதிக்கிறாரே… இப்போகூட டாக்டரை கன்சல்ட் பண்ணலாமே… நீங்களாவது வற்புறுத்தி கூட்டிட்டு போய் இருக்கலாமே…”
செய்யாம இருப்பேன்னு நினைக்கிறியா..? எவ்வளவு வற்புறுத்தி பார்த்தும் அதுக்கு அவன் உடன்படவே இல்ல. இந்த வாழ்க்கை எனக்கு பழகிடுச்சு என்னை இப்படியே விட்டுடுன்னு சொல்லிட்டான். அதோட திரும்ப பார்வை கிடைக்குங்கிற நம்பிக்கை அவனுக்கு சுத்தமா இல்ல. பத்து சதவிகித பார்வையிலேயே வாழ்க்கையை நகர்த்திட முடியும்னு திடமா நிக்கிறான்…”
“இது என்னண்ணா சுத்த பைத்தியக்காரத்தனமா இருக்கு… இவரே ஒரு முடிவு பண்ணிக்குவாரா..? டெக்னாலஜி இன்னைக்கு எவ்வளவோ முன்னேறிடுச்சு. டாக்டர்கிட்ட போய் அவர் சொல்லணும் பார்வை வருமா வராதுன்னு… இவரே ஏன் இப்படி பிடிவாதம் பிடிக்கிறார்..?”
வேதனையைத் தாண்டி கோபம்தான் எழுந்தது அவளுக்கு.
“ஒருமுறை அவனை ரொம்ப கட்டாயப்படுத்தி கிட்டத்தட்ட இழுத்துட்டுதான் போனேன். ரொம்ப பிரபலமான டாக்டர்தான்… நல்லா செக் பண்ணி பார்த்தார்… அவனோட ரெட்டினா ரொம்பவே வீக்கா இருக்கிறதாதான் அவரும் சொன்னார். ஆபரேஷன் பண்ணினாலும் பார்வை திரும்ப கிடைக்கிறதுக்கான வாய்ப்புகள் 10% தான் இருக்குதுன்னு சொன்னார். அதிலும் அவர் சொன்ன சில விஷயங்கள் எல்லாம் இவனுக்கு சாத்தியமே இல்லைன்னு தோணுச்சு… அதனால கையிருப்பா இருக்கிற காசையும் பயன்பாடே இல்லாத விஷயத்துக்கு செலவு பண்ணிட்டு தெருவுல நிக்கிறதா என்னால இதுக்கெல்லாம் உடன்பட முடியாதுன்னு திட்டவட்டமா சொல்லிட்டான்…”
“கண்டிப்பா பார்வை வந்துடும்னு அந்த டாக்டர் உறுதியா சொல்லி இருந்தாகூட என்னவாச்சும் பண்ணி ஆபரேஷனுக்கு கண்டிப்பா நானும் ஏற்பாடு பண்ணி இருப்பேன். ஆனா வாய்ப்புகள் ரொம்ப ரொம்ப கம்மின்னு தெரிஞ்சு அந்த ரிஸ்கை ஏன் எடுக்கணும்னு எனக்கும் தோணுச்சு… இப்போ அதைப் பத்தின ஆராய்ச்சியோ பேச்சோ அனாவசியம். அவனுடைய நிலை இதுதான்… இதே சூழ்நிலையில முழுசா அவனை உன்னால ஏத்துக்க முடியுமா..?” அவள் கண்களோடு கண்கள் பார்த்து திட்டவட்டமாக கேட்டான் இளங்கோ.
“நான்தான் தெளிவா சொல்லிட்டேனே அண்ணா… அவர்தான் என் வாழ்க்கை எதிர்காலம் எல்லாமே…” அவளது வார்த்தையிலும் அத்தனை அழுத்தம் இருந்தது.
“இது என்னைக்குமே மாறக்கூடாது திலோ… அவனோட குறையினால அவனுக்கு அதிகமா கோபம் வரும்… தன்னோட மன அழுத்தத்தை கோபமாதான் வெளிப்படுத்துவான். அதை சகிச்சுக்கணும்… அதோட அவனுக்கு குறை இருக்கிறதாவே காட்டிக்காம முழு அன்போட அவனை ஏத்துக்கணும். ஏன்னா இப்போவரைக்கும் அவனுக்கு குறை இருக்கிறது நிறைய பேருக்கு தெரியாது. அவன் நடை உடை பாவணை எல்லாமே அப்படித்தான் இருக்கும். அப்படி ஒரு தன்னம்பிக்கையை அவனுக்குள்ள வளர்த்து வச்சிருக்கான். காதல் கல்யாணம் இதெல்லாம் அந்த தன்னம்பிக்கையை மொத்தமா உடைச்சு சிதைச்சிடுமோன்னு பயந்துதான் இந்த விஷயங்களில் இருந்து மொத்தமா விலகி நிக்கிறான்…”
“அவரோட அந்த பயத்தையும் நான் தெளிய வைப்பேண்ணா… என்னோட காதலை அவருக்கு முழுசா புரிய வைப்பேன்…”
திடமாக பதில் அளித்தால் திலோத்தமா.
அவளது அந்த தெளிவிலும் தீர்க்கத்திலும் இளங்கோவின் மனதில் அப்படி ஒரு நிறைவு.
“இனிமேலாச்சும் என்ன என் அமர்கிட்ட நெருங்க விடுவீங்களா..?”
“ஓகே…”
மூக்கை சுருக்கி சிரித்தவன் தாடையை தேய்த்தபடி ஆமோதிப்பாக கண்மூடித் திறந்தான்.
“இப்பவே என்னை அவர்கிட்ட கூட்டிட்டு போறீங்களா..?”
“ஏய்… நீ என்ன இவ்ளோ வேகமா இருக்க..? உடனே எல்லாம் காதலை சொல்லிடாத… கைல கிடைக்கிறதை எடுத்து மண்டையை உடைச்சுடப் போறான்…” என்றவன் அடக்க முடியாமல் சத்தமிட்டு சிரித்திருந்தான்.
அவனை பொய்யாக முறைத்தவள் “எனக்கும் கொஞ்சம் மூளை இருக்கு… முதல்ல அவர்கிட்ட பிரண்ட்லியா மூவ் பண்ணி கேஷுவலா பேச ஆரம்பிச்சு அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா டெவலப் பண்ணிக்கிறேன்…” என்று கூற
“அது சரி…” என்று பலமாக தலையாட்டிக் கொண்டவன் அவளோடு இணைந்து அங்கிருந்து கிளம்பி இருந்தான்.
தன்னவனை நேருக்கு நேர் சந்திக்கப் போகும் ஆவலில் நெஞ்சம் முழுக்க ஒருவித படபடப்புடன் இளங்கோவுடன் இணைந்து அவனது வீட்டிற்குள் நுழைந்தாள் திலோத்தமா.
அவர்கள் இருவரும் கேட்டை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தபோது சிட் அவுட்டில் ஒரு இருக்கையில் அமர்ந்து கால்கள் இரண்டையும் டீபாயில் நீட்டியபடி சரிந்து தளர்வாக கண்மூடி அமர்ந்திருந்தான் அமரன்.
“சத்தம் கேட்டு அந்த திசையில் திரும்பினான்.
மங்கலான உலகத்தில்தானே இத்தனை ஆண்டுகளாக சஞ்சரித்துக் கொண்டிருக்கிறான். இளங்கோவின் மங்கலான உருவம் அவனுக்கு மிகவும் பரிச்சயம். உடன் மற்றொரு உருவமும் தவிழ்ந்து வருவதுபோல் தெரிந்தது. அவனுடன் வேறு யாரோ வருகிறார்கள் என்பதை அறிந்து கொண்டான்.
கண்களை மூடிக் கொண்டு திரும்பியவனின் புருவங்கள் சுழிந்திருந்தன.
“யாருடா உன் கூட வர்றது..?”
எடுத்த எடுப்பில் அவன் கேட்ட கேள்வியில் இளங்கோவின் இதழ்கள் புன்னகையில் விரிய திலோத்தமாவின் வாய் அதிர்ச்சியில் பிளந்திருந்தது.
“நம்மாளு எவ்வளவு ஷார்ப் பாத்தியா..?” மெல்ல அவள் காதுக்குள் குனிந்து கிசுகிசுத்தான் இளங்கோ .
“எம்ம்மாடியோவ்வ்…”
இரு கைகளையும் கன்னத்தில் வைத்து கண்களை விரித்தபடி அதே இடத்தில் நின்றிருந்தாள் திலோத்தமா.
“டேய்ய்…”
அமரனின் தடிமனான குரலில் திலோவின் லப்டப் ஓசை சற்று அதிகரித்தது.
“வேண்டியவங்கதான்டா. சாந்தி ஆன்ட்டி வீட்டு மாடிக்கு புதுசா குடி வந்திருக்காங்க…”
சொன்னவன் கண்களால் அவளை வரும்படி அழைத்து அமரனின் பக்கவாட்டில் அமர்ந்து கொண்டு அவளையும் அருகே அமரச் சொன்னான். அமரனை அத்தனை அருகாமையில் பார்த்த மகிழ்ச்சியில் திளைத்த மனதுடன் கூடுதலாய் படபடப்புடன் அமர்ந்து கொண்டாள் திலோ.
விழிகள் மூடி இருந்தவன் டீபாயின் மேல் இருந்த கூலர்சை எடுத்து கண்களில் அணிந்தபடி காலினை நேராகப் போட்டு நிமிர்ந்து அமர்ந்து கொண்டான்.
“அடுத்தவங்க எல்லார் முன்னாலயும் கூலர்ஸோடவேதான் இருப்பாரா..?”
கிசுகிசுப்பாக கேட்டாள் திலோ.
“ம்ம்… ஆமா…”
“ஏன்..?”
“என்னடா ரெண்டு பேரும் ஏதோ முணுமுணுன்னு பேசுற மாதிரி கேக்குது…”
அவர்களது கிசுகிசுப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்து நெற்றிச்சுளிப்போடு அவர்கள் இருந்தபுறம் முழுமையாக திரும்பினான் அமரன்.
“ஹலோ சார்…”
தைரியத்தை வரவழைத்துக் கொண்டு தன் குரலை வெளிப்படுத்து இருந்தாள் திலோ.
“ஹாய்…” என்றவனிடம் ஒரு சிறு புன்னகைகூட இல்லை.
“நான் திலோத்தமா… உங்களோட தீவிரமான ஃபேன்… உங்க ப்ரோக்ராம் எங்கே நடந்தாலும் வந்துருவேன்…. youtube லயும் உங்களை பாலோ பண்றேன்… உங்க பக்கத்துல குடி இருக்கிறது எனக்கு அவ்வளவு சந்தோஷமா இருக்கு… ஐ அம் சோ ப்ளீஸ்டு ட்டு மீட் யூ சார்…”
முகம் விகசிக்க அவள் பேசிக் கொண்டிருக்க நெற்றியை கீறியபடி ஒரு இன்ச் இதழ்களை விரித்து அமர்ந்திருந்தான் அமரன்.
ஓ இதுதான் அவன் காட்டும் புன்னகையோ என்று எண்ணிக் கொண்டாள் அவளும். அதை தாண்டி வேறு எந்த உணர்வுகளும் அவனிடம் வெளிப்படவில்லை.
இதைவிட அலங்கார வார்த்தைகளுடன் அவனிடம் அளவளாவி பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடிய பெண்களை நிறைய கண்டிருந்ததால் இந்த அறிமுகமும் அவளது குரலும் அவனை அசைத்துவிடுமா என்ன..? அது அவளுக்கும் புரிந்தது
“தேங்க்ஸ்…”
வேறு வழியின்றி உதிர்த்ததுபோல் அந்த ஒற்றை வார்த்தையை உதிர்த்திருந்தான்.
“டேய்… நாளையில இருந்து நம்ம வழக்கமான ஸ்கெடியூல் எல்லாம் நிறைய மாறுது. இன்னும் கொஞ்ச நாளைக்கு ரிலாக்ஸா உட்கார்றதுக்கே நமக்கு நேரம் இருக்காது. ப்ரோக்ராம்ஸ் பிளான் பண்ணி ஏற்கனவே சாட் போட்டு வச்சிருக்கோம் ஞாபகம் இருக்குதானே…”
இளங்கோவிடம் தலை திருப்பி தங்களது வேலை பற்றி பேசத் தொடங்கியவன் நீ இனி இங்கு தேவையில்லாத ஆணி என்று அவளிடம் சொல்லாமல் சொல்லி இருந்தான். அவள் முகம் சட்டென வாடிவிட உதட்டை தாண்டி வெளிவரத் துடித்த சிரிப்பை அடக்கியபடி அவளைப் பார்த்தான் இளங்கோ.
“என்னண்ணா… இப்படி பண்றார்..? அப்போ நான் இப்போ அட்வாண்டட் நெயில்தானா..?”
அவளது கேள்விக்கு பக்கென சிரித்திருந்தான் இளங்கோ.
“டேய்… இப்போ எதுக்கு இளிக்கிற..?”
சுள்ளென வந்த அமரனின் வார்த்தையில் கப்பென வாயை மூடிக் கொண்டான் இளங்கோ.
“நீ இப்போ கிளம்பறது பெட்டர்…”
சத்தமே வராத மெல்லிய குரலில் அவளிடம் கூற அவளும் எழுந்து கொண்டாள். அவனிடம் தலையாட்டியவள் “வரேன் சார்…” என்று அமரனிடமும் கூற தலையை மட்டும் ஆட்டி இருந்தான் அவனும்.
“அனாவசியமா யார்கிட்டயும் முத்து உதிராது போல…”
தனக்குள்ளேயே முனகியபடி அங்கிருந்து நடந்தாள்.
“என்னடா இது புது பழக்கம்..? ராத்திரி நேரத்துல ஒரு வயசுப் பொண்ணை வீட்டுக்கு கூட்டிட்டு வர்றது..?”
கணீர் என்ற அவனது குரல் கேட்டின் அருகில் சென்றவளின் காதில் தெளிவாகவே விழுந்திருந்தது.
“வயசுப் பொண்ணுன்னு உனக்கு எப்படி தெரியும்..?”
“குரலை வச்சு கண்டுபிடிக்க முடியாதா..? அவ பேசினதை வச்சும் தெரிஞ்சுக்கிட்டேன். தேவையில்லாம பொண்ணுங்களை வீட்டுக்கு கூட்டிட்டு வர்ற வேலையை எல்லாம் வச்சுக்காதே… இதெல்லாம் எனக்கு பிடிக்காதுன்னு தெரியாதா..?”
நண்பனிடம் கடுமையாக பேசியபடியே அவன் உள்ளே செல்ல அனைத்தையும் காதில் கேட்டபடியேதான் தன் வீட்டிற்கு வந்திருந்தாள் திலோத்தமா.
“இது நாணல் இல்ல… மூங்கில்… வளைக்கிறது ரொம்ப கஷ்டம்… ஆனாலும் அந்த மூங்கில்தானே அழகான இசையை கொடுக்குது… அதிலும் என் அமர்… மூங்கிலையே தன்னோட இசையால உருக வைக்கிறவர்… அவரை என் காதலால நான் உருக வைப்பேன்… கெட் ரெடி திலோ…”
தனக்குத்தானே சொல்லிக் கொண்டவள் படுக்கையில் சென்று விழுந்திருந்தாள்.
மறுநாள் காலை பால்கனி தரிசனத்தை விடுத்து மளமளவென சமையல் வேலையில் இறங்கி இருந்தாள் திலோ. தனக்கு மட்டும் அல்லாமல் தன்னவனுக்கும் தனது புதிய அண்ணனுக்கும் சேர்த்து அல்லவா உணவு சமைக்க தொடங்கியிருந்தாள்.
உணவு சமைத்து முடித்து வேகமாக கிளம்பி சப்பாத்தி பனீர் கிரேவியை ஹாட் பாக்சில் போட்டுக் கொண்டு மாடி இறங்கி எதிர் வீட்டிற்கு வேகமாக ஓடினாள். அந்த நேரத்தில் வழக்கமாக செடிகளுக்கு தண்ணீர் விட்டுக் கொண்டிருப்பான் இளங்கோ. அவனிடம் கொடுத்துவிட்டு தன்னவனையும் மெல்ல எட்டிப் பார்த்துவிட்டு வரலாம் என்ற எண்ணம்தான். ஆனால் தோட்டப் பகுதியில் இளங்கோ இல்லை. ஆனால் செடிகள் நனைந்திருந்தன. முன் நேரமாகவே தண்ணீர் பாய்ச்சி சென்றுவிட்டான் என்று தெரிந்தது. முன் வாசல் கதவும் திறந்திருந்தது.
‘இளங்கோ அண்ணாதான் இப்போ எனக்கு ரொம்ப நெருக்கமாயிட்டாரே உரிமையோட போகலாம்தானே..’
தனக்குத்தானே சமாதானம் கூறிக் கொண்டு திறந்திருந்த கதவின் வழியே மெல்ல உள்ளே எட்டிப் பார்த்தாள். முந்தைய நாள் சிட் அவுட்டோடு கிளம்பி வந்திருந்தவள் வீட்டின் உள்பகுதியை அப்பொழுதுதான் பார்த்தாள்.
நல்ல அகலமான பெரிய கூடம். கூடத்தின் மையத்தில் எல் வடிவ உயர்தர சோபா செட்… எதிரில் அகலமான கண்ணாடி டீபாய்… எதிர் சுவரில் கலை நயத்தோடு அமைக்கப்பட்ட ஷோகேஸ். அதில் 55 இன்ச் டிவி நடுநயமாக வீற்றிருந்தது. டிவியை பார்த்தவளின் இதயத்தில் சுருக்கென ஒரு வலி. அவனால்தான் பார்க்க முடியாதே. இளங்கோவிற்காக அது அங்கு இருக்கிறது என்பது புரிந்தது.
அந்த அகலமான ஷோகேஸின் இருபுறமும் நண்பர்கள் இருவரும் வாங்கிய விருதுகள் அழகாக ஆங்காங்கே செப்பமாக அடுக்கப்பட்டிருந்தன. கூடத்தின் நான்கு மூலையிலும் உயரமான பெரிய பூக்கூடுவை அமைக்கப்பட்டு செயற்கை பூக்கள் பளீரென அலங்கரித்தன.
ஜன்னல்களுக்கு பொருத்தமான திரைச்சீலைகள் அழகாக சுருட்டி பாங்காக கட்டப்பட்டிருந்தன. வீட்டின் அமைப்பில் அப்படி ஒரு நேர்த்தி. உள்ளே நுழைந்தவுடன் தென்படும் கூடத்து சுவற்றில் பெரிதாக பிரேம் செய்யப்பட்டிருந்த அந்த புகைப்படம் அவளை பெரிதாக ஈர்த்தது.
நண்பர்கள் இருவரும் தோளில் கை போட்டு விகல்பம் இன்றி சிரித்துக் கொண்டிருந்தனர். இருவருமே கண்களில் கூலர்ஸ் மாட்டியிருந்தனர். தன் நண்பனுக்காக தானும் அணிந்திருப்பான் இளங்கோ என்று புரிந்தது. அவள் கண்கள் நிலைத்து நின்றது அமரனின் முகத்தில்தான்... அந்த சிரிப்பில்தான்… அடேயப்பா… எத்தனை ஒரு உயிர்ப்பு… எத்தனை ஒரு எதார்த்தம்… கண்களை இங்கும் அங்கும் அகற்றவே முடியவில்லை. உண்மையாய் மனதில் இருந்து சிரித்திருப்பான் போலும்.
‘அப்பப்பா… அழகுல அள்றியேடா பாவிப் பையா… எப்படி ஒரு மயக்கர சிரிப்பு..? இப்படி ஒரு சிரிப்பை எல்லா காலமும் உன் முகத்தில நான் பாக்கணும் அமர்… பாப்பேன்…”
தனக்குள் சொல்லிக் கொண்டவளின் இதழ்கள் தாமாகவே புன்னகையில் விரிந்தன.
“யாரது..?”
பக்கவாட்டில் இருந்து கேட்ட கம்பீரமான குரலில் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தாள் திலோ.
சாதாரண டி ஷர்ட் பெர்முடாஸ் அணிந்து சமையலறை வாயிலில் அவள் பக்கமாக தலையை திருப்பி நின்றிருந்தான் அமரன்.
கூலர்ஸ் அணியாத அவன் கண்களை பார்த்தவளின் விழிகள் அதிர்ச்சியில் விரிந்து கொண்டன.
(தொடரும்)