• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

குழல் யாசிக்கும் புயலே -1

ரோசி கஜன்

Administrator
Staff member
புயல் 1

'மௌலி & மேகன் இல்லம்' என பொன்னிற எழுத்துகள் தங்க நிறப் பலகையில் சுவரோடு பதித்து வைக்கப்பட்டிருந்தது.


சுவரின் இரு பக்கமும் கருப்பு நிற பிரதான வாசல் கதவுகள் அனைவரையும் வரவேற்க, கரங்களை விரித்துக் காத்திருந்தன.


இருக்கதவுகளுக்குப் பின் விரிந்து கிடக்கும் அந்தப் பிரமாண்டத்தைக் கண்களில் வியப்பைக் கூட்டிப் பார்த்து விட்டுச் செல்வோர் பலர். அவ்விடத்தின் சின்னமாக மாறிப் போனது..


உள்ளே நுழைந்ததும் இரு பக்கமும் நீண்டப் பாதை. பாதையின் முடிவில் இரு அரண்மனைகள் சமச்சீராக எழும்பி நின்றிருந்தன. அவ்விரு அரண்மனைகளுக்கு நடுவே வரிசையாக வளர்ந்து நிற்கும் செடிகள் அதை அலங்கரிக்கும் விதமாக அழகிய மலர்கள் பூத்து குழுங்கி இருந்தன.


அந்தப் பிரமாண்டத்தை மேலும் அழகைக்கூட்டும் விதமாக, வண்ண வண்ண மினி விளக்குகளின் சரங்கள் இரண்டு அரண்மனைகளையும் அலங்கரித்திருந்தன. மேலும் பூச்சரங்களும் அலங்காரத் தோரணையாக அரண்மனை முழுவதும் படர்ந்தன,


வீட்டின் பின்னால் சமையல் வேலைகள் நடந்துக் கொண்டிருந்தன. அவ்வீட்டில் வேலைச் செய்பவர்களின் மேற்பார்வையில் இவ்வேலைகள் அனைத்தும் நடந்துக் கொண்டிருந்தன.


வீட்டின் உள்ளே, ஆண்கள் ஒரு பக்கம் பரபரப்பாக வேலை ஏவிக் கொண்டிருந்தனர். இன்று வீட்டில் நடக்க இருக்கும் பிறந்த நாள் விழாவிற்கு வர இருக்கும் பல வி.ஐ.பிகளை வரவேற்கும் பணியைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தனர்.


உள்ளே பெண்கள் பலரும் அவ்வீட்டின் இளவரசியின் அறைக்குள் செல்வதுமாக வருவதுமாக இருந்தனர்.


மேகன் குடும்பம் மொத்தமும் வலதுப் பக்கமாக இருந்த மௌலியின் அரண்மனையில் தான் கூடியிருந்தது.



மௌலி இல்லத்தின் இளவரசிக்கு இன்று பிறந்த நாள் கொண்டாட்டம். அது மட்டுமின்றி தங்கள் இளவரசியின் திருமண அறிவிப்பை அறிவிக்க காத்திருக்கும் இல்ல விழா, இனிய விழா .



"நவி ! இது தான் உனக்கு பெஸ்ட், இல்ல இது தான் உனக்கு சூட்டாகும் !"


"இல்ல இது, இல்ல இது" என தோழிகள் அவளைச் சுற்றி நின்றுக் கொண்டு குழப்பி விட, குழம்பிய குட்டையாக இருந்தாள்.


இவர்கள் ஒரு பக்கமிருக்க, மறுபக்கமோ அவளது சித்திகள் இருவரும், அத்தையும் வருங்கால மாமியாரும் அவள் அருகே அமர்ந்து அவளை வைரத்தில் இருந்து தங்கம் வரைக்கும் அலங்கரிக்க முடிவு செய்து'இது... அது... ' என அவள் மீது வைத்து வைத்து அவளை ஒரு வழியாகி விட்டனர்.


"ஈவ்னிங் ஃபங்ஷனுக்குள்ள என்னை ரெடி பண்ணிடுவீங்களா? இல்ல இரண்டு நாள் கழிச்சி ஃபங்ஷன்ன வச்சுக்க சொல்லட்டுமா?" என நக்கலாகக் கேட்டவளை

அங்கிருந்த அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்து வழிந்தனர்.


"என்னையும் செலக்ட் பண்ண விட மாட்றீங்க... நீங்களும் எதையும் செல்க்ட் பண்ண மாட்டீக்கிறீங்க. இப்படியே போச்சுன்னா, நான் ஃபங்ஷனுக்கு நைட் வியர் தான் போட்டுகிட்டு வந்து நிக்கணும்.

நிக்கட்டுமா?" என இரண்டு பிரிவினர்களையும் பார்த்து கேட்டாள்.


"உனக்கு என்னடி ராசாத்தி அதுவும் அழகு தான் ! ஆனா அதுலையும்... "என அவர் ஆரம்பிக்க, "சித்தி போதும்" கையெடுத்து கும்பிட்டே விட்டாள்.


"இல்லடி...!"


"ஐயோ சித்தி போதும் ! அதுலையும் இது அதுன்னு ஆரம்பிக்காதீங்க! நானே இன்னைக்கு போட வேண்டிய ட்ரெஸ அண்ட் ஜுவெல்ஸ் செலக்ட் பண்றேன். நீங்க எல்லாரும் சைலண்ட்டா இருங்க"என்று கண்ணாடி முன்னே ஒவ்வொரு ஆடையையும் அதற்கேற்ற ஆபரணங்களை வைத்து வைத்து அவள் அனைவரையும் பார்க்க, அதுலயும் இது அது என அவளை குழப்பினார்கள்.



"தயவு செய்து எல்லாரும் வெளியே போயிட்டு என் அம்மாவை அனுப்பி வைங்க ! அவங்க போதும் எனக்கு... இப்போ எல்லாரும் கிளம்புங்க !"என்றாள் பெரிதாய் கும்பிடு போட்டு.


"அதெல்லாம் நாங்க போக மாட்டோம்... வேணும்னா ஆன்டிய கூப்பிட்றோம், அவங்க வந்து எதை ? எப்படி ? செலக்ட் பண்றாங்க பார்போம் "என்று இருவர் மட்டும் அங்கிருந்து நழுவி, அவளது அன்னையைத் தேடிச் சென்றனர்.


அவரை எங்கும் தேடியும் கிடைக்கில்லை... சோர்ந்து போய் அவரது கணவன் ராஜ மௌலியிடமே வந்து சேர்ந்தனர் இருவரும்.


அவர் முன் இருவரும் மூச்சு வாங்க நின்றனர். நெஞ்சில் கைவைத்து தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ள, அவர்கள் இருவரும் அழகிய புன்னகையுடன் பார்த்திருந்தார் ராஜமௌலி.


"யார் வேணும் உங்க ரெண்டு பேருக்கும்?"


"மிஸஸ் ராஜமௌலி தான் வேணும் அங்கள் ! எங்க போனாங்க? எங்கேயும் அவங்களை காணல !"என்றனர் இருவரும்.


"கிச்சனுக்குள்ள போய் பார்த்தீங்களா?"


"கிச்சன்லையா?"என இருவர் ஒருவரை ஒருவரை பார்த்து ஒரு சேர கேட்டனர்.


"அங்க தான் இருப்பாங்க போய் பாருங்க !" தன் துணைவியார் இருக்கும் இடத்தை சரியாக கணித்து சொன்னார் அவரது காதல் கணவர்.


இருவரும் நம்பிக்கையில்லாமல் சமையலறையை நோக்கிச் செல்ல ராஜமௌலியின் கணிப்பு சரியானது.


அவரது காதல் கண்ணாட்டி திருமதி தனராஜேஸ்வரி ராஜமௌலியும் அங்கு தான் அடுப்பில் எதையோ கிண்டி கொண்டிருந்தார்.


"ஆன்டி ! நாங்க உங்களை எங்க எல்லாம் தேட்றது? இங்க என்ன பண்றீங்க?" அவர் அருகே வர, அடுப்பிலிருந்து இனிப்பு தான் நறுமணத்தை பரப்ப,


"ம்ம்... "என நறுமணத்தை நுகர இருவரையும் பார்த்து சிரித்தப் படி "என்ன வேணும் உங்க ரெண்டு பேருக்கும்?"


"எங்களுக்கு நீங்க தான் வேணும் ஆன்டி... உங்களை தேடாத இடம் இல்லை. நீங்க கிச்சன்ல இருக்க மாட்டீங்க நினைச்சு இந்த இடத்தை ஸ்கிப் பண்ணினோம். ஆனா நீங்க இங்க தான் இருக்கீங்க... பின்னாடி தான் சமையல் வேலை நடக்குதே ! இங்க என்ன கிண்டுறீங்க நீங்க? "


"உங்க பிரண்டுக்கு எத்தனை உணவு வெளிய சாப்பிட்டாலும், என் கையில் ஏதாவது சாப்பிட்டா தான் மனசு ஆறுதல் அடையும் நிம்மதியா தூங்குவா ! அதே போல அவளோட ஒவ்வொரு பிறந்த நாளை இப்படி கிராண்ட் வெளிய ஆள் வச்சி சமைச்சாலும், அவளுக்கு எப்பையும் என் கையில ஸ்வீட் வாங்கி சாப்பிட்றது தான் பிடிக்கும்... அதான் அவளுக்கு பிடித்த ரசகுள்ளா ! நெய் மைசூர் பாக்குனு அவளுக்கு பிடிச்சதை செஞ்சிட்டு இருக்கேன்"


"அதென்ன உங்க பொண்ணுக்கு மட்டும் எங்களுக்கு எல்லாம் இல்லையா?" என நாவால் இதழை ஈரமாக்கி கொண்டு கேட்டாள்.


"இல்லை !"என பட்டென சொன்னவர்"என் பொண்ணுக்கு மட்டும் தான்"என்றார். அவர்கள் இருவரும் நொடித்து விட்டு, "உங்க பொண்ணு உங்களை தான் கூப்பிட்றா வாங்க !"என்றனர்.


அவரும் அடுப்பை அணைத்து விட்டு செய்த இனிப்பு பலகாரங்களில் இரண்டு வகையை மட்டும் கப்பில் எடுத்துக் கொண்டு அவர்களுடன் நடந்தார்.



"என்ன தங்கச்சி சுவீட்டா ! அதுவும் மருமகளுக்கு மட்டுமா?"என எதிரே வந்த அவளது உடன் பிறந்த சகோதரன் தன்வேந்தரமேகன் கேட்டிட,


"ம்ம்... ஆமா அண்ணா ! உன் மருமகளுக்கு மட்டும் தான் "என அழுத்திச் சொல்லி விட்டு அறைக்குள் நுழைந்தார்.


தன்வேந்தரோ அருகே அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க ராஜமௌலியிடம்" உனக்கும் இல்லையா மாமா?"


"அதான் இல்லை உன் மருமகளுக்கு மட்டும் தான் சொல்லிட்டு தான போனா உன் தங்கச்சி ! இதுல நான் வேற கேட்டு உன்னை போல நானும் மூக்கு அறு பட்டு உக்காரணும் நினைக்கிற நீ ! நடக்காது மச்சான். எனக்கு அவளை தெரியாதா? போவீயா !"என்க, வேந்தரோ வாய் விட்டுச் சிரித்தார்.


உள்ளே நுழைந்த ராஜேஸ்வரியோ அங்கிருக்கும் கூட்டத்தைக் கண்டு பெருமூச்சு விட்டபடி மகளின் அருகே வந்தமர்ந்தார்.


முகத்தைச் சுருக்கி அவரிடம் செல்லம் கொஞ்சிய படி " நீ செலக்ட் பண்ணி கொடு மா ! ஒரே கண்ஃபுயூசனா இருக்கு"எனக் கெஞ்சினாள்.


"எனக்கு தெரிஞ்சது தான, நான் இல்லமான நீ எதை செலக்ட் பண்ணிருக்க? நீ சாப்பிடு! அம்மா உனக்கு செலக்ட் பண்ணி கொடுக்கிறேன்" என்று அவள் கையில் இனிப்பைத் திணித்து விட்டு தேடுதலைத் தொடங்கினார்.


"இப்போ நீங்க செலக்ட் பண்ணிடுவீங்க ஆன்டி. மேரேஜ்க்கு அப்புறம் அவளுக்கு யார் செலக்ட் பண்ணி கொடுப்பா?!"எனக் கேட்டனர் அவளது தோழிகள்.


"ஏன் நான் தான் பண்ணுவேன் ! அவ என்ன கடல் கடந்தா போறா? இதோ பக்கத்துல தான் போறா ! அம்மான்னு கூப்பிட்டா வந்திட போறேன். அவ கூப்பிட குரலுக்கு அவன் முன்ன போய் நிப்பேன்.


"ம்ம்.. கல்யாணத்துக்கு அப்புறம் அவ எங்க ஆன்டி உங்களை கூப்பிட போறா! அடுத்து எல்லாம் அவ புருஷனையும் அவ மாமியாரையும் தான் கூப்பிடுவா! கல்யாணத்துக்கு அப்புறம் அவளுக்கு நீங்க விருந்தாளி தான்"என்று அவள் நிதர்சனத்தை பேசினாலும் அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை...


அனைவரும் அதை நகைச்சுவையாக நினைத்து சிரிக்க, இவருக்கு தான் முகமெல்லாம் கறுத்து விட்டது.


"அடியே கொஞ்சம் சும்மா இருங்கடி...! அம்மா, இன்னைக்கி என்ன ட்ரெஸ் பண்ணிக்க? என்ன ஆர்ணமெண்டஸ் போட செலக்ட் பண்ணி கொடுமா ! ஒரே கண்ஃபூஸா இருக்கு !"என்று சிணுங்கினாள்.


தோழிகள் என்ன கேலி கிண்டல் அடித்தாலும் ' எனக்கு முதல்ல அம்மா தான் !' என்று மறுமொழி சொல்லாத மகளை எண்ணி உள்ளுக்குள் அதிருப்தி அவருக்கு.


இருந்தும் மகள் என்றாள் உயிரே வைத்திருக்கும் தாயல்லவா அவர், உள்ளே எழுந்த ஏமாற்றத்தை மறைத்து விட்டு மகளுக்காக ஆடை தேர்வு செய்வதில் மும்மரமானார்.


அம்மா திணித்த இனிப்பு பதார்த்தங்களை வாயில் அதக்கிய படி அவர் தேர்வு செய்வதை ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் பிரணவி.


பால் பிங்க் நிறத்தில் அதீத வேலைப் பாட்டுடையா மேக்ஸியை எடுத்து கொடுத்தவர். அதற்கெற்றது போல

வைர நெக்லஸ் தேர்வு செய்ய, பிரணவிக்கு அது பிடித்து விட்டது.


"வாவ் !! எப்பையும் உன் செலக்சன் அடிச்சக்க ஆளே இல்லை மா ! தேங்க் யூ சோ மச் ம்மா !"என கட்டி அணைத்துக் கன்னத்தை எச்சில் செய்ய, அவரும் அவளை அணைத்து முத்தம் வைத்து,


"அவ எங்க போனாலும் யார் கிட்ட முடிவுகள் கேட்டாலும் என்னை போல அவளுக்கு சரியானத கொடுக்க யாராலையும் முடியாது !"என்று சொல்லி பிரணவிக்கு தான் தான் முதன்மையானவள் என்று சொல்லாமல் சொல்லிவிட்டு எழுந்து சென்று விட்டார்.,


தோழிகளுக்கோ பிரணவிக்கோ அவர் பேச்சின் உள்ளர்த்தம் விளங்க வில்லை. ஆனால் ராஜேஸ்வரியின் கூற்றை என்னவோ பிரணவியின் வருங்கால மாமியாரும் இராஜேஸ்வரி அண்ணியுமான பார்வதிக்கும், இராஜேஸ்வரி உடன் பிறந்த தங்கை அமிர்தாவிற்கும் இராஜேஸ்வரியின் ஓரகத்தி செல்வராணிக்கும் விளங்கிட,

இருவரும் பார்வதியை தான் பார்த்தனர்.


அவர் முகத்திலும் கலவர ரேகை படர்ந்ததை கவனித்த

அமிர்தா தான் அவர் தோளை அழுத்தி விட்டு ' ஒன்னுமில்லை ' என்பது போல கண்களை மூடித் திறக்க, பார்வதியும் ' சரி ' என்பது போல தலையசைத்தார்.


இராஜேஸ்வரிக்கு வருங்கால சம்மந்தி அல்லவா ! அதனாலே இந்தக் கலக்கம்.


****


மௌலியின் அரண்மனைக்கு முன் அந்த கருப்பு நிற கார் வழுக்கி கொண்டு வந்து நின்றது.


காரைக் கண்டதும் வேலையாட்கள் வேலையை விட்டுவிட்டு யாரென ஆர்வத்துடன் பார்த்தவர்களுக்கு அடுத்த நிமிஷமே பேரதிர்ச்சி.


மகிழுந்திலிருந்து மாலையும் கழுத்துமாக இறங்கினான் பிருத்வி மௌலி. அவனுடன் சேர்ந்து அந்தப் பக்கமாக கதவை திறந்து கொண்டு இறங்கினாள் ஆர்யங்கா !


ஊரே பார்ப்பது போல அங்கிருந்த அத்தனை வேலையாட்களின் பார்வை இவர்கள் மீதே படிந்திட, ஆரியங்காவிற்கு தான் சங்கோஜமாக இருந்தது.


பிருத்வி அவளை அழைக்க, அவனுடன் அருகே வந்து நின்றவளின் கையைப் பற்றிக் கொண்டான்.


அந்தக் கையையும் அவனையும் மாறி மாறிக் கலவரத்துடன் பார்த்தாள்.


அவனோ ' நானிருக்கிறேன் ' என்று விரலை அழுத்தி நம்பிக்கையூட்டினான். அவளும் மெல்ல தலையை அசைத்துக் கொண்டாள்.


அங்கிருந்த ஒரு வேலைக்காரர் மட்டும் வேகமாக உள்ளே ஓடினார். "ஐயா ! அம்மா !"கத்திக் கொண்டு ஓடி வர, அனைவரும்'என்ன ஏதென்று கூடத்தில் கூடினார்கள்.


"என்ன முருகா? ஏன் இப்படி கத்திட்டு வர? யார் வந்திருக்கா ?" வேந்தர் வந்து முதலில் கேட்டார்.


"ஐயா ! அது வந்து... தம்பி வந்திருக்குங்கயா" என்று தயங்கி தலையை சொரிய, "யாரு வித்யூ வா !"என ஆர்வமாக கேட்டுக் கொண்டு உடன் நடக்க,


"இல்லங்கயா பிருத்வி தம்பி தான் வந்திருக்கு, அவர் கூட..."என இழுக்க, ராஜமௌலி ஒரு பெருமூச்சை இழுத்து விட்ட படி வாசலை நோக்கி நடந்தார்.


"என்ன முருகா இழுக்கற ! அவன் கூட யார் வந்திருக்கா?"என இறுக்கமான குரலில் கேட்டார் ராஜேஸ்வரி.


"ஒரு பொண்ணு வந்திருக்குமா ! ரெண்டு பேரும் மாலையும் கழுத்துமாக வந்து நிக்காறாங்க "என்றதும் அனைவரும் அதிர்ந்தது வேகமாக வாசலை நோக்கி வந்தவர்கள் மாலையும் கழுத்துமாக நிற்கும் காட்சிகளைக் கண்டனர்.


ராஜமௌலி தான்" கனகா ! போய் ஆர்த்தி எடுத்துட்டுவா !"என்று வேலைக்கார பெண்ணிடம் கட்டளையிட, இப்போது அனைவரின் பார்வை அவர்மீது படிந்தன.


"உங்களுக்கு இந்த விஷயம் முன்னாடியே தெரியும் அப்படி தானே?"ராஜேஸ்வரி கோபத்துடன் கேட்கவும்

" கல்யாணம் பண்ணி வச்சதே நான் தான்" என்றார் அசட்டையாக,


அதில் இன்னும் அவர் தீயாக முறைக்க, பாவம் சூரியனின் முழுப்பார்வை பூமியின் மீது பட்டு வெப்பம் கூடுவது போல அவரது தீப் பார்வையின் வெப்பத்தை தாங்க முடியாமல் வேறு புறம் பார்வையை திருப்பிக் கொண்டார்.


ராஜேஷ்வரி பிருத்வியையும் ஆர்யங்காவையும் செக்கரை படித்த விழிகளால் எரிக்க,


அவனுக்கு அந்த பார்வை பரிச்சயம் என்பது போல அசட்டை செய்ய அவள் தான் நடுங்கி கொண்டிருந்தாள். அதை அவன் கரம் வழியே உணர்ந்து மேலும் அழுத்தத்தை கூட்டினான்.


"உங்க புள்ளைக்கு யாரும் பொண்ணு கொடுக்க மாட்டாங்கனு யாரோ ஊரு பேர் தெரியாதவள கட்டி வச்சிட்டீங்களா மிஸ்டர் மௌலி !" அடக்கப்பட்ட கோபத்தில் சீற,"ராஜேஸ்வரி "என அதரங்கள் துடிக்க சீற்றமாகக் கத்தினார்.


கண்களை மூடி தனக்குள் முகிழ்த்த கோபத்தை அடக்கியப்படி அவன் நின்றிருக்க, அவர்கள் கூற்றை உள்வாங்கியவளுக்கு முதல் முறையாக தன்னருகே நிற்பவனைப் பற்றித் தெரிந்த கொள்ள ஆர்வமும், எதுவும் தெரிந்து கொள்ளாமல் திருமண உறவில் இணைந்ததை நினைத்து பயமும் கலக்கும் உள்ளுக்குள் புதிதாக முளைத்தது அவளுக்கு.
 
Top Bottom