குழல் யாசிக்கும் புயலே - புயல் 11
அந்த அறையிலுள்ள நான்கு சுவர்களையும் வெறித்தபடி அமர்ந்திருந்தாள் ஆர்யங்கா! அவளது கண்களில் ஒரு சொட்டுத் தூக்கம் இல்லை. பிருத்வி சொன்னதையே எண்ணிக் கொண்டிருந்தாள்.
அன்று பிருத்வியின் முன்னே கண்ணீரோடு தன் கதையைச் சொல்லி முடிந்திருந்தாள் ஆர்யங்கா. பிருத்விக்கோ பேரதிர்ச்சியாக இருந்தது.
'வித்யூவா இவளை ஏமாற்றியது?' என்று அவனால் நம்ப முடியவில்லை. ஆனால் அவள் சொல்வதில் பொய் இருப்பதாகத் தெரியவில்லை; நாடகம் போலவும் தோன்றவில்லை. அவள் சொல்வது உண்மையாகத்தான் இருக்க வேண்டும் என்று நம்பினான்.
"நீ சொல்றதுதான் உண்மைனு நான் எப்படி நம்புறது?"
கண்ணீரைத் துடைத்தவள், "நீங்க ஏன் சார் நம்பணும்? தற்கொலை பண்ணிக்க போனதுக்கு காரணம் கேட்டீங்க, சொன்னேன்... அவ்வளவுதான்! நீங்க நம்பி, உங்களால எனக்கு நியாயம் கிடைக்கும்னு நான் உங்ககிட்ட சொல்லல! உங்ககிட்ட சொல்ல வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை. நீங்க போலீஸ்னு சொன்னதாலதான் உண்மையச் சொன்னேன். நான் வர்றேன் சார்" என்று எழ முயன்றவளைத் தடுத்தவன்,
"இரு" என்றான்.
அவனைப் புரியாமல் பார்த்தாள் ஆர்யங்கா.
"என்ன மறுபடியும் தற்கொலை பண்ணிக்கப் போறியா?"
"நான் என்ன வேணும்னாலும் பண்ணுவேன் சார். என்னை போக விடுங்க" என்று படபடத்தாள்.
"நீ எங்கேயும் போகக் கூடாது. என்னோடதான் வரணும்!"
"நான் ஏன் சார் உங்களோட வரணும்? நீங்க யாருன்னே எனக்குத் தெரியாது. வழி விடுங்க நான் போகணும் சார்" என நகர இருந்தவளை மீண்டும் வழிமறித்து நின்றான்.
"நீ சொன்ன வித்யூ வேற யாரும் இல்லை, என்னோட கசின். அவன் கல்யாணம் பண்ணிக்கப் போறது என் தங்கச்சியை!" என்றதுமே அதிர்ந்து விழித்தாள்.
"உன்னை ஏமாத்திட்டு என் தங்கச்சியைக் கல்யாணம் பண்ணுவானா அவன்? அதுவும் வெறும் சொத்துக்காக! நான் இருக்குற வரைக்கும் இந்த கல்யாணத்தை நடத்த விட மாட்டேன். அதுக்கு நீ எனக்கு உதவி செய்யணும்" என்றான் கட்டளையாக.
"நா... நான் ஏன் சார் உதவி செய்யணும்? என்னால முடியாது! எனக்கு யாரும் வேணாம், எதுவும் வேணாம். நான் சாகத்தானே வந்தேன்! என்னை நிம்மதியா சாகக் கூட விட மாட்டீங்களா சார்?" எனத் தேம்பி அழுதாள்.
அவளையே வெறித்தவன், தாடையைத் தடவியபடி, "என்னால தனியா வாழ முடியும், குழந்தையை வச்சுப்பேன் அப்படின்னு சவால் விட்டுட்டு வந்த நீ, ஏன் சாகணும்னு முடிவுக்கு வந்த?" எனக் கைகளைக் கட்டிக்கொண்டு அவளைத் தீவிரமாக ஆராய்ந்தபடி கேட்டான்.
அவன் கேட்டதும் தடுமாறிப் போனவள், அவன் விழிகளைச் சந்திக்க முடியாமல் தலை குனிந்தாள்.
"சொல்லு! தைரியமா சவால் விட்டுட்டு வந்தவ, எதுக்குத் தற்கொலை செய்ய இங்கே வரணும்?"
அவளும் விம்மிக் கொண்டே நடந்ததைக் கூறினாள்.
ஆர்யங்கா வேலையை ராஜினாமா செய்துவிட்டு வந்த செய்தி அரசியின் காதுக்கு எட்டியது. வேலை முடித்து வந்த வேகத்திலேயே அவளைப் பிடித்து விசாரித்தார் அரசி.
"எதுக்குடி வேலை வேணாம்னு சொல்லிட்டு வந்துட்ட? அந்த வேலையும் இல்லைன்னா என்னடி பண்ணுவ?" எனக் கேட்டதற்கு அவள் பதில் சொல்லாமல் தலை குனிந்து நின்றாள்.
"ஏன் இப்படி அமைதியா இருக்க? விஷயம் என்னன்னு சொல்லு. ஒருவேளை அந்த வித்யூ தம்பி வேலைக்கு வர வேண்டாம்னு சொல்லிட்டாரா? வீட்ல பேசி கல்யாணம் பண்ணிக்கலாம், இனி வேலைக்குப் போக வேண்டாம்னு சொல்லிட்டாரா?" என அவளை உலுக்கிக் கேட்க, அவரிடம் உண்மையை மறைக்க முடியாமல் வெடித்து அழுதாள்.
அவளது கதறலைக் கண்டு அரசி பயந்து போனார். மனம் ஏனோ அடித்துக்கொண்டது.
"என்னடி ஆச்சு? சொல்லுடி" எனப் பதற்றத்துடன் கேட்டார். அவளும் அனைத்தையும் சொன்னாள்.
அதைக் கேட்டதுமே அவருக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது. சொந்தத் தங்கை போல அவளைப் பார்த்துக் கொண்டதால், அந்த அக்கறையில் அவளை அடித்தார். பின் அவள் குழந்தையைச் சுமப்பதால் விட்டுவிட்டார். அவளும் அழுதுகொண்டே இருந்தாள்.
"நான் அப்பவே சொன்னேன், கேட்டியா? இப்படி அவனை நெருங்க விட்டுட்டு இப்போ வயித்துல பிள்ளையோட வந்து நிக்கிறியேடி! ஐயோ, ஊர் உலகத்துக்குத் தெரிஞ்சா உன் கதி என்னாகுமோ? உன்னைப் பத்தி என்ன பேசுவாங்களோ?" எனத் தலையில் அடித்துக்கொண்டு அழுதார். அவளுக்காக மெய்யாக வருந்தி அழுதார்.
முகத்தைத் துடைத்துக் கொண்டவர், "இந்தக் குழந்தை உனக்கு வேணாம், கலைச்சிடு! உனக்கு அக்கா வேற கல்யாணம் பண்ணி வைக்கிறேன்" என்றார்.
"ஐயோ அக்கா! குழந்தையைக் கலைக்கச் சொல்றீங்க! என்னால முடியாதுக்கா! எனக்கு இன்னொரு கல்யாணம் வேணாம். நான் தனியாளா இருந்து என் குழந்தையை வளர்த்துப்பேன். என்னை விடுங்க அக்கா ப்ளீஸ்" என அவர் காலில் விழுந்து அழ, அவரோ எதுவும் சொல்லவில்லை. மெல்ல மெல்ல அவள் மனத்தை மாற்ற வேண்டும் என்று கருதி, அப்போது எதுவும் பேசாமல் அவர் வீட்டுக்குத் திரும்பினார்.
அவர்கள் பேசியதைக் கணவன் பாண்டி மறைந்திருந்து கேட்டுக் கொண்டுதான் இருந்தான்.
மறுநாள் அரசி வேலைக்குச் செல்ல, ஆர்யங்கா தனியாக வீட்டில் இருந்தாள். மதிய வேளையில் யாருமில்லாத நேரத்தில் பாண்டி உள்ளே நுழைய, முதலில் பயந்தவள் பின் தெளிந்து அவனுக்குத் தண்ணீர் கொடுத்தாள்.
"என்ன அண்ணே வேணும்? அக்கா எதுவும் சொல்லிவிட்டாங்களா?" என அவன் வந்த எண்ணம் அறியாது கேட்டாள்.
"நேத்து உன் அக்கா எல்லாத்தையும் சொன்னா! உன் நிலைமையை நினைச்சா கஷ்டமா இருக்கு. உன் அக்கா சொல்ற மாதிரி இந்தக் குழந்தையைக் கலைச்சிடு!"
அவளோ அமைதியாக நின்று கண்ணீர் வடிக்க,
"பக்கத்து ஊர்ல உனக்கு ஒரு வீடு பார்த்துத் தர்றேன். அங்கே இரு" என்றான்.
"அங்கே எதுக்கு அண்ணே நான் போகணும்? வேலை ஏதாவது எனக்காகச் சொல்லி வச்சிருக்கீங்களா?" எனச் சந்தேகமாகக் கேட்டாள்.
"வேலைக்கு நீ போக வேண்டாம்... உன்னை நான் பார்த்துக்கிறேன் ஆர்யா!" என்று அவள் தோளில் கை வைக்க, அரண்டு போய் பின்வாங்கினாள்.
"என்ன அப்படிப் பார்க்கிற? நான் உன்னை கடைசி வரைக்கும் பார்த்துக்கிறேன். உனக்கு என்ன வேணும்னு கேளு, நான் செய்யறேன். அப்பப்ப வந்துட்டுப் போறேன்... மாமனைச் சந்தோஷப்படுத்து!" என மீசையை முறுக்கிவிட்டு விகாரமாகச் சிரித்தான்.
"அண்ணே!"
"இன்னும் என்ன அண்ணே! மாமான்னு சொல்லு. உன் குழந்தை இடைஞ்சலா இருக்கும், உன் அக்கா சொல்ற மாதிரி அதை அழிச்சிடு. அப்புறம் ஊருக்குப் போறேன்னு சொல்லிட்டு நான் சொல்ற இடத்துக்குப் போயிடு. மாமா நைட்டு வந்து பார்க்கிறேன்" என அவள் கையைப் பிடிக்க வந்தான்.
"ச்சீ! வெளிய போடா அயோக்கிய நாயே! உன்னைப்போய் நல்லவன்னு நினைச்சு உள்ளே விட்டேன் பாரு. வெளிய போடா! இன்னொரு வாட்டி இப்படிப் பேசினேன்னா அக்காகிட்ட சொல்லிடுவேன்... போடா இங்கிருந்து!"
"ஏய்! என்னடி பெருசா கேட்டுட்டேன்? பணக்காரனுக்கு மட்டும் முந்தானையை விரிப்பியோ? எனக்கு விரிக்க மாட்டியோ? அவன் அளவுக்கு இல்லனாலும் ஓரளவு பணம் தர்றேன்டி!"
"ச்சீ, வாயை மூடு! ஏதாவது பேசினா நாக்கை அறுத்துடுவேன். நான் யாருக்கு முந்தானையை விரிச்சா உனக்கு என்னடா? மரியாதையா வெளிய போயிடு. உன்னைக் கொன்னுட்டு ஜெயிலுக்குப் போவேன், போடா இங்கிருந்து!" என்று காளியாக மாறி நின்றாள்.
"என்னடி ரொம்பத் துள்ளுற? உனக்கு ரெண்டு நாள் டைம். அதுக்குள்ள நான் சொன்னதுக்குச் சம்மதிக்கலைன்னா, நீ கர்ப்பமா இருக்கிற விஷயத்தையும், காசுக்காக முதலாளி கூடப் படுத்துட்டு வந்திருக்கேன்னும் ஊர் முழுக்கச் சொல்லி உன்னை அசிங்கப்படுத்தலைன்னா என் பேரு பாண்டி இல்லைடி" என்று சபதமிட்டுச் சென்றான்.
அவன் சென்றதும் நிலைகுலைந்து சத்தமிட்டு அழுதாள். அவனைப் பற்றி அரசியிடம் சொல்லவும் முடியாது; கணவனே தெய்வம் என்று வாழ்பவள் அரசி. தன்னால் அவர் வாழ்க்கை பாதிக்கப்படக் கூடாது என்று எண்ணி, இரவு முழுக்க ஊமையாக அழுது கரைந்தாள்.
அடுத்த நாள் அவள் வெளியே வந்தபோது அங்கே பாண்டி இருப்பதைக் கண்டு அஞ்சி, தற்கொலை முடிவெடுத்து வந்ததாகச் சொல்லி முடித்தாள்.
பாண்டியின் செயலை எண்ணி பிருத்வி தன் முஷ்டியை இறுக்கினான்.
பின் தன்னை இயல்பாக்கிக் கொண்டவன் அவளிடம், "இப்போ எப்படி நீ வீட்டுக்குப் போவ?" எனக் கேட்க, பாண்டியை நினைத்து அவளுக்கு மீண்டும் பயம் தொற்றிக் கொண்டது.
"நீ என்னோட சென்னைக்கு வா! நான் உன்னை பார்த்துக்கிறேன்" என்றதும், அவளது அழுகை நின்றது. அவனை வலியோடும் கசப்பான புன்னகையோடும் பார்த்தாள். அந்தப் பார்வையின் பொருளை உணர்ந்து கொண்டவன் சிரித்தபடி,
"உன் பார்வையோட அர்த்தம் புரியுது. ஆனா அதுக்காக நான் உன்னைக் கூப்பிடல. எனக்கும் உன் மேல பெரிசா எந்த ஈடுபாடும் இல்லை. நான் உன்னைச் சென்னைக்கு வரச் சொல்றது என் தங்கச்சியோட கல்யாணத்தை நிறுத்த!" என்றான்.
அவளோ அதிர்ந்து பார்த்தாள்.
"என்ன பார்க்கிற? வித்யூ தப்பானவன்னு நான் சொன்னா என் வீட்ல யாரும் நம்ப மாட்டாங்க. உன்னை ஆதாரமா முன்னாடி நிறுத்தினா கண்டிப்பா நம்புவாங்க. அதுக்காகத்தான் நீ சென்னைக்கு வரணும்."
"வர முடியாதுன்னு சொன்னா என்ன பண்ணுவீங்க?"
"தூக்கிட்டுப் போக எனக்குக் கொஞ்ச நேரம் ஆகாது" என்றவனைத் திடுக்கிட்டுப் பார்த்தாள்.
"நீ என்னோட வருவேன்னு நான் நம்புறேன். வருவல?" என அவன் பார்த்த பார்வையில் பயந்து போனாள்.
"நான் டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வர்றேன். எங்கேயும் போகக் கூடாது. போனேன்னு தெரிஞ்சது..." என மிரட்டியவன், அவளைத் தாண்டிச் சென்றான்.
அவன் சென்ற வழியில் நின்ற காவலாளியிடம் ஏதோ சொல்லிவிட்டுச் செல்ல, அவரும் இவளைக் கூர்ந்து கவனித்தார்.
பாவம், அவளால் அந்த இடத்தை விட்டு நகரவோ தப்பிக்கவோ முடியவில்லை. அவன் தயாராகி வந்ததும், இருவரும் அங்கிருந்து கிளம்பினார்கள். கார் அவள் வீட்டின் அருகே சற்று தள்ளி நின்றது.
"போ! உனக்குத் தேவையானதை எல்லாம் பேக் பண்ணி எடுத்துட்டு வா!" என்றவன், அவள் இறங்குவதைப் பார்த்தவாறு, "எதாவது செய்ய நினைச்சே, அப்புறம் போலீஸ் ஸ்டேஷன்லதான் உட்காரணும் பாத்துக்கோ" என்று மிரட்டினான்.
வீட்டிற்கு வந்ததும் தன் உடமைகளை எடுத்துக்கொண்டவள், சென்னையில் தோழி மூலமாக வேலை கிடைத்திருப்பதாகவும், அங்கே விடுதியில் தங்கப் போவதாகவும் ஒரு கடிதம் எழுதிப் பக்கத்து வீட்டில் கொடுத்துவிட்டு வந்தாள்.
காரை நோக்கிச் சென்றபோது அங்கே வந்த பாண்டியைத் தற்செயலாகக் கண்டு பயந்து போனாள். அவனும் அவள் அருகே வேகமாக வந்தான்.
"ஏய்! எங்கடி போற?" என அவளது கையைப் பிடிக்க வர, இருவரும் நடுவே வந்த பிருத்வி, பாண்டியின் கையைப் பற்றி முறுக்கினான். மூக்கில் இரண்டு குத்து, வாயில் இரண்டு என விட்டுவிட்டு,
"யாரும் இல்லாத பொண்ணுன்னா உன் இஷ்டத்துக்கு மிரட்டுவியா? அவளுக்குக் கேட்க ஆள் இல்லைன்னு நினைச்சியா? நான் இருக்கேன். இவளை நான் சென்னைக்குக் கூட்டிட்டுப் போறேன். உன்னை அடிச்சதோ, இவளைக் கூட்டிட்டுப் போறதோ யாருக்கும் தெரியக் கூடாது. ஊருக்குள்ள இவளைப் பத்தித் தப்பா எதாவது பேசினேன்னு தெரிஞ்சது, உன்னைத் தூக்கி ஜெயில்ல போட்டுடுவேன். ஜாக்கிரதை! வாயை மூடிட்டு கிளம்பிடு!" என்றதும் பயந்தவன் ஓட்டம் பிடித்தான்.
சென்னைக்கு வந்ததும், நேராக வீட்டிற்குச் செல்லாமல் ஒரு பெரிய நட்சத்திர விடுதியில் அறை எடுத்துத் தங்கினான் பிருத்வி. அந்த அறையில் அவள் ஒரு பக்கம் முடங்கிக் கிடந்தாள். பயணக் களைப்பில் அவனும் உறங்கிப் போனான்.
இரவில் விழித்தவன், இருவருக்கும் உணவு ஆர்டர் செய்தான்.
உணவு வந்ததும் கதவைத் தட்டி அவளை வெளியே அழைத்தான். உறங்கிக் கொண்டிருந்தவள் பதறி எழுந்து வந்தாள்.
அவன் இருக்கையைக் காட்ட, அவன் முன்னே அமர்ந்தாள். சப்பாத்தியும் சிக்கன் குருமாவும் இருந்தன. ஒவ்வொன்றாக எடுத்து மெதுவாக உண்டாள்.
"உங்ககிட்ட ஒண்ணு சொல்லணும்."
"என்ன?"
"நீங்க சொன்னது போல அவங்க முன்னாடி என்னை ஆதாரமா நிறுத்தினாலும், யாரும் என்னையும் உங்களையும் நம்ப மாட்டாங்கன்னு தோணுது!"
"ஏன் அப்படிச் சொல்ற?"
"நான் உண்மையைச் சொன்னாலும் நம்ப மாட்டாங்க. DNA டெஸ்ட் எடுக்கச் சொன்னாலும், வித்யூ பணம் கொடுத்து அதை மாத்திட மாட்டாரா? சோ, உங்களால வித்யூவை எதிர்த்துக் கல்யாணத்தை நிறுத்த முடியாது" என்றாள்.
அவள் சொன்னது சரியாகத்தான் இருந்தது. பிருத்விக்கு அது நன்றாகத் தெரியும். தன் தங்கை வித்யூவை கண்மூடித்தனமாக காதலிக்கிறாள். பிருத்வி சொன்னால் அவள் நம்பப்போவதில்லை.
என்ன செய்வதென்று யோசித்தவன் சட்டென, "என்னை கல்யாணம் பண்ணிக்கோ!" என்றான். அவளோ அதைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போனாள்.