புயல் 19
அலுவலகத்தில் கோப்பையைப் புரட்டியபடி அமர்ந்திருந்தான் பிருத்வி. அவனுக்கு எதிரே அமர்ந்திருந்த ஆதித்யாவோ, "இதோ வர்றேன்! கண்டிப்பா வர்றேன், நானே வர்றேன்" என்று நூறு முறை 'வர்றேன்' என்று சொல்லிவிட்டான்.
பிருத்வி, ஆதித்யாவை ஆச்சரியமாகப் பார்த்தான். வாசுகி வேலைக்கு வந்ததிலிருந்து வேலை நேரங்களில் அவனை வெளியே அனுப்புவது அத்தனை சுலபம் இல்லை. எதையாவது சாக்கு சொல்லித் தட்டிக்கழித்து அலுவலகத்திலேயே அமர்ந்து கொள்வான்...
"ஃபேக்டரியைச் சுற்றிப் பார்த்துவிட்டு வருகிறேன்" என்று வெளியே செல்வதைத் தவிர்க்கப் போக்கு காட்டும் அவன், இன்று இத்தனை முறை "வருகிறேன்" என்று சொல்வதை ஆச்சரியமாகப் பார்க்காமல் என்ன செய்ய?
"என்ன ஆதி? எங்கப் போற?"
"நம்ம 'ஸ்மைல் ப்ளீஸ்' பிராஞ்ச்சுக்கெல்லாம் ஒரு விசிட் போயிட்டு வர்றேன்! மேனேஜர் கூப்பிட்டே இருக்கார், ஒரு எட்டு பார்த்துட்டு வர்றேன்" என்று மேசையிலிருந்த தனது அலைபேசியை எடுத்துப் பாக்கெட்டில் வைத்தபடி சொன்னவனை ஏற இறங்கப் பார்த்தவன், "என்ன புதுசா இருக்கு? விசிட் போக மாட்டியே... போகச் சொன்னாலும் 'நீ போ'ன்னு என்னைத்தானே போகச் சொல்லுவ! இப்போ என்ன அதிசயமா போறேன்னு நிக்கிற? என்ன விஷயம்?" என்றான்.
"அதெல்லாம் ஒன்னுமில்லடா! எப்பவும் நீயேதானே போவ! அதான் இந்த முறை நான் போகலாம்னு நினைச்சேன்" எனச் சமாளிப்பாகச் சொல்ல,
"இல்லையே! உன் மேலே டவுட்டா இருக்கே, என்ன விஷயம்?" என்று கையிலிருந்த கோப்பையை மூடியபடி கேட்டான்.
நாற்காலியை இழுத்துப் போட்டு அவன் முன்னே அமர்ந்தவன், அவனிடம் பகிர சற்றுத் தயங்கினான்.
"என்னடா, சொல்லு?"
"அது... அது வந்து மச்சி" என இழுக்க,
"இப்போ நீ சொல்றியா, இல்லையா?"
"அது மச்சி! நேத்து வாசுகிகிட்ட என் காதலைச் சொன்னேன் இல்லியா? கண்டிப்பா என்னை எப்படியாவது ரிஜெக்ட் பண்ணணும்னு, ஏதாவது ஒரு பதில் வச்சுட்டு நிச்சயம் என்னைப் பார்க்க எந்த நேரமும் வரலாம்! அதான் அவ கண்ணுல சிக்கக் கூடாதுன்னு வெளிய போகலாம்னு இருக்கேன்."
"அடப்பாவி! இதுக்காகவா அவ கண்ணுல சிக்கக் கூடாதுன்னு பயந்து ஓடுற?"
"பின்ன... ரிஜெக்ஷன் எவ்வளவு வலியைத் தரும் தெரியுமா உனக்கு?" எனப் பாவம் போல முகத்தை வைத்துக்கொண்டு சொன்னான்.
"அதுக்காக எத்தனை நாள் ஒளிஞ்சுப்ப?"
"கொஞ்ச நாளைக்குத்தான். அவ மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுகிட்டதுக்கு அப்புறம் நேர்ல போய் நிப்பேன்."
"எப்படித் தெரிஞ்சுப்ப?!"
"அதுக்குத்தான் என் சிஸ்டரை அனுப்பி இருக்கேன்."
"சிஸ்டரா... யாரு?" எனக் கண்களை உருட்டி யோசித்தான்.
"வேற யாரு? நம்ம ஆர்யா சிஸ்டர்தான்" என்றான் கண்ணடித்து.
"அவளா? அவளை எப்படி இதுக்குச் சம்மதிக்க வச்ச? உன் காதலுக்கு எதிரா நின்னவளை எப்படி மாத்தின?"
"நான் எங்கடா மாத்தினேன்? நீ எதுவும் சொன்னியான்னு தெரியல, இன்னைக்கு ஆபீஸ் வந்ததுமே என்கிட்ட மன்னிப்பு கேட்டாங்க! 'உங்களுக்கு உதவி செய்றேன்'னு வான்டடா சொன்னாங்க... நானும் அவகிட்ட பேசி, அவ முடிவு என்ன, அவ மனசுல என்ன இருக்குன்னு கேட்டுச் சொல்லுங்கன்னு சொல்லி இருக்கேன். இந்நேரம் வேலை பார்த்துக்கொண்டே அந்த வேலையை ஸ்டார்ட் பண்ணிருப்பாங்க! எனக்கு நிச்சயம் நம்பிக்கை இருக்கு, அவங்க நல்ல பதிலா எனக்குச் சொல்லுவாங்க" என்று குதூகலமாகச் சொன்னான்.
"ம்ம்... நல்ல ஆளைத்தான் பிடிச்சிருக்க! பார்ப்போம் உன் மிஷன் எப்படி வேலை செய்யுதுன்னு?! ஆனா ஏதாவது சொதப்பனா என்னைச் சொல்லக் கூடாது. எனக்கும் இதுல எந்தச் சம்பந்தமும் இல்லை" என்று கைகளைத் தூக்கிச் சொன்னான்.
"அதெல்லாம் என் தங்கச்சி இருக்க பயமேன்! வரட்டா மாமே!" என்றவன் கிளம்பிய நேரம்தான்... வாசுகியிடம் பேச்சு கொடுத்துக்கொண்டே வந்தாள் ஆர்யா!
"நான் ஒன்னு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே!" என வாசுகி தயக்கமாக ஆரம்பித்தாள்.
"நேத்து நீங்க எனக்காக ஆதித்யா சார்கிட்ட பேசினதைக் கேட்டேன். உண்மையில நீங்க ஒரு பணக்காரன்கிட்ட ஏமாந்துட்டீங்களா?"
அவளும் விரக்திச் சிரிப்புடன் தனது கதையைச் சுருக்கமாகச் சொன்னாள். அதிர்ந்து அவளைப் பார்த்தாள் வாசுகி.
"உண்மையச் சொல்லப்போனா உங்க பாஸ் இல்லைன்னா நான் இன்னைக்கு உயிரோட இருக்க முடியாது! உண்மையாவே பெரிய மனுஷன்தான் அவர். ஏன், ஆதித்யா அண்ணாவும் தான். ஆனா அவர் பத்தி தெரியாததால, பணக்காரன் என்ற வெளித்தோற்றத்தைப் பார்த்துப் பயந்து உனக்காகப் பேசினேன். ஆனா உண்மையிலேயே அவர்கிட்ட உனக்கான காதல் அதிகமாக இருக்கு, உண்மையானதா இருக்கு. அவர் உன்னை எந்த விதத்திலும் ஹர்ட் பண்ண மாட்டார், ஏமாற்ற மாட்டார்னு நான் நம்புறேன். நீ என்ன நினைக்கிற வாசு?"
"நீங்க சொல்றது உண்மைதான். ஆனா..." என்று இழுத்தாள்.
"என்ன ஆனா?"
"அவருக்கு நான் கொஞ்சமும் பொருத்தமில்லை. காது கேட்காத பொண்ணு... பணத்துல, படிப்புல, எல்லா விதத்திலேயும் தகுதி இல்லாதவ நான். எப்படி அவரோட மனைவி இடத்துல என்னை நிறுத்தி யோசிக்க முடியும்?"
"ஆனா அவரோட மனைவி இடத்துல உன்னைத் தவிர யாரும் சரியானவ இல்லைன்னு அவர் முடிவு செய்திருக்காரே! அதை என்ன செய்றது? அவர் காதலுக்கு என்ன பதில் சொல்லப்போற நீ?"
"எங்க அம்மா பார்க்கிற மாப்பிள்ளையைக் கல்யாணம் பண்ணிக்கப் போறேன், உங்க வீட்டுல உங்களுக்குப் பார்க்கிற பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லுங்கன்னு சொல்லுவேன். நிச்சயம் அவங்க வீட்ல என்னை ஏத்துக்கப் போறது இல்லை... என்னோட பதில் இதுதான், முடிவா சொல்லிடுவேன்..."
"அப்போ... அவருக்கு வேற பொண்ணு பொண்டாட்டியா வந்தால் உனக்கு எந்தப் பிரச்சனையும் இருக்காது! உனக்கு எந்தப் பாதிப்பும் இருக்காது, எப்பவும் போல நார்மலா இருப்ப நீ... அப்படித்தானே?" என்றதுமே அவளுக்குள் சுருக்கென ஒரு வலி! ஆமாமென்று சொல்ல மனமில்லை, தடுமாறி தலையை மட்டும் அசைத்தாள்.
"சரி விடு! நீ சொன்னதை அப்படியே சொல்லிடுறேன்... சொன்னது மட்டுமில்லாம, வேற ஒரு பொண்ணைப் பார்த்துப் கல்யாணமும் பண்ணி வைக்கிறேன்" என்றவள் அங்கிருந்து மெல்ல நகர்ந்து மறைந்துகொள்ள, அவளுக்கோ அவள் சொன்னதைக் கேட்டதும் கண்ணீர் வழிந்தது. துடைத்தாலும் அருவி போல கொட்ட, யாரும் பார்க்கக் கூடாது என்று துடைத்தாலும் நிற்கவே இல்லை. கண்ணீரே சொல்லிவிட்டது அவளது காதலை!
மாலையில் வேலை முடிந்து தொழிலாளர்கள் சென்றதும் அலுவலகத்தில் இருவர் மட்டுமே இருந்தனர். வாசுகி கூடச் சென்றுவிட்டாள். ஆதித்யா, பிருத்விக்கு அழைத்து ஆர்யாவிடம் வாசுகி மனம் விட்டுப் பகிர்ந்ததைக் கேட்டான். அவளும் அவர்கள் பேசிக்கொண்டதைச் சொன்னாள்.
"அப்போ அவளுக்குள்ளும் என் மேலே காதல் இருக்கு, அப்படித்தானே சிஸ்டர்?"
"கன்பார்ம் உங்க மேலே காதல் இருக்கு அண்ணா! ஆனா அவ்வளவு சீக்கிரம் ஒத்துக்க மாட்டா!"
"ஏனாம்?" எனப் பிருத்வி கேட்க,
"பெண்களோட சைக்காலஜி அப்படிதான். நான் சொல்றது போல செய்யுங்க" என்று அவனுக்குத் திட்டத்தைச் சொல்ல, இருவருக்கும் அது சரியெனப் பட, அதைச் செயல்படுத்த நல்ல நாள் பார்த்துக்கொண்டனர்.
"போலாமா பிருத்வி?!"
"ம்ம்" என்றவன் யோசனையோடு அவளோடு நடந்தான்.
"என்ன யோசனை பிருத்வி?"
"இல்ல... பெண்களோட இயல்பைப் பத்தி சொன்னியே, ஏன்? ஒரு பொண்ணு மேலே காதல் வந்த நொடியே அந்த ஆண் பெண் கிட்ட சொல்லிடுறது போல, ஏன் பெண்கள் இருக்க மாட்டேங்குறாங்க? ஏன் எதை எதையோ சொல்லி அவாய்ட் பண்ணி, காதலை உள்ளுக்குள்ள வச்சு, தகுதி தராதரம் ஏதேதோ சொல்லி ஏன் மறுக்கணும்? ஏன் அவங்களையும் கஷ்டப்படுத்திட்டு அந்த ஆண்களையும் கஷ்டப்படுத்தணும்? ஃபிராங்கா இருந்தா என்ன?"
அவன் கேட்டதும் புன்னகையுடன் பதில் சொல்ல ஆரம்பித்தாள் ஆர்யா.
"நீங்க கேட்கிற கேள்வி சரிதான்! ஆண்கள் பொதுவா அவங்களைப் பற்றி மட்டுமே யோசிப்பாங்க! ஆனா பெண்கள் அப்படி இல்லை, குடும்பத்தைப் பத்தியும் சேர்த்து யோசிப்பாங்க! இதுல ஆண்களைத் தவறா சொல்லல... ஆனா சமூகம் ஆண்களையும் பெண்களையும் வெவ்வேறு மாதிரி வளர்த்ததாலே, பெண்களால் சட்டென முடிவு சொல்ல முடியல! இதுவே வாசுகி தன்னோட காதலை முதல்ல சொல்லியிருந்தா, ஆதித்யா அண்ணா ஏத்திருப்பாரா? நிச்சயமா தப்பா நினைச்சிருப்பார். சோ, அங்க இருக்கிற வித்தியாசத்தை உணருங்க! ஆதித்யா வீட்ல எல்லாரும் வாசுகியை ஏத்துக்கிட்டா பிரச்சனை இல்லை. ஆனா அவங்க வீட்ல தகுதி பார்த்தால் பாதிக்கப்படுறது வாசுகிதான். ஃபேமிலி பாலிடிக்ஸ் ஆதித்யா அண்ணாவிற்கே தெரியாமல் கூட நடக்க வாய்ப்பிருக்கு! அத்தனை வரதட்சணைக் கொடுமைகளை பெண்களுக்கு எதிரா பார்க்கிறோமே! அதுக்காகத்தான் யோசிக்கிறோம். நிச்சயமா உங்களை அலைய விடுற எண்ணம் இல்லை..." என்று விளக்கித் தெளிவுபடுத்த, "ம்ம்..." என்ற முனகலோடு அவளுடன் நடந்தான்.
இருவரும் வீட்டிற்கு வர, முதலில் அவள் துண்டை எடுத்துக்கொண்டு குளியலறை சென்று வந்தாள். பின் அவன் சென்று வர, அறையில் அவள் இல்லை. பதற்றத்துடன் அறையிலும் பால்கனியிலும் தேடிப்பார்த்தவன், கீழே விறுவிறுவென இறங்கினான். அவளது குரலைக் கேட்டதும் அவனின் கால்கள் அப்படியே நின்றன.
"குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா..." என்ற பாடலை அனைவரின் மனமும் உருகப் பாடினாள் ஆர்யா. அறைக்குள் அடைந்து கிடந்த அனைவரும் அவள் குரல் கேட்டு வெளியே வந்தனர்.
சோர்வுடன் இல்லம் வந்த மௌலி கூட அவளது பாடலைக் கேட்டுப் புத்துணர்வு கொண்டது போலானது. அழகாகப் பாடினாள். பாடி முடித்துவிட்டு ஆரத்தி காட்டித் திரும்பிய வேளையில், அனைவரும் நிற்பதைக் கண்டு அதிர்ந்தாள்.
அமிர்தா, அனு, மௌலி மூவரும் கை தட்ட, அவர்களோடு பிருத்வியும் கை தட்டினான். மற்றவர்கள் அவளைச் சலிப்பாகப் பார்த்தனர்.
"நீ ரொம்ப நல்லா பாடுறமா! ரொம்ப சோர்வா வந்த எனக்கு உன் பாட்டைக் கேட்டதும் புத்துணர்ச்சியா இருக்கு, ரொம்ப நன்றிமா."
"ஐயோ!!! அங்கிள், எதுக்கு நன்றி எல்லாம்... சும்மா சாமி கும்பிடும்போது பாடணும்னு தோணுச்சு, பாடினேன் அங்கிள்."
"உன் பாட்டு எனக்குள்ள மாற்றமே கொண்டு வந்திடுச்சுமா! தினமும் பாட்டு பாடு, எனக்கு இருக்கிற சின்ன நோயும் சிட்டாப் பறந்திடும்" என்று புகழ, பொறாமையாக இருந்தது பிரணவிக்கு.
"உண்மைதான்மா! கண்டிப்பா பாட்டு ஒரு மெடிசின்தான். இப்படிப் பாடினா நிச்சயம் நோய் பறந்தே போயிடும். மருமகளே, நல்லா பாடினமா" என்று அமிர்தா புகழ, "எஸ் அண்ணி! செம வாய்ஸ் உங்களுக்கு" என்றாள் அனு.
அனைவரும் பாராட்டினாலும் பிருத்வி என்ன சொல்வான் என்று எதிர்பார்ப்போடும் ஆவலோடும் அவனை நிமிர்ந்து பார்க்க, அவள் எதிர்பாராத விதமாக, உணர்ச்சிவசப்பட்டு அவள் முகம் ஏந்தி நெற்றியில் முத்தம் வைத்தான்.
"உன் குரல் முதல் முறையா என்னைக் கிறங்கடிச்சிடுச்சு (Mesmerize பண்ணிடுச்சு) ஆர்யா! இன்னும் அதுல இருந்து என்னால வெளிய வர முடியல... தேங்க்ஸ்" என்றான் கிறக்கத்தில்.
"அண்ணா, நாங்களும் இருக்கோம்!" என்று அனு கிண்டல் செய்ததும் இருவரும் வெட்கத்துடன் விலகி நின்றனர்.
"ஓகே, இங்க நிறைய டிஸ்டர்பன்ஸ் இருக்கு, வா வெளிய போய் ரொமான்ஸ் பண்ணுவோம்" என்று அவளது கைகளைப் பிடித்துக்கொண்டு வெளியே செல்ல, அவர்களைக் கடுப்புடன் பார்த்துவிட்டு அனைவரும் உள்ளே சென்றனர். ஆனால், எரிமலையாய்ச் சிவந்து நின்றான் வித்யூ! ஒரு காலத்தில் அவனும் அவளது பாட்டிற்கு அடிமை அல்லவா!
ஒரு கூடல் முடிந்ததும் அவள் நெஞ்சில் முகம் புதைத்தவன், "ஒரு பாட்டு பாடியங்கா" என்பான்.
அவளும் "மாட்டேன்" என்று வீம்பு பிடிக்க, "ஏண்டி?" என நிமிர்ந்து அவள் முகம் பார்த்துக் கேட்பான்.
"உன்னைப் பத்தி எனக்குத் தெரியாதா? பாடச் சொல்லி அடுத்த ரவுண்டுக்குத் தயாராகுற நீ! போடா பிராடு!"
"நீ பாடலைனாலும் அடுத்த ரவுண்டுக்கு நான் போகத்தான் போறேன்" என்று மீண்டும் படர்ந்து அவள் மீது ஆதிக்கத்தைச் செலுத்திய நாளே நினைவிற்கு வர, தலையை உலுக்கிக்கொண்டவன் கோபத்துடன் அங்கிருந்து சென்றான்.
புல்வெளியில் கைகளைப் பிடித்துக்கொண்டு, கைகளைக் கோர்த்திருப்பதையும் மறந்து வெவ்வேறு உலகில் பயணிப்பது போல இருவரும் நடந்தனர்.
"சாரி."
"எதுக்கு?"
"கிஸ் பண்ணதுக்கு! நான்..." என்று அவன் சொல்ல வரும் முன்னே முந்திக்கொண்டவள், "எனக்குத் தெரியும், வித்யூவைக் கடுப்பேத்தத்தானே!" என்று அவள் சொல்லி முடிக்க... 'ஆமாம்' என்று பொய்யாய்த் தலை அசைத்தாலும், உண்மையிலேயே உணர்ச்சிவசப்பட்டுத் கொடுக்க வேண்டும் என்று தோன்றிய உணர்வால்தான் கொடுத்துவிட்டான். அதை அவளிடம் பகிராமல் சிரித்து மறைத்தான்.
"ஆனா... ஒரு விஷயம் உண்மை" என்று பீடிகை போட, என்னவென்று யோசனையோடு அவனைப் பார்த்தாள்.
"உன் குரலுக்கு நான் அடிமையாகிட்டேன். நீ நான் கேட்கும்போதெல்லாம் பாடித்தான் ஆகணும், என்ன?" என்று அன்புக்கட்டளை போட, சரியென்று தலை அசைத்தாள். இருவரும் பேசிச் சிரித்தபடி நடப்பதைத் திருப்தியோடு பார்த்து ரசித்தார் மௌலி.

Last edited: