புயல் 20
அன்று ஆதித்யா தன் காதலைச் சொல்லிய பிறகு, அவன் வாசுகியின் முன் வரவே இல்லை. அவள் அவனைப் பார்த்து இரண்டு மூன்று நாட்களாகிவிட்டன.
ஆதித்யாவிடம் தன் பதிலைச் சொல்ல வாசுகி காத்திருந்தாள். ஆனால், 'முகத்தில் அடித்தாற்போல் மறுத்துவிட வேண்டும்' என்ற எண்ணம் அந்த முதல் நாள் மட்டுமே இருந்தது. அடுத்த இரண்டு நாட்களுமே அவனைப் பார்க்க வேண்டும் என்ற தவிப்பு அவளைச் சூழ்ந்து கொண்டது.
ஏதாவது காரணங்களைச் சொல்லி அவள் முன்னே அடிக்கடி வந்து நிற்பவன், மூன்று நாட்களாக அவள் கண்ணிலேயே படவில்லை. அவன் அலுவலகத்திற்கு வந்த விஷயமே மற்ற தொழிலாளர்கள் சொல்லித்தான் அவளுக்குத் தெரிந்தது. 'தன்னிடம் ஏன் இப்படி கண்ணாமூச்சி ஆடுகிறான்? என்ன வேண்டும் அவனுக்கு?' என்று அவள் மனம் தவித்தது. அவனைப் பார்க்க வேண்டும் என்ற ஏக்கம் நாளுக்கு நாள் அதிகரித்தது.
பிருத்வியும் ஆர்யாவும் அலுவலக அறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, வாடிய முகத்துடன் உள்ளே வந்த வாசுகி, சில கோப்புகளில் கையெழுத்து வாங்குவதற்காக நீட்டினாள்.
கோப்புகளை ஆராய்ந்தபடி பிருத்வி இருக்க, ஆர்யாவின் பார்வையோ வாசுகியை வட்டமிட்டது.
"ஓகே வாசு! எல்லாமே சரியா இருக்கு," என்று கையெழுத்துப் போட்டு அவளிடம் கோப்புகளை நீட்டினான் பிருத்வி. அவளும் அதனைப் பெற்றுக்கொண்டு, தலையசைப்புடன் விடைபெற முயன்றாள். அப்போது, "வாசுகி," என்று ஆர்யா அழைத்தாள். ஆனால், அது அவள் காதில் விழாததால் அப்படியே நடந்தாள்.
"வாசுகி!" என மீண்டும் அழைக்க, இப்போது திரும்பினாள். "நாங்க கூப்பிட்டுட்டே இருக்கோம், என்ன கேட்காத மாதிரி போற?" எனக் கேலி செய்தாள் ஆர்யா.
"சாரி மேம், கவனிக்கல!"
"என்னாச்சு வாசு, உன் கவனம் எங்கே போச்சு?" என்றான் பிருத்வி.
"எங்கே போகும்... எனக்குத் தெரியும்!" என்று ஆர்யா கிண்டலாகச் சொல்ல, வாசுகியோ பெயருக்கென்று புன்னகைத்தாள்.
"ஏன் உன் முகம் இப்படி வாடி இருக்கு வாசு? எப்பவும் சிரிச்ச முகமா இருப்பியே, இப்போ என்னாச்சு?"
"ஒன்றுமில்லை அண்ணா, நான் நல்லாத்தான் இருக்கேன். எனக்கு என்ன?" எனச் சிரித்து மழுப்பினாள். "சரி, போ" என்றான் பிருத்வி.
அவள் நகரத் தொடங்க, "ஆர்யா, உனக்கு விஷயம் தெரியுமா? ஆதித்யா இன்னைக்குப் பொண்ணு பார்க்கப் போறான். நல்ல பெரிய இடம்னு சொன்னான். நம்மளையும் கூப்பிட்டிருக்காங்க, நீயும் நானும் போகலாம்," என வாசுகியின் காதில் விழும்படி உரக்கச் சொன்னான் பிருத்வி. கதவில் கை வைத்தவள் அப்படியே உறைந்து நின்றாள்.
ஆர்யாவிடம் அவளைச் ஜாடை காட்டினான் பிருத்வி. "ம்ம்... போலாம் பிருத்வி! அண்ணனோட இந்த முடிவுதான் சரி. எப்படியும் வாசு அவரை நிராகரிக்கத்தான் போறாள்! அவள் ஆசைப்பட்டது போலவே, அண்ணன் தன் தகுதிக்கு ஏத்த பொண்ணா பார்த்துக்க வேண்டியதுதான் சரி," என்று ஆர்யாவும் வாசுகிக்குக் கேட்கும்படி பேசினாள். வாசுகி தன் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு வெளியேறுவதைக் கண்ட இருவரும் பெருமூச்சு விட்டுக் கொண்டனர்.
தன் அறைக்குள் வந்து அமர்ந்தவள் கதறி அழுதாள். ஏனோ உயிரைப் பிய்த்து நான்காகப் போடுவது போல இருந்தது. இந்த உணர்வும் வலியும் ஏன் என்று அவளுக்குப் புரியாமல் இல்லை.
அவன் மீது அவளுக்குக் காதல் வந்துவிட்டது! அவனை வேறொரு பெண்ணுக்குத் தாரைவார்த்துக் கொடுக்க அவள் மனதிற்குச் சம்மதமில்லை. 'அவனே வேண்டும்' என்று மனம் பிடிவாதம் பிடித்தது. மனதைக் கட்டுப்படுத்தியும் எந்தப் பயனும் இல்லை.
ஆனால், காலம் கைமீறிப் போய்விட்டதே! அவன் குடும்பத்திற்கு அந்தப் பெண்ணைப் பிடித்துவிட்டால் அடுத்து கல்யாணம்தான். அதற்குள் அவளது காதலை அவனிடம் சொல்லிவிட வேண்டும் என்று பதற்றத்துடன் அலைபேசியை எடுத்து அவனுக்கு அழைத்தாள். 'ரிங்' போனதே தவிர, அவன் எடுக்கவில்லை. மீண்டும் மீண்டும் முயற்சித்தும் பயனில்லை. விரக்தியில் அலைபேசியை மேசையில் தூக்கிப் போட்டுவிட்டு, தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டாள். அவளது இந்தச் செயல்களை அக்ரூட் கண்ணாடி வழியே கவனித்துக் கொண்டிருந்தவனுக்கு அத்தனை மகிழ்ச்சி!
'ஸோ... என்னை தவிக்கவிட நினைச்சாய்! ஆனா மேடம், இப்போ நான் இல்லாம நீங்க தவிக்கிறீங்க! ஃபியூ ஹவர்ஸ் பேபி அப்புறம் எப்படி உன்னை லாக் பண்றேன் பாரு...' என்று தனக்குள் பேசிக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தான் ஆதித்யா!
ராஜேஸ்வரி கூடத்தில் அமர்ந்து, திருமணத்திற்காக மஹால் புக் செய்யப் பல மண்டபங்களின் விவரங்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவருடன் பார்வதியும் அமிர்தாவும் இருந்தனர். சிறியவர்கள் கல்லூரிக்கும் வேலைக்கும் சென்றுவிட, பெரியவர்கள் மட்டுமே அங்கே அமர்ந்திருந்தனர். அப்போது, தயக்கத்துடன் ராஜேஸ்வரியின் முன் வந்து நின்றார் செல்வராணி.
"என்ன செல்வா?" என்று நிமிர்ந்து கேட்டார் ராஜேஸ்வரி.
"அக்கா! ருத்திக்குக்கு லீவு கிடைக்கலையாம், எக்ஸாம் வேற வருதாம். அதனால கல்யாணத்தை ஒரு மாசம் தள்ளி வைக்கக் கூடாதான்னு கேட்கிறான். 'நான் இல்லாம கல்யாணம் பண்ணினா, நான் வீட்டுக்கே வர மாட்டேன்'னு சொல்றான் கா..." என அழுகையோடு சொல்லி முடித்தார்.
ராஜேஸ்வரிக்கு அந்தச் சூழ்நிலையின் எதார்த்தம் புரிந்தது.
"ருதி இல்லாம எப்படி பிரணவி கல்யாணத்தை நடத்துறது? மாப்பிள்ளைக்குச் சடங்கு செய்ய வேண்டியவன் அவன் தானே! அவன் இல்லாம எப்படி? சரி, நான் ஜோசியரைக் கேட்டு, ருதி வர்ற மாசத்துல நல்ல முகூர்த்த நாள் இருக்கான்னு பார்க்கச் சொல்றேன் செல்வா! ருதியும் கல்யாணத்துல இருக்கணும், அவன் இல்லாம கல்யாணம் பண்ண முடியாது. நான் ஜோசியரை வரச் சொல்றேன்," என்றவர், பார்வதியிடம் திரும்பினார்.
"சாரி அண்ணி! தேதி தள்ளி வைக்கிறதால உங்களுக்கு எதுவும் பிரச்சனையேதும் இல்லையே அண்ணி? நீங்க என்ன சொல்றீங்க?"
"நானும் ருதி வந்திடுவானான்னு செல்வா கிட்ட கேட்டுட்டுத்தான் இருந்தேன். அவன் வர முடியாதுன்னா தேதியை மாத்துறதுல தப்பு இல்லை ராஜி! ஜோசியர் வரட்டும், நல்ல நாள் பார்க்கட்டும்," என்றார் பார்வதி.
அப்போது அங்கு வந்தான் வித்யூ! "எதுக்கு மறுபடியும் ஜோசியர்? வேற என்ன ஃபங்ஷனுக்கு டேட் பிக்ஸ் பண்ணப் போறீங்க?"
"வா மருமகனே!" என அவனைத் தன் அருகில் அமர்த்திக் கொண்ட ராஜேஸ்வரி, ருத்திக் வர முடியாத சூழ்நிலையால் கல்யாணத்தைத் தள்ளி வைக்க முடிவு செய்ததைக் கூறினாள். இதைக் கேட்ட வித்யூவுக்கு உள்ளுக்குள் கொண்டாட்டம் துள்ளிக் குதித்தது.
"உனக்கு இதனால் எந்தப் பிரச்சனையும் இல்லையே வித்யூ?"
"எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை அத்தை. மச்சான் வரட்டும், அப்புறமா கல்யாணத்தை வச்சுக்கலாம்," என்று பெருந்தன்மையாகச் சொன்னவன், உள்ளுக்குள் தன் அடுத்த கட்டத் திட்டங்களுக்குக் கணக்குப்போட ஆரம்பித்தான்.
"ஆனா அக்கா... பிரணவி?" என அவளது குணமறிந்து தயக்கத்துடன் கேட்டார் செல்வராணி.
"நான் பேசிக்கிறேன் செல்வா! கண்டிப்பா சூழ்நிலையைப் புரிஞ்சுட்டு ஒத்துப்பா," என்றார் ராஜேஸ்வரி.
அலுவலகத்தில் இருக்க முடியாமல் தவித்துப் போன வாசுகி, பாதியிலேயே அனுமதி கேட்டுவிட்டு வீட்டுக்குச் சென்றாள். இவ்வாறு அவள் ஒருபோதும் வேலையைப் பாதியில் விட்டு வந்ததில்லை. அவளது தாய் அவளைப் பார்த்தபோது, அவளது முகம் அழுது வீங்கிப் போய் இருந்தது.
"என்னாச்சு வாசு? ஏன் அழற?" எனப் பதறிப்போய்க் கேட்டார்.
"அம்மா!" என்று அவர் மடியில் சாய்ந்து கதறி அழுதாள்.
"என்ன வாசு? என்னன்னு சொல்லுடி, ரொம்ப பயமா இருக்கு!"
"அம்மா! என்னை மன்னிச்சிடு! நா... நான் ஆதித்யாவை விரும்புறேன் மா! அவன் இல்லாத வாழ்க்கையை என்னால நினைச்சுக் கூட பார்க்க முடியல மா! என்னை நானே கட்டுப்படுத்தப் பார்க்கிறேன், ஆனா முடியல மா! இந்தகாதலை என்னால கட்டுப்படுத்த முடியல..."
அவளை அணைத்துக்கொண்டு கண்களை மூடிய தாயின் உதட்டில் ஒரு சிறு புன்னகை படர்ந்தது.
"உன் காதலை ஆதித்யா கிட்ட சொல்ல வேண்டியதுதானே வாசு! அதை விட்டுட்டு என்கிட்ட வந்து அழுதா ஆச்சா? நான் போய் சொல்ல முடியாதே மா."
"நிலைமை கைமீறிப் போச்சு மா! ஆதித்யா இன்னைக்குப் பொண்ணு பார்க்கக் குடும்பத்தோட போறாங்களாம். நான் ஆசைப்பட்டது போலவே, அவங்க குடும்பத் தகுதிக்கு ஏத்த பொண்ணா பார்த்து அவன் கல்யாணம் பண்ணிக்கட்டும். அவனுக்கு நான் வேண்டாம்," என்று இப்போது மாற்றிப் பேச, அவளது தாய் தன் தலையிலேயே அடித்துக் கொண்டார்.
"என்னடி மாத்தி மாத்திப் பேசுற? அவன் உனக்கு வேணுமா? வேண்டாமா?"
"வேண்டாம்..." என்றவள், அடுத்த கணமே "வேண்டும்!" என்றாள்.
"சரி விடு! நான் ஆதித்யா கிட்ட பேசுறேன். பொண்ணுதானே பார்க்கப் போறாங்க, கல்யாணம் பண்ணிக்கப் போகலையே! அழாதம்மா, ஆதித்யா அந்தப் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்க மாட்டார். அவருக்கு உன்னைத்தான் பிடிச்சிருக்கு. அவங்க அம்மாவுக்காகப் பொண்ணு பார்க்கப் போகலாம்... ஆனா உன்னைத் தவிர யாரையும் அவர் காதலிக்கவோ கல்யாணம் செய்யவோ மாட்டார். நான் நம்புறேன், நீ ரிலாக்ஸா இரு," என்று தன் மடியில் அவளைத் தூங்க வைப்பது போல் தட்டிக் கொடுத்தார். விம்மியபடியே வாசுகி மெல்ல உறங்க ஆரம்பித்தாள்.
மாலையில் பம்பரமாகச் சுழன்று வேலை செய்து கொண்டிருந்தார் வள்ளி. ஆதித்யாவும் அவனது குடும்பத்தினரும் வாசுகியைப் பெண் பார்க்க வருகிறார்கள் என்பது அவளுக்கு முன்பே தெரியும். ஆதித்யா அவரிடம் பேசியபோது முதலில் அதிர்ந்தாலும், பின்பு மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டார்.
வள்ளி தன் சின்ன மகளை வேலை வாங்க, அவளோ கத்திக்கொண்டே சொன்ன வேலைகளைச் செய்தாள். தூக்கம் கலைந்து எழுந்த வாசுகி, கண்களைக் கசக்கிக் கொண்டே வெளியே வந்தாள்.
"என்னம்மா நடக்குது இங்கே? எதுக்கு இவ்வளவு பரபரப்பு?"
"நம்ம சொந்தக்காரங்க வர்றாங்க, ரொம்ப நாள் கழிச்சு வர்றாங்க! நீ என்ன பண்ற... சீக்கிரம் குளிச்சிட்டு, நான் எடுத்து வச்சிருக்க சுடிதாரைப் போட்டுக்கோ!" என்றார் வள்ளி.
"யாருமா அது?" என விஷ்ணுவும் அருகே வந்து கேட்க, "வந்ததும் சொல்றேன், போய் ரெடியாகுங்க," என்று அவசரப்படுத்தினார்.
முதலில் தயாராகி விஷ்ணு வெளியே வந்தாள். வாசலில் அழைப்பு மணி (Calling bell) அடித்ததும், வேகமாகச் சென்று கதவைத் திறந்தவளுக்குப் பேரதிர்ச்சி! வாசலில் பிருத்வியும் ஆதித்யாவும் நின்றுகொண்டிருந்தனர்.
"பிருத்வி அண்ணா, ஆதி அண்ணா! உள்ள வாங்க. ஆண்டி, அங்கிள் எல்லாரும் உள்ள வாங்க," என்றாள் குதூகலமாக.
"ஹே விஷ்ணு! இவன் மட்டும்தான் உனக்கு அண்ணன். இனி நான் உனக்கு அண்ணன் இல்லை," என்றான் ஆதித்யா.
"அண்ணன் இல்லையா? அப்போ உங்களை என்ன சொல்லணும்?" என இடையில் கையை வைத்து விஷ்ணு கேட்க, "ஆதி மாமான்னு சொல்லணும்," என்று அவன் சொல்லிக் கொடுக்க, அவளோ புரியாமல் விழித்தாள்.
வந்தவர்கள் அனைவரும் அமர, தேநீரும் பலகாரங்களும் எடுத்து வந்தார் வள்ளி. அதையெல்லாம் பார்த்ததும் விஷ்ணுவுக்குப் பொறி தட்டியது. "ஹே! அக்காவைப் பொண்ணு பார்க்க வந்திருக்கீங்களா?" எனத் துள்ளிக்குதித்தாள்.
"அப்பாடா! சின்ன மரமண்டைக்குப் புரிஞ்சிடுச்சு! இனி பெரிய மரமண்டைக்கு எப்ப புரியப் போகுதோ!" என ஆதித்யா மேலே பார்த்துத் தங்களுக்குள் கூற, விஷ்ணுவோ முகத்தைச் சுளித்தாள்.
"போ போ... அக்காவைக் கூட்டிட்டு வா!" என்று வள்ளி விஷ்ணுவை உள்ளே அனுப்ப, அவளும் அறைக்குள் சென்றாள். கண்ணாடி முன்பு கண்ணீரோடு அமர்ந்திருந்தாள் வாசுகி.
"அக்கா, உன்னை அம்மா வெளியே வரச் சொல்றாங்க," என்றதும் வாசுகி தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.
"என்ன அக்கா, ஏன் அழற?"
"ஒன்றுமில்லை."
"ஒன்றுமில்லையா? சரி சரி, உன்கிட்ட அப்புறமா பேசுறேன். இப்போ நீ வா, சொந்தக்காரங்க வந்திருக்காங்க," என்றதும், அவளும் விருப்பமில்லாமல் தலைகுனிந்தபடி வெளியே வந்தாள்.
"வந்தவங்களை 'வாங்க'ன்னு சொல்லு வாசு," என்று வள்ளி அவளை இடிக்க, அவள் நிமிர்ந்து கையெடுத்துக் கும்பிட்டு, "வா..." என்றதோடு வார்த்தை வராமல் நின்றாள்.
"ஹலோ மேடம்! இங்கே நான் மட்டும் வரல, எல்லாரும் வந்திருக்காங்க. அதனால 'வாங்க'ன்னு பன்மையில சொல்லுங்க," என்று ஆதித்யா சொல்லிக் கொடுக்க, அவளுக்கு எதுவுமே புரியவில்லை.
"நான் சொல்லல... பெரிய மரமண்டைன்னு! அதான் புரிய கொஞ்சம் கஷ்டமா இருக்கும்," என்றான் ஆதித்யா. பிருத்வியும் ஆர்யாவும் நமட்டுச் சிரிப்பு சிரிக்க, ஆதித்யாவின் தாய் மேகலா அவனைச் செல்லமாக அடித்தார்.
"வாசு மா, இங்கே வா," என்று மேகலா அழைக்க, அவள் அவர் பக்கத்தில் அமர்ந்தாள்.
"நாங்க உன்னைப் பொண்ணு பார்க்க வந்திருக்கோம்... என் பையனை உனக்குப் பிடிச்சிருக்கா மா? என் பையனுக்கு உன்னை மட்டும்தான் பிடிச்சிருக்காம். எங்களுக்கும் உன்னை மட்டும்தான் பிடிச்சிருக்கு! உனக்கு எப்படி? என் பையனைக் கல்யாணம் பண்ணிக்கச் சம்மதமா?"
அவளோ தயங்கித் தன் தாயைப் பார்த்தாள். அவரோ கண்ணசைவில் சம்மதம் தெரிவித்தார்.
"எனக்குக் காது கேட்காது... இந்த மிஷினோட தான் இருப்பேன். உங்களுக்கு இதனால் எந்தப் பிரச்சனையும் இல்லையா ஆன்டி?! என்னால நீங்க சமூகத்துல நிறைய பேச்சு கேட்க வேண்டியிருக்கும். உங்க தகுதிக்கு ஈடா நாங்க இல்லை. நாளைக்கு என்னால உங்க கௌரவத்துக்குப் பாதிப்பு வந்தா என்ன பண்ணுவீங்க ஆன்டி?!" என்று தன் மனதிலுள்ள பாரத்தைக் கேட்டுவிட்டாள்.
அவள் அவ்வாறு கேட்டதும், மேகலா தன் அருகே அமர்ந்திருந்த கணவன் கண்ணனையும், பிருத்வி மற்றும் ஆதித்யாவையும் பார்த்தார். பின்பு புன்னகையோடு வாசுகியிடம், "தகுதின்னு நீ எதை வச்சுச் சொல்றேன்னு எனக்குத் தெரியல மா! நாங்களும் ஆரம்பத்துல இந்த நிலைமையில இருந்தவங்கதான். என் பையன் உழைப்பால இப்போ கொஞ்சம் முன்னேறி வீடு, கார்னு இருக்கோம். அதுக்காகத் தகுதியில நாங்க உசத்தி, நீங்க தாழ்த்திப் பேச முடியுமா? எனக்கு உன்னைப்போல திறமையா வேலை செய்யத் தெரியாது, அப்போ என்னை மக்குன்னு சொல்லலாமா? என் மகனுக்கு நீதான் பொருத்தமானவள். அவனோட காதலுக்குத் தகுதியான ஒரே ஆள் நீ மட்டும்தான். அந்தத் தகுதி போதாதா? இப்போ சொல்லு, உன் காதலுக்கு என் பையன் தகுதியானவனா?" எனக் கேட்க, வாசுகியின் நெஞ்சிலிருந்த பயம் அகன்று, வெட்கத்துடன் தலைகுனிந்தாள்.
மேகலாவின் பேச்சைக் கேட்டுப் பிரமித்துப் போனாள் ஆர்யா! அன்று ஆதித்யாவின் காதலை அவள் முழுமையாக உணர்ந்தாள். 'இதுபோல வித்யூவிடம் உண்மை இருந்திருந்தால், தனக்கு இப்படி ஒரு நிலைமை வந்திருக்காது' என்று அவள் எண்ணிக் கொண்டிருந்தபோது, பிருத்வி அவள் கையை அழுத்தமாகப் பற்றினான். சட்டென அந்தச் சிந்தனையிலிருந்து வெளியே வந்து பிருத்வியைப் பார்க்க, அவனோ கண்ணடித்துப் புன்னகைத்தான். ஆர்யாவின் இதயம் சட்டென வழுக்கிச் சென்றது போன்ற உணர்வு ஏற்பட்டது.
"சொல்லு மா, உன் வாயால கேட்கணும். என் பையன் அங்கே துடிச்சுட்டிருக்கான். உனக்கு இந்தக் கல்யாணத்துல சம்மதம்தானே?!" என மேகலா மீண்டும் கேட்க, "சம்மதம் அத்தை," என்றாள் வெட்கத்தோடு.
"அப்புறம் என்ன சம்மந்தி! ஒரு நல்ல நாள் பார்த்து முகூர்த்தத் தேதியைக் குறிச்சிடுவோம்," என்றார் கண்ணன்.
"சரி, நீங்க மேற்கொண்டு பேசுங்க! நான் வாசுகி கிட்ட கொஞ்சம் பேசிட்டு வந்திடுறேன்," என்று ஆதித்யா எழுந்தான்.
அவனது இந்த அடாவடித்தனத்தை அவள் எதிர்பார்க்கவில்லை. தன் தாயைப் பார்க்க, அவரோ சம்மதம் தெரிவித்தார். வாசுகி அவனைப் பின் தொடர்ந்தாள். அவள் வெளியே வந்ததும், அவளது கையைப் பற்றி எவரும் நடமாடாத ஒரு மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்றான்.
"என்ன பண்றீங்க தயா?!" என அவனது அதிரடிச் செயலால் பயந்து போனாள்.
"என்ன பண்ணணுமோ அதைச் செய்வோம்," என்று அவன் கண்ணடிக்க, அவளுக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது.
"ஏன் என்னை மூணு நாளா பார்க்க வரலை?" என ஏக்கமாகக் கேட்டாள்.
"பார்க்க வந்தா மட்டும் காதலிச்சுத் தள்ளிடுவியா என்ன? 'என் அம்மா பார்க்கிற மாப்பிள்ளையைத்தான் கட்டுவேன்'னு சொல்லிட்டுத் தானே திரிஞ்சாய்? இப்போ காதலோட தேடல் உனக்குள்ள வந்துடுச்சுல்ல?" எனச் சலிப்பது போல் கேட்டான்.
"உங்களுக்கு எப்படித் தெரியும்?"
"என் சிஸ்டர் தான் சொன்னாங்க."
"ம்ம்... என்ன ஒற்றா உங்க காதலுக்கு?"
"பின்னே! இருக்கக் கூடாதா?"
"சரிதான். ஆனா, முதல் நாள் மட்டும்தான் உங்ககிட்ட அப்படிச் சொல்லணும்னு காத்துட்டிருந்தேன். ஆனா அடுத்த இரண்டு நாள் உங்களைப் பார்க்காம இருக்க முடியல. ஃபேக்டரி வந்தும் என்னை நீங்க பார்க்கவே வரல, ரொம்ப வலிச்சது. அதைவிடப் பெரிய வலி நீங்க வேற பொண்ணு பார்க்கப் போறீங்கன்னு தெரிஞ்சதுதான். என்னால தாங்கிக்க முடியாம அம்மாவிடம் அழுது தீர்த்துட்டேன். ஆனா நீங்க இப்படி சர்ப்ரைஸ் பண்ணுவீங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை!"
"எல்லாம் எனக்குத் தெரியும்! அதுமட்டுமில்ல, நீ அறைக்குள்ள உட்கார்ந்து அழுதது கூட எனக்குத் தெரியும். அப்பவே ஓடி வந்து உன்னைக் கட்டிப்பிடிச்சுச் சமாதானம் செய்யணும்னுதான் தோணுச்சு. ஆனா, இந்த நெகிழ்ச்சியான தருணத்துக்காகத்தான் நானும் அமைதியா இருந்தேன்," என்று அவளது கண்களை நேராகப் பார்த்துப் பேசியவன், "இனி உன்னை எக்காரணம் கொண்டும் அழ விட மாட்டேன் பேபி! இது என் சத்தியம்! நீ எப்படி இருக்கிறாயோ, அப்படியே உன்னை ஏத்துக்குவேன்! ஐ லவ் யூ பேபி!" என்று அவளது நெற்றியில் இதழ் பதித்தான்.
"ஐ லவ் யூ தயா!" என்றவள், கால் விரல்களில் எம்பி அவனது கன்னத்தில் இதழ் பதித்தாள். "தேங்க்யூ! எல்லாரும் நம்மளைத் தேடுவாங்க, வா போகலாம்," என்றவன், "ஒரு நிமிஷம்..." என்று அவளை இறுக்கமாகக் கட்டிப்பிடித்துவிட்டு விடுவித்தான்.
பின்னர், அடுத்த நல்ல முகூர்த்தத்திலேயே திருமணத் தேதியைக் குறித்துவிட்டனர்.
பிரணவி தன் வேலைகளை முடித்துவிட்டு, இரவு தாமதமாகத்தான் வீட்டிற்கு வந்தாள். ஆடை வடிவமைப்பாளரான (Fashion Designer) அவள், தன் தோழியுடன் சேர்ந்து ஒரு புகழ்பெற்ற பொட்டிக் (Boutique) நடத்தி வருகிறாள். இன்று நிறைய ஆர்டர்கள் குவிந்ததால், வீட்டிற்கு வரத் தாமதமானது. வந்ததும் உடம்பை அலுப்புத் தீரச் சுத்தம் செய்துவிட்டு, சாப்பிட அமர்ந்தாள். அவள் சாப்பிட்டு முடித்ததும், அவளைக் கூடத்திற்கு அழைத்தார் ராஜேஸ்வரி.
"என்ன மா?"
"அது வந்துடா..." என்று அவர் சொல்லத் தயங்க, செல்வராணியும் கொஞ்சம் பயத்துடன்தான் நின்றிருந்தார்.
"ஏன் இப்படித் தயங்குறீங்க மிஸஸ் மௌலி? உங்க கம்பீரம் எங்கே போச்சு?" எனக் கேலி செய்தாள் பிரணவி.
"வாலு! அதெல்லாம் வெளியேதான். உன்கிட்ட எப்பவும் நான் அம்மாதான். ராஜேஸ்வரியா கம்பீரமா இருக்கணும்னு அவசியம் இல்லை, புரியுதா?" என்று செல்லமாக அதட்டினார்.
"சரி, விஷயத்தைச் சொல்லுங்க..." என்றாள்.
"ருத்திக்கால இப்போ இந்தியா வர முடியாதாம் மா! முகூர்த்தம் அன்னைக்குத்தான் அவனுக்கு எக்ஸாம் இருக்காம். 'நான் இல்லாம அக்கா கல்யாணம் நடந்தா, நான் இந்தியாவுக்கே வர மாட்டேன்'னு சொல்றான் மா. அதனால நாளைக்கு ஜோசியரை வரச்சொல்லி, அடுத்த மாசம் நல்ல முகூர்த்தம் இருக்கான்னு பார்க்கச் சொல்லலாம்னு இருக்கோம். நீ என்ன சொல்றே?"
பிரணவிக்கோ உள்ளுக்குள் ஆத்திரம் பொங்கியது. 'அந்த நாய்க்காக என் கல்யாணத்தைத் தள்ளிப் போடணுமா? இவன் வரலைன்னு யாரு அழுதா? இப்போ நான் அடம்பிடிச்சா, நிச்சயம் சித்தி நமக்கு எதிராகிடுவாங்க! கொஞ்சம் பொறுமையாகத்தான் போகணும், இல்லைன்னா காரியம் கெட்டுடும். ஒரு மாசம்தானே, பொறுத்துக்கலாம்' என்று எண்ணியவள், தன் கோபத்தை மறைத்துக் கொண்டாள்.
"ருத்திக் இல்லாம கல்யாணம் எப்படிப் பண்றது? அவன் என் தம்பி! அவன் இல்லாம இந்தக் கல்யாணம் எனக்கு வேண்டாம். அவன் வந்ததும் வச்சுக்கலாம்," என்றவள், செல்வராணியைப் பார்த்துப் புன்னகைத்துவிட்டுத் தன் அறைக்குச் சென்றுவிட்டாள். ராஜேஸ்வரி நிம்மதியாக மூச்சை விட்டார்.
"இப்போ ஓகே தானே செல்வா?" என்று அவர் சிரிக்க, பதிலுக்குச் செல்வராணி சிரித்தாலும், உள்ளே பிரணவியின் உண்மையான குணத்தை நினைத்துப் பயந்தபடியே பிரணவியின் அறைக்குச் சென்றார்.
"என்ன நினைச்சுட்டு இருக்கீங்க எல்லாரும்? அவனுக்காக என் கல்யாணத்தை நான் தள்ளிப் போடணுமா? இதெல்லாம் நல்லாவே இல்லை சித்தி! நான் எவ்வளவு ஆசையா இருக்கேன் தெரியுமா? வித்யூவைக் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு எவ்வளவு சந்தோஷமா இருந்தேன்? அதுல மண்ணள்ளிப் போட்டான் உங்க புள்ளை...! உங்களுக்காகத்தான் நான் இப்போ அமைதியா இருக்கேன். இல்லைன்னா இங்கே நடக்கிறதே வேற! எனக்கு அண்ணன், தம்பின்னு எந்த உறவும் முக்கியம் இல்லை, எனக்கு வித்யூ மட்டும்தான் வேணும். அதுக்காக நான் என்ன வேணும்னாலும் பண்ணுவேன்... நான் அமைதியா போறேன்னு நினைச்சு, எல்லாத்தையும் நீங்களே சாதிக்கலாம்னு நினைக்காதீங்க! அப்புறம் நடக்குறதுக்கு நான் பொறுப்பில்லை!" எனத் தன் வன்மத்தைக் கக்கினாள். வெளியே அவ்வளவு அமைதியாகப் பேசிய பிரணவியா இது என்று கேட்டால் யாரும் நம்ப மாட்டார்கள்.
"எனக்காக ஒரு மாதம் பொறுத்துக்கோ பிரணவி! அப்புறம் யாரும் உன் கல்யாணத்துக்குத் தடையா இருக்க மாட்டாங்க. நானும் தடையா இருக்க விட மாட்டேன்," என்று செல்வராணி சமாதானம் கூறிக்கொண்டு, அவள் அமைதியாக இருக்க நெஞ்சில் கைவைத்து ஆசுவாசப்படுத்திக் கொண்டு வெளியே வந்தார்.
ஆனால் பிரணவியோ உள்ளுக்குள் எரிமலையாகக் கனன்று கொண்டிருந்தாள். ஒரு மாதம் தள்ளப் போனதற்கே இவ்வாறு கொதித்துப் போயிருக்கும் அவள், திருமணமே நடக்காமல் போனால் என்ன செய்வாளோ!

Last edited: