வாசக நட்புகளுக்கு இனிய வணக்கம்!
ஐந்து வருடங்களுக்கு முன், என்னுடைய ‘சூர்யோதயம்’ என்ற நாவல் முடிவில் இக்கதைக்கு வித்திட்டிருந்தேன். . ‘எழுதியாயிற்றா?’ என்று, மின்னஞ்சலில் கூடக் கேட்டிருந்தீர்கள். உங்கள் ஒவ்வொருவரின் ஆர்வமுமே இக்கதையை எழுதி முடிக்கப் பேருதவியாக இருந்தது.
இதுதான் எஞ்சிய வாழ்வுக்கு என்று எண்ணியிருந்த நேசத்தை உதறிவிடுகிறாள் , கல்யாணி. இதன் உச்சமாக, நேசம் கொண்ட சூர்யாவிடம் இருந்து தன் இருப்பையே மறைத்தும் விடுகிறாள். அதன்பின் ‘அவன் வாழ்வு’ என்பதைச் சொல்வதாக சூர்யோதயம் எழுதியிருந்தேன்.
இக்கதை, ‘அகால மரணம்’ என்ற போர்வைக்குள் தன் எஞ்சிய வாழ்வை ஆரம்பித்த கல்யாணி பற்றிச் சொல்கிறது. இவ்வளவு பெரிய பொய்யுரைத்து அவள் விலகியதற்கான தேவைதான் என்ன? அந்தப் போர்வைக்குள்ளான அவள் வாழ்வு எப்படியிருக்கிறது என்று, நகர்கிறது இக்கதை.
இத்தாலியைக் களமாகக்கொண்டு எழுதியுள்ளேன். 2024 ஆடி மாதக் கடைசியில் இரு கிழமைகளுக்கு ‘ரோட் ட்ரிப்’ சென்றிருந்தோம். அதில், இத்தாலியும் அடக்கம். அந்த அனுபவங்களில் சிலவற்றை இக்கதையில் உங்களோடு பகிர்ந்துள்ளேன். ரசிப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
கதையின் முதன்மைப் பாத்திரங்களோடு வரும் கதாபாத்திரங்கள் ஒரு ஒருவரும் உங்களை ஒவ்வொரு விதத்தில் கவருவார்கள்.
‘சூர்யோதயம்’ மற்றும் ‘மீரா’ கதையின் முதன்மைப்பாத்திரங்கள் இக்கதையில் வந்து போவது மேலதிக இரசிப்பாக இருக்கும்.
மொத்தத்தில் இக்கதை நல்லதொரு வாசிப்பு அனுபவத்தைத் தரும் என்பது நிச்சயம்!
உங்கள் மேலான கருத்துகளைப் பதிவிட மறக்காதீர்கள் என்று சொல்ல விருப்பம், கருத்துச் சொல்வதில் உங்களுக்கு விருப்பம் இல்லையென்று நனறாகவே தெரிந்துகொண்டதால் விட்டு விடுங்கள்.
ஒவ்வொரு கதைகளையும் இங்கும் முகநூலிலும் பகிரும் விசாகினிக்கு