செதுக்கிய சிற்ப பாவையே!!
சிற்ப பாவை 1
“அப்பா உன் பெரிய பொண்ணு அட்டகாசம் அதிகமாகிட்டே போகுது என கடைக்குட்டி இளங்கவி கத்திக் கொண்டிருந்தாள்.
இப்ப என்னமா ஆச்சு? காத்தவராயன் மகளிடம் கேட்க,
இங்க பாருங்க தலை வாரிட்டு சீப்புல முடியை வச்சிட்டு போய்ட்டா…
அப்பா அவளை நம்பாத, அவ பொய் சொல்றா.. அந்த முடியை எடுத்துடுறேன்டி' என்று சொன்னதுக்கு, இவ கேட்காம நானே எடுத்துக்கிறேன்னு சொல்லி என் கையிலிருந்து சீப்பைப் பிடுங்கிட்டு ஓடி வந்தா! இப்ப எதுவுமே நடக்காத மாதிரி இவ அங்கிருந்து வேகமா ஓடிவந்து, உங்ககிட்ட என்னைக் குறை சொல்லணும்னே பொய் சொல்றாப்பா!" எனத் தன் பக்கத்து நியாயத்தை ஆவேசமாக விளக்கித் தீர்த்தாள் இளநகை.
"இதுங்க ரெண்டுத்துக்கும் எப்பவுமே இதே வேலைதான்!" -இவர்கள் இருவருக்கும் இடையில் பிறந்த இரண்டாவது குட்டி இளஞ்சுடர், இவர்களின் சண்டையைப் பார்த்து சலிப்பாக கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.
காத்தவராயன் தன் மூன்று மகள்களையும் பார்த்துப் பெருமிதத்தோடு சிரித்தவன், "உங்க மூணு பேரையும் தினமும் ஸ்கூலுக்கும் காலேஜுக்கும் கிளப்பி அனுப்புறதுக்குள்ள எங்களுக்குத் தொண்டை தண்ணி வத்தி போயிடுது. சரி விடுங்க, இங்க குடு... நானே அந்த முடியை எடுத்துத் தர்றேன்," என்றான் பாசத்துடன்.
ஆனால் கவியோ, சீப்பைப் பின்னோக்கி இழுத்துக்கொண்டவள், "உங்க பெரிய பொண்ணை மட்டும் நீங்க எப்போவுமே எதுவும் கேட்காதீங்க ப்பா!" என செல்லமாக கோபித்துக் கொண்டு, தன் வாயைத் தாடையில் இடித்துக் கொண்டே உள்ளே சென்றாள்.
"அவர் என்னைக்குடி நகையைத் திட்டி இருக்காரு? நீ எதுக்குக் காலையிலேயே இப்படி உசுர கொடுத்துப் போராடிட்டு இருக்க? போ... முதல்ல போய் ஸ்கூலுக்கு கிளம்புற வேலையைப் பாரு!" என்று சுடர் தன் தங்கையின் தலையில் மென்மையாகத் தட்டி அனுப்பி வைத்தாள்.
தங்கை சென்றதும், இளநகை ஓடிவந்து தன் தந்தையை இறுக்க அணைத்துக் கொண்டாள்.
ஆனாலும் சுடர் விடவில்லை, "அப்பா! நீங்க இவளுக்கு ரொம்பத்தான் செல்லம் கொடுக்குறீங்க. அங்க பாருங்க... அவளுக்கு அவ்வளவு நீளமான முடி இருக்குங்கிற ஒரே காரணத்துக்காக அவ பண்ற எல்லாத்தையும் நான் மன்னிச்சு விடுறேன். ஆனா, அதுக்காக அவ பண்ற அட்டகாசம் இருக்கே... எங்களால நிஜமாவே பொறுத்துக்க முடியலப்பா!" எனத் தன் பங்கிற்கு பொங்கி எழுந்தாள் சுடர்.
"நீங்க ஏண்டி அவகிட்ட எப்ப பார்த்தாலும் இந்த முடி விஷயத்துல போட்டி போட்டுட்டே இருக்கீங்க? ஏதோ நம்ம குடும்பத்துல இளநகைக்கு மட்டும் இவ்வளவு அழகா முடி இருக்கேன்னு நானே அதைத் தினமும் பார்த்துப் பார்த்துச் சந்தோஷப்பட்டுக்கிறேன். உங்களுக்கு மட்டும் அது ஏன் வளர மாட்டேங்குதுன்னு எரிச்சலா இருக்கா? விடுங்களேன்!" என அவர்களின் தாய் வெண்பா, மூவருக்கும் டிபன் பாக்ஸ் கட்டிக்கொண்டு வெளியே வந்து சத்தமிட்டாள்.
"டெய்லி காலைல நம்ம வீடு சந்தைக்கடை மாதிரி சத்தம் மட்டும் போடுது. ஆனா ஒருத்தியும் கிளம்பி நேரத்துக்கு ரெடியாகிறது கிடையாது. அப்புறம் நேரமானதும் ஓடி வந்து 'அப்பா எனக்கு டைம் ஆயிடுச்சு, அப்பா எனக்கு டைம் ஆயிடுச்சு, என்னைக் கொண்டு போய் விடுங்க'ன்னு மூணு பேரும் சண்டை மட்டும் போடுவீங்க. முதல்ல அவங்க அவங்க வேலையை சரியாகச் செய்யுங்க! ஒழுங்கா சீக்கிரம் கிளம்பி வாங்க. இன்னைக்காவது எல்லாரும் ஸ்கூல் பஸ்ஸையும் காலேஜ் பஸ்ஸையும் கரெக்டா பிடிக்கிற வழியைப் பாருங்க!" என்று மூவரையும் அதட்டி விரட்ட, மூவரும் உள்ளே ஓடித் தயாராகத் தொடங்கினர்.
காத்தவராயன் தன் மகள்களின் துள்ளலைப் பார்த்து சிரித்துக்கொண்டே இருக்க, "அங்க என்ன சிரிப்பு வேண்டி இருக்கு? இப்படியே நீங்க ரசிச்சுகிட்டே இருக்கறதுனால தான் மூணு பேரும் உங்க தலையில் ஏறி உக்காந்து மிளகாய் அரைக்கிறாங்க. கொஞ்சமாவது புள்ளைங்ககிட்ட கண்டிப்பா இருக்க வேண்டாமா?" என வெண்பா தன் கணவனிடம் சலித்துக்கொண்டாள்.
"இப்ப எதுக்குடி அவங்ககிட்ட நான் கோபப்படணும்? அவங்க இன்னும் கொஞ்ச நாள்ல இன்னொரு வீட்டுக்குப் போய் வாழப்போற பொண்ணுங்க. நம்ம கூட இருக்குற இந்தச் சில காலங்களிலாவது அவங்க சுதந்திரமா, சந்தோஷமா இருக்கட்டுமே! நாமதான் அவங்களை அனுசரிச்சு போகணும். புள்ளைங்க இருக்குற வீட்ல இந்தச் சத்தம் கேட்கத் தான் செய்யும்," காத்தவராயன் நிதானமாக கூறினார்.
"உங்களுக்குச் சொல்லவா வேணும்? பொண்ணுங்களை ஒருபோதும் கீழே இறக்கி விட மாட்டீங்க!" என நொடித்துக் கொண்டாள் வெண்பா.
"உன்னையே நான் கீழே இறக்கி விட மாட்டேன்! அப்ப மட்டும் நான் பேசுறது உனக்கு இனிப்பா இருக்கா?" என காத்தவராயன் தன் மீசையை முறுக்கி விட்டுக்கொண்டு குறும்பாக கேட்க,
"பேச்சைப் பாரு! வளர்ந்த பொம்பள பிள்ளைங்க இருக்குற வீட்டுக்குள்ள இப்படியா பேசுறது? இவருக்கு என்னவோ இப்பதான் இளமை திரும்புது போல!" என்று கணவனை திட்டுவது போல் நடித்தாலும், வெண்பாவின் மனதிற்குள் பெரும் இன்பமே நிலவியது.
திருமணமாகி இத்தனை வருடங்களில் காத்தவராயன் எதற்காகவும் அவளை ஏங்க விட்டதில்லை. இப்போது குடும்பத்தில் சற்று வறுமையான சூழல் இருந்தாலும், மூன்று வேளை சாப்பாட்டிற்கும் பிள்ளைகளின் படிப்பிற்கு எந்தக் குறையும் இல்லாமல் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருந்தது.
காத்தவராயன் ஒரு மிகச்சிறந்த உழைப்பாளி. அவன் உழைப்பு முழுவதும் தன் நான்கு தங்கைகளையும் நல்ல முறையில் கட்டிக் கொடுப்பதிலேயே செலவானது. அதன்பிறகாவது தனக்கென்று எதையேனும் சேர்த்து வைக்கலாம் என்றால், அந்தத் தங்கைகளின் பிள்ளைகளுக்கு சீர் செய்தே குடும்பத்தில் எதுவும் மிஞ்சவில்லை.
இதில் இவருக்கு மூன்று பெண் பிள்ளைகள்! இதை நினைத்து ஒருபோதும் காத்தவராயன் , வெண்பா தம்பதிகள் கலங்கியது கிடையாது.
ஆனால், இந்த ஊர் மட்டும் அவர்களைத் தூற்றிக் கொண்டே இருந்தது.
என்னதான் மனைவி தன் மகள்களைக் குறை கூறினாலும், அவர்கள் சாப்பிடும் போது தன் கையால் ஊட்டி விடுவதை மட்டும் ஒருபோதும் நிறுத்தியதில்லை.
அதேபோல் அன்றும் காலையில் சாப்பாட்டில் ரசம் ஊற்றி, குழையப் பிசைந்தபடி, "மூன்று பேரும் சீக்கிரமாகச் சாப்பிடுங்கடா, பஸ்ஸிற்கு டைம் ஆயிடுச்சு!" என்று குரல் கொடுத்தாள் வெண்பா.
மூவரும் தயாராகித் தங்கள் பைகளை எடுத்துக்கொண்டு வெளியே வர, அவர்களுக்குப் பீட்ரூட் பொரியலுடன் சாதத்தை ஊட்டி விடத் தொடங்கினாள் அந்த அன்னை.
"யாரோ இப்பதான் மகள்களைக் குறை சொன்னாங்க... இப்போ அவங்க பண்ணிட்டு இருக்குற வேலையைப் பாரு!" என காத்தவராயன் தன் பிள்ளைகளின் பை மற்றும் டிபன் பாக்ஸை எடுத்து வைத்துக் கொண்டே கிண்டலாகச் சொல்ல,
"நீங்க முதல்ல கண்ணு வைக்காம இருங்க! பையை எடுத்து தோளில் மாட்டுங்க, பிள்ளைங்க நிம்மதியா சாப்பிட்டு முடிக்கட்டும்," எனக் கூறினாள்.
அவர்கள் சாப்பிட்டு முடித்து "அம்மா பாய்!" என ஆளுக்கு ஒரு பக்கம் கன்னத்தில் முத்தமிட்டு தந்தையுடன் கீழே இறங்கினர்.
அது ஓர் அடுக்குமாடி குடியிருப்பு. அவர்கள் தங்கியிருந்தது மூன்றாவது மாடியில். ஓரளவுக்கு வசதியான சூழல் நடுத்தர வர்க்கத்திற்கும் சற்று மேலே என்று சொல்லலாம்.
மூன்று படுக்கையறைகள், ஒரு ஹால், சமையலறை, பூஜை அறை என அந்த வீடு எந்தக் குறையும் இல்லாமல் இருந்தது. வீட்டில் நகை நட்டுக்கள் இல்லை என்றாலும், குடும்பத்திற்குள் இருந்த சந்தோஷத்திற்கும் ஒற்றுமைக்கும் ஈடு இணை இல்லை.
இதற்கெல்லாம் முழு காரணம் தன் மனைவி வெண்பா என்பதை காத்தவராயன் முழுமையாக அறிவான். இல்லையென்றால், "இவ்வளவு சம்பாதித்தும் எனக்கென்று எதுவும் இல்லையே" என்று மற்ற வீடுகளில் நடக்கும் சண்டையைப் போல் இங்கும் நடந்திருந்தால், வீட்டின் நிம்மதியே குலைந்து போயிருக்கும்.
ஆனால், இதுவரை வெண்பா ஒருநாளும் "எனக்குச் சேர்த்து வைக்கவில்லையே, என் பிள்ளைகளுக்கு சொத்து இல்லையே" என்று கேட்டதே இல்லை.
இப்பொழுது சில வருடங்களாகத்தான் காத்தவராயன் மற்றவர்களுக்குச் சீர் செய்வதை நிறுத்தி இருக்கிறார். இல்லையென்றால் தன் தங்கைகளுக்கும், அவர்களின் பிள்ளைகளுக்கும் செய்தே தன் ஆயுளையும் ஓய்வையும் இழந்திருப்பார்.
இப்போது வயதும் ஓடிவிட்டது.
"அப்பா! நாளைக்குக் காலேஜ் பீஸ் கட்டணும் ப்பா. பைனல் இயர் எக்ஸாம் வருது," என இளநகை கூறியபடி தன் காலேஜ் பஸ்ஸை நோக்கி நடந்தாள்.
"எனக்கு ஞாபகம் இருக்குடா கண்ணு. நாளைக்கு அப்பா கரெக்டா பணத்தைக் கட்டிடுவேன். நீ அதை நினைச்சு எதற்கும் கவலைப்படாதே. எக்ஸாமுக்கு மட்டும் நல்லபடியா படி. இந்த படிப்புதான் உனக்கு முக்கியமான சொத்து," என்றான்.
"சரிப்பா, பாய்!" என்று ஒரு பறக்கும் முத்தத்தை தந்தைக்குப் பரிசாகக் கொடுத்து விட்டு அவளும் பஸ்ஸில் ஏறி சென்றுவிட, அடுத்ததாகக் கடைக்குட்டியும் அப்பாவின் கன்னத்தில் முத்தமிட்டு தன் ஸ்கூல் பஸ்ஸில் ஏறிச் சென்றாள்.
இளஞ்சுடர் மட்டும் கொஞ்சம் தள்ளி நடந்து சென்று வழி அனுப்ப வேண்டும். இருவரும் பேசிக்கொண்டே நடந்து சென்றனர்.
"சுடர், காலேஜ் எல்லாம் செட் ஆயிடுச்சா? அங்க ஏதும் பிரச்சனை இல்லையே?"
"அதெல்லாம் எந்தப் பிரச்சனையும் இல்லைப்பா, ரொம்ப ஜாலியா இருக்கு."
"எந்த அளவுக்கு ஜாலியா இருக்கோ, அந்த அளவுக்குப் பொறுப்பாவும் இருக்கணும் சுடர். இந்த படிப்புதான் உங்களை வரும் காலத்தில் வாழவைக்கும். அப்பா உங்களுக்காகச் சொத்து சேர்த்து வைக்கல. உங்க வாழ்க்கையை நீங்கதான் உங்க உழைப்பால் பார்த்துக்கணும்," என்றார் காத்தவராயன்.
"அப்பா! எங்களுக்காக நீங்க எதையும் சேர்த்து வைக்கணும்னு அவசியமே இல்லப்பா. உங்க தங்கச்சிங்க மாதிரி உங்க கிட்ட நாங்க எதுவுமே கேட்டு வந்து நிற்க மாட்டோம். நாங்க நல்லா படிச்சு, நாங்களே சம்பாதிச்சு உங்களை நல்லா பார்த்துப்போம்," என்றாள் சுடர்.
"என்ன சுடர் பேச்சு இது? ஒருத்தருக்குச் செஞ்சதை என்னைக்குமே சொல்லிக்காட்டக் கூடாதுமா. யார் உனக்கு இப்படிலாம் பேசச் சொல்லித் தந்தது? நம்ம வீட்ல யாரும் இப்படிப் பேச மாட்டாங்களே!" என்று கொஞ்சம் கண்டிப்புடன் கேட்டார்.
"யாரும் எனக்குச் சொல்லித்தரலப்பா. சுத்தி நடக்குறதை வச்சு நானே புரிஞ்சுக்கிட்டு சொல்றதுதான். என்ன இருந்தாலும் உங்க தங்கச்சிங்களுக்கு நீங்க செஞ்சது ரொம்ப அதிகம் தான்ப்பா. அதைச் சொன்னால் உங்களுக்கு வருத்தமா இருக்கும்னு தெரியும், அதனால என்னால சொல்லாம இருக்க முடியல. ஆனா அதுக்காக உங்க மேல எனக்கு எந்தக் கோபமும் இல்லைப்பா. நீங்களும் அம்மாவும் சந்தோஷமா இருந்தா அதுவே எனக்குப் போதும்," என்று சுடர் பேசிக் கொண்டிருக்கும்போதே அவளின் கல்லூரி வாகனமும் வந்துவிட, அவளும் தந்தைக்கு ஒரு பறக்கும் முத்தத்தை கொடுத்து விட்டு கிளம்பிச் சென்றாள்.