சிற்ப பாவை - 15
"நான் நல்லா இருக்கேன் பாட்டி... நீங்க நல்லா இருக்கீங்களா?" அவளது குரலில் இருந்த அந்தத் தெளிவும், முதிர்ச்சியும் அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது.
"நல்லா இருக்கேம்மா... எங்க போயிட்ட இத்தனை வருஷமா? வீட்ல கேட்டா வேலைக்கு போயிருக்கான்னு மட்டும் சொன்னாங்க..."
"நான் ஆர்மில சேர்ந்துட்டேன் பாட்டி... வெளியே சொல்ல வேண்டாம்னு நான்தான் சொல்லி வச்சிருந்தேன்" நகை சாதாரணமாகச் சொன்ன அந்த வார்த்தை, அங்கிருந்தவர்களின் வாயைப் பிளக்க வைத்தது.
அவளது அந்த ராணுவ வீராங்கனைக்கே உரிய கம்பீர நடை, அங்கிருந்தவர்களிடம் ஒரு மரியாதையைத் தானாகவே வரவழைத்தது.
தன் வீட்டு வாசலில் நின்றபடி, பிரனேஷ் தன் முன்னாள் காதலியைப் பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால், அவனுக்கு முன்னால் நடந்து வந்து கொண்டிருப்பவள் அவன் காதலித்த அந்தப் பழைய நகை இல்லை! அவன் ஆசைப்பட்ட அந்தப் பேதை இல்லை! அவன் எதை மாற்ற வேண்டும் என்று நினைத்தானோ, அதை விடப் பல மடங்கு வலிமையானவளாக, அவன் கனவிலும் நினைக்காத ஒரு புதுப் பரிணாமத்தில் அவனைக் கடந்து சென்றாள் நகை.
வீரமங்கை நாட்டின் மங்கை... தேச மங்கை... தன்னைத் தானே ரத்தமும் சதையுமாக செதுக்கிக் கொண்ட உயிர் சிலை இவள்!
வெறும் பெண்ணாகச் சென்றவள், இன்று தன்னைத் தானே ஒரு கம்பீர சிற்பமாகச் செதுக்கி கொண்ட கலைஞனாகவும், அந்தச் சிற்பமாகவும் மாறி நின்றாள்.
அடிபட்ட புலி சும்மா இருக்குமா? அது பதுங்குவதே பாய்வதற்குத்தானே! இன்று அவளுடைய ஒவ்வொரு அடியும் ஒரு வேங்கையின் வீறுகொண்ட நடையாக இருந்தது. கம்பீரம் அவள் கண்களில் மின்னியது. தெருவில் இருந்தவர்களின் பார்வைகள் அவள் மீது மரியாதையுடனும், வியப்புடனும் படிந்தன. ஆனால் அவளோ, அந்தப் பார்வைகளைச் சற்றும் சட்டை செய்யவில்லை.
எதையும் கண்டுகொள்ளாமல், கையில் இருந்த அத்தனை சுமைகளையும் பாரம் என்று நினைக்காமல், மிகச் சாதாரணமாக இரண்டு இரண்டு படிகளாக தாவி ஏறித் தன் வீட்டை நோக்கிச் சென்றாள்.
அவள் அழுத்திய காலிங் பெல் சத்தம் அந்த வீட்டின் மௌனத்தைக் கலைத்தது.
கதவைத் திறந்த கவி, எதிரே நின்ற உருவத்தைக் கண்டதும் ஒரு நொடி உறைந்து போனாள்.
அடுத்த நொடி, "அக்கா...!" என்ற அந்த ஒற்றை அலறலில் பாசம் பிழிந்து வர, அப்படியே தாவித் தன் அக்காவை கட்டிக்கொண்டாள்.
கவியால் தன் கண்களையே நம்ப முடியவில்லை. இது தன் அக்கா தானா? இவ்வளவு மாற்றமா? ஆனால், ரத்த பாசம் பொய் சொல்லாதே! உடன்பிறந்த ரத்தம் அல்லவா... உருவம் மாறினாலும் உள்ளத்தின் வாசனையை அவள் அடையாளம் கண்டுவிட்டாள்.
தன் குட்டித் தங்கையை அப்படியே அள்ளித் தூக்கிச் சுற்றியவள், "எப்படி இருக்க கவி குட்டி?" என்று கேட்க, கவியின் கண்களில் கண்ணீர் முட்டியது.
"நான் நல்லா இருக்கேன் அக்கா... ஆனா நீ எப்படி இருக்க? இத்தனை நாள் எங்களை ஏன் பார்க்கவே வரல?" - கவியின் அந்த அப்பாவியான கேள்வி அவள் நெஞ்சைச் சுட்டது.
பதில் சொல்லாமல் தங்கையை அணைத்தபடி உள்ளே நடக்க, கவியும் அக்காவின் கையில் இருந்த சுமைகளைப் பகிர்ந்து கொண்டாள்.
கவியின் சத்தம் கேட்டு உள்ளிருந்து வெண்பாவும் சுடரும் பதறியடித்து ஓடி வந்தனர். வாசலில் நின்ற மகளைக் கண்டதும் வெண்பாவின் கால்கள் அங்கேயே வேரூன்றி நின்றன. பெத்த மனம் அல்லவா... கண்களிலிருந்து கண்ணீர் அணை கடந்த வெள்ளமாக வழிந்து ஓடியது.
"நகை... மகளே..." என்று தழுதழுத்த குரலில் அழைத்தபடி, அலைமோதும் தன் தாய்மையோடு ஓடி வந்து அவளை அணைத்துக் கொண்டார்.
வருடங்கள் பல கடந்துவிட்டன. தன் மகளை முற்றிலும் வேறொரு கோலத்தில், ஒரு இரும்பு மனுஷியாக பார்க்கும்போது அந்தத் தாயின் உள்ளம் ஒரு பக்கம் பெருமிதத்திலும், மறுபக்கம் இத்தனை நாள் பிரிவின் வலியிலும் தவித்தது.
சுடரோ அங்கேயே அதிர்ந்து போய் நின்றாள். தன் அக்காவின் இந்த விஸ்வரூபக் கோலத்தை அவள் எதிர்பார்க்கவே இல்லை.
நீண்ட கூந்தலுக்காக ஒரு காலத்தில் சண்டை போட்டுக்கொண்டது எல்லாம் இப்போது பொய்யாகிப் போனது.
இன்று காது வரை வெட்டப்பட்ட ஆண் கத்தரிப்பு முடி. நளினமான நடையைக் கிண்டல் செய்த காலம் மறைந்து, இன்று நேர்கொண்ட பார்வையும் நிமிர்ந்த நன்னடையும்! ஒரு காலத்தில் எதற்கெடுத்தாலும் பயந்த அதே பெண்ணா இன்று தங்களுக்கு முன்னுதாரணமாக, ஒரு கம்பீரமான ஆண்மகனைப் போல நிற்கிறாள்? இந்த மாற்றம் அவர்களுக்குள் ஒரு புதுவிதமான பிரமிப்பையும் அழகையும் தந்தது.
"என்ன சுடர்... அப்படியே சிலையாட்டம் நின்னுட்ட? பார்த்துக்கிட்டே இருப்பியா?" என்ற அக்காவின் அந்தத் தீர்க்கமான குரலில் சுயநினைவு பெற்றவள், ஓடி வந்து அக்காவை கட்டிக்கொண்டாள்.
"ஒரு வருஷத்துக்கு மேல ஆச்சுக்கா உன்னைப் பார்த்து... உன்னை நாங்க எவ்வளவு மிஸ் பண்ணினோம் தெரியுமா? நீ இல்லாமல் வீடு வீடாவே இல்லை" - சுடரின் கண்ணீர் அக்காவின் சட்டையை நனைக்க, அந்த ஈரம் அவளது இரும்பு இதயத்தையும் ஒரு கணம் கரைத்தது.
"அதான் வந்துட்டேனே... விடுடா, முதல்ல அப்பாவைப் பார்த்துட்டு வரேன்," என்றபடி உள்ளே நகர்ந்தாள்.
காத்தவராயன் காதுகளில் இந்தச் சத்தங்கள் எல்லாம் விழுந்து கொண்டே இருந்தன. தன் மூத்த மகளைக் காண அவர் உயிர் துடித்துக் கொண்டிருந்தது.
"அப்பா..." என்று அதே மாறாத பாசத்துடன் அழைத்துக்கொண்டே அவர் அருகில் அமர்ந்தவள், வாடியிருந்த தந்தையின் கன்னங்களை வருடிப் பார்த்தாள்.
ஒரு ராணுவ வீராங்கனையாக வெளியே தெரிந்தாலும், தந்தையின் முன்னால் அவள் இன்னும் அதே செல்ல மகள் தான்.
தந்தையின் குரல் தேய்ந்து போயிருந்தது. ஆனால் மகளைப் பார்த்த அந்த பரிபூரண நிம்மதி அவர் கண்களில் ஒளியாக தெரிந்தது.
அவர் கண்களில் கசிந்த கண்ணீரைத் துடைத்து விட்டாள், "ஏன் அழறீங்க அப்பா? உங்களுக்காக நாங்க இருக்கோம், எங்களுக்காக நீங்க இருக்கீங்க. இனி எந்தப் பிரச்சினையும் இல்லை. எல்லாத்தையும் நான் சரி பண்ணிட்டேன். இனிமே நம்ம நிம்மதியா வாழலாம்," என்று தைரியம் கூறினாள்.
மகளை நினைத்து அவர் மனம் பூரித்தது. இருந்தாலும், ஒரு தந்தையாகத் திருமண வயதில் இருக்கும் மகளை மணம் முடிக்காமல் இப்படிப் பார்ப்பது அவருக்குள் ஒரு மெல்லிய பாரமாகவே இருந்தது.
சூழலை மாற்ற நினைத்தவள், "அப்பா, நார்த் சைடு ரொம்ப அழகா இருக்கும்பா. உங்களுக்கு உடம்பு சரியாகட்டும், நான் உங்களை அங்க அழைச்சிட்டு போறேன். செம குளிரா இருக்கும், ஸ்வெட்டர் போடாம அங்க இருக்கவே முடியாது. நல்லா ஜாலியா இருக்கும்," என்று பேசிக்கொண்டே போக, அந்த மொத்த குடும்பமும் அவளைச் சுற்றி அமர்ந்து உலகத்தையே மறந்து அவள் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தது.
நிச்சயமாக, அவள் வாய் ஓயாமல் பேசத்தான் செய்வாள். அங்கே எல்லையில் தனிமையில் காய்ந்து கொண்டிருந்தவளுக்கு, இங்கே தன் ரத்தங்கள் சூழ இருக்கும் போது பேசாமல் இருக்க முடியுமா? அவள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் அந்த குடும்பத்திற்கு ஒரு கவிதையாக, ஒரு சங்கீதமாகத் தெரிந்தது.
குடும்பத்தின் வாரிசாக மட்டுமல்லாமல், ஒரு தந்தை ஸ்தானத்தில் இருந்து அவள் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்ட விதம், அவள் மீதான மரியாதையை அந்த வீட்டிற்குள் இன்னும் உயர்த்தியது.
மகளைப் பார்த்த மகிழ்ச்சியில் வெண்பா திருஷ்டி கழித்தார். அன்று காத்தவராயன் முகத்தில் பல நாட்களுக்குப் பிறகு ஒரு முழுமையான புன்னகை பூத்தது. மகளும் தந்தையை ஒரு நிமிடம் கூட பிரியாமல் அவரோடே அமர்ந்து
பேசிக்கொண்டிருந்தாள். இரவு உணவை வெண்பா தடபுடலாகச் செய்யத் தொடங்க, சமையலறைக்குள் நுழைந்தாள் நகை.
"அம்மா... ரொம்ப சிம்பிளா ஏதாவது செய்யுங்க. தோசை மட்டும் போதும். நீங்க கஷ்டப்பட்டு விதவிதமா செஞ்சிட்டு இருக்காதீங்க," என்று தாயின் சிரமம் அறிந்து தடுத்தாள்.
அந்த ஒரு வருடத்தில் அவளுடைய பழக்கவழக்கங்கள் எவ்வளவு மாறிவிட்டது என்பதை வெண்பா உணர்ந்தார்.
தன் விருப்பத்தைத் திணிக்காமல், மகள் கேட்டதையே அன்போடு செய்தார். இட்லி சாம்பார் காரசாரமாக வைத்துவிட்டு, தோசையை மொறுமொறுப்பாக ஊற்றிக் கொடுத்தார்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு தாய் கையால் அந்தச் சூடான தோசையைச் சாப்பிடும்போது, அவளுக்குள் ஒரு இனம் புரியாத உணர்வு அது பாசம், பாதுகாப்பு, நிம்மதி!
மூன்று பெண்களும் கிச்சன் மேடையில் அமர்ந்திருக்க, வெண்பா இரண்டு அடுப்புகளிலும் தோசையை மாறி மாறிச் சுட்டுப் போட்டுக் கொண்டிருந்தார்.
அந்த வீடு மீண்டும் பழைய சந்தோஷத்தை அடைந்தது போன்ற ஒரு நிறைவு. காத்தவராயன் படுக்கையில் கிடக்க அந்தத் தலைமை இடத்தை, இந்தப் பெரிய மகள் செதுக்கி முடித்த ஒரு கம்பீரச் சிலையாகப் பூர்த்தி செய்வாள் என்ற நம்பிக்கை அந்தத் தாயின் மனதில் வேரூன்றியது.
சாப்பிட்டு முடித்த கையோடு, தன் தந்தைக்கும் தானே உணவை எடுத்துச் சென்று ஊட்டினாள். அவர் வாய் துடைத்து விட்டு எழுந்தபோது வெளியே சில குரல்கள் கேட்டன. எட்டிப் பார்த்தால், அவளுடைய பழைய தோழிகள்!
அவர்களைக் கண்டதும் நகையின் முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை அரும்பியது.
"எல்லாரும் உள்ளே வாங்க... எப்படி இருக்கீங்க?" அவளது குரல் கம்பீரமாக அந்த அறையில் எதிரொலித்தது.
"நாங்க நல்லா இருக்கோம் நகை... ஆனா நீ? ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டியே! உன்னைத் தெருவில் பார்த்தப்போ எங்களுக்கு அடையாளமே தெரியல. அப்புறம் நீ வந்த விஷயம் தெரிஞ்சதும் தான் ஓடி வந்தோம். உன்னைப் பார்த்ததுல ரொம்ப சந்தோஷம் நகை. அதை விட நீ ஆர்மில இருக்கியாமே? கேட்கவே பெருமையா இருக்கு! ஆனா வீட்ல யாருமே இதை பத்திச் சொல்லவே இல்லையே?" என்று தோழிகள் வியந்தனர்.
"நான்தான் சொல்ல வேண்டாம்னு சொன்னேன். தேவையில்லாம ஊருக்குள்ள வாய்க்கு வந்ததை பேசிட்டு இருப்பாங்க. என் குடும்பத்துக்கு தான் மன கஷ்டம். அதான்...
சரி, எல்லாரும் உட்காருங்க. அம்மா ஏதாவது சாப்பிட எடுத்துட்டு வருவாங்க," என்றாள் நிதானமாக.
"எங்களுக்கு எதுவும் வேண்டாம். நைட் ரொம்ப லேட் ஆயிடுச்சு, ஆனாலும் உன்னைப் பார்க்காம இருக்க முடியல. நீ நல்லா இருக்கியே, அதுவே எங்களுக்குப் பெரிய சந்தோஷம் தான்," என்று அவர்கள் சிறிது நேரம் மனம் விட்டுப் பேசிவிட்டுச் சென்றனர்.
அத்தனை பேரையும் பார்த்ததில் நகையின் மனதுக்குள்ளும் ஒரு பூரிப்பு. பிரிந்து சென்ற ஒரு வருடம் அவளை உருவத்தால் மாற்றியிருக்கலாம், ஆனால் அவளது பாசம் இன்னும் அதே உறுதியோடுதான் இருந்தது.