சிற்ப பாவை - 2
காத்தவராயன் வீட்டுக்குள் சோர்வாக வருவதைக் கண்ட வெண்பா, "என்னங்க... போகும்போது அவ்வளவு எனர்ஜியா போனீங்க, ஆனா வரும்போது ஏன் ஒரு மாதிரி டல்லா இருக்கீங்க?" எனக் கேட்டாள்.
"சுடர் ஒரு மாதிரி பேசிட்டுப் போறா வெண்பா... 'தங்கச்சிங்களுக்கே எல்லாத்தையும் செஞ்சிட்டீங்க' என்கிற மாதிரி ஏதோ மனசுல வச்சுட்டுப் பேசுறா," என்றான்.
வெண்பாவின் முகம் சட்டென மாறியது.
"அதையெல்லாம் மனசுல போட்டு பெருசா எடுத்துக்காதீங்க. அவங்க இப்போ ஒன்றும் விவரம் தெரியாத குழந்தைங்க கிடையாது; உங்களுடைய நல்லது கெட்டது, கஷ்டம் நஷ்டம் எல்லாத்தையும் நேர்ல பார்த்து வளர்ந்தவன் தான். நம்ம வீட்டு நிலைமை என்னன்னு அவங்களுக்குத் தெரியாதா? காலேஜ்ல தன்னைச் சுத்தி இருக்குற மத்த பிள்ளைகள் எல்லாம் விதவிதமா நகை நட்டுன்னு போட்டுட்டு வரும்போது, நம்ம பிள்ளைங்க மட்டும் கழுத்துல ஒண்ணுமே இல்லாம இருக்குறது அவங்களுக்குச் சின்ன வருத்தத்தை வேணா கொடுத்திருக்கலாம். அப்பா, நமக்காகச் எதையும் சேர்த்து வைக்காம, அத்தைங்களுக்கு (தங்கச்சிங்களுக்கு) எல்லாத்தையும் செஞ்சுட்டாங்களேன்னு சுடர் மனசுல ஒரு ஆதங்கம் இருந்திருக்கலாம். அந்த எண்ணம் தான் அவளை அப்படிப் பேச வச்சிருக்கு. ஆனா, அவ எதையும் வெளியில காட்டிக்க மாட்டான்னு உங்களுக்குத் தெரியும்ல? விடுங்க... பிள்ளைகள் மனசு மெல்ல மெல்ல மாறி, அவங்களே கொஞ்ச நாள்ல சரியாயிடுவாங்க."
மனைவி வெண்பா இப்படி ஆறுதல் சொன்னாலும், காத்தவராயன் மனதில் அந்த வார்த்தைகள் ஏதோ ஒரு பெரும் பாரமாக அமர்ந்து அவரை அழுத்தியது.
"சரி வெண்பா, நான் இப்போ வேலைக்கு கிளம்புறேன்."
"பார்த்து பத்திரமா போயிட்டு வாங்க..." என்று அவர் சொல்லியதும், அவருக்கு உணவளித்து அவரை வழி அனுப்பி வைத்தார்.
வழக்கமாகத் தன் கணவன் கீழே இறங்கி வண்டியில் ஏறிச் செல்லும் வரை, வெண்பா மேலே நின்று பார்த்துக் கொண்டே இருப்பார். அதேபோல் இன்றும் அவர் பார்த்துக் கொண்டிருக்க, காத்தவராயன் தன் புல்லட்டில் ஏறி அமர்ந்தார்.
அப்போது ஒரு வயதான பெரியவர் காத்தவராயனை வழிமறித்து பேசத் தொடங்கினார். வெண்பாவிற்கு அவர்கள் பேசுவது எதுவும் காதில் விழவில்லை என்றாலும், "ஏதோ பேசிக் கொள்கிறார்கள்" என்று மட்டும் கவனித்துக் கொண்டிருந்தார்.
"என்னதான் பொம்பள பிள்ளை மேல உருகி உருகிப் பாசம் வச்சாலும், அதுங்க நாளைக்குக் கல்யாணம் பண்ணிட்டு வேற வீட்டுக்கு தான் போகப் போகுது. அதுக்கு எதுக்கு நீ இப்படி கஷ்டப்பட்டு படிக்க வைக்கிற? அதுவும் ஒரே ஒரு பொண்ணுன்னா பரவாயில்லை... நீ மூணு பொண்ணு வச்சிருக்க! அதுங்களுக்கு ஏதாவது சேர்த்து வச்சு, கல்யாணம் பண்ணிக் கொடுக்கும்போது நாலு நகையைப் போட்டாத்தான் ஊர்ல மரியாதையா இருக்கும். சொன்னா உனக்கு ஏன் புரிய மாட்டேங்குது?" என்று அந்தப் பெரியவர் அதிகாரத் தோரணையில் கேட்டார்.
காத்தவராயன் நிமிர்ந்து அவரைப் பார்த்துச் சொன்னார், "பெரியப்பா, உங்ககிட்ட வந்து நான் ஏதாவது உதவி கேட்டேனா? என் பிள்ளைகளை நான் எப்படியாவது கரை சேர்த்திடுவேன். நகை போட்டுத்தான் அவங்களைக் கரை சேர்க்கணும்னு அவசியம் இல்லை. என் பிள்ளைகளை நல்ல முறையில படிக்க வச்சு ஆளாக்கினாலே போதும்... நல்ல மனுஷங்களா வளர வச்சாலே போதும். அதெல்லாம் உங்களுக்குச் சொன்னா புரியாது!"
"காத்தவராயா, நான் சொல்ற உண்மைதான் உனக்கு புரியல. உனக்கு வயசும் ஆயிட்டே போகுது. இத்தனை வருஷம் தங்கச்சி, தங்கச்சி பிள்ளைங்கன்னே ஓடிட்ட. உன் மனைவி வெண்பாவும் உன்னை எந்த இடத்திலும் தடுத்து நிறுத்தல. ஆனா, எதிர்காலத்துல நீ வருத்தப்பட கூடாது பாரு, அதுக்காகத்தான் சொல்றேன். மூணு பொம்பள பிள்ளைகளும் கீரைக்கொத்து மாதிரி இருக்குங்க... பாக்குற எல்லா கண்ணும் ஒரே மாதிரி இருக்காது. அவங்களுக்குப் பாதுகாப்பு நீதான்னு மனசுல வச்சுக்கோ!"
அப்போது அங்கே வந்த, காத்தவராயனுக்குப் பிடிக்காத ஒரு நபர், எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுவது போல் பேசத் தொடங்கினார்.
"அதெல்லாம் எங்க நம்ம காத்தவராயனுக்கு புரியப் போகுது? ஆம்பளப் பிள்ளையைப் பெத்தவன் கூட இந்த அளவுக்கு ஆடிக்கிட்டு இல்ல. மூணு பொம்பள பிள்ளையை வச்சுட்டு இவரு என்னமோ உலகத்தையே வளைச்சுப் போட்ட மாதிரி பேசிட்டு இருக்காரு. எல்லாம் கால நேரம்!" என்று நக்கலாகச் சொல்லிவிட்டு சென்றார். காத்தவராயன் அவரை ஒரு முறை முறைத்துவிட்டு, அந்தப் பெரியவரையும் பார்த்துவிட்டு அங்கிருந்து வண்டியைக் கிளப்பினார்.
அந்தப் பெரியவர் அன்று கூறியது நூற்றுக்கு நூறு உண்மை என்பது எதிர்காலத்தில் ஒருநாள் அவருக்குப் புரியத்தான் போகிறது.
வழக்கம்போல வளைவில் திரும்பும்போது காத்தவராயன் திரும்பி தன் மனைவியைப் பார்த்தார். அங்கே மனைவி நின்று கொண்டிருப்பார் என்று அவருக்குத் தெரியும். மனைவியைக் கண்டதும் புன்னகையுடன் கையசைத்துவிட்டு அவர் செல்ல, வெண்பாவும் புன்னகையோடு வீட்டிற்குள் சென்று தன் வேலைகளைக் கவனிக்கத் தொடங்கினார்.
"அண்ணி, என்ன பண்றீங்க?" என்று கேட்டபடி இரண்டாவது நாத்தனாரும், கணவனின் இரண்டாவது தங்கையுமான ஆனந்தி வீட்டிற்குள் நுழைந்தாள்.
"வா ஆனந்தி, பாத்திரம் கழுவிட்டு இருக்கேன். சாப்பிடறியா?"
"என்ன சாப்பாடு அண்ணி இன்னைக்கு?"
"ரசம், பீட்ரூட் பொரியல், சாதம் தான்."
"என்ன அண்ணி நீங்க... இதெல்லாம் ஒரு சாப்பாடா? ஒரு சிக்கன் மட்டன் செஞ்சிருக்கக் கூடாதா? இல்லன்னா இட்லி, தோசை, பொங்கல், பூரின்னு எதையாவது செய்யக் கூடாதா? காலையிலேயே வெறும் சோறு, ரசம், பொரியலா?"
ஆனந்தி எப்போதும் இப்படித்தான் பேசுவாள் என்பதால், வெண்பா அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை.
"இல்லை ஆனந்தி, இன்னைக்கு நான் கொஞ்சம் அசந்து தூங்கிட்டேன். உங்க அண்ணன் தான் இதெல்லாம் சமைச்சு வச்சுட்டுப் போனாரு. இரு, நான் உனக்குச் சாப்பாடு போடுறேன்."
"ஐயையோ! யாருக்கு வேணும் இந்த ரசம்? எனக்கு வேண்டாம். ஒரு வாலியில ஊத்துங்க, பசங்களுக்காகக் கொண்டு போய் தர்றேன். நாளைக்காவது சிக்கனோ மட்டனோ வாங்கி வைங்க. ஒரு கிலோ மட்டன் எனக்காக எடுத்து வச்சிருங்க" என்று சொல்லிவிட்டு, அந்த வாலியில் ரசத்தை முழுவதுமாக அள்ளிக்கொண்டு கிளம்பிவிட்டாள்.
வெண்பா சோகமாக அந்தப் பாத்திரத்தைப் பார்த்தாள். அவருக்கும், அன்றைய மதிய உணவிற்கும் அது மட்டும் தான் மிச்சமிருந்தது.
வெண்பாவிற்கு மாதவிடாய் என்பதால், மனைவியின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு காத்தவராயனே சமைத்துவிட்டு சென்றிருந்தார். எப்போதும் மனைவிக்கு உடல்நலக் குறைவோ அல்லது வலியோ இருக்கும் நாட்களில், அவளை எந்த வேலையும் செய்ய விடமாட்டார். அவரே முடிந்த வேலைகளைச் செய்துவிட்டுத்தான் கிளம்புவார்; மற்ற சிறு வேலைகளை மட்டும் மனைவி பார்த்துக்கொள்வார்.
ஆனால் ஆனந்தி, தினமும் இதேபோல் வீட்டில் இருப்பதை எடுத்துக் கொண்டு செல்வதோடு, தேவையில்லாத செலவுகளையும் அண்ணன் தலையில் வைத்துவிட்டுச் செல்வார்.
வெண்பா கவலையோடு வந்து சோபாவில் அமர்ந்தாள். "ஒரு கிலோ மட்டன் ஆயிரம் ரூபாய்... வீட்ல சுத்தமா கையில் காசு இல்லை. நம்ம பிள்ளைகளுக்கே ரெண்டு வாரமா எந்த அசைவ உணவும் செஞ்சு கொடுக்க முடியல. இப்போ காசு இல்லாம இவர் என்ன பண்ணுவாரோ தெரியலையே... பாவம் மனுஷன்!" என்று மனதிற்குள் புலம்பினாள். அப்போதும் அவளுக்குத் தன் கணவன் மீது கோபம் வரவில்லை. "இதையெல்லாம் ஏன் செய்கிறீர்கள்?" என்று அவரிடம் தட்டிக் கேட்கவும் அவளுக்குத் தோன்றவில்லை.
காத்தவராயன் அரசு மின் வாரியத்தில் வேலை பார்த்து வந்தார். இன்னும் ஓராண்டில் அவர் பணியிலிருந்து ஓய்வுபெற (Retire) போகிறார். கையில் எந்தச் சேமிப்பும் இல்லையே என்கிற கவலை அவருக்கு இருந்ததே இல்லை. அன்பு மனைவி, பாசமான மகள்கள் இருக்கிறார்கள் என்கிற தைரியத்திலேயே அவர் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்தார்.
அலுவலகத்தில் நண்பர் கேட்டார், "என்ன காத்தவராயன், இன்னைக்குத் தங்கச்சி என்ன ஸ்பெஷலா சமைச்சு கொடுத்தாங்க?"
"இன்னைக்குத் மனைவி சமையல் இல்லப்பா, என்னுடைய சமையல்தான். அவளுக்குக் கொஞ்சம் உடம்பு சரியில்லை, அதான் நானே சமைச்சு எடுத்துட்டு வந்துட்டேன்."
"அப்படியா? அப்போ அதை நீயே சாப்பிடு காத்தவராயன், எனக்கு வேண்டாம்" என்று சொல்லிவிட்டு அந்த நண்பர் நகர்ந்து கொண்டார்.
காத்தவராயன் தன் மூத்த தங்கையைத் திருமணம் செய்து கொடுத்த காலத்திலேயே, அவருடைய தாய் தந்தை இருவரும் அடுத்தடுத்து இறந்துவிட்டனர். அவர்களுக்குச் சொத்து என்று சொல்லிக்கொள்ள எதுவுமே இல்லை. அந்த இளம் வயதிலேயே காத்தவராயன் கிடைத்த வேலைகளைச் செய்து தன் தங்கைகளைக் காப்பாற்றி வந்தார்.
அதன்பிறகு ஆனந்திக்குக் காதல் திருமணம் என்று வந்தபோது, அவர்கள் குடியிருந்த ஒரே வீட்டை விற்று அவளுக்குத் திருமணம் செய்து வைத்தார். மீதி இருந்த பணத்தை வைத்து கவிதாவின் திருமணத்தை நடத்தினார்.
அதன்பின் கார்த்திகாவின் திருமணத்திற்காக அடுக்கடுக்கான கடன்கள் வாங்கினார். எப்படியோ, அடுத்தடுத்த ஆண்டுகளில் தன் மூன்று தங்கைகளையும் ஒரு நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுத்து அனுப்பிவிட்டார்.
காத்தவராயன் வெண்பாவைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். தங்கைகள் அனைவருக்கும் திருமணம் செய்து வைத்ததில் சுமக்க முடியாத அளவுக்குக் கடன்கள் இருந்தாலும், தான் நேசித்த பெண்ணின் கரம் பிடித்தார். வெண்பாவிற்கு உறவினர்கள் யாரும் கிடையாது; ஆசிரமத்தில் வளர்ந்த பெண்.
தங்கைகள் நால்வருக்கும் இந்தத் திருமணத்தில் பெரிய உடன்பாடு இல்லை என்றாலும், அண்ணனின் சொல்லுக்காக ஒத்துக் கொண்டனர். அண்ணன் மேல் அவர்களுக்குப் பாசம் உண்டுதான், ஆனால் அது எவ்வளவு சுயநலமானது என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும்.
இவர்களில் பவானி, கார்த்திகா இருவரும் வெளிநாட்டில் வசதியாக வசிக்கிறார்கள். ஆனந்தியும் கவிதாவும் மட்டும்தான் இதே ஊரில் இருக்கிறார்கள். அதிலும் ஆனந்தி, தினமும் ஒரு வாலியைத் தூக்கிக்கொண்டு அண்ணன் வீட்டுக்கு வந்துவிடுவாள்.
கவிதா எப்போதாவது வந்தாலும் அண்ணனுக்குப் பெரிய செலவுகளை வைப்பதில்லை. இந்த நான்கு தங்கைகளில் கவிதா ஒருத்தி மட்டும்தான் தன் வீட்டுச் செலவையோ, பிள்ளைகளின் தேவையையோ அண்ணன் தலையில் கட்ட மாட்டாள். பவானி கூட எப்போதாவதுதான் ஏதேனும் கேட்பாள், அதுவும் விசேஷ நாட்களில் மட்டுமே. ஆனால், கார்த்திகாவும் ஆனந்தியும் தான் எப்போதும் அண்ணனிடம் இருந்து எதையாவது பிடுங்கிக் கொண்டே இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள்.
இப்போது அவர்கள் பிள்ளைகளுக்கும் திருமணம் ஆகிவிட்டது. அதில் ஆனந்தியின் மகனுக்கு மட்டும் இன்னும் திருமணம் ஆகவில்லை.
ஆனந்தியின் ஒரே மகன் பிரனேஷ், ஒரு பெரிய மென்பொருள் நிறுவனத்தில் மாதம் இரண்டு லட்ச ரூபாய் சம்பளத்தில் கைநிறையச் சம்பாதித்துக் கொண்டிருக்கிறான். ஆனாலும் அவனது தாய் ஆனந்தி மட்டும் தன் அண்ணன் வீட்டைச் சுரண்டுவதை நிறுத்தவே இல்லை.