சிற்ப பாவை - 26
பழைய சாதத்தில் தயிர் ஊற்றி, சின்ன வெங்காயத்தை நறுக்கிப் போட்டு, சுடச்சுட வறுத்த கருவாடும், பச்சை மிளகாயும் சேர்த்து மகன் முன்னே வைத்தார்.
தாய்க்கு விஷயம் தெரிந்துவிட்டது என்று புரிந்தாலும், பரமன் மௌனமாகச் சாப்பிட்டான். அவன் சாப்பிட்டு முடிக்கும் வரை ஒரு மலையைப் போலப் பொறுமையாகக் காத்திருந்தவர் கேட்டார்:
"எத்தனை நாளா நீ நகையை லவ் பண்றே?"
பரமன் சிலையைப் போல அமைதியாக இருந்தான்.
"ஏன்டா... அறுபது வயசு வரைக்கும் இப்படியே ஊமை மாதிரியே அமைதியா இருப்பியா?"
"அம்மா... நீ பார்த்ததை அப்படியே மறந்துடு. நடக்காத ஒண்ணுக்கு ஆசைப்படாதே."
"நான் கேட்டதுக்கு பதில் சொல்லு பரமா..."
"சின்ன வயசுல இருந்தே நான் அவளை லவ் பண்றேன் அம்மா."
"அப்புறம் ஏன் என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லல?"
"சொல்ற அளவுக்கு நமக்குத் தகுதி இல்லையேம்மா! நம்ம குடும்பம் இருக்கிற நிலைமைக்கும், அவங்க குடும்பம் இருக்கிற அந்தஸ்துக்கும் இது சரி வருமா?"
கண்ணகியின் கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாகக் கொட்டியது. தன் மகன் காதலிக்கிறான் என்ற கோபம் அவருக்கு வரவில்லை. மாறாக, அவன் காதலை இத்தனை வருடம் நெஞ்சுக்குள்ளேயே போட்டுப் புதைத்து வைத்திருக்கிறானே, வெளிப்படுத்தக் கூடத் துணிவில்லாத நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறானே என்று எண்ணி அவர் மனம் ரணமானது.
"அவங்களுக்கும் நமக்கும் நல்ல உறவு இருக்கு. அதை நான் கெடுத்துக்க விரும்பல. அதுமட்டுமில்லாம, நீ போய் பொண்ணு கேட்டு அவங்க ஏதாவது தப்பாச் சொல்லிட்டா, அதை என்னால தாங்க முடியாதுமா" என்று பரமன் சொல்லிவிட்டு எழுந்து சென்றான்.
கண்ணகி தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டார். மகன் பாதியிலேயே எழுந்து போனாலும் அவரைத் தடுக்கவில்லை.
"இன்னுமா என்னைப் பார்த்து அவமானமாகப் பேசிடுவாங்க? என் மனசுல இருக்கிற பாரத்தை நான் சொல்லப்போறேன். புருஷன் விட்டுட்டுப் போனப்போ கூடப் பேசின ஊர், இப்போவா பேசிடப் போகுது? என் பிள்ளைக்காக நான் போய் பொண்ணு கேட்பேன்.
ஆசைப்பட்ட பொண்ணு இல்லாம என் மகன் இப்படியே கஷ்டப்படுவதை என்னால் பார்க்க முடியாது. கடவுளே... ஏன் என் பிள்ளைக்கு இப்படி ஒரு சோதனையைக் கொடுத்தே?" என்று அழுது கொண்டே தலைவாரி, புடவையைச் சரிசெய்து கொண்டு, மொத்த பாரத்தையும் கடவுள் மீது போட்டுவிட்டு வெண்பாவின் வீட்டு வாசலில் வந்து நின்றார்.
வெண்பா அன்று வேலைக்குச் செல்லவில்லை. தன் மகளுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லையே என்ற கவலை அவரைத் தின்று கொண்டிருந்தது. தன் கணவனின் புகைப்படத்தின் முன்பு அமர்ந்து அழுது கொண்டிருந்தார்.
அப்போது காலிங் பெல் சத்தம் கேட்டது. கண்ணீரைத் துடைத்துவிட்டு வெளியே வந்தவர், கண்ணகியைக் கண்டதும் முகம் மலர்ந்தார்.
"வாங்க அண்ணி... உள்ள வாங்க" என்று அன்போடு வரவேற்றார்.
"என்ன வெண்பா... முகம் எல்லாம் ஒரு மாதிரியா இருக்கு? அழுதுட்டு இருந்தியா?"
"ஒன்னுமில்ல அண்ணி... நகை கல்யாணத்துக்கு இன்னும் பிடி கொடுக்க மாட்டேங்குது. அந்த வருத்தமே மனசை அழுத்துது. அதான் இன்னைக்கு லீவு போட்டுட்டு வீட்லயே தங்கிட்டேன். உக்காருங்க அண்ணி... குடிக்க ஏதாவது எடுத்துட்டு வர்றேன்."
கண்ணகி சட்டென வெண்பாவின் கையைப் பற்றிக் கொண்டார். "வெண்பா... நான் உன்கிட்ட ஒன்னு பேசணும்னு தான் வந்தேன். முதல்ல உட்காரு" என்று அவளைத் தன்னருகே அமர வைத்தார்.
"சொல்லுங்க அண்ணி... ஏன் இப்படித் தயங்குறீங்க? எதுவா இருந்தாலும் சொல்லுங்க."
நெஞ்சுக்குள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு வந்தாலும், நகையைப் பெண் கேட்க அவருக்குத் தயக்கமாகவே இருந்தது. 'நகை பெரிய படிப்பு படிச்சு உத்தியோகத்துல இருக்கா... என் மகன் ஒரு சாதாரண மெக்கானிக். இவனுக்கு அந்தத் தங்கமான பொண்ணைக் கொடுப்பாங்களா?' என்று உள்ளுக்குள் ஒரு போர் நடந்து கொண்டிருந்தது.
அவரது முகவாட்டத்தைக் கவனித்த வெண்பா, "அண்ணி... மனசுல என்ன இருந்தாலும் நேரடியாச் சொல்லுங்க" என்றார்.
"வெண்பா... நான் உன்கிட்ட ஒன்னு கேட்பேன். உன்னால முடியும்னா சம்மதம் சொல்லு... முடியலன்னா தயவுசெஞ்சு இப்போவே முடியாதுன்னு சொல்லிடு."
"என்னன்னு சொல்லுங்க அண்ணி... நான் ஏன் முடியாதுன்னு சொல்லப் போறேன்? என் சக்தியில் இருந்தா கண்டிப்பா உங்களுக்காகச் செய்றேன்" என்று வெண்பா உறுதியுடன் கூறினார்.
கண்ணகி தன் நெஞ்சுக்குள் இருந்த மொத்த தைரியத்தையும் ஒரு புள்ளியில் திரட்டி, ஒருவித தவிப்போடு வெண்பாவின் கைகளைப் பற்றிக் கொண்டார்.
"என் பையன் பரமனுக்கு உன் பொண்ணு நகையை கல்யாணம் பண்ணித் தரியா வெண்பா?" என்று கேட்கும்போதே அவர் குரல் தழுதழுத்தது.
"சத்தியமாச் சொல்றேன்... என் பையன் பரமனுக்கு எந்தக் கெட்ட பழக்கமும் கிடையாது. வீட்டுக்கு வெளியில போனா ஒரு வாய் தண்ணி கூட அடுத்த இடத்துல குடிக்க மாட்டான்; குடும்பத்தை அத்தனை கண்ணும் கருத்துமாப் பார்த்துப்பான். இப்போதைக்கு எங்ககிட்ட கையை மீறி பெருசா எதுவும் பணம் காசு இல்லைதான்... எதிர்காலத்துல உன் பொண்ணை அவன் ஒரு ராணி மாதிரி வச்சுப் பார்த்துப்பான். எந்தக் குறையும் இல்லாம, ஒரு சொட்டுக் கண்ணீர் வராமல் பார்த்துப்பான். நகை எங்க வீட்டுக்கு மருமகளா வந்தா என் பையன் அவ்வளவு சந்தோஷமா இருப்பான் அப்படின்னு நான் ஆணித்தரமாக நம்புறேன்.
அந்த ஒத்த நம்பிக்கையில தான் உன்னைத் தேடி ஓடி வந்தேன்" என்று தயங்கி தயங்கி கூறினார்.
ஆனால், தன் மகனின் நெஞ்சுக்குள் பல காலமாய் ஒளிந்து கிடக்கும் அந்த ஆழமான காதலைப் பற்றி மட்டும் அவர் இப்போது வெளிப்படையாகச் சொல்ல விரும்பவில்லை.
வெண்பாவிற்கு இது ஒரு கணம் பேரிடியாகவும், அடுத்த கணமே பெரும் அதிர்ச்சியாகவும் இருந்தது.
ஆனால் அந்த அதிர்ச்சிக்கு நடுவே, ஒரு மெல்லிய நீரோடையாக மனதிற்குள் பெரும் சந்தோஷமும் ஊற்றெடுத்தது.
இதுவரை எத்தனையோ மாப்பிள்ளைகள் வந்து பார்த்துச் சென்றாலும், வெண்பா யாரையும் முழுமனதாக நம்பி தன் மகளைக் கொடுக்க துணியவில்லை. ஆனால், பரந்தாமனை அவர் காலங்காலமாகவே ஒரு முழுமையான மனிதராக நம்பினார்.
'என்ன பெருசா காசு, பணம், பதவி, படிப்பு வேண்டிக் கிடக்கு? என் புள்ளையோட நிம்மதியும் சந்தோஷமும் தான் எனக்கு உலகத்திலேயே ரொம்ப முக்கியம். என் புள்ளையை ராணி மாதிரி தாங்குனா போதும்; அவளை ஒருநாளும் அழ வைக்காமப் பார்த்துக்கிட்டா போதும். அவளோட பாரத்தைச் சொந்த சுமையா நினைத்துத் தன் தோளில் தூக்கிச் சுமக்கிறவனா இருந்தா போதும்.
பரந்தாமன் கண்டிப்பா என் பொண்ணை நல்லா பார்த்துப்பான். இதுவரைக்கும் எங்களுக்காக ஓடி வந்தவர் பரந்தாமன் மட்டும்தான். எந்தப் பலனும் எதிர்பார்க்காம, கூப்பிட்ட நேரத்துக்குக் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து எங்களுக்கு உதவி செஞ்ச நிஜமான மனுஷன்' என்று மனதிற்குள் ஆயிரம் எண்ணங்கள் ஓட,
வெண்பா தன் கணவரின் புகைப்படத்தை ஏறிட்டுப் பார்த்தார். அந்த நொடி, புகைப்படத்திலிருந்து ஒரு வாடாத ரோஜா மலர் மெல்ல நழுவி கீழே விழுந்து, அவர் சம்மதத்தை ஒரு தெய்வீக ஆசீர்வாதமாகத் தெரிவித்தது.
வெண்பா நீண்ட நேரம் எந்தப் பதிலும் சொல்லாமல் மௌனமாக இருக்கவும், கண்ணகி தன் நம்பிக்கைச் சுவர் உடைந்து போவதாக உணர்ந்து வேதனைப்பட்டார்.
'ஒரு சின்ன நம்பிக்கையில் வந்துவிட்டோம், ஆனால் இது நம் தகுதிக்கு மீறிய ஆசையோ' என்று அவர் மனம் கூசத் தொடங்கியது.
"எனக்குத் தெரியும் வெண்பா... நான் ரொம்பத் தகுதிக்கு மீறி ஆசைப்பட்டுட்டேன். ஆனாலும் என் மனசு கேட்காம வந்துட்டேன், அது என் தப்புதான். நகைக்குக் கண்டிப்பா ஒரு நல்ல வரன் அமையும். அவளோட அந்தத் தங்கமான மனசுக்கு அவ எங்கிருந்தாலும் தீர்க்க சுமங்கலியா நல்லா இருப்பா" என்று வாழ்த்திவிட்டு, கண்கள் கலங்க அவர் அந்த இடத்தை விட்டு மெல்ல எழுந்து நின்றார்.
"ஆமா அண்ணி, என் பொண்ணு நல்ல மனசுக்கு அவ கண்டிப்பா நல்லா இருப்பா. ஆனா அவ எங்கேயோ போய் நல்லா இருப்பான்னு நான் ஒருபோதும் நினைக்கல; உங்க வீட்டுல அவ ரொம்ப நல்லா இருப்பான்னு நான் ஆழமா நம்புறேன். உங்க பையன் அவளைத் தன் உயிராப் பார்த்துப்பான்னு எனக்குத் தெரியும்" என்ற வார்த்தைகளைக் கேட்டதும் கண்ணகிக்கு ஒரு நிமிடம் பூமி சுற்றியது போல் இருந்தது.
"வெண்பா…!" என்று குரல் கரகரக்க அழைத்தவருக்கு, அந்த நெகிழ்ச்சியில் அழுகையைத் தவிர வேறு வார்த்தைகள் வரவில்லை.
"பரந்தாமனை விட ஒரு சிறந்த ஆண்மகன் என் பொண்ணுக்கு புருஷனா அமைய முடியாது அண்ணி. படிப்பு, வசதியை எல்லாம் தாண்டி குணம் தான் ஒரு மனுஷனுக்கு முக்கியம். அந்தப் பண்புல பரந்தாமன் ஒரு பெரிய கோடீஸ்வரன். ஆனா அண்ணி, உங்களுக்கு நல்லாத் தெரியும் நகை இருக்கிற வேலையை பத்தி... பரந்தாமன் பாதி நாள் தனியா தான் இருக்கணும்..." என்று வெண்பா தயக்கமாக எதைச் சொல்கிறார் என்பதை கண்ணகி சட்டென்று புரிந்து கொண்டார்.
"என் மகன் எந்தத் தப்பும் பண்ண மாட்டான் வெண்பா. அதை மீறி அவன் ஏதாவது தப்பு செஞ்சா, அவனை நான் உயிரோடவே வச்சிருக்க மாட்டேன். அவனை நான் அந்த அளவுக்கு நல்ல முறையில ஒழுக்கமா வளர்த்து இருக்கேன்.
சபளத்துக்கு அலையுற ஆள் என் பையன் கிடையாது. அவனும் கௌரவமா வாழணும்னு தான் ஆசைப்படுறான். கண்டிப்பா நம்பி உங்க பொண்ணைக் கொடுங்க. உங்க நம்பிக்கையை என் பையன் நூறு மடங்கு காப்பாத்துவான்" என்று தன் மகன் மீது வைத்திருந்த உறுதியான நம்பிக்கையை அவர் ஆணித்தரமாகக் கூறினார்.
"பரந்தாமனுக்கு இந்த விஷயம் தெரியுமா? அவருக்குச் சம்மதமா?" என்று வெண்பா கேட்டார்.
கண்ணகியோ மனதிற்குள், ‘இந்த விஷயம் மட்டும் அவனுக்குத் தெரிஞ்சது, இதைவிட ஒரு சந்தோஷம் அவன் வாழ்க்கையில கிடையாது. இதைவிட ஒரு பெரிய பொக்கிஷத்தை அவனுக்குக் கொடுக்கவே முடியாது. அவ்வளவு சந்தோஷப்படுவான். என் புள்ள பொத்தி வச்ச காதல் இது; மனசுக்குள்ளேயே செதுக்கி வச்ச சிலையான காதல் இது’ என்று நினைத்துக் கொண்டவர்,
வெளியில், "அவனுக்குச் சம்மதம் தான். நீங்க நகைக்கிட்ட கேட்டுட்டுச் சொல்லுங்க, நம்ம சீக்கிரமா கல்யாண ஏற்பாடுகளைப் பண்ணலாம். ஆனா நகைக்கிட்ட கண்டிப்பா ஒரு வார்த்தை கேட்டுடுங்க" என்றார்.
"நான் என்ன கேக்குறது? நீங்களே சொல்லுங்க" என்று சொல்லி வெண்பா உடனே நகையைத் தொலைபேசியில் அழைத்தார். தன் தாயின் எண்ணைக் கண்டதும் சந்தோஷமாக அழைப்பை ஏற்ற நகை,
"அம்மா எப்படி இருக்கீங்க?" எனக் கேட்டாள்.
"நல்லா இருக்கேன் நகை, நீ நல்லா இருக்கியா?"
"நல்லா இருக்கேன்மா."
"நகை, உனக்கு நான் ஒரு மாப்பிள்ளை பார்த்துட்டேன். உனக்கு எப்ப லீவு கிடைக்கும்னு மட்டும் சொல்லு, அப்போ நம்ம கல்யாணத்தை வச்சுக்கலாம்" என்று வெண்பா அதிரடியாக கூற, அந்தச் செய்தியை முழுமையாக தடுக்க முடியாமல் நகை தடுமாறிப் போனாள்.

Author: Vishakini
Article Title: செதுக்கிய சிற்ப பாவையே - 26
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.