சிற்ப பாவை - 28
அங்கே, டியூட்டி முடிந்து வெளியே வந்தவள், அவன் மெசேஜ் பார்த்தாள். அதில் தெரிந்த கண்ணியத்தைக் கண்டு அவள் இதழோரம் ஒரு மெல்லிய புன்னகை அரும்பியது.
அவளுக்கும் அவனிடம் பேச வேண்டும் என்று கைகள் பரபரத்தன. ஆனால், "நானே கால் பண்றேன்" என்று அவன் கேட்டிருந்த மரியாதைக்கு மதிப்பளித்து,
"நான் இப்போ ஃப்ரீயா தான் இருக்கேன், சொல்லுங்க" என்று பதில் அனுப்பினாள். அவளிடத்தில் பயமோ பதற்றமோ இல்லை; மாறாக ஒருவித நிதானமும் உரிமையும் இருந்தது.
'அவன் வேலை முடிந்ததும் பொறுமையாக அழைக்கட்டும்' என்று போனைப் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு, அமைதியான மனநிலையுடன் அவள் நடக்கத் தொடங்கினாள்.
ஆனால், அவள் பாக்கெட்டிற்குள் இருந்த போன் உடனே சிணுங்கியது.
யாராக இருக்கும் என்று எடுத்துப் பார்த்தவள், திரையில் 'பரந்தாமன்' பெயரைக் கண்டதும் வெட்கத்தில் பூரித்துப் போனாள்.
அங்கே, அவள் போனை எடுப்பதற்குள் அவன் இதயம் குதிரை வேகத்தில் ஓடியது.
'பரமு... ஒழுங்கா பேசுடா. நீ பாட்டுக்கு பயத்துல எதையாவது உளறி வச்சிராத!' - தனக்குத்தானே தட்டிக்கொடுத்து தைரியம் சொல்லிக் கொண்டான். ஆனாலும், நெற்றி முழுவதும் வியர்வை வழிந்து கொண்டிருக்க, அவன் நிலைமை மிகவும் பரிதாபமாக இருந்தது.
சாதாரணமாக அழைப்பை ஏற்று நகை காதில் வைத்தாள். அவனோ மறுமுனையில் பேசத் தெரியாமல் மௌனமாக உறைந்து போயிருந்தான். அந்த மௌனத்தை நகையே உடைத்தாள்.
"சொல்லுங்க..." கம்பீரமாகவும் தெளிவாகவும் ஒலித்தது அவள் குரல்.
"நான்... நான் பரந்தாமன் பேசுறேன்..." திக்கித் திணறியபடி, செத்த குரலில் அவனிடமிருந்து வார்த்தைகள் வெளிவந்தன.
"எனக்குத் தெரியுது, சொல்லுங்க. நான் நகைதான் பேசுறேன். நீங்க பயப்படாமச் சாதாரணமாப் பேசலாம்."
அவளின் அந்தப் பக்குவமான வார்த்தைகள் அவன் இதயத்திற்குள் ஒரு பெரிய பாரத்தை இறக்கி வைத்தது போலிருந்தது.
"நகை... என்னை கல்யாணம் பண்ணிக்க உனக்கு உண்மையாவே சம்மதமா?" தன் சந்தேகத்தை நேராகவே கேட்டுவிட்டான்.
"அது என்ன 'உண்மையாகவே' சம்மதமா? புரியலையே?"
"நீ நல்லா படிச்சவ... பெரிய கவர்மெண்ட் உத்தியோகத்துல இருக்க. நான் படிக்காதவன், ஒரு சாதாரண மெக்கானிக்... ஆட்டோ டிரைவர். நமக்கும் உனக்கும் ஏணி வச்சாலும் எட்டாதே..."
"நான் கவர்மெண்ட் உத்தியோகத்துல இருந்தாலும், இங்கே சிலருக்குக் கட்டுப்பட்டுதான் வாழணும் பரமு. நீங்க சாதாரண மெக்கானிக்னு சொல்றீங்க... ஆனா நீங்க ஒரு ஆட்டோவுக்கு முதலாளி, ஒரு மெக்கானிக் ஷெட்டுக்கே முதலாளி! நீங்க யாருக்கும் பயந்தோ, யார் கட்டளைக்கோ கீழ்ப்படிந்து வேலை செய்யணும்னு அவசியம் இல்லை. நீங்க எந்த விதத்திலும் குறைந்து போயிடல, புரிஞ்சுதா?"
அவளுடைய அந்தத் தெளிவான வார்த்தைகள் அவனுக்குள் ஒரு புதிய விசுவரூபத்தை உண்டாக்கியது. தன் குறை என்று தான் எதை நினைத்தானோ, அதையே அவள் நிறையாகச் சொன்னபோது அவன் நெஞ்சம் விம்மியது.
நகை மற்றவர்களைப் போல யோசிப்பவள் அல்ல என்பதைப் புரிந்து கொண்டான். ஊர் உலகம் எதைச் சொல்லி அவனை ஒதுக்குமோ, அதையே ஒரு மணிமகுடமாக அவனுக்குச் சூட்டி அழகு பார்த்தாள் அவள்.
காதல் கொண்ட அந்தத் திருட்டுப் பயலின் உள்ளம் குளிர்ந்து போனது. தன் காதலியின் வார்த்தைகளைக் கேட்டு, அவளுடைய பார்வையில் தான் இவ்வளவு உயர்ந்தவனா என்கிற பெருமிதத்தில் அவன் மனம் சிலிர்த்தது.
"ரொம்ப நன்றி நகை. நான் இதை உண்மையாவே எதிர்பார்க்கவே இல்லை."
"நன்றி எல்லாம் சொல்லாதீங்க. நான் உங்ககிட்ட ரொம்ப முக்கியமான ஒரு விஷயம் பேசணும்."
"பேசு நகை... எதுவா இருந்தாலும் பேசு."
"எனக்கு உங்களைக் கல்யாணம் பண்ணிக்கிறதுல முழு மனசோட சம்மதம். ஆனா, ஒரு விஷயம்... எனக்கு ஒரு தங்கச்சி இருக்கா. அவளைப் பார்த்துக்க வேண்டியது என் முழுப் பொறுப்பு. அதே மாதிரி அம்மாவும் என்னுடைய பொறுப்புதான். அவங்களையும் நான் தான் கடைசி வரைக்கும் பார்த்துக்கணும்."
பரமுவின் குரல் இப்போது இன்னும் அழுத்தமாக ஒலித்தது. "நகை, நமக்குக் கல்யாணம் ஆனாலும் உன்னுடைய சம்பளத்தை நான் ஒரு பைசா கூடக் கேட்க மாட்டேன். உன்னுடைய கடமைகள் எல்லாம் இனிமே என்னுடைய கடமைகள். உன்னுடைய பொறுப்புகள் எல்லாம் என்னுடைய பொறுப்புகள். நமக்குக் கல்யாணம் ஆன பிறகு உன் தங்கச்சி 'கவி' நம்மளுடைய மூத்த பொண்ணா இருப்பா. ஒரு அப்பா தன் பொண்ணுக்கு என்ன செய்யணுமோ, அதை என் பொண்ணுக்கு நான் செய்வேன். கவியைப் பெத்த மகளா வளர்த்து, கல்யாணம் பண்ணிக் கொடுத்து, எல்லா நல்லது கெட்டதையும் பார்க்கிறது இனி என்னுடைய வேலை.
அதே மாதிரி அத்தை... அவங்களுக்கு நம்மளை விட்டா யாருமில்லை, நமக்கும் அவங்களை விட்டா யாரும் கிடையாது. நம்ம கூடத்தான் அவங்க இருப்பாங்க. ஒருவேளை மாப்பிள்ளை வீட்ல இருக்க கூச்சப்பட்டாங்கன்னா, நாம போய் அவங்க வீட்டிலேயே இருக்கலாம்; எனக்கு எந்தக் கூச்சமும் கௌரவமும் கிடையாது. நான் அவங்களுக்கு ஒரு நல்ல மகனா இருப்பேன்.
இதெல்லாம் வெறும் வார்த்தைக்காகவோ வசனத்துக்காகவோ நான் சொல்லல நகை... என் மனசுல இருக்குற உண்மையைச் சொல்றேன். என்னை நீ முழுசா நம்பலாம். உனக்கு ஒரு காலத்திலும் எந்தத் துரோகமும் தொந்தரவும் நான் கொடுக்க மாட்டேன்."
மறுமுனையில் நகை அமைதியானாள். அவள் விழிகளில் கண்ணீர் திரண்டு கன்னத்தில் வழிந்தது. இது போன்ற ஒரு தைரியமான, நேர்மையான, மனதிற்கு நெருக்கமான வார்த்தைகளைத்தான் அவள் இத்தனை காலம் எதிர்பார்த்தாள். முதல் முறையாக அந்தப் பாதுகாப்பு உணர்வு அவனிடமிருந்து அவளுக்குக் கிடைத்தது.
"சரிங்க... நான் இப்போ ஆபீஸ் ரூம் போய் லீவு கேட்டுட்டு வர்றேன். நீங்க கல்யாண வேலைகளைக் கவனிங்க. ஆடம்பரமா எதுவுமே பண்ண வேண்டாம்; வீண் செலவுகள் நமக்கு வேண்டாம். அதே மாதிரி நீங்க தேவையில்லாம எங்கேயும் கடன் வாங்கிடாதீங்க. கடன்காரனாகி நம்ம வாழ்க்கையை ஆரம்பிக்க வேணாம். சிம்பிளா இருந்தாலே போதும். உங்களால முடிஞ்ச அளவுக்குப் புடவையும் தாலியும் மட்டும் வாங்கிடுங்க... அது போதும் எனக்கு."
பரமன் இப்போது பாரமெல்லாம் இறங்கிய நிம்மதியோடு, தன் காதலின் வெற்றியை எண்ணி மனம் விட்டுச் சிரித்தான். அந்தச் சிரிப்பில் அத்தனை நிம்மதி இருந்தது.
"நான் கஷ்டப்பட்டு, வியர்வை சிந்திச் சம்பாதித்த பணத்துல உனக்குத் தேவையான எல்லாத்தையும் நானே முன்னாடி நின்னு வாங்கித் தர்றேன் நகை. ஆடம்பரம் பண்ணி ஊரே மெச்சுற அளவுக்கு நான் ஒன்னும் பெரிய வசதியான ஆள் இல்லை... ஆனா, நம்ம காதலுக்குக் குறை வைக்காத அளவுக்கு ஒரு சிம்பிளான கல்யாணத்தை நாம பண்ணிக்கலாம். நீ முதல்ல லீவு கேட்டுட்டு எனக்கு ஒரு வார்த்தை சொல்லு," என்று அவன் சொல்லும்போதே அவனது குரலில் அத்தனை பொறுப்பும், பாசமும் இழைந்தோடியது.
"நான் இப்போ ஆபீஸ் ரூமுக்கு தான் போய்க்கிட்டு இருக்கேன். இன்னும் ஒரு மணி நேரத்துல நானே உனக்குக் கால் பண்றேன்," என அவன் சொல்ல,
பிரிய மனமே இல்லாமல் இருவரும் தொலைபேசி அழைப்பை துண்டித்தனர். அந்த நிசப்தத்திலும் அவர்களின் இதயத் துடிப்பு ஒருவருக்கொருவர் கேட்டுக் கொண்டுதான் இருந்தது.
நகை, படபடக்கும் இதயத்தோடு ஆபீஸ் ரூம் சென்று விடுமுறை கேட்டவளுக்கு, அது ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது. அவளுக்கு இன்னும் 20 நாட்கள் விடுமுறை கிடைத்திருந்தது. அந்தச் சந்தோஷமான செய்தியை முதலில் தன் தாயிடம் கூடச் சொல்லத் தோன்றவில்லை. தன் உலகமான அவனுக்கே மீண்டும் அழைத்தாள்.
நகையின் குரலில் இப்போது ஒரு புதுவிதமான உயிர்ப்பும், துள்ளலும் இருந்தது.
"இன்னும் இருபதே நாள்ல நான் வீட்டுக்கு வந்துருவேன்! இந்த 20 நாள்ல நீங்க எல்லா ஏற்பாட்டையும் பார்த்துப் பார்த்துப் பண்ணிடுங்க... நான் வந்தவுடனேயே நம்ம கல்யாணத்தை வச்சுக்கலாம்," என்று அவள் ஆசைகளை வார்த்தைகளாகக் கொட்டினாள்.
"கண்டிப்பா நகை! நீ சொன்ன மாதிரியே நான் எல்லாம் பார்த்துப் பண்ணிடுறேன். ஆனா இந்தப் புடவை மட்டும் உனக்கு எப்படி வேணும்னு இப்பவே சொல்லிடு... இல்லைன்னா நான் கடைக்குச் போயிட்டு உனக்கு வீடியோ கால் பண்றேன், நீயே செலக்ட் பண்ணு," என்றான் அவன் ஆசையாக.
அதற்கு அவளோ, "வேண்டாம்... உங்களுக்கு என் மேல இருக்குற பிரியத்துல எந்தப் புடவை பிடிச்சிருக்கோ அதையே எடுத்துடுங்க. நீங்க ஆசையா எடுத்துக் கொடுக்குற எதையும் நான் அவ்ளோ சந்தோஷமா கட்டிப்பேன்," என்றாள் மென்மையாக.
அதற்கு மேல் என்ன பேசுவதென்று தெரியாமல் இருவருமே மௌனத்தில் கரைந்தனர். அந்த அமைதி ஆயிரம் கவிதைகளைச் சொன்னது. கண்ணகி தன் மகனைத் தேடி வந்தபோது, அவன் முகத்தில் வழிந்த அந்தத் தனித்துவமான வெட்கத்தையும், அவன் பேசிக் கொண்டிருந்த விதத்தையும் வைத்தே அவன் நகையுடன் தான் பேசுகிறான் என்பதைப் புரிந்து கொண்டார்.
"அவன் சந்தோஷத்தைத் தொந்தரவு செய்ய வேண்டாம்" என்று நினைத்தபடி புன்னகையோடு மெல்ல வீட்டிற்குள் சென்றார்.
"ஆண்டவா! நல்ல முறையில என் மகனுக்குக் கல்யாணம் முடியணும். எந்தக் குறையும் இல்லாம, என் மகனும் நகையும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கிட்டு நல்லா வாழணும். ரெண்டு பேருமே மனசளவுல ரொம்ப நல்லவங்க... அவங்களுக்கு நீதான் துணையா இருக்கணும்," என்று அந்தத் தாய் கடவுளிடம் மனமுருகி வேண்டிக் கொண்டார்.
வெண்பா, சுடரின் வீட்டைத் தேடி வந்திருந்தார்.
"அம்மா!" என்றபடி ஆனந்தத் துள்ளலோடு ஓடி வந்த சுடர், தன் அம்மாவையும் தங்கையையும் இறுக அணைத்துக் கொண்டாள்.
"வாங்க சம்மந்தி... வாங்க அத்தை!" என்று அந்த வீடே ஒரு திருவிழா கோலம் பூண்டது போல அவர்களை வரவேற்றது.
சுடருக்கு இப்போது மெல்ல மெல்ல வயிறு தெரிய ஆரம்பித்திருந்தது. அந்தத் தாய்மையின் பூரிப்பு அவள் முகத்தில் ஒரு தனி அழகைத் தந்தது.
"சுடர், வீட்டுக்கு வரலாம்ல?" என்று வெண்பா இரண்டு முறை கேட்டும் சுடர் கிளம்பவில்லை. தன் கணவனைப் பிரிந்து ஒரு நிமிடம் கூட அவளால் இருக்க முடியாது என்பதால் அவள் தாய் வீட்டிற்குச் செல்ல மறுத்துவிட்டாள். அதேபோல், தன் மாமியாரும் தன்னை ஒரு தாயைப் போலப் பார்த்துக் கொள்வதால், அவள் மனம் எதற்கும் ஏங்காமல் கணவனுடன் அங்கேயே தங்கிவிட்டாள்.
"சுடர், உடம்பு எப்படி இருக்கு? செக்கப் எல்லாம் நல்லபடியாக முடிஞ்சுதா?" என்று வெண்பா அக்கறையாகக் கேட்க,
"எல்லாம் நல்லபடியா முடிஞ்சுதுமா. குழந்தையும் நல்லா இருக்கு, நானும் ஆரோக்கியமா இருக்கேன்," என்று சுடர் புன்னகைத்தாள்.
"அண்ணி, இந்த மோர் எடுத்துக்கோங்க" என்று சம்மந்தி கொண்டு வந்து நீட்ட, கவினும் வெண்பாவும் அதை வாங்கிப் பருகினர்.
அப்போது கவின், "கவி மாமா உனக்காக என்ன வாங்கி வச்சிருக்கேன் பாரு!" என்று உற்சாகமாகக் கத்தியபடி ஒரு பெரிய டிராலியை தள்ளிக் கொண்டு வந்தான்.
"உள்ள என்ன இருக்கு மாமா?" என்று குழந்தைத்தனமான ஆசையோடு ஓடச் சென்று அவள் அதைத் திறந்து பார்த்தாள். உள்ளே அவளுக்குப் பிடித்தமான ஒரு மாய உலகமே ஒளிந்திருந்தது.

Author: Vishakini
Article Title: செதுக்கிய சிற்ப பாவையே - 28
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.