சிற்ப பாவை - 5
ஆனந்தியும் இன்று ஒரு முடிவோடுதான் சென்றாள். வீட்டிற்குள் நுழைந்ததும் படாரென்று கதவை அடைத்தவள், "என்னடா வேணும் உனக்கு? என்ன சொல்லணும்னு நினைக்கிறயோ அதைச் சொல்லு," என்று ஆங்காரமாக கத்தினாள்.
அவன் தந்தையோ அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற முன்யோசனையோடு பொறுமையாகக் காத்திருந்தார்.
அவருக்கு நன்றாகத் தெரியும், ஆனந்தி இந்தத் திருமணத்திற்கு ஒருபோதும் ஒத்துக்கொள்ள மாட்டாள் என்று.
"அம்மா, இப்ப எதுக்கு இப்படி சத்தம் போடுற? நான் நகையைக் காதலிக்கிறேன். இது இப்பத் தொடங்கிய காதலல்ல, சின்ன வயசுல இருந்தே எனக்கு அவளைப் பிடிக்கும். எனக்குக் கல்யாணம்னு ஒன்னு நடந்தால், அது அவ கூடத்தான் நடக்கணும். அவளை மாதிரி ஒரு இயல்பான, அமைதியான பெண்ணை என்னால் வேற எங்கேயும் பார்க்க முடியாது. நீ போய் மாமா கிட்ட பேசு," என்றான் உறுதியாக.
அவன் பேசி முடித்த அடுத்த நிமிடம், ஆனந்தியின் கை விரல்கள் அவன் கன்னத்தில் 'பளார்' என்று இறங்கின.
அவனோ தன் கன்னத்தைப் பொத்தியபடி, அதிர்ச்சியில் உறைந்து போய் தாயை பார்த்தான். அவள் கண்களில் தெரிந்த அந்த ஆவேசம் அவனை நிலைகுலையச் செய்தது.
"பார்க்குறதுக்கு எல்லாம் நல்லா பளபளன்னு தான் இருக்கும், ஆனா உள்ளார ஒன்னும் பண்டம் கிடையாதுடா! என் அண்ணன் கிட்ட போய் பொண்ணு கேட்கணுமா வேணாமான்னு முடிவு பண்ண வேண்டியது நான். அதெல்லாம் நான் தான் பண்ணுவேன். அதுக்குள்ள இந்தத் துறைக்கு என்ன அப்படி ஒரு அவசரம் வந்துடுச்சோ?" என்று ஆனந்தி எகத்தாளமாக தாடையைத் தூக்கிப் பேசினாள்.
பிரனேஷ் மெல்லத் தன் அதிர்ச்சியில் இருந்து மீண்டு, "அம்மா... நம்ம மாமா பொண்ணு தானேம்மா அது? அதுக்கு ஏன் இப்படி ரியாக்ட் பண்றீங்க?" என்று மெல்லிய குரலில் கேட்டான்.
ஆனந்தி விடவில்லை. "நம்ம மாமா பொண்ணா இருந்தா மட்டும் போதுமா? பொண்ணைக் கட்டிக்கும் போது என் அண்ணன் சீர் செனத்தி ன்னு என்ன பண்ணுவான்? ஒன்னும் கிடையாது! அவன் வீட்ல இன்னைக்கு ஆக்கிப் போட ஒரு பிடி அரிசி கூடக் கிடையாது... இதுல அவன் வீட்டில் போய் பொண்ணு எடுக்க சொல்றியா? போடா அங்கட்டு!"
பிரனேஷ் மொத்தமாக ஆடிப்போனான். தன் தாயின் உள்ளத்தில் இவ்வளவு கணக்குகள் ஓடிக்கொண்டிருக்கும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. ஆனந்தியின் நிஜமான குணம் இதுவரை பிரனேஷுக்குத் தெரியாது. ஆனால், அவளுடைய கணவன் அதை நன்றாக அறிவார். அதனால்தான், இந்தத் திருமணம் ஒருபோதும் நடக்கப்போவதில்லை என்பது அவருக்கு முன்பே தெரியும். வீணாகப் பேசி என்ன பயன் என்று அவர் அமைதியாக இருந்தார்.
இருந்தாலும் மனசாட்சி உறுத்தவே, "என்ன ஆனந்தி இப்படிப் பேசுற? பணமா முக்கியம்? அவங்க நல்ல குடும்பம். உன் அண்ணன் உனக்கு எவ்வளவு செஞ்சிருக்காரு? இன்னைக்கு இந்த வீட்டுல நாம அனுபவிக்குற சுக போகம் எல்லாம் யார் கொடுத்தது? இந்த சோபால இருந்து, அந்தப் பிரிட்ஜ் வரைக்கும் எல்லாமே அவர்கிட்ட இருந்து பிடுங்கிட்டு வந்தது தானே! அவரை நீங்க எல்லாரும் இப்படிப் பிச்சிப் பிடுங்கித் திங்காம இருந்தா, அவர்கிட்டயும் இன்னைக்கு நாலு காசு மிஞ்சியிருக்கும். அவர் பொண்ணுக்குத் தேவையானதைச் செஞ்சிருப்பாருல்ல?" என்று ஆதங்கப்பட்டார்.
"யோவ்! வாயை மூடுய்யா! அப்புறம் அசிங்கமா ஏதாவது சொல்லித் தொலைச்சிடுவேன். இந்தத் தாலி ஏறும் கல்யாணம் இங்க நடக்காது. பிரனேஷ்க்கு நான் வேற ஒரு நல்ல பொண்ணு பார்த்து வச்சிருக்கேன். என் பிரண்டோட பொண்ணு அவ," என்று வெடுக்கென பேசினாள் ஆனந்தி.
"என்னால முடியாதுமா... எனக்கு வெண்பாவைத் தான் ரொம்பப் பிடிச்சிருக்கு," என்று பிரனேஷ் முணுமுணுத்தான்.
"நகைய கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைச்சா, உன் கையில ஒரு குண்டுமணி தங்கம் கூட மிஞ்சாதுடா. இதுவே நான் பார்த்திருக்கப் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா... நீ பிசினஸ் பண்ணணும்னு ஆசைப்பட்டியே, இந்த ஊரே அண்ணாந்து பார்க்குற அளவுக்குப் பெரிய பிசினஸ்மேன் ஆகலாம். நாளைக்கு நீ ஒரு 40 பேருக்கு வேலை கொடுக்குற தகுதியில வந்து நிப்ப. அதுக்கு ஏத்த மாதிரி அந்தப் பொண்ணு சொத்து சுகத்தோட வருவா. என் அண்ணன் பொண்ணு என்னத்தை எடுத்துட்டு வருவா?"
பிரனேஷ் அப்படியே மௌனமானான். அவன் தாயின் வார்த்தைகள் மெல்ல மெல்ல அவன் காதுகளுக்குள் நஞ்சாக ஏறத் தொடங்கின. மகனை ஆனந்தி தன் வசப்படுத்தி விட்டார் என்பது அவர் கணவனுக்குப் புரிந்துவிட்டது. இவன் காதலெல்லாம் சும்மா காற்றில் பறக்கும் வெறும் காற்றாடி தான் என்று அவருக்குத் தெரியாதா என்ன?
மகனின் மௌனத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட ஆனந்தி, "வேற யாரும் கிடையாது, வாசவி தான் உனக்கு நான் பார்த்திருக்கிற பொண்ணு. அவங்க வீட்ல 100 பவுன் நகை போடுறாங்க, கைமேல 20 லட்சம் வரதட்சணை கொடுக்குறாங்க. இது மட்டும் இல்லாம, பின்னாடி தெருவுல இருக்குற அந்த ரெண்டு அடுக்கு மாடி வீட்டை அவ பேர்ல எழுதித் தந்துடுறாங்க. கார், பைக், ஸ்கூட்டின்னு வண்டி வாகனமா குமிக்கிறாங்க. ஒரு வீடே கொள்ளாத அளவுக்குச் சீர்வரிசை செய்றாங்க. இப்ப நீ காதலிக்கிற பொண்ணு என்னடா கொண்டு வருவா? ஒரு பத்து பவுன் நகை கூட அவளால கொண்டு வர முடியாது!
நீ தனியா ஆபீஸ் வச்சு பிசினஸ் பண்ணணும்னு கனவு காணுற... அப்ப இந்த 100 பவுனும், 20 லட்சமும் உனக்குக் கை கொடுக்குமா இல்லையா? என்ன தாண்டா நினைச்சுட்டு இருக்க நீ உன் மனசுல?"
பிரனேஷ் யோசிக்கத் தொடங்கினான். சிறு வயதிலிருந்தே அவன் மனதில் முளைத்து ஆழமாக வேரூன்றி இருந்த காதலை விட, இப்போது அந்தப் பணமும் நகையும் அவன் கண்களை மறைத்தன. அந்த வசதியான வாழ்க்கை அவன் மனதை அலைபாய வைத்தது.
'இவன் காதலெல்லாம் வெறும் களிமண்ணுக்குச் சமம். நல்ல காலம்... அந்த பொண்ணு இவன்கிட்ட வந்து மாட்டிக்கலையே!' என்று நினைத்துக் கொண்டே அவன் தந்தை வீட்டை விட்டு வெளியேறினார்.
"பிரனேஷ், நான் எப்பவும் உன் நல்லதுக்குத்தான் சொல்வேன். இனிமேல் நான் என் அண்ணன் வீட்டுப் பக்கம் போக மாட்டேன். நீ நல்லா நிதானமா யோசிச்சு ஒரு முடிவு எடு. வாழ்க்கையில் செட்டில் ஆகணும் னு நினைச்சா வாசவியைக் கல்யாணம் பண்ணிக்கோ. இல்லையா, என் அண்ணன் கிட்ட என்னால பேச முடியாது... நீ இப்படியே கல்யாணம் பண்ணிக்காமக் காலத்தைக் கடத்திக்கோ," என்று கறாராகச் சொல்லி விட்டு நகர்ந்தாள் ஆனந்தி.
குழப்பமான மனநிலையில் அவன் தன் அறைக்குள் சென்று கதவைச் சாத்திக் கொண்டான்.
அங்கே, வெண்பாவோ இவனைப் பற்றிய நினைவுகளுடன் கட்டிலில் புரண்டு கொண்டிருந்தாள். 'தன் தந்தை நகை கொண்டு வர முடியாது' என்று தன் அத்தை தன்னை ஏளனம் செய்வதையும், அந்த நகைக்கு ஆசைப்பட்டு தன்னையே மறுக்கத் துணியும் காதலனின் நிஜமான முகத்தையும் அறியாத பேதையாக அவள் காதலின் மயக்கத்தில் இருந்தாள்.
அவள் ஒன்றைத் தெளிவாக மறந்துவிட்டாள். தன் தந்தை இப்போது திருமணத்தைச் சிறப்பாகச் செய்து வைக்கும் நிலையில் இல்லை என்பதையும், தான் சம்பாதித்துத் தன் தந்தையை ஒரு நல்ல நிலைக்குக் கொண்டு வர வேண்டும் என்று தான் எடுத்த அந்த வைராக்கியமான முடிவையும் அவளும் அந்த நிமிடத்தில் மறந்திருந்தாள்.
ஆனால், உறவுகளைப் பற்றியும் அவளது வைராக்கியத்தைப் பற்றியும் உரக்கச் சொல்ல ஒரு பெரும் மாற்றம் நிகழப்போகிறது என்பது இப்போது அந்தச் சின்னஞ்சிறு குடும்பத்திற்குத் தெரியவில்லை.
"வெண்பா... வெண்பா..." என்று உற்சாகக் குரலோடு காத்தவராயன் உள்ளே நுழைந்தார்.
"என்னங்க, குரல் இவ்வளவு தூரம் கேட்குது?" என்று எட்டிப் பார்த்த வெண்பா, கணவன் கையில் இருந்த பையை ஆசையோடு பார்த்தாள். மகள்களும் தந்தை குரல் கேட்டு ஓடி வந்தனர்.
"கவி குட்டி, இதோ பாருடா... அப்பா மீன் வாங்கிட்டு வந்திருக்கேன். அதுவும் உனக்கு ரொம்பப் பிடிச்ச கெண்டை மீன்!" என்று சொல்ல, அந்தச் சிறுமி துள்ளிக் குதித்தாள்.
"மீன் ஏதுங்க திடீர்னு?" என்று ஆச்சரியமாக கேட்டாள் வெண்பா.
"வரும்போது ஒரு இடத்தைப் பார்த்தேனா, அங்க குளத்துல மீன் பிடிச்சுட்டு இருந்தாங்க. கிலோ வெறும் 100 ரூபாய்னு சொன்னாங்க. ரொம்பச் சீப்பா கிடைக்குதேன்னு ஒரு 3 கிலோ அப்படியே அள்ளிக்கிட்டு வந்துட்டேன். நம்ம வீட்ல அசைவம் சமைச்சு எத்தனை நாள் ஆச்சு? பிள்ளைகளும் ஆசைப்படுமேன்னு வாங்கிட்டு வந்துட்டேன்."
பிள்ளைகள் ஒரு காரணம் என்றாலும், வெண்பாவிற்கு அந்தச் சுடச் சுட கெண்டை மீன் வறுவல் என்றால் உயிர். திருமணமான காலத்திலிருந்தே அவளுக்காக வாரத்தில் ஒரு முறையாவது மீன் வாங்கி வந்து, அவரே சமைத்துக் கொடுப்பது அவரது வழக்கம். ஆனால், கடந்த சில வருடங்களாக மாதத்திற்கு ஒரு முறை வாங்குவதே ஒரு பெரிய போராட்டமாகப் போய்க்கொண்டிருந்தது.
"வெண்பா, நீ இதை அப்படியே கிளீன் பண்ணு. நான் போய் டிரஸ் மாத்திட்டு வந்து சமையலைத் தொடங்குறேன்," என்றார் காத்தவராயன்.
அதற்குள் மகள்களும் வெங்காயம், தக்காளி என்று ஆர்வமாக நறுக்க தொடங்கினர். வெண்பா புளியை ஊற வைத்துவிட்டு மீனைச் சுத்தம் செய்ய, காத்தவராயன் கத்தியை எடுத்து லாவகமாக மீனைத் துண்டாக்கினார்.
"வெண்பா, நீ போய் உட்காருமா. பொண்ணுங்களோட சேர்ந்து டிவி பாரு. நானே எல்லாத்தையும் செஞ்சு முடிச்சுட்டு எடுத்துட்டு வர்றேன்," என்று அன்பு கட்டளையிட்டார். எந்தக் கூச்சமும் இல்லாமல், மீனை வறுத்துக் கொண்டே சாதத்தையும் வடித்துத் தயார் செய்தார் அவர்.
ஒரு மணி நேரத்தில் வீடே மணக்கும் படி சமையலை முடித்து, ஹாலுக்கு எடுத்து வந்தார்.
"வாங்க... வாங்க... எல்லாரும் சாப்பிடலாம்!" என்று உற்சாகமாக அழைத்தபடி, ஐந்து தட்டுகளை வைத்தார். பொரித்த மீனில் மகள்களுக்கு இரண்டிரண்டு துண்டுகள் வைத்தவர், மனைவி தட்டில் மட்டும் நான்கு துண்டுகளை ஆசையாக வைத்தார். தனக்கு ஒரே ஒரு துண்டை மட்டும் வைத்துக் கொண்டார்.
வெண்பாவின் கண்கள் கசிந்தன. 'இப்படி ஒரு கணவன் யாருக்குக் கிடைப்பார்? எனக்குக் கடவுள் கொடுத்த வரம் இவர்' என்று நெகிழ்ந்தபடியே, அவர் சமைத்த உணவை ருசித்து சாப்பிட தொடங்கினாள்.
மனைவி ரசித்துச் சாப்பிடுவதை ரகசியமாக ரசித்தபடி அவரும் சாப்பிடத் தொடங்கினார். மகள்களுக்கு முதலில் அன்போடு ஊட்டி விட்டார். எப்பொழுதும் அவர்கள் ஒன்றாகச் சாப்பிடும் போது மகள்களுக்கு ஊட்டிவிட்டு, கடைசியாக மனைவிக்கு ஒரு இரண்டு வாய் ஊட்டி விட்டு தான் அவர் உணவை முடிப்பார்.
அவர் ஊட்டி விடும் போது, வெண்பா அவர் விரல்களைச் சேர்த்துச் சுவைக்க, அவருக்குக் கூச்சமாக இருந்தாலும் முகத்தில் அதைக் காட்டாமல் அவளைப் பார்த்து ஒரு குறும்பான புன்னகையோடு கண்ணடித்துவிட்டு சாப்பிடத் தொடங்கினார்.
இத்தகைய இன்பமான குடும்பமே பலரின் கனவு வாழ்க்கை. பணமிருந்தால் மட்டும் சந்தோஷமும் இன்பமும் தானாக வந்துவிடாது. பணம் குறைவாக இருந்தாலும், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து அன்பு பாராட்டும் இடத்தில் அந்த இன்பம் ஆயுள் வரை நிலைத்திருக்கும்.