செதுக்கிய சிற்ப பாவையே - 9

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Vishakini

Moderator
Staff member
Nov 7, 2025
1,634
6,876
113
சிற்ப பாவை - 9

"ரொம்ப அவசரம்தான் அம்மா... நான் வந்து எல்லாத்தையும் சொல்றேன்," என்றாள்.

வெண்பா தன் கணவனை நிழல் போலக் காத்துக் கொண்டார்.

பள்ளியில் இருந்து தங்கைகளும் வந்து சேர்ந்தனர். "அம்மா... அக்கா எங்க?" எனக் கேட்டனர். "அக்கா ஏதோ வேலையா போயிருக்காம்மா, வந்துடுறேன்னு சொல்லிருக்கா," என்றார் வெண்பா.

அதற்குள் அந்த இரு பெண்களும் வீட்டு வேலைகளைப் பகிர்ந்து கொண்டனர். சுடர் சமையலைச் செய்ய, கவி வீட்டைச் சுத்தப்படுத்தினாள். இரவு மிகத் தாமதமாகத்தான் நகை வீடு திரும்பினாள். தங்கைகளும் தாயும் தூங்காமல் காத்திருந்தனர். உள்ளே சென்று பார்த்தாள், தந்தை மருந்தின் வீரியத்தால் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்.

சுடர் செய்திருந்த பருப்பு சாதத்தை நால்வரும் ஊறுகாய் தொட்டுச் சாப்பிட்டு விட்டு, தந்தை அருகிலேயே படுத்துக் கொண்டனர்.

மறுநாள் காலை தந்தை கண் விழித்ததும், "சுடர், கவி, அம்மா... எல்லாரும் இங்க வாங்க, உங்ககிட்ட ஒன்னு பேசணும்," என்று அழைத்தாள் நகை. அவளது குரலில் இருந்த உறுதி அனைவரையும் பதற்றமடையச் செய்தது.

"அம்மா... நான் வேலைக்குக் கிளம்ப போறேன்."
காத்தவராயன் காதுகளில் இந்தச் சொற்கள் விழுந்தன.

"என்ன வேலைக்கும்மா?" என்று வெண்பா குரல் தழுதழுக்கக் கேட்டார்.
"நான் ஆர்மிக்கு போகப் போறேன். வேலைக்குத் தேர்வாகிட்டேன் அடுத்த வாரம் இங்கிருந்து கிளம்பணும்... அசாம் போறேன்," வெறும் அறிவிப்பாக மட்டுமே அவள் குரல் ஒலித்தது.

பெற்றவளுக்கு நெஞ்சு குமுறியது. மகள் ஒரு வேலைக்குச் செல்கிறாள் என்ற மகிழ்ச்சியா? அல்லது பாதுகாப்பில்லாத போர்முனைக்கு தன் மகள் செல்கிறாளே என்ற பயமா? என்று தெரியாமல் அந்தத் தாய் சிலையென உறைந்து நின்றார்.

இன்று இந்த குடும்பத்தின் நிலைமை தலைகீழாகி விட்டது. ஒரு காலத்தில் கம்பீரமாக இருந்த குடும்பம், இன்று தன் மூத்த மகளின் வருமானத்தை எதிர்பார்த்து வாழ வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு விட்டது. மகளைத் தடுக்கவும் முடியவில்லை, அதே சமயம் அவளை அனுப்பவும் மனமில்லை. அந்தத் தவிப்பில் காத்தவராயன் வாய் திறந்து எதுவும் பேச முடியாமல், கண்கள் கலங்கி வழிய அப்படியே ஒரு கற்சிலை போல சமைந்து போய் படுத்திருந்தார்.

தன் தந்தையின் கண்களில் தேங்கிய நீரை மென்மையாகத் துடைத்தவள், "அப்பா... நான் இருக்கேன் பா... கலங்காதீங்க. நான் உங்களை, அம்மாவை, என் செல்லத் தங்கச்சிகளை எல்லாரையும் கண்ணுக்குள்ள வச்சு பத்திரமா பாத்துப்பேன். இப்போதைக்கு இந்த வேலையை விட்டா வேற வேலை எனக்குக் கிடைக்காதுப்பா. இது கவர்மெண்ட் வேலை. இதற்காக கடந்த சில மாசமா நான் எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கேன்னு எனக்கு தான் தெரியும். எக்ஸாம், பிஸிக்கல் டெஸ்ட்ன்னு ஒவ்வொன்னும் அவ்வளவு சவாலா இருந்துச்சு.

ஆரம்பத்துலேயே இதப்பத்தி சொன்னா நீங்க பதட்டப்படுவீங்கன்னுதான், 'பாஸ் பண்ணிட்டுச் சொல்லலாம்'னு மறைச்சுட்டேன். அந்தத் தெய்வ புண்ணியத்துல எல்லாத்துலயும் தேறிட்டேன்ப்பா.

அடுத்த வாரம் ட்ரைனிங் பீரியட் ஆரம்பிக்கப் போகுது, நான் கிளம்பியே ஆகணும். தயவுசெஞ்சு இப்படி எல்லாரும் அழுதுகிட்டே இருக்காதீங்க..."

தொடர்ந்து தன் தாயின் கைகளைப் பிடித்துக் கொண்டவள், "அம்மா... இனிமே நீங்கதான் மனசைத் தேத்திக்கிட்டு தங்கச்சிகளை பாத்துக்கணும். நாம அழுதுகிட்டே இருக்கறதால இங்க எதுவும் மாறிட போறது கிடையாது. நம்ம கஷ்டத்தைப் பார்த்து சிரிக்கிறவங்க, நாம அழுதா நிறுத்தவா போறாங்க? 'மூணு பொம்பள புள்ளைங்களைப் பெத்துட்டு இவன் என்ன பண்ணப் போறான்'னு காத்தவராயனைப் பார்த்து ஊர் பேசுற பேச்சை நான் மாத்தி எழுதணும்மா. என்னால் முடியும்னு நீங்களும் நம்புங்க..." என்று வைராக்கியமும் கண்ணீரும் கலந்த குரலில் பேசினாள்.

அவள் பேசியதைக் கேட்டு வெண்பா தன் மகளை மார்போடு அணைத்துக் கொண்டு கதறி அழுதாள். அக்காவின் பாசத்திலும் தைரியத்திலும் கரைந்து போன தங்கைகளும் அவளைக் கட்டிக்கொண்டு விம்மித் தீர்த்தனர்.

எதற்கெடுத்தாலும் பயப்படக்கூடிய அந்தப் பெண், இரவு நேரத்தில் அக்கம் பக்கம் தனியாகச் செல்லவே அஞ்சும் அந்தப் பேதை, இப்போது எப்படி இவ்வளவு பெரிய ராணுவ வேலையைச் செய்யப் போகிறாள்? என்று உள்ளுக்குள் கலைக்குத் திகிலாக இருந்தது. ஆனாலும், அவளைத் தடுக்கும் நிலையில் அங்கு யாருமே இல்லை.

ஒருநாள் எதார்த்தமாக செய்தித்தாள்களில் வந்த விளம்பரத்தை பார்த்துவிட்டு, யாருக்கும் தெரியாமல் விண்ணப்பித்திருந்தாள். அவளுடைய நல்ல நேரம், அவள் போட்டித் தேர்விலும் உடல் தகுதித் தேர்விலும் முழுமையாக வெற்றி பெற்றாள்.

ஒரு வார காலம் கவியும் சுடரும் தங்கள் படிப்பை ஓரங்கட்டிவிட்டு, அக்காவுடனேயே பொழுதைக் கழித்தனர். காத்தவராயன் படுத்த படுக்கையாகக் கிடந்தாலும், தன் மகள்களுடன் செலவழித்த அந்தத் தருணங்களை ஒரு தவத்தைப் போல அனுபவித்தார்.

"ஒரு ஆண் பிள்ளையைப் பெத்திருந்தா கூட நான் இவ்வளவு சந்தோஷமா இருந்திருப்பேனான்னு தெரியலையே... ஆனா இந்தப் பொண்ணுங்களுக்கு என்னால ஒரு துரும்பைக் கூட எடுத்துப் போட முடியலையே..." என்று ஒவ்வொரு இரவும் ஊமை அழுகை அழுதார்.

நாட்கள் நகர, ஒரு வாரமும் ஓடி முடிந்தது. அக்கம் பக்கத்தில் யாரிடமும் மூச்சு விடவில்லை. தங்களுக்கு இக்கட்டான நேரத்தில் உதவி செய்த அந்தப் பின் வீட்டு அங்கிளிடம் மட்டும் விவரத்தைச் சொல்லிவிட்டு, இரவு 11 மணியளவில் வீட்டை விட்டு மெல்ல வெளியேறினாள்.

"நீங்க யாரும் கீழே வந்து என்னை வழி அனுப்ப வேண்டாம். அப்புறம் மறுபடியும் எல்லாரும் அழுவீங்க. நானே போயிட்டு வர்றேன்... நீங்க மேலேயே இருங்க," என்று அவர்களின் கால்களைத் தொட்டு வணங்கிவிட்டு, தன் மூட்டை முடிச்சுகளுடன் இருளில் வெளியே வந்தாள்.

சரியாக அந்தத் தெருவில் ஒரு சவாரியை முடித்துவிட்டு, ஆட்டோவை நிறுத்தித் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தான் பரந்தாமன்.

இவள் கனத்த பையுடன் தனியாக வெளியே வருவதைக் கண்டதும் அவன் புருவங்கள் சுருங்கின. "என்னம்மா இந்த நேரத்துல? வாங்க... நானே உங்களை இடத்துல கொண்டு போய் விடுறேன்," என்றான்.

திடீரென கேட்ட அந்த அறிமுகமான குரலில் நிமிர்ந்து பார்த்தவள், பரந்தாமனை ஆட்டோவில் கண்டதும் ஒரு நிம்மதிப் பெருமூச்சுடன் ஏறி அமர்ந்தாள்.

ரயில் நிலையத்திற்கு அவளை அழைத்துச் சென்றவன், அவள் கையில் ஒரு தண்ணீர் பாட்டிலையும், வழியில் பசிக்குமே என்று சில தின்பண்டங்களையும் திணித்தான். அதோடு விடாமல் தன் பாக்கெட்டில் இருந்த 2000 ரூபாயை எடுத்து நீட்டினான்.

"இது கடனா இருக்கட்டும்மா... நீங்க வேலைக்குப் போய் திரும்பி வரும்போது குடுங்க. போற இடத்துல உங்களுக்கு ஏதாவது அவசரம்னா தேவைப்படும். பத்திரமா போயிட்டு வாங்க," என்று ஒரு நண்பனைப் போல கூறிவிட்டு ஆட்டோவை எடுத்துக் கிளம்பினான்.

ஆனால், அவளுடைய ராணுவப் பயிற்சி அவள் நினைத்ததை விட கடினமாக இருந்தது. பூவைப் போல மென்மையாக வளர்ந்த அந்தப் பெண்ணுக்கு, அதிகாலையிலேயே எழுந்து மைதானத்தைச் சுற்றி ஓடுவதும், சுட்டெரிக்கும் வெயிலில் கடினமான உடற்பயிற்சிகளை மேற்கொள்வதும் நரகமாக தெரிந்தது.

ஒவ்வொரு இரவும் உடல் வலியால் துடித்தபடி, தலையணையில் முகம் புதைத்து அழுவாள். ஆனால், அந்த வலியை விடத் தன் குடும்பத்தின் வறுமையும், அப்பாவின் நிலையும் அவளை இன்னும் பலமாக போராடத் தூண்டின.

"நான் தோற்கக் கூடாது... எப்படியாவது இந்த ட்ரைனிங்கை முடிச்சுட்டு தான் ஊருக்குத் திரும்புவேன்," என்று தனக்குத் தானே தைரியம் சொல்லிக் கொண்டாள்.

வீட்டுக்குத் தினமும் போன் செய்ய மாட்டாள். அம்மாவோ தங்கச்சிகளோ அழுதால், தன் மனசு தளர்ந்து விடுமோ என்கிற பயம் அவளுக்குள் இருந்தது. மாதத்தில் இரண்டு முறை மட்டுமே பேசுவாள். மற்ற நேரங்களில் அந்த அங்கிள் மூலமே செய்திகளைத் தெரிந்து கொள்வாள்.

அதற்குள் கடன் கொடுத்தவர்கள் வீட்டின் முன்பு வந்து சண்டை போட்டனர்.

வெண்பா செய்வதறியாது திகைக்க, பின் வீட்டு அங்கிள் அங்கே வந்தார்,

“எதுக்கு இப்படி வந்து பிரச்சனை பண்ணிட்டு இருக்கீங்க?”

“சார் எங்களுக்கு மட்டும் ஆசையா? வட்டி பணம் கூட தரல. எங்களுக்கு எங்க பணம் வேண்டும்..” என ஒருவன் எகிறிக் கொண்டிருந்தான்.

வெண்பா கண்ணீர் வடிக்க,

அங்கில் தன் போனில் நகை எண்ணுக்கு அழைத்தார்.

“அம்மாடி நீயே சொல்லு.” என்றவர் போனை அவர்களிடம் கொடுத்தார்,

“நீங்க வீட்டுக்கு வந்து சண்டை போட வேண்டிய அவசியமே கிடையாது. இந்த மாதத்தில் இருந்து வட்டி சரியா வரும். ஒவ்வொருத்தரா அசலும் கொடுத்துடுவேன். சின்ன பொண்ணுங்க இருக்க வீட்டு முன்னாடி கூச்சல் போடாதீங்க. நான் வேலையில் சேர்ந்தது உங்களுக்கு தெரியும்.”

“உன்னை எப்படி நம்புவது?”

“நீங்க நம்பிக்கை வச்சு தான் ஆகணும். பணம் சரியா உங்க கைக்கு வரும். கொஞ்சம் டைம் கொடுங்க.”

“சரி பா இவளோ நாள் வெயிட் பண்ணிட்டோம். இந்த பொண்ணு தான் சொல்லுதே. வாங்க எல்லோரும் போவோம்.” என சங்கர் அனைவரையும் அழைத்துக்கொண்டு கிளம்பினார்.

பயிற்சிக் காலமாக இருந்தாலும் அவளுக்குக் கிடைத்த முதல் மாத வருமானத்தை அப்படியே தன் தந்தையின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைத்தாள். தன் கைச் செலவிற்கு வெறும் ஆயிரம் ரூபாயை மட்டும் வைத்துக் கொண்டாள். சுடர்தான் அந்தப் பணத்தை வங்கியில் இருந்து எடுத்து வந்து அம்மாவிடம் கொடுத்தாள்.

வெண்பா அந்தப் பணத்தைக் கையில் வாங்கியதும், "நம்ம பொண்ணு சம்பாதிச்ச காசு..." என்று விம்மித் தணிந்தார். அந்தப் பணத்தைக் கண்டு அவர்கள் சந்தோஷம் படவில்லை; இந்த மாத வட்டிப் பணத்தை அடைக்கலாமே என்கிற நிம்மதி மட்டுமே மிஞ்சியது.

பணம் வந்தது எப்படியோ கடன்காரர்களுக்குத் தெரிந்துவிட்டது. உடனே வீட்டு வாசலில் வந்து குதித்துவிட்டனர். வெண்பா தைரியத்தை வரவழைத்துக் கொண்டு வெளியே வந்து நின்றார்.

"கொஞ்சம் கொஞ்சமா அசலைக் கொடுத்துடுறேன். பொம்பளைப் பிள்ளைங்க இருக்கிற வீடு, இப்படி வாசல்ல வந்து சத்தம் போடாதீங்க. உங்களுக்குப் பணம் வேணும்னா போன் பண்ணுங்க, நானே கீழ வந்து கொடுத்துடுறேன். இல்லன்னா அக்கவுண்ட் நம்பர் கொடுங்க, மாசாமாசம் நானே போட்டு விடுறேன்," என்றார் உறுதியாக.

அப்போது சங்கர் என்பவர் முன்னால் வந்து, "உங்க பெரிய பொண்ணு புத்திசாலிம்மா... அவளே எங்களுக்கு போன் பண்ணி அக்கவுண்ட் நம்பர் வாங்கிட்டா. இனிமே மாசம் மாசம் அவளே பணத்தைப் போட்டுடுவேன்னு சொல்லிட்டா. இனிமே நாங்க இங்க வந்து சத்தம் போட மாட்டோம். எங்களுக்கும் எங்க பணத்துக்குப் பாதுகாப்பு வேணும், அவ்வளவுதான். காத்தவராயன் கிட்ட எவ்வளவோ சொன்னேன், தங்கச்சி களுக்காக இவ்வளவு கடன் வாங்காதன்னு... மனுஷன் கேட்கவே இல்லை," என்றார்.

வெண்பா அமைதியாக அவர்களை அனுப்பி வைத்தார். தன் மகள் என்ன வேலை செய்கிறாள் என்று அக்கம் பக்கத்தாருக்குத் தெரியாது. ஒருநாள் கடைக்குச் சென்றபோது எதிர் வீட்டுப் பாட்டி நக்கலாகக் கேட்டார்,
 

Author: Vishakini
Article Title: செதுக்கிய சிற்ப பாவையே - 9
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Like
Reactions: Magizh kutty