செந்தமிழ்
பதிவு எண்: STN89.
கண்ணம்மா.
அத்தியாயம் 2.
நூற்பு மற்றும் நெசவுத் துறையில் தனக்கெனத் தனி முத்திரையைப் பதித்து, இன்றளவும் சிறந்து விளங்குகின்றது [ஐயா கைத்தறி ஆடையகம்..]
தந்தையார் உயிராய் நேசித்துச் செய்த நெசவுத் தொழிலை
அய்யாதுரை தன் திறமையாலும், விடாமுயற்சியாலும், அயராத உழைப்பாளும் விரிவாக்கி, ஐயா கைத்தறி ஆடையகத்தை நிறுவினார்.தன் இணைக்கு உற்றத் துணையாய் நின்று, குடும்பத்தோடு தொழிலையும்கணவனுடன் இணைந்து செம்மைப் படுத்தியவர்தான் அய்யாதுரையின் சரிபாதி அமுதவல்லி. மூத்தவர்தம் கனவினைச் சிதையவிடாமல் இத்தொழிலைச் சீரும் சிறப்புமாக நடத்தி வருபவன், அய்யாதுரை அமுதவல்லியின் தவப்புதல்வன் நிலவன். இக்காலத்திற்கேற்பத் தொழில் சார்ந்த அணுகுமுறைகளை மாற்றிப், பல கிளைகளை நிறுவிவரும் நிலவன், குடும்பத்தினரின் செல்ல மகன். இளையவள் மீரா அய்யாதுரை குடும்பத்தின் இளவரசி. இயல்பிலேயே ஆடை வடிவமைப்பில் அதீத ஆர்வம் கொண்ட மீரா, தனது ஆர்வத்தை முறையானக் கல்வியால் மெருகேற்றித், தமையனுடன் இணைந்து தொழிலை கவனித்து வருகிறாள். அவளது காதல் கணவன் வசந்தன்.
மீரா, வேண்டுமே வேண்டுமென்று ஒற்றைக் காலில் நின்று வசந்தனைத் தன்னவனாக்கிக் கொண்டதெல்லாம் தனிக் கதை. வசந்தனும் ஒன்றும் சளைத்தவனல்ல; தன் பயங்களைக், குழப்பங்களைத், தயக்கங்களை எல்லாம் தகர்த்து, அவனை வசமிழக்கச் செய்ததோடு,
அவனது இதயத்தைக் களவாடிச் சென்றக் காரிகையைக் கறைகானா நேசத்தோடுத் தாங்கி வருகிறான். புகழ்ப்பெற்றக் கல்லூரி ஒன்றில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றி வரும் வசந்தன் ஒரு சமூக ஆர்வலரும் கூட. இவர்களது காதலுக்குப் பரிசாகக் கிடைத்தவள்தான் மலரினி குட்டி. இதோ இப்போது அவர்களின் நேசத்தில் கனிந்த இளைய முத்தான ஆண் குழந்தையைப் புன்னகையுடன் கையில் ஏந்தியிருந்தான் வசந்தன்.இன்று இவனுக்குத்தான் பெயர் சூட்டு விழா.
வாடிக்கிடந்த அவனது வாழ்வில் வசந்தமாய் வந்தத் தன்னவளை நினைக்க நினைக்க வசந்தனின் விழிகள் பணித்தது. வளைக்கரம் ஒன்று அவனது தலையில் நன்கென்று கொட்டு வைத்ததில் திடுக்கிட்டு நிமிர்ந்தவன், அந்த வளைக்கரத்தை வளைத்துப் பிடித்தான்.
"அடேய்!" என்ற மெல்லியக் கூச்சலுடன் வசந்தனின்மீது மோதி நின்றாள் திருமதி மீரா வசந்தன். குழந்தையைத் தன் ஒரு கையால் மார்போடு அனைத்துப் பிடித்தவன். மீராவை மற்றொரு கையால் அணைத்திருந்தான். வசந்தனின் செய்கையில், தன் இடுப்பில் அமர்ந்திருந்த மலரினியைக், கீழே நழுவவிடாமல்அவளைச் சரியாக இருத்திவிட்டு தன்னைச் சமன்படுத்திக் கொண்ட மீரா, கொண்டவனின் கைக்குள் அடங்கிநின்றாள்.
"என்ன வாத்தி அதிசயமா காதோல் நதி எல்லாம் பொங்குது?" என்று அவனது விலாவில் இடித்து வினவியவளின் நெற்றி முட்டினான் ஆடவன்.
"அச்சோ அம்மா இது இந்த மீராவுக்கு வாச்ச வசந்தன் தானான்னு குழப்பமா இருக்கே?' வசந்தனின் கையில் நறுக்கென்று கிள்ளிய மீரா அவனுக்குப் பதில் அவளே மெல்லிய அலறலுடன் கூறினாள்.
"அடியே! கிள்ளு வாங்கினது நான்டி. உன்னோட பெரிய பெரிய நகத்தை வச்சு என்னக் கிள்ளுனது மட்டும் இல்லாம என்னவோ நீ கிள்ளு வாங்கினது மாதிரி அலறவும் செய்ற?" என்று கோபமாகக் கேட்பதுபோல் பாசாங்கு செய்தவன், அவனவளின் உச்சியில் அழுத்தமாக இதழ்ப் பதித்தான்.
ஆணவனின் ஸ்வரிசத்தில், அது கடத்திய நேசத்தில் நெக்குருகி நின்றாள் நங்கை.
"அப்பா எங்களுக்கு முத்தம் எங்க?" என்று சினுங்கலுடன் வினவியத் தன் செல்வமகளின் கன்னத்தை வாஞ்சையாகத் தடவியவன், "உங்களுக்கு இல்லாத முத்தமா டா செல்லம்?"
எனக் கூறியவாறு தன் மகளின் கன்னத்தில் முத்தமிட்டான் வசந்தன். "அப்பா மீசை முடி குத்துது." என்று கூறி கிளுக்கிச் சிரித்த மலரினியோ "தம்பி குட்டிக்கும் முத்தம் குடுங்கப்பா" எனக் கூற, வசந்தன் குனிந்து தனது கையில் இருந்த மகனின் நெற்றியில் முத்தமிட்டான்.
"போதும் அத்தான் போதும். நிப்பாட்டுங்க. இப்படியே போச்சுன்னா உங்களோடப் பாச நதில நாங்க எல்லாம் மூழ்கியேப் போயிருவோம். தெய்வமே! எனக்கு நீச்சல் வேற அடிக்கத் தெரியாதே நான் என்ன பண்ணுவேன்?" எனப் பாவமாகக் கூரியவளின் காதுக்கு அருகே குனிந்து, "எதை எதையோ பேசி என்னத் திண்டாட வைக்கிற இந்த உதட்டை என்னவாவது செய்யணுமே: என்ன செய்யலாம்" என்றவனின் வார்த்தைகளில் வாயைப் பிளந்தாள் மீரா. "கடவுளே! என்ற புருஷனுக்கு உண்மையிலேயே என்னவோ ஆகிப்போச்சு!" எனக் கூறியவள் வசந்தனின் தோள்வளைவிலிருந்து நகரமுயல,
"அடியே மீரா இன்னும் உள்ள என்ன செய்றீங்க? வசந்தன கூட்டிட்டு வரச் சொல்லித்தானே உன்னை அனுப்பி வச்சேன்: சீக்கிரம் பையனத் தூக்கிட்டு வாங்க. எல்லோரும் உங்களுக்காகத்தான் காத்திருக்கோம்.". தனது வெண்கலக் குரலில் ஆளுமையாகச் சொல்லிக்கொண்டே இவர்கள் நின்றிருந்த அறையின் கதவினைத் திறந்தார் பர்வதம் பாட்டி.
"இந்தா வந்துட்டோம் பாட்டிமா" என்று பெண்ணவளின் வாய்மட்டும்தான் பதிலுரைத்துக் கொண்டிருந்ததே தவிர, அவள் வசந்தனை விட்டு ஒரு அடி நகரவில்லை. ஏனோ மீராவுக்குமே அக்கணம் மனம் நெகிழ்ந்து போயிற்று. எத்தனையோ பயங்களுக்கும், குழப்பங்களுக்கும், விடையறியாக் கேள்விகளுக்கும் மத்தியில் துவங்கியத் தங்களது வாழ்க்கையைத், தாங்களேத் தங்களால் முடிந்த அளவிற்கு சீரமைத்து, நல்லறமிக்க இல்லறத்தின் சுவையை, அதன் இதத்தை, அது தரும் பலத்தையெல்லாம் ருசித்துவிட்டக் கர்வம் அவளின் முகத்தை ஒளிரச் செய்தது..
அறைக்குள் இவர்களை அழைக்க விரைந்த பர்வதம் பாட்டி ஒருகணம் அப்படியே நின்றுவிட்டார். அவரது கண்ணெதிரேக் கவிதையாய் நிற்கும் அக்குடும்பத்தைக் காணத் தெவிட்டவில்லை அவருக்கு.
வசந்தனின் ஒரு கை மகனை அணைத்துப் பிடித்திருக்க, அவனது மற்றொரு கையோ மீராவை அணைத்திருக்கப், பளிர் புன்னகையுடன் கணவனிடம் வம்பு செய்துக் கொண்டிருந்த மீராவின் இடுப்பில் மலரினி பாப்பா.
அகம் மகிழ அக்குடும்பத்தை விழி எடுக்காமல் ரசித்துக்கொண்டிருந்த பர்வதம் பாட்டி, தனதருமைச் செல்வங்களின்மீது தன் கண்ணேப் பட்டுவிட்டாலும் என்று அஞ்சியவர், அவர்களின் அருகில் சென்று, நால்வரின் கன்னத்தையும் வழித்து நெட்டிமுறித்தார். அதன்பிறகே அவரால் இயல்பாக இருக்கமுடிந்தது.
பர்வதம் பாட்டியைப் பின்தொடர்ந்து வந்த தெய்வானை ஆச்சியும் இக்காட்சியைக் கண்டு எல்லையில்லா ஆனந்தம் கொண்டார். தன் பேரனை உயிரினும் மேலாய் நேசித்த அந்த முதிய பெண்மணிக்கு இதைவிட வேறென்ன வேண்டும்? "எதுவுமே வேண்டாம். என் ராசாவோட வாழ்க்கை இதேபோல எப்பவும் சிறப்பா இருக்கணும்." என்று இறைவனிடம் நெஞ்சுருகப் பிரார்த்தனை செய்தது அந்த முதிய உள்ளம்.
"மீரா நேரமாயிருச்சுப் பாரு கண்ணு. இப்படிக் குழந்தைகளை எங்ககிட்டக் கொடுத்துட்டு நீங்க சீக்கிரம் தயாராகி வாங்க." எனக் கூறிய பர்வதம் பாட்டி, வசந்தனின் கையிலிருந்தக் குழந்தையை வாங்கிக்கொண்டு வெளியேறினார்.
தெய்வானை ஆச்சியைப் பார்த்ததும் 'ஆச்சி!' என்றவாறு மீராவின் இடுப்பிலிருந்து மலரினி தெய்வானை ஆச்சியிடம் தாவ, முகம் கொள்ளா புன்னகையுடன் தனது கொள்ளுப் பேத்தியை வாரி அணைத்துக் கொண்டு இருவரையும் விரைவில் வருமாறுப் பணித்துவிட்டு, மலரினியுடன் தோட்டத்தை நோக்கி நகர்ந்தார்.
"வாங்க வாத்தி போவோம்…" என்றவாறு அவனது கையைப் பிடித்தவளை இழுத்துத் தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டான் வசந்தன். "வாத்தி?"தவிப்பும் கேள்வியுமாக மீராவின் குரல் வெளிவர, அவளது கன்னங்கள் இரண்டையும் கரங்களில் ஏந்தியவன் , மிக்க மிக்க நன்றி செல்லம்மா:" எனக்கூரி மீண்டும் மங்கையின் நெற்றியில் அழுத்தமாய் முத்தமிட்டான் ஆடவன். எத்தனை முயன்றும் அவனது குரல் தழுதழுத்தது.
"அச்சோ என்ன?" என்று எதையோ கேட்க வந்தவளின் உதட்டில் விரல் வைத்துத் தடுத்தவன் , இந்த நன்றியைத் தவிர இப்போதைக்கு என்கிட்ட வேற வார்த்தைகள் இல்ல செல்லம்மா. அந்த அளவுக்கு மனசு நிறைஞ்சு போயிருக்கு. கொஞ்சநேரம் இப்படியே இரு அது போதும் எனக்கு." என்றவன் மீண்டும் அவளைத் தனது இறுகிய அணைப்பிற்குள் கொண்டுவந்திருந்தான். மீராவும் கோழிக் குஞ்சாய் வசந்தனின் மார்பில் தஞ்சமானாள். நிமிடங்கள் கடக்க அவளைத் தன்னிடமிருந்து விலக்கியவன், அவளுடன் அறையை விட்டு வெளியேறினான்.
தெய்வானை ஆச்சியை வால்ப்பிடித்துக் கொண்டுச் சென்ற மலர்ப் பாப்பா, தூரத்தில் கைகளைக் கோர்த்தவாறு நடந்துவரும் நிலவனையும், செந்தமிழையும் கண்டுவிட்டு அவர்களிடம் ஓடினாள். நிலவனின் கரத்தின்மீது தனது கையை வைத்த அந்தத் தருணத்திலேயே உழன்று கொண்டிருந்தத் தமிழ் நிலவனின் போக்கிற்கெல்லாம் அவனுடன் இழுப்பட்டாள். "மாமா! தமி: ஹ் அத்தை" என்று கூவியவாறு அவர்களின் கால்களைக் கட்டிக்கொண்டாள் மலரினி.
தன் கால்களைக் கட்டிக்கொண்டு தன்னிடம் செல்லம் கொஞ்சி நிற்கும் தன் ஆசை மருமகளைத் தூக்கித் தோளில் அமர்த்திக் கொண்ட நிலவன், செந்தமிழுடன் தோட்டத்தை நோக்கி முன்னேறினான். இத்தனைக்குப் பிறகும் கோர்த்திருந்த இருவரது கைகள் மட்டும் தங்களது இணையை விட்டுக் கனமும் பிரியாமல் பிணைந்தேக் கிடந்தன.
படீர் என்ற சத்தத்தில் நினைவலைகள் அறுபட, மெள்ளச் சுயம் பெற்றாள் செந்தமிழ். காற்றின் வேகத்தில் அலைமோதிக் கொண்டிருந்த ஜன்னல் கதவுகளைப் பூட்டிவிட்டுப், பின் கட்டில் இறங்கி மலர் இல்லம் நோக்கி நடந்தாள் பெண். நிலவனின் நினைவால் மின்னிக்கொண்டிருந்தப் பாவையின் வதனம், எண்ணங்களின் ஆதிக்கத்தில் இறுகிப்போயிற்று. யாரோ இதயத்தில் கண்ணாடித் துண்டுகளைச் செருகும் உணர்வு.
அந்த அழகியச் சோலையும், மங்கையின் மனதை ஆற்றுப் படுத்தவ்யலாத கையாலாகாதத்தனத்தோடு அவளை வேடிக்கைப் பார்த்து நின்றது.. தன் உயிர்ப் பசையை மொத்தமாகத் தொலைத்துப், பொலிவிழந்தக் கற்கூடாய் நின்றுகொண்டிருந்தது மலர் இல்லம் அவ்வீட்டினரைப் போலவே...
வீடே மயான அமைதியில் மூழ்கிக் கிடக்க, வீட்டின் நடுக்கூடத்தில் கலைந்த ஓவியமாய் கணவனின் தோள் சாய்ந்து, வற்றாத ஜீவநதியாய்க் கன்னங்களில் வழியும் கண்ணீரோடு எதையோ வெறித்துக் கொண்டிருந்தாள் மீரா. அவளை அனைத்திருந்த வசந்தனின் முகமும் வேதனையில் சுருங்கிக் கிடந்தது. சிவப்பேரி இருந்த அவனது விழிகள், அவனது உள்ளக்கிடங்கின் குமுறல்களைப் பறைசாற்ற முயன்று கொண்டிருந்தன. ஆனபோதும் மனைவியின் தலையை வசந்தனின் கைகள் விடாமல் வருடிக் கொடுத்துக் கொண்டிருந்தது. அந்த வருடல் கொண்டவளை கொஞ்சமாவது தேற்றிவிடாதா என்ற நப்பாசையில்..
பர்வதம் பாட்டியும், தெய்வானை ஆச்சியும் குழந்தைகள் மூவரையும் தங்களது மடியில் கிடத்தி உறங்கவைத்துக் கொண்டிருந்தனர். அவர்களது உள்ளங்களும் படைத்தவனைக் கேள்விக்கணைகளால் துளைத்தெடுத்துக் கொண்டிருந்தது. கூடத்தின் ஒரு மூலையில் விட்டத்தை வெறித்தபடி அமர்ந்திருந்தார் அமுதவல்லி.
அவரது கண்களிலும் கண்ணீர். உலர்ந்துக் கிடந்த அவரது உதடுகள் அரற்றுவதை மட்டும் நிறுத்தவேயில்லை. கட்டிடத்தைத் தாங்கிப் பிடிப்பதற்கென்று அமைக்கப்பட்டிருந்தத் தூண்கள், இன்று அவ்வீட்டு மனிதர்களைத் தாங்கிக்கொண்டன.
கணத்துக்கிடந்த மனதையும் உடலையும் நம்பப் பயந்து, அனைவரும் கூடத்துத் தூண்களே தஞ்சமென அவற்றில் தங்களைச் சாய்த்துக் கொண்டனர்.
மலர் இல்லத்தை நெருங்க நெருங்க செந்தமிழின் கால்கள் வலுவிழந்தன. இதயம் ஏகத்துக்கும் படபடத்தது. அவள் வீட்டு வாயிலை அடைந்ததும், இதற்குமேல் முடியவே முடியாது என்று அவளது கால்கள் அங்கேயே வேரூன்றி நின்றுவிட்டன. தனது செவிகளில் மோதி மீண்டும் மீண்டும் எதிரொளித்த அந்தக் குரலில்
அதிலிருந்து கசிந்தப் பெயரிடவியலா உணர்வொன்று சிலிறென்று செந்தமிழின் உடலைத் தாக்கியது. அசையமறுத்தக் கால்களைக் கடினப்பட்டு நகர்த்தி வீட்டினுள் நுழைந்தாள் பெண். அவளது கால்கள் தாமாகவே கூடத்தின் நடுவில் வீற்றிருந்த அந்தச் சிறியப் பேழையின் முன் சென்று நின்றன. பேழைக்குள் விளக்கேற்றி மாலையிடப்பட்டிருந்த அந்தப் புகைப்படத்தைக் கைகள் நடுங்கத் தொட்டுப் பார்த்தாள் செந்தமிழ்.
அவளது நெஞ்சாங்கூடு ஒருகணம் நின்று துடித்தது. அந்தப் பெரியப் புகைப்படத்தில், சின்னஞ்சிறு பூந்தோட்டமாய் விழிகளில் குறும்புக் கூத்தாடத் தனது பச்சரிசிப் பல் புன்னகையில் எல்லோரையும் காந்தமாக இழுத்துக் கொண்டிருந்தாள் மலரினி. பேழையின் முன்பு அப்படியே மண்டியிட்டு அமர்ந்த செந்தமிழ், கைகளைக் கூப்பிக் கண்மூடினாள். நிமிடங்கள் கடந்து விழிகளைத் திறந்தவளுக்குத்
தான் சொல்லநினைத்ததையெல்லாம் தன் இனி குட்டியிடம்
சொல்லிவிட்ட உணர்வு.
மலரினியும் தனது பாசமிகு அத்தை சொல்வதையெல்லாம் தலையை ஆட்டி ஆட்டி
அதே பச்சரிசிப் பல் புன்னகையுடன் கேட்டுக்கொண்டதுபோல் ஒரு மாயை. மனம் லேசாக மட்டுப்பட, எழுந்து சுற்றத்தை அவதானித்தாள் பெண்.
எல்லோரினது நிலையையும் காணக்கான மீண்டும் நெஞ்சில் பாரம் ஏறிற்று அவளுக்கு.
வசந்தனின் அருகில் சென்றவள்
"அண்ணா" என்று குனிந்து அவனது தோள்த்தட்டினாள்.
செந்தமிழின் குரல் வந்தத் திசைப் பக்கம் லேசாகத் தலையை மட்டும் திருப்பிய வசந்தன், மீண்டும் முன்புபோலவே தூணில் தலையைச் சாய்த்தான். செந்தமிழ் எத்தனை உலுக்கியும் மீரா அசையவேயில்லை. அவளது கண்கள் மலரினியின் புகைப்படத்திலேயே நிலைகுத்தி நின்றது. முதியவர்கள் இருவரும் தூண்களில் தலை சாய்த்துக் கண்மூடியிருப்பதைக் கண்டவள்,
உறங்கும் குழந்தைகளை வருடிவிட்டு அமுதவல்லியின் அருகில் சென்றாள். "அத்தை" என்றவாறு செந்தமிழ் அவரது கையைப் பற்றியகணம் அவளைக் கட்டிக்கொண்டுக் கதறிவிட்டார் அமுதவல்லி. அவரது அழுகுரல் அந்த வீட்டையே அதிரச்செய்தது.
தானும் அவரை அனைத்துக் கொண்டவள், மெல்ல மெல்ல அவரது முதுகில் தட்டிக் கொடுத்துக் கொண்டே அவரை நீள்விருக்கையின் அருகில் நடத்திவந்திருந்தாள். அமுதவல்லியைக் கூடத்திலிருந்த நீள்விருக்கையில் அமரவைத்துவிட்டு நிமிர்ந்த செந்தமிழின் எதிரில் தேநீர்க் கோப்பைகள் அடங்கியத் தட்டுடன் நின்றிருந்தார் அய்யாதுரை. அவரது முகத்திலும் அப்பட்டமானச் சோர்வு. இழப்பின் வீரியம் அவரை இன்னுமே வயது கூடியவராகக் காட்டிற்று.
"வாம்மா" என ஒற்றை வார்த்தையில் அவளுக்கு முகமன் கூறியவரோ அவளிடம் தேநீர்க் கோப்பையைக் கொடுத்தார். அதை அவரது கையிலேயே திணித்துவிட்டு,
"இதை நீங்கக் குடிங்க மாமா. எல்லோருக்கும் நான் கொடுக்கிறேன்." என்றுவிட்டு
அனைவருக்கும் தேநீரை வழங்கியவள், அவர்களது மறுப்பையெல்லாம் பொருட்படுத்தாமல், அவர்களைச் சமாதானம் செய்து தேநீரைப் பருகவைத்திருந்தாள். மீராவின் பொறுப்பை வசந்தனிடம் விட்டுவிட்டுச் சமையலறைக்குள் நுழைந்தாள் அவள்.
உணவினைத் தயாரிப்பதில் முனைப்பாக இருந்த அவளது கைகளிலும் மெல்லியத் தொய்வு இருப்பினும் ஒருவிதப் பிடிவாதத்தோடு சமைக்க முயன்ற செந்தமிழின் மனதுமட்டும் கொண்டவனிடம் எதையோ விடாமல் யாசித்துக் கொண்டிருந்தது.