செந்தமிழ் - 23

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,208
16,450
113
Germany
செந்தமிழ்

பதிவு எண்: STN89.
கண்ணம்மா.

அத்தியாயம் 23.
பதின்மூன்று வயதே நிரம்பிய மதுராவுக்கு
அவளது தாய்ச் சொன்னவை முழுமையாக விளங்கியதோ இல்லையோ
அவர் உதிர்த்த வார்த்தைகள் ஒவ்வொன்றும் பசுமரத்தானியாய் அவளது உள்ளத்தில் பதிந்துபோயிற்று.
இப்படியிருக்கையில்தான் அபரஞ்சியின் தற்கொலை விடையமும் நிகழ்ந்தேறியது.
சட்டென எதுவுமே புரியவில்லை மதுராவுக்கு. உடன்பயின்றத் தோழியின் திடீர் மரணம்
மதுராவை வெகுவாகப் பாதித்தது.
அதற்குப் பின்னான நாட்களில் இரவுநேரங்களில் அவளால் நிம்மதியாகத் தூங்கமுடியாமல் போயிற்று. இரவுமுழுக்கக் கொட்டக் கொட்ட விழித்திருந்து எதையெதையோ யோசிப்பாள்.
அபரஞ்சி தற்கொலை செய்துகொள்ளும்முன்
கிட்டத்தட்ட இரண்டுவாரங்கள்
அபரஞ்சியின் நடவடிக்கைகளில்
எண்ணற்ற வித்தியாசங்களைக் கண்டாள் மதுரா. அதுவும்
அவள் பள்ளியின் அலுவலக அறைக்குச் சென்றுவிட்டு வரும் ஒவ்வொருமுறையும்
அவளது முகம் பேயறைந்ததுபோல் இருக்கும். எத்தனை உலுக்கினாலும் வாய்த் திறந்து பேசமாட்டாள். சிறிதுநேரத்திலேயே வாயைப் பொத்திக்கொண்டு கழிப்பறைக்கு ஓடிப்போய்
அடித்தொண்டையிலிருந்து வாந்தியெடுப்பாள். மதுராவும் எத்தனையோமுறை அபரஞ்சியைப் பேசச் சொல்லி ஊக்குவாள்..
அப்போதெல்லாம் மதுராவை இறுகக் கட்டிக்கொண்டு அபரஞ்சி
கதறி அழுவாளே தவிர
இறுதிவரை எதையும் வெளிப்படையாக யாரிடமும் சொல்லவேயில்லை. இறுதியாக அனைவரும்
விடுமுறையைமுன்னிட்டு வீட்டிற்குக் கிளம்புகையில்
"உனக்கு என்னப் பிரச்சனைனு இப்பவரைக்கும் எனக்குச் சுத்தமாத் தெரியல அபரஞ்சி.
நீயும் வாயத் திறக்கவேமாட்டேங்குற. குறைந்தபட்சம்
உனக்கு என்ன செய்யுதுன்னு
உங்க வீட்லயாவது சொல்லு.
லீவ் முடிஞ்சு இங்கத் திரும்ப வரும்போது எங்களோடப் பழைய அறாத்து அபரஞ்சியாத்தான் நீ வரணும் சரியா?" எனக்கேட்டு
அபரஞ்சியின் தோளில் இடித்த மதுராவை ஆறத் தழுவிக்கொண்ட அபரஞ்சி,
"இந்தப் பொறப்ப நான் சுத்தமா வெறுக்கிறேன் மதுரா.'
என்றுவிட்டு நொடியில்
மதுராவிடமிருந்து விலகித்
தனது பெற்றோருடன் சென்றிருந்தாள் அபரஞ்சி.
விடுமுறை முடிந்து மதுரா பள்ளிக்குச் செல்கையில்,
அபரஞ்சிக்குப் பதில் அவளது இறப்புச் செய்தியே மதுராவின் காதுகளை வந்தடைந்தது.
நிகழ்ந்த அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக
நினைவுச்சறமாய்க் கோர்த்துப் பார்க்கையில் மதுராவுக்குக் கிடைத்த விடை பாலியல் வன்முறை. எப்படி யோசித்தாலும்
மதுராவின் அறிவு இந்தப் புள்ளியில்தான் வந்துநின்றது..
திடீரென மார்த்தாண்டம்
மதுராவை வம்படியாக வேறொரு பள்ளியில் சேர்த்ததுவேறு
அவளது சந்தேகத்திற்குத் தூபம் போட்டது. இப்படியே நாட்கள் நகர
மதுரா பன்னிரண்டாம் வகுப்புப் பயிலும் சமயத்தில்
மலை கிராமம் ஒன்றுக்குப் பள்ளிச் சுற்றுலா சென்றிருந்தாள்.
அச்சமயம் எதேர்ச்சியாக
மதுராவின் விழிகளில் விழுந்தால் அபரஞ்சியின் தமக்கை இளவஞ்சி.
அங்கிருந்த மரத்தடியின் நிழலில்தான் அனைவரும் தங்களது நண்பர்களுடன் சிறுசிறு குழுக்களாகப் பிரிந்து
உணவருந்தினர். உண்டுவிட்டுக் கைக்கழுவச் செல்லும்போதுதான்
இளவஞ்சியைப் பார்த்தாள் மதுரா.
ஓரிருமுறை அபரஞ்சியைப் பார்க்கப் பள்ளிக்கு வந்திருக்கிறாள் இளவஞ்சி.
அப்படித்தான் அவள் மதுராவுக்கு அறிமுகம். "இளவஞ்சி அக்கா
என்ன நினைவிருக்கா உங்களுக்கு? நான் மதுரா;
அபரஞ்சியோட ஃப்ரெண்ட்.
எப்படியிருக்கீங்க?
இதுதான் உங்க ஊரா?"
என்று மர இலைகளைச் சேகரித்துக் கொண்டிருந்த இளவஞ்சியிடம்
கேள்விகளை அடுக்கினாள் மதுரா. அவளைத் திரும்பிப் பார்த்த இளவஞ்சி மெலிதாகப் புன்னகைத்தாள். அவளது புன்னகையில் சிறிதும் உயிர்ப்பில்லை. "நல்லா இருக்கேன்னு சொல்ல ஆசைதான் மதுரா.
ஆனா வாழ்க்கை என்ன அப்படிச் சொல்லவே விடாதுபோல."
என்றாள் மறத்தக் குரலில்.
"அக்கா அபரஞ்சி?" "அபரஞ்சிய உணர்வு ரீதியாக் கொன்னுட்டாங்க மதுரா." என்று மதுராவின் கேள்வியை இடைவெட்டிக் கூறினாள் இளவஞ்சி.
மதுராவின் கணிப்பும் இதுதான் என்பதில் அமைதியாக இளவஞ்சியை ஏறிட்டாள்.
"அந்த ஸ்கூலோட பிரின்ஸ்பால்
கணேசன்தான் அவளுக்கு அதிகப் பாலியல் அச்சுறுத்தலக் கொடுத்திருக்கான்.
கண்டக் கண்டப் புகைப்படங்கள அபரஞ்சியோட போட்டோவ மார்ஃபிங் பண்ணி அதெல்லாம் அவக்கிட்டக் காமிச்சு
அவனுக்குமட்டும் அவ சரியான ஒத்துழைப்புத் தரலன்னா அந்தப் புகைப்படங்களச் சமூக வலைத்தளத்தில் வெளியிடுவேன்னு சொல்லி மிரட்டியிருக்கான்.
கூடவே அவளை வம்படியாக் கூப்பிட்டுப் பல அந்தரங்கக் காட்சிகளை செல்போன்லப் போட்டுக் காட்டி அவளப் பாக்கவச்சிருக்கான்.
அபரஞ்சி வீட்டுக்கு வரதுக்கு முந்தினநாள் கணேசன் அவக்கிட்டத் தப்பா நடக்கவும் முயற்சி பண்ணியிருக்கான். அதைத் தாங்கமுடியாமதான் அவ ஒரேடியாப் போய்ச் சேர்ந்துட்டா.
நடந்ததையெல்லாம் சுருக்கமா
ஒரு காகிதத்தில் எழுதி
என்னோடத் துணிப் பையில வச்சுட்டு போயிருந்திருக்கா.
அது என் கண்ணில் படவே ஒருவாரம் ஆயிடுச்சு. அப்புறம்
கடிதத்துல இருந்ததப் படிச்சுப் பார்த்தோம் எங்களால ஒன்னும் செய்யமுடியல." என்றவள்
அவளது தாய்த் தந்தைப் பள்ளி நிர்வாகத்தைச் சந்திக்கச் சென்றிருந்தநாளில் நடந்த அனைத்தையும் மதுராவிடம் பகிர்ந்துகொண்டாள்.
"அவங்களுக்குப் பயந்துகிட்டுத்தான் எங்க ஊர்லயிருந்து நாங்க இங்க வந்தோம். அடுத்த சிலநாட்களிலேயே அபரஞ்சியோட இறப்புத் தாங்கிக்கமுடியாம
அப்பா நெஞ்சுவலி வந்து இறந்துட்டாரு. தொடர்ந்து நடந்த இழப்புகளால அம்மாவுக்கும் புத்திப் பெசகிறுச்சு. அவங்களும் இந்த உலகத்தவிட்டுப் போயி
ஒருமாசமாச்சு." என்றாள் உணர்ச்சியற்றக் குரலில். இளவஞ்சிச் சொன்ன எதையும் மதுராவால் ஜீரணிக்கவேமுடியவில்லை.
உணவை முடித்துக்கொண்டு அனைவரும் கிளம்ப ஆயத்தமானதால் இளவஞ்சியிடம் மேற்கொண்டு மதுராவால் பேசமுடியவில்லை.
இலவஞ்சிக்கு என்ன ஆறுதல் சொல்வது என்றும் மதுராவுக்குத் தெரியவில்லை. அவளை அணைத்து விடுவித்துவிட்டுப்
பேருந்தில் ஏறிக் கொண்டவளுக்கு
ஒட்டுமொத்த ஆண் வர்க்கத்தின்மீதும் ஒருவித ஒவ்வாமைத் தோன்றியது. அதன் விளைவாகத்
திருமணம், குடும்ப வாழ்க்கை
எதன்மீதும் மதுராவுக்கு நாட்டமில்லாமல் போனது. அவளுக்கிருக்கும் ஆண் நண்பர்களையும்
ஒரு எல்லைக்குள் நிறுத்திவைத்திருந்தாள் மதுரா.
பயிற்சிகள் முடிவுற்றநிலையில் வேலுநாச்சியின் வேண்டுகோளுக்கிணங்கிச்
சிலமாதங்கள் அவரோடு தங்கியிருக்க அவர்களது வீட்டுக்கு வந்தாள் மதுரா.
அந்தச் சமயத்தில்தான்
மாடியில் துணிகளை உலர்த்திக் கொண்டிருந்தவளை முரட்டுக் கறமொன்று சுவர் மறைவுக்கு இழுத்துச் சென்றது.
நடந்ததில் பதறித் திகைத்த மதுரா
தன் கையை விடுவித்துக் கொள்ளப் போராடினாள்.
அதற்குள் அவளை மறைவுக்கு அழைத்துவந்திருந்தான் கறிகாலன். "எனக்கு உன்னப் பிடிச்சிருக்கு மதுரா. உங்க அப்பாக்கிட்டப் பேசிக் கூடிய சீக்கிரம் நம்மளோடக் கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்றேன்." என்று
அவளது தாடையை
அழுந்தப் பற்றிக் கூறியவன்,
மதுராவின் நெருப்புப் பார்வையில் புன்னகைத்தவாரே
கீழே சென்றான். கறிகாலன் செய்கையில் மதுராவின் கை கால்களெல்லாம் வெடவெடத்தன. அவள் தாடையில் அவன் கொடுத்த அழுத்தம்வேறு மெல்லிய வலியைத் தந்தது.
தன் அனுமதியின்றித் தன்னைத் தொட்டுப் பேச அவனுக்கு எவ்வளவு தைரியம்?
என்னவோ கரிகாலனின் தொடுகை மதுராவுக்கு அசுசையாக இருந்தது.
உடனே தாயிடம் சென்று நடந்ததைக் கோபத்துடன் முறையிட்டாள் மதுரா. மகள் சொன்னச் செய்தியில் வேலுநாச்சியும் பயந்துபோனார்.
"என்னங்க கறிகாலனோட நடவடிக்க எதுவும் எனக்குச் சரியாப் படல. தனியா நிக்கிற ஒரு பொம்பளப் புள்ளைய
திடுதுப்புண்ணு இழுத்துட்டுப் போய் எனக்கு உன்னப் பிடிச்சிருக்குன்னு சொல்றதெல்லாம் ஒரு நல்ல ஆம்பளைக்கு அழகாங்க?
முதல எப்படி மதுராவோட அனுமதியில்லாம கறிகாலன் அவளைத் தொட்டுப் பேசலாம்?
என்னதான் அவன் உங்க சினேகிதனோடப் பையனாயிருந்தாலும் இப்படியெல்லாம் வறம்புமீறக் கூடாது." என்று பொறிந்தவரை அலட்சியம் செய்த மார்த்தாண்டம் "ஏன் கரிகாலனுக்கு என்னக் கொறைச்சல்?
நானே இவளக் கறிகாலனுக்குத்தான் கட்டிவைக்கலாம்னு நினைச்சேன். இப்ப அவனே வந்து அவக்கிட்ட நேர்ல சொல்லியிருக்கான். எப்பக் கல்யாணத்த வச்சுக்கலாம்னு கேட்டுச் சொல்லு உன் பொண்ணுகிட்ட."
என்றார் தீர்மானமாக.
"நீங்கப் பேசுறதெல்லாம் சுத்த அறிவுகெட்டத்தனமா இருக்கு.
என் விருப்பமில்லாம எப்படி எனக்குக் கல்யாணம் பண்ணுவீங்க? என்னால அந்தப் பொறுக்கியல்லாம் கட்டிக்கமுடியாது." எனத் தந்தையை நோக்கிக் கத்தியவள், தனது அறைக்குள் சென்று அடைந்துகொண்டாள். வேலுநாச்சியிடமும் கூட மதுரா பேசவில்லை.
ஏனோ அவர்மீதும் அவளுக்குக் கோபந்தான் வந்தது. மகளின் ஒதுக்கத்தில் தவித்துப் போனதென்னவோ வேலுநாச்சித்தான்.
அந்த கறிகாலனைத் தன் அருமை மகளின் பக்கத்தில்
வைத்துக் கற்பனையாகக் கூட
வேலுநாச்சியால் பார்க்கமுடியவில்லை. சை அவன் போன்ற ஆட்களா என்று நினைக்கும்போதே குமட்டிக்கொண்டுவந்தது அவருக்கு.
பின்னே ஊரில் உள்ள ஒட்டுமொத்தத் தீயப் பழக்கங்களையும் குத்தகைக்கு எடுத்திருப்பவனுக்குத் தன் மகளைக் கட்டிக் கொடுக்க
வேலுநாச்சி என்ன பைத்தியமா!
அடுத்தடுத்த நாட்களில் மார்த்தாண்டத்தின் வீட்டிற்கு கறிகாலன் வருவது வாடிக்கையானது. அவன் அங்குவரும் வேலைகளில் அறைக்குள்ளேயே அடைந்துகிடப்பாள் மதுரா. இருந்தும் எவ்வளவு நேரந்தான்
அந்த நான்கு சுவர்களுக்குள்ளேயே சஞ்சரிப்பது? காவலதிகாரியாகப் பணியிலிருக்கும் கறிகாலன்
அலுவலகத்திற்குச் செல்வதைவிட இங்குவருவதில் ஆர்வம் காட்டினான். அதிகாலையில்
இங்குவருபவன், மதிய உணவை முடித்துக் கொண்டுதான் வெளியே கிளம்புவான்.
அவ்வப்போது மாலைப் பொழுதுகளிலும் அவன் வருவதுண்டு. ஓரிருமுறைத்
தவறுதலாக கறிகாலனின் கண்ணில் சிக்கி,
அவள்மீதான அவனது துயிலுறிக்கும் பார்வையை உணர்ந்து ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்றாள் மதுரா.
"இங்கப் பாருமா இன்னும் ஒருவாரந்தான் நான் இங்க இருப்பேன். பாட்டியெல்லாம்
காசியிலிருந்து வந்தப் பிறகு
நான் கிளம்பிடுவேன் ஊருக்கு.
அதுவரைக்கும் அந்த கறிகாலன் இங்க வரக்கூடாதுன்னு உன் புருஷங்கிட்டச் சொல்லிவை."
என்று தன் தாயிடம் உறுமிவிட்டுப் போனாள்.
அடுத்த இரண்டுநாட்கள்
மதுராவுக்கு நிம்மதியாகவே கழிந்தன. கறிகாலன் என்ற தலைவலி இரண்டுநாட்களுக்கு மதுராவை எட்டிப் பார்க்கவில்லை. லேசாக இதம் காணத் தொடங்கியிருந்த மதுராவின் மனதில் மண்ணெண்ணையை பார்த்தது கரிகாலனின் வருகை.
அடுத்தநாள் மாலை வேலுநாச்சி கடைத் தெருவுக்குச் சென்றிருந்தச் சமயம், முற்றத்தின் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தாள் மதுரா.
அச்சமயம் அவளது கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு கூடத்திற்குச் சென்றான் கறிகாலன். இவனது வருகையை மதுரா சற்றும் எதிர்பார்க்கவில்லை. "கைய விடுடா ராஸ்கல். " என இறைந்தாள் மதுரா. அவனது கோபத்தைப் பொருட்படுத்தாமல்,
அவளது முகத்தைத் தன்னை நோக்கி இழுத்தான் கரிகாலன்.
அவனது எண்ணத்தை விளங்கிக் கொண்ட மதுராவின் பொறுமை காற்றில் பறந்தது. கண்ணிமைக்கும் நொடியில்
அவனை உதைத்துக் கீழே தள்ளியிருந்தாள் பெண்.
"பொறுக்கி நாயே; போயும்போயும் உனக்கு நான் பொண்டாட்டியா வரணுமா?
முதல்ல ஒரு பொன்னுகிட்டப் பேசும்போது உன்னால அவளோடக் கண்ணப் பாத்துமட்டும் பேசமுடியுமாடா? எதுக்குடா இப்படி நாக்கத் தொங்கப் போட்டுட்டு அலையுறீங்க?" உன்னப் பார்க்கும்போது எனக்கு அருவருப்பா இருக்கு."
எனக்கூறியவள் கறிகாலனின் முகத்திலேயே காரி உமிழ்ந்தாள்.
அவளது செயலிலும், பேச்சிலும் வெகுண்டெழுந்த கறிகாலன்
தன்னை நிலைப்படுத்திக் கொண்டு எழுந்துநின்றபடி
" என் மூஞ்சிலேயே காரி துப்பிட்டல்ல நீ? இதுக்கெல்லாம் சேர்த்து அனுபவிப்படி." என்று கூறியவனின் தொணியில் மெல்லியப் பதற்றம் மதுராவை ஆட்கொண்டது. அவளது பயத்திற்குமாறாக மதுராவை ஒரு மாதிரியாகப் பார்த்துவிட்டு
அங்கிருந்து வெளியேறினான் கறிகாலன். அதற்குமேலும் மதுரா தாமதிக்கவில்லை. தாயிடம் கூட சரியாக எதையும் சொல்லாமல்
அவசர வேலையாக நாளை காலையிலேயே தான் கிளம்பப் போவதாக மட்டும் அறிவித்துப்
பெரும்பாடுபட்டு அந்த இரவைக் கடத்தினாள்.
அதேசமயம் கோபத்தில் விழிகள் இரண்டும் கோவைப்பழமாய்ச் சிவந்திருக்க மருத்துவர் சுந்தரலிங்கத்தின்முன்பு அமர்ந்திருந்தான் கறிகாலன் .
வந்ததும் வராததுமாக அவரது கையில் சில லகரங்களைத் திணித்தவன், "ஒருத்தி என்ன
ரொம்ப அசிங்கப்படுத்திட்டா லிங்கம் சார் இருந்தாலும் எனக்கு அவதான் வேணும்னு தோணுது. வழக்கமா வர்ற பொண்ணுங்கல்லாம் என்னப் பாத்துப் பயப்படும். இவ ஒருத்தித்தான் நாலாம் அவளுக்கு ஒரு பொருட்டே இல்லங்கிறமாதிரி என்னக் கண்டுக்காமலேயே போவா.
அவளோட அந்தத் திமிர அடக்கிப் பார்க்க எனக்கு ஆசையா இருக்கு சார். அப்படியே அவள என் காலடியில் விழுந்து கதற வைக்கணும். என் முகத்திலேயே
காரித் துப்புனவளுக்கு நான் பதில் பரிசு தரவேண்டாமா!
நடக்கிற எல்லாத்தையும்
அவ உணரனும். அதேநேரம்
எதையும் தடுக்கமுடியாமப் போகணும்." என்றான் கண்கள் ஜொலிக்க. மதுராவை
அடக்கி ஆளவேண்டும் என்று வெறி கொண்டான்.
"இருக்கு சார். இதோ இதுதான் அந்த மருந்து. இதச் சும்மா ஒரு ரெண்டு ட்ராப் மட்டும் பால்லயோ,
சாப்பாட்டுலையோ கலந்து கொடுத்தீங்கன்னா நீங்க எதிர்பார்த்த எல்லாமே நடக்கும்.
தெளிவாச் சொல்லணும்னா
அவங்களுக்கு என்ன நடக்குதுன்னு தெரியும்.
ஆனா அதுக்குத் தகுந்த எதிர்வினைய அவங்களால ஆற்றமுடியாது. அவங்களோட மூளை சொல்றத உடம்பு கேட்காது."
எனக் கூறிய சுந்தரலிங்கம்,
கறிகாலனின் கையில் அந்த மருந்து குப்பியைக் கொடுத்தார்.
"மதுரா நாளைக்கு இந்த கறிகாலனோட ஆட்டத்தப் பாரு."
என்று சொல்லிக் கொண்டவனின் முகத்தில்
பழி வெறி தாண்டவமாடியது. "மதுரா இந்தப் பாலையாவது குடிச்சுட்டுக் கிளம்புமா. நான் கோயிலுக்குப் போயிட்டு வந்துடறேன்.
போகும்போது மறக்காம பால குடிச்சிடு. ஃபிளாஸ்க்ல ஊத்தி டைனிங் டேபிள்ல வச்சிருக்கேன்." என்று சொன்ன வேலுநாச்சி அறைக்கு வெளியே இருந்தபடியே மகளுக்குப் பல்லாயிரம் பத்திரங்களைக் கூறிவிட்டுக் கோவிலுக்குப் புறப்பட்டார் நடக்கப்போவது தெரியாமல்.
இவையனைத்தும் வீட்டின் பக்கவாட்டுச் சுவருக்குப் பின்னே பதுங்கியிருந்த கறிகாலனின் காதில் தெளிவாக விழுந்தது.
வேலுநாச்சி சென்றுவிட்டதை உறுதி செய்துகொண்டு, சத்தமின்றி வீட்டிற்குள் நுழைந்தான் கறிகாலன். சுந்தரலிங்கம் கூறியபடி அந்த மருந்தைப்
பாலில் கலந்தவன், மீண்டும் சென்று மறைந்துகொண்டான்.
தன்னைத் தயார்படுத்திக் கொண்டு கூடத்திற்கு வந்த மதுரா கறிகாலன் விரித்த வலையில் தான் சிக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதே தெரியாமல் மேசையின்மீது வைக்கப்பட்டிருந்தப் பாலைக் குவளையில் ஊற்றி அருந்தினாள். சிறிதுநேரத்தில்
மதுராவின் உடலில் ரசாயன
மாற்றங்கள் நிகழ்ந்தேறின.
அதேசமயம் அவளைப் பின்னிருந்து அணைத்தான் கறிகாலன். அவனது அணைப்பிற்குத்ப் தன்னை போல் குறைந்தது மதுராவின் உடல்.
மதுராவின் மூலையோ நடக்கப்போகும் விபரீதத்தை அவளது உடலுக்குக் கடத்திவிடப் போராடியது. கண்களில் கண்ணீர் வடிய இருதலைக்கொள்ளி எரும்பாகத் துடித்தாள் மதுரா. அவளால் தன் மூளை சொல்வதையும் கேட்கமுடியவில்லை, தன் உடலில் ஏற்பட்ட மாற்றத்தையும் ஏற்கமுடியவில்லை. தனது கையறு நிலையை எண்ணி அவளால் கதறி அழக் கூட முடியவில்லை.
தான் சொல்வதைக் கேட்காமல்
கறிகாலனின் கைப்பாவையாக இயங்கிக் கொண்டிருக்கும் தன் உடலை எறித்துப் போடும் வெறி வந்தது மதுராவுக்கு.
என்னநினைத்து என்ன பயன்?
எதையுமே அவளால் செயல்படுத்தமுடியவில்லையே?
தனது உடலின் முழு ஒத்துழைப்புடன்
அனைத்தும் அரங்கேறிக் கொண்டிருப்பதை உயிர்ப்போகும் வலியுடன் பார்த்தாள் மதுரா.
அவள் என்ன முயன்றும்
கறிகாலனை எதிர்த்து ஒரு துறும்பைக் கூட அசைக்கமறுத்தது அவளது உடல். தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாமல் பெண்ணவளின் உள்ளம் ரத்தக்கண்ணீர் வடித்தது.
இதை எப்படியாவது தடுத்துவிடு.
என்று மூளை அறிவுறுத்த,
இது வேண்டுமே வேண்டுமென்று மதுராவின் உடல் பிடிவாதம் பிடித்தது. அந்தநொடியில் தான் பெண்ணாகப் பிறந்ததை எண்ணித்
துக்கம் கொண்டாள் பெண்.
கறிகாலன் மதுரா துடிப்பதைக் கண்டு ரசித்தவாரே தான் நினைத்ததையெல்லாம் செய்தான். நிற்காமல் வழிந்துகொண்டிருந்த அவளது கண்ணீர்த் துளிகள் கறிகாலனுக்குள் சொல்லொன்னா நிறைவினை உண்டாக்கியது. ".
"இதுவரை எத்தனையோப் பொண்ணுங்கள இஷ்டம்போல அனுபவச்சவன்டி நான்.
அப்படிப்பட்ட என்ன உன்னோட இந்தத் திமிரு அலட்சியந்தான்
ஒம்பக்கமா சாய்ச்சுச்சு.
எப்படியாவது அந்தத் திமிர அடக்கியேத் தீரணும்னு
ஆசைப்பட்டன். ஆனா ஊரறிய முறையாத் தாலிக் கட்டி உங்கூடக் குடும்பம் நடத்தலாம்னு நினைச்சேன். நீதான் உன்னோட ஆணவத்தால என்ன இந்த அளவுக்கு இறங்கிச் செய்யவச்சிட்ட. ஆனா சும்மா சொல்லக் கூடாது இதுவும் ரொம்பவே கிக்கா இருந்துச்சு. என்னையே எட்டி உதைச்சல்ல? என் மூஞ்சிலேயே காரித் துப்பனல்ல? இந்த கறிகாலனச் சீண்டினா இப்படித்தான் நடக்கும்.
ஹவ் எ பிலெசன் டே பேபி."
என்று சொல்லி மதுராவின் கன்னத்தைத் தட்டிவிட்டுச் சென்ற
கறிகாலனை இமைக்காமல் வெறித்தாள் மதுரா.
அவளது வாழ்வையேத் தலைகீழாகப் புரட்டிப்போட்ட அந்த ஒருநாள்தான் மதுராவை இக்குழுவுடன் இணைத்தது.
கறிகாலனின் ஈனச் செயல்
மதுராவின் இதயத்தைப் பலமாகப் பதம் பார்த்திருந்தது.
தன்னால் முடிந்தமட்டும் அழுதுத் தீர்த்தவள், அதன்பின் அழவே கூடாது என முடிவு செய்தாள்.
எத்தனை எத்தனை நாட்களுக்குத்தான்
பெண்ணினம் அடிவாங்கிக் கொண்டிருப்பது?
வாங்கியதில் பாதியையாவது கொடுத்தவர்களுக்குத் திருப்பித் தரவேண்டாமா)
தன்னைத் துடிதுடிக்கவைத்த
அந்தப் பாதகனின் கண்களில்
உயிர் பயத்தைக் காணும் ஆசைப் பிறந்தது மதுராவுக்கு.
இதோ அவள் எதிர்பார்த்துக் காத்திருந்த அந்த ஒரு நாளும் வந்துவிட்டது. அனைத்தையும் கனக்கச்சிதமாக முடித்துவிட வேண்டுமென்று எண்ணிக்கொண்டவள்,
மனக்கோளத்தில் தயாராகி
வெளியே வந்தாள்.
"மதுரா என்னமா இது?"
என அதிர்ச்சி மேலிட தன்முன் மணக்கோளத்தில் வந்துநின்ற
மகளிடம் வினவினார் வேலுநாச்சி. மகளின் திருமண வைபவத்தைக் கண்டு குளிரவேண்டிய தாயின் மனது
துக்கத்தில் துவண்டது. அவரால் மகளின் எண்ண ஓட்டத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை.
மார்த்தாண்டம் கூட மகளின் அலங்காரத்தைக் கண்டு லேசாகத் திகைத்தார். இருப்பினும் எதையும் வெளியில் காட்டிக் கொள்ளாமல் மகளையும் மனைவியையும் அழைத்துக் கொண்டு கோவிலுக்குச் சென்றார். அங்கு அவர்களது வருகையை எதிர்நோக்கிக் காத்திருந்தான் கறிகாலன்.
வெற்றிக் களிப்பில் அவனது முகம் மினுமினுத்தது.
மகிழுந்தைவிட்டு இறங்கிய
மதுராவிலேயே கறிகாலனின் கூர் பார்வை நிலை கொண்டது.
கறிகாலனைக் கண்டதும்
"வாழ்த்துக்கள் கறிகாலன்.
ஒருவழியா நீ ஆசைப்பட்டது நிறைவேறப் போகுது."
என்றவாறு அவனைக் கட்டியணைத்தார் மார்த்தாண்டம்.
அப்போதும் கறிகாலனின் பார்வை மதுராவைவிட்டு இம்மியும் அசையவில்லை.
மதுராவுக்குத்தான் தன்மீது யாரோ அமிலத்தை வாரி இறைப்பதுபோல் உள்ளமும் உடலும் பற்றியெறிந்தது.
"அதுதான் வரவேண்டியவங்க வந்தாச்சுல்ல ; போய் அர்ச்சனைய முடிச்சிட்டுத் தாலி கட்டிடலாம் வாங்க."; எனக் கூறிய கறிகாலன், மதுராவின் கையைப் பற்றிக் கொண்டு சன்னதிக்குச் சென்றான். அர்ச்சனைக்குப் பிறகு,
ஐயர் எடுத்துக் கொடுத்தத் தாலியை மதுராவின் கழுத்தில் கட்டினான் கறிகாலன்.
நடப்பவற்றையெல்லாம் விழிகளில் திரண்ட நீரோடு
வேதனைப் பொங்கப் பார்த்துக் கொண்டிருந்தார் வேலுநாச்சி.
தாலி கட்டியக் கையோடு
"எனக்கு ஒரு முக்கியமான வேல இருக்கு. நான் மதுராவையும் எங்கூடவே கூட்டிட்டுப் போறேன்.
இனி அவ எங்கூடவே இருக்கட்டும். அவளோட திங்ஸ மட்டும் பேக் பண்ணி வேலக்காரங்கக்கிட்டக் குடுத்தனுப்புங்க." என்றவன்,
வேலுநாச்சியைப் பார்த்து
ஏளனமாகச் சிரித்தவாறு
"போயிட்டு வரேன் அத்த."
எனச் சொல்லிக்கொண்டே
தன் முடியை இழுத்துக்காட்டி
"நான் சொன்னமாதிரி உங்களால என்னோட இதக்கூடப் புடுங்கமுடியல பார்த்தீங்களா? இப்போ உங்கப் பொண்ணுகூட என்பக்கந்தான்." என்றவன் மதுராவை அணைத்தபடி மகிழுந்தைச் சென்றடைந்தான்.
வாகனத்தில் ஏறி அமர்ந்ததும்
"என்ன டார்லிங் பிளான் எல்லாம் சரியாதான போயிட்டிருக்கு?"
எனப் புருவத்தைத் தூக்கிக் கேட்டான் கறிகாலன். மதுரா வாயைத் திறக்கவில்லை. இருப்பினும்
குழப்பரேகைகள் அவளது வதனத்தை முற்றுகையிட்டன.
"ஓவராக் குழம்பாத. ஜஸ்ட் சில் பேபி." என்ற கறிகாலன்
தொலைபேசி அழைப்புகளில் மூழ்கிப் போனான்.
அதேநேரம் சுந்தரலிங்கம் மற்றும்
வேதநாயகத்தையும் தனதுபாணியில் கையாளத் துவங்கியிருந்தான் பிறைசூடன்.
சாவினை யாசிக்கும் நிலைக்கு அவர்களைக் கொண்டு சென்று
தன் துப்பாக்கிக் கொண்டு
அந்த வக்கிரம்பிடித்தவர்களைக்
கருவறுத்தான் பிறைசூடன்.
வழக்கம்போல அவர்களது பிரேதங்களும் மின்மயானத்திற்கு இறையாகின.
இறுதி தடவைக் கூட்டுக் காணொளியழைப்பில் இணைந்தனர் அக்குழுவினர்.
இதோ கொஞ்சநேரத்தில் அனைத்தும் வெளிச்சத்திற்கு வந்துவிடும். அந்தநொடியை எதிர்நோக்கி அனைவரும் தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ளத் துவங்கினர்.
காணொளியில் இணைந்திருந்த அனைவருக்கும் நன்றி நவிழ்ந்தது தலைமைக் குரல்.
அடுத்து நடக்கவிருக்கும் ஒவ்வொன்றையும் திறம்படத்
தாங்கள் கையாண்டால்மட்டுமே
வெற்றியின் சிகரத்தை அடையலாம் என்பதை மீண்டும் ஒருமுறை நினைவு படுத்தியது.
"இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் நமது இந்தப் பயணம் வெற்றியைமட்டுமே நிலைநாட்டவேண்டும்.
எச்சூழ்நிலையெனினும்
நேர்மறை எண்ணங்களையே நினைவில் நிறுத்தி,
விவேகத்தோடு செயல்படுவோம்." என்று உறைத்துப் புன்னகையுடன் அழைப்பைத் துண்டித்தது தலைமைக் குரல்.
தாங்கள் செல்லும் வழியினை அவதானித்த மதுரா அனைத்தும் நேர்த்தியாக நடப்பதில் ஆசுவாசம் கொண்டாள்.
காவல்துறை வாகனங்கள் புடைசூழ கறிகாலனின் மகிழுந்து மலரில்லத்தின் முன்பு கிரிசிட்டு நின்றது.
மலரில்லத்து முகப்பு வாயிலில் மார்பிற்குக் குறுக்கே கைகளை கட்டிக்கொண்டு புன்னகையுடன் நின்றிருந்தாள் செந்தமிழ்...
காவல்துறை வாகன ஒளியில்
ஒட்டுமொத்தக் குடும்பமும் வாயிலை வந்தடைந்தது.
மகிழுந்தைவிட்டு இறங்கிய கறிகாலன் அங்கு குழுமியிருந்த அனைவரையும் ஆராய்ந்தான்.
அப்போது அவனது கவனத்தைச் சொடுக்கிட்டுத் தன்பக்கம் திரும்பிய செந்தமிழ்,
"நாந்தான் நீங்கத் தேடிவந்த செந்தமிழ். யூ கேன் அரஸ்ட் மீ."
என்றாள் கம்பீரத்தில் தோய்ந்தப் புன்னகையுடன்
 

Author: நிதனிபிரபு
Article Title: செந்தமிழ் - 23
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Like
Reactions: Magizh kutty

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,289
370
83
Chennai
எதுக்கு தமிழை arrest பண்ணனும்??????
என்னடா நடக்குது இங்க🤔🤔🤔🤔🤔🤔