• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

செந்தமிழ் - 24

நிதனிபிரபு

Administrator
Staff member
செந்தமிழ்

பதிவு எண்: STN89.
கண்ணம்மா.

அத்தியாயம் 24.
"என்ன நடக்குது இங்க)
உங்களுக்கு என்ன வேணும் சார்?" என ஒன்றையும் புரிந்துகொள்ள முடியாமல் கறிகாலனிடம் வினா தொடுத்த அய்யாதுரை, "தமிழு
ஏன்மா உன்ன நீயே கைது செய்ய சொல்ற? "
எனப் பதற்றம் நிறைந்த குரலில்
வினவியவாறு செந்தமிழின் அருகில் சென்றார்.
"எல்லாம் காரணமாத்தான் மாமா.
அவங்க என்னச் சரியாத்தான் தேடி வந்திருக்காங்க. அவங்கள அவங்களோட வேலையச் செய்யவிடுங்க மாமா." என்ற செந்தமிழின் உதடுகளில்
இன்னுமே புன்னகை மிச்சமிருந்தது. "ரொம்பத் தாராள மனசுதான் உங்களுக்கு மிஸ்ஸஸ் செந்தமிழ். நிலவன்
பண்ற மொள்ளமாரித்தனம் அத்தனையையும் பண்ணிட்டு
இப்போ உங்களக் கைது செய்ய எங்களுக்கு அனுமதி தறீங்க?"; என்று செந்தமிழைப் பார்த்து ஏளனமாகக் கேட்ட கறிகாலன்,
"இந்தப் பத்துமாசமா நிறைய திடீர் மறணங்களக் கேள்விப்பட்டிருப்பீங்க. அஞ்சு பெரிய தாதாக்களோட கொலை,
திடீர் மாரடப்பாளர் இறந்த சடகோபன், வாஞ்சிநாதனோடக் கொடூர மறணம், இதோ இன்னைக்கு பிளாஷ் நியூஸா போயிட்டிருக்குற மருத்துவர் சுந்தரலிங்கம் மற்றும் எம்எல்ஏ வேதநாயகத்தோட
உயிரிழப்புவரைக்கும் பின்னாடி நின்னு ஒவ்வொன்னையும் செயல்படுத்தியது
திருமதி செந்தமிழ் நிலவன்தான். இதத்தவிர ஏரியா ரவுடிங்க சிலரையும் கொல செஞ்சிருக்காங்க.
தனியொரு ஆளா இல்லாம
இவங்களுக்குக் கீழ ஒரு குழுவே இயங்கியிருக்கு.
அந்தக் குழு நபர்களையும் காவல்துறை தனிப்படையமைச்சுத் தீவிரமாத் தேடிக்கிட்டிருக்கு. கிட்டத்தட்டப் பத்துக்கும் மேற்பட்ட கொடூரக் கொலைகள
வெகு சாதுரியமா நிகழ்த்தினதோடு அந்தக் குழுவினரையும் இப்போ பதுக்கிவச்சிருக்காங்க." என்று மொழிந்தவனின் முகத்தில்
அப்பட்டமான வெறுப்புரேகைகள். செந்தமிழ் இவனது பேச்சை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. யாருக்கு வந்த விருந்தோ என்பதாகப்
புன்னகையுடன் முகப்புச் சுவரில் சாய்ந்து நின்றுகொண்டிருந்தாள்.
கறிகாலனின் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தவர்கள்
நம்பமுடியாத அதிர்ச்சியில் உறைந்துபோயினர்.
தங்களது வீட்டில் உதட்டிலுறைந்தப் புன்னகையோடு அமைதியுடன் வலம் வரும் பெண்ணா இதையெல்லாம் செய்தது? இதுவரை அவள் அதிர்ந்துகூடப் பேசியதில்லையே?
தன் சிந்தனையால் கூட ஒருவரையும் நோகடிக்க விரும்பாதவளா இத்தகையக் கொடூரச் செயல்களைச் செய்யத் துணிந்தாள்? எத்தனை முயன்றும் அங்கிருந்த ஒருவராலும் செந்தமிழை ஒரு கொலைப் பாதகியாகக்
கற்பனைக்குக்கூட நினைக்கமுடியவில்லை. ஆனால்
தாந்தான் அனைத்திற்கும் முழுமுதற்காரணம் என்று செந்தமிழே ஒப்புக்கொள்கையில்
அவர்கள் அதை நம்பித்தானே ஆகவேண்டும்; அங்கிருந்தவர்களின் பாவனைகளைவைத்து அவர்களது மனநிலையைக் கணித்த கறிகாலன் பேசினான்.
"உங்களால இதக் கொஞ்சங்கூட நம்பமுடியலல்ல?
தகவல் கிடைச்ச மறுநிமிஷம் என்னாலையுந்தான் நம்பமுடியல. போயும் போயும் ஒரு பொம்பளைக்கு இத்தனத் தெனாவெட்டான்னுதான் தோணுச்சு. அதுலயும் இவங்களுக்குச் சரியான பார்வைத் திறனும் இல்லங்குறபட்சத்துக்கு எப்படி இதெல்லாம் சாத்தியம்னுகூட ஆச்சரியமா இருந்துச்சு. ஆனா தனி ஒருத்தியா னின்னு அத்தனக் காய்களையும் கவனமா நகர்த்தியதோடு எங்களோட டிபார்ட்மெண்டையே நாலாப்புறமும் தெறிச்சு ஓடவச்சதெல்லாம் பெரிய விஷயந்தான். இத்தனச் சம்பவங்களப் பண்ணியிருக்காங்க
அதுக்குக் கொஞ்சமாவது மரியாதசெய்யலன்னா எப்படி?
அதான் உங்களோடக் குடும்பப் பொண்ணக் கூட்டிட்டுப் போக
நாங்கல்லாம் திரண்டுவந்துருக்கோம். இப்ப நாங்க மிஸஸ்ஸ் செந்தமிழ் நிலவனக் கைது பண்ணி நேரா கோர்ட்டுக்குத்தான் கூட்டிட்டுப் போகப் போறோம். அங்கதான் அவங்களுக்குப் பாராட்டுவிழா நடக்கப் போகுது. முடிஞ்சா எல்லாரும் வந்து தவறாம கலந்துக்கோங்க.'
எனக் கூறி வெடிச் சிரிப்பு சிரித்தான் கறிகாலன்.
அந்தச் சிரிப்பில் மிதமிஞ்சிய ஆணவமும் வஞ்சகமும் தொக்கிநின்றது. சற்றுநேரத்தில் மலரில்லமானது பத்திரிக்கை மற்றும் ஊடக துறையினரால் அல்லோலகல்லோலப் பட்டது.
காவல்துறையினர் செந்தமிழைக் கைது செய்யும் காட்சிகள் அனைத்து ஊடகங்களிலும் ஒளிபரப்பப்பட்டன. செந்தமிழ் என்ற ஒற்றைப் பெயர் ஒட்டுமொத்தச் சமூக ஊடகங்களையும் பரபரப்பாக்கியது. "ஏன்மா இப்படி?"
எனத் தன்னறிகில் நின்ற செந்தமிழிடம் வருத்தம் தோய்ந்தக் குரலில் வினவினார் அய்யாதுரை. "எத்தன அமைதியான பொன்ணுநீ?
அந்த அமைதிக்குக் கொஞ்சங்கூட சம்பந்தமேயில்லாத காரியங்களச் செஞ்சிட்டு நிக்கிறியேமா." என்று ஆதங்கப்பட்டார் மனிதர்..
அய்யாதுரைக்கு இன்னொரு மகளல்லவா செந்தமிழ்?
தன் மகள் போன்றவளைச்
சமூகத்தின் பார்வையில்
பெரும் குற்றத்தை ஆற்றிவிட்டப் பாதகியாக விமர்சனம் செய்ய செய்ய
அவரால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. "அமைதி அப்படினா அதுக்கு சாந்தமான மனநிலைநோ, வெகுளித்தனம்நோ, அறியாமைன்னோ சொல்லிடமுடியாது மாமா.
நான் அமைதியான பொண்ணுதான். அது என்னோட இயல்பும் கூட. ஆனா நீங்க சொல்ற
அந்த என்னோட அமைதி
பெரும் சுனாமிய உள்ளடக்கியது." எனச் சிரிப்புடனே பதிலியம்பினாள் செந்தமிழ். செந்தமிழ் சார்ந்தத் தடையங்களை ஊடகவியலாளர்களுக்குக்
காண்பித்து விளக்கிய கறிகாலன், "யூ ஆர் அண்டர் அரெஸ்ட் திருமதி செந்தமிழ் நிலவன்." என்றவாறு
செந்தமிழின் கைகளில் விலங்கிட்டு அவளைக்
கைது செய்தான். முகம்மலர்ச்சியுடன் தனது கைகளில் பூட்டப்பட்ட விலங்கினைப் பார்த்துக்கொண்டே குடும்பத்தினருக்குச் சிறு தலையசைப்பை மட்டும் தந்துவிட்டு காவல்துறை வாகனத்தில் ஏறி அமர்ந்தாள் அவள்...
குழந்தைகள் மூவரையும் அமுதவல்லியின் பொறுப்பில் விட்டுவிட்டு மற்ற மலரில்ல உறுப்பினர்கள் துரித கதியில்
காவல்துறை வாகனங்களைப் பின்தொடரத் துவங்கினர். "நீங்கப் பண்ணுன வேலைக்கெல்லாம்
தூக்குத் தண்டனதான் செந்தமிழ்." என நக்கலாகக் கூறிய கறிகாலனைப் பார்த்த செந்தமிழ், "எனக்கு அதப் பத்தியெல்லாம் துளிகூட கவலயில்ல டீ சி பி சார். தேவையில்லாம நீங்களும் இதப் பத்தி யோசிக்காதீங்க." என்றாள் சிரிப்புடன். இத்தனைக்குப் பிறகும் பெண்ணவளின்
இதழ்களில் குடிகொண்டிருக்கும்
அந்தச் சிரிப்பு கறிகாலனின் ரத்த அழுத்தத்தை நன்றாகவே ஏற்றிவிட்டது. "இருந்தாலும் ஒரு பொம்பளைக்கு இத்தனத் திமிரு ஆகாது செந்தமிழ்." என்று இறைந்தான் கறிகாலன்.
"இந்தத் திமிருமட்டும் இல்லனா உங்களமாதிரி ஆட்களுக்குப் பதிலடி கொடுக்கமுடியாது
டீ சி பி சார்." என்று மொழிந்தாள் அமைதியாக. செந்தமிழின் நிலை வகைகள் இதற்குழுவினரை முற்றுகையிட்டன.
அவர்கள் எண்ணியதுபோலவே அனைத்தும் மிகச்சரியான பாதையில் சென்று கொண்டிருந்தாலும் அனைவரின் தலைக்குமேலும் கத்தி ஒன்று
அவர்களின் உயிரைப் பறிக்கவென்றே தொங்கிக் கொண்டிருக்கிறதே?
யாராவது கொஞ்சம் தடுமாறினாலும் கூட அந்தக் கத்தி ஒட்டுமொத்தமாக
எல்லோரையும் விழுங்கிவிடும்.
அந்தக் குழுவுக்கு மரணம் ஒரு பொருட்டே அல்ல.
தங்களது லட்சியங்களை நிறைவேற்றத் தம்மவரின் உயிரானது தடைக்கல்லாக நிற்குமெனில் அதையும் இழக்க அவர்கள் தயார். எனினும்
உயிரின் பெருமதிப்பை
விதியின் கைங்கரியத்தால் நன்கு உணர்ந்திருந்த செந்தமிழ்
கொள்கைக்காகவே என்றாலும்
எந்த உயிரும் மடிந்து போவதை
மருந்துக்கு கூட
விரும்பவில்லை.
இறுதியில் அவரது அத்துணை மனச்சுமைகளையும்
அவளுக்குத் தாயாகத் திகழும் தமிழன்னையின் காலடியில்
இறக்கிவைத்தாள்.
அவளது இதழ்கள் தன்னைப் போல "நிலவன்;" எனக் கொண்டவனின் பெயரைச் சத்தமின்றி உச்சரித்தன.
"இன்றைய முக்கியச் செய்திகள்.
ஆடை வணிகத்தில் தனக்கெனத் தனி முத்திரையைப் பதித்திருக்கும் ஐயா கைத்தறி ஆடையகத்தின் உரிமையாளர் திரு அய்யாதுரை அவர்களின் மருமகளும், அவரது புதல்வன் திரு நிலவன் அவர்களின் மனைவியுமான திருமதி செந்தமிழ் நிலவன்
இன்று காலை பதினோறு மணியளவில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். பெரிய பின்புலங்கள் ஏதும் இல்லாத இவர் கடந்தப் 10 மாதங்களாக
சமூகத்தை உலுக்கிக் கொண்டிருந்தக் கொடூர மரணங்களை ஒற்றைப் பெண்மணியாக நின்று
தனக்குக் கீழ் ரகசியக் குழு ஒன்றை இயக்கி அரங்கேற்றியுள்ளார்
என்பது தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. .
ஒட்டுமொத்த மாநிலத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள
இந்த வழக்கானது பொதுமக்களின் பார்வைக்கு ஒளிபரப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செந்தமிழ் மற்றும் ரகசியக் குழுவினரால் கொலை செய்யப்பட்ட நபர்களில், சுடரொளிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் நிறுவனர் திரு சடகோபனும் ஒருவர் என்ற திடுக்கிடும் தகவலும் வெளியாகியுள்ளது. கொலை செய்யப்பட்ட நபர்கள் அனைவரும் சட்டத்திற்குப் புறம்பான செயல்களைத் தொழிலாகச் செய்துவந்தனர் என்பதும், எண்ணற்றப் பெண் குழந்தைகளின் உயிரைத்
தங்களது இச்சைக்கும் பணத்தாசைக்கும் இறையாக்கியுள்ளனர் என்பதும்
ஊடகவியலாளர்களால் வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
போன்ற செந்தமிழ் தொடர்பான செய்திகளனைத்தும்
சமூக ஊடகங்களில் காட்டுத் தீயாய்ப் பறவின.
சமூக ஆர்வலர்கள் பலர்
செந்தமிழின் பின்புலம்,
குடும்பம், கல்வி போன்ற அனைத்தையும் குறித்து விவாதிக்கத் துவங்கினர்.
காவல்துறை வாகனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தின்முன்பு நிற்க, வாகனத்தைவிட்டு இறங்கினாள் செந்தமிழ்.
அப்போதே மகளிர் குழுக்கள் சில
வழக்கின் தீவிரத் தன்மையை அவதானிக்க நீதிமன்றத்திற்கு வருகை தந்திருந்தன. அடுத்த சில நிமிடங்களிலேயே
மலரில்ல உறுப்பினர்களும்
நீதிமன்றத்தை வந்தடைய காவலர்கள் புடைசூழக்
கைகளில் விலங்கு பூட்டப்பட்டநிலையிலேயே நீதிமன்றத்திற்குள் நுழைந்தாள் செந்தமிழ்.
வழக்கின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு தாமதமென்பது சிறிதுமின்றி அவசரச் சபையானது கூட்டப்பட்டு உடனடியாக வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இரண்டு பெண் நீதிபதிகள் மற்றும் ஒரு ஆண் நீதிபதி அடங்கிய மூன்று நீதிபதிகளைக் கொண்ட அமர்வு வழக்கினை விசாரிக்கத் துவங்கியது. நீதிபதிகளின் ஒருமித்தக் கருத்தின்பெயரில்
வழக்கின் விசாரணை
நீதிமன்றத்தின் வலைதளத்தில்
நேரலையில் ஒளிபரப்பப்பட்டது.
நீதிபதிகளின் அனுமதியுடன்
வழக்கினை விளக்கத் துவங்கினார் அரசு வழக்கறிஞர்.
கனம்மிகு நீதிபதிகளே
அவசரமாகத் தங்களது பார்வைக்குக் கொண்டுவரப்பட்ட இந்தக் கொலைவழக்குப் பல நுட்பமான கோணங்களை உள்ளடக்கியது.
கடந்த 10 மாதங்களாகப்
பெரும்புள்ளிகள் சிலர் மர்மமானமுறையில் கொலை செய்யப்பட்டார்கள் என்பதை
உங்களது நினைவிற்குக் கொண்டுவரக் கடமைப்பட்டிருக்கிறேன்.
காவல்துறை எத்தனை முயன்றும் கொலையாளிகளையோ
அவரைச் சார்ந்தத் தடயங்களையோ
சிறிதளவேனும் கண்டறிய இயலவில்லை.
இந்த வழக்கிற்கென்று தனிப்படை அமைத்தும்
வழக்கில் எந்த மாற்றமும் நிகழவில்லை.
இந்த வழக்கினை விசாரித்துவந்த முக்கிய அதிகாரி பிறைசூடன் ஏ சி பி
கடந்த இரண்டுநாட்களாகக் காணவில்லை. அவர் காணாமல் போன அந்தத் தினத்தில் ஏசிபி கறிகாலனிடம் சில முக்கிய வேலைகளை முடித்துவிட்டு வருவதாகச் சொல்லி விடைபெற்றிருக்கிறார் பிறைசூடன்.
அதற்குப்பின் கறிகாலனால் பிறைசூடனைத் தொடர்புகொள்ள இயலவில்லை. தற்போதுவரை பிறைசூடன் எங்கு சென்றிருக்கிறார் என்பதும் புரியாத புதிராகவே உள்ளது.
எனினும் காவல்துறையினருக்குப்
போலி மின்னஞ்சல் ஒன்றிலிருந்து குற்றவாளியைச் சார்ந்தத் தடயங்கள்
நேற்றுமாலை பகிரப்பட்டிருக்கிறது. கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில்
திருமதி செந்தமிழ்தான் முக்கியக் குற்றவாளி என்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
தவிர திருமதி செந்தமிழும்
குற்றவாளி தாந்தான் என்று எந்த மறுப்புமின்றி ஒப்புக்கொண்டதால்
இத்தனைக் குற்றங்களைச்
சட்டத்திற்குப் புறம்பாக
அவர் மேற்கொண்டதற்குத்
தகுந்தக் காரணத்தை விசாரிப்பதோடு இத்தகைய சட்டவிரோதமான செயல்களை வன்மையாக கண்டிக்கவேண்டும் என்றும்,
பலியான உயிர்களையும்
அவர்கள் கொல்லப்பட்ட விதத்தையும் தீர ஆராய்ந்து
தங்களது இன்றியமையாத உறவை இழந்து தவிக்கும்
குடும்பங்களின் நிலையையும் கருத்தில் கொண்டு குற்றவாளியின்மீது மிகக் கடுமையான நடவடிக்கையினை எடுக்கவேண்டும் என்றும், குற்றவாளிக்கு
நீதிமன்றத்தால் தீர்ப்பிடப்படும் தண்டனையானது சட்டத் திட்டங்களை அலட்சியம் செய்து
தான்தோன்றித்தனமாக வாழ்க்கையை வாழ்வதோடு
மற்றவர்களையும் தன் விசைக்கு கட்டி இழுத்து இத்தகைய பாதகச் செயல்களை மேற்கொள்ள அவர்களுக்கு வழிகாட்டும்
ஒவ்வொருவருக்கும்
செந்தமிழின் வழக்கானது
பேரடியாகத் திகழவேண்டும் என்ற
கோரிக்கையுடன் அமர்கிறேன்."
என்று மொழிந்த அரசு வழக்கறிஞர் செந்தமிழுக்கு எதிராகத் திரட்டப்பட்ட ஆதாரங்களை நீதிபதி அமர்விடம் சமர்ப்பித்துவிட்டுத் தன்னிடத்தில் அமர்ந்தார்.
சிலநொடிக் கலந்துரையாடலுக்குப் பிறகு நீதிமன்ற அமர்வினைத் தலைமைதாங்கும் பெண் நீதிபதி
செந்தமிழைப் பார்த்துப் பேசத் துவங்கினார்.
அவர் அவளது பெயரை அழைத்ததுமே எழுந்துநின்றாள் செந்தமிழ். "திருமதி செந்தமிழ் நிலவன் நடந்தேறியக் குற்றங்களுக்கு நீங்கதான் தலைமை தாங்கியிருப்பதா
உங்க சுயநினைவோட நீங்களே
ஒப்புக்கொண்டதால வீண் விவாதங்களுக்கு இடமின்றிக்
குற்றவாளி நீங்கதான்னு நிரூபணமாகுது. இருந்தும் உங்கக்கிட்டயிருந்து சில முறையான விளக்கங்கள எதிர்பார்க்கிறோம். "
என்றார் அழுத்தமாக.
தங்களது இத்தனைநாள் போராட்டத்திற்கு முடிவுரை எழுத
மாறாத புன்னகையுடன் குற்றவாளிக் கூண்டில் ஏறினாள் செந்தமிழ்.
 
Top Bottom