செந்தமிழ்
பதிவு எண்: STN89.
கண்ணம்மா.
அத்தியாயம் 3:
தனது வீட்டு அலுவலக அறையில் கைக்குக் கிடைத்தப் பொருட்களை எல்லாம் தன் கோபத்திற்கு இறையாக்கிக் கொண்டிருந்தார் சென்னை மாநகரத்தின் காவல் துறையானையர் மார்த்தாண்டம்.சினம் மிகுதியால் அவரது முகம் செந்தனலைப் பூசிக் கொண்டது. தீக்கங்குகளை உமிழ்ந்து கொண்டிருந்த அவரது முகத்தைப் பார்க்கவே அச்சம் கொண்டனர் அங்கு குழுமியிருந்தக் காவலர்கள்.
"நெலம கைய மீறி போற வரைக்கும் என்னத்தடா புடுங்கிட்டு இருந்தீங்க?" எனப் பற்களை நறும்பியவாறுக் கேட்டார் மார்த்தாண்டம். வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவரது வாயில் நன்றாகவே அரைப்பட்டது.
"இதுவரை நாங்க பண்ணாத முயற்சிகள்னு எதுவுமே இல்ல சார். சந்தேகங்களின் அடிப்படையில கிடைச்ச எல்லாத்தையும் அக்கு வேறு ஆணிவேரா பிரிச்சி ஆராய்ஞ்சுப் பார்த்தும், ஒரு சின்ன தடையம் கூட கிடைக்கல. அவ்வளவு தூரம் நம்மளோட அசைவுகள் ஒவ்வொன்னும் எதிராளிக்குத் துல்லியமாத் தெரிஞ்சிருக்கு."என முடிந்த அளவில் பிரச்சனையின் வீரியத்தை மார்த்தாண்டத்துக்கு உணர்த்தி விடும் முனைப்புடன் பதிலுறைத்தான் பிறைசூடன் ஏ சி பி.
"முட்டாள்: நிலைமைய கைமீற விட்டதும் இல்லாம எதிரிக்குப் பாராட்டுப் பத்திரம் வாசிக்கிறியே உனக்கெல்லாம் வெக்கமா இல்ல? இதக்கூட சமாளிக்க முடியாம நீ எல்லாம் எதுக்கு இந்தக் காக்கிச் சட்டையப் போடுற? போயும் போயும் உனக்கெல்லாம் ஏ சி பி பதவி; அதுவும் எனக்குக் கீழ. உன்னையெல்லாம்..." மேலும் அவனை என்ன சொல்லி இருப்பாரோ ' மே ஆய் கம் இன் அங்கிள்?" என்ற கம்பீரக் குரலில்
எல்லோரினதுத் தலையும் ஒருங்கே அறையின் வாயிலை நோக்கித் திரும்பியது. அங்கு விழிகளில் தொக்கி நின்ற அலட்சிய பாவனையோடு மிடுக்குடன் உள்ளே நுழைந்து கொண்டிருந்தான் டீ சி பி````` கரிகாலன்.
"வாடா கரிகாலா."எனச் சிறு தலையசைப்புடன் அவனை வரவேற்றார் மார்த்தாண்டம்.
உள்ளே வந்த கரிகாலனோ அங்குக் குழுமியிருந்த எல்லோரையும் ஒரு பார்வைப் பார்த்துவிட்டு, மார்த்தாண்டத்திற்குநேரெதிரிலிருந்த மெத்திருக்கையில் கால்மேல் காலைப் போட்டுக்கொண்டு தோரணையாக அமர்ந்தான்.
'என்னதான் நடக்குது கரிகாலன்? உன்கிட்ட இருந்து நான் துளியும் இதை எதிர்பார்க்கல. நீ எல்லாத்தையும் சரியா கவனிச்சுப்பேன்னு நம்பி உன்கிட்ட இந்தப் பொறுப்பைக் கொடுத்ததுக்கு ரொம்ப நல்லாவே என்னோட நம்பிக்கையக் காப்பாத்திட்டடா..."
என்று ஆதங்கத்துடன் மொழிந்தவரின் பார்வை கரிகாலனைக் குற்றஞ்சாட்டியது.
தன் மீதான மார்த்தாண்டத்தின் மனத்தாங்கலுக்கு ஒரு தோள் குலுக்கலை மட்டும் பதிலாகத் தந்தவன் பிறைசூடனைப் பார்த்தான்.
கரிகாலனின் விழிமொழி அறிந்த பிறைசூடன்,அவனிடம் கோப்புகள் சிலவற்றைக் கொடுத்தான்.அந்தக் கோப்புகளில் தன் பார்வையைப் பதித்த வாறே "சொல்லுங்க பிறைசூடன்: கிட்டதட்ட ஐந்து மாதங்கள் உங்களுக்கு அவகாசம் தந்தும், ஏன் உங்களால எதிராளியைச் சார்ந்த ஒரு சின்னத்துரும்பைக் கூட இன்னும் கண்டுபிடிக்க முடியல? இந்தத் தீவிரத் தேடுதல் வேட்டை குற்றவாளியக் கொஞ்சமாவது அசச்சுப்பாக்கும்னு நினைச்சா,அதுக்கு அப்படியே எதிர்ப்பதமா ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டையே ஆட்டிப்படச்சுக்கிட்டிருந்த அஞ்சு பெரிய தாதாக்களக் கொலை செஞ்சது மட்டுமில்லாம,
அவங்களோட சாம்பலப் பொட்டலம் கட்டி , நம்மளோட புலனாய்வு அலுவலகத்துக்கே அனுப்பி வச்சிருக்கான்.இதுல அரசியல் சார்ந்த பெரும்புள்ளிகள் சிலருக்கும் பகிரங்க மிரட்டல் எதிராளித் தரப்பிலிருந்து விடுக்கப்பட்டிருக்கு. இதக்கூட சரிசெய்யாம காவல்துறை என்னத்தக் கிழிச்சுட்டு இருக்குன்னு அரசியல்வாதிகள் கொந்தளிக்கிறாங்க. அதோட நீட்சியா பத்திரிக்கைத் துறையும் நம்மளப் பத்தி கண்ட மாதிரி விமர்சனங்களை எழுதித் தள்ளுது. இதுக்கெல்லாம் என்னதான் முடிவு பிறைசூடன்? ஒருவேள இவங்க எல்லாம் சொல்லுற மாதிரி , உங்க எல்லாரோட மெத்தனப்போக்குதான் இதுக்கெல்லாம் முக்கியக் காரணம்னு நான் எடுத்துக்கலாமா! என்று குரலில் கடினத்தைத் தேக்கி வினவிய கரிகாலனின் கேள்வியில் வெகுண்டெழுந்தான் பிறைசூடன்.
"என்னப் பேசுறீங்க சார் நீங்க?கடந்த ஆறு மாதங்களாக் கொலையாளியைக் கண்டுபிடிக்க எங்களால என்ன எல்லாம் செய்யமுடியுமோ அத்தனையையும் செஞ்சு பாத்துட்டோம். ஆனா அதுக்குக் கிடைச்சப் பலன் என்னவோ பூஜியம் தான். கொலையாளியை நெருங்கிட்டோம்னு நாங்க நினைக்கிர ஒவ்வொரு சமையமும், காவல்
துறையவே தலையால நின்னுத் தண்ணிக்குடிக்க வச்ச அஞ்சு தாதாக்களை, ஒரு மாசத்துக்கு ஒருத்தருன்னு தவனைமுரையில கொலை செஞ்சு, அவங்களோட சாம்பலை நம்ம அலுவலகத்துக்கே அனுப்பி வச்சான்.குற்றவாளியச் சுத்திவளைக்க எங்களோட சேந்து மின்னனுக் குற்றத் தடுப்புப் பிரிவினரும் போராடினாங்க. இருந்தும் ஒரு பிரயோஜனமும் இல்ல.அதவிடக் குற்றங்கள் நிகழ்த்தப்படுறப் பெரும்பாலான பகுதிகள்ள கண்காணிப்புப் படப்பிடிப்பான்கள் சரிவர இயங்கல. எல்லாமே பழுதடைஞ்சு இருக்கு. இது குறித்து அந்தந்தப் பகுதிகளைச் சார்ந்த நகராட்சிகள்ல புகார் அளிச்சும் இப்ப வரை எந்தஒரு நடவடிக்கையும் எடுக்கப்படல. கமிஷனர் சார் கிட்டயும் நான் இந்த விடயத்தைப் பத்திப் பலமுறை சொல்லிட்டேன். அவர் அதக் கண்டுக்கிட்ட மாதிரியே தெரியல.."
என்று பொறிந்தவன்,
"கடந்த அஞ்சு மாசமா நாங்க மேர்க்கொண்ட நகர்வுகள் அணைத்தும் வலுத்துல்லியமா இந்தக் கோப்புகள்ளக் குரிப்பிடப் பட்டிருக்குன்னு நம்புறேன்.'என்றவன், விரலி ஒன்றைக் கரிகாலனிடம் நீட்டினான்."வழக்குச் சம்மந்தமா நான் சேகரிச்சு வச்ச எல்லா ஆதாரங்களும் இந்த பென்டிரைவ்வுல இருக்கு.."எனக் கூறியவன், மேலும் தனது மடிக்கணினியை இயக்கிச், சில தகவல்களையும், இந்த வழக்கின் போக்கினைக் குறித் த அவனது யூகங்களையும் பகிர்ந்து கொண்டான்.
பிறைசூடனை மெச்சும் பார்வைப் பார்த்தான் கரிகாலன்.
"சரி பிறைசூடன்: இப்போ நீங்க நம்ம டீமோட போய் நான் சொல்ற வேலைகளைப் பாருங்க. நானும் கொஞ்ச நேரத்துல உங்களோட ஜாயின் பண்ணிக்கிறேன்." என்று மொழிந்தவன், அவர்களுக்குச் சில கட்டளைகளைப் பிறப்பித்தான்.
கரிகாலன் சொல்லியவற்றையெல்லாம் செய்து முடிப்பதாகக் கூறிய பிறைசூடன்,
அப்படியேத் தயங்கி நின்றான்.
என்ன பிறைசூடன்?"எனப் புருவத்தை உயர்த்தி வினாத் தொடுத்தான் கரிகாலன்.
"சார் எனக்கென்னவோ குற்றவாளிக்கு நம்மப் பக்கத்துல இருந்துதான் தகவல்கள் பகிரப்படுதுனு தோணுது.இல்லாட்டி எப்படி சார் நம்மோட ஒவ்வொரு நகர்வுக்கும்
அவனால சரியான பதிலடியைக் கொடுக்க முடியுது? அதுலயும் குரிப்பா நாம அவன நெருங்குறச் சமயமா பாத்து, சமுகத்திர்க்குப் பரிட்சயமாந முக்கியப் புள்ளி யாரையாவது கொடூரமாண முரைஇல கொலை செஞ்சு நமக்கு இன்னும் இன்னும் அழுத்தத்தைக் கூட்டி, ஒரு நிலையா செயல்பட விடாமத் தடுக்குறது எல்லாம் ஒரு தனி மனிதனாலயோ,
இல்லாட்டாக் குற்றங்கள் செய்ற தனிப்பட்டக் குழுவாலையோ மட்டும் செஞ்சிட முடியும்னு எனக்குத் தோணல."
பிறை சூடனின் பேச்சில் அங்கிருந்த மற்றக் காவலர்கள் திகைத்தனர். கரிகாலனின் பார்வையும் அங்கிருந்த ஒவ்வொருவரின் மீதும் ஆராய்ச்சியாகப் படிந்து மீண்டது.
மார்த்தாண்டமுமே இதை இந்தக் கோணத்தில் யோசித்துப்ப் பார்த்திருக்கவில்லை என்பதால், பிறைசூடனையே கூர்மையுடன் ன்நோக்கிக்கொண்டிருந்தார்.
"அப்படின்னா இந்தக் குழுவில் இருக்கிற யாரோ ஒருவர்தான் எதிராளிக்கு உதவுறதாச்
சொல்ல வரீங்க இல்லையா பிறைசூடன்?" எனக்கேட்ட கரிகாலனிடம் மறுப்பாகத் தலையை அசைத்தவன், "இல்ல சார்; இதப் பத்தி எனக்கு எந்த அபிப்ப்ராயமும் இல்லை.
ஒருவேளை இது என்னோட கற்பனையாக க்கூட இருக்கலாம்.
ஆனா பிரச்சனையோட வேர் நம்ம பக்கத்துலதான் இருக்குங்குறது தின்னம் எனக்கு." என்றான் அழுத்தமாக.
அதேகணம் அந்த அறையின் சாளரத்தின் அருகே நின்ற உருவம் மின்னலென அவ்விடத்திலிருந்து மறைந்தது. ஏதோ உருத்துவது போல் இருக்கச், சட்டென ஜன்னல் புறம் தன் பார்வையைத் திருப்பினான் பிறைசூடன்.
அங்கு அவனது கண்ணிற்கு எதுவும் புலப்படாவிட்டாலும், சாளரத்தின் திரைச்சீலை லேசாக விலகி இருந்ததை அவனது விழிகள் கூர்மையுடன் படம் பிடித்துக் கொண்டன.
ஒருவித வேட்கையோடு
"அந்தக் கருப்பாடு யாருன்னு நானே கண்டுபிடிக்கிறேன்..."எனத் தனக்குள் சூளுரைத்துக் கொண்டவன், மார்த்தாண்டத்திடமும், கரிகாலனிடமும் விடைபெற்றுத், தங்களது குழுவினருடன் தேடுதல் வேட்டையைத் தொடரப் புறப்பட்டான்.
இவர்கள் அனைவரும் அறையிலிருந்து வெளியேறிய அடுத்த நிமிடம், மார்த்தாண்டத்தை நக்கல் பார்வைப் பார்த்தான் கரிகாலன். அந்தப் பார்வையில் எண்ணற்ற
விடயங்கள் பொதிந்திருந்தன.
"இப்படி என்னப் பாக்குறதால எதுவும் மாறப்போவதில்லை கரிகாலன். இந்தப் பிரச்சனைக்கானத் தீர்வை ரொம்பவேச் சீக்கிரமாக் கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயத்துல நாம இருக்கோம். அத நெனவுல வச்சு இதுக்கு ஒரு முடிவக் கட்டு ."என ஆளுமையாகக் கூறினார் மார்த்தாண்டம்.
அவரது வார்த்தைகளில் எரிச்சலுற்றக் கரிகாலன் நெற்றியை அழுந்தத் தேய்த்துவிட்டு,
"பிறை சூடன் ரொம்பப் புத்திசாலி. கூர்மையாச் சிந்திக்கிறவனும் கூட.
ஆனா இது இந்த வழக்குக்குச் சாதகமா இல்ல பாதகமான்னு பொறுத்திருந்துதான் பாக்கணும்." என்றவன், ஆணையருடன் தீவிரமாக எதையோ உரையாடத் துவங்கினான்.
அவர்களது அந்த உரையாடல் பலமணி நேரங்களுக்கு நீண்டு கொண்டே சென்றது.
"வேலுநாச்சி:" என்ற மார்த்தாண்டத்தின் கர்ஜனையில், கழுவிக் கொண்டிருந்தப் பாத்திரத்தை அப்படியேப் போட்டுவிட்டு மார்த்தாண்டத்தின் அலுவலக அறையை நோக்கி அரக்கப் பறக்க ஓடினார், அவரது மனைவி வேலுநாச்சி. "என்ன வேணும்ங்க?" என வினவியவாரு அறைக்குள் நுழைந்தவருக்குப் பலமாக மூச்சு வாங்கியது.
"படுபாவி; முட்டி வலியால அவஸ்தப்படுற என்னை வேணும்னே மூனு மாடி ஏர விடுறானே:
பாரு; நல்லா மூக்குப் பிடிக்கத் தின்னுத் தின்னு எப்படி உடம்ப வளத்து வச்சிருக்கான்னு:
இவனோட காலு நெருப்புலப் பொசுங்க: மொரச்சுப் பாக்குர அந்தக் கண்ணு ரெண்டும் அப்படியே அவிஞ்சு போக; தாறுமாறா என்னப் போட்டு அடிக்கிற அந்தக் கை ரெண்டும் வெளங்காமப் போக:"என்று கணவனை மனதில் கொஞ்சியவர், மார்த்தாண்டத்தின் அழைப்பில் அவரை நோக்கினார்.
"என்ன; அதுக்குள்ள வேற உலகத்துக்குப் போயாச்சோ?"என ஒருவித நக்கல் தொனியில் கேட்டவர், "போடி; இப்படியே வாயப் பாத்துட்டு நிக்காம போய் சாப்பாட்டை எடுத்துட்டு வந்து இங்கயே பரிமாறு." எனக்கூறியவருக்குத் தலையை மட்டுமே ஆட்ட முடிந்தது வேலு நாச்சியால்.அதற்கு எதிர்ப்பதமாக அவரின் உள்ளம் ஆற்றாமையில் குமைந்துப் போயிற்று.
"முருகா இவனுக்கெல்லாம்; எதையோ சொல்ல வந்து விட்டுச், சட்டெனநாக்கைக் கடித்த வேலுநாச்சி, "வேனாம் வேனாம்; இவன் இப்படியே இருந்துத் தொலையட்டும். இல்லாட்டா அதுக்கும் என்னோட உயிரைத்தான் வாங்குவான்."என்று முனுமுனுத்த வாரேச் சமையலறைக்கு விரைந்தார்..
சமூக வலைத்தளமான புலனத்தில், குழு ஒன்று வெகு மும்முரமாக உரையாடலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது.
"கல்லெரிந்த ஓடம்..' என்று எழுதி இருந்தக் குறுஞ்செய்திக்கு,
"முண்டி மோதும் துணிவே இன்பம்..." எனப் பதிலளிக்கப்பட்டது.
"மதில் மேல் பூனை..."என்ற வார்த்தைகள் அடங்கியச் செய்தி அதே நபரிடமிருந்து மீண்டும் வர, "செய்வனத் திருந்தச் செய்..." என்ற வாக்கியம் பதிலானது. சில பலத் தகவல் பரிமாற்றங்களுக்குப் பிறகு, "இறுதி சாசனம் எப்போது???". "வாய்க்குமா வாய்ப்பு???"
"கிடைக்குமா நீதி???""வெல்லுமா தர்மம்???"ஐயத்துடன் வெளிவந்தக் கேள்விகளுக்குத்,
"தோல்வி நிலை என நினைத்தால், மனிதன் வாழ்வை நினைக்கலாமா?
வாழ்வைச் சுமையென நினைத்துத் தாயின் கனவை மிதிக்கலாமா?
உரிமை இழந்தோம்,
உடமையும் இழந்தோம்
உணர்வை இழக்கலாமா?
உணர்வைக் கொடுத்து,
உயிராய் வளர்த்தக் கனவை மறக்கலாமா?
விடியலுக்கில்லை தூரம்:
விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்?
உன் நெஞ்சம் முழுவதும் வீரம்:
இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம்?
உரிமை இழந்தோம்
உடமையும் இழந்தோம்
உணர்வை இழக்கலாமா?
உணர்வைக் கொடுத்து,
உயிராய் வளர்த்தக் கனவை மறக்கலாமா???"
தனியாத சீற்றத்துடன் குரல் பதிவில் ஓங்கி ஒலித்த வார்த்தைகளே அக்கணம் அந்தக் குழுவின் தாரக மந்திரம் ஆனது. அதிதீவிரத்துடன் மீண்டும் துவங்கிய உரையாடல்
அக்குழுவின் கூட்டுக் காணொளி அழைப்பிற்கான ஆயத்தங்களுக்கு முகவரி இட்டு நிறைவுற்றதோடு, நிமிடங்களில் அக்குழு முற்றாக அழிக்கப்பட்டிருந்தது…

Author: Vishakini
Article Title: செந்தமிழ் - 3
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.