செந்தமிழ்
பதிவு எண்: STN89.
கண்ணம்மா.
அத்தியாயம் 5.
வசந்தன் மீராவின் திருமணம் முடிந்து சில மாதங்கள் கடந்திருந்தன.
அன்று வசந்தனின் பிறந்தநாள். தனக்கான வகுப்புகள் நிறைவுற்றதும் வேகவேகமாக
வீட்டிற்கு வந்து சேர்ந்தான் வசந்தன்.அது என்னவோ அவனால் அன்று
தனது வேலைகளில் முழுமையாகக் கவனம் செலுத்த இயலவில்லை. கொண்டவளே அவனது அகக்கண்ணில் தோன்றி, அவனை வைத்துச் செய்து கொண்டிருந்தாள்.
காலையில் அவள் அவனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லாதது வேறு மனதைப் போட்டுக் குடைந்தது..அவன் வகுப்பறையில் இருப்பான் எனத் தெரிந்தும் சமயங்களில் வேண்டுமென்றே அவனுக்கு அழைத்து, அவனை இம்சிக்கும் மீரா, இன்றுபார்த்து
வசந்தனுக்கு ஒரு குறுஞ்செய்தியைக் கூட அனுப்பிவைக்காமல் இருந்தது
அவளில் மெள்ளியச் சினத்தைக் கூடத் தோற்றுவித்தது.
தன்னைக் குறித்தே மிகவும் ஆச்சரியமாக இருந்தது வசந்தனுக்கு. அந்த அளவில் அவனுக்கே அவன் புதிதாகத் தெரிந்தான்; இல்லை இல்லை அவனை அப்படி மாற்றியிருந்தாள் அவள்; இந்த வசந்தனின் மீரா.
"ராட்சசி!' என முனுமுனுத்தவனின் அதரங்கள் மென்னகையில் நெலிந்தன.
அவனது கைகள் தன்னைப் போல் கேசத்தைக் கோதிக் கொடுத்துக் கொண்டன.
வசந்தனுக்குப் பிறந்தநாளைக் குறித்து எந்தவொரு அபிப்ராயமும் இருந்தது கிடையாது.
அவனளவில் எல்லா நாட்களையும் போல அதுவும் ஒரு நாள் அவ்வளவே.
மிஞ்சிப்போனால், தெய்வானை ஆச்சிவசந்தனின் பிறந்தநாளில் கோவிலுக்குச் சென்று, அவரது பேரனுக்காக, அவனது நல்வாழ்விற்காக அர்ச்சனைச் செய்துவிட்டு வருவார். அதற்குக் கூட இவன் அவருடன் சென்றது கிடையாது.
அப்படியானவனுக்கு முதல்முறையாக மீராவும் நிலவனும் அவனது பிறந்தநாளன்று அவனுக்கு வாழ்த்துக் கூறிப் பரிசளித்ததெல்லாம் மிகவும்விசித்திரமாக இருந்தது.
இருப்பினும் அவர்களது நிகரற்றத் தூய அன்பினை உதாசினம் செய்யமுடியவில்லை வசந்தனால். சிறு புன்னகையுடன் அனைத்தையும் ஏற்றுக் கொண்டான்.
அதற்குப் பிறகான வசந்தனின் பிறந்தநாட்களில் இதுவே வாடிக்கையாகிப் போனது.
வசந்தனுக்காக அமுதவல்லியின் கையால் தயாரிக்கப்படும் பால் பாயாசமும் அன்றைய நாளின் முக்கிய இடத்தினைப் பிடித்திருந்தது.தனது முந்தையப்பிறந்தநாளின்போதுதான் மீரா அவனிடம் அவன் மீதான அவளது நேசத்தைக், கடிதத்தின் வடிவில் கடத்தியிருந்தாள்.
இன்றோ அவனவளாக அவனது அருகில் இருந்துகொண்டு நித்தமும் அவனை வசமிழக்கச் செய்கிறாள். அவளின் பால்மனம் மாறாத பிரியத்தில் அதன் பரிசுத்தத்தில் கிரக்கமுற்றான்.அவளது வாழ்த்துதல் இல்லாமல் இந்த நாள் வெறுமையைப் பூசிக்கொண்டதுபோல் ஒரு மாயை வசந்தனுக்கு.
வீட்டிற்குள் நுழைந்த வசந்தன்,எல்லோரினது கேள்விக்கும் அரைகுறையாகப் பதில் தந்துவிட்டுத் தங்களது அறைக்கு விரைந்தான் மீராவும் அவர்களது அறையில்தான் அமர்ந்திருந்தாள். அறைக்குள் வந்தவனோ கதவினை அடைத்துத் தாழிட்டுவிட்டு, அவனது மனைவியின் புறம் சென்று நின்றான். கட்டிலில் அமர்ந்திருந்த மீராவும் அவனை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு அமைதியாக இருந்தாள்.
அதற்குமேலும் தாமதிக்கவில்லை வசந்தன்.;
"ஏண்டி எனக்குப் பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லல? எங்கடி எனக்கான பரிசு? " என்ற அவனின் வார்த்தைகள் என்ன முயன்றும் காட்டமாகவே வெளிவந்தன.
மீரா அவனது கேள்விக்கு விடையளிக்க முற்படுகையில் ,அவள் ஆற்றியப் பிழைக்குத் தண்டனையளிக்கத் துவங்கியிருந்தான் வசந்தன். நிமிடங்கள் கழித்து அவளிடமிருந்து விலகியவன்,
"அம்மணி இப்பவும் வாழ்த்துச் சொல்லமாட்டிங்க அப்படித்தானே?" என்று வினவியவனின் குரலில் எதை உணர்ந்தாளோ! அடுத்த நிமிடம் அவனது நெஞ்சில் தஞ்சமாகியிருந்தாள்.
"என்னடி?" அவனது குரல் குறைந்தே வெளிவந்தது. உதட்டில் உறைந்தப் புன்னகையோடு, வசந்தனின் கையை எடுத்துத் தன் வயிற்றின்மீது வைத்தவள்,
" உங்களுக்கான என்னோடப் பிறந்தநாள் பரிசு இதுதான்."என்று சொன்னவளின் உதடுகள் வசந்தனின் நெஞ்சத்தை மயிலிறகாய் வருடின.
"என்ன வாத்திப் பிறந்தநாள் பரிசு பிடிச்சிருக்கா?" என்று வினவியவாரு எம்பி அவனது நெற்றியில் இதழ்ப் பதித்தவளோ,
"இந்த மீராவின் செல்ல வசந்தனுக்கு மனம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்." என வாழ்த்தினால் மாறாத புன்னகையோடு.
மீரா தந்த ஆனந்த அதிர்ச்சியில் திக்குமுக்காடிப் போனான் வசந்தன். "யார் இந்தப் பெண்?
எங்கிருந்து வந்தாள் இவள்? நேசம் என்ற ஒற்றைச் சொல்லில் அவனது வாழ்வையே வண்ணமயமாக மாற்றிவிட்டாலே!"நினைக்க நினைக்க வசந்தனின் ஒவ்வொரு அணுவும் புல்லரித்தது. தனது தேவதைப் பெண்ணை முகம் கொள்ளாப் புன்னகையோடு அப்படியே கைகளில் அள்ளிக் கொண்டான் வசந்தன். ஒட்டுமொத்தக் குடும்பமும் மகிழ்ச்சியென்னும் ஓடத்தில் திளைத்துக் கழித்திருந்த நாட்கள் அவை.
அந்த இன்பத்திற்கே இன்பம் சேர்க்க என வந்தவள் தான் மலர் இனி குட்டி. மலரினிக்குப் பிறகு அடுத்த மூன்று வருடங்களிலேயே வசந்தன் மீரா தம்பதியினருக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது.
தெளிந்த நீரோடையாய்ச் சென்றுகொண்டிருந்த அவர்களது வாழ்க்கை அந்த ஒரு நாளில்
ஒன்றுமில்லாமல் உருக்குளைக்கப்பட்டது. அந்த ஒரு நாள்மட்டும் அவர்களது வாழ்வில் வராமலேயே இருந்திருக்கலாம். என்ன செய்ய; நினைப்பவையெல்லாம் நடைபெறுமாயின்அதற்குப் பெயர் வாழ்க்கையும் இல்லை, அதனுடைய ஆகச்சிறந்த கைப்பாவையாகத் திகழ்ந்து கொண்டிருக்கும் நாம் மனிதர்களும் இல்லை...
"அடியே; ஓடாம ஒழுங்கா ஒரு இடத்துல நில்லுடி. இதுக்குமேலயும் உன்னைத் துரத்திப் பிடிக்க எனக்குச் சுத்தமா தெம்பு இல்ல. " உணவை வாங்க மறுத்து ஒட்டுமொத்த மலரில்லத்தையே சுற்றி ஓடித், தாய்க்குப் போக்குக் காட்டிக் கொண்டிருந்த மலரினியைச்
சமாளிக்கும் வகையறியாமல் ஓய்ந்துபோய் உணவுத் தட்டுடன் பலாமரத்தடித் திண்டில் தொப்பென்று அமர்ந்தாள் மீரா.
இவர்களின் சத்தத்தில் மலர் இல்லத்துப் பூங்காவில் நடைபயின்று கொண்டிருந்த செந்தமிழ் பலாமரத்தடிக்கு வந்தாள். அவ்வளவுநேரமும் நிற்காமல் ஓடிக் கொண்டிருந்த மலரினி, தனது அத்தையைக் கண்டதும் முகம் முழுக்கப் புன்னகையுடன் விரைந்து தனது அத்தையின் அருகில் சென்றாள்.
திண்டில் அமர்ந்திருந்த செந்தமிழின் சேலையை விலக்கி, உப்பியிருந்த அவளது வயிற்றில் முத்தமிட்டுவிட்டுக், கூச்சத்தில் நெளிந்துகொண்டிருந்தத் தனது அத்தையைப் பார்த்துக் கிளிக்குச் சிரித்தாள்.
"தமிழு குட்டீஸ சீக்கிரம் வெளியே வரச் சொல்லு; எனக்கு அவங்கள இப்பவே பாக்கணும். எத்தனை நாளைக்குத்தான் அவங்கள உன் வயித்துக்குள்ளயே வச்சிருப்ப?"
என்ற மலரினியின் கேள்விக்கு,
"எங்க இனி குட்டி சமத்தா சாப்பாட்ட மிச்சம் வைக்காம சாப்பிட்டு முடிப்பாளாம்; அப்புறம் தமிழ் குட்டீஸ உடனே வெளியே வரச் சொல்லுவேனாம். டீல் ஓகேதானே? எனக்கேட்ட தமிழைத் தனது மீன் விழிகளாள் முறைத்துப் பார்த்தாள் மலரினி.
"போ தமிழு நான் எப்ப கேட்டாலும் நீ இதையேதான் சொல்ற ஆனா செய்யமாட்டேங்குற." என்று சிணுங்கிக் கொண்டே மொழிந்தவளை அப்படியே தன் கைகளில் ஏந்திக் கொண்டான் நிலவன்.
"மாமாவோடத் தங்கக் குட்டி இன்னும் கிளம்பாம என்ன செய்றீங்க?
இதோ பார்த்தீங்களா மாமா டிப்டாப்பா ரெடியாகி, என்னோட செல்லத்தை ஸ்கூலுக்குக் கூட்டிட்டுப் போக பைக்கோட வந்துட்டேன். சீக்கிரமாச் சாப்பிட்டு வாங்க பாப்போம். நீங்க திரும்பி வரும்போது உங்களுக்குப் பிடிச்ச ஐஸ்கிரீமை அத்தை செஞ்சு வச்சிருப்பா." என அவன் உரைத்ததுதான் தாமதம்;
"இதோ வந்துட்டேன் மாமா.ஒரு ரெண்டு நிமிஷம் மட்டும் வெயிட் பண்ணுங்க." எனக் கூறியவளோ தாயிடம் சென்று நல்ல பிள்ளையாக உணவை உண்டுமுடித்தாள்
எல்லோருக்கும் முத்தம் கொடுத்து அவர்களுக்கு பாய் சொல்லி விடைபெற்றவள்
தங்களிடம் திரும்பி வரவே போவதில்லை என்பதை ஒருவரும் அறிந்திருக்கவில்லை.
மலரினியை அவளது பள்ளியில் இறக்கிவிட்ட நிலவன்,
"அம்முக் குட்டி: நல்லபடியா வகுப்பையெல்லாம் கவனிங்க: மாமா சாயங்காலம் வரேன்.
அதுவர கவனமா இருக்கணும் சரியா???" என்றவன்
தன் மருமகளைஅணைத்து முத்தமிட்டான். "சரி மாமா: நான் பார்த்துக்கிறேன். நீங்களும் பத்திரமா ஆபீஸ் போயிட்டு, லேட் பண்ணாம சரியான நேரத்துக்கு என்னக் கூப்பிட வந்துடனும் புரிஞ்சதா?" என விழிகளை உருட்டிக் கேட்டக் குருத்தின் பால்மனம் கசிய, "மாமாவோட இனி குட்டியின் வார்த்தைக்கு மறுப்பு யேது? இனி பாப்பா அவளோட வகுப்பையெல்லாம் முடிக்கும்போது, மாமாவும் என்னோட வேலையெல்லாத்தையும் முடிச்சிட்டுப், பாப்பாவக் கூட்டிட்டுப் போக டான்னு வந்துருவேன் . அப்புறம் அப்பாவோட சேர்ந்து மாமாவும் பாப்பாவும் மலர் இல்லத்தில் செடிகளுக்கெல்லாம் தண்ணி விடுவோமாம் . சரியா? இப்போ மாமா வேலைக்குப் போயிட்டுவரேன்டா."என்றவன் மீண்டும் தன் மருமகளை உச்சிமுகர்ந்தான்.
மலரினியும் அவளது மாமனின் கன்னத்தில் மாறிமாறித் தன் செப்பு இதழ்களை ஒற்றி எடுத்துவிட்டுப், புன்னகையுடன் அவனுக்குத் தலையசைத்துத் தனது வகுப்பறைக்கு விரைந்தாள்.
விரிந்த முறுவளுடன் அவளையே சில நொடிகள் விழியெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்த நிலவனும் அங்கிருந்து புறப்பட்டான்.
இவர்களின் நிம்மதியை நிர்மூலமாக்கியே தீருவேன் எனக் கங்கணங்கட்டிக் கொண்டிருந்த விதியும்,தனது கோரத்தாண்டவத்தை நிகழ்த்தத் துவங்கியது.
அடுத்த சில மணிநேரத்தில் கிடைத்தச் செய்தியில் மலர் இல்லமே ஆட்டங்கண்டது.
எவராலும் தங்களது காதுகளை நம்பமுடியாமல் போயிற்று. அந்த அளவில் அவர்களிடம் அளிக்கப்பட்டத் தகவல் அவர்களை நிலை இழக்கச் செய்தது. முகத்தில் அறைந்த நிஜத்தை ஏற்கத் திராணியற்று வேரற்றக் கொடியாய் மயங்கிச் சறிந்தாள் மீரா.
கொண்டவளைத் தாங்கிப் பிடிக்கக் கூடத் திறனற்று அவள் அருகிலேயே மடங்கி அமர்ந்தான் வசந்தன்.
அவ்வில்லத்துப் பெண்களின் ஓளக் குரல்கள் நேர்ந்துவிட்ட இழப்பின் வீரியத்தைப் பறைசாற்றிக் கொண்டிருந்தது. அசையக் கூட மறந்துநின்றார் அய்யாதுரை.
தனது கையில் திணிக்கப்பட்ட அந்த மருத்துவர் அறிக்கையை வாசித்துப் பார்த்த நிலவன், பொங்கிப் பெருகியச் சினத்திலும், ஆவேசத்திலும் ஓங்கித் தனது கையை எதிரிலிருந்த சுவற்றில் பலமாகக் குத்தினான். அவனது செய்கையில் அறிக்கையின் சாராம்சத்தை விளங்கிக் கொண்ட செந்தமிழின் இதழ்கள் விரத்தியில் வளைந்தன…