• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

செந்தூரம் தமிழ் நாவல் போட்டி தள்ளி வைக்கப்படுகிறது

நிதனிபிரபு

Administrator
Staff member
அன்பு வாசக உறவுகளுக்கு வணக்கம்,

செந்தூரம் தமிழ் நாவல் போட்டி 2026 - எந்தவிதமான தடங்கல்களும் வந்துவிடக் கூடாது என்று முன்கூட்டியே திட்டமிட்டு, ஆயத்தங்கள் செய்து, எங்கள் எழுத்துக்கும் எவ்விதமான இடையூறுகளும் வந்துவிடக் கூடாது என்று பார்த்து பார்த்து ஆயத்தம் செய்ய ஆரம்பித்தோம்.

அதற்கான போஸ்ட்டர் அடித்ததிலிருந்து, முன்கூட்டியே இங்கே தெரியப்படுத்தி, போட்டியில் கலந்துகொள்ள விரும்பும் எழுத்தாளர்கள் யோசித்து நிதானமாக முடிவு செய்ய நேரம் கொடுத்து, உங்கள் எல்லோரினதும் உதவிக்காக ஒரு மொடரேட்டரை நியமித்து என்று அனைத்தையும் செய்து, காரியம் கைகூடுகிற பொழுதில் சைட் தன் வேலையைக் காட்டிவிட்டது.

டிசம்பர் நடுப்பகுதியிலிருந்து தளம் ஒழுங்காக வேலை செய்யவே இல்லை. இன்று சரியாகிவிடும், நாளை சரியாகிவிடும், டெவலப்பர் சரி செய்துவிடுவார் என்று மிகுந்த நம்பிக்கையோடு இருந்தோம்.

இதோ இந்த நிமிடம் வரையிலும் தளத்தைச் சரி செய்வதற்கான போராட்டம் நடந்துகொண்டே இருக்கிறது. ஜனவரி 14க்குள் தளம் சரியாகும் என்கிற நம்பிக்கை இப்போது எனக்கே இல்லை. அதனாலதான் இந்த அறிவிப்பு.

போட்டி தொடங்கும் நாள், ஜனவரி 14 என்பதை பெப்ரவரி 14காகத் தள்ளி வைக்கிறோம். அதற்குள் தளம் சரியாகிவிடும் என்று நம்புகிறேன். ஒரு வாரமோ இரண்டு வாரமோ தள்ளி வைத்து, தளம் சரியாகாமல் திரும்பவும் வந்து ஒரு போஸ்ட் போடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை.

அதனால் மொத்தமாக ஒரு மாதத்துக்குத் தள்ளி வைக்கிறேன். ஆனால், அதற்கு முதலே தளம் சரியாகிவிட்டால் எழுத்தாளர்களிடம் தெரிவித்து, அவர்களின் அனுமதியோடு அப்போதே போட்டியை நாம் ஆரம்பிக்கலாம்.

அதே நேரத்தில் பெயர் தந்து, கதைக்கான கருவை யோசித்து, எழுதுவதற்கு உற்சாகமாகக் காத்திருக்கும் எழுத்தாளர்களை ஏமாற்றுவதில் எங்களுக்குக் கொஞ்சமும் உடன்பாடில்லை. அதனால் யோசித்து ஒரு முடிவுக்கு வந்திருக்கிறோம்.

sendhuram26@gmail.com

இது செந்தூரம் நாவல் போட்டிக்கு என்றே பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட மெயில் ஐடி. நீங்கள் ஜனவரி 14 முதல் உங்கள் கதைகளின் அத்தியாயங்களை எழுதி, இந்த மெயில் ஐடிக்கு அனுப்ப ஆரம்பிக்கலாம்.

தளம் சரியானதும் நமது மொடரேட்டர் சீரான இடைவெளியில் உங்கள் நாவல்களின் அத்தியாயங்களைத் தளத்தில் பதிவிட ஆரம்பித்துவிடுவார். அதன் பிறகான அறிவிப்புகள் அந்த நேரத்தில் உங்களுக்கு வந்து சேரும்.

அதனால் ஜனவரி 14 தொடக்கம் நீங்கள் கதைகளுக்கான அத்தியாயங்களை எழுதி அனுப்பலாம். தளத்தில் எப்போதிலிருந்து நாவலைப் பதிய ஆரம்பிக்கிறோமோ அப்போதிலிருந்து சரியாக நான்கு மாதங்களுக்கு நாவல் போட்டி நடக்கும்.

உதாரணத்திற்கு பெப்ரவரி 14 ஆரம்பித்தால் செப்டெம்பர் 15வரை போட்டிக் காலம்.

முக்கிய விடயம்: அத்தியாயங்களை ஒன்றுக்கு இரண்டு முறை சரி பார்த்து, கதையின் பெயர், அத்தியாய இலக்கம் ஆகியவற்றை மேலே குறிப்பிட்டுத் தெளிவாக எழுதி அனுப்புங்கள். ஒரே அத்தியாயத்தை இரண்டு மூன்று முறைகள் அனுப்புகிறபோது குழப்பங்கள் உண்டாவதற்கு சாத்தியங்கள் அதிகம்.

அடுத்த முக்கிய விடயம்: sendhuram26@gmail.com - இந்த மெயில் ஐடிக்கு உங்கள் கதைகளின் அத்தியாயங்களை மட்டுமே அனுப்ப வேண்டும். உங்கள் கேள்விகள், சந்தேகங்கள் போன்றவற்றுக்கு போட்டியின்போது அறிவித்த nithaprabu@gmail.com அனுப்புங்கள்.




https://chat.whatsapp.com/BazF1mUBo0PGB3d29tn4pS

அடுத்ததாக இது போட்டியில் கலந்துகொள்ளும் எழுத்தாளர்களுக்காக உருவாக்கப்பட்ட வாட்ஸ் அப் community குரூப். Senthooram Tamil Novel Contest என்று இருக்கும். அதில் அட்மினாக இருக்கும் என் பெயரைத் தவிர்த்து வேறு யாரினதும் பெயரோ, கைப்பேசி இலக்கங்களோ யாருக்கும் தென்படாது. இது உங்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது.

நாவல் போட்டியில் கலந்துகொள்ளப் பெயர் தந்தவர்கள், இனியும் கலந்துகொள்ள விரும்புகிறவர்கள் வந்து இந்த குரூப்பில் இணைந்துகொள்ளுங்கள்.

அவர்களைத் தாண்டி வேறு யாரும் இணைய வேண்டாம். எனக்கு உங்கள் இலக்கங்கள் காட்டும். அதை வைத்துத் தெரிந்துகொள்வேன். போட்டியில் கலந்துகொள்ளும் எழுத்தாளர்களின் கைப்பேசி இலக்கங்கள் என்னிடம் தனியாகவும் உண்டு.

அங்கே அட்மின் மட்டுமே அறிவிப்புகளை வழங்கலாம். உங்களுக்கான அறிவிப்புகள் அங்கே வந்துவிடும். அதைத் தாண்டித் தனியாக உங்களுக்குக் கேள்விகள் இருந்தால் என்னையோ, ரோசி அக்காவையே, நம் மொடரேட்டர் விஷாகினியையோ(Vishakini) எந்த நேரத்திலும் நீங்கள் தொடர்புகொள்ள இயலும்.

விஷாகினி தளத்திலும், இங்கே முகப்புத்தகத்திலும் இருக்கிறார்.

இந்த அறிவிப்பை மிகுந்த மனவருத்தத்தோடுதான் எழுதுகிறேன். தளம் தொடர்பான டெக்கினிக்கல் விடயங்கள் எங்கள் கைகளில் இல்லை. புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறோம். தொடக்கம் சற்றே இடறினால் என்ன? மிக நன்றாகவே போட்டியை முடிப்போம்.

நட்புடன் நிதனிபிரபு
 
Top Bottom