அத்தியாயம் -10
பின்பக்க சீட்டில் அமர்ந்திருந்த நந்தினி ஒரு நிலையில்லாமல் சாய்ந்து சாய்ந்து விழுந்தாள்.
அவள் மீது ஒரு பார்வையை பதித்தபடியே காரை லாவகமாக ஓட்டினான் அருண்மொழி.
அவளது வீட்டின் முன்பு நிறுத்தி மகிழுந்தின் ஒலிப்பானை ஒலிக்க விட்டான்.
வீட்டின் காவலாளி
ஓடி வந்து பெரிய இரும்பு கதவினை திறந்து விட்டார்.
அவளது விலையுயர்ந்த மகிழுந்து வழுக்கிக் கொண்டு போய் வாசல் முன்பு நின்றது.
கார் கதவினை திறந்து இறங்கியவன் அவளது வீட்டு அழைப்பு மணியை அழுத்தி விட்டு நின்றிருந்தான்.
வீட்டின் கதவை யாரும் திறக்கவேயில்லை.
காவலாளி அருண்மொழியின் அருகே ஓடி வந்து , “ யார் சார் நீங்க? மேடம் எங்க? அவங்க காரை நீங்க ஏன் ஓட்டிட்டு வந்துருக்கீங்க? மேடம் அவங்க காரை யாரையும் தொட விட மாட்டாங்களே? நீங்க எப்படி?” என அடுக்கடுக்காக கேள்விகளை கேட்டுக் கொண்டே போக அவரை கையமர்த்தியவன், "அவங்களுக்கு கொஞ்சம் உடம்பு முடியல. அதான் நான் ஓட்டிட்டு வந்தேன். உங்க மேடம் மயக்கமா இருக்காங்க. விஜயேந்திரன் சார் இருக்காரா? மேடமை கைத்தாங்கலா உள்ள கூட்டிட்டு போகணும் “என்றான்.
“ அப்படியா.. சார்..! ஆனா பெரிய முதலாளி வெளியூர் போயிருக்காரு. அம்மாவும் மாத்திரை போட்டுட்டு படுத்துட்டாங்க. இனி காலையில் தான் எழுந்துப்பாங்க. என்ன சார் பண்ணுறது?” என்றார் அவர்.
ஒரு பெருமூச்சுடன் , “ ஒரு நிமிஷம் இருங்க” என்றவன் அவளது கைப்பையை துழாவி வீட்டுச்சாவியை எடுத்து கதவைத் திறந்தான்..
எப்போதுமே அவளிடம் வீட்டின் சாவி ஒன்று இருக்கும்.
"அய்யா நீங்க அவங்க ரூமை காட்டுங்க. அவங்களை ரூம்ல படுக்க வச்சிட்டு நான் கிளம்புறேன்” என்றான்.
காவலாளி கதவை திறந்து கொண்டு மாடிக்குச் சென்றார்.
அருண்மொழி நந்தினியை கையிலேந்திக் கொண்டு மாடி ஏறிச் சென்றான்.
அவசரமாக அவளது அறையை திறந்து விளக்கினை போட்டார் காவலாளி.
மெல்ல அவளை கட்டிலில் கிடத்தி விட்டு விலகியிருந்த அவளது புடவையை சரி செய்து குளிரூட்டியை போட்டான்.
நந்தினிக்கு சிறிது கூட சுயநினைவு இல்லை.
விளக்கை அணைத்து விட்டு இரவு விளக்கை மட்டும் போட்டான் .
கழுத்து வரை போர்வையை போர்த்தி விட்டு அவளை சரியாக படுக்க வைத்து விட்டு நிமிர்ந்தான்.
மெல்லிய இரவு விளக்கின் வெளிச்சத்தில் அழகிய ஓவியமாக இருந்தது அவளது முகம்.
அதனை தன் கண்களுக்குள் நிரப்பியவனின் விழிகள் அவளது முகத்தை தாண்டி வேறெங்கும் பயணிக்க வில்லை.
அவனுடன் எவ்வளவு தான் அவள் முரண்பட்டு நின்றாலும் அவனுக்கு என்றுமே அவள் தேவதைப் பெண் தான்.
காவலாளியிடம், “பாத்துக்கோங்க…” என்று மட்டும் கூறிவிட்டு வெளியேறினான்.
மறுநாள் காலையில் எழுந்தவளுக்கு தலை பயங்கரமாக வலித்தது.
கடினப்பட்டு கண் விழித்து பார்த்தாள்.
இரவு நடந்தது எதுவும் நினைவிற்கு வரவில்லை.
எவ்வாறு வீடு வந்து சேர்ந்தோம் என்பது கூட தெரியவில்லை.
ஆனால் பழரசத்தை குடித்துப் பிறகு தான் தன்னில் ஏதோ மாற்றம் ஏற்பட்டது என்பதை உணர்ந்து கொண்டாள்.
‘நிச்சயமா இந்த அருண்மொழி தான் ஏதாவது கோளாறு செஞ்சிருப்பான்’ என மனதினுள் நினைத்தவள் எழுந்து சற்று தடுமாறியபடியே குளியலறைக்குள் நுழைந்தாள்.
குளித்து முடித்து வந்தவளுக்கு தலைவலி நின்றபாடில்லை.
உடை மாற்றிக் கொண்டு தயாராகி உணவு மேசைக்கு வந்தாள் நந்தினி.
அவளது தாய் மகழினி மேசையில் உணவை அடுக்கி வைத்துக் கொண்டிருந்தார்.
“ராத்திரி எப்படா வந்த? ரொம்ப நேரம் ஆச்சா?”
அவளுக்கோ எப்போது? எப்படி வீட்டிற்கு வந்தோம் என்பதே நினைவில் இல்லை.
அதை வெளிக்காட்டாமல், "ஆமா மா. நைட் நேரம் ஆகிடுச்சு தான். சாப்பாடு எடுத்து வைங்க. சாப்டுட்டு மாத்திரை போட்டுக்குறேன். ஒரே தலைவலியா இருக்கு..” என்று கூறியவாறு தலையை பிடித்துக் கொண்டாள்.
மகளுக்கு பரிமாறி விட்டு தானும் அமர்ந்து உண்டார்.
மகளிடம் பேசவே அவருக்கு பயமாக இருந்தது. இருப்பினும் பேச வேண்டிய அவசியத்தை உணர்ந்து , “ நந்தினி…!” என அழைத்தார்.
உண்டு முடித்திருந்தவள் மாத்திரையை போட்டபடியே, "சொல்லுங்க மா..” என்றாள்.
“ உனக்கு வயசாகிட்டே போகுது. அருமையான வரனெல்லாம் வருது. எல்லாமே பெரிய வீட்டு சம்பந்தம் தான். நீ மட்டும் சரின்னு சொல்லு…உடனே கல்யாணத்தை நடத்திடலாம். எங்களுக்கும் வயசாகிட்டே போகுது. உடம்புக்கும் அடிக்கடி முடியாம போகுது. நீதான் பிடிவாதமா கல்யாணமே வேண்டாம்னு சொல்லுற? உன் மனசுல வேற யாராவது இருந்தா கூட சொல்லுமா…” என்ற கூறி விட்டு அவளைப் பார்த்தார்.
அவர் கூறிய கடைசி வரியில் ஒரு கணம் அருண்மொழியின் முகம் அவளது மனக்கண்ணில் வந்து போனது.
ஆனால் வழக்கம் போல அவளது கர்வம் அதை ஒத்துக்கொள்ள விடவில்லை.
“ம்மா….இங்க பாருங்க இந்த டாபிக்கை இதோட நிறுத்திக்கோங்க. இப்போதைக்கு கல்யாணம் பண்ணிக்குற ஐடியா இல்லை. பண்ணிக்கணும்னு தோணும் போது உங்க கிட்ட சொல்றேன். அப்ப நீங்க ஏற்பாடு பண்ணுங்க. நேரமாச்சு நான் கிளம்புறேன் “ என்றபடி அலுவலகத்திற்கு கிளம்பினாள்.
அவளது மகிழுந்து வழக்கமாக நிறுத்துமிடத்தில் இல்லாமல் சற்றுத் தள்ளி நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை கண்டு புருவம் உயர்த்தினாள்.
ஏதோ தோன்ற வாயிலில் நின்றிருந்த காவலாளி அருகில் சென்றவள் அவரிடம், "நேத்து நைட் நானா கார் ஓட்டிட்டு வந்தேன் ?” என்றாள் கேள்வியாக.
அவரோ,” இல்லம்மா நைட் நீங்க ரொம்ப முடியாம இருந்தீங்க. நல்ல வாட்ட சாட்டமா உயரமா இருக்கறவரு ஒருத்தர் தான் உங்க காரை ஓட்டிட்டு வந்ததோட மட்டுமில்லாமல உங்களை கையில் தூக்கிட்டு வந்து உங்க ரூம்ல படுக்க வச்சிட்டு போனாரு…பாக்க ரொம்ப நல்ல தம்பியா இருந்தாரும்மா…” என்றார் கூடுதல் தகவலாக.
அவளோ யோசனையுடன் நின்றிருந்தாள். ‘ யாராக இருக்கும்?’ என்ற கேள்வி மனதினுள் ஓடியது.
“கருப்பு வெள்ளை கட்டம் போட்ட சட்டை போட்டுருந்தாரு மா..” என்றார் .
“ஓ.. அருண்மொழியா?”என முணுமுணுத்தவள், “ம்ம் சரி நான் பாத்துக்குறேன்…” என்று கூறி விட்டு தனது காரினை எடுத்துக் கொண்டு வெளியேறினாள்.
அந்த பிரம்மாண்டமான அரண்மனையில் நீண்ட உணவு மேசையில் நடுநாயகமாக ராஜ தோரணையில் அமர்ந்திருந்தார் அந்த பெரியவர் .
அவர் தான் அப்பிரம்மாண்டமான அரண்மனையின் தூண் போன்றவர். எழுபத்தைந்து வயதை கடந்திருந்த வீர ராஜசிம்மர்.
அவருக்கு இரு புறமும் நின்றிருந்தனர் அவரது வாரிசுகள். மூத்தவர் சுதர்சன ராஜசிம்மர், அவரது மனைவி விஜயராணி மற்றும் அவர்களின் ஒரே மகன் மாறவர்மன்.
சில வருடங்களுக்கு முன்பு வரை நன்றாக இருந்தவன் தான்.
மனைவியின் இறப்பிற்கு பிறகு சற்றே மனப்பிறழ்வு ஏற்பட்டிருந்தது.
அடுத்து நின்றிருந்தது வீர ராஜசிம்மரின் இளைய மகன் தனஞ்ஜெய ராஜசிம்மர். அவரது மனைவி ஆதிரை.
அடுத்ததாக வீர ராஜசிம்மரின் மகள் மந்தாகினி அவரது கணவர் ஆதிசேஷன் மற்றும் அவரது ஒரே மகன் இளமாறன் .
மந்தாகினியே ஆரம்பித்தார், "அப்பா…சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க…உங்களுக்கும் வயசாகிட்டே போகுது. உங்களுக்கு அடுத்து யார் இந்த பொறுப்பையெல்லாம் கையிலெடுத்துக்கணும்னு சீக்கிரம் முடிவு பண்ணினா நல்லது. திடீர்னு ஏதாவது ஒண்ணு ஆச்சுன்னா அப்ப போய் நீயா? நானான்னு மனஸ்தாபம் வந்துடக்கூடாது பாருங்க. நீங்க நல்லா இருக்குறப்பவே யார் யார் எதையெதை பாத்துக்கணும்னு சொல்லிட்டீங்கன்னா நல்லா இருக்கும். இன்னும் எத்தனை நாள் இப்படியே தள்ளிப் போடுறது? சட்டுன்னு ஒரு முடிவு எடுக்கலாமே ப்பா..” என்றார்.
வீர ராஜசிம்மரோ நெற்றியை நீவிய படி அமர்ந்திருந்தார்.
மந்தாகினியே மீண்டும் ஆரம்பித்தார், “ எப்படியும் சுதர்சன் அண்ணாவோட பையன் மாறன் இருக்குற நிலமைக்கு எல்லா பொறுப்புகளையும் அவர் கிட்ட குடுக்க முடியாது. இளையவரோட பையனும் இப்ப உயிரோட இல்ல. அதனால எந்த ஒரு விதாண்டாவாதமும் இல்லாம என் பையனுக்கு இந்த ராஜ பரம்பரைரோட பொறுப்புகளை கொடுத்து , எல்லாத்தையும் நிர்வாகிக்க அவனுக்கு அதிகாரமும் கிடைக்கணும்னுங்கறது எல்லாரோட விருப்பம்.” என்றார் மூத்தவரை பார்த்தபடியே.
மூத்தவரின் மனைவியை விஜயராணியோ, "ஊதாரித்தனமா சுத்திட்டு இருக்கற உங்க பையன் கிட்ட எப்படி பொறுப்புகளை ஒப்படைக்க முடியும் ? முதல்ல இளமாறனுக்கு என்ன தகுதியிருக்குன்னு நீங்க வந்து இப்படி கேக்குறீங்க? என் பையன் புத்தி சுவாதீனம் இல்லாதவன் தான். ஆனா என் புருஷன் நல்லா தானே இருக்காரு. அவரு கிட்ட இந்த ராஜவம்சத்தோட எல்லா பொறுப்புகளையும் கொடுத்துட்டு நீங்க ஓய்வெடுத்துக்கோங்க மாமா.” என்றார் பவ்யமாக.
எகத்தாளமாக மந்தாகினியை பார்த்து கழுத்தை நொடித்துக் கொண்டார்.
மந்தாகினியோ விஜயராணியை அனல் கக்கும் பார்வையினால் சுட்டெரித்தார்..
அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் வீர ராஜசிம்மர் என்ன கூறப் போகிறார் என்பதையே பார்த்துக் கொண்டிருந்தார் விஜயராணி.
தனஞ்ஜெய ராஜசிம்மரும் ஆதிரையும் அமைதியாக நின்றிருந்தனர்.
எதுவாகினும் தந்தையின் வாய்மொழியாக வரட்டும் என்று அமைதி காத்தனர்.
“க்கூம்…” என தொண்டையை செருமியவர் , “ எனக்கு இன்னும் கை கால் நல்லா தான் இருக்குது. கண்டிப்பா ராஜ குடும்பத்தோட அடுத்த வாரிசு பட்டத்தை யாராவது ஒருத்தர் கையில ஒப்படைசிட்டு தான் நான் கண்ணை மூடுவேன். அவங்க கிட்ட தான் எல்லா பொறுப்புகளையும் அதிகாரங்களையும் ஒப்படைப்பேன்.
அதுக்கு முன்னாடியே நீ நான்னு போட்டி போடுறதை நிறுத்துங்க. யாருக்கு கொடுக்கணும்னு எனக்கு ரொம்ப நல்லாவே தெரியும். அதனால இதைப்பத்தி பேசறது இதுவே கடைசியாக இருக்கணும். வேற ஏதாவது பேசணுமா?” என்றார் அழுத்தமாக.
“ இந்த மாசம் நம்ம இளையவர் பையனோட வருஷ திதி வருது. இந்த வருஷமாவது அய்யரை கூப்பிட்டு பண்ணலாமா?” என்றார் மந்தாகினி.
அதிரைக்கும் அதே எண்ணம் தான். ஆனால் வாய் திறந்து கேட்க துணிவில்லை ..
மந்தாகினி இப்போது அதை வாய் விட்டே கேட்டுவிட்டார்..
“இளையவனோட ஆசை என்னன்னு தான் உனக்குக் தெரியுமே மந்தாகினி. இந்த வருஷமும் ஆஷ்ரமத்துல இருக்குறவங்களுக்கு போய் தேவையானதை செய்துட்டு வருவோம். அவ்வளவு தான். அவன் உயிரோட இருக்கும் போதே இந்த சாஸ்திர சம்பிரதாயத்துலயெல்லாம் அவனுக்கு விருப்பம் இருந்ததேயில்லை.அதனால இந்த வருஷமும் அவன் சொன்னது போல இல்லாதப்பட்டவங்களுககு தேவையான வசதிகளை செஞ்சு கொடுத்துட்டு வருவோம். இதுல எந்த ஒரு மாற்றமும் இல்ல. தனஞ்ஜெயா..! உனக்கு ஏதாவது இதுல ஆட்சேபம் இருக்கா?” என்றார் வீர ராஜசிம்மர்.
தனஞ்ஜெயரோ ஆதிரையை பார்த்தார். ஆதிரை அமைதியாக நின்றிருந்தார்.
தனஞ்ஜெயருக்குமே புரோகிதரை வைத்து நதிக்கரையில் திதி கொடுக்கத் தான் விருப்பம்.
ஆனால் தந்தையின் ஆணையை மீற அவருக்கு துணிவில்லை. எனவே அமைதியாகிப் போனார்.