அத்தியாயம் -15
குளித்து விட்டு உடைமாற்றிக் கொண்டு வந்த அருண்மொழி ,பாரதி தனது தாத்தாவின் எதிரே அமர்ந்திருப்பதை பார்த்தான்.
“ ஹேய்….புரூஸ் லீ..! நீ எப்ப வந்த? என்னைய பத்தி தாத்தா கிட்ட போட்டுக் கொடுத்துட்டு இருக்கியா?. தாத்தா இவளை நம்பாதீங்க…” என்றபடி தலையை துவட்டியவனுக்கு கையில் வலி ஏற்படவே,”ஸ்ஸ்…” என்று முணங்கிக் கொண்டே கையை கீழிறக்கினான்.
வேகமாக அவனருகே வந்து நின்றவள் அவனது கையிலிருந்த பூந்துவாலையை பிடுங்கிக் கொண்டு "அதான் இன்னும் காயம் சரியாகலை ல. அதுக்குள்ள எதுக்கு தலைக்கு தண்ணி ஊத்துற? இன்னைக்கு பிரியாணி பண்ணுனேன். அதான் கொண்டு வந்தேன்.” என்றபடி அவனது தலையை துவட்டி விட கைகளை கொண்டு போக சட்டென்று அவளது கைகளில் அகப்படாமல் விலகிக் கொண்டான் அருண்மொழி.
“ பரவாயில்ல விடு. ஹீட்டர் போட்டுடுறேன்..” என்றபடி சிறிது நேரம் அவளிடம் பேசிக் கொண்டிருந்தான்.
அருண்மொழியின் உடல் மொழியையும் பாரதியின் உடல் மொழியையும் கவனித்துக் கொண்டு தான் இருந்தார் .
“ சரி அருண் நா கிளம்புறேன். பை.. சீக்கிரம் ஆஃபிஸ் ல மீட் பண்ணலாம்..” என்றவள் ,” அப்பறம் அமுதன் கால் பண்ணுனான். அங்க எல்லாமே பக்காவா இருக்காம். ரொம்ப தேங்க்ஸ்னு சொல்லச் சொன்னான். குழலிக்கும் வேற காலேஜ்ல அட்மிஷன் போட்டாச்சாம். இவனும் நீ ரெஃபர் பண்ணுன கம்பெனில ஜாயின் பண்ணிட்டான். அவங்க பேரண்ட்ஸை மட்டும் சமாதானம் பண்ணி டெல்லிக்கு அழைச்சிட்டு போகணும்னான். அவங்களை மட்டும் கொஞ்சம் போய் பாத்துக்க சொன்னான். இப்ப நீ அவங்க வீட்டுக்கு போகாத…நானே அவங்களுக்கு போய் தேவையானதை செஞ்சிட்டு வந்துடுறேன். “ என்றாள்..
“ஓகே..புரூஸ் லீ…நான் கொஞ்சம் அமௌண்ட்டை உன் அகௌண்ட்டுக்கு போட்டு விடுறேன் அதை அமுதனோட அப்பா அகௌண்ட்டுக்கு ட்ரான்ஸ்பர் பண்ணிடு. அவங்களும் கோபமா தான் இருப்பாங்க. கொஞ்ச நாள் போகட்டும். அப்பறம் அவங்க கிட்ட பேசிப்புரிய வைக்கலாம்…” என்றான்.
“ ஓகே பை…அருண். பை தாத்தா... நான் சொன்னதை கொஞ்சம் சீக்கிரமா கன்சிடர் பண்ணுங்க ..” என்று கூறி விட்டு வேகமாக வெளியேறினாள்.
அவள் கூறியதைக் கேட்டு புருவத்தை சுருக்கியவன் தனது தாத்தாவின் புறம் திரும்பினான்.
“என்ன சொல்லிட்டு போறா? உங்க கிட்ட என்ன பேசினா பாரதி?” என்றான்.
“ ம்ம்கூம்…” எனத் தொண்டையை செருமியவர், “ என் கிட்ட உண்மையை மட்டும் சொல்லு. அந்த பொண்ணு உன்னை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறா. உண்மையிலேயே நீ அந்த பொண்ணை தான் விரும்புறியா?” என்றார் அவனைக் கூர்ந்து பார்த்தபடியே.
“ இல்ல தாத்தா…அவ என்னோட ஃப்ரெண்ட் அவ்வளவு தான். அவளை லவ்வெல்லாம் பண்ணல. ஆனா நான் வேற ஒரு பொண்ணை விரும்புறேன். அவளை தான் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன். அந்த பொண்ணும் என்னைய விரும்புறா…ஆனா அதை ஒத்துக்க தான் அவளுக்கு மனசில்லை தாத்தா…அதான் பொறாமையை தூண்டி விடுறதுக்காக இவ கூட க்ளோஸா இருக்குற மாதிரி…” என்று கூறியவனுக்கு அதற்கு மேல் பேச வார்த்தை வரவில்லை.
“ ம்ம்.க்ளோஸா இருக்குற மாதிரி..? மேல சொல்லு..” என்றார் அழுத்தமாக.
“இல்ல…அது வந்து…தாத்தா…!” என திகைத்து விழித்தான் அருண்மொழி.
கைகளை கட்டிக் கொண்டு அவனைப் பார்த்தவர், “ இது வாழ்க்கை.. விளையாட்டு மைதானம் இல்லை. நம்ம இஷ்டத்துக்கு விளையாட. திரும்பத் திரும்ப சொல்றேன் வாழ்க்கையை கொஞ்சம் சீரியஸா எடுத்துக்கோ. முதல்ல பாரதி கிட்ட உண்மையை சொல்லி மன்னிப்பு கேளு…நீ விரும்புற பொண்ணு கிட்ட மறுபடியும் போய் பேசிப் பாரு. நீ பண்ணுன தப்பை சரி பண்ணு முதல்ல. அப்பறம் என்ன பண்ணலாம்னு யோசிக்கலாம்…” என்றார்.
“ கண்டிப்பா நீங்க சொல்ற மாதிரி நான் மாதிரி நான் செய்யுறேன். ஆனா அதுக்கு முன்னாடி நீங்க ஒரு சின்ன விஷயம் பண்ணனும் .என் மேல் கோபப்பட மாட்டேன்னு சத்தியம் பண்ணுங்க..” என்றான்.
“ முடியாது …என்னால பண்ண முடியாது. நீ என்ன தகிடுதத்தம் பண்ணப் போறேன்னு தெரியாம நான் சத்தியம் பண்ண மாட்டேன்..” என்று கூறி விட்டு திரும்பி நின்றார்.
“ தாத்தா…தாத்தா…ப்ளீஸ்…இது தான் கடைசி…இனி இந்த மாதிரி நடக்காது. இந்த ஒரு தடவை…கண்டிப்பா நந்தினி அவளோட லவ்வை அக்சப்ட் பண்ணிக்க்குவா…எனக்காக ப்ளீஸ்…” என்றான்.
“ சாரி…முடியாது..” என்று கூறி விட்டு வெளியே சென்றார்.
“ ம்ம்…சரி பாத்துக்கலாம்” என முணுமுணுத்து விட்டு சென்றான்.
தனதறையில் அமர்ந்திருந்த நந்தினி தீவிர யோசனையில் ஆழ்ந்திருந்தாள்.
கண்முன்னே அருண்மொழி முகமே வந்து போனது
.
பாரதியுடன் அவனை இணைத்துப் பார்க்கவே அவளால் முடியவில்லை.
அவனைத் தவிரவும் வேறு யாரையும் அவள் மனது ஏற்காது என்பதையும் உணர்ந்து கொண்டாள்.
அவளது அனுமதியின்றி மெல்ல மெல்ல அவள் மனதினுள் நுழைந்தவன் இன்று அவளது உள்ளம் முழுவதும் வியாபித்திருந்தான்.
பாரதியின் அதிரடியில் சற்றே மிரண்டு தான் போயிருந்தாள் நந்தினி .
அவளது உள்ளத்திலிருப்பதை இனியும் மூடி மறைக்க இயலாது என அவளுக்கு நன்றாகவே புரிந்தது.
மெல்ல எழுந்தவள் அவளது கஃப்போர்டை திறந்தாள்
அடித்தட்டில் மறைத்து வைத்திருந்த கவரை எடுத்தாள்.
அதில் அருண்மொழி அவளது பிறந்தநாளன்று அழகிய புடவை ஒன்றை பரிசாக அளித்திருந்தான்.
வழக்கம் போல அவன் மீது கோபப்பட்டு அலட்சியமாக தூக்கி எறிந்தாள் .
அவனோ சிரித்த முகத்துடன்,” இது உங்க கிட்டயே இருக்கட்டும் நந்தினி. என்னைக்காவது உங்களுக்கு என் மேல லவ் வந்துச்சுன்னா இதை கட்டிட்டு வந்து என் கிட்ட லவ்வை சொல்லுங்க…” என்றவனிடம், "வாய்ப்பே இல்லை…. அதெல்லாம் உங்க கனவுல கூட நடக்காது… மிஸ்டர் அருண்மொழி. இதை நீங்களே எடுத்துட்டுப் போங்க…” என்றாள்.
“ ஏன் பயப்படுறீங்களா? மனசு மாறி இதை கட்டிட்டு வந்து என் கிட்ட லவ்வை சொல்லிடுவீங்கன்னு பதட்டமா இருக்கா…?” என்றான் சின்னச் சிரிப்புடன்.
அதைக் கேட்டவள் வெடுக்கென்று அவனது கையிலிருந்து புடவையை பிடிங்கிக் கொண்டு, “இந்த நந்தினி எதைப் பார்த்தும் பயந்ததில்லை. ஆஃப்ட்ரால் இது சாதாரண புடவை. இதைப் போய் ஏன் நான் கட்டப்போறேன்? இது சேலாஞ்சா கூட வச்சிக்கோங்க” என்றாள் எள்ளலுடன்.
அவளைப் பார்த்துக் கொண்டே பின்னால் நடந்தவன், “பாக்கலாம் மேடம்…நாளைக்கு என்ன வேணாலும் நடக்கலாம்…நீங்க அதை கட்டிட்டு வந்து என் கிட்ட லவ்வை சொல்லலாம்…நாம கல்யாணம் பண்ணிக்கலாம்…நிறைய குழந்தைங்க பெத்துக்கலாம்…நூறு வருஷம் முடி நரைச்சு பேரன் பேத்தி எடுத்ததுக்கு அப்பறம் கூட நம்ம லவ் அப்படியே இருக்கலாம்… பை… மேடம்…உங்க சேலஞ்ச் அக்சப்ட்…” என்றபடி அவளுக்கு ஒரு பறக்கும் முத்தம் கொடுப்பது போல சைகை செய்து மாயமாய் மறைந்தது நினைவில் வந்து அவளது இதழில் மெல்லிய புன்னகையை வரவழைத்தது.
அத்திப் பூத்தார் போல நிகழும் அவளது புன்னகையை காண அருண்மொழிக்கு தான் கொடுத்து வைக்கவில்லை போலும்.
புடவையை வருடிக் கொடுத்துக் கொண்டே,” நீங்க ஜெயிச்சிட்டீங்க அருண்மொழி.,. ஐ யம் இன் லவ் வித் யூ… எஸ்.. ஐ லவ் யூ… நாளைக்கே என்னோட லவ்வை சொல்லிட போறேன்…இனியும் உங்களை சங்கடப் படுத்த விரும்பல…” என்றவள் புடவையை மார்போடு அணைத்துக் கொண்டு படுத்திருந்தாள்.
அவளது அலைப்பேசியை எடுத்து அதில் அவனது தனிப்பட்ட எண்ணிலிருந்து வந்திருந்த வாட்ஸ்அப் குறுஞ்செய்தியைப் பார்த்தாள்.
அனைத்தும் காதல் ரசம் சொட்டும் வாக்கியங்கள், காதல் கவிதைகள் , கிறுக்கல்கள், அவளறியாமல் அவளை ரசித்து ரசித்து எடுத்த புகைப்படங்கள், என ஏகப்பட்ட குறுஞ்செய்திகள் அவளது அலைப்பேசியை நிறைத்திருந்தது.
ஒன்றைக் கூட அவள் அழிக்காமல் வைத்திருந்தாள். என்றுமே அவற்றையெல்லாம் எடுத்துப் பார்த்து ரசித்ததில்லை.
ஆனால் ஒரே நாளில் அனைத்தையும் ரசித்து படித்துப் பார்த்தாள்.
தாராளமாக விரிந்து கொண்டது அவளது இதழ்கள் .
முன்பு எரிச்சலூட்டுவதாக இருந்த அவனது குறும்பும் துறுதுறுப்பும் இன்று ஏனோ ரசனைக்கு உட்பட்டதாக மாறியிருந்தது.
கண்களில் கிலோ கணக்கில் காதலை வழிய விடும் அருண்மொழியைக் காண அவள் மனம் ஏங்கித் தவித்தது.
எப்போதும் மிடுக்குடனும் கர்வத்துடன் வலம் வருபவளுக்கு திடீரென இறங்கிச் சென்று மென்மையாக காதலைக் கூற மிகவும் சங்கடமாக இருந்தது.
அவனைப்பற்றி யோசித்துக் கொண்டே உறங்கிப் போனாள்.
மறுநாள் காலையில் சீக்கிரமே விழிப்பு வந்துவிட்டது. கூடவே இனிய படபடப்பும் தேகம் முழுவதும் இனம் புரியாத உணர்வும் சேர்ந்து கொண்டது.
கண்ணாடி முன் நின்று அவனிடம் எப்படி காதலைச் சொல்வது என ஒத்திகைப் பார்த்துக் கொண்டிருந்தாள்
“அருண்...நா..உங்களை காதலிக்கிறேன்...”
“ம்ம்ச்... இது ரொம்ப வழியுற மாதிரி இருக்கு...” என முணுமுணுத்துக கொண்டவளுக்கு காதலை மென்மையாக கூற வரவேயில்லை.
பத்து முறைக்கு மேலாக பயிற்சி எடுத்தும் பலனில்லை.
சலிப்புடன், "டேய்..அருண் தடுமாடு...ஐ லவ் யூ டா...” என கடுப்புடன் கூறி விட அதுவே கனக் கச்சிதமான பொருந்தியது.
அவளுக்கே தான் சொன்ன விதத்தை தன்னை நினைத்து சிரிப்பு வந்து விட்டது.
“உனக்கு இப்படி சொன்னாதான் செட்டாகும் போல”’ என முணுமுணுத்தவள் அவனது அலைப்பேசி எண்ணிற்கு அழைத்து அலுவலகத்திற்கு சற்று சீக்கிரமே வந்து தன்னைச் சந்திக்கும் படி கூறிவிட்டு வைத்து விட்டாள்.
என்றுமே அழைத்திராதவள் திடீரென தன்னை அழைத்துப் பேசியதில் அகமகிழ்ந்து தான் அருண்மொழி.
வேக வேகமாக கிளம்பினான் அலுவலகத்திற்கு.
அவளும் அவன் கொடுத்த புடவையை நேர்த்தியாக உடுத்திக் கொண்டு கிளம்பினாள்.
என்றும் இல்லாத உற்சாகமும் புன்னகையும் வந்து ஒட்டிக்கொண்டது.
தன்னை வெறுப்பேற்றுவதற்கு தான் பாரதியின் காதலை ஒத்துக் கொண்டிருப்பான் என நிச்சயமாக நம்பியதால் தான் தைரியமாக தனது காதலை அவனிடம் கூற முடிவெடுத்தாள்.

Last edited:
Author: STN46
Article Title: தகிக்காதே குளிர்நிலவே..!(15)
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.