அத்தியாயம் -17(ஆம்)
பாரதி செல்லும் வரை கம்பீரமாகவும் அலட்சியமாகவும் அமர்ந்திருந்தவள் அவள் சென்ற பிறகு தோய்ந்து போய் மேசையில் தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டாள்.
‘என்ன காரியம் செய்து வைத்திருக்கின்றேன்? என தன்னையே நொந்து கொண்டாள்.
தனக்கு பிடித்த ஒன்றை என்றைக்குமே யாருக்குமே விட்டுத் தராதவள் இன்று பாரதி வந்து அருண்மொழியுடன் வாழ வேண்டும் என்று கேட்டவுடன்…'இதோ எடுத்துக் கொள்..’ என அலட்சியமாக அவனை தாரை வார்த்து கொடுத்து விட்டல்லவா அமர்ந்திருக்கின்றாள்.
வேதனை மனதினை அழுத்தியது.
பெரிய பாறாங்கல்லை மனதினுள்ளே ஏற்றி வைத்தது போன்றதொரு அழுத்தம்.
எதைப்பற்றியும் சிந்திக்க முடியாமல் பித்துப் பிடித்தவள் போல அமரந்திருந்தாள்.
எதற்காக அப்படி பேசினாள் என்று அவளுக்கே புரியவில்லை.
அருண்மொழியின் மனம் முழுவதும் நீக்கமற நிறைந்துள்ளவள் நந்தினி மட்டுமே..அதை அவளும் அறிவாள்.
'இனி அருண்மொழியை எவ்வாறு எதிர் கொள்வது? அவனை எப்படி சமாளிப்பது?' என்று யோசனைகள் தலைவலியை கொடுத்தது.
கண்கள் சிவந்து கலங்கிக் கொண்டிருந்தது. வாய்விட்டு அழத் தெரியாதவள் அல்ல அவள் அழுது விட்டால் நிச்சயம் அவன் முன்பு நிச்சயமாக உடைந்து விடுவாள்.
எனவே அழுகையை கோபமாக மாற்ற முயன்று கொண்டிருந்தாள்.
அவனுக்காக இளகத் துவங்கிய உள்ளம் மீண்டும் கடினப்பட்டு கொண்டிருந்தது.
ஏதோ விளையாட்டுத்தனமாக ஆரம்பித்து வைத்த விளையாட்டு இன்று வினையாகிப் போனதை அறியாத ஒருவன் ஆட்டோவை பிடித்துக் கொண்டு அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தான்.
காயம் இன்னும் சரியாகாததால் அவனால் தனது இரு சக்கர வாகனத்தை இயக்க முடியவில்லை.
“ இரவும் அல்லாத பகலும் அல்லாத பொழுதுகள் உன்னோடு கழியுமோ..
தொடவும் கூடாத படவும் கூடாத
இடைவெளி அப்போது குறையுமா?”
என பாடிக்கொண்டே லிப்டில் ஏறி மூன்றாம் தளத்திற்கு சென்றான்.
அவளது அறைக்கு செல்வதற்கு முன்பு அருகிலிருந்த ஓய்வறைக்கு சென்று கலைந்திருந்த கேசத்தை இடது கையால் கோதியவிட்டு அடர்ந்த மீசையை முறுக்கி விட்டுக் கொண்டான்.
கண்ணாடியில் தெரிந்த தனது பிம்பத்தை முன்னும் பின்னும் பார்த்து விசிலடித்து கொண்டவன் அவளது அறையை நோக்கி நடந்தான்.
கண்கள் சிவந்து இறுகிய முகத்துடன் அமர்ந்திருந்தாள் நந்தினி.
“ மே ஐ கம் இன்..” என அனுமதி வேண்டி நின்றான்.
அவளோ பதிலேதும் கூறாமல் உள்ளே வருமாறு சைகையில் அழைத்தாள்.
அதில் அவனது நெற்றி ஒரு கணம் சுருங்கி இயல்பானது.
“குட் மார்னிங் மேடம்…என்ன விஷயமா வரச் சொல்லியிருந்தீங்க?” என்றான் புன்னகை முகத்துடன்.
அவனது புன்னகையை பார்த்தவளுக்கு இதயம் வலித்தது.
அவனது உடல் மொழியே அவனது மகிழ்ச்சியை பறைசாற்றிக் கொண்டிருந்தது.
நிலையில்லாமல் அவனது கைகளும் கால்களும் பரபரத்துக் கொண்டிருந்தது.
கண்கள் அவளது அறையை வட்டமடித்துக் கொண்டு வந்து அவளது வதனத்தில் நிலைப்பெற்றது.
அவளும் ஒரு கணம் அவனைத் பார்த்துவிட்டு கமறத் தொடங்கிய தொண்டையை சரி செய்து கொண்டாள்.
“ம்ம்க்கூம்..ஒரு முக்கியமான விஷயத்தை சொல்றதுக்கு தான் உங்களை கூப்பிட்டேன்.“
“ அதான் தெரியுமே…! ஐ யம் வெயிட்டிங்..” என பேன்ட் பாக்கெட்டில் ஒரு கரத்தை விட்டுக் கொண்டு படபடப்புடன் நின்றிருந்தான்.
ஆனால் அவன் எதிர்பார்த்தது போலில்லாமல் அலுவலக விஷயமாக அவனிடம் விவாதித்தாள்.
என்ன சொல்லி அவனை தன்னிடமிருந்து விலக்கி வைப்பது என்று யோசிக்க அவளுக்கு நேரம் தேவைப்பட்டது.
எனவே அவனுக்கு சிறிதும் சம்பந்தமில்லாத அலுவலக விஷயங்களை அவனிடம் விவாதித்தாள்.
அவனும் அமைதியாக அவள் கூறுவதை கேட்டுக் கொண்டிருந்தான்.
இறுதியாக ,“ லுக் மிஸ்டர் அருண்மொழி . இது தான் நான் உங்க கிட்ட இந்த விஷயத்தை பத்தி பேசறது லாஸ்ட்டா இருக்கணும். காதல் கீதல்ன்னு என் பின்னாடி சுத்தி உங்க லைஃப்ப வேஸ்ட் பண்ணாம வேற வேலையிருந்தா பாருங்க. உங்க நல்லதுக்கு தான் சொல்றேன். நீங்க சும்மாதான் பாரதியை லவ் பண்ணுறேன்னு அவங்க கிட்ட சொல்லிட்டு என்னை வெறுப்பேத்திட்டு இருக்குறதா நினைச்சிட்டு இருக்கீங்க. ஐ யம் சாரி…எனக்கு இந்த பொசசிவ்னஸ் மண்ணாங்கட்டி எதுவுமே வரல. அட்லீஸ்ட் பாரதியோட லைஃப்லயாவது விளையாடாம அவங்களை க…கல்யாணம் பண்ணி செட்டில் ஆகுங்க. தேவையில்லாம அவங்க மனசுல ஆசை வளர்த்து ஏமாத்திடாதீங்க” என ஒரு வழியாக தான் கூற வந்ததை கூறிவிட்டாள்.
அவனோ அழுத்தமாக கைகளை கட்டிக்கொண்டு அவளை பார்த்துக் கொண்டிருந்தான்
“ என்ன நான் சொன்னது உங்களுக்கு புரிஞ்சுதா?” என்றாள் எரிச்சலுடன்.
ஏனோ அவனது தீர்க்கமான பார்வையை நேராக சந்திக்க அவளுக்கு துணிவில்லாமல் பார்வையை வேறு புறம் சுழல் விட்டாள்.
அப்போதும் அவன் அமைதியாகக் தான் நின்றிருந்தான்.
“ஹலோ..! “ என அவன் முன்பு கையை ஆட்டியவளின் கைகளை பிடித்து அவளது முதுகுபக்கமாக வளைத்து தன்னுடன் சேர்த்தணைத்துக் கொண்டான்.
அவனது நெருக்கம் அவளை தடுமாற வைத்தது.
“ எ…என்ன பண்.. பண்றீங்க மிஸ்டர் அருண்மொழி? கையை விடுங்க..” என உடலை அசைத்தாள்.
ஒரு இன்ச் கூட அவளால் நகர முடியவில்லை. அத்தனை இறுக்கமாக இருந்தது அவனது பிடி.
“ம்மச்…” என விடுவித்துக் கொள்ள முயன்ற படியே மெல்லத் திரும்பி அவனை பார்த்தாள்.
அவனும் அவளைத்தான் பார்த்துக் கொண்டு இருந்தான் .
அந்த பார்வையில் அவளுக்கான காதலும் நேசமும் போட்டி போடடுக் கொண்டிந்தது.
ஒரு கையில் அவன் கட்டு போட்டிருந்தாலும் மறு கையில் இருந்த வலிமை அவளை நகர முடியாமல் செய்தது.
அவளை இன்னும் தன்னுடன் நெருக்கியபடியே, "நீங்க சொன்னது எல்லாமே கரெக்ட் தான். பாரதியை லவ் பண்ணுறதா சொன்னது உங்களை வெறுப்பேத்துறதுக்கு தான். உங்க கிட்ட பேசிட்டு பாரதிட்ட உண்மையை சொல்லி சாரி கேக்கணும்னு தான் வந்தேன்.ஆனா நீங்க தான் பொய்யா சொல்றீங்களே.? நெஜமா நீங்க என்ன விரும்பல? உங்க மனசுல நான் இல்லன்னு சத்தியம் பண்ணுங்க பாப்போம்…" அவளது முதுகோடு ஒட்டியபடி கேட்டான்.
அவனது சூடான மூச்சு அவளது முதுகில் பட்டு சிலிர்க்க வைத்து அவளது மனதை காட்டிக் கொடுக்க முயன்றது.
தேகம் அவனது அணைப்பிற்கு இளக ஆரம்பித்தது.
“ அ…அதெல்லாம் உங்கள் கனவுத் வேணா நடந்திருக்கும். நெஜத்துல நடக்க வாய்ப்பே இல்லை. எங்க அப்பா எனக்குன்னு கோடீஸ்வர சமபந்தத்தை பேசி முடிச்சிருக்காரு. கூ…கூடிய சீக்கிரம் க…கல்யாணம். அ.. அப்படியிருக்கும் போது உங்களை மாதிரி சாதாரண ஆளை நான் எப்படி கல்யாணம் பண்ணிக்குவேன்? . கையை விடுங்க அருண்மொழி..” என நெளிந்தாள்.
“முடியாது..என்ன காரணத்தை சொன்னாலும் அதை நம்ப மாட்டேன். ஆனா நீங்க உண்மையை ஒத்துக்குற வரைக்கும் நான் உங்க கையை விடமாட்டேன்” என்றான் உறுதியாக.
அவளுக்குதான் வெறுத்து போனது.
எப்படி அவனை விலக்குவது என நினைத்துக் கொண்டே இருந்தவள் தனது முழு பலத்தையும் கூட்டி அவனை தள்ளியவள் ஓங்கி ஒரு அறை அவனது கன்னத்தில் விட்டாள்.
“ ஏன் இப்படி கேவலமா பொறுக்கி மாதிரி பிஹேவ் பண்ணுறீங்க? அதான் உங்களை பிடிக்கலன்னு சொல்றேன் ல. விட்டுத் தொலையுங்களேன். திரும்பவும் சொல்றேன் என்னைத் தொடறதுக்கு கூட ஒரு தகுதி வேணும். அந்த தகுதி உங்க கிட்ட இல்ல. இந்த பாரதிக்கு கூட புரிய மாட்டேங்குது.உங்களை விட பெஸ்ட்டான ஆம்பளைங்க எத்தனையோ பேர் இருக்காங்க. போயும் போயும் உங்களை போய் ஏன் செலக்ட் பண்ணுறாங்க தெரியல. பட் அது அவங்க பர்சனல் “ என ஆத்திரத்துடன் கூறி முடிக்கும் முன்பே அவளது இதழ்கள் அவன் வசமானது.
அவளது கழுத்தை தன் புறமாக திருப்பியவன் அவளது அதரங்களை சிறை செய்தான்.
அவளது நீண்ட விழிகள் அதிர்ந்து விரிந்தது.
அவனது அழுத்தமான முத்தம் பெண்களின் மெல்லிய உதடுகளை காயப்படுத்திக் கொண்டிருந்தது.
இத்தனை நாட்களாக பொறுமையுடன் அமைதியாக இருந்தவனின் இந்த அதிரடியை அவள் எதிர்பார்க்கவில்லை .
அவளோ அவனை தன்னிலிருந்து விலக்க முயன்றாள்.
அவனோ தனது இறுக்கத்தை தளர்த்திக் கொள்ளவேயில்லை.
அவளுக்கோ மூச்சு முட்ட ஆரம்பித்தது.
இதழ் வழியே அவளது ஜீவனை உறிஞ்சி எடுத்துக் கொண்டவன் மெல்ல அவளை விடுவித்தான்.
அவளது இதழில் இருந்து குருதி கசிந்தது. கண்ணீருடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
அவனும் அவளை தான் பார்த்துவிட்டு இருந்தான்.
“இனி உன் பக்கம் திரும்ப கூட மாட்டேன். இது தான் நான் உன்னை பார்க்கிறது கடைசி. தேங்க்ஸ் உன்னோட அட்வைஸ்க்கு . நான் என்ன பண்ணனும்னு நீ எனக்கு சொல்லாத. யாரை எப்ப கல்யாணம் பண்ணிக்கனும் எனக்குத் தெரியும். உன்னோட லைஃப்ல இனி அருண்மொழிங்கற கேரக்டர் வரவே மாட்டான். பொய் மேல பொய்…எதுக்காக? யாருக்காக?. உன்னையே நீ ஏமாத்திட்டு இருக்க. அது உனக்கு புரியுதா ? இல்லையா?" என்றவன் ஒரு கணம் நிதானித்து அவளது தாடையை தன் புறமாக திருப்பி அவளது உதடுகளிலிருந்து கசிந்து கொண்டிருந்த உதிரத்தை தன் உதடுகளால் மென்மையாக ஒற்றியெடுத்தான்.
அதில் நந்தினியின் மனம் உருகி தான் போனது.
மெல்ல அவளிடமிருந்து விலகியவன் , “ என்னை உன் வாழ்க்கையில இருந்து என்னை விலக்கி வைக்குறதுக்கு என்னென்னவோ காரணத்தை தேடி எடுத்த நீ ..இந்த புடவையை மட்டும் கட்டாம இருந்திருந்தா கூட உன்னோட வார்த்தையை கொஞ்சமாவது யோசிச்சிருப்பேன். ஆனா..நீ..?” என்ற கேள்வியோடு நிறுத்தியவன் அவளைத் திரும்பியும் பாராமல் வெளியேறினான்.
உடலும் மனமும் தளர்ந்து போய் தொப்பென்று நாற்காலியில் அமர்ந்தாள்.
எதைப்பற்றியும் யாரைப் பற்றியும் யோசிக்காமல் அவன் பின்னே சென்று விடு என மனம் ஒருபுறம் ஓலமிட்டாலும் மறுபுறம் பாரதியின் முகம் கண்முன்னே வந்து போனது.
தான் செய்தது சரியானது தான் என தன்னை தானே தேற்றிக கொண்டாலும் காதல் கொண்ட மனம் அவனது அருகாமைக்காக ஏங்க ஆரம்பித்தது.
விலகிச் சென்றவன் பின்னால் அவளது உள்ளம் அவளைக் கேளாமலேயே சென்றது.