அத்தியாயம் -20
தனதறையில் அமர்ந்திருந்த அருண்மொழி பாரதியை இங்கு அழைத்து வந்த நிகழ்வினை நினைத்துப் பார்த்தான் .
(மூன்று வருடங்களுக்கு முன்பு)
அன்று நடந்த விபத்தில் பலத்த காயமடைந்த பாரதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாள்.
அவளுக்கென்று உறவுகள் யாரும் இல்லை என்பதால் யாரைத் தொடர்பு கொள்வது என மருத்துவர்கள் தவித்திருந்தனர்.
அவளது கைப்பையில் அருண்மொழியின் முகவரி சீட்டு (visiting card)இருந்ததால் அவனை அழைத்து விஷயத்தை கூறினார்கள் மருத்துவர்கள்.
பதட்டத்துடன் வந்தவனிடம் மருத்துவர்கள் அவளுக்கு மேல் சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் கை கால்களில் பலத்த அடி பட்டிருப்பதால் பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதாக கூறினார்கள்.
இங்கு சிகிச்சை அளிப்பதை விட வெளிநாட்டில் சென்று சிகிச்சை அளித்தால் விரைவில் குணமாகக் கூடும் என அமெரிக்காவில் உள்ள உயர் தர மருத்துவமனையை பரிந்துரை செய்தனர்.
பாரதியை எப்படி தனியாக எப்படி கவனித்துக் கொள்வது யோசித்த அருண்மொழி அவளை அழைத்துக் கொண்டு தங்களுடைய நாட்டிற்கு சென்று விடுவதே மேல் என முடிவெடுத்தான்.
இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு முகம் தெரியாத நபர்களால் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய அருண்மொழி தனது தாத்தா வீர ராஜ சிம்மரின் வேண்டுகோளுக்கு இணங்க சென்னையிலேயே தங்கிக் கொண்டான்.
தான் கூறும் போது தங்களுடைய நாட்டிற்கு வந்தால் போதும் எனவும் அவ்வபோது தான் வந்து அவனைப் பார்த்து கொள்வதாக கூறியிருந்தார்.
மேலும் அரண்மனையில் சந்தேகப்படும்படியாக சில செயல்கள் நடப்பதாகவும் ,அதை கண்டுபிடித்து களைய வேண்டும் எனில் அவன் இறந்ததாக இருக்க வேண்டும் என்று கூறினார்.
தங்களை சுற்றி ஏதோ சதி நடந்து கொண்டிருப்பதை உணர்ந்த அருண்மொழியும் வீர ராஜசிம்மரின் வார்த்தைகளை தட்டாமல் சென்னையிலேயே தங்கி விட்டான்.
தன்னை அரசு குடும்பத்தை சேர்ந்தவன் என அடையாளப்படுத்திக் கொள்ளாமல் சொந்த முயற்சியினால் நந்தினியின் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தான்
ஆதிரையையும் தனஞ்ஜெயரையும் பார்க்க வேண்டும் என்றிருந்தாலும் வீர ராஜசிம்மருக்காக அமைதி காத்தான்.
ஆனால் பாரதிக்கு தன்னால் தான் இப்படியாகிவிட்டது என்ற குற்றவுணர்ச்சி ஆட்டிப் படைக்க அவளை தங்களுடைய தீவிற்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டான்.
செலவுகளும் அதிகமாகும் என்பதால் அங்கு சென்று விடுவதே சிறந்தது என தனி விமானம் மூலம் அவளை இத்தாலி நாட்டிற்கு அழைத்துச் சென்று அங்கிருந்த தலைசிறந்த மருத்துவமனையில் அனுமதித்தான்.
பாரதியை அழைத்து வருவதை ராஜசிம்மரிடம் கூட அவன் தெரிவிக்கவில்லை .
அச்சமயம் அரண்மனையில் அருண்மொழி உயிருடன் இருக்கும் விஷயம் தெரியாமல் அனைவரும் அவனது அவனுடயை மூன்றாவது வருட திதிக்கு புரோகிதரை அழைத்து விட்டுப்போன சாங்கியங்களை செய்ய வேண்டும் என்று வற்புறுத்தி கொண்டிருந்தனர்.
வீர ராஜசிம்மரோ தன் முடிவில் உறுதியாக இருந்தார்.
“என்னப்பா ..நீங்க .செத்துப் போன ஒருத்தனுக்கு செய்ய வேண்டிய காரியங்களை ரெண்டு வருஷமா செய்யல. இந்த வருஷமாவது செய்யணும் பா..” என்றார் மந்தாகினி.
ஆதிரையும் ,” ஆமா மாமா…என்ன தான் என் மகன் ஆசைன்னு இல்லாத பட்டவங்களுக்கு நல்லது பணணுனாலும் சாஸ்திரம் சம்பிரதாயம்னு ஒண்ணு இருக்குல…நாங்க எதுக்காக வரும் ஆசைப்பட்டது இல்லை. குறைஞ்ச பட்சம் இதையாவது நிறவேத்தணும்னு கெஞ்சிக் கேட்டுக்குறேன்…” என்று கூறி வீர ராஜசிம்மரின் காலில் விழப்போனவரை இரு கரங்கள் பிடித்துக் கொள்ள நிமிர்ந்து பார்த்த அதிரையின் விழிகள் கண்ணீரை சொரிந்தது.
“ கண்ணா…” என ஆனந்தத்துடன் அழைத்தவர் அவனின் முகம் கை கால் ஆகியவற்றை தொட்டுப் பார்த்து தன் கண் முன்னே மகன் நிற்பது நிஜம் தானா என்று உறுதிப்படுத்திக் கொண்டார்.
“ அழாதீங்க மா… நான் …உயிரோட தான் இருக்கேன்…இது தாத்தாவுக்கும் தெரியும். கவலைப்படாதீங்க..இந்த மூணு வருஷமும் இந்தியாவுல தான் இருந்தேன். “
“ஏன் டா…மூணு வருஷமா அம்மாவை பாக்கணும் னு உனக்கு தோணலையா…அப்படியென்ன அம்மா பண்ணிட்டேன்…ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமே டா. நாங்க கொஞ்சம் நிம்மதியா இருந்திருப்போமே…ஏன் டா..ஏன்? “ என மகனை கட்டியணைத்து கொண்டு அழுது தீர்த்து விட்டார்.
மகனை பறி கொடுத்ததாக எண்ணி மூன்று வருடங்களாக அவரும் தனஞ்ஜெயரும் அடைந்த துன்பம் சொல்லி மாளாது.
மூன்று வருடங்களாக எந்த ஒரு சுபநிகழ்ச்சிகளும் அரண்மனையில் நடைபெறவில்லை.
ஆனால் இந்த மூன்று வருடங்களாக வித்தியாசமான சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை என்பது தான் ராஜசிம்மருக்கு உறுத்தலாக இருந்தது.
அனைவருக்கும் அவனது வருகை மகிழ்ச்சியை ஏற்படுத்தியது என்றால் ஒரு ஜீவனுக்கு மட்டும் ஆத்திரத்தையும் ஏமாற்றத்தையும் அளித்தது.
ஏற்கனவே தான் நினைத்ததை செய்ய முடியவில்லை என்ற ஆதங்கம் ஒரு புறம் …இதில் அருண்மொழி உயிருடன் வந்தது வேறு கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
அவர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட்டவன் தான் வந்த காரணத்தை கூறினான்.
பாரதியின் உடல்நலத்தை தெளிவுபடுத்தி அவளுக்குண்டான சிகிச்சை பற்றியும் அனைவரிடமும் கூறினான்.
அவளுக்கென்று யாரும் இல்லையென்பதால் அரண்மனையிலேயே தங்கிக் கொள்ளட்டும் என்றான்.
வீர ராஜசிம்மருக்கு பாரதியை தங்க வைப்பதற்கு யோசனையாக இருந்தாலும் அரை மனதாக ஒத்துக் கொண்டார்.
பாரதி உடல் தேறி வர முழுமையாக மூன்று மாதங்கள் ஆனாது.
மூன்று மாதங்களும் மருத்தவமனை வாசம் தான் அவளுக்கு.
அவளை மருத்துவமனையிலிருந்து அரண்மனைக்கு அழைத்துக் கொண்டு வந்தான் அருண்மொழி.
மீண்டும் ஒரு அதிர்ச்சி அனைவருக்கும் காத்திருந்தது.
ஆம்..! பாரதி அச்சு அசலாக இறந்து போன மாறவர்மனின் மனைவி தேவி போலவே இருந்தாள்..
அனைவரும் அதிர்ச்சியாக நின்றிருக்க வீர ராஜசிம்மரோ, "இந்த பொண்ணு பாரதி நம்முடைய பாதுகாப்புலயே இருக்கட்டும். அருண்மொழி நீ கொஞ்சம் என் கூட வா…” என்றவர் அவனை அழைத்துக் கொண்டு மாறவர்மனின் அறைக்குச் சென்றார்.
மாறவர்மனின் அறைக்கு பலமுறை அருண்மொழி சென்றிருந்தாலும் அவனது திருமணத்திற்கு பிறகு அவனது அறைக்குள் சென்றதேயில்லை.
உள்ளே நுழைந்தவர் உள்ளறையில் மாட்டப்பட்டிருந்த வரைப் படத்தை அவனுக்கு காட்டினார்..
இப்போது அதிர்ந்து நிற்பது அருண்மொழியின் முறையானது.
“ தாத்தா…இது..பா…பாரதி ..?”
“இல்ல மாறவர்மனோட மனைவி தேவி…நீ அவங்க இங்க இருந்தப்ப இல்லவே இல்லையே. தேவியோட காரியம் முடிஞ்சதுக்கப்றம் தான வந்த. அதனால உனக்கு பாரதி தேவி மாதிரி இருக்கறது தெரிய வாய்ப்பில்லை. ஆனா நான் சென்னைக்கு வந்த போதே பாரதியை பாத்து அதிர்ச்சி ஆகிட்டேன். இப்ப என் பண்ணப் போற அருண்மொழி?” என்றார்.
“தெரியலை…தாத்தா…ஆனா பாரதி இங்கயே இருக்கட்டும்" என்றான்.
நாட்கள் கழிந்தன…பாரதி தேவையின்றி வெளியே வருவதில்லை.
அவளது உடல்நலம் நன்றாக தேறியிருந்தது.
அன்று சற்று காலார நடந்து விட்டு வரலாம் என நினைத்தவள் கடற்கரையோரம் சிறிது தூரம் நடந்து விட்டு வீட்டிற்குள் திரும்பியிருந்தாள்.
மாறவர்மனின் அறையில் ஏதோ பொருட்கள் உடையும் சத்தம் கேட்டதும் பதறி அடித்துக் கொண்டு உள்ளே நுழைந்தாள்.
மாறவர்மன் தான் ஆக்ரோஷமாக எல்லா பொருட்களையும் உடைத்து நொறுக்கிக் கொண்டிருந்தான்.
திடகாத்திரமாக இருக்கும் அவனை அருண்மொழியால் கூட சமாளிக்க முடியவில்லை.
“ மாறா…மாறா…வேண்டாம் டா..” என பதறினான்.
கண்ணாடி குவளை உடைந்து அவனது கைகளில் இரத்தம் பீறிட்டு வந்தது.
“ போங்க…எல்லாரும் போங்க…என் தேவியை எல்லாரும் சேர்ந்து கொன்னுட்டீங்க….போங்க……” என தொண்டை கிழிய ஆக்ரோஷமாக கத்திக் கொண்டிருந்தவனின் பேச்சு சட்டென்று தடைப்பட்டு நின்றது.
மாறவர்மனின் அறைக்குள் நுழைந்தவள் தன்னுடைய புகைப்படம் அங்கு மாட்டியிருப்பதைக் கண்டு திகைப்புடன் அதனை பார்த்து கொண்டே மாறவர்மன் அருகில் நின்றாள்..
அதிர்ச்சி விலகாமல் நின்றிருந்தவளை பார்த்தவுடன் மாறவர்மன், "தேவி…..வந்துட்டியா…? எனக்குத் தெரியும்…நீ வருவன்னு…என்னை விட்டுட்டு போக மாட்ட தானே..வா..வா..” என்று அவளை அழைத்தோடு மட்டுமல்லாமல் அவளுகே வேகமாக சென்றவன் அவளது கரங்களை பிடித்திழுத்து கொண்டு வந்து தேவியின் வரைப்படத்தினருகே நிறுத்தினான்.
மந்தாகினியின் கணவர் ஆதிசேஷன், “ டேய் பைத்தியகாரா…அவ தேவி இல்லடா…அது வேறப் பொண்ணு…” என்று கத்தினார்.
மாறவர்மனை 'பைத்தியகாரன்' என்றவுடன் அனைவருக்குமே ஒரு மாதிரியாக ஆகி விட்டது .
அருண்மொழியோ அவரை முறைத்துக் தள்ளினான்.
ஆதிசேஷனை அழுத்தமாக பார்த்த மாறவர்மன், “ என்ன சொன்ன..?” என கர்ஜித்தான்.
அவரோ அவனது மனநிலையை புரிந்து கொள்ளாமல், “ டேய்…அந்த பொண்ணு வேற டா. .உன் பொண்டாட்டி செத்து போய் ரொம்ப நாளாச்சு…” என்றவுடன் எங்கிருந்து வந்ததோ அவ்வளவு ஆத்திரம் அருகிலிருந்த அலங்கார பீங்கான் குவளையை தூக்கி அவர் மீது விட்டெறிந்து விட்டான்.
அனைவரும் பதறித் கொண்டு வர , அவனோ மேலும் சில பொருட்களை ஒரு கையில் வைத்துக் கொண்டு அனைவர் மீதும் வீசத் தயாராக இருப்பது போல கோபப் பார்வை பார்த்து வைத்தான்.
சுதர்சனரும் விஜயராணியும் வீர ராஜ சிம்மரருகே போய் நின்று கொண்டனர்.
மாறவர்மன் வீசிய பீங்கான் குவளை ஆதிசேஷனின் நெற்றியை பதம் பார்க்க, “ஆ…ஆ…அம்மா அய்யோ…! டேய்…பைத்தியம்…” என நெற்றியை பிடித்துக் கொண்டு அமர்ந்துவிட்டார்.
மந்தாகினியோ பதறியடித்து கொண்டு அவரருகில் ஒடி வந்து தனது புடவை தலைப்பினால் அவரது நெற்றியை இறுகப் பிடித்துக் கொண்டார்.
“ அய்யயோ…! இவ்வளவு ரத்தம் வருதே..டாக்டர் கிட்ட போகலாம்…வாங்க..” என்றவர் மாறவர்மனை பயத்துடன் பார்த்துக் கொண்டே ஆதிசேஷனுடன் அறையை விட்டு வெளியேறினார்.
பாரதியோ அவனது கோபத்தில் கதி கலங்கிப் போய் நின்றாள்.
மாறவர்மன் குருதி வழியும் கையோடு அவளது கரங்களை இறுகப் பற்றியிருந்தான்..
அவனது கையைப் பிடித்து தனது கரங்களை விலக்கிக் கொள்ள முயன்றவளின் முகத்தை கையில் ஏந்தியவன்,” நீ என் கூடவே தான இருப்ப…என்னை விட்டுட்டு போயிடாத…எனக்கு நீ இல்லாம இங்க இருக்க பிடிக்கல…நீயும் நானும் மட்டும் இருப்போம்…சரியா..?” என்றவன் அவளது கழுத்தைப் பார்த்து , "ஆமா..தாலி எங்க…?” என்று கூறி அவளை மீண்டும் அதிரச் செய்தான்.
அங்குமிங்கும் பார்வையை சுழல விட்டவன் தேவியின் திருமாங்கல்யம் அவளது வரைபடத்தில் மாட்டியிருப்பதைக் கண்டு , “ தோ…தோ…அங்க..அங்க…” என கையை காண்பித்தவன் அதிலிருந்து எடுத்து அவள் சுதாரிக்கும் முன்பே அவளது கழுத்தில் அணிவித்திருந்தான்.
அவளுக்கோ உலகமே தலைகீழாய் சுழலும் உணர்வு. என்ன ஏதென்று உணரும் முன்பே அவளது கழுத்தில் அணிவித்து விட்டு சிரித்துக் கொண்டிருந்தான்.
அவனது செயலால் அனைவரும் உறைந்து போய் நின்றிருந்தனர்.
தலை வழியாக தாலியை கழட்டப் போனவளின் கைகளை பிடித்துக் கொண்டார் ஆதிரை.
“உன்னை சாமியா நினைச்சு கேக்குறேன்…இதை மட்டும் கழட்டிடாதம்மா…எனக்கு என்னவோ நீ பக்கத்துல இருந்தா என்னோட மூத்த பையன் சரியாகிடுவான்னு தோணுது…அருண்மொழி மட்டும் என் பையனில்லை. மாறனும் என் பையன் போல தான்.உன்னை கெஞ்சிக் கேட்டுக்கேறேன் மா. ஒரு வேளை அவன் சரியாகலன்னா நீ தாராளமா இதை கழட்டி வச்சிட்டு வேற வாழ்க்கையை தேடிக்கோ.. நாங்க குறுக்க நிக்க மாட்டோம். ஒரு வாய்ப்பு கொடும்மா. இவ்வளவு வருஷம் ரொம்பவே கஷ்டப்பட்டுட்டாம்மா… எனக்காக..” என இறைஞ்சியவரை கண்டு பாவமாக இருந்தது.
இருப்பினும் இந்த திடீர் பந்தத்தை ஏற்க முடியாது தவித்தாள்.
அவளது முகம் மற்றும் கைகளில் வர்மனின் குருதி ஒட்டிக் கொண்டு இருந்தது.
ஆதிரை மெதுவாக வர்மனின் அருகில் வந்து, “ வர்மா…நான் சொன்னா கேப்பல்ல…அவ முகத்துல இரத்தமா இருக்கு…அவ குளிச்சிட்டு வரட்டும் அப்பறமா பேசிக்கலாம்…சரியா?” என தன்மையாக கேட்டார்.
மீண்டும் தேவி கிடைத்த மகிழ்ச்சியிலோ அல்லது ஆதிரையின் அக்கறையிலோ ஆழிப்பேரலையாக சுழன்று கொண்டிருந்த அவனது மனம் சற்று அமைதியானது.
சரியென்று அவனது தலை தானாக ஆடியது.
அன்று முதல் தினமும் அவளை குட்டிப்போட்ட பூனைப் போல சுற்றி சுற்றி வருகிறான்.
அவளுக்கு தான் அசௌகரியமாக இருந்தது.
தேவி மற்றும் மாறவர்மனின் திருமணத்தையும் அவளது இறப்பையும் ஆதிரை சுருக்கமாக பாரதியிடம் கூறியிருந்தார்.
யாராவது அவளை பாரதி என்றழைத்து விட்டால் போதும் ஆக்ரோஷமாகி விடுவான் வர்மன்.
எனவே அவன் முன்பு அனைவரும் அவளை தேவி என்றழைக்க பழகிக் கொண்டனர் .
இந்த மூன்று வருடங்களில் அவனிடம் நிறையவே முன்னேற்றம் காணப்பட்டது. கோபமும் மூர்க்கமும் வெகுவாக குறைந்திருந்தது.

Last edited:
Author: STN46
Article Title: தகிக்காதே குளிர்நிலவே..!(20)
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.