இயந்திர தொழிற்சாலையின் வரவு செலவு கணக்கு சம்பந்தப்பட்ட கோப்பில் ஏதோ கண்ணுக்குத் தெரியாத பிழை இருந்தது.
கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கு மேலாக அருண்மொழியும் நந்தினியும் அலசி ஆராய்ந்து விட்டனர்.
எங்கு பிழை என்று கண்டே பிடிக்க முடியவில்லை .
தலையை தாங்கிக் கொண்டு அமர்ந்திருந்தவளருகே தேநீர் கோப்பையை நீட்டினான்.
நிமிர்ந்து பார்த்தவள், "இல்லை வேணாம்..." என்றாள்.
"மைண்ட் தெளிவா இருந்தா தான் எங்க தப்பு பண்ணிருக்கோம்னுங்கறது தெரியும். எடுத்துக்கோங்க..." என்று கூறி விட்டு அவளருகே கோப்பையை வைத்தான்.
தேநீரை குடித்து முடித்தவளுக்கு மனமும் உடலும் புத்துணர்ச்சியாக இருந்தது போல உணர்ந்தாள்.
வழக்கம் போல அவனது கரிசனம் அவளை அசைத்து தான் பார்த்தது.
மெல்லிய சிரிப்புடன் பதறாமல் கூடுதல் கவனத்துடன் கோப்பினை பார்த்தவள்
ஒரு வழியாக தவறை கண்டுபிடித்தாள்.
“ ஓ…காட்..இதோ…இந்த இடத்துல தான் ஒரு சைபருக்கு பதிலா ரெண்டு சைபர் போட்டுருக்கு…அதான் டேலி ஆகாம சொதிப்பிருக்கு..ஹப்பா...ரொம்பவே டென்ஷன் பண்ணிடுச்சுல அருண்…” என்று உற்சாகமாக கூறி கொண்டே தன்னை மறந்து அருகில் அமர்ந்திருந்த அருண்மொழி மீது தலை சாயத்தாள்.
அருண்மொழியிடமிருந்து எந்த ஒரு பதிலும் வராததால் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.
அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான் .
தான் செய்து கொண்டிருக்கும் தவறு புரிய சட்டென்று சுதாரித்துக் கொண்டு விலகி எழுந்து நின்றாள் நந்தினி.
“ ஐ யம் சாரி…சார்…தெரியாம…தான்…” என வார்த்தைகளை மென்று முழுங்கினாள்.
கைகளை தொடையில் ஊன்றிக் கொண்டு எழுந்தவன் அவளை நெருங்கி நின்றான்.
பதறி பின்னால் நகர்ந்தவள் சுவற்றில் மோதி நின்றாள்.
அவளது முகத்திற்கு நேராக கையை நீட்ட அவளை முகத்தை திருப்பிக் கொண்டாள்.
அவள் பின்னால் இருந்த கஃப்போர்டின் மீது ஒரு கையை ஊன்றிக் கொண்டு, மறு கையிலுள்ள ஆள்காட்டி விரலால் அவளது முகத்தை கோலமிட்டான்.
“ எ…என்ன…வேணும்..சார்..?” வார்த்தைகள் தடுமாறியது.
அவனோ பதில் கூறாமல் தனது உள்ளங்கையை அவளது கன்னத்தில் வைத்தான்.
அவனது உள்ளங்கை வெப்பம் தந்த சுகத்தில் கண் மூடி கிறங்கி நின்றாள் நந்தினி.
“என்ன கேட்டாலும் கிடைக்குமா?” என்றான் கரகரப்பான குரலில்.
இப்போது நந்தினி மௌனியானாள்.
அவனது பார்வையை காண முடியாது முகத்தை வேறு புறம் திருப்பினாள்.
இன்னும் அவளை நெருங்கி நின்றவன், “ என்ன அமைதியா நிக்குற..?” என்றவன் அளவெடுத்து செய்து வைத்தது போலிருந்த உதடுகளை தாபமாக பார்த்தாள்.
தனது பெருவிரலைக் கொண்டு அவளது உதடுகளை அழுந்த வருடிக் கொண்டே மெல்ல அவளிதழை நெருங்கினான்.
தன்னிலை மறந்து நின்றருந்தவள் கணநேரத்தில் சுதாரித்து கொண்டு அவனை தன்னிடமிருந்து விலக்கிக் தள்ளினாள்.
“ஹலோ…! சார்… உங்க மனசுல என்ன தான் நினைச்சிட்டு இருக்கீங்க? அதான் கல்யாணமாகி உங்களுக்குன்னு மனைவி ஒருத்தவங்க இருக்காங்களே…! அவங்க கிட்ட போய் உங்களோட தேவையை சொல்லுங்க…என் கிட்ட வச்சிக்காதீங்க…மரியாதை கெட்டுடும்…” என கோபமாக படபடவென பொரிந்தாள்.
“அவ தான் எதுக்கும் ஒத்து வர மாட்டேங்குறாளே..! அதான்…" என அவன் முடிப்பதற்குள், "அதுக்குன்னு என் கிட்ட அட்வான்டேஜ் எடுத்துப்பீங்களா?எவ்வளவு சீப்பான ஆள் நீங்க…?பணம் நிறைய இருக்குன்னு கட்டிக்குறதுக்கு பொண்டாட்டின்னு வீட்டுல ஒண்ணு ,அப்பறம் வச்சிக்குறதுக்குன்னு சைட் ல ஒண்ணுன்னு கேக்குதோ…! உங்களுக்கு? “ என அவள் பாட்டுக்கு பேசிக் கொண்டே போக நெற்றியை நீவி விட்டவன் , ‘ஆண்டவா இவளுக்கு மூளைன்னு ஒண்ணு இருக்கா இல்லையான்னு தெரியலை.. என்னோட பொறுமையை ரொம்பவே சோதிக்குறாளே…! கூல் அருண்…கூல்…’ என்று தன்னை நிதானப்படுத்திக் கொண்டான்.
“கொஞ்சம் நகருறீயா?” என்றான் பல்லைக் கடித்து கொண்டே.
“ முடியாது…” எனத் திமிராக அவள் நிற்க அவளை மோதிக் கொண்டே அவளுக்கு பின்னால் இருந்த கஃப்போர்ட்டை திறந்தான்.
அவளுடலோடு நெருக்கிக் கொண்டு நின்றவன் ஆத்திரத்துடன் அவள் மீண்டும் ஏதோ கூற வரும் போதே "இந்தா..” என இரு கோப்புகளை அவளிடம் நீட்டினான்.
அவள் வாங்காமல் நிற்க , "பிடி..டி….படிச்சு பாரு…” என்றான் அழுத்தமாக.
கோபத்துடன் அவனை முறைத்துக் கொண்டே முதல் கோப்பினை பிரித்து பார்த்தாள்.
சென்னையில் அவள் நடத்தி வந்த நிறுவனத்தை வாங்கியதற்கான சான்றுகள்.
அவளது நிறுவனத்தை அவன் தான் வாங்கியிருந்தான். சில மாதங்களுக்கு முன்பு தான் மீண்டும் அவளது பெயருக்கே மாற்றியிருந்தான்.
அடுத்த கோப்பு அவளது தந்தை தொடங்கி நஷ்டமான எஃகு மற்றும் இயந்திரங்களை தயாரிக்கும் தொழிற்சாலையினுடையது.
மிகப்பெரிய நஷ்டத்தை கொடுத்து விஜயேந்திரனது உடல்நிலை மோசமடைய காரணமாக இருந்த தொழிற்சாலையை புதிய பெயரில் மாற்றியமைத்து மூன்று வருடங்களாக ஓரளவிற்கு லாபத்துடன் நடத்திக் கொண்டிருநதான் அருண்மொழி.
அந்நிறுவனத்தில் தான் நிர்வாக இயக்குனராக பணியமர்த்தப்பட்டாள் நந்தினி.
அந்நிறுவனமும் அவளது தந்தையின் பெயருக்கு மாற்றியமைக்கப்பட்டிருந்தது.
நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.
“சோ…நீங்க தான் என்னோட கம்பெனியையும் எங்கப்பாவோடதையும் வாங்கியிருக்கீங்களா? அப்பறம் எதுக்கு திரும்பவும் என்னோட பெயருக்கும். அப்பாவோட பெயருக்கும் மாத்தி வச்சிருக்கீங்க? இதனால உங்களுக்கு என்ன லாபம்? “ என்றவள் மீண்டும் அவன் புறம் திரும்பி , “ ஓ…ஹோ…நான் உங்களை அவமானப்படுத்தியதை எல்லாம் மனசுல வச்சு பதிலுக்கு என்னைய அவமானப்படுத்தனும் னு தான் இவ்வளவு வருஷம் காத்திருந்து கழுத்தருத்தீங்களா?...வாவ்….!எவ்வளவு வன்மம் உங்க மனசுல..? நான் உங்களை காதலிக்கல…உங்களை அவமானப்படுத்தியிருக்கேன்னு பகையை மனசுல வச்சு உங்க பணபலத்தாலயும் உங்க அதிகார பலத்தாலயும் எங்களோட கம்பெனியை வாங்கி….அதுல என்னையே வேலைப் பாக்க வைச்சு…நான் எப்படி உங்களை அவமானப்படுத்திய ஏனோ…அதே மாதிரி நீங்க என்னை அவமானப்படுத்தி சந்தோஷப்பட்டுருக்கீங்க…கிரேட் சார்..நீங்க…ஆனா…நீங்க தான் பாரதியை கல்யாணம் பண்ணிக்கிட்டீங்களே…அப்பறம் ஏன் என்னோட சுழ்நிலையை மனசுல வச்சு இப்ப என்னை பலகீனபடுத்தப்படுத்தி என்னை நெருங்க முயற்சிக்குறீங்க…? என்ன கேவலமான புத்தி உங்களுக்கு? கல்யாணம் ஆனாலும் உங்க புத்தி ஏன் இப்படி போகுது…? ச்சீ…நல்லவர் வேஷம் போடுற பொறுக்கி…தான்” என்றவளின் மீதி வார்த்தைகள் அவனிதழுக்குள் சென்றிருந்தது.
கைக்கொண்டு அவனை விலக்க முயற்சிக்க அனைத்தும் பலனற்று தான் போனது.
கோபத்துடன் கூடிய ஆவேசமான அவனது முத்தம் அவளை நிலைகுலைய வைத்தது.
முத்தமிட்டுக்கொண்டே பின்னால் நகர்ந்தான்.அவது கரங்களை இறுகப் பற்றிக் கொண்டிருந்தான்.
அவனை அவள் விலக்க முயல பதிலுக்கு அவன் அவளை பின்னே தள்ளிக் கொண்டு போக …ஆவேசமான முத்த யுத்தம் ஒன்று நடந்து கொண்டிருந்தது.
“ டேய்…அருண்…இன்னைக்கு பொலிசோ…கி…கிட்ட…” என்றவனின் வார்த்தை பாதியிலேயே நின்றது.
“அடேய்…. என்னங்கடா…இது..?” என்று கூறி முடிப்பதற்குள் நந்தினியை கையில் ஏந்திக் கொண்டு படாரென்று கதவை காலால் உதைத்து சாத்தினான் அருண்மொழி.
திடீரென சாத்தியத்தில் பதறி பின்னால் நகரந்த இளமாறன், "அவனாவது பரவாயில்ல டா..நீ.. இன்னைக்கு ஃபர்ஸ்ட் நைட்டை முடிக்காம வர மாட்ட போலவே..” என்று முணுமுணுத்தவன் தலையிலடித்துக் கொண்டு சுகன்யாவைக் காணச் சென்றான்.
நந்தினியை கைகளில் ஏந்தியபடி அவளுடன் மஞ்சத்தில் சரிந்தான்.
அவள் சுவாசத்திற்கு தடுமாற மெல்ல அவளை விட்டு விலகி நிமிர்ந்து அவளைப் பார்த்தான்.
மீண்டும் மீண்டும் அவளிதழில் குடியிருக்க மனம் விழைந்தது.
மீண்டும் அவளிதழை நோக்கி அவன் குனிய, “விடுடா…இடியட் ..ஆஆ..,என்னை விடு…” என அவனது சட்டையை பிடித்து உலுக்க சட்டைப் பட்டன்கள் கையோடு பிய்த்துக் கொண்டு வந்தது.
“ பைத்தியக்காரி…. லூசு மாதிரி பேசுறதை கொஞ்சம் நிறுத்துறியா? இந்த மூணு வருஷத்துல கொஞ்சமாவது மாறியிருப்பன்னு நினைச்சேன்..நீ அப்படியே தான் டி…இருக்க…”
“என்னது டி யா…? முதல்ல என் மேல இருந்து எழுந்திருங்க”. என அவள் சீற.
“ முடியாது டி…”
“ என்னது டி யா? நானென்ன உங்க பொண்டாட்டியா?
“ ஆமா …டி…நீ தான் டி என்னோட பொண்டாட்டி…அதனால எத்தனை தடவை வேணாலும் டி போட்டு பேசுவேன்..”
“ உளறாதீங்க பாரதி..தான்..” என்பதற்குள் அவளது வாயை கையால் மூடியவன், “ பாரதி இப்பவும் என்னோட ஃப்ரெண்ட் தான். அதுல இப்ப வரைக்கும் எனக்கு எந்த மாற்றமும் இல்லை. நான் தெளிவாக தான் இருக்கேன். நீ தான் போட்டுக் குழப்பிக்கிட்டே இருக்க. நான் பண்ணுன ஒரே தப்பு பாரதியை லவ் பண்ணுறேன்னு உன்னை வெறுப்பேத்தினது தான். பாரதி நடுவுல பண்ணுன குழப்பத்துனால தான் நீ மாத்தி பேசினங்கறதும் எனக்கு தெரிஞ்சு போச்சு. அன்னைக்கு தேவையில்லாம பேசி என்னை ரொம்பவே டென்ஷன் பண்ணிட்ட. அதுக்கப்புறம் தான் பாரதிக்கு ஆக்சிடெண்ட் ஆச்சு…அவளுக்கு இம்மீடியட்டா ட்ரீட்மென்ட் தேவைப்பட்டது. நீயும் ஓவரா பேசிட்ட. அதுக்கப்புறம் எனக்கு அங்க இருக்க பிடிக்கல. பாரதியை கூட்டிட்டு ட்ரீட்மென்ட்டுக்காக இங்க வந்துட்டேன். அவ குணமாகுறதுக்கு முழுசா மூணு மாசத்துக்கு மேல ஆச்சு. மாறவர்மனோட மனைவி தேவி பாரதி மாதிரியே இருந்ததுனால அவங்க படத்துல இருந்த தாலி எடுத்து பாரதி கழுத்துல போட்டுட்டான். சில காரணங்களை மனசுல வச்சு அவளை இங்கயே தங்க சொல்லிட்டோம். பாரதியை நெருங்க மாறவர்மன் ரொம்ப ட்ரை பண்ணுனான். ஆனா அதை நாங்க எப்படியோ தடுத்துட்டோம். வர்மனோட ட்ரீட்மென்ட்டுனாலயும் பாரதியோட அருகாமையும் அவனோட மூர்க்கதனத்தை குறைச்சது… பாரதியை நாங்க மாறவர்மனை கல்யாணம் பண்ணிக்கோன்னு வற்புறுத்தல. அவளுக்கு விருப்பமிருந்தா மட்டுந்தான் மாறவர்மனை கல்யாணம் பண்ணிக்க சொன்னோம். ஆனா..அவளுக்கு அதுல விருப்பமில்லை போல. அதனால அவளுக்கு இந்தியாவுக்கு போக டிக்கெட் புக் பண்ணிட்டேன் அவ இன்னும் நாலு நாள்ல கிளம்பிடுவா…அவளுக்கும் எனக்கும் நடுவுல இருக்குறது ஜஸ்ட் பிரெண்ட்ஷிப் மட்டுந்தான். அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கைய அமைச்சு தரணும்ங்கறது மட்டும் என்னோட எண்ணம்...அதை தப்பா பேசாத..உன்னை வெறுப்பதேத்தவும் சில விஷயங்களை செஞ்சிருக்கேன் தான்..இல்லங்கல..ஆனா இப்பவும் நீ அழுத்தமா அப்படியே தான் இருக்க...உன் மனசுல இருக்குற தை சொல்லமாட்டேங்குற..." என்றான் .
“கொஞ்சம் என் மேல இருந்து எழுந்துக்கிறீங்களா மிஸ்டர்..?”
“நா கேக்கற கேள்விக்கு உண்மையா நேர்மையா பதில் சொன்னா தான் எழுந்துப்பேன்.” என சட்டமாக அவளை அணைத்துக் கொண்டிருந்தான்.
அவனுடலின் பாரத்தை தாங்க முடியாமல் அவளுக்கு தான் மூச்சு முட்டியது.
முயன்று அவனைப் பிடித்து தள்ளி முயல அவளது இரு கரங்களையும் பிடித்துக் கொண்டு, “ நீ என்னைய லவ் பண்ணுறியா? இல்லையா?” என்றான் அவளது விழிகளை பார்த்துக் கொண்டே.
“ இல்ல…”
அவளிதழில் மீண்டும் அழுந்த முத்தமிட்டான்.
“ ம்ம்ச்…உங்களுக்கு என்ன தான் வேணும்…? இப்படி எல்லாத்தையும் கொடுத்து என்னை கில்டியா ஃபீல் பண்ண வைக்காதீங்க…ப்ளீஸ்..!” என கண் கலங்கினாள்
“ ஏன் டி…என்னை இப்படி டார்ச்சர் பண்ணுற..? போடி போய் தொலை…எவ்வளவு தான்டி உன் கிட்ட கெஞ்சணும்னு நினைக்குற…நான் எப்போதும் ஒரே மாதிரி தான் இருக்கேன்…நீ தான் டி மாத்தி பேசுற. அவ்வளவு என்ன ஈகோ உனக்கு?. உன்னை மட்டும் தான் நான் வாழ்க்கை துணையா நினைக்குறேன். அதனால் தான் உன்னோட கம்பெனியை உன் கிட்டயே திரும்ப ஒப்படைக்குறேன். இதுக்கு மேல எப்படி உனக்கு புரிய வைக்குறதன்னு தெரியலை. பணம் இருக்குங்க திமிருல இதெல்லாம் உனக்கு பண்ணல. நீ இப்படியே தான் இருப்ப. மாறவே மாட்ட...
சரி கிளம்பு நீ…உன்னோட வரட்டு ஈகோவை பிடிச்சிகிட்டே தொங்கு…நான் தான் பைத்தியக்காரன் மாதிரி அன்னைக்கும் சரி…இன்னைக்கும் சரி…உன் கிட்ட கெஞ்சிட்டு இருக்கேன்…உன்னை தவிர வேற எந்தப் பொண்ணும் என் வாழ்க்கையில் இல்ல…அது மட்டும் உறுதி….தயவு செஞ்சு இடத்தை காலி பண்ணு…கண்ணு முன்னாடி நின்னன்ன வச்சிக்க இருக்குற கோபத்துக்கு அடிச்சிட்டுவேன் பாத்துக்க” என்று கூறி விட்டு அவளுக்கு முதுகு காட்டி திரும்பி நின்றான்.
கேசத்தை அழுத்தக் கோதிக் கொண்டு கோபத்தை கட்டுப்படுத்த முயன்று கொண்டிருந்தான்.
எவ்வளவு தான் புரிய வைக்க முயல்வது. புரிந்தே கொள்ளமுடியவில்லை என்றால் கூட பரவில்லை. புரிந்து கொள்ளவே மாட்டேன் என முட்டாள்த்தனமாக நடந்து கொள்பவளை பார்க்கும் போது ஆத்திரமாக வந்தது அருண்மொழிக்கு.
இரு மெல்லிய கரங்கள் அவன் முதுகோடு அணைத்துக் கொண்டது.
வெடுக்கென்று தட்டிவிட்டு நகர்ந்து நின்றான் அருண்மொழி.
“ ம்ம்ச்….கோபமா? சாரி அருண்..”
அவன் திரும்பாமல் அப்படியே நின்றிருந்தான்.
அவன் முன்பு வந்து நந்தினி நிற்க அவனோ மீண்டும் மறு புறம் திருப்பிக் கொண்டான்
“ம்ம்ச்.. நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்க பா…நீங்க நினைக்கிற மாதிரி எனக்கு ஈகோ, திமிரெல்லாம் கிடையாது. அதெல்லாம் உடைஞ்சு தூள் தூளாக போய் ரொம்ப நாளாச்சு…இப்ப உங்க முன்னாடி நிக்கறது சாதாரண நந்தினி தேவி தான். நீங்க என்னையே சுத்தி வர்றீங்கங்கற ஈகோவும் , எனக்காக என்ன வேணாலும் செய்வீங்கங்கற திமிரும் ஒரு காலத்துல இருந்தது உண்மை தான். அதெல்லாம் இப்ப இல்லை. நீங்க ஊரை விட்டு போனதுக்கப்பறம் ரொம்பவே தவிச்சி போயிட்டேன். பாரதி என் கிட்ட திமிரா பேசியிருந்தா, ‘சரி தான் போடி’ன்னு உங்க கிட்ட என்னோட காதலை சொல்லியிருப்பேன். ஆனா அவ ரெக்வஸ்ட்டா கேட்டதுனால என்னால மறுக்க முடியல. உங்க காதலுக்கு தகுதியான ஆள் நானில்லைங்கற எண்ணமும் ஒரு காரணம். அதான் எப்போதும் போல உங்களை சீண்டுற மாதிரி பேசி உங்களை விலகி போக வச்சேன்… எங்கப்பா கல்யாண ஏற்பாடு பண்ணறது நானே எதிர்பார்க்காத ஒண்ணு.. வேண்டாம் னு சொல்ல நினைச்சேன். ஆனா நீங்க பாரதியை கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைச்சு தான் ஆபிஸ்ல அப்பா இன்ஃபார்ம் பண்ணுறப்ப அமைதியா இருந்தேன். அப்பா கிட்ட பேசி நானே மேரேஜை கேன்சல் பண்ணிட்டேன். அதுக்கப்பறம் தான் அப்பாவோட கம்பெனி நஷ்டம் ஆச்சு,இதை சமாளிக்க அது…அதை சமாளிக்க இதுன்னு…அல்மோஸ்ட் எல்லா கம்பெனியையும் அப்பா ஆரம்பிச்சு நஷ்டமான ஒரு கம்பெனிக்காக விக்க ஆரம்பிச்சு…கடைசில வேலை பாத்தா தான் சமாளிக்க முடியும்ங்கற நிலை வந்தது .உங்க கம்பெனி விளம்பரத்தை பார்த்து அப்ளை பண்ணுனேன்…அதுக்கப்புறம் தான் இங்க வந்தது. உங்களையும் பாரதியையயும் பார்த்து கல்யாணம் ஆகிடுச்சு நினைச்சது…உண்மையை சொல்லப் போனா அழகான வாழ்க்கையை தொலைச்சிட்டேனேன்னு ரொம்பவே வருத்தமா இருந்தது. அரண்மனைக்குள்ள நடக்குற எந்த விஷயமும் எனக்குத் தெரியல..அதனால் தான் வர்மன் பாரதிக்கு தாலி கட்டுனது தெரியாம போச்சு. போதுமா…என்னோட விளக்கம். “ என்று கூறி விட்டு அவன் முகம் பார்த்து நின்றாள்..
அவனோ அப்போதும் அமைதியாக கைகளை கட்டிக்கொண்டு நின்றிருந்தான்.
“ம்ம்ச்…இன்னும் என்ன தான்டா வேணும்…? ஐ லவ் யூ டா…அருண்…லவ் யூ சோ…மச்…” என்றவள் கட்டை விரலால் எம்பி அவனது இரு கன்னத்திலும் மாறி மாறி முத்தமிட்டாள்.
அப்போதும் அவன் கல்லுப் பிள்ளையார் போலவே நின்றான்.
“ ஏய்…அறிவில்லை உனக்கு…உன் கிட்ட தான் என்னோட லவ்வை சொல்லிட்டு இருக்கேன்…சீக்கிரமா கல்யாண ஏற்பாடு பண்ணு…டா எருமை..” என ஒருமைக்கு தாவியவள் அவனிதழில் தன் இதழை அழகாக பொருத்தினாள்.
தாராளமாக அவளது முத்தத்தை ஏற்றுக் கொண்டவனின் இதழ்கள் பதில் முத்தத்தை வழங்கி காதலை ஏற்றுக் கொண்டது.

Last edited: