• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

தகிக்காதே குளிர் நிலவே - 5

Vishakini

Moderator
Staff member
அத்தியாயம் -5


ஊரிலிருக்கும் தனது தாத்தாவிற்கு அலைப்பேசியில் அழைத்தான்.

அவனது அழைப்பை ஏற்றவர் , “சொல்லு அருண். எப்படியிருக்க..? உன்னோட ஃபோன் காலுக்கு தான் ‌காத்திருந்தேன். உன்னோட வேலை எப்படி போகுது? இப்ப என்ன பண்ணிட்டு இருக்க ?” என்றார் சின்ன சிரிப்புடன்.

“ஹலோ…மை டியர் கிங் மேக்கர்..நான் நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க..? ஊரெல்லாம் எப்படி இருக்கு. நீங்க இப்ப என்ன பண்ணிட்டு இருக்கீங்க..?” என அடுக்கடுக்காக அவரிடம் கேள்விகளைக் கேட்டான்.

“ டேய்…! ஒவ்வொரு கேள்வியா கேளு டா. நான் இப்ப தான் சாப்டுட்டு உக்காந்திருக்கேன். இங்க இப்போதைக்கு எல்லாம் சரியா தான்‌ போயிட்டு இருக்கு. சரி சொல்லு அங்க எப்படி போகுது? இப்ப‌ நீ என்ன பண்ணிட்டு இருக்க..?” என்றார்.

“இங்க எல்லாம் ஓகே தான் தாத்தா. இப்ப நான் லேடீஸ் காலேஜ் வாசல்ல உக்காந்துட்டு பொண்ணுங்களை சைட் அடிச்சிட்டு இருக்கேன். நல்லா ஜாலியா போகுது லைஃப்.” என்றான் சிரித்தபடியே.

ஒரு பெருமூச்சுடன், “ உனக்கு நான் சொல்ல வேண்டியது இல்லை. லைஃபை கொஞ்சம் சீரியஸா எடுத்துக்கோ. அவ்வளவு தான் சொல்லுவேன். நடந்ததெல்லாம் உனக்குத் தெரியும் தானே..? இன்னமும் அப்படியே இருந்துட்டு இருந்தா என்ன அர்த்தம் அருண்மொழி.? இங்க இருந்தா உன்னோட வாழ்க்கை சரி வராதுன்னு தான் அங்க அனுப்பி வைச்சேன்.‌ அங்கயும் போய் நீ இப்படி விளையாட்டுத்தனமா இருந்தா என்ன பண்றது..?வாழ்க்கையை நீ அடுத்துக் கட்டத்துக்கு எப்ப கொண்டு போகப் போற அருண்மொழி? நான் எவ்வளவு நாள் உயிரோட இருப்பேன்னு தெரியாது. பார்த்து நடந்துக்கோ.” என்றார் சற்றே கவலையுடன்.

கழுத்தை தடவியபடியே, “நீங்க சொல்றது எனக்கு நல்லாவே புரியுது தாத்தா. எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க. அடுத்து என்ன‌ பண்ணலாம்ங்கறதை யோசிக்குறேன். என்னைப் பத்தி கவலைப்படாதீங்க. நீங்க உங்க உடம்பை பாத்துக்கோங்க. நேரத்துக்கு தூங்கி எழுந்துக்கோங்க. மருந்து மாத்திரையெல்லாம் நேரத்துக்கு போடுங்க. ரொம்ப நேரம் பேச வேண்டாம் நான் வச்சிடுறேன் தாத்தா. பை…” என்றான்.

“ சரிப்பா... வைச்சிடுறேன்.” என்று கூறி விட்டு அழைப்பை துண்டித்தார்..

யோசனையுடன் அமர்ந்திருந்தவனை அமுதனின் குரல் கலைத்தது.

“ ஏன்‌டா….ஒரு நிமிஷத்துல என்னை கதி கலங்க வச்சிட்டியே டா…! நல்லவேளை உடனே போய் அவளை கன்வின்ஸ் பண்ணிட்டேன். அவளும் என்னோட லவ்வை அக்சப்ட் பண்ணிட்டா. என்னை தான் லவ் பண்ணுறாளாம். எனக்கு இப்ப தான் நிம்மதியா இருக்கு. “ என்றான் நெஞ்சை நீவி விட்டுக் கொண்டே.

எழுந்தவன் அவனது சட்டையை நீவி விட்டபடியே, “ நா அப்படி ஒரு குண்டைத் தூக்கிப் போடலைன்னா காலம் பூராவும் இதயம் முரளி மாதிரி தான் நீ சுத்திட்டு இருப்ப. லவ் பண்ணுறவனுக்கு லவ்வை சொல்றதுக்கும் தைரியம் வேணும். கடைசி வரை நின்னு ஜெயிக்குற உறுதியும் வேணும். “ என்றான்.

அதில் நெகிழ்ந்து போனவன் நண்பனை அணைத்துக் கொண்டவன், “தேங்க்ஸ் டா மச்சி ‌..என் உயிர் நண்பன் டா…நீ. சொன்னதையெல்லாம்‌ நினைவுல வச்சிக்குறேன் டா. நீ தான் டா எனக்கு இன்ஸ்பிரேஷன்…” என்று உணர்ச்சிவசப்பட்டு கூறினான்.

அவனது தோளைத் தட்டிக் கொடுத்தவன் , "இன்னொன்னும் சொல்ல மறந்துட்டேன். குழலியோட அண்ணன் போலீஸ் டிபார்ட்மெண்ட்டாம் . அவன் கிட்ட அடி வாங்கவும் தைரியத்தை வளர்த்துக்கோ….சரியா..? “ என்றான் அலுங்காமல்.

“ டேய்….! “ என‌ வாயைப் பிளந்து நின்றவனை இழுத்துக் கொண்டு, “ வாயை பொளக்காத…! நேரமாச்சு வா போகலாம்.‌ முக்கியமான வேலை இருக்கு. அதை முடிச்சிட்டு வீட்டுக்கு கிளம்பணும். “ என்றபடி அமுதனின் இருசக்கர வாகனத்தில் ஏறி அதனை உறும விட்டான்.

இருவரும் ஏதேதோ பேசியபடி அலுவலுகத்தினுள்ளே நுழைந்தனர்.

அவர்கள் இருவரையும் பார்த்த பாரதி, “ உங்க ரெண்டு பேரையும் நந்தினி மேடம் கூப்டாங்க..எங்க போனீங்க ரெண்டு பேரும்? வேலை பாக்குற‌ நேரத்துல எங்க போய் வெளியே சுத்திட்டு‌ வர்றீங்க..?” என்றாள் காட்டமாக.

அருள்மொழியோ, “ ம்ம்…லேடீஸ் காலேஜ் போய்ட்டு வர்றோம். இந்த இன்ஃபர்மேஷன் போதுமா? எப்படியும் இதைத் தான் நீ போய் நந்தினி மேடத்துக்கிட்ட வத்தி வைக்கப் போற…ரொம்ப அக்கறை தான் உனக்கு எங்க மேல…மாட்டி விடுறவளே நீ தானே டி.” என்றான் கடுப்பாக.

“ டேய்…!” என்று முறைத்தவளை சட்டை செய்யாமல் அமுதனையும் இழுத்துக் கொண்டு நந்தினியின் அறைக்குள் அனுமதி பெற்று உள்ளே நுழைந்தான்.

இருவரும் திருதிருவென முழித்தபடி நந்தினியின் முன்பு நின்றிருந்தனர்.

நிமிர்ந்து அவர்களை பார்த்தவளின் விழிகள் அனலை கக்கியது.

“ மேடம்….அது வந்து…” என்று ஆரம்பித்த அமுதனை கையமர்த்தினாள்..

நாற்காலியில் அமர்ந்திருந்தவள் எழுந்து வந்து அவர்கள் முன்பு கைகளை கட்டிக்கொண்டு நின்றாள்.

“ இது ஆஃபிஸ்ன்னு ‌நினைச்சீங்களா‌‌? இல்ல வேற எதாவது ஃபன் பண்ணுற இடம்ன்னு நினைச்சீங்களா..? உங்க இஷ்டத்துக்கு வர்றீங்க…இஷ்டத்துக்கு போறீங்க.. கொஞ்சமாவது சீரியஸ்னஸ் இருக்கா? அந்த சி.எஸ் ஃபார்மாவோட புது ப்ராஜெக்ட் என்ன ஆச்சு? கோடிங்‌ எழுத ஆரம்பிச்சாச்சா…?” என்று அருண்மொழியை பார்த்து கேட்டாள்.

“ இ..இன்னும் ஆரம்பிக்கல மேடம். நாளைக்கு ஆரம்பிச்சுடுறேன்‌..” என்றான் தடுமாற்றத்துடன்.

“ அந்த வேலையைத் தவிர மத்த வேலையெல்லாம் நல்லா பண்ணுறீங்க..போயும் ‌போயும் லேடீஸ் காலேஜ் வாசல்ல நின்னு போற வர்ற பொண்ணுங்க கிட்ட பேசி கடலை போட்டுட்டு இருக்கீங்க..ஆஃபீஸ் டைம்ல இங்க இல்லாம வெளியே அநாவசியமா சுத்திட்டு இருக்கீங்க.? என் கிட்ட பெர்மிஷன் கூட கேக்கல..? ஹவ் டேர் யூ‌ ஆல்? அமுதன் உங்க மேல எனக்கு கொஞ்சம் மரியாதை இருக்கு. இவர் கூட சேர்ந்து அநாவசியமாக நேரத்தை வீணடிக்காதீங்க. திஸ் இஸ் தி லாஸ்ட் வார்னிங். இனி ஆஃபீஸ் டைம்ல வேலையை விட்டுவிட்டு வெளியே போனீங்கன்னா அப்படியே உங்களோட ரெசிக்னேஷன் லெட்டரையும் கொடுத்துட்டு போயிடுங்க. யூஸ்லெஸ் ஃபெல்லோஸ்… ” என்று திட்டியவள் நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தாள்.

“ மேடம்…” எனத் தயக்கத்துடன் அழைத்தான் அருண்மொழி.

“ வாட்…” என சீறினாள்.

“ இன்னைக்கு டைம் ஆயிடுச்சு. வீட்டுக்கு போகணும். நாளைக்கு வந்து மீதி வெர்க்கை முடிச்சிடவா.?” என்றான் பாவமாக முகத்தை வைத்தபடியே.
 
Top Bottom