அத்தியாயம் 03
‘விஷ்வாடெக் அகாடமி’ என்று பெரிய பலகை பதாகையை தாங்கி நின்றது அந்தக் கல்லூரி அதை வெறித்துப் பார்த்தப்படி அங்கு நின்று இருந்தாள் ஆத்யா ஷாலினி…
ஆம் இன்று அவள் கல்லூரியின் முதல் நாள் அவள் ஆசைப்பட்டது போலவே பெரிய கம்பெனி ஒன்றின் மூலமான ஸ்காலர்ஷிப்புடன் ஐடி படிப்பதற்காக வந்து விட்டாள்…
இது அவளின் கனவும் கூட ஐடி துறையில் சிறந்து விளங்க வேண்டும், சாஃப்ட்வேர் இன்ஜினியர் ஆக வேண்டும் என்பதே அவளின் கனவு. இன்று அது நிறைவேறும் தருணங்களை அவள் நெருங்கி விட்டாள். இன்னும் இரு வருடங்கள் தான் இந்த படிப்பை முடித்து விட்டால் அவள் முழுமையாக ஒரு சாப்ட்வேர் இன்ஜினியராக ஆகிவிட முடியும்…
நல்ல கம்பெனியில் வேலையும் அதி கூடிய சம்பளத்தையும் பெற்று அவள் சித்திக்கும் சித்தப்பாக்கும் முக்கியமாக அவளின் தங்கைகளுக்கும் அவள் நினைத்தது போல் நிறைய செய்யலாம், தனது இலக்கை நெருங்கி விட்டோம் என்கிற சந்தோஷம் அவள் கண்களில் அப்பட்டமாக தெரிந்தது…
அவள் இங்கு வந்து சேருவதற்கே பல போராட்டங்கள் போராட வேண்டியிருந்தது, ஆனாலும் ஒரு வழியாக வந்து சேர்ந்து விட்டாள். இன்னும் அவள் போராட வேண்டியதும் நிறைய உள்ளது என்பதையும் அவள் அறிவாள், இருந்தாலும் அவளுள் ஒரு நிறைவான சந்தோஷம்…
பெருமூச்சு ஒன்றுடன் கல்லூரிக்குள் தனது முதல் பாதச்சுவடை பதித்தாள், உள்ளே வந்தவள் அங்கே நின்றிருந்த சில மாணவர்களின் உதவியுடன் இவளின் வகுப்பு எங்கே இருக்கிறது என்பதை கேட்டு தெரிந்து கொண்டு அங்கே நுழைந்து கொண்டாள்…
அவள் நேரத்துடனே வகுப்பறையிற்குள் வந்திருக்க இன்னும் ஆசிரியரும் மாணவர்களும் முழுதாக யாரும் வந்திருக்கவில்லை…
முதலாவது வரியில் இருந்து முதல் மேசையில் சென்று அமர்ந்தவளுக்கு தான் இங்கே எப்படி வந்து சேர்ந்தோம் என்பது அவள் மனக்கண்ணில் ஓடியது…
தன் சித்தியின் முகத்தை வைத்தே அவர் மனதில் இருப்பதை கண்டு கொண்டவள் தனது சித்தப்பாவுக்கு எந்த ஒரு வகையான செலவும் வைக்க கூடாது என்பதில் உறுதியாகி இருந்தாள். அவர்களிடம் தனக்கு ஹாஸ்டலும் சாப்பாடும் தருவார்கள் என்று பொய்யும் கூறிவிட்டாள்…
ஆனால் இப்போது அதை கவனிக்க வேண்டியது அவளின் பொறுப்பல்லவா! அதனால் அவள் முதலில் செய்ய நினைத்தது என்னவோ அவள் சேர இருக்கும் கல்லூரியின் முதல்வரிடம் பேசி தனக்கும் ஹாஸ்டல் தர முடியுமா என்பதைக் கேட்க வேண்டும் என்பதை தான். அவளும் அதே போல் பேசினாள் ஆனால் நாம் பார்த்தது தானே விஷ்வசாஹரன் அதை நிராகரித்து விட்டான், இருந்தாலும் அவள் மனம் தளர்ந்து விடவில்லை ஏதாவது செய்து அங்கு செல்லும் மனநிலையில் இருந்தவள் அடுத்த கட்டத்தை யோசிக்க ஆரம்பிவிட்டாள்…
ஆத்யா ஷாலினி செல்ல இருக்கும் ஊரிலேயே அவளுடன் பாடசாலையில் படித்த பெண்ணவளின் தோழி ஒருத்தி இருந்தாள். அதனால் அவளின் உதவியை நாடவே இவள் அடுத்து நினைத்து இருந்தாள்…
அதேபோல் ஆத்யா தனது தோழியான திவ்யாவின் உதவியை கேட்க, அவளும் ஹாஸ்டல் ரூம் குறைந்த விலையில் எடுத்து தருவதாக கூறியிருந்தாள். ஆனால் சாப்பாட்டிற்கும் ஹாஸ்டல் ரூமின் வாடகைக்கும் பணம் பெண்ணவள் தானே கட்ட வேண்டும் அதற்கு என்ன செய்வது என்பது ஆத்யாவின் யோசனையாக இருந்தது…
இதில் காலை முதல் மாலை நான்கு மணி வரை அவளுக்கு கல்லூரி வேறு இருந்தது. சனி மற்றும் ஞாயிறு தான் முழு நேர விடுமுறை அதிலும் அசைமென்ட், ப்ராஜக்ட் என்று அவள் நிறைய செய்ய வேண்டி இருக்கும். ஆனாலும் ஏதாவது வேலை செய்ய வேண்டிய கட்டாயம் அதும் மாலை நான்கு மணிக்கு பிறகு தான். இரவில் வேலை செய்வது வேறு பெண்களுக்கு பாதுகாப்பு அற்றது…
இருந்தாலும் அவளுக்கு வேற வழியும் இருக்கவில்லை, அதனால் தன் தோழி திவ்யாவிடம் தனக்கு இன்னொரு உதவியாக ஏதாவது வேலை மாலை நான்கு மணிக்கு பிறகு எடுத்து தர முடியுமா என்றும் கேட்டிருந்தாள், அவளும் பார்த்து விட்டு சொல்லுவதாக கூறினாள்…
இப்படியே இரு நாட்கள் கழிய, அன்று திவ்யாவிடம் இருந்து அவளுக்கு அழைப்பு வந்திருந்தது…
“ஹலோ சொல்லு திவ்யா ஹாஸ்டல் ரூம் ஓகே தானே. அப்புறம் நான் பார்க்க சொல்லி இருந்த வேலை என்ன ஆச்சு?” எனக் கேள்வியாக நிறுத்தினாள்…
“ஆஹ் அது சொல்ல தான் போன் பண்ணினேன் ஆதி. எங்க அப்பாக்கு தெரிஞ்ச ஒருத்தவங்க வீடு இருக்கு கொஞ்சம் பெரிய வீடு தான். ஏற்கெனவே அவங்களுக்கு காலைல இருந்து ஈவினிங் வரையும் ஒருத்தங்க வேலைக்கு இருக்காங்களாம், ஆனா ஈவினிங்ல இருந்து நைட் 9 மணி வரை அவங்களுக்கு இன்னொரு வேலையாள் வேணும்னு தேடிக்கிட்டு இருக்காங்களாம், அங்க என்ன வேலைனா லைக் ஹவுஸ் ஓல்டு வேலைதான் சமைக்கிறதுக்கு உதவி பண்ணனும், வீடு கிளீன் பண்ண உதவி பண்ணனும், இப்படி சின்ன சின்ன வேலைகள் தான் சம்பளமும் நல்லா பார்த்து தருவாங்களாம்…
அப்புறம் அதே ஆள் சண்டேவும் ஃபுல் டே வேலை பார்க்க தேவையாம் சோ நீ விக்டேஸ்ல ஈவினிங் நாலு டூ நைட் ஒன்பது மணி வரையும் வேலை செய்ய வேண்டி இருக்கும். அப்புறம் சண்டைல ஃபுல் டே போக வேண்டி இருக்கும் ஃபுல் டே மீன்ஸ் காலையில் இருந்து ஈவினிங் ஆறு மணி வரையும் அங்க வேலை பார்க்க வேண்டி இருக்கும்.
உனக்கு ஓகே னா சொல்லு நான் உனக்கு அவங்களோட நம்பர் தரேன் இல்லன்னா, என் அப்பாட்ட சொல்லி பேச சொல்றேன். உனக்கு எது வசதினு நீயே பார்த்து யோசிச்சுட்டு சொல்லு, படிக்கிற உனக்கு வீட்டு வேலை பார்க்க போறது எல்லாம் ரொம்ப கஷ்டமா இருக்கும், எதுக்கு யோசிச்சி பாரு உன் சித்தப்பா கிட்ட சொன்னா அவரே பணம் தருவாரு நான் உங்கிட்ட ஏற்கனவே இதை சொல்லிட்டேன். இருந்தாலும் நீ பிடிவாதமா இருக்குறதுனால தான் அப்பாகிட்ட சொல்லி இந்த வேலை ஒன்னு பார்க்க சொன்னேன் அவரும் இதை பார்த்து சொன்னாரு, உன் படிப்புக்கும் நீ செய்ய போற வேலைக்கும் எந்த சம்மந்தமும் இல்ல டி, நீயே யோசிச்சு ஒரு முடிவு எடுத்துட்டு சொல்லு ஆத்யா…” என திவ்யா நீளமாக பேசி முடித்தாள்…
திவ்யா கூறிய அனைத்து பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த ஆத்யா ஷாலினியும் அவள் பேசி முடித்ததுமே “இதுல நான் யோசிச்சு சொல்ல எதுவுமே இல்ல திவ்யா. உழைச்சு சம்பாதிக்குற எல்லா வேலையுமே நல்ல வேலை தான் எனக்கு அத பத்திலாம் கொஞ்சமும் கவலை இல்ல. நல்ல வேலை இருந்தா போதும் சோ நான் அந்த வேலைக்கு வரேன்னு சொல்லிரு. நான் அவங்க கிட்ட பேசல உன் அப்பா கிட்ட சொல்லி நீயே பேச சொல்லிரு. நான் அங்க வந்ததுமே வேலையில ஜாயின் பண்ணிகுறேன்னு சொல்ல சொல்லு.
இன்னொரு முக்கியமான விஷயம் சொல்லனும், அதுக்கு முதல்ல உனக்கு ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் டி. எனக்கு நீ ரொம்ப பெரிய ஹெல்ப் பண்ணியிருக்க, அப்புறம் நான் சொன்ன ஒரே ஒரு விஷயம் தான் நான் இப்படி வேலைக்கு போக போறது எக்காரணம் கொண்டும் என் வீட்டுல உள்ள யாருக்குமே தெரியக்கூடாது. நீ என் தங்கச்சிங்க கூட காண்டாக்ட்ல இருக்கேன் எனக்கு தெரியும். சோ இது யாருக்குமே தெரியக்கூடாது. அது மட்டும் மறந்துடாத…” என எச்சரிக்கையாக கூறி இருந்தாள்…
“நான் சொல்லி நீ கேக்கவா போற என்னமோ பண்ணி தொல, உன் தேங்க்ஸ்லாம் ஒன்னும் தேவ இல்லை, நான் யார்கிட்டயும் எதுவும் சொல்ல மாட்டேன்…” என கோபமாக பேசிய திவ்யா அதற்கு மேல் எதுவும் பேச விரும்பாது அழைப்பை துண்டித்து விட்டாள்…
இப்படி தான் கடைசியாக இங்கு வந்து சேர்ந்திருந்தாள் ஆத்யா ஷாலினி, யோசனையுடன் அமர்ந்திருந்தவளின் பக்கத்தில் வந்து அமர்ந்தாள் நிவேதா…
தனக்கு பக்கத்தில் ஒருவர் வந்து அமர்ந்திருப்பதை கூட அறியாது யோசனையில் மூழ்கி இருந்த ஆத்யாவின் முன் தன் கையை ஆட்டி அவளை நிகழ்காலத்திற்கு கொண்டு வந்திருந்தாள்…
ஆத்யாவோ புரியாமல் தன் பக்கத்தில் அமர்ந்திருந்தவளை யோசனையாக பார்க்க, நிவேதாவே முதலில் தன்னை அறிமுகம் செய்து கொண்டாள்..
“ஹாய் என் பெயர் நிவேதா, நைஸ் டு மீட் யு…” என அவளின் முன் தன் கையை நீட்டி இருந்தாள்…
ஆத்யா ஷாலினியும் தன் யோசனைகளை அப்போதைக்கு கைவிட்டவளாக, நீட்டி இருந்த நிவேதாவின் கையுடன் நட்பாக தன் கையை குலுக்கி கொண்டாள்…
“என் பெயர் ஆத்யா ஷாலினி நைஸ் டு மீட் யூ டூ…” என சினேகமான புன்னகையுடன் அவளைப் பார்த்து கூறி இருந்தாள்…
இவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே முதல் பாடம் ஆரம்பித்து விட அவர்கள் கவனமும் அங்கு திரும்பிவிட்டது…
இப்படியே அடுத்தடுத்து இரு வேறு பாடங்கள் நடந்து முடிய அவர்களுக்கான மதிய உணவு நேரமும் வந்தது…
கேண்டினில் மீண்டும் யோசனையாக அமர்ந்திருந்தவளின் முன் வந்த அமர்ந்தாள் நிவேதா, அவளுக்கு அருகிலேயே அவளின் தோழி பிரியாவும், தோழன் அர்ஜுனும் வந்து அமர்ந்துக் கொண்டார்கள்…
ஆத்யா ஷாலினியும் மெதுவாக அவர்களைப் பார்த்து புன்னகைக்க, நிவேதாவோ “என்ன ஆத்யா அப்போதிலிருந்து பார்க்கிறேன் ஏதோ யோசனைலயே இருக்க, ஏதாச்சும் பிரச்சினையா?” என அக்கறையாக வினாவினாள்…
“சேச்சே அப்படிலாம் எதுவும் இல்ல புது இடம், புது ஆட்கள் அதுதான் மிங்கிள் ஆக கொஞ்சம் கஷ்டமா இருக்கு வேற ஏதும் இல்லை…” என தன் மனதுக்குள் பல போராட்டங்கள் இருந்தாலும் அதை காட்டிக் கொள்ளாமல் அவர்களை பார்த்து அழகாக புன்னகைத்தாள்…
“அதெல்லாம் போக போக பழகிடும் எல்லாருக்கும் புது இடம், புது ஆட்கள் தான்…” என பிரியாவும் அவளைப் பார்த்து ஆறுதலாக கூறினாள்…
அதைக் கேட்ட ஆத்யாவும் அப்போதைக்கு தன் யோசனைகளை ஒதுக்கி வைத்தவளாக தன் முன் இருந்த மூவரையும் பார்த்து அழகா சிரித்திருந்தாள், அப்போதுதான் அர்ஜுனுக்கு ஒரு விடயம் தோன்றியது…
“ஹேய் ஆத்யா நீங்க தானே நாலாவது இடம்? நாம எப்டி சேட் ஆகி இருக்கோம் பார்த்திங்களா? முதாலது, இரண்டாவது, மூனாவது, நாலாவது னு செம்ம கோ இன்சிடென்ஸ் ல, என்ன ஒன்னு ஆத்யாவுக்கும் நம்ம கூட ஹாஸ்டல் ரூம் கிடைச்சி இருக்க சூப்பரா இருந்து இருக்கும்…” என உற்சாகமாக கூறினான்…
அவன் கூறியதை கேட்ட மற்றைய இருவரும் அவனை பார்த்து சிரிக்க, ஆனால் அதை கேட்ட ஆத்யாவோ சிரிக்க கூட முடியாமல் பெருமூச்சு ஒன்றை இழுத்து விட்டுக் கொண்டாள்…
பாவம் அவளும் அதை தானே ஆசைப்பட்டாள், தனக்கும் ஹாஸ்டல் ரூம் கிடைக்க வேண்டும் என்று, ஆனால் அதற்கு தான் விஷ்வ சாஹரன் அனுமதிக்கவில்லையே…
அச்சமயம் “மிஸ் ஆத்யா ஷாலினி…” என அவளின் பெயரை யாரோ சத்தமாக அழைக்க சத்தம் கேட்டு நால்வரும் ஒருங்கே திரும்பி பார்த்திருந்தனர்…
தொடரும்…

Author: STN - 77
Article Title: தழலை அணைக்கும் அமுதகமே - 03
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.