STN - 77
New member
அத்தியாயம் 04
“யாருமா இங்க ஆத்யா ஷாலினி?...” என அங்கு வந்த கல்லூரியின் பியூன் கேட்க அதைக் கேட்டு தன்னை எதற்காக அவர் கூப்பிடுகின்றார் என்ற யோசனையுடனே எழுந்து நின்றாள் ஆத்யா…
“நான் தான் ஆத்யா…” என அவள் கூற, அவளுடன் சேர்ந்து மற்றைய மூவரும் கூட எழுந்து நின்றனர்…
“ உங்கள டிரெக்டர் விஷ்வநாதன் சார் அவர் ஆபிஸ் ரூமுக்கு கூப்பிடுறாரு மா…” என சொல்லிவிட்டு அவர் சென்று விட்டார்…
ஆத்யாவோ அவர் எதற்கு தன்னை கூப்பிடுகின்றார் என்று யோசனை உடனே முன்னாள் திரும்ப அங்கு அவளை தான் கேள்வியாக பார்த்துக் கொண்டு நின்றனர் அர்ஜுன் பிரியா மற்றும் நிவேதா…
“என்னாச்சு ஆத்யா? எதுக்கு உன்ன விஷ்வநாதன் சார் கூப்பிடுறாரு?...” என்ன புரியாமல் நிவேதா கேட்க, அதே குழப்பம் தானே ஆத்யாவுக்கும் அவளோ நிவேதாவை பார்த்து இதழ்களைப் பிதுக்கியவள்…
“எனக்கும் அதுதான் புரியல நான் போய் என்னன்னு பாத்துட்டு வரேன் நீங்க மூணு பேரும் கிளாசுக்கு போங்க…” என அவர்களிடம் கூறிவிட்டு முதல்வரின் அலுவலக அறையை நோக்கி நடக்கத் தொடங்கினாள்…
யோசனையுடனே அவ்விடத்தை அடைந்தவள், அறை கதவை தட்டி விட்டு உள்ளிருந்து அனுமதி வரும் வரை காத்திருந்தாள்…
“எஸ் கம்மிங்…” என அவரின் குரல் கேட்க இவளும் உள்ளே நுழைந்து கொண்டாள்…
“ஆஹ் உள்ள வாமா உனக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன் நீ தானே ஆத்யா ஷாலினி?...” என அவளைப் பார்த்து கேட்டார் விஷ்வநாதன்…
“ஆமா சார் நான் தான் ஆத்யா ஷாலினி. என்னை கூப்பிட்டதா பியூன் அண்ணா வந்து சொன்னாங்க, என்னாச்சு சார் எதுக்கு கூப்பிட்டீங்க?” என பதட்டமாக கேட்டாள்…
காலேஜ் வந்த முதல் நாளே அவளின் பெயரை சொல்லி மேல் இடத்தில் இருக்கும் ஒருவர் கூப்பிடும் போது, யாருக்காக இருந்தாலும் பதட்டம் வர தானே செய்யும், அதே பதட்டம் தான் ஆத்யா ஷாலினியிடமும் இருந்தது…
“ஒரு சின்ன விஷயமா பேச தான் கூப்பிட்டேன், பதறாம வந்து உட்காரு மா…” என தன் முன் இருந்த இருக்கையை காட்டி அவளை அமர சொன்னார் விஷ்வநாதன்…
அவளும் என்னவென்றே புரியாது அவர் கூறிய ஒரே காரணத்திற்காக அவரின் முன் வந்து அமர்ந்து கொண்டாள்…
“சொல்லுங்க சார் என்ன விஷயம்?” என குரலை தாழ்த்தி அவள் கேட்க, அவளைப் பார்த்து மென்மையாக புன்னகை புரிந்தவரோ “அது ஒன்னும் இல்ல காலேஜ் வரதுக்கு முன்னாடியே நீ ஒரு சின்ன ரிக்வெஸ்ட் வச்சிருந்த, ஆனா சில காரணங்களால அந்த ரிக்வெஸ்ட்ட என்னால அக்சப்ட் பண்ணிக்க முடியல, சோ அது எனக்கு ஒரு மாதிரி கில்டியாவே இருந்துச்சி, இது வர யாரும் இப்டி ஒரு ரிக்வஸ்ட் வைச்சதும் இல்ல ஆனா என்னால தான் அத செய்ய முடியாம போய்டுச்சி, அது தன் உன்ன நேர்ல பார்த்து ஒரு தடவ மன்னிப்பு கேட்கலாம்னு தான் கூப்பிட்டேன் மா…” என வருத்தமான குரலில் அவளைப் பார்த்து கூறினார்…
“அய்யோ சார் அப்படிலாம் எதுவுமே இல்ல, எனக்கு இதுல எந்த பிரச்சினையும் இல்ல, உங்க பக்கம் இருந்த ரீசன் நீங்க சொன்னீங்க அவ்வளவு தானே இதுல என்ன இருக்கு? இதுலாம் பெரிய விஷயமே இல்ல, சாரிலாம் வேணாம் சார்…” என அவர் கூறியதை கேட்டு அதிர்ந்தவளாக உடனே மறுப்பு தெரிவித்தாள்…
“இல்லம்மா என்னால பண்ணி தர முடியும் ஆனாலும் என்னால பண்ண முடியாம போயிடுச்சு அது தான் ரொம்ப வருத்தமா இருந்துச்சு, உன்கிட்ட ஒரு தடவை சொல்லிக்கலாம் னு தான் கூப்பிட்டேன் சாரிமா…” என அவளிடம் மன்னிப்பு வேண்டினார்…
விஷ்வநாதன் மிகவும் இளகிய மனம் கொண்டவர். யார் என்ன உதவி கேட்டாலும் உடனே செய்யக் கூடியவர். அப்படி இருப்பவர் தன் மகன் கூறிய காரணத்தினால் இதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார், ஆனால் அவரின் மனதிலோ ஒரு சின்ன உறுத்தல் ஒருத்தர் உதவி கேட்டோம் தன்னால் செய்ய முடியாமல் போய்விட்டதே என்று அதனால்தான் ஆத்யா ஷாலினி இங்கு வந்த உடனே அவளை கூப்பிட்டு மன்னிப்பு கேட்க நினைத்திருந்தார், அவர் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் உதவி கேட்ட ஒருவருக்கு உதவி செய்ய முடியாமல் போனது அவர் மனதை பாதித்தே இருந்தது…
“ஐயோ என்ன சார் நீங்க எனக்கு இதெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்ல என்கிட்ட பொய் மன்னிப்பெல்லாம் கேட்டுட்டு, நீங்க இதெல்லாம் பெருசா எடுத்துக்காதீங்க சார், நான் கிளம்புறேன்…” என அவசரமாக தான் இருந்த இருக்கையை விட்டு எழுந்து கொண்டாளா பெண்ணவள், அவள் இதை சற்றும் அவரிடம் இருந்து இதை எதிர்பார்த்திருக்கவில்லை அவளுக்கு ஒரு மாதிரி சங்கடமாக ஆகிவிட்டது…
இவ்வளவு பெரிய பொறுப்பில் இருக்கும் ஒருத்தர் தான் கேட்ட ஒரு சின்ன உதவி செய்ய முடியாமல் போன காரணத்திற்காக தன்னை தனியாக அழைத்து மன்னிப்பு கேட்கும் போது யாருக்கா இருந்தாலும் இப்படித்தானே சங்கடமாக இருக்கும்…
அவளின் முகப்பாவனையிலேயே அவளின் உள்ளெண்ணங்களை புரிந்து கொண்ட விஷ்வநாதன் ஆத்யாவை பார்த்து மென்மையாக சிரித்துக் கொண்டே “இட்ஸ் ஓகே மா நீங்க கிளம்புங்க இத பேச தான் கூப்பிட்டேன்…” என்றார்…
“தேங்க்ஸ் சார் நான் கிளம்புறேன்…” என்றப்படி அவள் திரும்பி நடக்க தொடங்கிய சமயம் விஷ்வநாதனின் குரல் அவளை இடை நிறுத்த, அவளும் கேள்வியாக திரும்பி பார்த்தாள்…
“அது இந்த கிளாஸ்ல இருக்க வாட்டர்ல ஈ விழுந்துடுச்சி, நானும் அப்போதிலிருந்து க்ளீனர கூப்பிட்டு இருக்கேன் வந்தபாடுத்தான் இல்ல, இஃப் யூ டோர்ன் மைண்ட் இந்த தண்ணிய கொஞ்சம் வெளியே ஊத்த முடியுமா?” என அவளிடம் கேட்டார்…
அவளுக்கோ அவரின் குணம் மிகவும் பிடித்து விட்டது இவ்வளோ பெரிய பதவியில் இருக்கும் ஒருவர் இவ்வளவு தன்மையாக நடந்து கொள்வதை அவள் இப்போது தான் முதன்முறையாக பார்க்கிறாள்…
“அதுக்கு என்ன சார் கண்டிப்பா பண்ணி கொடுக்கிறேன் இதுல என்ன இருக்கு…” எனக் கூறியவள் அவருக்கு முன் இருந்த தண்ணீர் கோப்பை எடுத்துக் கொண்டே வாசலை நோக்கி சென்றிருந்தாள்…
அவள் கதவை நெருங்கி கதவை திறக்கச் சென்ற சமயம் வெளிப்பக்கம் இருந்து கதவு சட்டென திறந்து கொண்டது, அவளோ அதை எதிர்பாராமல் தடுமாறி விட, அவள் கையில் இருந்த தண்ணீரோ விசிறி அடித்துக் கொண்டு கதவை திறந்தவன் மீதே முழுதாக ஊற்றப்பட்டது…
அதேசமயம் அவள் கையில் இருந்த தண்ணீர் கோப்பையும் கீழே விழுந்து சில்லு சில்லாக நொறுங்கி இருந்தது…
நொடியில் நடந்த ஏறிய சம்பவத்தை அங்கிருந்த மூவருமே எதிர்பார்த்து இருக்கவில்லை, விஷ்வநாதனோ அதிர்ச்சியில் எழுந்து நிற்க, இங்கு ஆத்யாவின் நிலையை சொல்லவே தேவையில்லை பெண்ணவள் அதிர்ச்சியில் உறைந்து விட்டாள்…
ஆனால் இங்கு மூன்றாவதாக இருந்தவனுக்கு அதிர்ச்சி அல்ல மூக்கில் இருந்து புகை வராத குறையாக கடும் கோபத்தில் இருந்தான். ஆம் அங்கு வந்திருந்தது என்னவோ விஷ்வசாஹரன் தான் அவன் சற்றும் இப்படி நடக்கும் என்று எதிர்பார்த்து இருக்கவில்லை…
அவனின் முகமோ கோபத்தில் சிவந்து விட அவன் பற்களை நரநரவென கடிக்கும் சத்தம் வெளியில் நின்றவர்களுக்கும் நன்றாகவே கேட்கும் அளவிற்கு இருந்தது…
அடுத்த நொடி அவன் எதையுமே யோசிக்கவில்லை ஓங்கி அறைந்திருந்தான் பெண்ணவளின் கன்னத்தில், அவனின் பலத்தை மென்மையான பெண்ணவள் தாங்குவாளா என்ன, தள்ளிக் கொண்டு சென்று விழுந்திருந்தாள்…
விஷ்வநாதனுக்கோ பெரும் அதிர்ச்சி என்ன செய்வது என்று அறியாது சிலை போல் நின்றிருந்தார், சட்டென்று நடந்தேறியே பல நிகழ்வுகளினால் அவருக்கு எப்படி எதிர்வினை ஆற்றுவது என்றே தெரியவில்லை…
இங்கு கீழே விழுந்திருந்த ஆத்யா ஷாலினியிற்கோ எதையுமே கிரகித்துக் கொள்ள முடியாது ஒரு நிலை தான். அவன் அறைந்த வேகத்தில் அவளின் கன்னமோ செவ்வானமாக சிவந்து விட்டிருக்க, தலையோ கிறுகிறுவென சுத்தயது, அவளால் எழுந்து கொள்ள முடியாமல் இருந்தது…
தன்னை ஒருவாறு சமாளித்துக் கொண்டவள் மெதுவாக பக்கத்தில் இருந்த மதிலைப் பிடித்துக் கொண்டு எழுந்து நின்றாள். அவளின் ஒரு பக்க முகமே நொடியில் வீங்கி விட்டிருந்தது விஷ்வசாஹரனின் கைவண்ணத்தினால்…
அப்போதுதான் தன்னை சுதரித்துக்கொண்ட விஷ்வநாதனும் சட்டென தன் இருக்கையை விட்டு எழுந்து ஆத்யாவின் பக்கம் வந்தவர் அவளின் கையைப் பிடித்து அவளை நிலையாக நிற்க வைத்திருந்தார். பாவம் அவருக்குத்தான் நன்றாக தெரியுமே தன் மகனின் பலத்தை பற்றி, தினமும் நான்கு மணி நேரம் உடற்பயிற்சி செய்பவனின் உடற்பலம் எவ்வாறு இருக்கும் என்று அவரும் அறிவார். மென்மையான பெண்ணான அவளினால் அவனின் அறையை தாங்கி இருக்க முடியாது என்பது அவருக்கு நன்கு தெரியும்…
“என்ன சாஹரா நீ இப்படி பண்ணிட்ட? பொண்ணு மேல கை வைக்கிற, என்ன பழக்கம் இது, எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல, நானும் உங்க அம்மாவும் உன்னை இப்படித்தான் வளர்த்தோமா?” என கேட்டவரின் குரல் ஒரு கணம் உடைந்து தான் வெளியே வந்தது தனது மூன்று மகன்களில் இவன் மட்டும் ஏன் இவ்வாறு இருக்கின்றான் என்கிற ஆதங்கம் அவர் குரலில் அப்பட்டமாக தெரிந்தது…
ஆனால் அவனுக்கோ தந்தை கேட்டது எதுவுமே அவன் செவிகளுக்குள் ஏறவில்லை, அவனின் பார்வையும் கவனமும் முழுதாக இருந்தது என்னவோ அங்கு தடுமாறியப்படி நின்றிருந்த ஆத்யா ஷாலினியின் மேல் தான்…
பெண்ணவளுக்கோ பாதி முகம் மரத்து விட்ட உணர்வு தான், அவள் தன் வாழ்நாளிலேயே இவ்வாறு யாரிடமும் அடி வாங்கியது இல்லை, ஏன் இதுவரை ஒரு அடி கூட வாங்கியது இல்லை என்றும் கூட சொல்லலாம். அவளின் முதல் அடி அனுபவமே அவளுக்கு மிகவும் பலமாக விழுந்து விட்டிருந்தது, அதுவும் ஒரு ஆணின் கையினால்…
“சாஹரா உன்ன தான் கேட்டுட்டு இருக்கேன் பதில் சொல்லு எதுக்கு அவள அடிச்ச? தெரியாம தானே நடந்தது இப்படியா அவசரப்பட்டு பண்ணுவ? உன்னால உன் கோவத்த கண்ட்ரோல் பண்ணவே முடியாதா?” என அவர் பாட்டுக்கு அவனை திட்ட அவன் காதுகளில் எதுவுமே ஏறவில்லை அவன் கவனம் முழுவதும் ஆத்யா ஷாலினியிடமே இருக்க அவளை தான் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்…
முதல் முறை அடி வாங்கிய உணர்வை தாங்க முடியாமல் பெண்ணவள் கண்களில் இருந்து கண்ணீர் அருவியைப் போல் கொட்டத் தொடங்கியது. தன் முன் நின்று இருந்தவனைத்தான் கண்களில் வலியுடன் பார்த்திருந்தாள். அது அவன் அறைந்த வலியினாலா? அல்லது அவள் மனதில் ஏற்பட்ட வலியினாலா? என்பதை அவள் மட்டுமே அறிவாள்…
இருவரின் பார்வைகளும் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ள பெண்ணவளின் கண்களிலோ வலியின் சாயல் என்றால், ஆணவனின் கண்களில் என்ன இருந்தது என்பதை அடையாளமே காண முடியவில்லை. என்ன உணர்வு என்றே கணிக்க முடியாத ஒரு உணர்வு அவன் கண்களில் காணப்பட்டது. அது கோபமா? வெறியா? என்ன வென்றே அறிய முடியாத ஒன்று அவன் கண்களில் பிரதிபலித்தது…
தொடரும்…