STN - 77
New member
அத்தியாயம் :- 07
“லஷ்மி மா…” என கத்திக்கொண்டே வீட்டிற்குள் ஓடி வந்தாள் பதினைந்து வயதே ஆன ஆத்யா ஷாலினி, பாடசாலை படித்துக் கொண்டிருக்கும் பெண்ணவளோ பார்க்க சிறிய பெண்ணாக, அழகான தோற்றத்தில் இருப்பாள், தற்போது இருக்கும் முக ஜாடைக்கும் அப்போதிருந்த முகத்தோற்றத்திற்கும் சிறிய சிறிய வித்தியாசங்கள் தான் இருந்தது. ராஜேந்திரன் மற்றும் சித்ரா தம்பதியினரின் வீட்டிற்கு பக்கத்திலேயே அமைந்திருந்த பெரிய தோட்டத்து வீட்டில் இருப்பவர்கள் தான் விஷ்வசாஹரனின் குடும்பம்…
பக்கத்து வீடு என்பதால் ஆத்யா அவளின் சித்தி வீட்டிற்கு வந்ததிலிருந்தே அவர்கள் அனைவரிடனும் நெருங்கிய பழக்கம் இருந்தது, சித்ரா மற்றும் ராஜேந்திரன் அந்த அளவுக்கு அந்த வீட்டுக்கு வந்து செல்வதில்லை என்றாலும் ஆத்யா ஷாலினி அங்கு அடிக்கடி வந்து செல்வாள். காரணம் அங்கு சரன் மற்றும் சரத் என இருவருமே அவளின் வயதுடையவர்கள் தான், அதனால் விளையாடுவதற்கு அடிக்கடி அங்கு வருவாள், அவளுடனே பின்னாடி பத்து வயதே ஆன அவளின் தங்கைகள் சான்விகாவும் சாத்விகாவும் கூட வந்து விடுவார்கள்…
மகாலட்சுமிக்கு எப்போதுமே ஆத்யா ஷாலினியின் மீது தனி பிரியம் தான், தாய் தந்தையற்றவள் என்பதாலும் மிகவும் மென்மையான நல்ல குணமுடையவள் என்பதாலும் அவ்வீட்டில் இருக்கும் அனைவருக்கும் அவளை மிகவும் பிடிக்கும், ஆனால் இதிலிருந்து எப்போதுமே ஒதுங்கி இருப்பவன் தான் விஷ்வசாஹரன் அவன் எப்போதுமே கொஞ்சம் கரரானவன் தான், பெண்கள் யாருடனுமே பெரிதாக பேச மாட்டான், அவனுக்கு நட்பு வட்டாரங்கள் என்று கூட பெரிதாக இருக்காது. அவன் உண்டு, அவன் வேலை உண்டு என்று இருப்பவன் ஆனால் இப்போது இருக்கும் அளவிற்கு இறுக்கமும் கோப குணமும் உடையவன் அல்ல…
நன்றாக படிக்க கூடியவன், அவனுக்கு அப்போது இருபது வயது தான் இருக்கும், படிப்பு படிப்பு என்று அதன் பின்னே சுற்றிக் கொண்டிருப்பவனுக்கு வேறு எதன் மீதும் பெரிதாக ஈடுப்பாடு இருக்கவில்லை…
ஆத்யா ஷாலினியின் நெருங்கிய நண்பர்கள்தான் சரனும் சரத்தும் மூவருக்குள்ளும் அவ்வளவு நெருக்கமான நட்பு இருந்தது. இவளுக்கோ விஷ்வசாஹரனை கண்டாலே பயம், அவன் வேறு பார்த்தாலே பயமுறுத்துவது போல் எப்போது முகத்தை இறுக்கமாகவே வைத்துக் கொண்டிருப்பான். சிரிப்பு என்றால் என்ன விலை என கேட்க கூடியவன் தான் ஆனால் இப்போது இருக்கும் அளவிற்கு அடுத்தவர்களை அலட்சியம் செய்பவனோ, மதிக்கதவனோ இல்லை…
மற்றவர்கள் சொல்லை பெரிதாக கேட்கா விட்டாலும் அவனின் தாய், தந்தை மற்றும் தாத்தாவின் சொல்லை தட்டாமல் கேட்பான்…
அப்படி கொஞ்ச நஞ்ச நற்குணங்களுடன் இருந்தவனிடமிருந்து அவற்றை மொத்தமாக துடைத்தெறிய செய்தவள் தான் இந்த ஆத்யா ஷாலினி. அது அவளின் தவறு என்றும் சொல்ல முடியாது. அதே சமயம் அவளின் தவறு இல்லை என்றும் கூற முடியாது…
ஒரு நாள் பாடசாலை விட்டு சரணும் ஆத்யாவும் வந்து கொண்டிருந்தனர், சரத்தோ வேறு வகுப்பு ஒன்று இருந்ததன் காரணமாக அவன் இவர்களுடன் அன்று வந்திருக்கவில்லை, வீதியில் விளையாடிக் கொண்டே வந்து கொண்டிருந்தவர்களின் கண்ணில் பட்டது அந்த காட்சி…
விதியின் ஓரத்தில் விஷ்வசாஹரனோ ஒரு பெண்ணின் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டு கொண்டிருந்தான், இந்த காட்சி தான் அவர்கள் இருவரின் கண்களுக்கும் பட்டிருந்தது, பார்த்த இருவருக்கும் பேரதிர்ச்சி, அவனின் குணத்தை பற்றி தான் இருவருக்கும் நன்றாக தெரியுமே யாரிடமும் பெரிதாக பேசாதவன், படிப்பு படிப்பு என்று சுற்றுபவன், அப்படிப்டடவன் நடுவீதியில் இப்படி செய்யும் போது அவர்களுக்கு அது அதிர்ச்சியாக தானே இருக்கும், அந்த காட்சியை பார்த்து இருவரும் அப்படியே அசையாது நின்று விட்டனர்…
ஆத்யாவோ விஷ்வ சாஹரனை தான் அதிர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள். ஆனால் ஆத்யா ஷாலினியை விட சரணுக்கு சாஹரனை பற்றிய நன்றாக தெரியும் தானே, தன் அண்ணன் இவ்வாறு செய்யக்கூடியவன் இல்லை என்பதை அவன் அடித்துக் கூறுவான், அப்படி இருக்க என்ன ஆனது என்கிற யோசனையும் அதிர்ச்சியும் இவனுக்கு, இவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே சட்டென அந்த பெண்ணிடம் இருந்து விலகிய விஷ்வசாஹரன் அங்கிருந்து விறுவிறுவென சென்றிருந்தான்…
இவர்களுக்கு எதுவுமே புரியவில்லை அந்த பெண்ணோ செல்லும் விஷ்வசாஹரனையே சில நிமிடம் பார்த்துக் கொண்டிருந்தவள், வெட்க சிரிப்புடனே அங்கிருந்து சென்றிருந்தாள் இது ஆத்யா மற்றும் சரணின் கண்களில் இருந்து தப்பவில்லை…
“என்ன சரண் உன் அண்ணா இப்படி பண்றாரு? நடுரோட்டில வைச்சு இப்படியா பண்ணுவாரு?” என முகத்தை சுளித்தபடியே விஷ்வசரணை பார்த்து கேட்டாள் ஆத்யா ஷாலினி…
“எனக்கும் அது தான் புரியல ஆதி அண்ணா இப்படி பண்ணக்கூடியவர் இல்லையே? என்னாச்சு இவருக்கு?” யோசனையாக ஆத்யாவை பார்த்து கேட்டவனுக்கு, அப்போது கூட தன் அண்ணன் வேண்டுமென்றே முத்தமிட்டு இருப்பான் என்பதில் துளி கூட நம்பிக்கை இருக்கவில்லை, ஏதோ காரணம் இருக்கும் அது என்ன காரணம் என்று தான் யோசித்துக் கொண்டிருந்தான்…
ஆனால் ஆத்யாவிற்கோ சங்கடம், அவனின் மேல் அவள் பெரிய மதிப்பே வைத்திருந்தாள். அவனைப் பார்த்தால் பயம் என்றாலும் இருபது வயதில் பார்க்க வாட்டசாட்டமாக இருப்பவன் மீது அவளுக்கு ஈர்ப்பு இருந்தது என்னவோ உண்மைதான். யாரிடம் பெரிதாக பேசமாட்டான், நன்றாக படிக்க கூடியவன், அப்படி இருக்கும் போது ஈர்ப்பு தானாக வரக்கூடியது தானே. அந்த வயது தானே அவளுக்கு, ஆனால் தன் மனதில் அந்த அளவு உயரத்தில் வைத்திருப்பவன் நடுவீதியில் வைத்து இப்படி செய்ததை அவளால் கொஞ்சமும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை…
“நான் இதை இப்பவே போய் லஷ்மி மா கிட்ட சொல்றேன். உங்க அண்ணா இப்படி பண்ணுவார் நான் எதிர்பார்க்கவே இல்லை…” எனக் கூறியவளின் குரலில் ஏமாற்றம் அப்பட்டமாக காணப்பட்டது. அந்த நொடி அவன் மீது இருந்த ஈர்ப்பு கூட துடைத்தெறியப்பட்டது…
“ஏய் லூசு அப்படியெல்லாம் பண்ணிடாத அண்ணா இப்படி எல்லாம் பண்ணக்கூடியவர் இல்ல, இதுல ஏதோ காரணம் இருக்கு நீ தேவையில்லாம எதாசச்சும் பண்ணி, அண்ணாவ வீட்ல மாட்டி விட்றாத?” என அவளிடம் எச்சரிக்கையாக கூறினான் சரண்…
“என்ன உன் அண்ணன் செய்ற தப்புக்கு நீயும் சப்போட்டா? நான் இத போய் லஷ்மி மா கிட்ட சொல்லத்தான் போறேன்…” என தன் நண்பனை பார்த்து கோபமாக கூறினாள்…
“ஹேய் நான்தான் சொல்றேன்ல அவர் அப்படி பண்றவர் இல்லன்னு, தேவையில்லாம எதும் பண்ணிறாத ஆதி, நீ பேசாம வா நாம போலாம். திருப்பியும் சொல்றேன் நீ யாருகிட்டயும் இத பத்தி மூச்சு கூட விடக்கூடாது…” என பெண்ணவளை எச்சரிக்கை செய்தபடியே அங்கிருந்து அவளை அழைத்து சென்று விட்டான்…
தன் நண்பன் கூறிய ஒரே காரணத்திற்காக ஆத்யாவும் அதை யாரிடமும் கூறி இருக்கவில்லை. இப்படியே ஒரு மாதம் கழிந்திருக்க, அன்று அவள் இதை எல்லோரின் முன்பும் போட்டு உடைக்கும் நாளும் வந்து சேர்ந்திருந்தது…
அன்று சரத், சரண், ஆத்யா ஷாலினி மற்றும் சாண்விகா, சாத்விகா என அனைவரும் வெளியே இருந்த தோட்டத்தில் பந்தை வைத்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஆத்யா வீசிய பந்து நேராக இருந்த விஷ்வசாஹரனின் அறைக்குள்ளே சென்று விழுந்திருந்தது…
“அய்யய்யோ பந்து உள்ள போயிடுச்சே…” என சாத்விகாவும் சாண்விகாவும் கூற, சரத்தோ “நான்லாம் போய் எடுத்துட்டு வர மாட்டேன். அது அண்ணா ரூம்குள்ள போய்டுச்சி, அவர் இப்போ படிச்சிட்டு இருப்பாரு உள்ள போய் பந்த கேட்டா செம்மையா திட்டுவாரு, யார் பந்து போட்டதோ அவங்க தான் போய் எடுக்கணும், சோ ஆதி நீ தான் போய் எடுக்கணும் போய் எடுத்துட்டு வா…” என அவளின் தலையின் மீதே பந்து எடுக்கும் பொறுப்பை போட்டிருந்தான்…
“ஐயோ நான் போக மாட்டேன். உங்க அண்ணன பார்த்தாலே எனக்கு பயம். சரண் ப்ளீஸ் எனக்காக போய் பந்த எடுத்துட்டு வாயேன்…” என அவனிடம் கெஞ்சினாள் பெண்ணவள்…
“ஐயோ நான் போக மாட்டேன். சரத் சொன்னது தான், இப்போ உள்ள போய் என்ன கேட்டாலும் கண்டப்படி திட்டுவாரு, நீ தானே பந்த போட்ட, நீயே போய் எடுத்துட்டு வா…” என அவனும் பின் வாங்கி விட்டான்…
“போங்கடா பிரண்ட்ஸா நீங்க? இனிமே யாரு கூடவும் நான் பேசவே மாட்டேன்…” என அவர்களிடம் கோபமாக கூறியவள், அப்போது அறியவில்லை உண்மையில் அவள் பேசாமல் தான் இருக்க போகிறாள் என்று…
ஆத்யாவோ வேறு வழி இல்லாது வீட்டிற்குள் நுழைந்து, நேராக விஷ்வாசாஹரனின் அறையை நோக்கி சென்றிருந்தாள்…
அவனின் அறைக்கு முன்னால் வந்து நின்றவளோ, ஒரு கணம் தயங்கி பிறகு மெல்லமாக கதவை தட்டியிருந்தாள். உள்ளிருந்து “யாரு…” என்கிற கர்ஜனையான அவனின் குரலை கேட்டு ஒரு கணம் பெண்ணவள் உள்ளுக்குள் நடுங்கி விட்டாள்…
அவள் தொண்டை குழிக்குள் இருந்து குரல் வர மறுக்க, எச்சிலைக் கூட்டி விழுங்கிக் கொண்டவளோ, மெதுவாக “நான் தான் ஆத்யா ஷாலினி…” என கூறியிருந்தாள். அவள் கூறியது அவள் பக்கத்தில் நின்றால் கூட யாருக்கும் கேட்டிருக்காது ஆனால் உள்ளிருந்தவனுக்கு கேட்டு விட்டது போல அடுத்த நொடி கதவு சட்டென திறக்கப்பட்டது…
கதவு உடனே திறந்ததும் பயந்து இரு அடி பின்னே சென்றவள். தன் முன் நின்றவனை மிரட்சியாக பார்த்தாள், சாஹரனோ ஒரு கணம் அவளை அழுத்தமாக பார்த்தவன் “என்ன வேணும்?” என கேட்டான்…
ஆனால் அப்போது யார் என்று கேட்ட குரலில் இருந்த கர்ஜனை இப்போது இருந்த குரலில் கொஞ்சம் குறைந்தே இருந்தது, அவளோ உள் சென்ற குரலில் “அது உங்க ரூம்குள்ள பால் வந்திருச்சு எடுத்து தரீங்களா?” என கேட்டிருந்தாள்…
அவள் கூறியது அவனுக்கு கேட்டிருந்தாலும் வேணும் என்றே கேட்காதது போல “என்ன? கேட்கல?” என நக்கல் கலந்த தொனியில் மீண்டும் கேட்டான்…
“உங்க ரூம்குள்ள பால் விழுந்துடுச்சி அண்ணா எடுத்து தரீங்களா?” என இப்போது கொஞ்சம் சத்தமாக கேட்டிருந்தாள்…
அவனோ அதை கேட்டு அவளை ஒரு கணம் உறுத்து விழித்தவன் அறைக்குள் சென்று பந்தை எடுத்து வந்து அவளிடம் நீட்டி இருந்தான்…
ஆத்யாவோ புன்னகையுடன் அதை வாங்கிக் கொண்டவள் “தேங்க்ஸ் அண்ணா…” என கூறியப்படி அங்கிருந்து செல்ல எத்தனிக்க, அவளை தடுத்த நிறுத்தி இருந்தது சாஹரனின் குரல்…
அவளும் கேள்வியாக அவனை திரும்பி பார்க்க அவளை முறைத்து பார்த்தவன், “அடுத்த தடவ ரூம்குள்ள பால் வந்துச்சு பல்ல உடைப்பேன்…” என அவளிடம் கத்தி விட்டு அறைக் கதவை அறைத்து மூடி இருந்தான்…
இங்கு ஆத்யா ஷாலினி தான் அவன் திட்டியதில் உறைந்து நின்று விட்டாள், அவன் இப்படி திட்டுவான் என அவள் எதிர்பார்க்கவே இல்லை, கண்களில் கண்ணீர் குளம் கட்டி விட்டது…
அழுகையை உள்ளிழுத்துக் கொண்டவளோ “இப்போ நான் என்ன பண்ணிடேனு இப்டி கத்திட்டு போறாரு…” என அழுகையுடன் நினைத்துக் கொண்டவளுக்கு அவன் மீது கொலைவெறியே வந்தது…
அன்று வீதியில் கண்ட காட்சி, இன்று அவன் கத்தி விட்டு சென்றது என அனைத்தும் கோபமாக அவன் மீது திரும்பி இருக்க, நேராக விறுவிறுவென சென்று அவள் நின்றது என்னவோ மகாலட்சுமியின் முன் தான்…
அவரோ முன் அறையில் அமர்ந்து பூ கட்டிக் கொண்டிக்க, அங்கு தான் விஷ்வேஸ்வரன் மற்றும் விஷ்வநாதன் என இருவரும் கூட பேசியப்படி அமந்திருந்தனர்…
“லஷ்மி மா…” என அவரின் முன் சென்று அவரை அழைக்க, அவரோ பூ கட்டியப்படியே “சொல்லு ஆதி மா…” என அவளிடன் என்னவென கேட்டிருந்தார்…
ஒரு கணம் தான் சொல்ல வந்ததை கூறுவதா? இல்லையா? என யோசித்து தயங்கியவள், அவன் மேல் இருந்த கோபத்தில் கூறுவது என முடிவெடுத்து “நான் சாஹரன் அண்ணா பத்தி உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்…” என நேரடியாக விடயத்திற்கே வந்திருந்தாள்…
இவள் பேசுவதை கேட்டு விஷ்வேஸ்வரன் மற்றும் விஷ்வநாதனின் கவனம் கூட இவளின் பக்கம் திரும்பி இருக்க, மகாலட்சுமி கூட “சாஹரன் பத்தி என்ன சொல்ல போற? சொல்லு…” என சாதாரணமாக அவளை நிமிர்ந்து பார்த்து கேட்டிருந்தார்…
“அன்னைக்கு ஒரு நாள் நானும் சரணும் ஸ்கூல் முடிஞ்சு வந்துட்டு இருக்கும்போது, நடுரோட்டில வைச்சு சாஹரன் அண்ணா ஒரு அக்காவோட கன்னத்துல கிஸ் பண்ணத நாங்க பார்த்தோம்…” என சட்டென விடயத்தை போட்டு உடைத்திருக்க, அங்கிருந்து மூவருக்குமோ அவள் கூறியதை கேட்டு பேரதிர்ச்சி தங்கள் வீட்டு பிள்ளை இப்படி செய்பவன் இல்லை என்று அவர்களுக்கு தெரியும், அதே சமயம் ஆத்யா ஷாலினி பொய் கூற மாட்டாள் என்றும் அங்கு இருப்பவர்களுக்கு நன்கு தெரியும்…
“நீ என்ன சொல்ற ஆத்யா உண்மையாவா? சாஹரனா அப்படி பண்ணினான்…” என அவளிடம் வந்து விஷ்வேஸ்வரன் கேட்க, “ஆமா தாத்தா அவர் தான் அப்படி பண்ணாரு, நான் என் ரெண்டு கண்ணால பார்த்தேன். என் கூட சேர்ந்து சரணும் அத பார்த்தான், வேணும்னா அவன கூப்பிடு கூட கேட்டு பாருங்க…” என இவள் உறுதியாக கூறினாள்…
அதைக் கேட்டு விஷ்வநாதனிற்கோ சுர் என கோபம் ஏற, “சாஹரா…” என அந்த வீடே அதிரும் வண்ணம் அவனை சத்தமாக கூப்பிட்டிருந்தார்…
தொடரும்…