அத்தியாயம் 09
யோசனையில் ஆழ்ந்திருந்த ஆத்யா ஷாலினியை “ஆதி…” என அழைத்து சுயத்துக் கொண்டு வந்திருந்தார், அவளின் சித்தி சித்ரா…
“ஹா சித்தி…” என அவரை திரும்பி பார்க்க, “நாங்க எல்லாரும் பேசிட்டு இருக்கோம். ஆனா நீ வேற எதையோ யோசிச்சு இருக்க போல? எனக்கும் சித்தப்பாக்கும் பஸ்க்கு லேட் ஆயிடுச்சு, நாங்க கிளம்பனும். நீயும் உன் ஹாஸ்டல் போகனும்ல?” என யோசனையாக கேட்டார்…
“ஆஹ் ஆமா சித்தி ஒன்பது மணிக்கு முன்னாடி அங்க போகணும்…” என தயக்கமாக கூறினாள்…
“சரி வா உன்ன போற வழியில நாங்க விட்டுட்டு போறோம். அப்புறம் ஹாஸ்டல் ரூம்கும் சாப்பாடுக்கும் உனக்கு எவ்வளவு செலவாகும்னு சொல்லு, சித்தப்பா உனக்கு பேங்க்ல மாசம் மாசம் பணம் போட்டு விடுவார்…” என் கூறினார்…
அவளுக்கோ பெரும் தயக்கம் தங்கைகளின் படிப்பு செலுவுகள், வீட்டு செலவுகள். அது இது என ஏகப்பட்ட செலவுகள் போக, இப்போது இவளின் செலவுக்கு வேறு அவர் தனியா ஓட வேண்டி இருக்குமே என்கிற பெரும் சங்கடம் அவளிற்கு, ஆனால் இப்போதைக்கு ஆத்யாவுக்கு வேறு வழியும் இருக்கவில்லை. வேலைக்கு சேர்ந்த இடம் வேறு விஷ்வசாஹரன் வீடாக இருக்க, இனி இங்கு வேலை செய்யவும் முடியாத நிலைதான்…
அடுத்த ஒரு வேலை தேடும் வரை அவளுக்கு பணம் தேவைப்படும், வேறு என்னதான் செய்து விட முடியும் அதனால் எதும் கூறாது அமைதியாக இருந்தாள்…
“என்ன நான் கேட்டு இருக்கேன். நீ அமைதியா இருக்க?” என அவர் ஆத்யாவை கேட்டுக் கொண்டிருக்கும்போதே, “நான் ஒரு நிமிஷம் பேசலாமா?” என மகாலட்சுமி இடையில் குறுக்கிட்டார்…
அங்கு இருந்தவர்களும் அவரை திரும்பி பார்க்க “ஆதி இல்லாம இந்த பத்து வருஷம் ரொம்ப வெறுமையாக இருந்துச்சு. அவ அங்க இருக்கும்போது என் பொண்ணு மாதிரி என் கூடவே இருந்தா? அவ இல்லாம இந்த பத்து வருஷம் ரொம்ப கஷ்டமா இருந்துச்சு எனக்கு, நீங்க ரெண்டு பேரும் எதும் நினைச்சுக்கலனா, ஆதி எங்க வீட்ல இருந்தே படிக்கட்டுமே…” என தயக்கமாக கேட்டார்…
அவருக்கு தெரியும் என்னவாக இருந்தாலும் ஒரு வயது பெண்ணை இன்னொரு வீட்டில் அனுப்புவதற்கு யாராக இருந்தாலும் தயங்குவார்கள் என்று. அதுவும் அவர் வீட்டில் மூன்று இளம் வயது ஆண்மகன்கள் இருக்கும்பொழுது யாருக்காக இருந்தாலும் தயக்கமாகத்தான் இருக்கும் என்று, அதனால் அவரும் தயக்கமாகத்தான் இதை கேட்டிருந்தார்…
அவருக்கு ஆத்யாவை மிகவும் பிடிக்கும். பத்து வருடம் கழித்து திரும்பி அவளை பார்த்த பிறகு அவளை மீண்டும் அனுப்பி வைக்க மகாலட்சுமிக்கு மனமே இல்லை…
சித்ராவும் சரி, ராஜேந்திரனும் சரி மகாலட்சுமி நினைத்தது போல் அதே விடயத்தை யோசித்து தான் தயங்கினர்…
“இல்ல இங்க மூணு வயசு பசங்க இருக்காங்க, அப்டி இருக்கும் போது, ஆதி இங்க இருக்கிறது சரியா இருக்குதே…” என தயக்கமாக சித்ரா அவரை பார்த்து கூறினார்…
இது அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த விஸ்வேஸ்வரனோ எதோ யோசித்து விட்டு “நான் உங்க எல்லார்கிட்டயும் கொஞ்சம் தனியா பேசலாமா?” என கேட்டிருந்தார்…
“என்னப்பா சொல்ல வரீங்க? தனியானா புரியல? நாம தானே இங்க இருக்கோம்…” என புரியாமல் அவர் கேட்க, “ஒரு நிமிஷம் இரு…” என்றவர் “சரத்…” என சத்தமாக அழைத்தார்…
“என்ன தாத்தா?” என கேட்டபடி அவனும் வெளியே வர, விஷ்வேஸ்வரனோ “ஆதிய கூப்பிட்டு போய் வீட்ட சுத்தி காட்டு பா…” என கூறியிருந்தார்…
ஆத்யாவோ விஸ்வேஸ்வரனை புரியாது கேள்வியாக நோக்கினாள், அவர் அவளை அங்கிருந்து அனுப்ப முனைவது அவளுக்கு நன்றாகவே புரிந்தது, அவர் அப்படி என்ன தான் பேச போகிறார் என்கிற யோசனையுடன் பார்த்தாள்…
பெண்ணவளின் பார்வையை வைத்தே அவளின் எண்ணவோட்டதை புரிந்து கொண்டவர் போல் “ஒன்றுமில்லை, நீ போய் வீட்ட சுத்தி பாத்துட்டு வா…” என அங்கிருந்து அவளை அனுப்ப, அதற்கு மேல் அவரின் சொல்லை தட்ட முடியாது அவளும் வேறு வழி இல்லாது அங்கிருந்து சரத்துடன் கிளம்பி விட்டாள்…
அவள் செல்லும் வரை பார்த்துக் கொண்டிருந்த விஷ்வநாதனோ “எதுக்குப்பா ஆத்யாவ அனுப்பி வச்சீங்க? அப்படி என்ன பேச போறீங்க?” என யோசனையாக தன் தந்தையை பார்த்து கேட்டார்…
அவரோ சுற்றி வளைத்து பேச விரும்பாது “ஆதிகும் சாஹரனுக்கும் கல்யாணம் பண்ணி வச்சிரலாம்…” என நேரடியாக விஷயத்தை கூறி இருந்தார்…
அவர் கூறியதை கேட்ட நால்வருக்கும் பேரதிர்ச்சி “எதுக்கு இப்படி திடீர்னு சொல்றீங்க மாமா? உங்களுக்கே தெரியும் ஆதிகும் சாஹரனுக்கும் இடையில எவ்வளவு பிரச்சினை இருக்குன்னு, சாஹரன் ஆதிய கண்டாலே அவ்ளோ கோபப்படுவான், ஆதி சாஹரன கண்டாலே பயந்து ஒளிஞ்சுக்குவா, அவங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணி வைக்க சொல்றீங்க?” என அதிர்ச்சியாக கேட்டார் மகாலட்சுமி…
“ஆமா ஆமா இதெல்லாம் சரிப்பட்டு வராது. ஆதிகும் சாஹரன் தம்பிக்கும் ஒத்தே போகாது, அவங்களுக்கு எப்படி கல்யாணம் பண்ணி வைக்கிறது?” என சித்ராவும் யோசனையாக கேட்டார்…
“நான் உங்க யார்கிட்டயும் கல்யாணம் பண்ணி வைக்கலாமானு முடிவு கேட்கல, கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு என் முடிவ சொல்லுறன்…” என உறுதியாக அவர்களைப் பார்த்து கூறினார்…
“அப்பா என்னப்பா? எதுக்கு நீங்க இப்படி பேசிட்டு இருக்கீங்க? நாங்க யாரும் அப்படி யோசிச்சு பார்த்தது கூட கிடையாது. ஆனா நீங்க என்னன்னா கல்யாணம் பண்ணி வைக்க சொல்றீங்க?” என்ன கோபமாக தன் தந்தையை பார்த்து கேட்டார் விஷ்வநாதன்…
“உங்க எல்லாருக்கும் அவங்க இரண்டு பேரையும் பத்தி என்னடா தெரியும்? ஆனா எனக்கு தெரியும். உங்க எல்லாரையும் விட அதிகமாவே ஆத்யாவ பத்தியும் தெரியும், சாஹரன பத்தியும் தெரியும், ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் சின்ன வயசுல இருந்தே விரும்புறாங்க, அதனாலதான் சொல்றேன் கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு, சாஹரனுக்கு முப்பது வயசு, ஆத்யாக்கு இருப்பத்தி ஐந்து வயசு, கல்யாணம் பண்ணிக்கிற வயசு தானே. கல்யாணம் பண்ணி வச்சிடலாம்…” என உறுதியாக அவர்கள் பார்த்து கூறினார்…
“என்னது ஒருத்தர ஒருத்தர் விரும்புறாங்களா? என்ன சொல்றீங்க நீங்க? அதுக்குலாம் வாய்ப்பே இல்ல…” என நம்ப முடியாமல் கூறினார் ராஜேந்திரன்…
“நீங்க யாருமே அவங்க ரெண்டு பேரையும் சரியா புரிஞ்சிகல, ஆனா உங்க எல்லாரையும் விட அவங்க ரெண்டு பேரும் என் கூட நெருக்கம், அதனால நான் சொல்றேன் அவங்க ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் விரும்புறாங்கனு, அவங்க ரெண்டு பேருக்கும் தான் கல்யாணம் பண்ணிக்கணும், அவங்க ரெண்டு பேருக்கும் தான் கல்யாணம் பண்ணி வைக்கணும்…” என அழுத்தமாக கூறியவர், இதுவே தன் இறுதி முடிவு என்பது போல் அங்கிருந்த நால்வரையும் உறுதியாக பார்த்திருந்தார்…
“பா நீங்க சொல்றத எங்களால கிரகிக்க கூட முடியல, நீங்க சொல்றதெல்லாம் உண்மையா?” என நம்ப முடியாது தன் தந்தையை பற்றி கேட்டார் விஸ்வநாதன்…
“ஏன்னா அவங்க ஒருத்தர ஒருத்தர் லவ் பண்றது அவங்களுக்கே தெரியாது, ஆனா அது எனக்கு தெரியும். அதனால தான் சொல்றேன் அவங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்ச அவங்க ரெண்டு பேருக்கும் இடையில இருக்க பிரச்சனைலாம் தானா சரியாயிடும், அதனால சீக்கிரமா அவங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சிரலாம்” என கூறினார்…
“எங்களுக்கு கொஞ்சம் டைம் தாங்க, நாங்க யோசிச்சு சொல்றோம்…” என தயக்கமாக அவரை பார்த்து கூறினார் சித்ரா…
“நான் சொல்றது தான் உண்மைனு, கூடிய சீக்கிரம் நீங்க எல்லாருமே புரிஞ்சுப்பீங்க…” என அவர்களைப் பார்த்து அழுத்தமாக கூறி இருந்தார் விஷ்வேஸ்வரன்…
இவர்கள் இப்படி பேசிக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் சரத்தும் ஆத்யாவும் பேசியபடியே வெளியில் இருக்கும் நீச்சல் தடாகம் வரையும் வந்துவிட்டார்கள்…
“சரி சாஹரன் அண்ணா உன் மேல கோவமா இருக்குறத பத்தி எனக்கு நல்லா தெரியும். ஆனா இந்த சரண் ஏன் உன் மேல இந்த அளவுக்கு கோவமா இருக்கான்?” என புரியாமல் அவளைப் பார்த்து கேட்டான் சரத்…
“அது வந்து உன் சாஹரன் அண்ணாவ பத்தி நான் பத்து வருஷத்துக்கு முன்னாடி வீட்ல, அவன் சொல்ல வேணாம்னு சொல்லியும், அதையும் மீறி சொல்லிட்டேனாம், அது தான் சார் பத்து வருஷம் கழிச்சும் இன்னும் அதே கோபத்தோட இருக்காரு…” என்ன சீரியஸான தொனியில் அவனை பார்த்து கூறினாள்…
அவனும் அதைக் கேட்டு “ஓ அது தான் விஷயமா?” என இழுத்தப்படி அவளை பார்த்தான், சில நொடிகள் அங்கு அமைதி நிலவ, அதற்கு மேல் பொறுக்க முடியாது இருவரும் வாய்விட்டு சிரித்து விட்டனர்…
ஆத்யா ஷாலினி இப்படி சிரித்து கிட்டத்தட்ட பத்து வருடம் ஆகி இருக்கும். எப்போதுமே அவளை சிரிக்க வைக்கும் ஒரே ஜீவன் சரத் தான். மீண்டும் பழைய நினைவுகள் வந்து அவளை மலர செய்து இருந்தது…
“நான் இப்படி சிரிச்சு பத்து வருஷம் ஆச்சு சரத், என்னை எப்பவுமே சிரிக்க வைக்கிறது நீதான், தேங்க்ஸ்” என உள்ளார்ந்து அவனை பார்த்து கூறியிருந்தாள்…
“ஆ போதும் போதும் ஐஸ் வச்சது நம்பிட்டேன்…” என சரத் அவளை பார்த்து கூற, ஆத்யா ஷாலினியும் அதை கேட்டு மென்மையாக சிரித்துக் கொண்டாள்…
அப்போது சரத்திற்கு ஆபீஸிலிருந்து ஒரு முக்கியமான அழைப்பு வர அவளிடம் ஒரு நிமிடம் எனக் கூறிவிட்டு தள்ளி நின்று அழைபேசியில் பேச தொடங்கி விட்டான், என்ன செய்வது என்று தெரியாது சுற்றும் முற்றும் அங்கிருந்து இயற்கையை ரசித்துப் பார்த்தபடி நின்று இருந்தாள் பெண்ணவள்…
அப்போது தூரத்தில் பறவை கூடுகள் இருக்க, அதை பார்த்து உற்சாகமானவளோ அதை நோக்கி சென்றாள், பறவைகளைப் பார்க்கும் ஆர்வத்தில் அவள் கீழே பார்க்க தவறி விட, அங்கிருந்த சிறிய கட்டில் இடறி நேராக நீச்சல் தடாகத்தினுள்ளேயே விழுந்திருந்தாள் பெண்ணவள்…
அவள் விழுந்த இடமோ ஆழமான பகுதியாக இருக்க நீச்சல் தெரியாதவளோ உள்ளிருந்து தத்தளிக்க ஆரம்பித்து விட, பதற்றத்தில் வாயில் இருந்து சத்தம் கூட வராமல் உள்ளே மூழ்க தொடங்கி விட்டாள், தூரத்தில் நின்று பேசிக் கொண்டிருந்த சரத் இதை கவனிக்கவே இல்லை. அவன் தூரத்தில் நின்றதால் அவள் விழுந்த சத்தமும் அவனுக்கு கேட்டு இருக்கவில்லை…
உள்ளே மூழ்கி வெளியே வந்து, வந்து போன அவள் வாயில் இருந்து சத்தம் கூட வரவில்லை, கொஞ்சம் கொஞ்சமாக பெண்ணவள் சுயநினைவு இழக்கத் தொடங்க மூச்சிரையாகி உள்ளே அவள் மூழ்க தொடங்கிய சமயம், நீருக்குள் பாய்ந்து அவளை நீருக்கு மேலாக கொண்டு வந்திருந்தான் விஷ்வசாஹரன்…
போன் பேசி விட்டு திரும்பிய சரத்தின் கண்களுக்கு முதலில் தெரிந்தது என்னவோ நீருக்குள் மூழ்கி இருந்த ஆத்யாவும், அதைத்தொடர்ந்து அவளை காப்பாத்துவதற்காக ஓடி வந்து நீருக்குள் பாய்ந்து சாஹரனும் தான்…
சில நொடிகள் இக்காட்சியை கண்டு உறைந்த சரத்தோ, அடுத்த நொடி “ஆதி…” என அவன் அலறிய அலறல் வீட்டின் கூடத்தில் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தவர்களுக்கு மட்டுமல்ல, அறைக்குள் அமர்ந்திருந்த சரணுக்கும் கூட நன்றாகவே கேட்டு இருந்தது…
தொடரும்…

Author: STN - 77
Article Title: தழலை அணைக்கும் அமுதகமே - 09
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.