• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

தழலை அணைக்கும் அமுதகமே - 11

STN - 77

New member
அத்தியாயம் 11

சிறிது நேரம் கட்டிலில் அப்படியே அமர்ந்திருந்தவளுக்கு பசி வயிற்றைக் கிள்ள தொடங்கியது. அதை தணிப்பதற்கு தண்ணீர் குடித்தாலாவது நன்றாக இருக்கும் என தோன்ற, அவளால் இந்த உடையுடன் வெளியே செல்லவும் முடியவில்லை. என்ன செய்வதென யோசித்தவள், மீண்டும் அறை வாசலுக்கு வந்து அறைக் கதவை திறந்து வெளியே எட்டி பார்த்தாள்…

அந்த முன்னறை கூடமோ யாரும் இல்லாமல் மயான அமைதியாக இருக்க, இந்த நேரத்தில் யாரும் வரமாட்டார்கள் என தன்னை சமாதானம் செய்துக் கொண்டவள். சீக்கிரம் சமயலறைக்குள் சென்று தண்ணீர் எடுத்து வர நினைத்து, ஒரு முறை மீண்டும் அங்கும் எங்கும் யாரும் இல்லை என சுற்றி பார்த்து உறுதி செய்து கொண்டவள், கையில் போத்தலுடன் அறையை விட்டு வெளியே வந்திருந்தாள்…

இருட்டில் நடந்து செல்வது கடினமாக இருந்தாலும், இரவு மின்குமிழ்களின் மூலம் கிடைத்த சிறியனவான வெளிச்சத்தில் தட்டுத் தடுமாறி சமையலறைக்குள் நுழைந்துவிட்டாள். அங்கும் அதே இருட்டு தான், அவளோ நீர் எங்கே இருக்கின்றது என தேடி பார்க்க, தள்ளி ஒரு மூளையில் தண்ணீர் ஃபில்டர் பூட்டப்பட்டிருந்தது…

அதை பார்த்து பெருமூச்சு ஒன்றை விட்டவள், அதன் அருகில் சென்று போத்தலை திறந்து அதில் நீர் நிரப்ப ஆரம்பித்தாள்…

நீரை நிரப்பி முடித்ததும், தாகம் ஏற்கனவே அதிகமாக இருக்க தண்ணீரை எடுத்து மடமடவென குடித்தவள், மீண்டும் நீரை போத்தல் முழுதும் நிரப்பி விட்டு ஒரு அடி பின்னே வைத்திருப்பாள். சட்டென தூணில் மோதியது போல் இருக்க, அவ்வளவு தான் ஆத்யா ஷாலினி பயந்தே விட்டாள், ஆனால் எங்கே கத்தினால் அனைவரும் வந்துவிடுவார்களோ என்று பயத்தில் தன் கை கொண்டு வாயை இறுக்கமாக முடியவள், பதறி கொண்டு திரும்பி பார்த்திருந்தாள்…

ஆத்யா திரும்பிய அதே சமயம் சமையலறையின் மின்குமிழ்களும் ஒளிர ஆரம்பித்து இருக்க, சட்டென தோன்றிய வெளிச்சத்தில் ஒரு கணம் தன் கண்களை மூடி பிறகு மெதுவாக திறந்து பார்த்தாள், அங்கோ தன் மார்பிற்கு குறுக்காக கைகளை கட்டியபடி அவளையே அழுத்தமாக பார்த்தவாறு விஷ்வசாஹரன் தான் நின்றிருந்தான்…

அவனை பெண்ணவள் அங்கு சற்றும் எதிர்பார்த்து இருக்கவில்லை. பேய் அறைந்தாற் போல் அப்படியே அசையாது உறைந்து நின்று விட்டாள்…

ஆத்யாவுக்கோ தொண்டை குழி வறண்டு போக, கை கால்கள் எல்லாம் விரைத்து போனாற் போல் உணர்வு. யாரோ அவளை இழுத்து வைத்து சுவரில் ஆணி அடித்தது போல் நகராது சிலையாக நின்று இருந்தாள் பெண்ணவள்…

இங்கு விஷ்வ சாஹரனோ அவளையே அழுத்தமாக சில வினாடிகள் பார்த்திருந்தவன், அவள் வேகமாக திரும்பியதன் காரணமாக பெண்ணவளின் முகத்தில் விழுந்திருந்த முடிக்கற்றையை அவளின் கண்களை பார்த்துக் கொண்டே மெதுவாக எடுத்து அவளின் காது பின்னால் ஒதுக்கி விட்டிருந்தான்…

அவளோ இது எதையும் உணர முடியாது அவனையே விழி விரித்து பார்த்தப் படி நிற்க, சாஹரனோ அவளை ஆழ்ந்த ஒரு கணம் பார்த்தவன். அவளின் கன்னத்தை இருக்கைகளாலும் பற்றி தாங்கிபிடித்து, அடுத்த நொடியே அவளின் இதழ்களில் தன் இதழை ஆழமாக பதித்திருந்தான்…

இதை கொஞ்சமும் எதிர்பாராத ஆத்தியாவின் கண்களோ சாசர் போல் விரிந்துக் கொள்ள, அவனிடம் இருந்து விடுபட கூட தோன்றாத அளவுக்கு ஸ்தம்பித்து போய் நின்று விட்டாள்…

இங்கு காளையவனோ அவளின் இதழில் இருந்து தன் இதழை மெதுவாக பிரித்து எடுத்தவன், அவளின் நாடியில் இருக்கும் மச்சத்தில் ஆழ்ந்து ஒரு முத்தம் கொடுத்து விட்டு, மீண்டும் தன் இதழ்களை மேல் ஏற்றி அவளின் இதழ்களுடன் தனது இதழ்களை ஆழமாக கலக்கவிட்டுக் கொண்டான்…

அவனின் ஒரு கையோ அவளின் கன்னத்தை அழுத்தமாக பற்றி இருக்க, இன்னொரு கையோ மெல்லமாக அவளின் கன்னத்தில் இருந்து கீழ் இறங்கி, காரிகையின் இடையினை பிடித்து தன்னோடு நெருங்கிக் கொண்டது…

அதிர்ச்சியில் நின்றிருந்தவளுக்கு ஒரு கணம் உலகமே தன் சுழட்சியை நிறுத்தியது போல் இருந்தது. அவளுக்கும் அவனின் மேல் காதல் தானே, ஒரு கட்டத்தில் அது வெளிவந்து விட அவனை தடுக்க கூறிய மூளை சொல்லை கூட கேட்காது, மனம் கூறியது போல் அவனின் இதழ் முத்தத்தை ரசிக்க ஆரம்பித்து விட்டாள்…

இதெல்லாம் ஒரு சில நொடிகள் தான். கண் மூடி இருந்தவளுக்கு ஏதோ கனவில் மிதப்பது போலிருக்க, சில நிமிடங்கள் முன் நடந்த அனைத்து நிகழ்வுகளும் மீண்டும் மனக்கண்ணில் படமாக ஓடி மறைய, நிதர்சனத்தை புரிந்து கொண்டவளோ, பட்டென கண்களை விரித்துக் கொண்டிருந்தாள்…

ஆனால் இங்கு ஆச்சரியம் என்னவென்றால், அவள் கண்களை திறந்த நேரம் அங்கு விஷ்வசாஹரன் இருக்கவே இல்லை. ஏன் அவன் வந்து சென்றதற்கான சின்ன சுவடு கூட இருக்கவில்லை, சமையலறை மின்விளக்குகள் கூட அணைந்து தான் இருந்தது…

ஆத்யா ஷாலினிக்கோ ஒன்றுமே புரியவில்லை, இப்போது நடந்தது கனவா? நினைவா? என்பது கூட அவளுக்கு புரியவில்லை, ஆனால் அவன் இதழின் எச்சில் அவள் இதழில் இன்னும் மீதம் இருப்பது போல் தோன்ற மெதுவாக தன் இதழ்களை வருடி பார்த்தாள், அவன் உண்மையில் அவளுக்கு முத்தமிட்டது போல் தான் தோன்றியது…

ஆனால் நிஜத்தில் அவன் வந்து சென்றதற்கான சிறு அடையாளம் கூட இருக்கவில்லை அல்லவா, அதை பார்தது பெண்ணவளோ நன்றாக குழம்பி விட்டாள். அதற்கு மேல் அங்கு நிற்க முடியாது, தண்ணீர் போத்தலை எடுத்துக் கொண்டு விறுவிறுவென வந்து தனதறைக்குள் நுழைந்து கொண்டாள்…

“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்ன ஆச்சு? நான் கண்டது கனவா? இல்ல உண்ம தானா? உண்மைலயே அவர் வந்து எனக்கு கிஸ் பண்ண போலவே பீல் ஆச்சே. ஆனா அவர் வந்த போலவும் இல்லையே, எனக்கு என்ன தான் ஆச்சு…” என தனக்குத்தானே புலம்பிக்கொண்டாள்…

“ச்ச லூசு ஆதி, உனக்கு கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா? இந்த நடுராத்திரில அதுவும், தனக்கு பிடிக்காத ஒரு பொண்ண யாராச்சும் வந்து கிஸ் பண்ணுவாங்களா? அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்ல. எல்லாம் உன் கற்பன தான். இந்த பாழா போன மனசு எதுக்கு தான் இப்டி கண்டப்படி யோசிக்குதோ தெரியல, தண்ணில விழுந்த நேரம் தலையில அடிபட்டுருச்சோ என்னவோ…” என தன்னைத் தானே கண்டப்படி கடுப்பாக திட்டிக் கொண்டவள், அதற்கு மேல் எதையும் யோசிக்க விரும்பாது அங்கிருந்த கட்டிலில் விழுந்து தூங்க ஆரம்பித்து விட்டாள்…

சூரியன் உதித்து பூமியில் உள்ள அனைவரும் ஒளி கொடுத்துக் கொண்டிருக்க, பறவைகளின் இசைகளுடன் அக்காலைப் பொழுது மிகவும் இனிமையாக விடிந்தது…

தூங்கிக் கொண்டிருந்த ஆத்யாவின் கனவில் அவளை இழுத்து அணைத்து சாஹரன் முத்தமிட, பதறியடித்துக் கொண்டு எழுந்து அமர்ந்திருந்தாள் பெண்ணவள்…

“ச்ச நேத்துல இருந்து எனக்கு என்ன ஆச்சுனே தெரில, எதுக்கு எனக்கு இப்படி கண்ட கனவெல்லாம் வருதோ தெரில…” என புலம்பிக் கொண்டே கட்டிலை விட்டு எழுந்தவளுக்கு, தனக்கு தேவையான உடைகளுக்கு என்ன செய்வது என்கிற பெரும் குழப்பம்…

அவளோ தன் சித்தி மற்றும் சித்தப்பா என இருவரும் கிளம்பி இருப்பார்கள் என நினைத்திருக்க, அவர்களோ வெளியே தான் இருந்து பேசிக் கொண்டு இருந்தார்கள்…

“இப்ப நான் டிரஸ்க்கு என்ன பண்ணுவேன்?” என யோசித்து படி நிமிர்ந்து பார்த்தவள், அப்போது தான் கவனித்திருந்தாள், அவளின் உடைப்பெட்டி அந்த அறைக்குள் இருப்பதை “அட என் லெக்கேஜ் எப்படி இங்க வந்துச்சு? யார் கொண்டு வந்து வச்சிருப்பாங்க? நேத்து நைட்டு அது இங்க இல்லையே…” என தனக்குத்தானே பேசிய படியே அதற்குள் இருந்த அவளுடைய உடையை எடுத்தவள், அறையுடன் ஒட்டி இருந்த குளியலறைக்குள் நுழைந்து கொண்டாள்…

குளித்த முடிந்த ஆத்யா அறையை விட்டு வெளியே வர, அங்குதான் அனைவரும் அமர்ந்திருந்தனர். அவளின் சித்தி மற்றும் சித்தப்பாவின் அருகில் வந்தவள், “சித்தி சித்தப்பா…” என அழைத்தபடி அவர்கள் இருவருக்கும் முன் வந்து நிற்க, சித்ராவோ அவளிடம் வந்து “இப்ப எப்படி இருக்கு ஆதி? நீ ஓகே தானே?” என அக்கறையாக அவளிடம் கேட்டிருந்தார்…

அச்சமயம் மகாலட்சுமியும் அவளிடம் வந்து ஆத்யாவின் தலையை வருடியபடியே “இப்ப எப்படி இருக்க ஆதிமா? இப்ப உனக்கு எதுவுமே இல்ல தானே? எதாச்சும்னா சொல்லு டாக்டரை வர சொல்லி, ஒரு தடவை செக் பண்ணி பார்த்திடலாம்…” என அவரும் அக்கறையாக அவளிடம் கேட்டார்…

“நான் நல்லா தான் இருக்கேன் சித்தி, எனக்கு எந்த பிரச்சினையும் இல்ல லஷ்மி மா…” என இருவரையும் பார்த்து சிரித்தப் படி கூறியிருந்தாள் ஆத்யா ஷாலினி…

“ஆமா என் லெக்கேஜ் எப்படி இங்க வந்துச்சு?” என யோசனையாக அவர்களைப் பார்த்து அவள் வினாவ, “நான் தான் ஆதிமா டிரைவர் கிட்ட சொல்லி, உன் லெக்கேஜ் எடுத்து வர சொல்லி இருந்தேன்…” என கூறினார் மகாலட்சுமி…

அச்சமயம் ஆபீஸ் செல்வதற்காக தயாராகி, சாஹரன், சரண் மற்றும் சரத் என மூவரும் வர, அங்கு அமர்ந்திருந்த ராஜேந்திரனோ நேராக சாஹரனின் அருகில் வந்தவர், அவனின் கையைப் பிடித்து “ரொம்ப நன்றி தம்பி. நீங்க மட்டும் நேத்து இல்லனா, என் பொண்ணுக்கு என்ன ஆகி இருக்கும்னே தெரியல, ரொம்ப ரொம்ப நன்றி. நேத்து நைட்டே சொல்லனும்னு நெனச்சேன், ஆனா டைம் அமையல ரொம்ப ரொம்ப நன்றி தம்பி…” என அவனின் கையை பிடித்து மீண்டும் மீண்டும் நன்றி கூறியிருந்தார்…

அவனோ அவர் சட்டென்று அவனிடம் இப்படி வந்து பேசுவார் என எதிர்பார்த்திருக்கவில்லை, தன்னிடம் வந்து நன்றி கூறுபவருக்கு எவ்வாறு எதிர்வினை ஆற்றுவது என தெரியாது அவரை பார்த்து இருந்தவனுக்கு, சட்டென எல்லோரிடமும் பேசுவது போல எடுத்தெறிந்து பேசவும் வரவில்லை…

“இல்ல அதெல்லாம் பரவால்ல…” என ஒற்றை வரியில் அவரிடம் அழுத்தமான குரலில் கூறியவன், அங்கிருந்து சட்டென சென்று விட்டான்…

தன் சித்தப்பா பேசியதைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து நின்றது என்னவோ ஆத்யா தான். “என்னது என்னை அவர்தான் காப்பாத்தினாரா? அப்போ அதெல்லாம் என்னோட கற்பனை இல்லையா?” என யோசித்தவள், அதிர்ந்து போய் நின்று இருந்தாள்…

அச்சமயம் அவளின் முன் வந்த அவளின் சித்தியோ “ஆதி இனி நீ ஹாஸ்டல்ல எல்லாம் தங்க வேண்டாம், இனி இங்க இவங்க வீட்லயே தங்கி இருந்து, உன் படிப்ப கண்டினியூ பண்ணு…” என அவர் கூற, அதை கேட்ட ஆத்யாவிற்கோ அதிர்ச்சியின் மேல் அதிர்ச்சி…

“என்ன சொல்றீங்க? நான் எப்படி இங்க இருக்குறது? அது எப்படி சித்தி சரியாக வரும்?” என தன் சித்தியைப் பார்த்து சங்கடமாக அவள் கேட்டாள்…

“நான் சொன்னா நீ கேப்ப தானே, மறுபேச்சு எதுவும் பேசாம நான் சொல்றது மட்டும் கேளு. இனி நீ இங்க தான் தங்கனும்…” என உறுதியாக ஆத்யாவிடம் கூறியிருந்தார்…

ராஜேந்திரனும் சித்ராவும் நேற்று இரவே முடிவெடுத்து விட்டனர். விஷ்வசாஹரனுக்கு ஆத்தியாவை திருமணம் செய்து வைப்பது என்று, அதனால் தான் அவர் ஆத்யாவிடம் இவ்வாறு கட்டளையாக கூறியிருந்தார்…

காலையில் நேரத்துடன் இருவரும் தங்களின் முடிவை அந்த வீட்டில் இருந்த பெரியவர்களிடம் கூறிவிட்டனர். என்ன இன்னும் அந்த வீட்டிலிருந்த சிறியவர்களுக்கு தான் இந்த விடயம் தெரியாது, தெரிய வந்தால் ஒவ்வொருவரின் மனநிலை என்னவோ?

அவள் என்றுமே தன் சித்தி, சித்தப்பாவின் பேச்சுக்கு மறு பேச்சு பேசியதில்லை என்றாலுமே, இன்று தன் சித்தி எடுத்த இந்த முடிவில் அவளுக்கு சிறிதும் உடன்பாடு இருக்கவில்லை. விஷ்வசாஹரன் வீட்டில் அவள் தங்குவதா? அவளுக்கு அதுவே பெரிய தலைவலியாக இருந்தது. அவளுக்கு தான் சாஹரனை பிடிக்கும் ஆனால் அவனுக்கு அவளை பிடிக்காது என அவளுக்கு நன்றாக தெரியும் அல்லவா, அந்த பயம் அவளுக்கு, இந்த விடயம் அவனுக்கு தெரிந்தால் அவன் எவ்வாறு எதிரவினை ஆற்றுவான் என்று நினைக்கும் போதே, அவள் உடல் ஒரு கணம் உள்ளுக்குள் நடுக்கம் கண்டது…

ஆத்யாவின் முகம் குழப்பத்தில் இருப்பதை கண்ட மகாலட்சுமியும் அவளின் அருகில் வந்து, அவளின் கையை பிடித்து “எனக்கு பெண் குழந்த இல்லாத குறை நீ இருக்கும் போது தெரிஞ்சதே இல்ல டா, இப்போ இத்தன வருஷம் கழிச்சு வந்து இருக்க, மறுப்பு சொல்லாம என் கூடவே இரு ஆதி மா…” என அவளின் கையை பிடித்து அவர் கேட்க, அவரின் முகத்தை பார்த்தவளுக்கு மறுத்து பேச வாய் வரவில்லை, வேறு வழி இல்லாது ‘சரி’ என தலையை ஆட்டி இருந்தாள்…

அவள் சரி என சொன்னதும் மகாலட்சுமியின் முகத்தில் வந்த மகிழ்ச்சியை கண்டு அங்கிருந்த அனைவரின் முகமும் புன்னகையில் மலர்ந்து விட்டது…

அவரோ அங்கு நின்றிருந்த சரணிடம் “டேய் இனி நீ தான் ஆதிய காலேஜ்ல விட்டு, அதே போல வரும்போது கூட்டிட்டு வரணும்…” என அவனிடம் கட்டளையாக கூறி இருந்தார்…

அவனோ தன் தாயின் முகத்தை ஒரு கணம் பார்த்தவன், மறுப்பு ஏதும் கூறாது ‘சரி’ என தலையை மட்டும் ஆட்டி விட்டு சென்றிருந்தான்…

“சரி ஆதி அப்ப நானும் சித்தப்பா ஊருக்கு கிளம்புறோம். பாத்திரமா இருந்துகோ, ஏதாச்சும் தேவைனா எங்களுக்கு ஒரு போன் பண்ணு…” என கூறியப்படி இருவரும் கிளம்புவதற்காக எழுந்து கொள்ள, ஆத்யாவோ தன் சித்தியின் கையை பிடித்தவள் “சித்தி எனக்கு சான்வியையும் சாத்வியையும் பார்க்கணும் போல இருக்கு, அவங்க ரெண்டு பேரையும் லீவ் நாளா பார்த்து, ஒரு நாளைக்கு இங்க கூட்டிட்டு வரீங்களா?” என ஆசையாக கேட்டாள்…

பாவம் அவள் இத்தனை வருடங்களில் தன் தங்கங்களை பிரிந்து இருந்ததே இல்லை. இப்போது பிரிந்திருப்பது பெண்ணவளுக்கு என்னவோ போல் இருந்தது. அவர்களை பார்க்க மனம் ஏங்கி தவித்தது…

அவரோ ஒரு கணம் திரும்ப ராஜேந்திரனை பார்த்தவர் “இந்த சண்டே நானும் சித்தப்பாவும் இங்க வருவோம், அப்போ சாத்வியையும் சாத்வியையும் கூட்டிட்டு வரோம்…” என அவளிடம் கூறியவர், அங்கிருந்த அனைவரிடமும் கூறிவிட்டு, தனது கணவருடன் கிளம்பி விட்டார்…


தொடரும்…
 

Gowri Karthikeyan

Active member
டேய் என்ன வேலை டா பார்க்கற🙈🙈🙈🙈🙈
அது உண்மைனு புரியாம இருக்கு இந்த லூசு🤦🤦🤦🤦
 
Top Bottom