• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

தழலை அணைக்கும் அமுதகமே - 15

STN - 77

New member
அத்தியாயம் 15

ராஜேந்திரன், சித்ரா மற்றும் சாண்விகா, சாத்விகா என அனைவரும் ஊருக்கு கிளம்ப தயாராக, அவர்களை வழி அனுப்பதற்காக தான் மற்றைய அனைவரும் முன்கூடத்தில் நின்றிருந்தனர்…

அப்போது தன் அறையில் இருந்து வெளியே வந்த விஷ்வேஸ்வரனோ “நல்ல நாள் பார்த்தேன், பார்த்தா வார 23ஆம் தேதி தான் நல்ல நாளா இருக்கு, அதுக்கு அப்புறம் பார்த்தா ரொம்ப தள்ளி தான் இருக்கு, என்ன பண்ணலாம்?” என அவர்கள் அனைவரையும் பார்த்து யோசனையாக கேட்டார்…

ராஜேந்திரனோ 23ஆம் திகதிக்கு ஒரு மாதம் தானே இருக்கிறது என யோசித்து தயங்கி நின்றார், என்னவாக இருந்தாலும் அவர்கள் பெண் வீட்டுக்காரர் அல்லவா? செலவுகள் நிறைய இருக்குமே என்கிற யோசனை…

அவர்களால் உடனே அனைத்தையும் ஏற்பாடு செய்யது விட முடியாது அல்லவா, அச்சமயம் விஷ்வநாதனோ “அதுக்கு என்னப்பா ஒரு மாசத்திலேயே கல்யாணத்த வெச்சுக்கலாம்…” என கூறியிருந்தார்…

ஆனால் மகாலட்சுமியோ அவர்கள் இருவரின் முகத்தில் இருக்கும் தயக்கத்தை கண்டு கொண்டவர், சித்ராவின் அருகில் சென்று அவரின் கையைப் பிடித்து “நான் ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்காதீங்க, ஆதி எங்க வீட்டு பொண்ணு. நீங்க அவளுக்கு எந்த செலவும் பண்ணனும் நாங்க எதிர்பார்க்கல. இது பண்ணனும்னு அது பண்ணணும்னு பெருசா எதுவும் யோசிக்காதீங்க, எல்லா செலவையும் நாங்களே பாத்துக்கிறோம்…” என அவர் கூறி இருந்தார்…

ராஜேந்திரனோ அதை கேட்டு உடனே “அது எப்படி அவ எங்களோட பொண்ணு இல்லயா, ஒரு செலவு கூட பண்ணாம எப்படி அவளை நாங்க அனுப்பி வைக்க முடியும்? எங்க பக்கம் இருந்து கண்டிப்பா நாங்க செய்ய வேண்டி எல்லாத்தையும் செய்வோம்…” என உறுதியாக கூறினார்…

அதை கேட்ட விஷ்வநாதனோ ராஜேந்திரனின் அருகில் வந்து, “உங்களால முடிஞ்சத செய்ங்க, அத தாண்டி கடன் அது இதுனு வாங்கி எதுவுமே செய்ய வேண்டாம். உங்க பொண்ணுக்கு செய்யணும் நினைக்கிறத நீங்க தாராலமா செய்யலாம். ஆனா உங்க சக்திக்கு மஞ்சி எதும் செய்ய வேணாம், நாங்க அத எதிர்பார்க்கவும் இல்ல…

மத்தப்படி எல்லாத்தையும் நாங்களே பார்த்துக் கொள்கிறோம். இது எங்க வீட்டோட முதல் கல்யாணம் எல்லா செலவையும் நாங்களே பாத்துக்கணும் ஆசை படுறோம், அதனால தப்பா எடுத்துக்காம உங்க பொண்ணுக்கு செய்யணும் நினைக்கிறத மட்டும் செய்யுங்க, மத்தபடி கல்யாணம் ஏற்பாடுல இருந்து நிச்சயதார்த்தம் எல்லாமே நாங்களே பார்த்துக் கொள்கிறோம்…” என அவரின் கைகளை பிடித்து கூறியிருந்தார் விஷ்வநாதன்…

அவர் கூறியதை கேட்டு ராஜேந்திரனோ தயக்கமாக சித்ராவை திரும்பி பார்க்க, சித்ராவும் பெருமூச்சுடன் என்ன செய்வது என்ற யோசினையுடன் தான் நின்றிருந்தார்…

மகாலட்சுமி சித்ராவின் கைகளை பிடித்து “சரின்னு சொல்லுங்க ப்ளீஸ்…” என அவர் கேட்க, அதற்கு மேல் மறுக்க முடியாமல் இருவரும் சரியென தலையை ஆட்டி இருந்தனர்…

சித்ரா மகாலட்சுமியிடம் “ஒரு மாசத்துல கல்யாணம் அதுவரை ஆதி இங்க இருக்கிறது நல்லா இருக்காது, அதனால நாங்க இன்னைக்கே அவள எங்க கூடவே கூட்டிட்டு போறோம். கல்யாணம் முடிஞ்சா அப்புறம் இங்கதானே வந்திருக்க போற…” என கூறி இருந்தார்…

அங்கிருந்த யாருக்குமே ஆத்யா அவர்களை விட்டு செல்வதில் விருப்பமில்லை, ஆனால் ஒரு மாதம் கழித்து நிரந்தரமாக இங்கு தானே வந்திருக்கப் போகிறாள் என்ற மனநிலையோடு அனைவரும் சரியென தலையை ஆட்டி இருந்தனர்…

அப்போதுதான் தன் அறையில் இருந்து வெளியே வந்தான் விஷ்வ சாஹரன், இது அனைத்தையும் மௌனமாக பார்த்துக் கொண்டிருந்த ஆத்யா ஷாலினியோ அமைதியாக நின்றிருந்தாள். எதுவுமே பேசியிருக்கவில்லை, பெண்ணவளின் மனமோ பல குழப்பங்களிலும் பயத்தினிலும் சிக்கித் தவித்தது…

சித்ரா பேசுவதை கேட்டுக் கொண்டு வந்தவனோ, அவரிடம் நேராக வந்து “இவ இங்க இருந்து எங்கேயும் வரமாட்டா, நீங்க நாலு பேரும் மட்டும் கிளம்புங்க…” என கூறியிருக்க, அங்கிருந்து அனைவரும் அவனைத்தான் அதிர்ச்சியாக பார்த்தனர்…

“என்னடா சொல்ற? ஏன் இப்படி சொல்ற?” என விஷ்வநாதன் அவனைப் பார்த்து குழப்பமாக கேட்டார்…

அவனோ “நான் இப்ப அவள கல்யாணம் பண்ணிக்க போற மாப்பிள்ளையா பேசல, அவ படிச்சிட்டு இருக்கா காலேஜோட ஓனரா பேசுறேன், ஒரு மாசம்லாம் காலெஞ் லீவ் எடுத்துட்டு போய் நிக்க முடியாது. வேணும்னா ஒரு வாரத்துக்கு முன்னாடி லீவ் எடுத்து, அப்ப வேணும்னா உங்க வீட்டுக்கு கூட்டிடுப் போங்க. இப்ப அவ இங்க தான் இருந்தாகணும், டெய்லி காலேஜ்க்கு வந்து தான் ஆகணும் என உறுதியாக கூறியிருந்தான்…

இவனின் பேச்சை கேட்டிக் கொண்டிருந்த சரத்தோ “ஐயோ இவன் ஒரு சின்சியர் சிகாமணி…” என தன் இரட்டை பிறவியின் காதில் கடுப்பாக முணுமுணுத்தான், அவன் கூறியதை கேட்ட சரணுக்கும் கூட அதே எண்ணம் தான்…

“இவன் ஒருத்தன், டேய் நம்ம வீட்டு பொண்ணு தானே டா, ஒரு மாசம் லீவ் கொடுக்க மாட்டியா?” என தன் மகனை பார்த்து சலிப்பாக கேட்டிருந்தார்…

அவனோ “ம்மா சும்மா இருக்கீங்களா, என்ன பத்தி தெரியும் தானே, யாராயிருந்தாலும் சரி ரூல்ஸ் இஸ் எ ரூல்ஸ், ஒரு வாரத்துக்கு முன்னாடி தான் லீவ் கொடுப்பேன், அதுக்கு முன்ன அவ போனா, மொத்தமா போக வேண்டியது தான்…” என கரராக கூறியிருந்தான்…

ஆத்யா ஷாலினியோ இதற்கு மேலும் பேசாமல் இருந்தால் சரியாக இருக்காது என நினைத்தவள். தன் சித்தி அருகில் வந்து, அவரின் கையை பிடித்து “அவர் சொல்றதும் சரிதான் சித்தி, நான் காலேஜ்கு சேர்ந்து ஒரு வாரம் தானே ஆகுது. இந்த டைம்ல ஒரு மாசம்லாம் லீவ் எடுக்க முடியாது, நான் கல்யாணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடியோ இல்லனா பத்து நாளைக்கு முன்னாடியோ வந்துடறேன். இப்ப நான் இங்கேயே இருந்து படிக்கிறேன் சித்தி…” என அவரிடம் கூறினாள்…

அவள் இவ்வாறு கூறிய பிறகு அவர்கள் எக்கணம் மறுப்பார்கள் ‘சரி’ என கூறிவிட்டு, அவர்கள் நால்வரும் மட்டும் அங்கிருந்து தங்களின் ஊருக்கு கிளம்பி இருந்தனர்…

இரவு உணவை உண்டு விட்டு, கட்டிலில் வந்து படுத்த ஆத்யா ஷாலினியோ விட்டத்தையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்கோ தூக்கம் வந்த பாடு தான் இல்லை. ஒரே நாளில் எல்லாமே நிகழ்ந்துவிட்ட உணர்வு…

ஒரு மாதத்திற்குள் எப்படி இருந்தவளின் வாழ்க்கை எப்படி மாறிவிட்டது, என்கிற யோசனை அவளுக்கு, அனைத்துமே அவசர கதியில் நடப்பது போன்று இருந்தது. இதில் விஷ்வ சாஹரன் வேறு அவளை மொத்தமாக குழப்பி விட்டிருந்தான்…

அவன் தன்னை விரும்பி தான் திருமணம் செய்கின்றன? தன்னை பிடித்திருக்கிறதா? எதற்கு திருமணத்திற்கு சம்மதம் சொன்னான்? வீம்புக்காக இப்படி செய்கின்றானா? என அவளிடம் ஆயிரத்தெட்டு கேள்விகள், ஆனால் எதற்கும் பதில் தான் பாவம் பெண்ணவளிடம் இருக்கவில்லை…

அவளால் நம்பவே முடியவில்லை. இன்னும் ஒரு மாதத்தில் அவளுக்கு திருமணம், அதுவும் அவள் கொஞ்சம் கூட இதுவரை நினைத்துக் கூட பார்த்திராத ஒருவனுடன் என்று. அவன் மேல் காதல் இருந்தாலும் அவள் திருமணம் என்ற அளவுக்கெல்லாம் யோசித்ததில்லை, அது நடக்க வாய்ப்பேயில்லை என்று அவன் நினைத்திருக்க. இதோ இன்று அது சத்தியமாகிவிட்டது…

யோசனையுடனே புரண்டு புரண்டு படுத்தவள் எப்போது தூங்கினான் என்று அவளுக்கே தெரியாது…

இதே சமயம் மொட்டை மாடியில் நிலவொளியை பார்த்துக் கொண்டிருந்த, விஷ்வ சாஹரனின் கையில் ஆத்யாவின் டைரி இருக்க, அதில் அவள் வடித்திருந்த கவிதைகளை வாசித்தவனுக்கு அவளுக்கு தன் மேல் இந்த அளவுக்கு விருப்பம் இருந்ததா என்று ஆச்சரியமாக தான் இருந்தது…

அவனுக்கு தெரியும் அவள் இப்போது எந்த அளவிற்கு குழப்பமான மனநிலையில் இருப்பாள் என்று. அவன் வேறு இடையில் அவளை பேசி இன்னும் குழப்பி இருக்க, அவளின் மனநிலையை அவனுக்கு நன்கு புரிந்துக் கொள்ள கூடியதாகவே இருந்தது. தன்னவளின் காதலை அவன் புரிந்து கொண்டான், இப்போது தன் காதலை அவளுக்கு தெரிய படுத்த, புரிய வைக்க வேண்டும் என நினைத்தும் கொண்டான்…

அச்சமயம் அவனின் அருகியில் வந்து நின்றான் சரண். தன் தம்பி தன் பக்கத்தில் வந்து நிற்பதை உணர்ந்த விஷ்வ சாஹரனோ, அவன் ஏதோ தன்னிடம் பேச வந்திருக்கிறான் என்பதை அவன் கூறாமல் புரிந்து கொண்டு, “என்ன விஷயம்…” என கேட்டிருந்தான்….

அவனோ “அது வந்து…” என இழுக்க, “ “பரவால்ல சொல்லு…” என அவனிடம் கேட்டான்…

ஆனால் சரணோ அப்போதும் எப்படி கேட்பது என்ன தெரியாமல் தயங்கி நிற்க, “உன் பிரண்ட நான் எதுக்கு கல்யாணம் பண்ண சமதிச்சேன், அவ மேல எனக்கு லவ் இருக்கா? இல்லையா? உன் பிரண்டுக்கு இதுல சம்மதமா? இல்லையா? இதுதானே உன் கேள்வி…” என சரியாக அவன் என்ன கேட்க வந்தானோ, அதையே கேட்டபடி இப்போது தன் தம்பியின் பக்கம் திரும்பி இருந்தான்…

“எப்படி ண்ணா சரியா கண்டுபிடிச்சீங்க?” என ஆச்சரியமாக விஷ்வ சாஹரனை பார்த்து கேட்டான்…

அவனோ “உன்ன பத்தி எனக்கு தெரியாதா? நீ அவ கூட பேசாத மாதிரி இருந்தாலும் நீ அவ மேல எவ்வளவு அக்கறை வச்சி இருக்கன்னு எனக்கு தெரியும். எத பத்தியும் யோசிக்காத, எனக்கும் சரி உன் பிரண்டுக்கு சரி இந்த கல்யாணம் பிடிக்காம நடக்காது…” என தன் தம்பியின் தோளில் தட்டி கூறியவன், அங்கிருந்து சென்று விட்டான்…

தன் அண்ணன் கூறி வார்த்தைகளை கேட்டவனுக்கு அதுவே போதுமானதாக இருக்க, பெருமூச்சுடன் அங்கு நின்று சில நொடிகள் நிலவினை வெறித்து பார்த்தவன். பிறகு அவனும் கீழ் இறங்கி தன்னுடைய அறைக்கு சென்று தூங்கி விட்டான்…

இப்படியே இரண்டு வாரங்கள் கழிந்திருக்க, அவர்களின் திருமணம் நாளும் அதோ இதோ என இன்னும் ஒரு வாரத்தில் நடக்க இருந்த சமயம் அது, திருமணத்திற்கு ஒரு நாள் முன் நிச்சயதார்த்தமும், திருமண முடிந்த அன்று மாலை ரிசப்ஷனும் என கல்யாணத்தை மிகவும் பிரமாண்டமாக தான் ஏற்பாடு பண்ணி இருந்தார்கள் விஸ்வநாதனும், விஸ்வேஸ்வரனும்…

ஆத்யா ஷாலினியும் அன்று இரவு தன் ஊருக்கு கிளம்புவதாக இருக்க, அவளின் உடைகள் அனைத்தையும் தனது பெட்டிக்குள் அடுக்கி வைத்துக் கொண்டிருந்தாள்…

அப்போது அவளின் பின் வந்த ஒருவன் அவள் கண்களை இறுக்கமாக மூடியிருந்தான், முதலில் பயந்தவளோ மூடிய கையை மெதுவாக தொட்டுப் பார்த்தியுந்தாள்…

தொட்டு பார்த்த அடுத்த நொடி அது யாரென அவளுக்கு தெரிந்து விட “சரண்…”என அவள் கூறினாள்…

அவனும் கைகளை விளக்கிய அவளை ஆச்சரியமாக பார்த்தபடி விலகி நின்றவன், “ஹேய் எப்படி கண்டுபிடிச்ச? நான் தான் கண்ண மூடினேனு…” என அவன் வியப்பாக கேட்டான்…

“உன் கை எனக்கு தெரியாதா? ஒன்னு நீயா இருப்ப, இல்லனா சரத இருக்குன்னு யோசிச்சேன், ஆனா எனக்கு தெரியும் இன்னைக்கு நீ என் கண்ண மூட நிறைய வாய்ப்பிருக்குனு, ஏன்னா என் ஒவ்வொரு பர்த்டேக்கும் நீதான் இப்டி பண்ணி இருக்க…” என கூறியப்படியே சிரித்துக் கொண்டு திரும்பினாள்…

ஆம் அன்று ஆத்யா ஷாலினியின் பிறந்தநாள், இவர்கள் சிறுவயதில் ஒன்றாக இருக்கும் சமயங்களில் அவளின் பிறந்தநாளை எப்போதும் அவன் இவ்வாறு கண்களை மூடி, அதற்கு பிறகு தான் பரிசு கொடுப்பான். சரண் அதையே மீண்டும் செய்ய நினைத்தவன், அவள் தன்னை கண்டுபிடிக்க மாட்டாள் என நினைத்திருக்க, ஆனால் பெண்ணவளோ அவனை சுலபமாக கண்டுகொண்டாள்…

“ ஹேப்பி பர்த்டே ஆதிமா” எனக் கூறியவன், தன் கைகளில் பின்னால் மறைத்து வைத்திருந்த பரிசை எடுத்து அவளுக்கு கொடுத்தான். அவளும் “தேங்க்யூ…” எனக் கூறியபடி அவன் நீட்டிய பரிசை வாங்கிக் கொண்டாள்…

அதுவோ அழகான தங்கத்தால் ஆன செயின், அதில் எஸ், ஏ என சாஹரன் மற்றும் ஆத்யாவிற்கான ஆங்கில முதல் எழுத்து, இதய வடிவிலான பெண்டனில் பொறிக்கப்பட்டிருந்தது…

“ரொம்ப அழகா இருக்கு…” என கூறியபடி அதை தன் கையில் எடுத்து பார்த்தவள், தன் கழுத்தில் அணிந்து கொண்டே, “எப்படி இருக்கு?” என கேட்க, அவனோ “சூப்பரா இருக்கு அண்ணியாரே…” என நக்கலாக சிரித்தபடியே கூறியிருந்தான்…

“அட ஆமால, நான் இனி உனக்கு அண்ணி முறைல, இனி என்னை மரியாதை தான் கூப்பிடனும், நீ வா போன்னுலாம் சொல்ல கூடாது, அண்ணி நீ மரியாதைய தான் கூப்பிடனும்…” என கட்டளையாக கூறுவது போல தன் கைகள் இரண்டையும் இடையில் வைத்தபடி அவனைப் பார்த்து நக்கலாக கூறினாள்…

அவனோ அவள் கூறியதை கேட்டு சத்தமாக சிரித்தவன், “லூசு…” என அவளின் தலையை தட்டியவன், “சரி நீ வேலைய பாரு நான் கிளம்புறேன்…” என்றப்படி அவளிடம் சொல்லிவிட்டு அங்கு இருந்து கிளம்பி விட்டான்…


தொடரும்…
 
Top Bottom