• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

திருடிய இதயத்தைத் திருப்பிக்கொடு - 23 ( இறுதி அத்தியாயம் )

ஷமீம்

Well-known member
என்ன இப்படி பட்டுன்னு கதை முடிஞ்சுடுச்சு🙄🙄... ம்ம்.. நல்ல" ஃபீல் குட்" தான்... 💛💜
 

Gaya Naga

Well-known member
திருடிய இதயத்தை திருப்பிக் கொடு.

என்ன ஒரு மெல்லிய,மனதை வருடும் காதல் கதை.ஏதோ மனமயக்கும் மெலடியஸ் பாட்டை கேட்டதை போல இக்கதை படிக்கும் ஒவ்வொரு முறையும் உணர்ந்துள்ளேன். எந்தவொரு வில்லனோ, வில்லியோ இதில் கிடையாது(சிறு வயதில் ஜீவனியை கல்லால் மண்டையை உடைக்க முயலும் நிரஞ்சனின் நண்பனை வேண்டுமானால் போனால் போகட்டும் என்று சேர்த்துக் கொள்ளலாம் வில்லனாக)

நெடுநாள் சொல்லப்படாத, ஆராதனைக்குரிய/பூஜைக்குரிய
நிரஞ்சனின் காதல் தான் கதை.

*ஜீவனிதா- நிரஞ்சன் பிரகலாதன். செம ஜோடி.
(நேர் opposites;ஆர்பரிக்கும் அலைகடல்-ஆழ்ந்த அமைதியான நடு கடல்;ஒரு வார்த்தை கூட நான் யோசிக்க முடியாத அளவுக்கு உவமைகள் அனைத்தும் நீங்களே கொடுத்து விட்டீர்கள் கதை முழுதும்😂😂)

*ஜீவனி - தவநேசன் புஷ்பராணி மகள்.துள்ளி திரியும் புள்ளிமானாய்,துறுதுறுவென அனைவரிடமும் வம்பு வளர்க்கும் குறும்பி,வாய் துடுக்கு (24 hr service 🤣🤣),வாலு பெண்.அவளின் துணிச்சல்,(கார் கண்ணாடியை உடைப்பது,சுவரேறி குதிப்பது,) சேட்டை, படபடப் பட்டாசு வாய் -(கோவிலில் கூட மிஸஸ் சிவபெருமானுடன் என்ன பேச்சு!!!மனதில் தான் நல்லவேளையாக!!)வெடிக்க காத்திருக்கும் கண்ணிவெடி,சில்வண்டு.(All your words தான் நிதாமா கதையில்)(நான் வேறு வார்த்தைகள் யோசித்தேன்,வாலு-விஷமம்-அட்டகாச லூட்டி அடிக்கும் பெண் என்றே நினைவுக்கு வந்தது)("டேய்...உன்னக் கொல்லப்போறேன் இப்ப..."Punch dialogue👌👌)
இத்தனை வம்பு வளர்க்கும் மகளுக்கு நல்ல முறையில் திருமணம் நடக்க வேண்டுமே என அன்னை கவலைப்பட,காலிக்கு வந்து, தன் தாய், தந்தையை (மூக்கின் மேல் விரல் வைத்து)அயர வைத்த,உயரிய காதல்/திருமண வாழ்வை சம்பாதித்தவள்..

நிரஞ்சனை அவர்கள் குறைவாக நினைப்பதை பொறுக்காமல் கோபம் கொண்டது 100% அவன் சகியாக மாறியதை காட்டியது.Super.

*நிரஞ்சன்-கடலோர இயற்கை வளம் நிறைந்த காலியில் வெற்றிகரமான
தொழில் செய்து,தன்னை சேர்ந்த அனைவருக்கும் நல்லது செய்து,தன் அம்மம்மாவை தெய்வமாக நினைத்து,அவர் வாக்கை தெய்வ வாக்காய் பின்பற்றி,தன் காதலை கூட வெளியிடாமல்,கட்டுப்பாட்டுடன் வாழ்ந்து,அதில் வெற்றியும் கண்டு ,எதையும் நேராகவும் முறையாகவும் செய்ய நினைக்கின்ற,அனைவரையும் மதித்து நடக்கின்ற,நிரஞ்சன்,மனதை நினைக்கிறார்.இப்படி கூட ஒருவர் இருக்க முடியுமா என்று.(போனில் வீடியோ எடுத்ததைத் தன் அறையில் பிரத்யேகமாக set பண்ணி வைத்திருக்கும் display video,அந்த குடில், சான்சே இல்ல, கலக்கல். எந்த காதலியும் full flat தான் ஆவாள்.)
ஆனால் அவன் நம் ஜீவனியிடம் ஆரம்பத்தில் வாங்கிய பெயர்கள்,பட்டங்கள்!!சிரிப்பு தாங்கல!!
பயில்வான் பக்கிரி,மங்கி சொங்கி,பெருச்சாளி,விசரன்,ப்ளே பாய்.😀😂


*அம்மம்மாவின் பாசம் ,அந்த கடிதம் பொக்கிஷம்...மூத்த தலைமுறையினரின் அன்பே அன்பு தான்.They were our greatest blessings in our life.(Here for Niranjan's life)


*செல்வராணி-சிவகுமார் - நல்ல சித்தி,சித்தப்பா.ஜீவி நிரஞ்சன் காதல் ஈடேற அம்மம்மா ஆசிகளுக்கு பிறகு,இவர்களின் சான்று/அத்தாட்சி வார்த்தைகள் உண்மையில் பேருதவி.

*ரதன்-எப்போதும் ஜீவியிடம் செல்ல சண்டைகள் பிடித்து,மண்டையில் தவறாமல் கொட்டு வாங்கும் விளையாட்டு தம்பி ,ஒரு காலத்தில் துவண்டு போயிருந்த நிரஞ்சனுக்கும்,அருமருந்தாக இருந்த பொறுப்பானவன் கூட.Lovely character.

*பாலா-நந்தினி,
அன்னம்மா, சயந்தி(அவள் அறியாமலேயே, ஜீவனியின் மன மாற்றத்திற்கு பெரும் பங்கு சயந்திக்கு உண்டு) , கதிரவன், அனைவரும் அவர்கள் பங்குக்கு மனதில் நிற்கிறார்கள்.

மொத்தத்தில்,
Thanks Nithama for this "FEEL GOOD JOLLY STORY."Enjoyed reading it a lot.
 

sathiyags

Active member
அப்பாடா, கடைசியில் தலைப்பு வந்துவிட்டது.
சூப்பர் ஃபீல் குட் கதை.
அருமை
 
Top Bottom