தீஞ்சுவை மலர் -`10
மலருக்கும் கதிருக்கும் வந்த சண்டையைப் பயன்படுத்திக் கொண்டு திருமணம் ஆன ஒரே மாதத்திற்குள் அழகாக கழண்டு கொண்டார்கள் காவ்யாவும் வெற்றியும்.
வெற்றி போகாதடா! அவன் காலைப் பிடித்து கதறிய தாயிடம்,
"ஏம்மா எதுக்கு இவ்ளோ சீனு? அதான் அண்ணாவும் செல்வியும் இருக்காங்கல்ல . நான் என்ன வேறு கிரகத்துக்கா போறேன்? அப்பப்ப வந்து பார்த்துக்கறேன்." இதமாக சொல்லவில்லை. அன்னையை இம்சையாகப் பார்த்தான் .
அன்று சென்றவன்தான். பின்னர் சில மாதங்கள் கழித்து அன்னை மருத்துவமனையில் இருந்த போது சில முறை வந்து பார்த்தான். அதுவும் காவ்யா வரவில்லை. அன்னை இறந்த போது கூட வந்தவள் புடவை மிடுக்கு கலையாமல் சென்று விட்டாள் .
"என்ன டா வெற்றி இது?"
"என்ன பேசறீங்க நீங்க? அவ எதுக்கு இங்க நிக்கணும். அவளுக்கு இங்க என்ன வேலை இருக்கு. உங்க பொண்டாட்டி தானே செய்யணும். அவ இல்லன்னா செல்வி இருக்காளே. அப்புறம் எதுக்கு காவ்யா சும்மா இங்க நின்னுகிட்டு. "
"ஓ பொண்டாட்டிக்கு இப்படி எல்லாம் கூட சப்போர்ட் செய்ய வேண்டுமா? கதிருக்கு விளங்கவில்லை. சிவகாமி சொல்லும் தலையணை மந்திரம் இது தானோ !
மலரை வீட்டை விட்டு துரத்திய அன்றைய இரவில் .....
கதிர் தன்னுடைய பாய் படுக்கையில் விழுந்தான். அவள் இல்லை. அவன் கவலை கொள்ளவில்லை அவனின் மனம் முழுக்க முழுக்க ஆத்திரம், கோபம் அன்னை போட்டு விட்ட தூபம் எல்லாம் சேர்ந்து அவனுக்கு மனதில் இன்னும் வெறி தான் ஏறிக்கொண்டிருந்தது. நேரம் பார்த்து வீட்டை விட்டு வெளியேறிய வெற்றியின் மீது கோபம் கொள்ளாமல் அந்த கோபமும் சேர்ந்து மலர் மீதுதான் அவனுக்கு அதிகமாக வந்தது அவனுக்கு மட்டும் அல்ல அவன் குடும்பத்தில் இருந்து அத்தனை பேருக்கும் மலர் மீதுதான் அத்தனை கோபம் .
தேனீ கூட்டுல கல்ல விட்டு எரிஞ்சாப்ல நல்ல இருந்த குடும்பத்தை பிரிச்சுட்டா சண்டாளி. உங்க அப்பாவுக்கு நண்பர்னு சொன்னதுனால அநத குடும்பத்துல பொண்ணு எடுத்து குடும்பமே இப்படி வீணாகிப் போச்சு. தலையில் அடித்துக் கொண்டார் சிவகாமி .
"இருக்கட்டும். அவுங்க அப்பா வீட்டுல கொஞ்ச நாள் கிடக்கட்டும். பாக்குறவங்க எல்லாரும் என்ன மலரு இன்னும் வீட்டுக்கு போகலையான்னு கேப்பாங்க இல்ல. அப்பதான் அவளுக்கு புத்தி வரும்." செல்வி தான் துடுக்காக பேசினாள் .
"அவ போனா என்னமா உனக்கு நான் இருக்கேன் உனக்கு ராத்திரிக்கு என்ன செய்யட்டும் சொல்லு" என்று கூறி அன்றைய இரவுக்கு அண்ணனுக்கும் அம்மாவுக்கும் செல்விதான் சமையல் செய்து கொடுத்தாள். எத்தனை நாள் செல்வி மட்டும் இங்கு இருக்க முடியும்? இதோ அன்றைய இரவே கணவனிடம் இருந்து அழைப்பு வந்தது. கூடவே நேரே வந்து நின்று விட்டான் .
என்ன ஒன்று பெண்ணுக்காக மாப்பிள்ளை வந்து நிற்கும் பொழுது துள்ளல் போடும் மனது மகனும் மருமகளும் தனியே கடந்து தவிக்கும் போது பார்க்க மறுக்கிறது.போனா போடி! மனதிற்குள் அவளை திட்டிக் கொண்டிருந்தாலும் அவள் வீட்டில் இல்லாமல் கதிருக்கு மிகவும் கஷ்டமாக தான் இருந்தது.(அவளின் வாசம் வீசும் அறை . ஒற்றை இதழ் முத்தம். இதுக்காகவா ! இது காதல் கதை தான். ஆனா கதிருக்கு காதல் வரவழைக்க ஆத்தர் ரொம்ப கஷ்டப்படணும். )
அப்ப அவளோட அருமை புரிந்து விட்டதா? இல்லையே! அது தான் நான் ஏற்கனவே சொல்லி இருந்தேனே இவள் இல்லை என்றால் வேறு ஒருத்தி அன்றைய தினம் மலரை வீட்டை விட்டு அடித்து துரத்தியவன் மலர் எங்கு சென்றாள் என்பதை அவள் பெற்றோரிடம் கூடக் கேட்டு தெரிந்து கொள்ளவில்லை.
மலரை பெற்றவர்கள் கூட தான் மலருக்கு ஒரு அழைப்பு ஒருமுறை கூட அழைக்கவே இல்லை போன் பண்ணலன்னா கூட நிம்மதியா தான் இருக்கு. எப்ப பாரு இந்தப் பிரச்சன அந்த பிரச்சனை என்று சொல்லிக்கொண்டே இருப்பா என்று தான் நினைத்தாள் அவள் அன்னை ஏனோ அனைவருக்குமே கஷ்டப்படும் மகளை விடவும், தொல்லை விட்டது என்று தான் நினைக்கத் தோன்றுகிறது. பெற்ற மகளாகவே இருந்தாலும் கணவன் வீட்டில் நகை நட்டு போட்டுக்கொண்டு சிங்காரித்துக்கொண்டு சிரிப்போடு வாழ்ந்தால் தான் மதிப்பு. இதனால்தான் பல பெண்களும் குழந்தைக்காக, குழந்தைக்காக என்று சொல்லிக் கொண்டு கணவன் வீட்டை விட்டு பெற்றவர்கள் வீட்டிற்கு சென்று தங்குவதில்லை .அரை வயிறு கஞ்சியாக இருந்தாலும் தன் வீட்டில் வந்து குடித்துக் கொள்ளலாம் என்று பெற்ற வீட்டில் கூட நான்கு நாட்கள் தொடர்ந்து தங்க முடியாமல் ஓடி வந்து விடுகிறார்கள். ஆனால் இது எல்லோருக்கும் பொருந்தாது.வெற்றியின் மனைவி காவ்யா பற்றி தான் நான் சொல்கிறேன். வெற்றி இ ங்கிருந்து கிளம்பி காவ்யாவின் கண்டிஷன் படி அவன் மாமியார் வீட்டுக்கு தான் சென்று அடைக்கலமானான்.
மலர் வீட்டை விட்டுச் சென்ற பிறகு வீட்டு வேலை செய்வதற்கு தான் ஆள் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டார்கள் . இப்ப புரிந்ததா கதிரின் கஷ்டம்! முதல் நாள் இரண்டாம் நாள். சிவகாமிக்கு ரொம்பவும் எல்லாம் வேலை செய்ய முடியாது. ஏற்கனவே குண்டு உடம்பு. இதில் மருமகள் செய்து கொடுக்கும் விதவிதமான உணவு வேறு. உப்பு இருக்காது. சுவை இருக்காது. இருந்தாலும் வித விதமாக சமைத்து தருவாள். அது இல்லாமல் அன்னை, மகன் இருவருக்குமே சாப்பாடு கொள்ளவில்லை. இதற்கு மேல் தாங்காது. வீட்டு வேலை செய்வதற்கும் சுவையான சாப்பாட்டிற்காகவும் தன்னுடைய ஈகோவை விட்டுவிட்டு தானே மலரின் அன்னைக்கு கால் செய்தான். அப்போதுதான் மலர் அங்கே அவர்கள் வீட்டில் இல்லை என்பது மலரின் பெற்றவர்களுக்கும் தெரிந்தது அப்படி என்றால் மலர் எங்கே?
தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த மலர் கண்விழக்கவும் அடுத்த நாள் தீபக்தான் மருத்துவமனை மூலம் மலரின் பெற்றவர்களுக்கு விவரம் தெரிவித்தார் அவர்கள் வந்தார்கள் .சிறிது நேரம் கண்ணீர் வடித்தார்கள் பிறகு வேறொன்றும் இல்லை அவர்களைப் பொறுத்தவரை மலர் நரகமாக இருந்தாலும் இறந்தேப் போனாலும் அந்த வீட்டில் தான் அதாவது கதிர் வீட்டில் தான் அவள் வாழ்க்கை முடிய வேண்டும் என்பதில் ரொம்ப தீவிரமாகவே இருந்தார்கள். ஆனால் மலரோ இனி நான் எந்தவிதமான காரணத்தை கொண்டும் அங்கு செல்ல போவதில்லை என்று தீர்மானமாகவே கூறிவிட்டாள். இப்போது அவளுக்கு உயிர் பயம் வந்துவிட்டது .
அவள் சொன்ன காரணம் " எனக்கு ரொம்ப பயமா இருக்கு திவி . அவரு என்னை ரொம்ப அடிக்கறாரு. என்னால தாங்க முடியல. ப்ளீஸ் ஏதாவது ஊசி போட்டு என்னை கொன்னுடுங்க. அங்க மட்டும் அனுப்பிடாதீங்க. அவள் அழுத அழுகை பார்த்தவர்கள் அனைவரையுமே உறைய வைத்தது. சொந்த வீட்டுக்குச் செல்லவும் அவளுக்கு பயம்தான். பெற்றவர்கள், கணவன் யார் மீதும் நம்பிக்கை இல்லை.
அடுத்த சில நாட்களுக்கு அப்சர்வேஷனல் இருக்க வேண்டும் என்று அவள் மருத்துவமனையில் தான் இருந்தாள் . பெற்றவர்கள் கதிர் யாரைப் பார்த்தும் அவளுக்கு பயமாக தான் இருந்தது. அதிலும் கதிரைப் பார்த்து அவள் பயந்து அழ ஆரம்பித்து விட்டாள். திவ்ய தீபக் இருவருமே இல்லாத நேரத்தில் தான் கதிர் வந்து பார்த்தது. உதவிக் கரம் நீட்டியது மலர் அப்பத்தான். இருவரில் யாரேனும் ஒருவர் இருந்திருந்தால் கூட மலருக்கு கதிரைப் பார்த்திருக்க மாட்டாள் . அவள் தன்னுடன் வரப்போவதில்லை என்று தெரிந்து விட்டதோ இதற்கு மேல் எனக்கு என்ன வந்தது என்று முகத்தைத் திருப்பிக்கொண்டு போய்விட்டான் கதிர்.அப்பொழுதுதான் அவளுக்கு இந்த பானிக் அட்டாக் எனப்படும் பீதி நோய் வர ஆரம்பித்தது . என்ன ஆனாலும் சரி இவள் தயவு எனக்கு வேண்டாம் நான் வேறு ஒரு திருமணம் செய்து கொள்வேன் என்ற முடிவில் தான் இருந்தான் கதிர் . உனக்கு என்ன கதிர் சும்மா ராஜா வாட்டம் இருக்க. இவ இல்லனா வேற இன்னும் நூறு பொண்ணுங்க உன்னுடைய அழகுக்கு வரிசைல வந்து நிப்பாங்க என்று சொல்லி சொல்லி அம்மாவும் பெரியம்மாவும் அவனை இன்னும் அதிகமாக ஏற்றி விட்டதுதான் மிச்சம். உடன் சேர்ந்த செல்வியும் .
இதில் ஒரு பெரிய கூத்து என்ன என்றால் அப்போதுதான் கதிர் மலருக்கு விவாகரத்து நோட்டீசை அனுப்பியிருந்தான். இன்னும் விவாகரத்து வாங்குவதற்கு முன்பாகவே அவன் சென்று பெண்களை பார்க்க ஆரம்பித்து விட்டான் .ஆச்சரியம் தான் இல்லையா? அது சரி என்று மனைவி இறந்த உடன் அடுத்த நாளே இன்னொரு பெண்ணை திருமணம் செய்துக் கொள்ளும் ஆட்கள் இருக்கத்தானே செய்கிறார்கள் அப்படி என்றால் கதிருக்கு மட்டும் என்னவாம் .
இந்த மாதிரி பெண்கள் எத்தனையோ பேர் எத்தனையோ பெண்கள் பல வீடுகளிலும் கஷ்டப்பட்டு கொண்டுதான் இருக்கிறார்கள் ஆனால் இதையெல்லாம் கண் கொண்டு பார்க்காத ஆட்கள் உக்காந்து பெண்களை பற்றி மற்றும் மட்டமாக கதை எழுதுவதும் whatsapp போடுவதும் தான் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. வாட்ஸ் அப்பில் பதிவுகளை பார்வர்ட் செய்துவிட்டு மனைவி செய்த உணவை தான் உண்டு கொண்டிருக்கிறார்கள் .
மருத்துவமனையில் இருந்து மலரை நேரே தீபக் வீட்டுக்கு தான் அழைத்துச் சென்றார்கள்
முதல் சில வாரங்கள் அவளை சரிப்படுத்த மிகவும் திண்டாடினார்கள். அந்த இரவு நேரம் 9.30 ஆனாலே பயந்து பயந்து அழ ஆரம்பித்து விடுவாள். தியாவின் துணையை விடவும் தீபக்கின் அணைப்புதான் அவளுக்கு மிகவும் தேவைப்பட்டது. ஒரு மருத்துவனாக அவனின் வார்த்தைகள் தான் அவளை மனதளவில் கொஞ்சம் கொஞ்சமாக தேற வைத்தது.
முதலில் கொஞ்ச நாட்கள் தீபக்கின் பெற்றவர்கள் அமைதியாக தான் இருந்தார்கள். ஆனால் அதுவே மலர் இங்கேயேத் தங்கி விடுவாளோ என்ற பயம் அவர்களையும் யோசிக்க வைத்தது . மருமகளுக்காக யோசிக்கலாம். அவளின் தங்கைக்காக யோசிக்க வேண்டிய அவர்களுக்கு இல்லையே. அப்படித்தான் அவர்கள் நினைத்தார்கள். நான் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை. சரி என்று சப்போர்ட் செய்யவும் விரும்பவில்லை. அவரவர் ஞாயம் அவரவர்க்கு .