• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

தீஞ்சுவை மலர் -`11

STN20

New member
Staff member
11



மலருக்கு இன்னும் விவாகரத்து ஆகவில்லை,அவளுக்கென்று பெற்றவர்கள் இருக்கிறார்கள் பிறகு தாங்கள் எப்படி அவளுடைய பொறுப்பை ஏற்றுக் கொள்ள முடியும் இந்த கேள்வி தான் அவர்களின் மனதை குடைய ஆரம்பித்தது. அதையே மகனிடம் பேசியபோது அவன் இதைப் பற்றி எல்லாம் பேச வேண்டாம் மலர் இங்கேதான் இருப்பாள் என்று தீர்மானமாக கூறிவிட்டான். அப்பொழுதுதான் ஆரிவ் தன்னுடைய படிப்பை முடித்துக் கொண்டு வெளிநாட்டிலிருந்து இங்கே தீபக்கை பார்ப்பதற்கு வந்தான். தீபக்கும் கல்லூரி கால நண்பர்கள். திவ்யாவின் பெற்றவர்களின் சம்மதம் இல்லாமல் அவசர கதியில் நடந்த திருமணம் என்பதால் ஆரிவுக்கு தீபக்கின் மனைவிதான் திவ்யா என்பது இன்னும் தெரிந்து இருக்கவில்லை அது மட்டும் இல்லாமல் திவ்யாவின் குடும்பத்திற்கும் ஆரிவுக்கும் கூட நெருங்கிய சொந்தம் என்று சொல்லிவிட முடியாது. ஆரிவ் அன்னையைப் பொறுத்தவரையிலும் இவர்கள் சற்று லோ கிளாஸ் தான். அதாவது பணத்தினால். அதனால் அவள் பெரிதாக இவர்களிடம் எல்லாம் எந்த பழக்கமும் வைத்துக் கொண்டிருந்ததில்லை பிறகு தான் மலருக்கும் அவனுக்கும் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது ஒரு திருமணத்தின் மூலம். அதுவே மலர் கூட தான் இவனுக்கு நல்ல நட்பு இருந்தது. திவ்யாவிடம் அவ்வளவு எல்லாம் அவனுக்கு பழக்கம் இருந்ததில்லை. அதனால் திவ்யா வீட்டிற்கு வந்தபோது அவனுக்கு இன்ப அதிர்ச்சி தான். பிறகு மலரை பார்த்த போது தான் அவனுக்கு துன்ப அதிர்ச்சி. தான் தான் இது எல்லாவற்றுக்கும் காரணம் என்று அவனே எல்லா பொறுப்புகளையும் ஏற்றுக் கொண்டான்.

ஆரிவ் இவர்களின் சொந்தம் என்று தெரிந்தவுடன் தீப்பக்கின் பெற்றோர்கள் மடை திறந்த வெள்ளம் போல பேச ஆரம்பித்து விட்டார்கள்.

"இங்க பாருங்க தம்பி மலரு இங்க இருக்கறத பத்தி எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. எங்களுக்கு சாப்பிடும் சாப்பாட்டில் இருந்து அவளுக்கு ஒரு கைப்பிடி கொடுக்க போகிறோம். ஆனால் அவளுக்கு பெத்தவங்க இருக்காங்க. இன்னும் அவளுக்கு விவாகரத்தும் ஆகல . அது மட்டும் இல்லாம அக்காவும் தங்கச்சியும் ஒரே வீட்ல இருந்தாக்க எல்லாரும் எங்க வீட்டு பிள்ளை பத்தி தப்பா பேச ஆரம்பிச்சுடுவாங்க. நாங்க அதையும் யோசிக்கணும். அவளுக்கான பெத்தவங்க இருக்கும்போது நாங்க எப்படி இடம் கொடுக்க முடியும்? நாளைக்கு அவங்க வீட்டுக்காரர் இல்லை அவங்க அம்மா அப்பாவோ வந்து கேட்டாங நாங்க எப்படி பொறுப்பு எடுத்துக்க முடியும்? நீங்களே சொல்லுங்க. எங்களால இதுக்கு மேல முடியாது அவளை எங்கேயாவது ஹாஸ்டல்ல தங்கிக்கட்டும். அதுக்கு என்ன செலவாகுதோ அதையும் வேணும்னா நாங்க பார்த்துக்கிறோம். அதை பத்தி எங்களுக்கு பிரச்சனை இல்ல ஆனா அவ இந்த வீட்டில் இருக்கிறது இதுக்கு மேல சாத்தியப்படாது. நீங்களா பார்த்து அவங்க பேரண்ட்ஸ் கிட்டயும் பேசி என்ன முடிவு எடுக்கணுமோ முடிவு எடுங்க" தீர்மானமாக சொல்லிவிட்டார்கள். அதற்குப் பிறகு தான் ஒரு வீடு எடுத்து கூட்டி வந்து விட்டான் . மலரின் பெற்றோர் பேசிய விதம் இவனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. தீபக்குக்கு அத்தனை கோபம் அவர்கள் மீது. இருக்கற ரெண்டு பொண்ணுங்க வாழ்க்கை எப்படி போனா எங்களுக்கு என்னன்னு எப்படி இவங்களால இருக்க முடியுது? பசங்களுக்காகத்தானே பெத்தவங்க வாழறதே. எங்க கல்யாணத்துக்கு ஒரு பிரச்னை. அடுத்து மலரையும் இப்படி உயிரோட காவு கொடுத்துட்டாங்க. ப்ளடி என்று ஆங்கிலத்தில் அசிங்கமாக திட்டினான்.

============================================================



ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பது கதிருக்கு நன்றாகவே பொருந்தும்.

வெற்றி வீட்டை விட்டு சென்ற பிறகு அன்னைக்கு உடல் மோசமாகிக் கொண்டே வந்தது. அது போதாது என்று அவனுக்கு பெண் பார்க்கும் படலம், விவாகரத்து என்று அடுத்தடுத்து அவன் வாழ்வில் மாற்றங்கள் வந்துக் கொண்டே இருந்தன. இதற்கு நடுவில் செல்வியின் பிரசவம் அதற்கு செலவு அன்னையின் மருத்துவ செலவு என்று அவன் கைக்கு பணம் வந்ததும் தெரியவில்லை போனதும் தெரியவில்லை. ஒரு நிலையில் அவனுக்கு உள்ளாடை வாங்க கூடபனம் இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டு விட்டான் கதிர். அளவுக்கு அதிகமான விரக்தியுடன் இருந்த கதிருக்கு மலரைப் பார்த்தது நிச்சயம் ஒரு புத்துணர்ச்சி தான் அதுவே அவளை வேறு ஒருவர் திருமணம் செய்து கொண்டிருக்கிறார் என்ற போது அவன் அடைந்து துன்பத்திற்கும் அளவில்லை அந்த அழகான மலரை தன் கைகளால் தான் பிய்த்து எரிந்து விட்டோம் என்பது அவனுக்குப் புரிய வைத்தது என்னவோ வெற்றி தான்.

வெற்றிக்கு குழந்தைப் பிறந்து ஒரு வருடம் முடிந்து விட்டது. முதல் பிறந்தநாள். காதணி சேர்க்கும் விழா பெரிய அளவில் ஏற்பாடுகள் செய்திருந்தார்கள் . கதிரின் சொந்தங்கள் கூட A பலரும் வந்திருந்தனர். கதிருக்கும் அது ஆச்சர்யம் தான். இவர்கள் யாரும் தன்னுடைய அன்னையின் இழப்புக்கு கூட வந்து துக்கம் விசாரிக்கவில்லையே. அது சரி., உயிராக இருந்த பெரியம்மா கூட , உங்க அம்மா இல்லையேன்னு நினைக்காத. பெரியம்மா நான் இருக்கேன் என்று அழுதுக் கொண்டே சொன்னார்கள். பிறகு?

"நானே மருமக மூஞ்சிய பார்த்துகிட்டு நிக்கறேன் கதிர் . ஒரு முறை அவர்கள் வீட்டுக்கு சென்ற போது இங்கே வந்து நிறக்காதே என்று நாசூக்காக சொல்லி விட்டார்கள். இப்போது மகன்கள் மருமகள்கள் என்று குடும்பத்துடன் வந்து நிற்கிறார்கள். செல்வியும்தான். அத்தனையும் பணத்திற்கான மதிப்பு புரிந்து விட்டது கதிருக்கு .மாமனார் மாமியார் சகிதம் மலருக்கு கொடுத்த காசு மாலையை போட்டுக் கொண்டு ஜம்மென்று வந்து நிற்கிறாள் . (விவகாரத்தின் போது மலரின் நகையை அவளும் கேட்கவில்லை. இவர்களும் கொடுக்கவில்லை)

பலரும் இருக்க தான் மட்டும் அனாதையாகிப் போனது போன்ற ஒரு உணர்வு. உள்ளே இருக்கப் பிடிக்கவில்லை வெளியில் வந்து நின்றுக் கொண்டான். பலரும் வண்டியில் போய் கொண்டிருந்தார்கள். பலப் பெண்கள் கணவனுடன் அலங்காரமாக வந்து இறங்கினார்கள். அவர்களின் முகத்தில் தான் எத்தனை மகிழ்ச்சி! இது தான் என் மலரும் ஆசைபட்டிருப்பாளே! முதன் முதலாக அவனுக்கு என் மலர் என்ற எண்ணம் வந்தது.

விழா முடிந்தது அனைவரும் மண்டபத்தை காலி செய்துக் கொண்டு வெற்றியின் வீட்டுக்கு சென்றார்கள் . கதிரும் தான். விழா நடந்தது பெங்களூரில். இப்போது வெற்றி அங்கு தான் இருக்கிறான். கதிருக்கு மறு நாள் காலை தான் ரயில். ஒரு நாளாவது தம்பி அவன் குழந்தையுடன் நேரம் செலவழிக்க ஆசையாக இருந்தது கதிருக்கு .

வெற்றியின் வீடு அத்தனை சுத்தமாக இருந்தது. சுத்தமான இடம் மனதிற்கு இதம் கொடுக்கும் என்பது இப்போது கதிருக்குத் தெரியும். மூளை முடுக்கு கூட அத்தனை சுத்தமாக இருந்தது.

தன்னுடைய வீட்டை சுத்தம் செய்து செய்து மலருக்கு டேஸ்ட் அலர்ஜி வந்திருந்தது.

என்னங்க மூக்குலேர்ந்துதண்ணியா வருது. தும்மல் அதிகமா இருக்கு. ஒரு தடவை டாக்டர் கிட்ட போயிட்டு வந்திடவா?"

"டாக்டர் எல்லாம் வேணாம். அங்க போனா இந்த டெஸ்ட் அந்த டெஸ்ட்டுன்னு எக்கச்சக்கமா செலவாகும். வெண்ணீர் குடி. எல்லாம் சரியாகிடும் "

தன்னுடைய செருப்பை அந்த ஷூ ஸ்டாண்டில் வைத்தவனுக்கு அருந்த போன செருப்பை தூக்கி போட்ட மலரை அடித்த நினைவு தானே வந்தது.

"உள்ள வாங்க யாருமே அழைக்கவில்லை. வெற்றி மனைவி குழந்தைக்கு ஆரத்தி எடுத்தார்கள். உள்ளே சென்றார்கள். இவன் இடம் ஹால் தான் தெரியும். அதனால் தன்னுடைய பையை அங்கேயே வைத்துக் கொண்டு அமர்ந்து விட்டான். யாரும் அங்கே அவனிடம் பேசவில்லை. அவர்களுக்குள் பேசிக் கொண்டார்கள். இவனுக்கும் அவர்களிடம் என்ன பேச வேண்டும் என்றுத் தெரியவில்லை,.

"வெற்றி. உங்க அண்ணாவுக்கு எப்ப ரயிலு?"

"நாளைக்கு காலைல தாங்க." வெற்றியின் மாமியாரிடம் பதவிசாக சொன்னான் கதிர்.

"ஓ !அப்படியா? ராத்திரி சாப்பாட்டுக்கு என்ன செய்ய போறீங்க?

"இது என்ன இப்படியும் கேள்விகள் உண்டா? " புரிந்துக் கொண்டான் கதிர். நான் வெளில பார்த்துக்கறேன் சொன்னவனுக்கு பெரிய மனது பண்ணி காவ்யா இவனுக்கு ஹோட்டலில் ஆர்டர் செய்துக் கொடுத்துவிட்டாள் .

வந்த கிப்ட் எல்லாம் பிரித்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதன் மதிப்பே அதை கொடுத்தவர்களின் ஸ்டேட்டசு என்ன என்று காட்டி விட்டது. இதில் தான் கொடுத்த ஆசீர்வாத பணம் எங்கேயோ தொலைந்திருக்கும். மனிதர்களும் அவர்களின் ஆசையும் யாருக்கு இப்போது வேண்டும்? பெரியம்மா பசங்க கூட ஸ்ம்ப்ரதாய பேச்சு தானே. இவர்களுடன் போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும். நாங்களும் பணம் படைத்தவர்கள் தான் என்றுக் காட்டிக் கொள்ள வேண்டும். யாரையும் குறை கூறி ஒன்றும் ஆகப் போவதில்லையே. அமைதியாக இருந்தான். இரவு வந்தது . இருந்த டயர்டில் தூங்கி விட்டார்கள். இவன் ஹாலில் படுத்துக் கொள்ள நள்ளிரவில் குழந்தையின் சிணுங்கல் சத்தம் கேட்டது. சமையல் அறையில் காவியா வெற்றி குரல் கேட்டது. அப்படி என்றால் குழந்தை இங்க தனியாகவா இருக்கிறாள். ஆம் அவன் பார்த்த போது அறையில் யாரும் இல்லை.

குழந்தையை தூக்கி இவன் மெதுவாக சமாதானம் செய்தான். காவ்யாவுக்கு கேட்டதா நேரே சமையல் அறைக்கு சென்றான். அவர்கள் அப்படி ஒரு கோலத்தில் சமையல் அறையில் இருப்பார்கள் என்று இவனுக்குத் தெரியாதே.

"என்ன வேணும்?" வெற்றியின் குரல் அதிகாரமாக வந்தது.

"இல்ல குழந்தை இவன்தான் எச்சில் முழுங்கினான் "

"எங்க பிள்ளைய நாங்க பார்த்துக்க மாட்டோமா?" வெடுக்கென்று குழந்தையைப் பிடுங்கிக் கொண்டான் வெற்றி.

சமையல் அறையில் கூடி இருந்தது அவர்கள் தவறு. அதற்குத் தான் அவர்களின் பள்ளி அறை இருக்கிறதே. இவனுக்குத்தான் ஏதோ பெரிய தப்பு செய்தது போல குற்ற உணர்ச்சியாக இருந்தது.

"சே! உங்க அண்ணாவுக்கு கொஞ்சம் கூட இங்கிதமே தெரியல " காவ்யாதான் கதிரை புகழ்ந்துக் கொண்டிருந்தாள்.

மறு நாள் விடியலிலேயே கிளம்பி விட்டான். யாரிடமும் சொல்லிக் கொள்ளத் தோன்றவில்லை என்பதையும் தான் சொல்லிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ப்ரிட்ஜ் மீது நோட் எழுதி வைத்து விட்டு கிளம்பி விட்டான்.

"என்ன அண்ணா கிளம்பிட்டியா? ஊருக்கு போய் சேர்ந்துட்டியா?" தம்பி அழைப்பானா என்று அவன் மனம் ஏங்கியது. தான் குழந்தையாக வளர்த்த வெற்றி இப்போது இல்லை,. செல்வியும் தான்.

"இல்லண்ணா அவங்க எல்லாருக்கும் ஸ்டேட்டஸ் தேவைப்படுது அண்ணா. காவியா அப்பா பெரிய இடமில்லை." செல்வி தனிமையில் கூறினாள் தான். என்ன சொல்லி என்ன? அவரவர்களுக்கு அவரவர் குடும்பம். இன்று தான் மட்டும் அனாதையாக நிற்க தான் தான் காரணம் புரிந்தது.


தொடரும்..........














 
Top Bottom