தீஞ்சுவை மலர் -14
மலர் இப்போது திவி வீட்டில்தான் இருக்கிறாள். திவ்யா வீட்டுப் பெரியவர்கள் அத்தனை அழுத்தமாகப் பேசிய பிறகு மலர் அங்கே இருப்பது நல்லதல்ல என்று ஆரிவுக்கும் திவ்யாவுக்கும் தோன்றியது. ஆரிவ் நேரே சென்றது மலரின் வீட்டுக்குத்தான்.
"இங்க பாரு ஆரிவ். மலர் சின்னப் பொண்ணு. முதல்ல கொஞ்ச வருஷத்துக்கு அப்படி இப்படின்னு குறை சொல்லிக்கிட்டு தான் இருப்பா. அப்புறம் எல்லாம் போகப் போக சரியாகிடும் ."
ரொம்ப காஷுவலாகப் பேசினார் மலரின் தந்தை .
மலர் அன்னையிடம் தனிமையில் கூடப் பேசி பார்த்தான்.
"பீரியட்ஸ்னு கூட பாக்கம வீட்டை விட்டு அடிச்சு துரத்தி இருக்கான். ரெண்டு நாள் ICU ல இருந்திருக்கா. அவளை எப்படி திரும்ப அந்த வீட்டுக்கு அனுப்ப முடியும்?" இவன் கவலையோடு பேசினாலும்,
"என்ன தம்பி நீங்க பேசறீங்க ? அவ எங்க வீட்டுப் பொண்ணு. அவளுக்கு என்ன பண்ணனும்னு உங்களுக்குத் தெரியாதா? புருஷன் பொண்டாட்டிக்குள்ள சண்டை வற்ரது சகஜம். அதுக்குன்னு அந்த பிள்ளையை கொண்டு வந்து வீட்டுல வச்சுக்க முடியுமா? "
அவர் பதில் அசால்டாகத் தான் வந்தது .
இதற்கு மேல் அவர்களிடம் என்ன பேச முடியும்? மீண்டும் அந்த வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று சொன்னால் கூட போதும., மலர் தற்கொலை செய்துக் கொண்டு விடுவாள் .அல்லது இயற்கையாக கூட இதயம் நின்று விடலாம். அதைப் பற்றிக் கூட அவர்களுக்கு கவலை இல்லையே. என்னை நம்பியவளை எப்படி நான் அப்படி விட்டு விட முடியும்? மனதில் நினைத்ததை வெளிப்படையாக அவர்களிடமும் சொன்னான் .
'இப்படியே விட்டா உங்கப் பொண்ணு செத்து போய்டுவா."
"போகட்டும். புருஷன் கூட இருந்து செத்துப் போகறது தானே பொண்டாட்டிக்கு மரியாதை "
வாயடைத் து நின்றான் ஆரிவ்.
"இங்க பாருங்க தம்பி. இது எங்க குடும்ப விஷயம். இதுல நீங்க தலையிடாம இருக்கறது நல்லது ."மலரின் தந்தை மிரட்டி தான் அனுப்பினார்.
"பரவாயில்லை. நீங்க உங்களால என்ன முடியுமோ பண்ணுங்க. மலர் இனி என்னோட பொறுப்பிலதான் இருப்பா . முடிஞ்ச போய் போலீஸு கேசு கொடுங்க. என்ன பண்ணனும்னு எனக்குத் தெரியும்."
கதிருக்கு போன் போட்டு மலரின் தந்தை விஷயத்தை சொன்னார்.
வீட்டு வேளை செய்ய எப்போது வரப் போகிறாள் என்று காத்துக் கிடந்த கணவனுக்கு இது ஏமாற்றம் தான். சிவகாமிக்கு அப்படி இல்லை. அவ இல்லை என்றால் வேறு ஒரு பெண். இன்னும் நகை, வரதட்சை எல்லாம் கிடைக்கும் என்று மனதில் கனக்குப் போட்டாள் . அவள் அறியாத விஷயம் விவாகரத்து என்று வனது விட்டால் மலரின் அத்தனை நகைகளையும் அவளுக்குத் திருப்பி தர வேண்டும். விவாகரத்து வழக்கு வந்தது . மலரை கதிர் பார்த்தான். உயிர் மட்டும் கூட்டில் இருந்தது. கண்களில் உயிர்ப்பு இல்லை. கண்களை சுற்றி கரு வளையம் வந்து உடல் மெலிந்து பரிதாபமாக இருந்தாள் மலர்.
இரண்டு வருட திருமணவாழக்கை வாழ்ந்திருக்கிறோம். இவன் தன் முகத்தை இப்போதாவது இவன் பார்க்க மாட்டானா? காதல் மொழி வேண்டாம். கருணைக் கூடவா நான் அருகதை அற்றவள்? தன்னைப் பெற்றவர்கள் கூட கதிர் பக்கம் தான்.
"எங்க மாப்பிளை ரொம்ப நல்லவரு. எங்க மாப்பிள்ளைத் தங்கம் " இப்போதும் அப்படியே பேசிக் கொண்டிருக்கும் பெற்றவர்களை என்ன சொல்வது? மகள் இருந்தால் தானே மருமகன்? ஆச்சர்யம் இல்லை மலருக்கு. விரக்தி தான்.
ஒரே ஒரு வாய்ப்பாக அவனிடம் அவள் கேட்டது.
"ஒரு நிமிஷம் கூட நீங்க என்னை மிஸ் பண்ணலையா? நீங்க என்னை காதலிக்கவே இல்லையா?"
அதற்குத் தான் அவன் அலட்சியமாக இல்லை என்று முகத்தில் அடித்தது போல பதில் சொன்னான்.
'இவன் தான் என் கணவன் என்று தெரிந்த உடனேயே நான் இவனை விரும்ப ஆரம்பித்து விட்டேனே. இவனுக்கு ஏன் மீது விருப்பம் இல்லை?'
சுய பச்சாதாபமும் இயலாமையும் சேர்ந்து அவளைப் படுத்தி எடுத்தது . கெட்டதில் நல்லதாக அவளுக்கு குழந்தை இல்லை. அதுவும் இருந்திருந்தால் குழந்தைக்காக என்று அவள் உயிருடன் சமாதி ஆகி இருப்பாள் . அதற்கு மலடி என்ற பெயர் கூட ஏற்றுக் கொள்ளலாம். இவளை பழி சொல்பவர்கள் யாரும் இவள் வாழ்க்கையை வாழப் போவதில்லை.
கணவன் வயிறு நிரம்பினால் எளிதாக மனதில் அமரலாம் என்று சொன்ன கிழவிகள் கையில் கிடைத்தால் மலருக்கு இருந்த ஆத்திரத்தில் துடைப்பக்கட்டை பிய்ந்து இருக்கும். செல்வி முகத்தை வெடுக்கென்று திருப்பிக் கொள்ள சிவகாமி பார்வவையால் எரித்துக் கொண்டிருந்தாள் மலரை .
"என்ன மலரு ஆம்பிளை சுகத்துக்கு ஆளு கிடைச்சுட்டான் போல "
நக்கலாக ஆரிவை ஒரு பார்வை பார்த்துக் கேட்டாள் சிவகாமி .
முன்பிருந்த மலர் என்றால் பயந்திருப்பாள் . எனக்கு நீ வேண்டாம் என்று கதிர் சொன்னபோது இவளுக்குள் ஏதோ ஒன்று செத்து விட்டதாகத் தான்அவள் நினைத்தாள். இப்போது தான் அவளுக்குள் இருந்த ஏதோ ஒன்று உயிர் பெற்று வந்தது. அதற்குப் பெயர் தைரியம் .
ஆரிவ் பதில் பேசவில்லை. அவன் கையை அழுத்திப் பிடித்துக் கொண்ட மலர் அவன் முகம் பார்த்தாள். அவன் கண் கூட அசைக்கவில்லை. ஆனால் "இப்ப இதை எப்படி எதிர்கொள்ளத் போகிறாய்?" என்ற கேள்வி அவன் கண்களில் இருந்தது. உனக்காக நான் இருக்கிறேன் என்று அவனின் கை அழுத்தம் சொல்ல, இவள் தான் வார்த்தையால் செருப்படி கொடுத்தால்.
"ஏன் உங்க பிள்ளை ஆம்பிளை இல்லனு உங்களுக்கு தெரிஞ்சு போச்சா? அதுனால யாரையாவது நீங்களே ஏற்பாடு செய்து தர ஐடியால இருந்தீங்களோ?"
"ஏய் பொருக்கி ராஸ்கல் " என்று சிவகாமி அடிக்க கை ஓங்க ஆரிவ் தடுத்து விட்டான். அதற்குள் அவர்கள் வக்கீல் வந்து அம்மா அம்மா இது கோர்ட்டு. இங்க இப்படி எல்லாம் பிரச்சனை பண்ணைக் கூடாது என்று மிரட்டி அழைத்துச் சென்று விட்டார்.
மலரின் தந்தை அன்னை என்று எல்லாரும் வந்து மாப்பிள்ளைக்காக வக்காலத்து வாங்கினார்கள். எனக்கு விவாகரத்து வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தாள் மலர். அப்போதும் நான் விவாகரத்து தரமாட்டேன் என்று அடாவடி செய்த கதிருக்கு, அவள் வக்கீல் தான் பேசினார்.
"இங்க பாருங்க. நீங்க விவாகரத்துக்கு சம்மதிச்சா அவங்க நகை கூட வேண்டான்னு சொல்லிட்டாங்க . அதுவே நீங்க வேற ஏதாவது பிரச்னை பண்ணா நீங்க அவங்களை அடிச்சு கொடுமை செய்த விஷயம் எல்லாம் வெளில வரும் பார்த்துக்கோங்க."
மறு பேச்சு பேசாமலே விவாகரத்துக்கு சம்மதித்து விட்டான் கதிர்.
அவள் எப்போது வேண்டுமானாலும் எந்த முடிவும் எடுத்துவிடுவாள் என்று பயந்துக் கொண்டிருந்தான் ஆரிவ். ஆரிவ், தீபக் இருவரும் அவளை கண்ணுக்குள் வைத்துப் பார்த்துக் கொண்டார்கள் . அவளுக்கு இருந்த மன அழுத்தம் அத்தனை வீரியமாக இருந்தது.
"தீபக் எதுக்கு தீபக்? எதுக்கு இவ்ளோ செய்யறீங்க ? நான் இதுக்கு எல்லாம் உங்களுக்கு எப்படி கைம்மாறு செய்யப் போறேன் " கண்களில் கண்ணீர் குளம் காட்டி நிற்க திவ்யாவின் குரல் தழுதழுத்தது .
இயல்பிலேயே தீபக் கேரிங் தான் என்றாலும் தன்னுடைய தங்கைக்காக அவன் இவ்வளவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. எத்தனையோ சீர் செய்து திருமணம் செய்துக் கொடுக்கும் இடத்தில் கூட யாரும் இத்தனை பாசம் காட்ட மாட்டர்கள் . அவன் மீது விடாப்பிடியாக காதல் கொண்டதற்கு திவ்யாவுக்கு கர்வம் தான்.
நெஞ்சில் சாய்ந்து அழுத மனைவிக்கு நெற்றியில் முத்தமிட்டாவன்,
"எனக்கு எதுவும் சும்மா செய்ய வேணாம். ரெட்டை புள்ளையா பெத்து கொடுத்துடு' என்றான் விளையாட்டாக.
இப்போதும் சமாதானம் ஆகாத மனைவியை தலைக் கோதி,
"எனக்கு ஒரு தங்கச்சி இருந்தா அப்படி விட்டுடுவேனா ? மலர் உனக்கு தங்கச்சினா எங்கும் தங்கச்சிதானே . நீ அவ பிறந்த போதிலிருந்து நீ பார்த்துருப்ப. நான் இப்ப கொஞ்ச நாளா பாக்கறேன். அதுக்குன்னு பாசம் இல்லாம போய்டுமா? அன்பு டீ! அள்ள அள்ளக் குறையாது. இன்னும் இன்னும் பெருகும்.
"மலருக்கு அப்பாவும் புருஷனும் தான் சரியில்லை. ஆனா அதுக்கு பதில் கடவுள் இவ்ளோ பாசமா இருக்கற உங்களை கொடுத்திருக்காரு." கணவனின் கழுத்தில் முகம் புதைத்துக் கொண்டாள் மனைவி.
"கவலைப் படாத திவி . நீ வேணுன்னா பாரேன். கடவுள் அவளுக்கு ரொம்ப நல்ல கணவனைக் கொடுப்பாரு. நம்ம மலரை தென்றல் போல வருடற கணவன் கிடைப்பாரு."
"ஆமாங்க !அவளுக்கு நாமளே ஒரு நல்ல மாப்பிள்ளையா பார்த்து கல்யாணம் செய்து வைக்கணும் "
"அதுக்கென்ன.செய்திடலாம். ஆனா அதுக்கு முன்னாடி அவள் இயல்பா மாறனும்."
"ஆங்க அவளை பழைய மாதிரி கொண்டு வந்துட்டா போதும். அவ கலகலப்பான பொண்ணுதாங்க. இப்பதான் இப்படி ஆகிட்டா. "
ம்! கொட்டிக் கொண்டு அமைதியாக மனைவியின் தலையில் கன்னம் வைத்து அழுத்திக் கொண்டிருந்தான் தீபக்.
"அந்த குடும்பத்தில் இருந்து என்னை கைப்பற்றின கடவுள் இப்படி அநியாயமா அவளை அந்த பாழுங்கிணத்துல தள்ளி இருக்க வேண்டாம்." அவள்கண்களில் நீர்க் கொட்டியது.
"கவலை படாத திவி. அதான் கெட்டதிலும் நல்லதா அவ அந்த வீட்டில் இருந்து வெளில வந்துட்டால்ல. ஆரிவ் அவளை நார்மலா மாத்திடுவான்."
"ஆமா. ஆரிவ் மலர் ரெண்டு பேருமே ரொம்ப ஜாலி டைப். ரொம்ப க்ளோஸ் வேற. கொஞ்ச நாள் பழக்கம் தான். இருந்தாலும் ரொம்ப நெருங்கின நண்பர்கள் ஆகிட்டாங்க. உறவு முறைன்னு இல்லாமல் அவங்க ரெண்டு பேருக்குமே ஏதோ ஒரு ஆழ்ந்த நட்பு. ஆரிவ் மன நல மருத்துவர் வேற. அவருக்கு மலரை எப்படி ஹாண்டில் செய்யணும்னு நல்லவேத் தெரியும் ."
அவர்கள் இருவருமே பேசிக் கொண்டபடி விவாகரத்துக்குப் பிறகு மலர் ஓரளவு நார்மல் ஆகிவிட்டாள் என்றுதான் கூற வேண்டும். இருப்பினும் கண்களில் மட்டும் எதையோ இழந்தது போன்ற தோற்றம் அறிவுக்கு கண்களில் பட்டுக் கொண்டே இருந்தது. பிறகு தான் மலர் இந்த டான்ஸ் குரூப்பில் வந்து சேர்ந்தது.
தொலைந்த சிரிப்பு அவளுக்கு மீண்டிருந்தது. அவள் வயதை ஒத்த நட்புகள் எதையுமே ஜாலியாக எடுத்துக்கொள்ள வைக்கும் தோழர்கள் தோழிகள் எந்நேரமும் குறைவில்லாத சிரிப்பு, ஹே ஹே என்று எந்த பாடலுக்கும் கத்தும் இயல்பு சங்கடங்கள் என்றால் கூல் சந்தோஷமாக இருந்தால் ஓ என்ற ஆர்ப்பாட்டங்கள் இவைதான் அவளை தன்னுடைய பழைய இயல்புக்கு கொண்டு வந்த விஷயங்கள். இருந்தாலும் அவர்களைப் போல இல்லாமல் இவளுக்கு என்று ஒரு முதிர்ச்சியும் ஒளிந்திருந்தது. அதற்குப் பெயர் நிர்வாகத் திறமை. முக்கியமான நேரங்களில் முக்கியமான முடிவுகள் எடுக்கும்போது மட்டும் தானே வெளிப்படும். மற்ற நேரம் எனக்கு இங்க என்ன வேலையென்று அந்த மன முதிர்ச்சி ஓடி விடும்.
இங்கே திவ்யா வீட்டில் அவள் வீட்டுப் பெரியவர்கள் எங்கோ ஒரு இறப்பிற்கு சென்றிருந்தார்கள். வருவதற்கு ஒரு வாரம் ஆகும் என்று சென்றாலும், இதோ அதோ என்று பத்து நாட்கள் ஆகி விட்டன . திவி இப்போது அடுத்தது கருவுற்றிருக்கிறாள் . முதல் குழந்தை பெரிய அடம் வாலு என்று சொல்ல முடியாது என்றாலும், யாரும் கண்டு பிடிக்க முடியாத படி அமைதியாக ஏதாவது சேட்டைகள் செய்துக் கொண்டிருப்பான். போலீஸ் மூளையுடன் செயல் படும் திவியால் மட்டும்தான் அவன் செய்வது எல்லாம் கண்டறிய முடியும் .
பொம்மையொயை வைத்துக் கொண்டு விளையாடுவது போல இருக்கும்.
"டேய் இந்த டைனோசர் வாலு எங்கே டா ?
"அம்மா அதுக்கு வாலு ரொம்ப கஷ்டமா இருந்துச்சாம் அதான் அது வேண்டாம்ன்னு கட் பண்ணிக்கிச்சு."
மழலையில் சாக்கு சொல்லும் மகனைதிட்ட முடியாமல் கடினமாய் திட்டிக் கொண்டிருக்கிறாள். ஓவர் செல்லம் கூடாது. நானாவது கொஞ்சம் கண்டிப்பு காட்ட வேண்டும் என்ற கட்டாயம் தான் .
"அது எப்படி டா தானே வாலை கட் பண்ணும்?"
இடுப்பில் கை வைத்து அம்மா மிரட்டினாலும் அசருபவனா அவன்.
"பல்லி தானே வாலை கட் பண்ணிகுச்சுல்ல அதே மாதிரிதான்.
"யாருடா சொன்னா ?"
"தாத்தா "
சொல்லிக் கொண்டிருந்தவன் கையில் இருந்த ரயிலுக்கு சில பல சக்கரங்கள் காணாமல் போய் இருந்தன.
"ஏன் கா பிள்ளை ஏதாவது சொல்லிகிட்டே இருக்க. அக்கா மகனுடன் வந்து அமர்ந்து அவளும் சக்கரம் இல்லாத ரயிலை ஓட்டி விளையாடிக் கொண்டிருந்தாள் .
"அது சரி. இப்ப இவன் சின்ன பிள்ளை அதுனால் நம்மால சமாளிக்க முடியுது. பெரியவன் ஆக ஆக நான் எப்படித்தான் சமாளிக்கப் போறேனோ. இவன் இப்ப ஒன்னு. அடுத்ததும் வந்த ஒடனே நன் ரெண்டுத்த வச்சு சமாளிக்கனும் "
"அதெல்லாம் பார்த்துக்கலாம். ரொம்ப ஓவரா கவலை படாத. அதான் மாமா இருக்காரே "
"உங்க மாமாக்கு பிள்ளைக்கு எப்படி டயப்பர் மாத்தனுன்னு கூட தெரியாது" என்று தங்கையிடம் புகார் சொல்லிக் கொண்டிருக்க அங்கே வந்த தீபக்கோ,
"பிள்ளைக்கு டயப்பர் மாத்த தான் தெரியாது.பட் பிள்ளை எப்படி கொடுக்கனுன்னு தெரியும். காதோடு ரகசியம் பேசி காதை கடித்தான் .
"ஏங்க என்ன இது மலரும் பிள்ளையும் இங்க தான் இருக்காங்க. "
மனைவி கடிந்துக் கொள்ள,
"மலர் நீ இங்க ஏதாவது பார்த்தியா ?"
"இல்ல மாமா நான் எதுவும் பாக்கல. ஆனா ஏதோ காதுல விழுந்துச்சு. ஆனா நான் காதை மூடிக்கிட்டேன் "