• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

தீஞ்சுவை மலர்-15

STN20

Member
Staff member
.


தீஞ்சுவை மலர் -15


"மலர் நீ இங்க ஏதாவது பார்த்தியா ?"

"இல்ல மாமா நான் எதுவும் பாக்கல. ஆனா ஏதோ காதுல விழுந்துச்சு. ஆனா நான் காதை மூடிக்கிட்டேன் "

அப்பாவியாக இப்போது காதை மூடிக் கொண்டாள் மலர். தங்கையின் முகம் பார்க்க முடியாமல் அவசரமாக தன் அறைக்கு ஓடியவளை பின்னோடு வந்து கட்டிக் கொண்டான் தீபக்.

மருத்துவமனையில் இருந்து ஏதோ ஒரு அவசர அழைப்பு வரவும் கட்டிக் கொண்ட வேகத்தில் ஒரு அவசர முத்தம் கொடுத்து கிளம்பி விட்டான் அவன்.

"மலர் எனக்கு லன்ச் ஏதாவது செய்திடு. லேட்டானாலும் வீட்டுலதான் சாப்பிடுவேன்." சட்டை பட்டனை போட்டுக் கொண்டே அவசரமாக ஓடினான் அவன்.

அக்காவுடன் நாட்கள் செலவிட அவள் மகன் இவனின் கவலைகள் எல்லாவற்றையும் சுத்தமாக விரட்டி விட்டான்.

மாமனார் மாமியார் வந்தவுடன் இவள் கிளம்பி விட்டாள் .

"அவங்க வந்தா என்ன? ஆரிவ் வர வரைக்கும் நீ இங்கேயே இரேன். நீ எதுக்கு அங்க தனியா இருக்கனும் ?" எத்தனையோ முறை தீபக்கும் திவியும் சொல்லி பார்த்து விட்டார்கள்.

"ப்ளீஸ் கா. நான் இங்க இருக்கறது சரியா இருக்காது." பிடிவாதமாக மறுத்துவிட்டாள் மலர். இப்போது அவள் வீட்டில் தனியாகத்தான் இருக்கிறாள். எங்கே எப்படி வசதியோடு இருந்தாலும் சொந்த வீட்டுக்கு வந்து கட்டிலில் கை கால்களை விரித்து படுப்பது தனி சுகம் தான்.

"எப்படி இருக்க? என்ன பண்ணற?" திவி, தீபக் ஆரிவ் மாற்றி மாற்றி கால் செய்துக் கொண்டிருந்தார்கள். அவ்வளவு சொல்லியும் அவள் இங்கே தனியே வந்து இருப்பது தீபக்குக்கு கோபம் தான் . இருந்தாலும் தான் அங்கே இருந்து யாரையும் சங்கடப் படுத்திவிடக் கூடாது என்று தான் அவள் இங்கு வந்தது. தினமும் தீனா வந்து பார்த்து விட்டுச் செல்வான் .

இன்று எதிர் வீட்டு இரும்பு கேட்டில் தொங்கி கொண்டிருந்த பூட்டு கதிரிடம் பை சொல்லாமலேயே எங்கோ சென்றிருந்தது. வெளியில் சென்று விட்டு வந்தவன்.' ஓ! ஆளுங்க வந்துட்டாங்க போல' என்று நினைத்துக் கொண்டு உள்ளேச் சென்றான்.

அங்கே ஒரு அண்ணன் தங்கச்சி இருப்பதாக வாட்ச் மேன் சொன்னாரே . யாராக இருக்கும் மனதில் யோசனை ஓடிக் கொண்டிருந்தது.

மறு நாள் காலை இன்னும் விடியவில்லை. இவனுக்கு விடியலுக்கு முன்பே எழுந்து பழக்கமாகி விட்டது. சோம்பல்முறித்து முகம் கழுவிக் கொண்டு வந்தான். இப்போதே ஒரு காபி வேண்டும் போல இருந்தது. கதவைத் திறந்தவனுக்கு எதிர் வீட்டில் இருந்து பில்டர் காபி மனம் வந்தது.

உடன் சேர்ந்த மலரின் நினைவும் . 'ச! இவ ஒருத்தி எப்ப பார்த்தாலும் கண்ணு முன்னாடி வந்து நிக்கறா.' கண்ணை கசக்கிக் கொண்டு பார்த்தாலும் அங்கே கோலம் போட்டு சின்னதாக ஒரு காவி கோடு இழுத்தது அவள் தான். 'அப்படின்னா இன்னிக்கு வெள்ளிக் கிழமையா?'

மனதில் தானே எண்ணம் ஓடியது. கதவைத் திறந்து வைத்தவள் கதவுக்கு நேரே அழகான மஹாலஷ்மி படம். தஞ்சாவூர் பெயின்டிங் . இவனின் நினைவுகளைமறக்க எடுத்த முயற்சியில் இப்போது இவர்கள் வீட்டில் படத்தில் தாயார் அழகாக இருக்கிறாள். விழி விரித்துப் பார்த்தவனுக்கு ,"என்ன கதிர் எப்படி இருக்க" என்று அவனிடம் அந்த படத்தில் இருந்த தாயார் சற்று காட்டமாக கேட்டதுப் போல இருந்தது.

கோலத்தை முடித்த மலரோ இவனைப் பார்த்தாளோ இல்லையோ கதவை மூடிக் கொண்டு சென்று விட்டாள் .

உள்ளே வந்தவளுக்கு படபடப்பாக இருந்தது.

"இப்ப எதுக்கு இவரு இங்க வந்திருக்காரு. பாட்டி வீட்டுக்கு இப்ப இவருதான் புதுசா குடி வந்துருக்காரா?' ஆரிவுக்கு அழைத்தாள். அவன் அங்கே இல்லை. அவன் அன்னை தான் கால் அட்டண்ட் செய்தவர் , "அவனே இப்ப தான் என்னை பாக்க வந்துருக்கான். பொறுக்கலையா உனக்கு. அவனை உன்னோட துப்பட்டாலேர்ந்து கொஞ்சம் அவிழ்த்து விடு " கடுமையான குரல்.

அமைதியாக முகம் கருக்க போனை வைத்து விட்டாள் . ஆரிவ் தானே கால் செய்த போது இது பற்றி எதுவும் சொல்லவில்லை. இது பற்றி சொன்னால் நிச்சயம் அவன் பயந்து விடுவான். உடனே இங்கே வந்தாலும் வந்து விடுவான். தீபக்கிடம் சொல்வதா வேண்டாமா? வேண்டாம் என்னால் யாருக்கும் எந்த கஷ்டமும் வேண்டாம். அமைதியாக இருந்துவிட்டாள் .

அடுத்து என்ன என்று யோசிக்க முடியாதவள் சிறிது நேரம் அப்படியே அமர்ந்துக் கொண்டிருந்தாள் .

பால் குக்கர் விசில் சத்தம் கொடுக்கவும். அமைதியாக காபி கலந்து குடித்தாள் .

தீனா அழைத்தான். "அக்கா எப்ப வருவீங்க?"

"இதோ கொஞ்ச நேரத்துல வந்துடறேன் "

எது பத்தியும் இப்ப யோசிக்க வேணாம் .அமைதியாக இருந்த பிரட்டில் சாண்ட்விஜ் செய்து சாப்பிட்டாள். கிளம்பி விட்டாள் .

கதிரும் குளித்து விட்டு வெளியில் எங்கோ கிளம்பியவன் கீழே வந்தபோது அமைதியாக மலர் எங்கோ நடந்து சென்றாள். அவளிடம் இரு சக்கர வாகனம் உண்டு. இருந்தாலும்," நான் இல்லாத நேரத்தில் நீ ஆட்டோல போய்டு" என்று ஆரிவ் சொல்லியிருந்தான். அதனால் ஆட்டோவுக்காக காத்துக் கொண்டிருந்தாள்.

ஆட்டோ எதுவும் வரும் வழியாகத் தெரியவில்லை. அமைதியாக மெயின் ரோட்டுக்கு வந்துக் கொண்டிருந்தவளிடம் கதிர் தான், வந்து பேசினான்.

"மலர் எங்க போகணும். நான் கொண்டு போய் விடவா?"

எதுவும் பேசாதவள் அமைதியாக அங்கே இருந்த ஸ்டாண்டில் ஆட்டோ பேசிக் கொண்டு சென்று விட்டாள் . அந்த இடம் விட்டு அவள் சென்றாலும் அவள் எங்கே செல்கிறாள் என்று பின்னோடு வந்து பார்த்தான் கதிர்.

ஆட்டோவிலிருந்து அவள் இறங்கி உள்ளே செல்வதைப் பார்த்து விட்டு இவனும் திரும்பி விட்டான்.

அன்று கதிரின் நினைவுக்கு வரமுடியாதபடி வேலைகள் சற்று அதிகமாகவே இருந்தன.

"அக்கா! ஒரு பதினோரு மணி போல நம்மள சார் அங்க வரசொன்னாரு. புதுசா இடம் பார்த்துருக்காராம் " தீனா சொன்னான்.

அவளும் தீனாவும் சென்றார்கள். முதலாளியும் அங்கே காத்துக் கொண்டிருக்க இவர்களும் அங்கே வந்து சேர்ந்தார்கள்.

"சார் இடம் பெருசா இருக்கு. ஆனா இடம் ரீச் பண்ணறது கொஞ்சம் கஷ்டமா இருக்கும்போல "

மலர் சொன்னாலும் முதலாளிக்கு மனதில் அந்த இடத்திற்கு வேண்டாம் என்று சொல்ல இஷ்டமில்லை.

கலந்து பேசிவிட்டு சொல்கிறேன் என்று சொல்லி விட்டு வந்தார்கள்.

அந்த இடம் வேண்டாம் என்றால் வேறு எங்கு? நிறைய விளம்பரங்களைப் பார்ப்பது பிறகு போட்டோ பார்க்க நேரில் செல்ல என்று அடுத்த ஒரு வாரம் நேரம் போனதே தெரியவில்லை. எப்படியோ இதில் ஒரு இடத்தை தேடி பிடித்துவிட்டார்கள் .

இதற்கு நடுவில் கதிர் எந்த தொல்லையும் செய்ய மாட்டான் என்று மலர் நம்பிக் கொண்டிருக்க, இவள் வீட்டில் இருக்கும் நேரங்களில் அவனின் தொல்லை வர ஆரம்பித்தது. தொல்லை என்று சொல்வதை விடவும் சிறு பிள்ளை போல தான் இருந்ததுஅவனின் நடவடிக்கைகள் .

காலையில் பெல் அடித்தான்.

"மலர் இங்க பால் எங்க கிடைக்கும்?" அமைதியாக கண்ற்றி டிலைட் ஆப்பை காட்டினாள்.

சற்று நேரம் கழித்து "மலர் ஒரு டீ கிடைக்குமா ?"

இப்போது டி பாய் ஆப்பை காட்டினாள் .

சற்று நேரம் கழித்து மீண்டும்..

"இந்த சட்டை கசங்கி இருக்கு அயர்ன் பாக்ஸ் கிடைக்குமா?" வெறுப்புடன் அயர்ன் பாக் கொடுத்தாள். அன்று அவன் மீண்டும் வந்து பெல் அடிக்கப் போன போது பெரிய பூட்டு அவனுக்கு ஹாய் சொன்னது.

அடுத்த நாள் இன்னிக்கு என்ன தொல்லை பண்ண போறாரோ மனதில் நினைத்துக் கொண்டே கோலம் போட்டுக் கொண்டிருந்தவள் கதவை திறந்து வைத்து கொண்டு அமைதியாக கைக் கட்டி நின்று பார்த்துக் கொண்டிருந்தான். தன் வீட்டில் பால்கனியில் அமர்ந்து இவள் காபி குடித்தபோது எதேச்சையாக எதிர் வீட்டுப்பக்கம் கண்கள் போக அவனும் அப்போதுதான் டீ கப்புடனே வந்து அமர்ந்தான். இவள் முகம் பார்த்தவன் சியர்ஸ் காட்டினான். அமைதியாக இவள் உள்ளே சென்று விட்டாள் . இன்னும் என்ன பண்ண போறாரோ .'அலுத்துக் கொண்டவள் வழக்கத்தை விடவும் விரைவாகவே கிளம்பி விட்டாள். அவனும் தான்.

இவள் ஜிம்மில் இறங்கி கொள்ளவும் அவனும் வழக்கம்போல திரும்ப சென்று விட்டான்.

மாலையில் அயன் பாக்ஸ் திருப்பி கொடுக்க வந்தான்.

அமைதியாக வாங்கிக் கொண்டாள் .

அடுத்த நாள் காலை ஜிம், வீடு, கல்லூரி மாலையில் ஜிம் என்று இவள் வாழ்க்கை எப்போதும் போல சென்றுக் கொண்டிருக்க இவனுக்குத் தான் அவளை பார்க்க கஷ்டமாக இருந்தது.

அவனின் நினைவுகளை விரட்ட அவளுக்கு இத்தனை ஓட்டம் தேவையாக இருந்தது. ஆனால் இப்போது அவள் எங்கே ஓடினாலும் எந்த பிரயோஜனமும் இல்லை.

ஒரு நாள் மாலையில் இவள் நடன வகுப்பில் ஆடிக் கொண்டிருக்க இவன் அசந்து போய் நின்றிருந்தான். காவ்யா மிகவும் திறமையானவள் என்று தான் இவர்கள் வீட்டில் அனைவருமே நினைத்துக் கொண்டிருந்தார்கள். இப்போது மனைவியின் நடனத் திறமை அவளை மற்றவர்கள் கைத் தட்டி ரசிப்பது எல்லாமே அவனுக்கு பிடித்தது.

"கண்ணால் கண்ணால் சொன்னால் சுகம் கிட்டாது" என்று ஏதோ பாடல் வரிகள் ஓட இவள் அத்தனை அழகாக ஆடிக் கொண்டிருந்தாள். எதிர்பாராமல் பயிற்சியாளரும் வந்து இவள் கூட நடனம் ஆட உடன் இருந்தவர்கள் எல்லாம் சேர்ந்து இன்னும் ஜோராக கை தட்டிக் கொண்டிருந்தார்கள். மனைவியுடன் வேறு ஒரு ஆண் வந்து ஆடவும் அடுத்து என்ன நடக்குமோ என்று பயந்துக் கொண்டே இவன் பார்த்துக் கொண்டிருந்தான். அவர்கள் இருவருமே நெருங்கி ஆடிய மாதிரி இருந்தாலும் விரல் தீண்டல் கூட இல்லை. அமைதியாக இவன் கை கட்டிப் பார்த்துக் கொண்டிருக்க, இவள் அனைவருக்கும் டாடா காட்டி விட்டு ஜிம்முக்கு வந்து விட்டாள் .

கண் மூடி முகம் துடைத்து அமர்ந்தவள் கண் எதிரில் இருந்தது அவன் தான்.

"என்ன வேண்டும்?" அவள் பார்வை தான் கேட்டது.

"ஜிம்முல சேரனும் " அவனின் பழைய திமிர் இல்லை .

அவனை ஒரு முறை ஏற இறங்கப் பார்த்தாள் .

"உன்னை பாலோ பண்ண இல்ல. உண்மையாவே சேரனும்"அப்பாவி போல சொன்னவனை நம்புவதா வேண்டாமா? எப்படி இருந்தாலும் வந்து சேர வேண்டும் என்று சொல்பவனை நான் தடுக்க கூடாது. இவனிடம் எதுவும் சொல்லாதவள் அமைதியாக உள்ளே சென்று தீனாவை அழைத்து கதிருக்கு வேண்டியதை செய்ய சொன்னாள். முதலில் ஒரே ஒரு மாதம் சேர்ந்துக் கொள்கிறேன். என்று பணம் கட்டினான்.





தொடரும்....
 
Last edited:

ஷமீம்

Well-known member
டைவர்ஸுக்கு பிறகு எக்ஸை காதலிக்க ஆரம்பிக்கிறான்.. ரிவர்ஸ்ல செய்றான், நல்லது நடந்தால் சரி
 

Gowri Karthikeyan

Well-known member
இப்ப புத்தி வந்து என்ன பண்ண😏😏😏😏😏
அவ காயம் எல்லாம் ஆறட்டும் .....அப்பறம் பார்ப்போம்
 
Top Bottom