• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

தீஞ்சுவை மலர் -17

STN20

New member
Staff member




தீஞ்சுவை மலர் -17

அன்று விடியலில் தன் வீட்டுக்குச் சென்ற கதிர் நாள் முழுவதுமே அவளைத் தொந்தரவு செய்யவில்லை . மாறாக அவளிடம் பேச வேண்டியது எல்லாம் எப்படி பேசுவது என்று சிந்தைனையிலேயே இருந்தான்.

ஆனால் அதற்கு அடுத்த நாள் காலையில் இவள் பெல் அடிக்கவும் வந்து கதவைத் திறந்தது ஆரிவ் தான் "

ஊரில் இருந்து வந்தவனுக்கு இங்கே இருக்கும் விஷயம் பற்றி அப்போது தான் மலர் சொல்லிக் கொண்டிருந்தாள் . அதற்காகத்தான் காலிங் பெல் அடித்ததும் திறக்கப் போனவளை தடுத்து ஆரிவ் வந்து கதவு திறந்தான்.

டீ ஷர்ட் லுங்கியில் இருந்தவனை ஒரு முறை ஏற இறங்கப் பார்த்தான் ஆரிவ்.

"என்ன வேண்டும் ? "

"ஓ நீங்க வந்துடீங்களா ? மலர்.. மலரை கூப்பிடுங்க "

"மலர் எதுக்கு ? ஏற்கனவே நீங்க அவளுக்கு பண்ண நல்லது எல்லாம் போதாதா ? இங்க பாருங்க கதிர். ஏற்கனவே நான் உங்ககிட்ட சொல்லிட்டேன். திரும்ப திரும்ப வந்து மலர் வாழ்க்கைல தலையிடாதீங்க. அது உங்களுக்கும் நல்லது. அவளுக்கும் நல்லது. அதையும் மீறி நீங்க இப்படியே செய்துகிட்டு இருந்தா நான் வேற மாதிரி டீல் பண்ண வேண்டியிருக்கும்."

"ஆரிவ்! ஏற்கனவே நீங்க எங்கிட்ட இதையே வேற விதமா சொன்னபோது நானும் இனி அவள் வாழ்க்கைல தலையிட வேண்டாம்னு ஒதுங்கித் தான் போனேன். ஆனா என்ன பண்ணறது ?அப்படி எல்லாம் இருக்க முடியாதுன்னு விதி காட்டிகிட்டே இருக்கு. அவளைத் திரும்ப வேற ஒரு மருத்துவமனையில சந்திச்சேன். இதோ உங்க வீட்டுக்கு எதிர் வீட்டுலையே குடி வந்து இருக்கேன். காலைல எழுந்து அவள் கோலம் போடறதுலேர்ந்து ராத்திரி வரைக்கும் அவளை பார்த்துகிட்டே இருக்கேன். இது எல்லாமே தானாவேதான் நடக்குது. எல்லாத்தையும் மீறி ஒரு உண்மைய சொல்லனும்னா இப்ப அவளை நான் காதலிக்க ஆரம்பிச்சுட்டேன். அவ என் கூட இருந்தப்ப சொல்லிக் கொடுத்த விஷயங்களை நான் எடுத்துக்கலை. ஆனா அதே விஷயங்களை வாழக்கை வேற வேற விதங்களில் எனக்கு சொல்லிக் கொடுத்திருக்கு. எனக்கு அவ வேணும். இன்னொரு முறை அவள நான் என் வாழ்க்கைல மிஸ் பண்ணவே மாட்டேன்."

"அதுக்கு அவ சம்மதிப்பாளா? இல்ல நான் விட்டுடுவேனா?"

பாண்ட் பாக்கெட்டிற்குள் கைகளை நுழைத்துக் கொண்டவன் அசால்ட்டாக கேட்டாலும்,

பதில் சொன்னவன் கண்களில் ஒரு தீவிரம்.

"ஆரிவ் அவ என் பொண்டாட்டி .அவளை எப்படி சம்மதிக்க வைக்கனுன்னு எனக்குத் தெரியும். உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? நேற்று முன் தினம் ராத்திரி நானும் அவளும் சேர்ந்து தான் தூங்கினோம். நாங்க ரெண்டு பேரும் சந்தித்ததில் இருந்து அவ எங்கிட்ட ஒரு வார்த்தை கூட ஹார்ஷா பேச கூட இல்ல. இது அவள் வாழ்க்கை . அவ முடிவெடுக்கட்டும். நீங்க இதுல தலையிடவேண்டிய அவசியம் இல்லை."

"ஆரிவ் காபி"என்று மலர் உள்ளே அழைக்கவும் ,

இவனை முறைத்து விட்டு உள்ளே சென்று விட்டான் ஆரிவ்.

இவனும் அசால்ட்டாக ஒரு பார்வை பார்த்து விட்டு நகர்ந்துக் கொண்டான். கதிர் ஆரிவ்விடம் பேசியது எல்லாம் முன்பே யோசித்தது தான். ஏதோ கதிரிடம் பேசிவிட்டானேத் தவிர மலரை மீண்டும் தன்னிடம் மீட்டுக் கொண்டு வருவது சாதாரண விஷயம் இல்லை என்பது கதிருக்குத் தெரியும். முட்டி மோதி மலரை எப்படியாவது தன்னிடம் வரவழைத்துக் கொண்டாலும் அது நிச்சயம் இயல்பான வாழக்கையாக இருக்காது. அவள் மனம் காயப்படவில்லை. சாகடித்திருக்கிறேன். என்னுடைய அவசர புத்தி, முரட்டு கோபம் எல்லாம் தான் காரணம் என்று யோசித்தவனுக்கு அவனுடைய குடும்பத்தினர் செய்த செயல்கள் பற்றி யோசிக்க வரவில்லை. மலருடன் அவன் மீண்டும் சேருவதற்கு இதே விஷயம் தான் தடைக் கல்லாக இருக்கும்போதாவது உணர்ந்துக் கொள்வானா ?

கதவைப் பட்டென்று சாத்திய ஆரிவ் உள்ளே வந்து மலரை முறைத்துக் கொண்டு நின்றான்.

"இந்தா நீ முதல்ல காபி எடுத்துக்கோ. நான் எல்லாம் சொல்லறேன்" என்றாள் .

தண்ணீர் போல மடக்கென்று குடித்து முடித்தான். நாக்கு சுரீரென்றது. பிறகு தண்ணீரை குடித்து விட்டு, "இப்ப சொல்லு" அவள் சொல்வதற்காக கை கட்டி காத்து நின்றான். அவன் முகம் பார்க்கக் கூட மலருக்கு பயமாக இருந்தது. தலை குனிந்தபடி எல்லாவற்றையும் அவள் சொல்லி முடிக்கவும்,

"இந்த கருமத்துக்காகத் தான் அங்க தீபக் வீட்டில் இருந்து இங்க நீ தனியா வந்து இருக்க வேண்டான்னு எல்லாரும் அடிச்சுக்கிட்டோம். சொல்லறதை கேட்டாதானே . சரி ஒரு நாளைக்கு பத்து முறை உனக்கு கால் பண்ணறேன். எங்கிட்ட சொன்னியா இல்ல தீபக், திவ்யா யாராவது ஒருத்தர்கிட்டயாவது சொன்னியா? உனக்கு ஏதாவது ஒன்னு ஆச்சுன்னா நாங்க எல்லாம் .. எங்களால எங்களை மன்னிக்கவே முடியாது மலர். அது சரி மேடத்துக்கு இனி நாங்க எல்லாம் யாரு. அதான் அவரு வந்துட்டாருல்ல . துடைத்தோட காதல் கணவர் .. "அந்த அவரு என்ற வார்த்தையில் அவன் அழுத்தம் கூட்டி சொல்லவும் இவளுக்கு சுருக்கென்றது. இருப்பினும் இந்தக் கோபம் எல்லாம் தனக்கானது என்பது அவளுக்குப் புரிந்தது.

"புரியுதுடா! அதுக்குன்னு என் ஒருத்திக்காக நீங்க எல்லாருமே எத்தனை வருஷத்துக்கு உங்க வாழ்க்கையை வாழாம இருக்க முடியும்? "

"நான் இதைப் பத்தி மேற்கொண்டு எதுவும் பேச விரும்பலை." கை பிடித்திருந்தவள் கையை விலக்கி விட்டு நகர்ந்துக் கொண்டான் .

ஆரிவ் ஆர்ப்பாட்டம் இல்லாமல் இப்படி அமைதியாக இருப்பது தான் பெரிய ஆபத்து. அவனை எப்படி சமாளிப்பது?

அடுத்த சில நாட்களுக்கு இருவருக்குள்ளும் எந்த பேச்சு வார்த்தையும் இல்லை. அமைதியாகவே நாட்கள் செல்ல ஆரம்பித்தது. காலையில் எழுந்தவுடன் போடும் கோலம் வாசனை மயக்கும் பில்டர் காபி டிகாக்ஷன், ஹை சொல்லும் மஹாலஷ்மி படம், குடும்ப குத்துவிளக்காய் அழகான மனைவி, அவளை சைட் அடிக்கும் கணவன்.,

ஜிம்மிற்கு வரும் கதிர், மலர், ஆரிவ்.. மணி நேரமும் நாட்களும் வழக்கம்போல சென்றுக் கொண்டுதான் இருக்கிறது.

ஆரிவுக்கு ஊருக்குத் திரும்பி வந்ததும் பார்க்க வேண்டிய வேலைகள் நிறையவே இருந்தன . மருத்துவமனைகளில் இருந்த வேலைகளினால் அவனால் சொந்த கிளினிக் பக்கம் கூட வர முடியவில்லை. சில நாட்கள் கழித்து இப்போது தான் மீண்டும் திறக்கிறான். ஏற்கனவே அப்பாயிண்ட் மென்ட் வாங்கி இருந்தவர்களை பார்த்து விட்டு அவன் கிளம்ப இரவாகி விட்டது. வரும் வழியில் ஒரு பெண் ஏதோ போன் பேசிக் கொண்டு வந்து வந்தாள் . இவன் வண்டியில் ஹாரன் அடித்தும் கவனிக்காதவள் மேலே மோதி விடாமல் இருக்க முயற்சி செய்தாலும் முடியாமல் லேசாக அவன் கார் மோதி நிறத்து. கீழே விழுந்தவளுக்கு பெரியதாக எல்லாம் அடி இல்லை. லேசான சிராய்ப்புகள்.

முதலில் பதறியவன் பிறகு அவளுக்கு ஒன்றும் இல்லை என்று தெரிந்ததும் , கத்த ஆரம்பித்தான்.

"ஏய் அறிவில்ல உனக்கு இப்படியே ரோட்டுல போன் பேசிகிட்டு வருவாங்க?"

"ஒழுங்கா வண்டி ஓட்ட தெரியாத நீங்க என்னை சொல்லறீங்களா?"

என்று அந்த பெண்ணும் வாயாட சத்தம் கேட்டு யமுனாவும் சித்தியும் வெளியில் ஓடி வந்தார்கள்.

"என்ன என்ன ஆச்சு என்று கேட்டுக் கொண்டே அவர்கள் ஓடி வரவும் அப்படியே விஷயத்தை மாற்றி போய் சொன்னாள் உமா. யமுனாவின் தங்கை.

"ஏய் இப்படி அநியாயமா பொய் சொல்லாத" என்று இவன் மிரட்டிய நேரத்தில் யமுனா வரவும்,

"என்ன டாக்டர் என்ன நீங்க இப்படி பேசறீங்க ? என்று யமுனாவும் சற்று காட்டமாகவே பேசினாள் .

"ஓ சபாஷ். நீங்க யாரு இவங்களுக்கு ?"

"நான் இவ அக்கா. என்ன பிரச்சனை ?"

"சொல்லு" என்று கைக் காட்டி தோரணையாக காரில் சாய்ந்துக் கொண்டான். அப்போது சொன்ன பொய்யை மீண்டும் உண்மை போலவே சொன்னாள் உமா.

"வா வண்டில இரு. உன்னை எல்லாம் ஸ்டேஷன்ல உகாத்தி வச்சா தான் உண்மை வரும் ." உமாவின் அருகில் ஆரிவ் வரவும்,

"என்ன நீங்க சின்ன பொண்ணுகிட்ட பேசற மாதிரியா பேசறீங்க? அவ சொல்லறது இருக்கட்டும். முதல்ல நீங்க சொல்லுங்க" என்றாள் யமுனா .

"உங்க இந்த அழகான தொங்கச்சி போன் பேசிக்கிட்டே ரோட்டுல நடந்து வராங்க. எத்தனை தடவை ஹாரன் அடிக்கறது?"

"அப்ப நீங்க வண்டிய நிறுத்த வேண்டியது தானே. ஒழுங்கா வண்டிய கூட ஓட்டத் தெரியாம வந்துட்டாரு. யாரு இவங்களுக்கெல்லாம் லைசென்ஸ் கொடுத்தாங்காளோ " ஆக்ரோஷமாக பதில் வந்தது உமாவிடமிருந்து.

"அம்மா மகாராணி நீங்க ஆடி பாடி சிரிச்சுக்கிட்டு வந்ததுக்கு நான் கரெக்ட்டா வண்டிய நிறுத்தினதுனாலதான் இங்க நின்னு பேசுற. இல்லன்னா எப்பவோ சாவு வண்டில அள்ளி போட்டுக்கிட்டு போய் இருப்பாங்க."

"டாக்டர் போதும். இதோட நிறுத்துங்க. இதுக்கு மேல ஒரு வார்த்தை கூட பேசாதீங்க."

விரல் நீட்டி எச்சரித்த யமுனாவை பார்த்து ஆரிவுக்கு அத்தனை ஆத்திரம்.

"யமுனா போதும் நிறுத்து. நம்ம சைட்ல தப்ப வச்சுக்கிட்டு நாம இன்னொருத்தர்கிட்ட சண்டை போடறது தப்பு. எங்களை மன்னிச்சுடுங்க தம்பி" ரமா தான் கையெடுத்து கும்பிட்டு மன்னிப்புக் கேட்டார்.

"இனிமேலாவது கையில போன கொடுத்து அனுப்பாதீங்க. "

கோபத்துடன் வண்டியில் ஏறிச்சென்றவனை இயலாமையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் யமுனா. மகளின் கையைப் பிடித்து வேகமாக இழுத்துக் கொண்டு உள்ளே சென்ற அவள் தாய் அவளை போட்டு அடி பின்னி விட்டார். தடுக்க வந்த யமுனாவிடம், " என் பெண்ணை நான் அடிக்கறேன். நீ இந்த விஷயத்துல தலையிடாத " என்று விட்டு மீண்டும் அடிக்கும் வேலையை அவர் தொடர்ந்துக் கொண்டிருந்தார்.

சற்று நேரம் கழித்து சித்தி கொஞ்சம் சாப்பிடுங்க என்று ரமா, உமா இருவரிடமும் இவள் எவ்வளவோ மன்றாடி இருக்க இருவருமே உண்ணவில்லை. மாறாக உமாவோ "வராத எங்கிட்ட வராத. எப்ப நீ எங்க குடும்பத்துக்குள்ள வந்தியோ அப்பவே என்னை எங்க அம்மா வெறுக்க ஆரம்பிச்சுட்டாங்க. எல்லாருக்கும் நீ கொடுக்கற பணம் தன பெரிசு. யாருக்குமே நான் வேண்டாம். எல்லாமே உன்னால தான்" என்று கத்த ஆரம்பித்துவிட்டாள் .

"ஆமாண்டி அவ தான் முக்கியம். அவ குடுக்கற காசு தான் முக்கியம். என்ன இப்ப?" ஆத்திரத்தை அடக்க முடியாமல் ரமாவும் மகள் மீது பாய்ந்தாள் .

"சித்தி நீங்க கொஞ்சம் அமைதியா இருங்க. அவ ஏதோ டென்ஷன்ல இப்படி பேசறா."

"உமா . நீ என்ன சொல்லறியோ அது தான் சரி. இந்தா கொஞ்சமா சாப்பிடு. அக்கா வந்து உணவு ஊட்ட

"சே எவன் எவனோ உடம்பை தடவி நீ சம்பாதிச்சுக் குடுக்கற இந்த சோறு யாருக்கு வேணும்? பார்த்தாலே குமட்டுது என்று தட்டை தட்டி விட்டாள் . கீழே சிந்திய சோறு மணிகளை அவசரமாக பொறுக்கினாள் யமுனா. தங்கை சொல்வது உண்மைதான். யார் யாரோ தொட்டு தடவி தான் அவள் இந்த காசை சம்பாதிக்கிறாள். இந்த அரிசி மணிகளுக்காக அவள் கொடுக்கும் விலை அதிகம் தான்.

அடி செருப்பால" என்று மீண்டும் உமாவுக்கு அம்மாவிடமிருந்து அடிகள் விழுந்தன . இவள் சென்று தடுக்கவில்லை. இது அவர்கள் குடும்ப விஷயம். அமைதியாக மூலையில் அமர்ந்துக் கொண்டாள் .

"நான் இவங்களுக்கு யாரு?" என்ற கண்ணீருடன் இவள் மூலையில் அமர்ந்திருக்க, அதே மனவேதனையில் தான் அங்கே ஆரிவும் இருந்தான். மலர், யமுனா யாரைப் பார்த்தாலும் கோபம் வருகிறது. ஊருக்குச் சென்றபோது அம்மா செய்த ஆர்பாட்டமா ? வேலை பளுவா ? இன்று யமுனாவுடன் நடந்த சண்டையா? கதிர் இங்கேயே குடி வந்த காரணமா? என்னவென்று அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. எத்தனையோ பேருக்கு மனநல சிகிச்சை அளிப்பவன் இப்போது தன் பிரச்சனைக்கு தீர்வுக் காண முயல்கிறான்.....

மறுநாள் விடியல் யாருக்கு என்னத் தரும்?


தொடரும்.....

































 
Top Bottom