• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

தீஞ்சுவை மலர் -18

STN20

New member
Staff member





தீஞ்சுவை மலர் -18

வீட்டுப் பெண்கள் மூவரும் உண்ணாமல் உறங்கியிருக்க இருந்த ஒரே ஆண் மகன் இருந்த உணவு பாத்திரத்தில் இருந்த உணவை காலி செய்து விட்டு கிரிக்கெட் பார்த்து ரசித்து விட்டு இருந்த அசதியில் உறங்கி விட்டார். மனைவியின் உபயம் சாராய நெடி ..

மறுநாள் விடியல் யாருக்கு எந்த விஷயத்தை சொல்ல போகிறதோ அல்லது எப்படிப்பட்ட வலிகளை தரப்போகிறதோ தெரியவில்லை. இருந்தாலும் நான் வந்து விட்டேன் என்று இந்த ஆதவன் ஆஜராகி விடுகிறார் இல்லையா?



இதோ யமுனாவும் ஆரிவும் தனித்தனியாக அவரவர் வீட்டில் இருந்தாலும் இருவருக்கும் மனதிற்குள் ஒரே எண்ணம் தான் ஓடிக்கொண்டிருந்தது இனி நான் அவளைப் பார்த்தால் எப்படி எதிர்கொள்வேன் என்ற யோசனை அவனுக்குள்ளும் அவசரப்பட்டு தப்பு பண்ணிட்டோம். நான் எப்படி அவர் மூஞ்சிய பார்த்து பேசுவது என்ற எண்ணம் யமுனாவுக்கும் மனதில் ஓடிக் கொண்டுதான் இருந்தது.

வழக்கம்போல அவரவர் வேலைகளுக்கு அவரவர் சென்று கொண்டிருக்க அன்றைய இரவு தான் ஆரிவுக்கு மருத்துவமனையில் டியூட்டி. மருத்துவமனைக்கு வந்திருந்தவன் முதலில் கண்டது கேஷ் கவுண்டர் அருகில் அழுதுக் கொண்டு நின்று கொண்டிருந்த யமுனாவை தான்.

அவள் அருகில் வந்து, "யமுனா! என்ன ஆச்சு? என்ன பிராப்ளம்?" என்று கேட்டவன் முகத்தில் உண்மையான அக்கறையும் கவலையும் இருந்தது. அவள் பதில் எதுவும் சொல்லாமல் நின்று கொண்டிருக்கவும் கேஷ் கவுண்டரில் இருந்த பெண் தான் இவளிடம் இவனிடம் கூறினாள்.

" டாக்டர்! இவங்க அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக் அட்மிட் பண்ணி இருக்காங்க. இப்ப கைல காசு இல்ல. இந்த செயின் வச்சுக்கோங்கன்னு சொல்றாங்க. முடியாதுன்னு சொன்னா புரிஞ்சுக்கவே மாட்டேங்கறாங்க . "

"ட்ரீட்மெண்ட் ஸ்டார்ட் பண்ணியாச்சா? "என்று கேட்டான் மருத்துவன்.

"எஸ் டாக்டர். டாக்டர் ரமேஷ் பாக்கறாரு "

என்று அவள் கூறவும் என்று புருவம் சுருக்கி , இவங்களுடைய பில் என்னுடைய நேம்ல ஆட் பண்ணிடுங்க என்று கேஷ் கவுண்டரில் இருந்த பெண்ணிடம் கூறி விட்டு , இவளிடம் அம்மா எங்க இருக்காங்க என்று கேட்டுக் கொண்டு அவன் முன்னே செல்லவும் இவளும் அமைதியாக அவன் பெண்ணே நடந்து வந்தாள் . வேறு சமயமாக இருந்தால் அவனை அவனின் உயரம், முக பாவம் கம்பீரம் எல்லாம் ரசித்திருக்கலாம். இப்போது வேண்டாம்.

அங்கே இவள் அன்னையை பார்த்துக் கொண்டிருந்த மருத்துவர்களிடம்

" ஹாய் ரமேஷ்" என்று கைக் கொடுத்து விட்டு, விவரங்களை கேட்டு தெரிந்து கொண்டான்.

"சடனா ஏதோ ஒரு பெரிய விஷயத்துனால் அதிர்ச்சி ஏற்பட்டிருக்கு . இப்போதைக்கு பெரியதாக எந்த பிரச்சனையும் இல்லை என்றாலும் அவங்க அடிக்கடி செக்கப் பண்ணிக்கணும். வேற எந்த அதிர்ச்சியான விஷயத்தையும் அவங்களுக்கு தெரியப் படுத்தாமல் இருக்கறது நல்லது" என்று கூறிவிட்டார் மருத்துவர் ரமேஷ் .

இன்னும் வேறு சில டெஸ்ட்களும் எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார் . இவனும் மருத்துவர் ரமேஷ் உடன் இருந்து வே று என்ன விஷயங்கள் என்று அனைத்தையும் கேட்டு தெளிவு பெற்றுக் கொண்டவன், வந்திருந்த டெஸ்ட் ரிபோர்டுகளையும் பார்த்துக் கொண்டான். தன்னுடைய அறை எண்ணைச் சொல்லிவிட்டு அவன் நகர்ந்து கொண்டதும் இவள் மருத்துவரிடம் அவர் சொல்வதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்தாள். மருத்துவர் சென்ற சிறிது நேரம் கழித்து இவளும் ஆரிவின் அறைக்கு சென்று விவரங்களை சொன்னாள்.

அவ்வளவு தானா? என்று அவன் அவள் கண்களை கூர்மையாக நோக்கி கேட்கவும், இவளால் பதில் சொல்ல முடியாமல் தலையை அமைதியாக குனிந்துக் கொண்டாள்.

" நான் ஒரு மனநல நிபுணர். என்னால உங்களுக்கு ஹெல்ப் பண்ண முடியும்னு தோணுது. எந்தப் பிரச்சனையா இருந்தாலும் தயக்கம் இல்லாம சொன்னீங்கன்னா நான் என்னால முடிஞ்ச வரைக்கும் உங்களுக்கு ஹெல்ப் பண்றேன்." தானாகவே முன் வந்து உதவ எண்ணினான் . மற்றவர்கள் என்றால் இவனின் அபாயிண்ட்மென்ட் கிடைக்கவே காத்திருக்க வேண்டும். கொடுக்க வேண்டிய பீஸும் அதிகம் தான்.

"டாக்டர் என்னால எல்லா விஷயங்களையும் உங்ககிட்ட இப்போதைக்கு சொல்ல முடியாத சூழ்நிலையில் இருக்கேன் தப்பா எடுத்துக்காதீங்க. உங்களால முடிஞ்சா எனக்கு ஒரே ஒரு ஹெல்ப் மட்டும் பண்ணுங்க. இந்த செயின் மட்டும் நீங்க வச்சுக்கோங்க. நான் கேஷ் அரேஞ்ச் பண்ணிட்டு நான் உங்ககிட்ட இது வாங்கிக்கிறேன்" என்றுக் கூறி அவளுடைய செயினை அவன் கையில் கொடுத்தாள். "இது யாரோடது?" என்று அவன் கேக்கும்போதே,

" என்னோடது தான் டாக்டர்" என்று கூறிக் கொண்டே அவன் கைகளில் அவளுடைய செயினை வைத்தாள் .

"யமுனா ப்ளீஸ் இதெல்லாம் வேண்டாம்" என்று அவள் கையிலேயே அதை திருப்பிக் கொடுக்கவும்,

" டாக்டர் ப்ளீஸ், யாருடைய கருணையும் பரிதாபமும் எனக்கு வேண்டாம்" என்று அவள் சொல்லி அவன் கைகளிலேயே அதை அழுத்தி திணித்து அவன் கைகளை மூடினாள் அவனுக்கு அது பிடித்து இருந்தது. தன் கையை அழுத்தி மூடியவள் கை மீது தன்னுடைய இன்னொரு கையை வைத்து அழுத்தினான். அவளுக்கு இப்போது சாய்ந்துக் கொள்ள தோள் தேவை தான். அப்போதைக்கு அது இல்லை என்றாலும் அவனின் கை அழுத்தம் அவளுக்கு அப்போது தேவையாக இருந்த தைரியத்தைக் கொடுத்தது.

"டாக்டர்! எனக்கு உங்க போன் நம்பர் கிடைக்குமா ?" தயங்கித் தயங்கி கேட்டவள் முகத்தை அவன் உன்னிப்பாக பார்த்துக் கொண்டே நம்பர் சொன்னான். நானே உனக்குதாண்டி! என்னோட நம்பர் கேட்க உனக்கு எதுக்கு இவ்ளோ தயக்கம். முதல் வசனத்தை மனதில் வைத்துக் கொண்டவன் இரண்டாவது மட்டும் சொன்னான்.

"இல்ல நீங்க ரொம்ப பிசியா இருப்பீங்க. உங்களை நான் தொந்தரவு பண்ண மாட்டேன். ரொம்ப எமர்ஜென்சினா மட்டும்.. "

அவன் கண்களுக்குள் ஊடுருவிய கண்களுக்கு முத்தம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது.

"நான் அம்மாகிட்ட போறேன்" என்று தயங்கிக் கொண்டே சொன்னவளுக்கு,

"ஓகே யமுனா யூ கேரி ஆன்" என்று விடை கொடுத்தான். கதவை திருகப் போனவளை "யமுனா" என்று அவன் அழைப்பு வரவும், நின்று திரும்பிப் பார்த்தாள்.

"யமுனா உங்களுக்கு இந்தப் பிரச்சனை என்றாலும் சாய்ந்துக் கொள்ள என்னோட தோள் இருக்கு " என்று கூறிவிட்டு தன்னுடைய வேலைகளைப் பார்க்க ஆரம்பித்து விட்டான்.

ம் என்று தலையை மட்டும் ஆட்டி விட்டு அமைதியாகச் சென்று தன்னுடைய அன்னைக்கு அருகில் அமர்ந்து கொண்டாள். மனதில் ஆயிரம் வேதனைகள் ஆயிரம் கவலைகள். கங்களின் ஓரம் கண்ணீர் துளி மட்டும் வழிந்துக் கொண்டிருந்தது.

ஏன் திடீரென்று ரமாவுக்கு இப்படி இதயத்தில் பாதிப்பு வர வேண்டும். இது சாதாரணமாக வந்தது இல்லை. எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று எப்படி தான் நாம் நம்மை தேற்றிக்கொண்டாலும் சில விஷயங்களை நம்முடைய இதயத்தால் தாங்க முடிவதில்லை. அதில் ஒன்றுதான் தன்னுடைய மகள் குடித்துவிட்டு சில ஆண் நண்பர்களுடன் வீட்டு வாயிலில் வந்து இறங்கிய போது என்னுடைய இதயத்தாலும் தாங்க முடியாது என்று சுளிர் என்ற வலியை காட்டியது. அந்த நேரத்தில் அவசரமாக இதோ அருகில் இருந்த மருத்துவமனை என்று இங்குதான் கொண்டுவந்து சேர்த்து விட்டார்கள். பணம் பற்றி அப்போது அந்த நேரத்தில் யோசிக்க முடியவில்லை. வலியில் துடித்துக் கொண்டிருக்கும் அன்னை தான் பிரதானமாக தெரிந்தாள் யமுனாவுக்கு.

மனைவிக்கு இப்படி ஆன விஷயம் தெரியாத கணவர் இப்படி ஆன விஷயம் தெரிந்தும் அதற்குக் காரணமான உமா போதையில் வீட்டில். யாரை எங்கு சென்று எப்படி குறை கூறுவது என்று யமுனாவுக்கு ஒன்றும் புரியவில்லை. எதற்கு இப்படிப்பட்ட அவஸ்தைகள்? நாம எல்லாரும் விஷத்தைக் குடித்து செத்துரலாம் என்று எத்தனையோ முறை ரமா அழுதிருக்கிறாள். அப்போதெல்லாம் தைரியம் சொன்ன யமுனாவிற்கு இப்போது அந்த பழைய தைரியம் இருக்கவில்லை . எப்படியாவது தங்கையை ஒரு நல்ல நிலைமைக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்ற எண்ணம் மட்டும் தான் அவள் எண்ணத்தில் இருந்தது. உடன் பிறந்தவள் இல்லை. இருந்தாலும் தந்தையின் தப்பை தான் சரி செய்ய வேண்டும் என்ற கடமை தனக்கு இருக்கிறது.

நிச்சயம் அவளுக்கு இப்போது தோள் சாய்ந்து அழுவதற்கு ஒரு நெஞ்சமும் தோளும் தேவைதான். இந்த இருதய வலி ரமாவிற்கு வந்ததற்கு பதிலாக தனக்கு வந்திருக்கலாம் என்று தன்னையே நொந்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் அவள் இரவெல்லாம் மருத்துவமனையில் இருந்தவர்கள் விடியலில் டிஸ்சார்ஜ் செய்து அனுப்பப்பட்டார்கள். ஆரிவ்விடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு செல்லலாம் என்று யமுனா அங்கு வரவும் ஏதோ புத்தகம் படித்துக் கொண்டிருந்தவன் கவனம் கலைத்தது யமுனாவின் குரல்.

" டாக்டர் ரொம்ப தேங்க்ஸ் டாக்டர். அம்மாவை வீட்டுக்குப் போக சொல்லிட்டாங்க. கூடிய சீக்கிரம் உங்களுக்கு நான் அந்த பணத்தை திருப்பிக் கொடுத்துட்டு என்னுடைய செயினை வாங்கிக்கிறேன். எனக்கு எப்படி தாங்க்ஸ் சொல்றதுன்னு தெரியல டாக்டர்" என்று கைக் கூப்பியவள், அருகில் வந்தவன் அவள் கையை இறக்கிவிட்டு அவள் கண்களை கூர்மையாக பார்த்தான். அவள் கைகளை தன்னுடைய கைகளுக்குள் எடுத்துக் கொண்டான். அந்த ஒரு நிமிடம் இருவருக்குமே வெளிப்படையாக சொல்ல வேண்டிய வார்த்தைகளை சொல்லாமல் சொல்லி விட்டது.

அமைதியாக சிற்றணையை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்து விட்டாள் அதைப்போல அவனும் தன்னுடைய டியூட்டி முடிந்து அடுத்த சில மணி நேரங்களில் கிளம்பி விட்டான் .

இங்கே மலரின் வீட்டில் கதிர் வந்து நின்றான் ஒரு உதவி வேண்டும் என்று.

"என்ன? "என்று அவன் முகத்தைப் பார்த்தான் மலர்.

இப்போதெல்லாம் அவளுக்கு அவனிடம் பேச வருமா வராதா? தெரியவில்லை. இருப்பினும் அவள் கண் மொழிகளை பார்த்து அவனேப் புரிந்துக் கொள்ள ஆரம்பித்து விட்டான். அவளுக்கு பேச வந்தாலும் சரி வரவில்லை என்றாலும் சரி இனி அவனிடம் அவள் பேசத் தயாராக இல்லை. அவனிடம் அவள் பேசிய போது வந்த சண்டைகளும் " எப்ப பார்த்தாலும் கத்திக்கிட்டு கிடக்கற"என்று வாங்கிக் கொண்ட பழி சொற்களும் இதயத்தில் பாரமாகத் தான் இருக்கின்றன .

என்ன? என்று அவள் கண்கள் கேட்க ,

"ஆன்லைன்ல ஆர்டர் பண்ணேன் . சைஸ் தப்பா வந்திருக்கு. . ரிட்டன் பண்ணனும் என்று கூறிக் கொண்டே தன்னுடைய உள்ளாடைகளை அவளிடம் காண்பித்தான் .அதை வாங்கிப் பார்ப்பதற்கு அவளுக்கு சற்று கூச்சமாக இருந்தது. அவனுடைய போனை வாங்கி பார்த்தாள் . அதில் போட்டு இருந்ததும் கையில் வைத்துக் கொண்டிருந்ததும் ஒரே அளவு தான். ஆனால் பார்ப்பதற்கு ரொம்ப சின்னதாக இருக்கிறது என்று அவன் கூறினான்.

அதில் தெளிவாக இதைத் திருப்பிக் கொடுக்க முடியாது என்று கூறியிருந்தார்கள் .அதை ஜூம் பண்ணி அவனிடம் காண்பித்தாள். அமைதியாக தலையை குனிந்து கொண்டான். இல்ல இதுலேர்ந்து காசு திருப்பி கிடைச்சாதான் வேற வாங்க முடியும். கைல காசு இல்ல என்று கூறியவனை பார்த்து என்ன சொல்வது என்று அவளுக்கு புரியவில்லை. அவனுக்கு வருமானம் வருகிறது என்பது அவளுக்குத் தெரியும். செல்விக்காக வாங்கிய கடனால் அவன் இந்த நிலையில் இருக்கிறான் என்பதும் அவளுக்குப் புரிந்தது. அவளுக்குத் தெரியாத விஷயங்கள்- அன்னையின் மருத்துவத்திற்கு வாங்கிய கடன், வீடு எரிந்துப் போனதும் அதற்கு ஆகிய செலவுகள், செல்வி பிள்ளை பெறுவதற்கு சீர் செய்ய வாங்கிய கடன்கள்.

தொடரும்....
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Members online

Top Bottom