தீஞ்சுவை மலர் -20
மாலையில் என்னுடைய கிளினிக் வந்துடுங்க என்று அவன் சொன்னதும் எதற்காக இருக்கும் என்ற பயப் பந்து அவள் தொண்டையில் உருண்டது.
"எதுக்கு எதுக்கு என்னை அங்க வர சொல்லறீங்க?"
இவள் குரல் உயர்ந்தது .
"ம் என்ன ?" என்று அவன் வினவவும் அதே கேள்வியை இப்போது சாந்தமாக அவனிடம் கேட்டாள் .
"இல்ல நான் எதுக்கு அங்க வரணும்?"
"நீங்க என்னை நம்பலியா ?"
"இல்ல என்ன விஷயம்னு தெரிஞ்சுக்கத்தான்.."
"நீங்க வாங்க சொல்லறேன் "
அவன் தன்னிடம் தவறாக நடந்துக் கொண்டால் என்ன செய்வது இந்த டென்ஷனோடே அடுத்த இரண்டு மணி நேரத்தைக் கடந்து விட்டாள் .
இவள் உள்ளே வந்ததும் அவன் நினைத்ததுபடி இல்லாமல் அமைதியாக அவள் முகத்தை உற்று நோக்கினான்.
அவளுக்கு பயத்தில் நெற்றியின் ஓரத்தில் வியர்வை வழிந்தது.
தன்னுடைய தாடையில் கைவைத்து அவள் முகத்தையே சற்று நேரம் உற்றுப் பார்த்தான். அவளின் வேகா மூச்சுகள் லேசாக அவன் முகத்தில் பட்டு நகர்ந்தது .
அவஸ்தையாக உணர்ந்தாள் அவள்.
"டாக்டர் ஏதோ பேசணுன்னு சொன்னீங்க" அவஸ்தையாக உணர்ந்தாள் அவள்.
"இப்போது தன்னுடைய இருக்கையில் சாய்ந்து அமர்ந்துக் கொண்டவன் ,
"யமுனா ஜஸ்ட் உங்களை பத்தி தெரிஞ்சுக்கத்தான் கூப்பிட்டேன். "
"என்னை பத்தி என்ன தெரிஞ்சுக்கணும் "
"நீங்க உங்க படிப்பு எங்க வேலை பாக்கறீங்க ? அப்பா அம்மா என்ன பண்ணறாங்க ? தங்கச்சி என்ன பண்ணறா?"
கூர்மையாக இருந்தது அவன் பார்வை.
"தங்கச்சி பிளஸ் டூ படிக்கறா . அப்பா வேலைக்கு போகலை. அம்மா இறந்து போய்ட்டாங்க. "
"அப்ப ஹாஸ்பிடல்ல இருந்தது யாரு ?"
"அவங்க அப்பாவோட இரண்டாவது மனைவி "
"ஓ !"
இப்போது அவளை பற்றி சொல்ல வேண்டிய இடம் வந்ததும் அமைதியாக இருந்து விட்டாள் .
"இன்னும் உங்களை பத்தி சொல்லவே இல்லையே "
"அது.. அது நான் ஒரு கம்பனில .,ஒரு ஆட் கம்பனில... "
அவள் தயக்கம் புரிந்ததும், அந்த அட்டைப் பெட்டியை எடுத்து வெளியில் வைத்தான்.
பட்டென்று டேபிள் மேலே இருந்த அந்த பெட்டியை அவசரமாக கையில் வைத்து மறைத்துக் கொண்டாள் .
அவளின் செயல் சிறுப் பிள்ளைத்தனமாக இருந்தது . "அதைக் கொண்டு வந்ததே நான்தானே யமுனா? "
அமைதியாக அதை எடுத்து மீண்டும் டேபிள் மீது வைத்தாள் .
"யமுனா இந்த வேலை பாக்கறேன்னு சொல்லறதுக்கு எதுக்கு இவ்ளோ தயக்கம் ?"
"டாக்டர் நான் கிளம்பவா?"
அவளின் தயக்கம் புரிந்தது. அவன் ஒரு மன நல நிபுணர். சின்ன வயது என்றாலும் அவனுக்கு முதிர்ச்சி அதிகம். இது தான் காயம் என்று கை, காலில் பட்டிருக்கும் அடி போல மனதின் காயங்களை காட்டி விட முடியாது. மனம் மிகவும் நுட்பமானது . ஆனால் அதன் வலிமையும் வேகமும் மிக அதிகம் .
அவள் கிளம்பவா என்று கேட்டதும் ,
"ஓகே யமுனா ! " அவனும் விடை கொடுத்து விட அமைதியாக கிளம்பி விட்டாள். கிளம்பி விட்டாலும் ஆரிவ் தன்னை இதற்குப் பிறகு தப்பான வழியில் அணுகி விடுவானோ என்ற பயம் வந்தது. முதலில் அவனுக்குக் கொடுக்க வேண்டிய பணத்தை கொடுத்து விட்டு தன்னுடைய செயினை மீட்டுக் கொள்ள வேண்டும், பிறகு அவன் பக்கமே போககே கூடாது என்ற எண்ணமே அவளைச் சுற்றி சுற்றி வந்துக் கொண்டிருக்க,
அவளின் நினைவே அவனைச் சுற்றியது. வாலிப வயது என்னை கொஞ்சம் கவனிடா என்று கெஞ்சியது.
அவள் செயினை கையில் வைத்துக் கொண்டு அவள் கழுத்துக்கு கொடுக்க வேண்டிய முத்தங்களை அந்த செயினுக்குக் கொடுத்தான். அவன் உதடுகள் தானே கீழே இறங்கவும் போன் அழைத்து. சிரித்துக் கொண்டே பின் தலையில் தட்டிக் கொண்டான்.
அடுத்த இரு தினங்கள் உமாவுக்கு பள்ளி விடுமுறை. ரமாவுக்கு அவளை பார்க்கப் பார்க்க அதனை ஆத்திரம். கணவனை கொன்று விட்டால் என்ன என்ற எண்ணமும் இலவச இணைப்பாக வந்து அவள் மூளையை குழப்பிக் கொண்டிருந்தது. யமுனாவின் கெஞ்சல்களுக்காக மிகவும் கஷ்டப்பட்டு தன்னை அடக்கிக் கொண்டாள் . மாத்திரைகள் செய்த உதவியால் உறக்கம் வந்தது. யமுனாவுக்குத்தான் உறக்கமும் இல்லாமல் நிம்மதியும் இல்லாமல் கஷ்டப் பட்டு போனாள் . ஒரு புறம் ஆரிவ் தன்னை அழைப்பானோ என்ற பயம் வந்தாலும், இன்னொரு புறம் 'ப்ளீஸ் எனக்கு உங்களை பாக்கணும் போல இருக்கு' என்று மனம் அவனையே அழைத்துக் கொண்டிருந்தது. ஆரிவ் அடுத்த சில நாட்களுக்கு அவளை அழைக்கக் கூடாது என்று விடாப் பிடி யாக இருந்தான் . கொஞ்சம் விட்டு தான் பிடிக்க வேண்டும். நாமளே போய் அவகிட்ட பேசினா அவளுக்கு எரிச்சல் தான் வரும். அவளே கூப்பிடுவா என்று அவன் காத்திருந்தான் .
ரமாவை வீட்டில் இவர்களுடன் விட்டு செல்ல பயமாக இருந்தது. கோவிலுக்கு கூட போகவில்லை யமுனா.
அவளுக்கும் தன்னை அடக்கி கொள்ள மிகவும் கஷ்டமாகத் தான் இருந்தது. தற்கொலை செய்துக் கொள்ளும் எண்ணம் அவளை மிகவும் அலைக்கழித்தது. எதற்காக உயிருடன் இருக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தாலும் சட்டென முடிவெடுக்க பயமாக இருந்தது. தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வாகாது என்ற அறிவுரை எல்லாம் அவர்களுக்கு உபயோகப் படாது. பயம் என்ற ஒற்றைக் காரணம் தான் அவளை உயிருடன் வைத்திருக்கிறது.
ஒரே ஒரு நாள் உமாவைப் பார்க்காத அவளின் நண்பர்கள் அடுத்த நாள் இரவில் வந்து நின்றார்கள்.
யார் என்ன என்று விசாரித்த யமுனாவுக்கு அவர்களை பார்த்து பயமாக இருந்தது. அவர்கள் பள்ளியில் படிக்கும் சின்ன குழந்தைங்க.. அவங்களுக்கு எதுக்கு பயப்படணும் என்று யாரும் யோசிக்க வேண்டாம். அவர்களின் உருவமும் நடவடிக்கையும் பேச்சும் அத்தனை அருவருப்பாக இருந்தது. பள்ளியில் வேலைப் பார்க்கும் பெண் ஊழியர்கள், ஆசிரியர்கள் நிலைமை அதோ கதி தான்.
"அக்கா உமாவை விட நீ செம்ம கட்டை "
காதில் ஆசிட் கொட்டியதுப் போல இருந்தது யமுனாவுக்கு.
"இப்படி எல்லா பேசாதீங்க. அப்புறம் நான் போலீசுக்கு போக வேண்டி இருக்கும் மிரட்டினாள்.
அவர்கள் கெக்கலித்தார்கள்.
"போக்கா! போ! கம்பளைன்ட் கொடு. இவங்க அப்பாவே எஸ் பீ தான்." அவர்கள் நக்கலாக பேசவும் இவள் பயத்தில் எச்சில் முழுங்கினாள்.
" பயப்படாதக்கா . உன்னை ஒன்னும் செய்ய மாட்டோம் என்று இவள் கன்னம் தடவி சென்றான் ஒருவன். இன்னொருவன் பை செல்லம் என்று இவளுக்கு பின்னே நின்ற உமாவுக்கு பிளையிங் கிஸ் கொடுத்தான்.
அவள் அதிர்ச்சியில் உறைந்துப் போய் நிற்க உமாவோ அசால்டாக பதிலுக்கு பிளையிங் கிஸ் கொடுத்து காற்றில் ஊதினாள் .
"செல்லம் ஸ்வீட் ட்ரீம்ஸ் " என்றான் அவன். கன்னம் வெட்க சிகப்பை பூசிக் கொள்ள உமா வீட்டுக்குள் ஓடி விட்டாள் .
அதிர்ச்சியுடன் வீட்டுக்குள் வந்த யமுனா நிறைய யோசித்தாள் . இனி என்ன செய்வது?உமாவை அடித்து திருத்த முடியுமா ? தன்னால் இந்த பிரச்னையை ஹாண்டில் செய்ய முடியுமா? யோசித்தவள் அதற்கு முதல் தீர்வாக,
"உமா நீ இனிமே பள்ளிக்குச் செல்ல வேண்டாம் " என்று யமுனா சொல்லவும், அக்கா இப்படி ஒரு விஷயத்தைக் கூறுவாள் என்று உமா எதிர்பார்க்கவில்லை. மதிப்பெண்கள் பொறுத்தவரை ஆஹா ஓஹோ என்று இல்லாவிட்டாலும் அறுபது சதவீதம் வாங்கி விடுவாள். படிப்பு என்ற ஒற்றைப் புள்ளியில் தான் தன்னுடைய வாழ்க்கை இப்படி ஆகிவிட்டது என்று யமுனா எப்போதும் சொல்லிக் கொண்டே இருப்பாள். "நன்றாகப் படித்தும் எனக்கு தான் மேல் படிப்பு படிக்க வாய்ப்பு அமையவில்லை. உன்னை நான் எப்படியாவது கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறேன்"என்று சொல்லிக் கொண்டே இருக்கும் அக்கா இப்படி சொல்வது சும்மா விளையாட்டுக்குத்தான். ஒரு சில நாட்களில் அக்காவின் மனதை மாற்றிவிடலாம் என்று தான் உமா நினைத்தாள். அதுவரை நல்ல பிள்ளை போல வெளியில் எங்கும் செல்லாமல் இருந்துவிடலாம். அக்காவின் மனம்., தானே மாறிவிடப் போகிறது என்று அலட்சியமாக இருந்தாள்.
ஆண் நண்பன் அடுத்த நாள் போனில் அழைத்த போது அக்கா வெளில போகக் கூடாதுன்னு சொல்லி இருக்காங்க தெளிவாக சொல்லியிருக்கலாம் . சொல்லாதவள்,
அம்மா மதியம் உறங்கிஇருக்க அக்காவும் வேலைக்குச்சென்றிருந்த சமயம் நண்பனோடு ஊர் சுற்றினாள் . ஷாலைப் போட்டு மறைத்துக் கொண்டு அவனை இருக்க கட்டிக் கொண்டு யாருக்கும் தெரியாமல் ஊர் சுற்றுவது எத்தனை த்ரில். எத்தனை ஜாலி . ஹெல்மட் போட்டுக் கொண்டு சென்றவன் மீது எந்த ட்ராபிக் போலீசுக்கும் சந்தேகம் வரவில்லை. லைசென்ஸ் இல்லாமல் பின்னாலே பிகரை வைத்துக் கொண்டு சுற்றுவது எத்தனை ஜாலி. "டேய் மச்சி அந்த பிகரு மஞ்சிச்சுடா. அது உன்னையே தான் லுக் உடுது "
பொறுக்கி நண்பர்களின் வார்த்தைகள் கேட்க கேட்க ஆனந்தம் தான். அது மட்டுமா ? அவளை எங்கையாவது யாருமில்ல இடத்துக்கு கூட்டிட்டுபோய் ... உங்களுக்கு தெரிந்த பச்சையான கெட்ட வார்த்தைகளை யோசிக்கக் கூட வேண்டாம்....
எங்கெங்கோ சுற்றியவர்கள் இரவானதும் எங்கோ ஒரு தனிமையான இடத்துக்குச் சென்றார்கள் .
"எங்கடா கூட்டிட்டு வந்திருக்க ?"
"நீ வா. நாம் ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் பேசிகிட்டு இருக்கலாம். "
"அதான் இவ்ளோ நேரம் தனியா தானே இருந்தோம். வாடா வீட்டுக்குப் போலாம். எனக்கு பயமா இருக்கு. அக்கா வேற வீட்டுக்கு வந்திருப்பாங்க "
"என் கூட ஒரு பத்து நிமிஷம் கூட உன்னால டைம் ஸ்பென்ட் முடியாதா? சரி வா போலாம் என்று கோபத்தோடு அவன் வண்டியில் ஏறவும் அவனின் கோபத்தைத் தாங்க முடியாதவள்,
" சரி வா கோச்சுக்காதடா என்று அவனை சமாதானம் செய்தாள் . அதற்கு எல்லாம் அவன் ஸம்ஹதானம் ஆகவில்லை. கன்னத்தில் ஒற்றை முத்தம் வாங்கியவன் சமாதானம் ஆனதுப் போல நடித்தான் .
அந்த புதியதாக கட்டிக் கொண்டிருக்கும் பில்டிங்கில் தான் அவர்கள் புதியதாக வீடு வாங்கப் போகிறார்களாம். பெரிய அடுக்ககம் . அவனுடன் கைக் கோர்த்து செல்லும்போது அவனுடன் அந்த வீட்டில் மருமகளாக செல்வது போன்ற ஒரு இனிய கற்பனையில் அவனுடன் அமர்ந்துப் பேசிக் கொண்டிருந்தாள் உமா . மெதுவாக அவன் கைகள் எங்கோ ஊர்ந்து செல்லவும் அவள் கைகள் தடுத்தன. வேண்டாம் என்று அவள் முகம் திருப்பவும் அவனின் மூச்சுக் காற்றுடன் வந்த அவனின் வாசமும் எச்சில் முத்தமும் அவளைக் கிறங்க வைத்தது.
அடுத்த சில நிமிடங்களில் அவனின் அண்ணாவும் வேறு சில நண்பர்களும் வந்தார்கள்...
கையில் ஏதோ ஒரு பொடியை தேய்த்துக் கொண்டது வந்தார்கள் ..
அங்கே காவலுக்கு இருக்கும் வட நாட்டுத் தொழிலாளர் குடும்பத்துடன் தான் அங்கே இருந்தார். அடுத்த கொஞ்ச நேரத்தில் சிலர் அந்த இடம் விட்டு அவசரமாக பைக்கை எடுத்துக் கொண்டு போகும்போது பின்னோடே ஓடிப் போய் பார்த்தாலும் அவரால் அவர்களைப் பிடிக்க முடியவில்லை. வண்டி எண் மட்டும் பார்த்துக் கொண்டார். இவங்க எதுக்கு இவ்ளோ அவசரமா ஓட்றானுங்க சந்தேகம் கொண்டவர் தன் மனைவியுடன் அங்கே எல்லா இடங்களிலும் ஒரு முறை சென்று பார்த்து விட்டு வந்து விடலாம் என்று பார்க்கவும்
முனகல் சத்தம் கேட்டு வந்து அவசரமாக அங்கே வரவும் அலங்கோலமாக இருந்த உமாவைத்தான் அவர்கள் பார்த்தார்கள்.
காவலாளி மனைவி அவசரமாக அருகில் இருந்த உடைகளை அவர்களுக்குப் போட்டு விட்டார். போலீசுக்கு சொல்வதா வேண்டாமா என்ற பயம் தான் அவர்களுக்கு வந்தது.
"வேண்டாங்க. நாம போலீசுக்கு போனா அவங்க நம்மளதான் கைது பண்ணுவாங்க. இந்த ஊரு யாரு என்ன தப்பு பண்ணாலும் பிழைப்பு தேடி வந்த நம்மளைதான் அவங்க கைது செய்வாங்க. வேண்டாயா " ஹிந்தியில் அவன் மனைவி சொல்லிக் கொண்டிருந்தாள்.
"அது சரி இப்ப இந்த பிள்ளையை என்ன பண்ணறது?"
அவசரமாக அவள் கொண்டு வந்திருந்த கைப்பையை துழாவவும் அதிலிருந்து அவள் கைப் பேசி கிடைத்தது. அது அனைத்து வைக்கப் பட்டிருக்க அவள் கை ரேகை கொடுத்து அதை ஆன் செய்தபோது மிஸ்ட் கால் பார்த்து அழைத்தார்கள்.
"இங்கே வீட்டுக்கு யமுனா வரவும் தங்கையைக் காணவில்லை. ரமாவுக்கும் தெரியவில்லை. அவள் போனைக் காணவில்லை. செருப்பும்தான் . எங்கோ சென்று விட்டாள் . இன்னிக்கு கழுதை வரட்டும் அடிச்சு தோலை உரிக்கறனா இல்லையா பாரு என்று ரமா கோபத்துடன் அமர்ந்திருக்க வெளியில் சென்ற தந்தை, தங்கை இருவரையுமே காணவில்லை நேரம் ஆக ஆக யமுனாவுக்குப் பதறியது . அருகில் இருக்கும் யாரிடமும் உதவி என்று கேட்க முடியாது. என்ன செய்வது என்று மூளை யோசிக்க தானாகவே அவள் கை ஆரிவ் எண்ணுக்கு அழைத்தது. அவசரமாக விஷயத்தை சொன்னாள்.
"பிரண்ட்ஸ் வீட்டுக்கு எங்கையாவது போய் இருப்பா. கவலைப் படாதீங்க என்று அவன் சொல்லவும் கடந்த சில நாட்களாக அவளின் நடவடிக்கைகள் பற்றி சொல்லி "எனக்கு ரொம்ப பயமா இருக்கு டாக்டர்" என்றாள் .
"சரி நான் இப்ப உடனே வரேன்" என்று அவனும் அவசரமாக கிளம்பி வந்தான். வீட்டில் யாரும் இல்லை. ரமாவைத்த தனியாக விட முடியாது. அவசரமாக மலருக்கு அழைத்து கதிர் நம்பர் வாங்கியவன் கதிருக்கு அழைத்தான்.
எப்போதுமே தன்னிடம் சண்டைக்கு நிற்கும் ஆரிவ் இப்போது அழைத்திருக்கிறான் என்றால் ஏதாவது பிரச்னையாகத் தான் இருக்கும். காலை அட்டண்ட்செய்தவன் ரமாவை மலரின் வீட்டுக்கு அழைத்துச் சென்றான்.
முதலில் ட்யூஷன் செண்டருக்குச் சென்றவர்கள் அங்கே ஆசிரியரிமிடருந்து அவள் நண்பர்கள் என்னை வாங்கி கொண்டு சென்றுத் தேடினார்கள். முக்கியமான வேலை செய்தவர்கள் அனைவரும் வேறு ஒரு நண்பனின் வீட்டில் பர்த்டே பார்ட்டி பண்ணிக் கொண்டிருந்தார்கள்.
நேரம் ஆக ஆக பயத்தில் உடைந்துப் போய் அழுதுக் கொண்டிருந்த யமுனாவை எப்படி சமாதானம் செய்வது என்றுத் தெரியாமல் வேறு என்ன வழி என்று யோசித்துக் கொண்டிருந்தான்.
போலீசுக்குப் போகலாமா? அழுதுக் கொண்டே யமுனா கேட்டாள் .
"போகலாம். ஆனா எங்கையாவது ஓடிப் போயிருப்பான்னு தான் சொல்லுவாங்க என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே தங்கையின் எண்ணில் இருந்து அழைப்பு வந்தது யமுனாவுக்கு .
தொடரும்..