• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

தீஞ்சுவை மலர் -22

STN20

New member
Staff member
தீஞ்சுவை மலர் -22

சிக்னலில் யூ டர்ன் எடுக்கும் போது சிக்கனலில் இருந்து கிளம்பிய கார் இவன் மீது மோதிவிட கதிர் ரோட்டிலேயே சறுக்கி விழுந்தான்.

நல்ல நேரம் பெரிய அளவில் ஏதும் அடி இல்லையென்றாலும் வலது கை , காலில் நல்ல சிராய்ப்பு.

சிலர் ஓடி வந்து தூக்கி விட்டு அருகில் இருந்த மருத்துமனைக்கு அழைத்துச் சென்றார்கள் . உடன் வேலை செய்யும் ஒருவன் வந்து வண்டியை எடுத்துக் கொண்டு இவனையும் வீட்டில் விட்டு விட்டுப் போனான்.

நொண்டி நொண்டி நடந்து வந்தவனை உமா தான் பால்கனியில் அமர்ந்து படிக்க கொண்டிருந்த போது பார்த்தாள் . அவளுக்கு கதிரை எதிர் வீட்டில் வசிக்கும் அங்கிள் என்று தான் தெரியும். மலர் வந்தவுடன் அவளிடம் இவள் விஷயம் கூறவும் பதறிப் போனவள் தானாகவே வந்து நின்றாள் அவன் வீட்டின் முன்பு.

"வா மலர்" என்று கதவை திறக்கவும் அவசரமாக அவன் உடல் ஆராய்ந்தாள். 'எனக்காக பதறும் இவள் . எனக்கான ஜீவன்' என்று அவன் மனம் குத்தாட்டம் போட்டது. அவளோ இப்போதும் அவனிடம் எதுவும் பேசவில்லை. ஆனால் அவனை இறுக்கிக் கட்டிக் கொண்டாள். ஒருவருக்கொருவர் பார்க்காத வரை எதுவும் தெரிவதில்லை. விவாகரத்து வாங்கி விட்டாலும் அருகருகே இருக்கும்போது பயமும் படபடப்பும் இயல்பாகவே வந்து விடுகிறது.

தோளில் சாய்ந்து தனக்காக அழுதவளை அமைதியாக தலையை தடவிக் கொண்டு நின்றான் கதிர். அவளின் படபடப்பு அவனுக்குத் தெரிந்தது .அவர்கள் இருவருக்குமே இப்போது இந்த அணைப்புத் தேவைதான். திருமணத்திற்கு பிறகு கணவன் மனைவியாக இருந்த போது கூட கதிர் அவளை அணைத்ததில்லை . ஒரே ஒரு முறை அவளை ஆரத் தழுவியிருந்தால் அவளின் நெஞ்சின் ஒலியை அவன் கேட்டிருந்தால் அவளின் காதல் அவனுக்குப் புரிந்திருக்கும்.

அவளின் சூடானக் கண்ணீர் அவனிடம் ஆயிரம் கதை சொன்னது. தன்னை தானே சமாதானம் செய்துக் கொண்டவள் பார்வை நிலைத்து நின்றது சிவகாமியின் சந்தன மலை போடப்பட்ட புகைப்படத்தில் தான். அவளுக்கு அதிர்ச்சி தான் . கதிர் இங்கு வந்தது முதலே இவள் மண்டையைக் குடைந்த கேள்விக்கு பதில் இப்போது கிடைத்துவிட்டது.

அவள் தலையை நிமிர்த்தியவன், அவளின் கண்களைத் துடைத்து விட்டான்.

"எனக்கு ஒன்னும் இல்லை" என்று நடந்த விஷயங்களை சொன்னான்.

அவன் முகத்தை நிமிர்த்துப் பார்த்தாள் . அர்த்தம் புரிந்துக் கொண்டவன்,

"சாப்பிட்டேன் மலர். டாக்டர் கொஞ்சம் வலி தெரியாம இருக்க மாத்திரை கொடுத்திருக்கார்" என்றவன் அனைத்தையும் அவளிடம் காட்டினான்.

அமைதியாக அவன் வீடு விட்டு வெளியில் வந்தாள் . சற்று நேரம் கழித்து அவனுக்கு ஒரு பெரிய பிளாஸ்கில் டீ கொண்டு போய் கொடுத்தாள் . இரவு உணவைக் கொடுத்தாள் . தோசையை விண்டு உண்ணுவதற்கு கஷ்டமாக இருந்தது. அவளே ஊட்டினாள் . அடுத்த சில நாட்களுக்கு அவள் தான் அவளைப் பார்த்துக் கொண்டாள். அவன் இதுவரை யாரிடமும் பேசாதது பலதும் பேசினான் . அவள் அமைதியாக கேட்டுக் கொள்வாள். அம்மா இறந்தது, செல்வி குழந்தை பிறப்பு , அதற்கு வாங்கிய கடன்கள், வெற்றியின் தனிக் குடித்தனம், பிள்ளை பிறந்த நாள் விஷயங்கள், என்று எல்லாம் சொன்னவன் அவன் மனைவியுடன் ஒன்றாக இருப்பது போல தனக்கும் பல கற்பனைகள் ஆசைகள் இருப்பதாகச் சொன்னான். அவள் முகத்தை ஆராய்ந்தவனுக்கு ஏதோ ஒரு ஏமாற்றம். அவளிடமிருந்து எந்த ஒரு உணர்ச்சியும் அவனால் அறிய முடியவில்லை.

அந்த நிலையில் எப்படியாவது தன்னுடைய காதலை அவளிடம் நிரூபித்து விட வேண்டும் என்ற எண்ணம் தான் அவனுக்கு அதிகமாக இருந்தது. இனி இந்த ஜென்மத்தில் இந்தக் காரணம் கொண்டும் அவன் மலரை இழந்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தான். அவனை குளிப்பாட்டினாள் . உடை மாற்றி விட்டாள் . அப்போது அவனுக்கு இருந்த மேனி சிலிர்ப்புக் கூட அவளுக்கு இருந்ததா என்றுத் தெரியவில்லை. இந்த அளவுக்கு அவளின் உணர்ச்சிகள் மறைந்து விட்டதா? அவனால் நம்ப முடியவில்லை. இது எல்லாவற்றிற்கும் பதில் கூறக் கூடிய ஒரே ஆள் ஆரிவ் தான். அவன் வாய் திறக்க மாட்டான். அவளை எப்படி மீட்டுக் கொள்வது என்று யோசித்தவனுக்கு ,

மலருக்கு முத்தம் கொடுத்தால் என்ன என்ற விபரீத ஆசை வந்தது. அதை அவன் செயல் படுத்தியதும் பளீரென்று அவனக்கு கன்னத்தில் அரை விழுந்தது ஆசை மனைவியிடமிருந்து . கோபத்தோடு வீட்டுக்கு வந்தவள் பிறகு அவன் பக்கம் எட்டிப் பார்க்கவில்லை.

நடக்கும் எல்லா விஷயமும் ஆரிவுக்குத் தெரியும். இப்போது மலர் மனம் குழம்பிக் கொண்டிருக்கிறது. பிறகுத் தானே தெளிந்து விடும் அமைதியாக தூர நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறான்.

உமாவின் உதவியால் இப்போதெல்லாம் யமுனாவின் தரிசனம் அவ்வபோது ஆரிவுக்குக் கிடைக்கிறது. இன்னும் எத்தனை நாள் பட்டும் படாமலும் தொட்டும் தொடாமலும் காதலை வளர்ப்பது ? வயது வா வா என்கிறது இதயம் இனியும் தடை என்ன என்று கேட்டாலும் ஏதோ ஒரு தயக்கம். அவளின் நிலைமை சரியில்லாததை நான் பயன்படுத்திக் கொள்கிறேன் என்று அவள் நினைத்துவிட்டால் என்ன செய்வது என்ற தயக்கம்தான். இதற்கு எல்லாம் ஒரு தீர்வு காண வேண்டும். முதலில் அவளுக்கு ஒரு நல்ல வேலை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று யோசித்தவனுக்கு தானாகவே ஒரு வாய்ப்பு அமைந்தது. இவளுக்கும் இந்த காண்ட்ராக்ட் முடிய போகிறது என்று தெரிந்துக் கொண்டவன் தோழியின் கண் மருத்துவமனையில் வேலைக்கு சேர்த்துவிட்டான் . உலகம் தன்னையே சுற்றியே சுழல்கிறது என்று நினைத்துக் கொண்டிருந்தவளுக்கு அப்படியெல்லாம் இல்ல. அவரவருக்கு அவரவர் பிரச்சனைகள் என்று இந்த புதிய வேலை காட்டிக் கொடுத்தது. என்னைத்தான் பாக்கறாங்களோ என்ற எண்ணமெல்லாம் இப்போது அவளுக்கு இல்லை.

"கண்ணுல பிரச்சனைக்கு வந்துருக்கீங்க ? "

கண்ணு மங்கலா தெரியுது " என்று பலர்.

பாட்டாசு வெடிக்கும் போது கண்ணில் அடிபட்ட குழந்தைங்கள்

எந்நேரமும் செல்லுதான் என்று புகார் வாசிக்கும் பெற்றவர்கள், சக்கரை நானூறு இருந்தா கண்ணு தெரிய வேண்டாமா திட்டும் நர்ஸுகள், கண்ணுக்கு போகிற நரம்பு ரொம்ப வீக்கா இருக்கே அடுத்து என்ன என்று சொல்லும் மருத்துவர் என்று இவள் உலகத்தில் பார்க்காத பல விஷயங்களைக் கற்றுக் கொண்டாள் . பல விதமான கண்கள், பலவிதமான பார்வைகள். அவள் கண் முன்னால் இப்போது உலகம் விரிந்தது . மனமோ சுருங்கியது., அவனின் இதயக் கூட்டுக்குள் ...மனமும் மூளையும் அவன் கூட்டுக்குள் சுருங்கிக் கொண்டாலும் மலர் பற்றிய கேள்விகளும் சேர்ந்தே யமுனாவை குழப்பியது. தனக்கு சொந்தமில்லாதவனை எப்படி உரிமைக் கொண்டாட முடியும் ? அவள் குழம்பிக் கொள்ளட்டும் தீர்வு சொல்ல அவன் வருவான்..

மலர் அன்றைய நிகழ்வுக்கு பிறகு கதிரிடம் பேசவில்லை. ஆனால் எப்போதும் போல அவன் கண்கள் அவளையேத் தான் சுற்றி வந்தது. நீ நடந்தால் நடை அழகு என்று பாட்டு கூட பாட ஆரம்பித்துவிட்டான். இப்போது அதை எல்லாம் ரசிக்காதவள் என்றாவது ஒரு நாள் நிச்சயம் ரசிப்பாள். ரசிக்க வைத்து விடுவேன் என்ற தன்னம்பிக்கையில் சுற்றிக் கொண்டிருந்தான் அவள் பின்னால் .

ஒரு முறை மலரைப் பார்க்க திவி தீபக் வந்திருந்தார்கள் . அவர்களை வழியில் பார்த்த கதிர் சாதாரனமாகப் பேசினான். இருவருக்குமே சற்று அதிர்ச்சி தான். விவாகரத்துக்கு சென்றபோது இப்படி பேசியவன் இவன் இல்லையே. கதிர் இப்போது இங்குதான் இருக்கிறான் என்பதும் அவனுக்கு அடிப்பட்டபோது மலர்தான் கவனித்துக் கொண்டாள் என்பதும் தெரிந்த போது, தீபக் இது நல்ல விஷயம் தான் என்கவும் திவ்யாதான் கொதித்துப் போனாள் .

"போன உசுரை திருப்பிக் கொண்டு வந்திருக்கோம் எப்படி உங்களால இப்படி பேச முடியுது? "

"இங்க பாரு இது முழுக்க முழுக்க அவங்க ரெண்டு பேர் சம்பந்தப்பட்ட விஷயம். அவங்க ரெண்டு பேரும் லவ் பண்ணா அதை உன்னால பிரிக்க முடியுமா?"

"லவ்வா அந்த ராட்சசன் மேலையா? ஹைபோதாட்டிகலா கூட அது நடக்காது. மலருக்கு இப்பவும் அவனைப் பார்த்தா பேச்சு வரல. என்ன சொல்லறீங்க நீங்க ?"

கோபமாக மனைவி பேசினாலும் அவள் கணவன் ,

"இங்கபாரு திவி. நாம அவங்க வாழ்க்கைல தலையிட்டு எதுவும் குழப்ப வேணாம். நாமளும் ஆரிவ் மாதிரி சைலண்டா என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்."

"எனக்கு ரொம்ப பயமா இருக்குங்க. இன்னொரு முறை மலருக்கு ஏதாவது ஒன்னு ஆச்சுன்னா அதுக்கு முழுக்க முழுக்க நாம தான் காரணமா இருப்போம் "

" மலருக்கு எந்த ஆபத்தும் நாங்க வர விட மாட்டோம். எங்களை நம்பு." கணவனின் வார்த்தையில் சமாதானம் ஆகவில்லையென்றாலும், அவர்கள் மீது இருந்த நம்பிக்கையில் அமைதியாக இருந்து விட்டாள் .

கதிருடன் நடக்கும் இந்த எதிர்பாராத சந்திப்பு திவியை இன்னும் குழப்பியது. உண்மையாவே திருந்திட்டானா? மனதில் அவள் யோசித்துக் கொண்டிருக்க," எப்ப டெலிவரி என்று கதிர் கேட்ட கேள்விக்கு தீபக் பதில் சொல்லிக் கொண்டிருந்தான்.

"இப்ப உடம்பு எப்படி இருக்கு. விபத்து காயம் எல்லாம் குணமாகிடுச்சா?" என்று இவளும் பார்மாலிட்டிக்காக கேட்டு வைத்தாள்.

ஈட்டிற்கு வந்ததும் ,மலரைப் பார்த்த திவி அவள் முகத்தில் காதலுக்கான ஏதாவது அறிகுறிகள் தெரிகிறதா என்று உற்று நோக்கினாள் .

என்ன திவி என்னையே உத்து உத்து பாக்கற?

"இல்ல என்னோட தங்கச்சிக்கு காதல் எதுவும் வந்துருச்சா?"

என்ன பதில் சொல்லப் போகிறாள் மலர்..

சுபஸ்ய சீக்கிரம் ....
 
Top Bottom