அத்யாயம் -7
அப்போது தான் வழியில் அழுதுக் கொண்டே வந்த மலர் மீது அந்தக் கார் மோதி நின்றது.
இரண்டு நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தவளை உயிருடன் கொண்டு வர திவ்யா தான் மிகவும் சிரம்பட்டாள் .
"என்னோட சுய நலம் தான் இன்னிக்கு என்னோட தங்கச்சியோட இந்த நிலைமைக்கு காரணம். கணவனின் நெஞ்சில் முட்டி மோதி அழுதாள் .
ஆறுதலாக அவளை அணைத்துக் கொண்டான். தன்னுடைய நெஞ்சத்தில் அவளை புதைத்துக் கொண்டால் இந்த பிரச்சனை தீருமா?
"இங்க பாரு திவி . அது நடந்து முடிஞ்ச விஷயம் . இனிமே அவளை எப்படி இதுலேர்ந்து மீட்டு கொண்டு வரணும்னு நாம பாக்கணும். அவ கிட்ட உக்காந்து பேசு. அவளுக்கு கேக்கதேன்னு யோசிக்காத. உங்களுக்குள்ள நடந்த சந்தோஷமான விஷயங்களை அவகிட்ட ஷேர் பண்ணு . கண்டிப்பா அவகிட்ட ரெஸ்பான்ஸ் இருக்கும்."
கணவன் சொன்னதை அப்படியே செய்தாள் . எதிர்பார்த்த ரிசல்ட் வரவில்லை . இவள் தான் மிகவும் மனமுடைந்து போனாள் . முதல் நாள் நம்பிக்கையுடன் இருந்தவளுக்கு மறு நாள் தங்கையின் நிலை பார்த்து அழுகை பீறிட்டது. தன்னையும் அறியாமல் மயக்கம் போட்டு விழுந்தவளுக்கு நல்ல செய்தி சொன்னான் கணவன்.
ஒரு புறம் சந்தோஷமாக இருந்தாலும் மறு புறம் தங்கை இப்படி இருக்கும்போது தன்னால் இந்த சந்தோஷத்தை அனுபவிக்க முடியுமா என்ற பயமும் வந்தது.
அன்னையின் வயிற்றிலிருந்து வெளியில் வந்தவளை குழந்தையாக வாங்கியவள் இன்று தன் வயிற்றில் வளரும் பூவைப் பற்றி மலரிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.
" மலர் இங்க பாரேன் .நான் அம்மாவாகப் போறேண்டி. ரெண்டு வருஷம் வேண்டான்னு தள்ளி வச்சிருந்தோம். அது அப்படியே தள்ளி போகிடும்னு எல்லாரும் பயமுறுத்தினாங்க. ஆனா பாரேன். நாம ரெண்டு பேரும் திரும்ப சந்திச்ச நேரம் இந்த பாப்பா வந்துருக்கு. அது சித்திய பாக்கவே வந்துருக்கு போல மலர். என்னோட கல்யாணத்துல கூட நீ இல்ல. ஆனா என்னோட குழந்தைக்கு வர போற எல்லா பங்க்ஷன்லயும் நீ இருக்கணும். தீபக் ரொம்ப பிஸியாவே இருக்காருடி . நீதான் எனக்கு கூடவே நின்னு பார்த்துக்கணும். ரொம்ப வாமிட் வருமாம். என்ன பண்ண போறேனோ தெரியலை. பயமா இருக்கு டி "
"நார்மலா குழந்தை பிறக்குமா ? சிசேரியன்னு சொல்லிடுவாங்களோ . பிள்ளை பொறக்கறதுங்கறது சும்மா சாதாரணமான விஷயம் இல்ல டி. நீதாண்டி எனக்கு தைரியம் சொல்லணும். பிள்ளை பிறந்தா எனக்கு தண்ணி ஊத்த தெரியாது. இப்பதான் நிறைய யு டியூப் வீடியோ எல்லாம் வந்துருச்சு. அதுக்கு ஏத்த மாதிரி பாத் டப் எல்லாம் கூட வித விதமா இருக்குல்ல. எவ்ளோ நாள் முடியுமோ அவ்ளோ நாள் பால் குடுக்கணும். இந்த நான், செர்லாக் இது எல்லாம் கொடுக்கக் கூடாதுன்னு சொல்லறாங்க. அதுல அளவுக்கு மீறி நிறைய சுகர் போடறாங்களாம். யாரு இப்ப இதை பத்தி எல்லாம் கண்டுக்கறா . பொண்ணு பிறக்குமா பையன் பிறக்குமா? உனக்கு எது வேண்டும்?"
ஏதேதோ பேசிக் கொண்டே இருந்தவள் அடக்க முடியாமல் மீண்டும் வாய் மூடி கேவி கேவி அழுதாள்.
தான் பேசுவது ஏதாவது ஒரு வார்த்தையாவது இவள் காதில் விழுந்திருக்குமா? அடக்க முடியாதவள் எழுந்து கொண்டப் போது அவளின் கரம் பற்றி இருந்தாள் மலர்.
"அக்கா !"
மெதுவாக கண் விழித்துப் பார்த்தவளை கட்டிக் கொண்டு கதறினாள். மருத்துவர்கள் வந்து பார்த்தார்கள். பிறகு வந்த நாட்களில் உடலும் மனமும் தேற ஆரம்பித்தது. அப்போது தான் முதல் முறையாக அவள் உடன் பிறந்தவளிடம் நடந்த விஷயங்களை சொன்னாள் . ஆனால் அதற்கு சற்று நேரத்தில் இவளுக்கு இந்த மாதிரி பீதி நோய் வந்து விடும். அவன் வீட்டில் நடந்த விஷயங்களால் அவள் மிகவும் மனதளவில் பாதிக்கப் பட்டிருந்தாள் . தீபக் அவன் பெற்றோர் எல்லாரும் அவனுக்கு ஆதரவாக இருந்தார்கள்.மலரின் பெற்றவர்கள் இவளை ஏற்றுக் கொள்ளவில்லை.
"செத்தாலும் என் பொண்ணு அவ புருஷன் வீட்டை விட்டு வரக் கூடாது. பெரியவ ஓடு காலி. சின்னவ வாழா வெட்டியா ?"
தந்தை வானுக்கும் பூமிக்கும் குதித்தார் . எப்போதுமே தந்தையின் பின்னாலேயே நிற்கும் தாய் இதற்கும் சேர்த்து அவருக்கு ஆதரவாகவே இருந்தார் . அதாவது தான் ஒரு மிகச் சிறந்த உதாரணமாக இருந்து மகளை திருத்தப் போகிறார்.
====================================================== தலையில் அடைபட்டிருந்த மனைவியை பார்த்து விட்டு சோகமாக வீட்டுக்கு வந்தான் கதிர் ...
தன்னுடைய வீட்டில், யாருமில்லாத அனாதையாக தனியேப் படுத்திக் கிடந்தான். கையில் மலரின் போட்டோ . தன்னையும் அறியாமல் கண்ணீர் வந்துக் கொண்டிருந்தது. துடைக்க வேண்டும் என்பதே மறந்து பல நாட்கள் ஆகி விட்டது .
மலர். அவர்கள் வீட்டில் சொன்னது போல குண்டு பூசணிக்காய் எல்லாம் இல்லை. அழகாக இருந்தாள். சற்று உப்பிய கன்னங்கள் . நெற்றி கண் மூக்கு உதடு எல்லாமே எடுப்பாக அளவெடுத்து செய்தது போல இருக்கும்.
விவகாரத்துக்குச் சென்றார்கள். ஏன் பிரிகிறீர்கள் என்ற கேள்வியில் ஆரம்பித்து , நிறைய நேரம் பேசினார்கள். அப்போது அந்த கௌன்சிலர் கேட்ட கேள்வி இப்போது கதிருக்கு நினைவுக்கு வந்தது.
"இது தானே உங்க திருமண போட்டோ. அந்த போட்டோல அவங்க எப்படி இருக்காங்க. இப்ப எப்படி இருக்காங்கன்னு பார்த்திங்களா? அவங்க உங்க மேல ஒரு கம்பளைண்ட் கொடுத்தா போதும். உங்க நிலைமை என்னன்னு உங்களுக்குத் தெரியும் .அவங்க இப்பவும் உங்களுக்காகத் தான் யோசிக்கறாங்க. அவங்க உங்களை ரொம்ப நேசிக்கறாங்க. இது நான் இவ்ளோ பர்ஸனலா பேசக் கூடாது. பட் ஏதோ சொன்னா உங்க கல்யாண வாழக்கையை காப்பதல்லான்னு தோணிச்சு. இதுக்கு மேல உங்க இஷ்டம் தான் ." என்று முடித்து விட்டார்.
"எனக்காக நீ அவ்ளோ யோசிப்பியாடி. உன்னோட காதலை நான் இழந்துட்டேன். உன்கிட்ட வந்து மன்னிப்பு கூட கேட்க முடியுமா தெரியலைடி ." அவள் முகத்தில் தொட்டு தொட்டு அழுதுக் கொண்டிருந்தான் .
"யாருமில்லாத தனிமையில் அழுவது யாருக்கு கேட்கும்?"
கதிர் வேலு . இருபத்து ஒன்று ஆன மலருக்கு ஏற்றவன் என்று சொல்லி விட முடியாது. முப்பது வயது ஆண் மகன். இல்லை இல்லை ஆண் காளை . அப்படித்தான் அவனுக்கும் அவன் அன்னைக்கும் நினைப்பு. பார்க்க நன்றாகத் தான் இருப்பான். இருந்தாலும் முகத்தில் எந்நேரமும் ஏதோ ஒரு கவலை. பணப் பிரச்சனை. குடும்ப பாரம் எது வேண்டுமானாலும் காரணமாக இருக்கலாம். ஆர்கிடெக்ச்சர் படித்து முடிக்கும் தருவாயில் தந்தை இறந்துப் போனார். மேஸ்திரியாக இருந்தவர். அவர் விட்டுப் போன இடத்தில இருந்து தொழிலை ஆரம்பித்தான். அவர் விட்டதை முடிக்க வேண்டிய நிர்பந்தம் . அதில் அவனால் பெரியதாக வருமானம் ஈட்ட முடியவில்லை. அதனால் மெதுவாக அதையே இன்டீரியர் வேலையாக மாற்றிக் கொண்டான். முதலில் எல்லாம் குடும்பம் ஓட்டுவது பெரிய விஷயமாகத் தான் இருந்தது. தங்கை பி. காம் படித்து விட்டு வீட்டில் சும்மாதான் இருந்தாள்.
"வேண்டுமென்றால் டியூஷன் எடு. வெளில எங்கையும் வேலைக்குப் போகக் கூடாது. "தந்தையின் கட்டளையை அப்படியே அண்ணனும் செயல் படுத்தினான். வீட்டில் இருந்த படியே அவள் பாடம் சொல்லிக் கொடுத்தாலும் ஓரளவு குடும்பத்துக்கு அது உதவி கரமாகவே இருந்தது. அதனால் நானும் அண்ணனும்தான் தான் சேர்ந்து இந்த வீட்டை இந்த நிலைமைக்கு கொண்டு வந்துருக்கோம் என்ற திமிர் அவளுக்கு எப்போதுமே உண்டு. அடுத்தவன் வெற்றி . அவனும் என்ஜினீரிங் தான் படித்துக் கொண்டிருந்தான். அவனுக்கும் இதோ இந்த வருடம் முடிந்து விடும்.
குடும்ப பாரம் அத்தனையும் ஒருத்தனே தாங்கியபோது தங்கைக்கு நல்ல வரன் வந்தது. போலீஸ் மாப்பிள்ளை. சீர் சற்று அதிகம் செய்ய சொன்னார்கள் தான். இருந்தாலும் மாப்பிள்ளைக்கு நிறைய சொத்துகள் இருந்தன. கைக்கு மீறியது தான். விட மனமில்லை. பத்து பொருத்தம் இருந்தது என்றாலும் மாப்பிள்ளைக்கு தங்கை செல்வியை மிகவும் பிடித்து விட்டது.
"ஊருக்கே ராஜானாலும் பொண்டாட்டிக்கு புருஷன் " வெளிப்டையாகவேச் சொல்லி விட்டான். மகள் தலையணை மந்திரம் ஓதி தான் மாப்பிளையை கைக்குள்ள போட்டுக் கொள்ள வேண்டும் என்பதில்லை. அன்னைக்கு அத்தனை சந்தோஷம். அதிலும் நிச்சயத்தின் போது மாப்பிள்ளையின் கை மகளின் இடுப்பிலேயேதான் இருந்தது. செல்வியின் அன்னைக்குத் தான் வெட்கமாக இருந்தது. மாப்பிள்ளையின் வீட்டில் யாரும் எதுவும் கண்டு கொண்டது போலவேத் தெரியவில்லை. நிச்சயத்துக்கு அவர்கள் மிகவும் விலை உயர்ந்த துணியைத் தான் செல்விக்கு வாங்கினார்கள். லட்சத்திற்கு சில நூறுகள் தான் குறைவு. ரவிக்கை கூலி எப்படியும் எட்டாயிரம் வந்து விட்டது. அதுவும் அவளையும் அழைத்துக் கொண்டு மாப்பிள்ளை ஊர் சுற்றியபோது அத்தனை பெருமையாக இருந்தது சிவகாமிக்கு . மாப்பிள்ளையின் இரு சக்கர வாகனமே சில லட்சங்கள். அவர்களின் வீட்டிற்கு சென்று பார்த்தவர்களுக்கு எத்தனை கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை. மகள் இப்படிப் பட்ட பெரிய இடத்தில் தான் வாழ வேண்டும் என்ற ஆசை வந்து விட்டது. அதிலும் அந்த நட்ட நடு ஊஞ்சலில் சர்வாலங்கார பூஷிதையாக மருமகனுடன் தன் மகள் செல்வி பட்டு கட்டி அமர்ந்தால் ? அன்னைக்கு நினைத்ததுமே முகம் பூரித்தது. ஏனோ இதே எண்ணங்கள் தன்னுடைய மூத்த மருமகளுக்கும் வந்திருக்கலாம்.
மகளைப் பற்றி நினைத்தவர் சற்று மகனைப் பற்றியும் நினைத்திருக்கலாம். எல்லாம் செய்ய வேண்டியது ஆம்பிளை பையன் கடமை தானே. ரெண்டு பசங்களுக்கு நடுவுல ஒரு பொண்ணு. அண்ணன் தம்பி தாங்காம வேற யாரு செய்வா? அது சரி இளைய மகன் என்ன செய்யப் போகிறான்?
அது எப்படி அவன் கடைக்கு குட்டி. இன்னும் படிப்பே முடிக்கவில்லை. அவனால் என்ன செய்ய முடியும்? வேண்டுமென்றால் குழந்தை பிறப்பின் போது பார்க்கலாம். இந்த மன நிலையில் தான் செல்வியின் அன்னை சிவகாமி இருந்தார்.
செல்விக்கு திருமணம் நிச்சயமான நேரத்தில் வந்தது தான் திவ்யா ஜாதகம். நண்பர் மூலமாக கிடைத்தது. அப்படி இப்படி என்று விசாரிக்க இருவருக்கும் ஒரே ஊர்தான்.அன்பின் தந்தையும் மலரின் தந்தையும் பழைய காலத்து நண்பர்களாம். திருட்டு மாங்காய் கதை முதல் அத்திப் பலம் பொறுக்கித் தின்றது வரை எல்லாம் பேசினார்கள். இதை ஒரு பேய் கதை வேறு தனி உபாயம். மலரின் தந்தை விளையாடிவிட்டு திரும்பும்போது ஒரு நாள் இரவில் எதையோ கண்டு பயந்து விட்டாராம். அப்போது கதிரின் தந்தைதான் அவரை சைக்கிளில் ஏற்றிக் கொண்டு கருப்புக் கோவிலுக்கு அழைத்துச் சென்றாராம். அன்று கதிரின் தந்தை மட்டும் இல்லாவிட்டால் இன்று மலரின் தந்தை உயிருடன் கூட இருந்திருக்க மாட்டாராம் . அதற்காக மகளை தானம் அது தான் கன்னிகாதானம் செய்ய ஒப்புக் கொடுத்துவிட்டார். மகளுக்குப் பிடிக்கிறாதா? கேட்கவே இல்லை. கதிருக்கோ திவ்யாவைப் பார்த்த உடனேயேப் பிடித்து விட்டது. நிச்சயம் ஆகிவிட்டது. அன்றே அப்போதே கோவிலில் . இனி என்ன? அவள் தான் தன்னுடைய மனைவி என்று நினைக்க ஆரம்பித்து விட்டான்.
இத்தனை வருடங்களாக தன்னைப் பற்றி நினைக்காதவன், அன்னை தங்கை, தம்பி அவர்களின் படிப்பு ன்றே சுற்றிக் கொண்டிருந்தவனுக்கு இப்போது வாழ்வில் ஒரு வசந்தம் வர போகிறது. தன்னுடைய குடும்ப பாரத்தை சேர்த்து சுமக்க ஒரு ஜீவன். என்னால ஒத்தைல இந்த சுமையை தூக்க முடியலம்மா. என்றுமே அவன் சொன்னது இல்ல. உடன் பிறந்தவர்களுக்கு செய்வது தான் தனக்கு இன்பம் என்று இருந்து விட்டான்.
நாம் நினைப்பது நடந்து விடுமா என்ன?
வேறு ஒருவரை விரும்புகிறேன் என்று திவ்யா பெற்றவர்களிடம்
எத்தனையோ சொல்லிப் பார்த்தாள் . பெற்றவர்கள் சம்மதம் தர அவர்களின் முகம் பார்த்து நின்றாள். அதற்குப் பெரியவர்கள் ஒத்துக் கொள்ளவே இல்லை. தீபக் வீட்டில் ஒத்துக் கொண்டு விட்டார்கள். வேறு ஜாதி. அவன் வீட்டுப் பெரியவர்கள் கூட தங்கள் நிலையிலிருந்து மகனின் சந்தோஷத்திற்காக இறங்கி வந்துப் பேசினார்கள்.
"இங்கப் பாருங்க ஐயா! உங்களை விட உசந்த ஜாதிப் பொண்ணுன்னு சொல்லிக்க உங்களுக்கு வேணுன்னா பெருமையா இருக்கலாம். நான் என்னோட சொந்த பந்தங்க மூஞ்சில எப்படி முழிக்க முடியும்? நான் ஒத்துக்கிட்டாலும் நாளைக்கு எங்க வீட்டுலேர்ந்து உங்க பையனுக்குத் தான் என்ன மரியாதை கிடைக்கும்?"
"அதை பத்தி என்னங்க . நாம வாழ்ந்து முடிச்சவங்க. இனிமே இவங்க தானே நமக்கு. நம்ம புள்ளைங்க சந்தோஷத்தை விட நமக்கு வேற என்ன வேணும். எங்க வீட்டுல உங்க பொண்ணு மகாராணி போல இருப்பா . அவளை என்னோட கண்ணுக்குள்ள வச்சு பார்த்துப்பேன். சம்பந்தி அம்மா இதமாக சொல்லிப் பார்த்தார். பெண் வீட்டில் பிடிவாதாக முடியாது eன்று விட்டார்கள் .
" என்னோட வாழ்க்கை தீபக் கூட தான். உங்களால முடிஞ்சா என்னை கூட்டிக்கிட்டு போங்க. இல்லன்னா என்னோட பிணத்தை தான் நீங்க பாக்க முடியும். தீர்க்கமாக சொன்னவளை இயலாமையுடன் அழைத்துச் சென்றார்கள் பெரியவர்கள்.
"ஒரு நிமிஷம் இரு."தான் பெரியவளுக்காக சேர்த்து வைத்த நகைகளை கொண்டு வந்து கொடுத்தார் தந்தை. இனி நானோ என்னோட பொண்டாட்டியோ செத்தாக் கூட நீ இந்த வீட்டுப் படி ஏற கூடாது.
"இந்தாங்க உங்களோட எந்த நகையும் எனக்கு வேண்டாம். நானும் செத்துப் போனா கூட நீங்களோ உங்க பொண்டாட்டியோ வந்து என்னை பாக்க வேணாம்."
வெளியிலிருந்து பார்த்தாள் மகள் ரொம்பவும் திமிராக நடந்துக் கொண்ட மாதிரி தான் தெரியும். பெற்றவர்களை நினைத்து நினைத்து அவள் அழுத அழுகை அவளுக்குத் தானே தெரியும். வேறு ஏதாவது காரணம் சொல்லி இருந்தால் கூட அவளால் அவர்களை சமாதானம் செய்து இருக்க முடியும். ஜாதி என்ற காரணம் அவளால் ஏற்க முடியவில்லை. தீபக் எத்தனை நல்லவர்! அவன் பெற்றவர்கள் தான் இருக்கட்டுமே தனக்காக திருமணம் கூட ஆகாத pபோது வந்து நின்று எனக்காக பேசினார்கள். அவர்களை நான் எப்படி உதாசீனப்படுத்த முடியும்? காதல் ஜாதி அந்தஸ்து எல்லாம் பார்த்து வருவதா?
இவள் அலுவலகத்தில் மருத்துவ முகாம் நடத்த இவனை மருத்துவமனையில் சென்று பார்த்தது முதல் இவளுக்கு அவன் மீது காதல் பிறந்தது. நேர் கொண்ட பார்வையும், அமைதியான தெளிவானப் பேச்சும் அவளுக்கு அவனைப் பிடித்து தான் போனது.
இவள் காதலை வெளிப்படுத்தியபோது கூட அவன் முதலில் ஏற்றுக் கொள்ளவில்லை. நீதான் வேண்டும் இவள் பிடிவாதமாக நின்ற போது தான் சரி சொன்னான். இருந்தும் தப்பாக ஒரு பார்வை பார்த்ததில்லை. தன்னுடைய வாழ்க்கை எந்த விதத்திலும் பாதித்து விடக் கூடாது என்று தன்னை அடக்கிக் கொண்டவனுக்கு எப்படி தன்னால் துரோகம் செய்ய முடியும். முடியாது. அதனால் தானோ என்னவோ அந்த நேரத்தில் தீபக்குடன் வந்து விட்டாள். அவள் செய்தது அவள் வாழ்க்கையைப்பொறுத்த வரையில் சரியாக இருக்கலாம். அதனால் தங்கை வாழ்க்கை பாதிக்கப்படக் கூடும் என்று அவள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. தன்னுடைய இடத்தில் தங்கை. அவள் இப்போது தான் கல்லூரியில் இறுதித் தேர்வு எழுதி இருக்கிறாள்.
கதிருக்கும் அவளுக்கும் திருமணம் நடந்து முடிந்த விஷயம் கூட அக்காவுக்கு சில மாதங்களுக்குப் பிறகுதான் தெரியும். அப்போது எல்லாமே கை மீறி விட்டது.
பெரியவள் வீட்டை விட்டு போனாலும் பரவாயில்லை . சின்னவளை பெண் எடுக்கிறோம். திருமணம் நின்று விட்டால் ஊரு தப்பா பேசும் என்றார் சிவகாமி .பிறகு என்ன? டும் டும் டும் தான்.
முதலிரவு? அடேங்கப்பா! நம் மாப்பிள்ளை தயாராகி அமர்ந்திருக்க மலர் அன்ன நடை போட்டு வந்தாள்.
தலை குனிந்து வந்தவளை ஏறெடுத்துப் பார்த்தானா?
கை பிடித்து கட்டிலில் அமர வைத்தான்.
"ஏன் இவ்ளோ லேட்?"
இவள் பதில் எதுவும் சொன்னாளா?"எனக்கு கேட்கவில்லை.
"இந்தா சீக்கிரம் குடி ! அவனே பாலைக் குடித்து விட்டு மீதம் அவளிடம் கொடுத்தான்.
அவள் குடித்து முடித்ததும், "ம்! சீக்கிரம். 9.30 க்கு நேரம் குடுத்திருக்காங்க.
ஏற்கனவே 9.20 ஆகிடுச்சு. சொல்லிக் கொண்டே விளக்கை அணைத்தான்.
தொடரும் ...