• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

தீஞ்சுவை மலர்-8

STN20

New member
Staff member

அத்யாயம் -8

கணவன் +காதல் =திருமணம் என்று நினைத்து வந்த பெண். திருமணம் =கடமை-காதல் என்று நினைக்கும் ஆண். இவங்க தான் நம்ம கதிர் -மலர் ஜோடி .

காதல் =கல்யாணம்+புரிதல் இதுதான் நம்ம யமுனா-ஆரிவ் ஜோடி.

வாங்க கதைக்குள்ள போகலாம்.......

ஏற்கனவே 9.30க்கு குறிச்சி நேரத்துக்கு எல்லாம் முடியனுமில்ல ! முடியறது இருக்கட்டும் . ஆரம்பம் ! கேள்விக் குறியா? ஆச்சர்ய குறியா?

அவன் நெஞ்சில் விழுந்தவள் அவனை விழி விரித்துப் பார்த்தாள்.

அந்த விழிகளில் என்னைக் கண்டானாரோ! என்னால மனைவிங்கற ஸ்தானத்துல உங்க அக்காத் தவிர உன்னை வைச்சு என்னால யோசிக்க முடியல. அட் தி சமே டைம் நான் உன்னையும் விட முடியாது. உனக்கு கணவனா நான் செய்ய வேண்டியக் கடமை இது. அவ்வளவு தான். அடுத்த வார்த்தை அவளை பேச விடவில்லை.

"தொட்டு தடவி சூடேற்றி விட்டு ஒன்றும் இல்லை .

முத்தம்-கன்னத்தில் ? நெற்றியில்?

அது எப்படி? முதலிரவில் அடுத்த ஐந்தே நிமிடத்தில் அனைத்தும் முடியும்? ஆம் ! எல்லாம் முடிந்து விட்டதே. அவளுக்கு வழிந்த இரத்தமும் தெரியாது. வலியில் துடித்ததும் தெரியாது. தெரிந்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. கணவனாக சொன்னபடிக்கு கணவனாக 9.30க்கு நடந்துக் கொண்டான். அப்போது தான் வம்சம் தழைக்க முடியும் . மாமியாரின் கட்டளை.

"தேங்க்ஸ் டீ !"

முகம் தடவி சொல்லி விட்டு உறங்கி விட்டான்.

"அவன் முகத்தில் அவள் என்ன கண்டாள் ?"

'இது முதலிரவா? கற்பழிப்பா? இல்ல அவன் நன்றி சொன்னானே தான் ஒரு விலை மாதுவா ?'

அடுத்த நாள் எழுந்து வந்தவளுக்கு பெரியதாக வேலை எல்லாம் இல்லை. அடுத்த சில நாட்கள்.

"எல்லா நகையும் போட்டுக்கோ. கல்யாணம் விசாரிக்க வருவாங்க. சாதாரண முக அலங்காரத்தில் அத்தனை நகையும் போட்டுக் கொண்டு அழகாகவே இருந்தாள் மலர்.

இப்போதாவது அவர் என்னைப் பார்ப்பாரா ? ஆவலாக அவன் முகம் பார்த்தாள்.

அவன் கண்கள் இரண்டு அன்னையின் முகம் தவிர வேறு எங்கும் நகரவே இல்லை.

"ஏண்டா இன்னிக்கே வேலைக்கு போகணுமா?"

"என்னம்மா நீ? ஏற்கனவே கல்யாணத்துக்கு லீவு. இன்னும் செல்வி கல்யாணத்துக்கு வேற நிறைய லீவு எடுக்கணும். தெரியாதாம்மா ?"

"இல்லடா! எல்லாரும் கல்யாணம் விசாரிக்க வருவாங்க. நீயும் இல்லாம அவ எப்படி டா?"

"அது சரி அவங்க வருவாங்க, இவங்க வருவாங்கன்னு நானு வீட்டுல உக்காந்து பொண்டாட்டிய கொஞ்சிகிட்டு இருந்தால் அடுத்த மாசம் இந்த சோறு யாரு போடுவா?"

சொல்லி விட்டு எழுந்து கை கழுவிக் கொண்டான்.

அருகில் நின்றவள் புடவை முந்தியை கை துடைக்க கொடுக்க,

"எனக்கு இதெல்லாம் புடிக்காது. எனக்கு எல்லாமே சரியா இருக்கணும். "

சொல்லி விட்டு உள் அறையில் இருந்து வேறு ஒரு சிறு துணியைக் கொண்டு கை துடைத்துக் கொண்டான். அது துணி அல்ல. அவன் அன்னையின் கிழிந்த புடவை. அடுத்த முறை அதை மாற்றி வேறு ஒரு சிறு கைத் துண்டை கொடுக்க பிடிவாதமாக அந்த துணியைத் தான் தேடினான்.

"அது வேணாம். கிழிஞ்ச புடைவை எதுக்கு ? அதை கைப் பிடித் துண்டா உபயோகப் படுத்திக்கறேன்."

"அது ஒன்னும் கிழிஞ்ச புடவை இல்லை. எங்க அம்மாவுக்கு அது நான் முதன் முதல்ல வாங்கி கொடுத்த புடவை. என்னோட சம்பாத்தியம். அப்பா சம்பாத்தியத்துல உக்காந்து திங்கறவங்களுக்கு எப்படித் தெரியும் கஷ்டப் பட்ட தானே தெரியும் காசோட அருமை?"

"இவரு என்ன சொல்லறாரு?ஏதேதோ சம்பந்தமே இல்லாம பேசறாரு? இவளுக்கு ஒன்றும் விளங்கவில்லை. கல்லூரியில் டிஸ்டின்க்ஷன் வாங்கியவளுக்கு இந்த வீட்டில் நடக்கும் பல சம்பவங்கள் புரியாமல் தான் போகும். அவளை வீட்டை விட்டு அடித்து துரத்தும் போது கூட புரியப் போவதில்லை.

அவள் முதல் முறை சமையல் அறைக்குள் நுழைந்த போது தலை சுற்றியது. சமையல் அறை அத்தனை களேபரம். அதை கூட சரி செய்து விடலாம். சுத்தம்? சொர்கம் என்பது நமக்கு சுத்தமுள்ள வீடுதான். பாட்டு பாடி வீட்டை அவளும் அவள் அக்காவும் சுத்தம் செய்துக்கொண்டே இருப்பார்கள். பாத்திரம் தேய்த்து விட்டு சிங்கில் முகம் பார்த்து ஹை பை போட்டுக் கொள்வார்கள். ஒரு காலெண்டர் பேப்பர் கூட தேவை இல்லாமல் அவர்கள் வீட்டில் இருக்காது. துணிக் கூட . ஒன்று வாங்க வேண்டுமென்றால் இரண்டு கழிக்க வேண்டும் . அப்படி வீட்டில் இருந்தவளுக்கு இங்கே சமையல் அறையில் இருந்த அழுக்கும் பூச்சிகளும் முதல் முறை பார்த்தவுடன் வாந்தி வந்து விட்டது. இரவில் கணவனிடம் சொன்ன போது ,

"ரொம்ப டிராமா பண்ணாத. அம்மாவுக்கு உடம்பு முடியல. தங்கச்சி தான் இத்தனை நாளா பார்த்துகிட்டு இருந்தா. அதான் நீ வந்துட்டியே. நீ பாரு. அவ கொஞ்ச நாளைக்காவது ஜாலியா இங்க இருக்கட்டும். பாவம். அங்க போனா இருக்கவே இருக்கு வேலை."

'தன்னுடைய பெற்றோர் ஏன் இப்படி சொல்லவில்லை?"

அவளுடைய நகைகள் வெள்ளிப் பாத்திரங்கள் பாலிஷ் செலவு கூட இல்லாமல் அப்படியே செல்விக்குப் போனது.

என்னங்க? நாம ஹனி மூனுக்கு போகலாமா?"

"என்ன கிண்டலா? என்னோட மூஞ்சிய பாரு. கொஞ்ச நேரம் தூங்க முடியுமான்னு கிடக்கறேன். இதுல ஹனி மூனா?"

அப்படியே அந்த ஆசை நொறுங்கி விட்டது. முதலிரவில் நெருங்கியவன் பிறகு வந்த நாட்களில் நெருங்கவே இல்லை. இவள் அவன் அருகில் சென்றால் ,

"ப்ளீஸ்! என்னை தொந்தரவு பண்ணாத. நான் ரொம்ப டயர்டா இருக்கேன்."

முதலில் சில நாட்கள் பாவம் என்று ஒத்துக் கொண்டாள். பிறகு வந்த நாட்கள்?

நாத்தனார் திருமணம். வந்தவர்களுக்கு சமையல் செய்யவும், அண்டா, குண்டா என்று பாத்திரம் துலக்க, இவர்கள் வருவார்கள் அந்த வேலை இந்த வேலை என்று இடுப்பு ஒடியாமல் இருந்ததே பெரிய விஷயம்.

அவ்வப்போது அம்மா வந்து உதவி செய்தார். இல்லை என்றால் இவள் பாடு அதோ கதிதான் செல்வியின் திருமணம் முடிந்தும் இவளுக்கு நிம்மதி இல்லை. உடல் நலமில்லாத மாமியாருக்கு தனி சமையல். தனக்கும் கணவனுக்கும் ஒரு சமையல் , நேரம் கேட்ட நேரத்தில் வந்து நிற்கும் கொழுந்தனுக்கு ஒரு சமையல்.



"அத்தை வெற்றிக்கும் சேர்த்து செய்து ஹாட் பேக்ல போட்டு வச்சுட்டேன். வந்த ஒடனே அவரு சாப்பிட வேண்டியதுதான்.

"அது என்னம்மா அப்படி சொல்லிட்ட. வெளில போய் படிச்சுட்டு வர்ற புள்ளைக்கு நாலு தோசை செய்யறது அத்தனை கஷ்டமா ? வீட்டு வேலைகளை கஷ்டமா செய்யாத மருமகளே. இஷ்டமா செய்தா தான் சாப்பாடு செரிக்கும் ."

"அது சரிதான் அத்தை. இன்னிக்கு தோசை போடல . சப்பாத்தி தான். "

"எதுவா இருந்தா என்ன?"

"என்ன என்ன இங்க பிரச்சனை? என்ன உன் குரல் வாசல் வரைக்கும் கேக்குது?"
"அது இல்லங்க வெற்றிக்கு சேர்த்து .."

"இந்த மகாராணியாள வெற்றிக்கு சேர்த்து சமைக்க முடியாதம்பா "

"அத்தை நான் எங்க அப்டி சொன்னேன் "

"அப்பeஎங்க அம்மா பொய் சொல்லறாங்களா ?"

"ஆமா! நான் சொல்லாதது எல்லாம் இவங்க சொன்னதா சொல்லறாங்க "

பளீரென்று கன்னத்தில் அரை விழுந்தது.

"யாரை பார்த்து பொய் சொல்லறதா சொல்லற. அவங்க என் அம்மா. அவங்க என்ன சொல்லறாங்களோ அதுதான் இங்க நடக்கணும். ஏதாவது அவங்க கிட்ட வாய் பேசின தொலைச்சுடுவேன் ராஸ்கல்."

வந்தான், ஏதோ அவன் அம்மாவிடம் கேட்டுக் கொண்டான். பளீரென்று அறைந்தான். திட்டினான் .போய்ட்டான்.

இவளால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவனிடம் இதைப் பற்றி பேச வேண்டும். விறு விறுவென அறைக்குள் நுழைந்த போது கதிர் லுங்கி மாட்டிக் கொண்டிருந்தான்.

"என்ன நீங்க வந்தீங்க என்ன எதுன்னு கேக்க கூட இல்லை என்னை அடிச்சுட்டு போயிட்டீங்க ?

அவளை நோக்கி அடி எடுத்து வைத்தான்.

பயத்தில் அவள் கால்கள் பின்னே சென்றது.

அமைதியாக அவள் முகத்தை தன்னருகே இழுத்து உதட்டோடு உதடு பொறுத்தினான் .

"இப்படி கொஞ்சுவாங்களா? இதுக்குத் தானே இப்படி சில்லியா பிஹேவ் பண்ணற ?"

அவளுக்கு அவமானத்தில் உடல் குறுகியது. அழுதுக் கொண்டே குளியல் அறைக்குச் சென்று அடைக்கலமானாள் .

நடுல நடுல பழசுக்கு பிய்த்து வரலாம் ...மொத்தமா வேணாம்.



வட்ட வட்டமாக தோசை செய்துக் கொண்டிருந்தவளை குறுகுறுவென்று பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு இந்த நினைவு வந்தது. அவளுக்கு சிவகாமி அவள் கையை தோசைக்கு கலீல் வைத்து தேய்த்தது நினைவுக்கு வந்திருக்கலாம் .



அடுப்பில் இருந்த தோசையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். இவனுக்குப் புரிந்து விட்டது. பட்டென அடுப்பை அனைத்தவன், இவளை ஹாலில் சோபாவில் அமர வைத்தான்.

அன்று அவன் அத்தனை மோசமாக நடந்து கொண்டதற்கு இவளிடம் மன்னிப்பு கேக்க வேணும். ஆனால் இப்போது இல்லை. அவசரமாக தன்னுடைய போனை எடுத்தவன்,

மலர் இங்க இந்த ரீல்ஸ் பாரேன்,

டப்பிங் டப்பா விமல் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார் . அதை ரசித்தவள் அடுத்தது போனாள். இவள் தொடர்ந்து பழைய நினைவுகளில் இருக்கைக்கு கூடாது.

ஆரிவ் கூட ஊரில் இல்லை. பிடிக்கிறதோ இல்லையோ வேறு வேறு விஷயங்களில் மனதை செலுத்தினாள் . இப்போதெல்லாம் எதை தொட்டாலும் முழுக்க அரசியல் தான். அலுத்துப் போனாள் .

இவள் கையில் போனை வைத்துக் கொண்டிருக்க கதிர் அவசரமாக மிக்சியில் தயாராக இருந்த சட்னி சாமான்களுடன் தண்ணீர் சேர்த்து அரைத்து ஒரு கப்பில் சட்னி சாம்பாருடன் இவளுக்கு கொண்டு வந்து கொடுத்தான்.

தேங்காய் சட்னி, தேங்காய் எண்ணெய்யில் தாளித்து கொட்டி இருக்கிறான். ஒற்றை மிளகாய் கிள்ளி போட்டு தாளிப்பின் வாசனையுடன் வெங்காய சாம்பார் மணக்க மணக்க கொண்டு வந்து கையில் கொடுத்தான். இவள் செய்தது தான் . குழந்தை போல குட்டி குட்டியாக பித்து வாயில் போட்டுக் கொண்டவளை பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு பொறுமை போனது .

அவனே அதை வாங்கி இவளுக்கு ஊட்ட ஆரம்பித்தான். இவள் மறுக்கவில்லை. வழக்கம்போல வாய் பேசவும் இல்லை.

தனக்கு கீழே மண்டியிட்டு ஊட்டிக் கொண்டிருந்தவன் முகம் பார்த்தாள் . லேசாக தலை நரைக்க ஆரம்பித்தது.

அவன் புரிந்து கொண்டான்.

"இப்ப எல்லாம் வேலைக்கு நடுவுல டீ ரொம்ப குடிக்கறது இல்ல. முன்ன நீ சொன்ன போதே கேட்டிருக்கலாம். இப்ப பாரு, தலைக்கு பவுடர் போட்ட மாதிரி ஆகிட்டு வருது.

அவன் சொன்ன விதத்தில் கிளுக்கென வந்த சிரிப்பை அவன் எதிரில் காட்ட விரும்பாமல் அடக்கிக் கொண்டாள் .

"சிரிப்பு வந்தா சிரி மலர்."

"என்னோட சந்தோஷத்துக்கு நீங்க என்னிக்கும் காரணமா இருந்தததில்ல. ஆனா என்னோட சிரிப்பு தொலைஞ்சதுக்கு நீங்க தான் காரணம் ."

அழுதுக் கொண்டே சொன்னவள் அவள் தான். ஆனல் அவள் சொன்னது பொய் இல்லை.

பழைய நினைவுகள் நினைவுக்கு வர ஊட்ட மறந்தவன் கையை இழுத்து அவளே வாங்கிக் கொண்டாள் .

ஆரிவ் எங்கே? யமுனாவின் பிறந்த நாள் அன்று ஆவலுடன் காத்திருந்தாளே. இருவரும் சந்தித்துக் கொண்டார்களா ?மலரும் கதிரும் ஒன்றாக? எப்படி சத்தியம்.

தொடரும்..








 
Top Bottom