• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

தீஞ்சுவை மலர் -9

STN20

New member
Staff member
தீஞ்சுவை மலர் -9

ஆரிவ் எங்கே? யமுனாவின் பிறந்த நாள் அன்று ஆவலுடன் காத்திருந்தாளே. இருவரும் சந்தித்துக் கொண்டார்களா ? மலரும் கதிரும் ஒன்றாக? எப்படி சத்தியம்?

யமுனா அவள் பிறந்த நாள் அன்று காலையில் வழக்கம்போல கோயிலுக்கு சென்று விட்டு வந்தாள். இன்று அவளுக்கு ஷூட்டிங் இருந்தது. ஷூட்டிங் முடித்து விட்டு வீட்டுக்கு வந்துக் கொண்டிருந்தாள் . முகம் முழுவதும் ஷாலினால் மூடி யாரும் தன்னுடைய முகத்தை பார்க்க முடியாதபடிக்கு மறைத்து கொண்டு தான் அவள் வெளியில் செல்லவேண்டும் . அமைதியாக ஒரு பேருந்தில் இருந்து இறங்கியவள் அடுத்த பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தாள். அப்போது தான் அவன் வந்து நின்றான். ஏதோ ஒரு மருத்துவ மனை பெயர் எழுதியிருந்த சட்டை . ஹெல்மட்டை அவிழ்த்து விட்டு கைப் பேசியில் பேசி விட்டு கிளம்பி விட்டான் . பிறந்த நாள் அன்று அவனைப் பார்க்க வேணும் என்று இருந்தவளுக்கு இந்த சந்திப்பு சந்தோஷம் தான் என்றாலும் அவன் தன்னை பார்க்கவில்லையே என்ற ஏக்கம் இருந்தது. இருந்தாலும் அவனைப் பார்த்த மகிழ்ச்சியில் வீட்டுக்கு வந்தாள் .

வரும் வழியில் எங்கோ பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.

"கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி "

இது தனக்கான வரிகள் தான் என்று நினைத்துக் கொண்டாள் . முகம் சிவந்து விட்டது.

வீட்டுக்கு வந்தவளுக்கு அத்தனை அயற்சியாக இருந்தது.

அவள் வீட்டுக்குள் நுழையும்போதே தந்தை ஆரம்பித்து விட்டார். இன்னும் எத்தனை நாள் இந்த காண்ட்ராக்ட் இருக்கு?" இது தான் நிஜம் மனதிற்குள் சொல்லிக் கொண்டாள் .

"நீங்க தானே சைன் பண்ணீங்க ?" சுள்ளென்று அவளுக்கு வந்த கோபம் அவள் குரலில் தெரிந்தது.

"என்னையே எதிர்த்து பேசறியா நாயே" என்று பளீரென்று அவளுக்கு கன்னத்தில் அறை விழுந்தது அவள் தந்தையின் கையால் .

"இந்த காண்ட்ராக்ட் முடிச்சதும் மறுபடியும் என்ன செய்ய போறாளாம் . நிமே சோத்துக்கு என்ன வழி செய்வாளாம் மகாராணியை கேட்டு வை" என்று அவர் எங்கோ ராஜ உத்யோகம் பார்க்க சென்று விட்டார்.

கன்னத்தைப் பிடித்துக் கொண்டவள், "என்ன கலெக்டருக்கு காசு நீங்க கொடுத்தீர்களா ?" சித்தியை முறைத்தாள்

"நான் வேற என்ன பண்ணுவேன் யமுனா ?"

"நீங்க இப்படி காசு கொடுத்து கொடுத்து தான் அவர் இப்படி சீட்டாட்டம் ஆடிட்டு குடிச்சுட்டு வராரு . ச ! " ஆத்திரமாக சித்தியை முறைத்து விட்டு குளிக்கச் சென்றாள் .

குளிக்கச் சென்றால் மட்டும் அவளின் பிரச்சனைகள் முடிந்து விடுமா ?

உடலில் சோப்பு போட்டாவளுக்கு அத்தனை வலி. பல்லை கடித்துக் கொண்டாள் . அதுவும் வலித்தது. குளித்து விட்டு வந்தாள் .யாரோ கசக்கிய உடல், வலியில் கசங்கிய முகம். உதட்டில் இருந்து இரத்தம் வந்தது.

நீர் துளி விழும் முகத்தில் அந்த கசிந்த ரத்தம் அப்பட்டமாக தெரிந்தது. புரிந்து கொண்ட சித்திக்கும் மனதில் வேதனையாக இருந்தது. அமைதியாக யமுனாவுக்கு தலை கோதினாள். அவர் தோளில் முகம் புதைத்து அழுதாள் யமுனா. எதற்கு இந்த அழுகை. தந்தையின் பொறுப்பிலாத்தனமா, அவர் அடித்ததா? பணக் கஷ்டமா ? உடல் வலியா?எல்லாவற்றிற்கும் கண்ணீர் தான் வடிகால். மகளை சமாதானம் செய்த சித்தி தான் அவளுக்கு உணவு பரிமாறினாள். இவளுக்கு பிறந்த நாள் என்பதால் கேசரி செய்திருந்தாள் . நெய் இல்லாமல் முந்திரி இல்லாமல் கூட அருமையாக இருந்தது.

"சூப்பரா இருக்கு சித்தி." சித்தியின் கைக்கு முத்தம் கொடுத்தாள் யமுனா. லேசாக கன்னம் சிவக்க சூடான சாதம் போட்டு வைத்த குழம்பு ஊற்றினாள் . சுட்ட அப்பளம் வத்த குழம்பு கூட பிரமாதம் தான்.

உணவை முடித்து அப்படியே படுத்து விட்டாள். விட்டத்தை பார்த்தவளுக்கு அலுவலகத்தில் நடந்த சம்பவங்கள் தான் நினைவுக்கு வந்தது. கேவலமான பார்வையும், அசிங்கமான பேச்சுகளும்.. சீ ! என்று தான் இருக்கிறது.

நாட்கள் எங்கேயும் யாருக்காவும் காத்திருக்காது நாட்கள் ஓடிக் கொண்டு தான் இருக்கின்றன .

ஆரிவ் ஆசைப்பட்டபடியே ஒரு கிளினிக் ஆரம்பித்து விட்டான். அது அந்த கோயில் அருகில் தான் இருக்கிறது. யமுனாவும் ஆரிவும் எப்போதாவது சந்தித்துக் கொள்வார்கள். பேச்சு வார்த்தை சரியாக ஆரம்பிக்கவில்லை. பார்த்தால் புன்னகை அவ்வளவுதான் . இருப்பினும் அவனைப் பார்க்கும் நேரம் யமுனாவின் மனதில் ஏதோ ஒரு இனம் புரியாத சந்தோஷம் வருகிறது. நலமா என்று அவன் பார்வையால் வருடும் போது மனதிற்குள் ஒரு இதம் வருகிறது.

இங்கே மலரும் கல்லூரியில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அதே நேரம் காலையிலும் மாலையிலும் ஒரு ஜிம்மில் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். அங்கு வருபவர்களுக்கு தேவையான உணவு முறைகள் சொல்வது கூடவே அவள் தான் அங்கு மானேஜர். இவர்களின் ஜிம்மிற்கு கீழ் தளத்தில் ஒரு நடன வகுப்பும் நடந்துக் கொண்டிருந்தது. இந்திய நடனம் கூடவே மற்ற படங்களுக்கும் அங்கே பயிற்சி நடந்துக் கொண்டிருந்தது. அது ஒரு பிரபலமான நடன வகுப்பு பயிற்சிக் கூடம் தான். நிறைய திரை இசை பாடல்களுக்கு இவர்களின் நடனக் குழு செல்லும். பாடலை இவர்களிடம் முன்பே கொடுத்துவிட்டால் போதும் அதற்கு ஏற்ப இவர்கள் பயிற்சி செய்து விடுவார்கள். இவர்களின் நடனம் நன்றாகவே இருப்பதால் டான்ஸ் மாஸ்டர்கள் எந்த டென்ஷனும் எடுத்துக் கொள்ள வேண்டாம். மாறுதல் இருந்தால் சொன்னால் மட்டும் போதும் அதையும் வேகமாக ஸ்டைலாக ஆடி முடித்து விடுவார்கள்.

மலருக்கும் நடனத்தில் ஆர்வம் உண்டு. அதனால் வேலை பெரியதாக இல்லாத நேரங்களில் அவளும் அங்கே செல்வாள். முதலாளியிடம் அதற்கென்று தனியாக அனுமதியும் வாங்கி இருந்தாள் . கதிரின் பிரிவு விவாகரத்து என்று மனதளவில் பாதிக்கப்பட்டிருந்தவளுக்கு இந்த நடனம் தன்னை மீட்டு எடுத்துக் கொள்ள மிகவும் உதவியாக இருந்தது. ஆரிவ் கூட அவ்வபோது வந்து சில ஸ்டெப் போட்டு விட்டு போவான். அழகன்,ஸ்டைலான தோற்றம், நடனம் கேட்கவும் வேண்டுமா? அவனின் முகம் காணவே பல கன்னிகள் தவம் கிடப்பார்கள் .

=======================================================================



அன்று மருத்துவமனையில் மலரை பார்த்து விட்டு வந்த கதிர் இனி தான் அவளை பார்க்க வேண்டாம் என்று தான் நினைத்தான்.

"ப்ளீஸ் எனக்கு அவ உயிரோடாவது வேணும்." அவள் இரண்டாம் கணவன் கேட்கும்போது இனி தான் அவர்கள் வாழ்க்கையில் நுழைவது சரியில்லை. அவளுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நீதிமன்றமே சொல்லி விட்டது. அவளும் வேறு ஒருவருடன் திருமண வாழ்வில் இணைந்து விட்டாள் . எனக்கும் அவளுக்கும் இனி எந்த சம்பந்தமும் இல்லை. ஒதுங்கிக் கொண்டான். அவன் கல்லூரியில் அவளை பார்த்ததும் கூட எதிர் பாராத சந்திப்பு தான் . அவன் அந்த கல்லூரிக்கு முதன் முதலில் வந்திருந்த சமயம் அவன் தாய் உயிருடன் இல்லை. பேயாக இருந்தாலும் அவள் அவனுக்கு அம்மா தானே. அதுவும் அன்னைக்கு பிரியமானவன் தான். மலர் பிடிக்காத மருமகள் தான். தன் மகளுக்கு செய்யவேண்டியது கதிரின் கடமை என்று தான் நம்பினாள் . ஒருவரின் இரத்தத்தை மட்டும் உறிஞ்சுவது எப்படி நியாயம். செல்விக்கு கைக்கு மீறிய இடத்தில் திருமணம் செய்திருக்க வேண்டாம். அல்லது இன்னும் சில வருடங்கள் காத்திருக்கலாம். மலரின் நகை, பாத்திரங்கள் அத்தனையும் செல்விக்கு கொடுத்தும் கூட கதிரின் நிலைமை மோசமாக தான் இருந்தது. அப்படி என்றால் வெற்றி?

அன்னையின் இறப்பு அவனுக்கு பல அனுபவங்களை காட்டியது மட்டுமில்லை. மனிதர்களையும் அடையாளம் காட்டிக் கொடுத்தது. அதில் முக்கியமானவன் வெற்றி .

ஏற்கனவே சொன்னபடி வெற்றிக்கு திருமணம் ஆகி இருந்தது. அவனை விட அவள் ஒரு வயது மூத்தவள். அவன் கல்லூரியில் அசிஸ்டன்ட் ப்ரொபஸராக வந்தவளிடம் மயங்கித் தான் போனான். அவளும் தான்.வீட்டில் வந்து விஷயத்தை சொன்னான். அம்மாவும் கதிரும் வேண்டாம் என்றார்கள்.

" எனக்கு நீங்களும் வேண்டாம் உங்கள் சம்மதமும் வேண்டாம். இஷ்டமிருந்தால் வந்து கையெழுத்து போடுங்க. அதுவும்இல்லன்னா பராவாயில்லை" தெளிவாகக் கூறி விட்டான். வேறு வழியில்லாமல் சென்று கையெழுத்துப் போட்டு விட்டு வந்தார்கள். சில நாட்கள் விருந்து மருந்து எல்லாமே மாமியாரின் வீட்டில் இருந்து கொண்டாடி விட்டு இங்கே வந்தார்கள். எல்லாம் வயசு கோளாறு சிவகாமிக்குத் தான் எத்தனை பெருமை! எந்நேரமும் புன்னகை முகமாகவே இருக்கும் இளைய மருமகள், உஷாராக எந்த போன் நகையும் போட்டுக் கொண்டு இங்கே வரவில்லை. சும்மா ஒரு கண் துடைப்புக்காக தான் அவள் இங்கே இவர்கள் வீட்டில் வந்து தங்க சம்மதித்ததே . ஒரு நாளைக்கு பதித்து முறை அத்தனை சாப்டீங்களா என்று நலம் விசாரிப்பான். ஒரு வாய் காபி கொண்டு வந்து கொடுக்க மாட்டாள். எத்தனை செய்தாலும் செய்பவர்கள் தானே கேவலம். மலருக்கும் அதே தான் இங்கு நடந்தது. அது சரி ஏதாவது வாய் விட்டால் சின்னவள் கண்ணை கசக்கி கொண்டு அம்மா வீட்டுக்கு போகலாம். செல்வியும் அப்படித்தான். மாதத்தில் இரண்டு முறையாவது கணவனுடன் சண்டைப் போட்டுக் கொண்டு பிறந்த வீடு வந்து விடுவாள். பின்னோடு கணவனும் வந்து தங்கி விட்டு அவளை அழைத்துச் செல்வான் . மலர் நிலைமை அப்படியா? நீ எப்ப வந்தாலும் மாப்பிள்ளை கூட வா. இல்லன்னா வரவே வராத. கண்டிப்பான தந்தைக்கு மகளை விடவும் கவுரவம் தான் பெரிது .

"இங்க பாருங்க வெற்றி! உங்களுக்கு வேலை கிடைச்சாலும் சரி கிடைக்கலன்னாலும் சரி நாம ரெண்டு பேரும் எங்க அம்மா அப்பா கூட தான் இருக்கனும்." கண்டிஷன் போட்டு திருமணம் செய்துக் கொண்டாள். அதை வெற்றி தான் தன்னுடைய பிறந்த வீட்டில் வாயே திறக்கவில்லையே .

அவர்கள் இருந்த கொஞ்ச நாட்களும் கொஞ்சலாகத் தான் இருந்தது. அவர்கள் வீட்டில் இருக்கும் நேரம் எல்லாம் முனகல் சத்தமும் சிணுங்கல் சத்தமும் மலரை என்னவோ செய்தது. பொறாமை இல்லை. ஏதோ ஒரு ஏக்கம்.

"என்னங்க எனக்கு ரொம்ப பசிக்குது. ஏதாவது செய்து தரீங்களா?"

வெற்றி போல இரவில் மனைவியுடன் கொஞ்சி கொஞ்சி தனக்கு ஏதாவது செய்துக் கொடுத்தால் எப்படி இருக்கும்? ஏக்கத்தில் அந்த நினைப்பில் அவள் காது மடல் சிவந்தது.

"சீ இது என்ன அசிங்கமா பாதி ராத்திரில . தண்ணிய குடிச்சுட்டு படு " அவள் வள்ளென்று விழுந்தான். அவள் முகம் சுருங்கி விட்டது. கண்களில் ஏக்கத்துக்கான கண்ணீர்.

வெற்றியும் அவன் மனைவியும் சினிமா சென்றார்கள்.

"என்னங்க நாமளும் சினிமா போகலாமா ?"

புலியை பார்த்து பூனை சூடு போட்டுக்க கூடாது முறைப்புடன் அவனிடமிருந்து பதில் வந்தது.

"என்னங்க கொஞ்ச நேரம் என் கூட டீ வி பாருங்களேன் "

பார்த்தான். செய்திகள்.

"என்ன இது ஹால்ல வந்து பக்கத்துல உக்காந்துகிட்டு. தள்ளி போ "

எதற்கு தள்ளி போக வேண்டும். சமையல் அறைக்கு சென்று விட்டாள். அவள் எப்போது சென்றாலும் அவளை அரவணைத்துக் கொள்ளும் ஒரே இடம்.

"என்னங்க நாம் ரெண்டு பேரும் மாடில கொஞ்ச நேரம் இருக்கலாமா?"

" இது என்ன புது பழக்கம்?"

அவன் வர மாட்டான். புரிந்து விட்டது.

"என்னங்க எனக்கு நாளைக்கு பிறந்தநாள். நாம் ரெண்டு பேரும் கோவிலுக்கு போகலாமா?"

"இல்ல மலர்! நாளைக்கு செல்வி வீட்டுல போய் பாக்கணும். நீ தனியாவே போய்ட்டு வந்துடு "

"என்னங்க நாம ரெண்டு பேரும் எங்கையாவது ஹோட்டல்ல சாப்பிடலாமா ?"

"எங்க அம்மா ?"

"அவங்களுக்கு நான் ஏதாவது செய்து கொடுக்கறேன்."

ஓ! என்ற பதில் அவனிடமிருந்து. அதில் ஒரு இளக்காரம்.

வெற்றியும் அவன் மனைவியும் வெளியில் செல்வார்கள். ஊர் சுற்றுவார்கள். அப்படியே உண்டு விட்டு வந்து விடுவார்கள். பிறகு கதவு தாழிடும் சத்தம். நள்ளிரவு காம களியாட்டம் சமையல் அறையில் .

"அத்த அவங்க ராத்திரில ஏதாவது செய்தா கிட்சனை சுத்தம் செய்து வச்சுட்டு போக சொல்லுங்க . எனக்கு இது எல்லாம் சுத்தம் செய்துட்டு வேலை ஆரம்பிக்க ரொம்ப லேட்டாகுது."

"என்ன மலர் ! ரொம்ப வாய் நீளுது. நீதானே இங்க சமையல் அறைக்கு பொறுப்பு. அப்ப நீதானே எல்லாம் பாக்கணும் "

மலருக்கு கோபம் வந்தது. 'இதை எதுக்கு இவங்ககிட்ட பேசிக்கிட்டு' நேரே வெற்றியின் மனைவியிடமே பேசினாள் . அவள் அமைதியாக இருக்க, வெற்றி தான் பதில் சொன்னான்.

"என்ன இப்ப உங்களுக்கு என்னதான் பிரச்சனை. அவன் எப்போதுமே அண்ணி என்று அழைத்ததில்லை .

"இது எல்லாம் இப்படியே போட்டுட்டு போனா யாரு சுத்தம் செய்யறது ?"

"உங்க வேலை சமைக்கறது தானே. போங்க போய் அந்த வேலைய செய்ங்க." மூஞ்சியில் அடித்தது போல பேசிவிட்டு கதவை பட்டென்று சாத்திவிட்டான்.

"என்னங்க " என்று கணவனிடம் போய் நின்றபோது அவன் கேட்டது. அவங்க எல்லாரும் சொல்லறது சரிதானே. நீதானே இந்த வீட்டுக்கு மொத்த மருமக. நீதான் எல்லாம் செய்யணும். அவ வேலைக்குப் போகரா. நீ வீட்டுல தானே இருக்க செய்தா என்ன?"

ஓ வென்று இவளுக்கு துக்கம் நெஞ்சம் அடைத்தது. நான் சமையல் காரி இல்லை. தலையில் அடித்துக் கொண்டு அழுதாள்.

கை கட்டி நின்று ஒரு நிமிடம் பார்த்தவன் அவளை பளீரென்று அறைந்தான். மீண்டும் மீண்டும் அவள் கத்தினாள்.

கொண்டு போய் அவள் தலையை சுவற்றில் மோதினான். ரத்தம் வரவில்லை . மயங்கி விழுந்து விட்டாள் .

"சனியன் " அவளை எட்டி உதைத்து விட்டு ஹோட்டலில் தனக்கும் அன்னைக்கும் மட்டும் சாப்பாடு வாங்கி வந்தான்.

சற்று நேரம் கழித்து மயக்கம் தெளிந்து தானே எழுந்தாள். அவளுக்கென்று எந்த உணவும் இல்லை. காலி உணவு பொட்டலங்கள் இருந்தன. விரக்தி சிரிப்பு சிரித்துக் கொண்டவள் இருந்த இரண்டு வாழைப் பழங்களை உண்டுவிட்டு இருந்த பாலை குடித்து விட்டு படுத்துக் கொண்டாள். அழுது அழுது கண்கள் தான் வற்றி போனது. தலை வலி தாங்க முடியவில்லை . உறக்கமும் வரவில்லை.

சிறிது நேரம் கழித்து கதிர் வந்தான்.

"மலர்! மலர்!" இந்த இந்த மாத்திரையை போடு."

"ஓ என் மீது அக்கறையா ? இல்லை. தெரிந்தது. சற்று நேரம் கழித்து மீண்டும் வந்தான் .

"போய் காபி கொண்டு வா."

கொடுத்தாள் .

ராத்திரிக்கு அம்மாக்கு என்ன செய்ய போற? "

"ஓ அதுக்கு தான் இந்த கவனிப்பா?"

"உங்க வீட்டு சின்ன மருமகளை ஏதாவது செய்து கொடுக்க சொல்லுங்க "

அலட்சியமாக பதில் சொன்னாள் .

வெற்றியின்மனைவி செய்து கொடுப்பாளா? வெற்றி தான் எங்கோ வாங்கி வந்து கொடுத்தான்.

அடுத்த இரண்டு நாட்களுக்கு சிவகாமிக்கு வயிற்றுப் போக்கு. மலருக்கே பாவமாக இருந்தது. அவள் தான் சிவகாமியை பார்த்துக் கொண்டாள் . சிவகாமியின் அக்கா போன் செய்தாள். ஏம்மா உன்னால என் தங்கச்சிக்கு ரெண்டு இட்லி செய்து கொடுக்க முடியாதா? அவர் மட்டுமா? வாசலில் பூ விற்கும் பெண். பக்கத்துக்கு வீடு வேலைக்காரி " இவளுக்கு தெரியாத முகங்கள் கூட இவளைப் பற்றி வம்பு பேச ஆரம்பித்தார்கள்.

என்னவோ இவள்தான் சிவகாமியை கொடுமை படுத்துவது போல அனைவருமே பேசிக் கொண்டார்கள் . இவளுக்கு அழுவதா சிரிப்பதா தெரியவில்லை. மற்றவர்கள் சொல்லலாம். தன்னை பெற்றவர்களுமா?

என்ன மலர் ! அங்க ஏதோ ப்ரச்சனை பண்ணிக்கிட்டு இருக்கியாம். மாப்பிளை சொன்ன போது எனக்கு ரொம்ப அசிங்கமா போச்சு என்ன இது? போன இடத்துல வாய் திறக்காம இருக்கறது தான் பொண்ணுக்கு அழகு என்றார் தந்தை.

"போன எடத்துல ஏதாவது ஏடாகூடமா பேசி எங்க மானத்தை வாங்காத " இது தாய். சூப்பர்.

இவளுக்கு கைதட்ட வேண்டும் போல இருந்தது. அறையில் அமர்ந்து அமைதியாக அழுதாள். கண்டவன் பேசுவதற்கும் கொண்டவன்தானே காரணம். நிம்மதியா அழக் கூட முடியாது. செல்வி வந்து நின்று பேயாட்டம் போட ஆரம்பித்தாள். ஏனோ யாருமே வெற்றியின் மனைவியைப் பற்றி பேசவே இல்லை. அனைவரின் வாயையும் அவளின் சம்பளம் என்ற ஒற்றை வார்த்தை அடித்து விட்டது. மலர் வேலைக்கு போய் இருந்தால் அவளும் தான் சம்பாத்தியம் வாங்கி இருப்பாள் . அதை ஏன் யாருமே யோசிக்கவேயில்லை?

செல்வி வந்து இங்கே வீட்டில் பிரச்னை செய்துக் கொண்டிருந்தாலும் யார் வந்தால் எனக்கென்ன என்று வேலை விட்டு வந்தவர்கள் உள்ளே சென்று கதவை தாளிட்டுக் கொண்டார்கள்.

அன்னை தந்தை ,கணவன், மாமியார் செல்வி எல்லாரும் பேசினார்கள். இவளுக்கு உள்ளே ஏதோ ஒன்று செத்துக் கொண்டிருப்பதை யாருமே உணரவே இல்லை . செல்வியைத் தான் இவள் விரக்தியாகப் பார்த்துக் கொண்டிருந்தாள் . அவள் கழுத்தில் இருக்கும் சங்கிலை காது கம்மல் வளையல் அத்தனையும் மலருடையது. செல்விக்கு போட நகையும் வந்து விட்டது. வீட்டுக்கு சம்பளமே இல்லாத வேலைக்காரியும் கிடைத்து விட்டாள். கதிருக்குத் தான் எத்தனை சாமர்த்தியம் !

இதே செல்விக்கு சென்ற தலை தீபாவளிக்கு நூறு லட்டு, நூறு ஜாங்கிரி, நூறு கை முறுக்கு, அதிரசம், சோமாசி என்று எத்தனை செய்தாள் ?

"மலரு !செல்விக்கு இந்த வருஷம் தலை தீபாவளி. அதுனால நாம உங்க வீட்டுக்கு போக வேணாம்."

"நமக்கும் தான் தலை தீபாவளிங்க "

"அதுக்கு? எனக்கு செல்விதான் முக்கியம். உனக்கு வேணுன்னா வீட்டுல எல்லா வேலையும் முடிச்சுட்டு போய் ஒரு எட்டு உங்க அம்மாவை பார்த்துட்டு வா."

தலை தீபாவளிக்கு கணவன் இல்லாமல் தான் மட்டும் அங்கே போக முடியுமா என்ன பேசுகிறார் இவர்!

சாதாரண நாட்களில் கூட அவர்கள் வீட்டில் வேலை முடியாது. மாப்பிள்ளை வீட்டுக்கு வந்தால்? அதிலும் செல்வி ஒரு துரும்பு கூட அசைக்க மாட்டாள் . வேலை செய்து செய்து நாலு காப்பி குடித்து வயிற்றை அடக்கினாள் மலர். மாப்பிளை கை வளைவிலேயே இருந்த பெண்ணைப் பார்க்க பார்க்க சிவகாமிக்குத்தான் எத்தனை சந்தோஷம். ஆனால் ஏனோ மூத்த மகன் அவன் மனைவியுடன் இருக்க வேண்டும் என்ற எண்ணமே சிவகாமிக்கு வந்ததில்லை. தீபாவளி விருந்து முடித்து விட்டு மறு நாள் மலையில் தான் அவர்கள் கிளம்பினார்கள். அவர்கள்எப்போது இங்கு வந்தாலும் அவர்களுக்கு கதிரின் அறைதான். வெற்றியின் அறை அவன் எப்போதுமே கொடுக்க மாட்டான் . சிவகாமி இருப்பது அறை என்று சொல்லி விட முடியாது. ஒருவர் படுக்க முடியும் அத்தனை சின்னது தான்.

வேறு சமயம் "என்னங்க செல்வியை இப்ப வர வேண்டான்னு சொல்லுங்களேன். எனக்கு பீரியட்ஸ் . ஹால்ல படுக்க முடியாது "

"ஏன் ஹால்ல படுத்தா என்ன? அவ இங்க வர்றதுக்கு எதுக்கு உன் பர்மிஷன் வேணும் ?"

"ப்லீஸ் புரிஞ்சுக்கோங்களேன் .படுக்கறது மட்டும் இல்ல. எனக்கு பாத் ரூம் வேணும் "

"ஓ அந்த பிரச்னை இருக்கா. நீ கொல்லை புறத்துல இருக்கறது யூஸ் பண்ணிக்கோ "

"நான் இவனுக்கு யார் ?" அப்போது தான் மலருக்கு அந்த கேள்வி வர ஆரம்பித்தது. பிறகு தான் வெற்றி விஷயங்கள் எல்லாம் நடந்தது.

என்றாவது ஒரு நாள் கதிர் தன் முகம் பார்ப்பான் என்ற நம்பிக்கை எல்லாம் எப்போதோ மறந்து விட்டது .

தொடரும்......
 
Top Bottom