தேவிபிரியா விளையாட்டின் விதியை கூற மைக்கை பற்றியப்படி “ஃபர்ஸ்ட் ஒரு சாங் போடுவோம் அதுல ஜோடிங்க கொள்ளப்ஸ்ல ஆடுவாங்க.. அண்ட் இங்க மூணு பொண்ணுங்க பெயர் சீட் எழுதி இந்த ஜார்ல போடுவாங்க..
பாய்ஸ் அந்த சீட் எடுத்து அதுல எந்த பொண்ணு பெயர் வந்திருக்கோ.. அத தவிர்த்து மீதி ரெண்டு பொண்ணுங்க யாராவது செலக்ட் பண்ணனும்.. முதல பாட்டு போடும் போது.. நீங்க செலக்ட் பண்ணினவங்க கூட தான் ஆட ஆரம்பிக்கணும்…
கேர்ள்ஸ் தான் இடைல இடைல ஜோடிய கொலப்ஸ் பண்ணிப்பாங்க.. சேம் டைம்ல தான் பண்ணனும் அவசியம் இல்ல அவங்கவங்க இஷ்த்துக்கு பண்ணிக்கலாம்.. ஆனா பாய்ஸ் டீம் இடம் மாறவே கூடாது.. அந்த சாங் முடியும் போது யார் யார் ஜோடியா இருக்காங்களோ.. அதே ஜோடி ரெண்டாவது கேம்லயும் ஃபிக்ஸட்டா இருந்தா அவங்க தான் வின்னர்..
அப்புறம் இன்னொரு விஷயம் நானும் டீம்ல ஒருத்தினால இந்த கேம நடத்த என்னோட ப்ரண்ட்ஸ் நிப்பாங்க அவங்களே செகண்ட் கேம் என்னன்னு சொல்லுவாங்க..” என்றவள்
“மீ டாடா மேல வாங்க” என்று தன் பெற்றோரை அழைத்திருக்க மைக்கை கையில் வாங்கிய, அவளின் தாய் ரேவதி “கிட்டதட்ட தேவி ரூல்ஸ் சொல்லிட்டா அது போக என்னன்னு நான் சொல்லுறேன் ஃபர்ஸ்ட் கோலப்ஸ் சாங் முடியவுமே..
என் ஹஸ்பண்ட் பாய்ஸ் கண்ண கட்டிடுவார்.. அடுத்த பத்து நிமிஷத்துல பொண்ணுங்க நான் கொடுக்குற காஸ்ட்யூம் மாத்திட்டு வந்து திரை போட்டு பின்னால நிக்க வச்சிடுவோம்..
அப்புறம் பாய்ஸ் ஐஸ் ஓபன் பண்ணி விட்டுட்டு உங்க முன்னாடி மூணு டிரஸ் பாக்ஸ் வைப்போம்.. மூணு பேரும் அட் அ டைம்ல சூஸ் பண்ணிட்டு கண்பூஷன் இல்லாம ஒரு டிரஸ் பாக்ஸ்கிட்ட வந்து நின்றனும்.. அப்புறம் அத சேஞ்ச் பண்ணிட்டு வரவும் நீங்க போட்டுருக்குற காஸ்ட்யூம் மேட்சா எந்த பொண்ணுங்க வரங்களோ.. அவங்க தான் உங்க செகண்ட் கேம் ஜோடி அவங்க கூட டூயட் கட்சாங் ரெண்டு ஆடனும்.. அண்ட் பிரியா சொன்ன போல ஃபர்ஸ்ட் கேம்ல சாங் முடியும் போது உங்களுக்கு வந்த ஜோடி செகண்ட் கேம்லயும் மேட்சான அவங்க தான் வின்.. சோ ரெடி காய்ஸ்? என்க,
ஆறு பேரும் ரெடி என்றனர். அவர்களின் குடும்பத்தினருக்கு உற்சாகமாகவே இருந்தது, கூடவே கீதாராணி அபிராமிக்கு இது தேவிபிரியாவின் நாரதர் வேலையை என்று நன்றாகவே புரிய, நடப்பதை வேடிக்கை பார்க்க தொடங்கினார்கள்.
பின் பெண்களின் பெயர் பேப்பரில் எழுதப்பட்டு ஜாரில் போட்டு குலுக்கி தேவிபிரியாவின் தந்தை சுபாஷ் அவற்றை முன்னால் வைக்க, ரேவதியோ “இது ஜஸ்ட் கேம் தான்.. சோ யாரும் எதுவும் யோசிக்காம ஜஸ்ட் என்ஜாய்” என்றவர் ஆண்களிடம் “ஓகே பாய்ஸ் மூணு பேரும் போய் சீட் எடுத்து.. உங்க பிளேஸ்ல நில்லுங்க” என்றதும் மூன்று ஆடவர்களும் ஜாரின் முன் சென்றிருக்க,
முதல் துண்டை பிரசன்னா எடுத்ததும், தேவா தன் சகோதரன் எடுக்கட்டுமென்று நிற்க, அவனோ “ப்ரோ நீ எடு” என்று அவனை எடுக்க வைத்து இறுதியில் தான் எடுத்து வந்து, அவரவர் இடத்தில் நின்று கொண்டார்கள்.
ரேவதியோ “ஓகே பாய்ஸ் ஒவ்வொருத்தரும் உங்க சீட்ல வந்த நேம் பாத்துட்டு.. நான் கவுண்ட் டவுன்ட் சொல்லவும்.. அட் அ டைம்ல மீதி ரெண்டு பொண்ணுங்கள யார செலக்ட் பண்ணிருக்கீங்க சொல்லணும்.. அவங்க சொன்ன அடுத்த செகண்ட் சாங் பிளே ஆயிடும் சோ டான்ஸ் ஸ்டார்ட் பண்ணிடனும்.. ரெடி காய்ஸ் ஓபன்” என்க,
பிரசன்னா - தேவி பிரியா, தேவா - ஶ்ரீநிதி, விக்கி - சம்யுக்தா என்று மூவரும் தங்களுடையதை பிரித்தது கண்ட மறுநொடி ரேவதி “3.. 2.. 1.. “ என்று விட,
மூவரும் ஒன்று போல் சம்யுக்தா (பிரசன்னா) தேவிபிரியா (தேவா) ஶ்ரீ நிதி (விக்கி) என்று ஆடவர்கள் அடுதடுத்து பெண்கள் பெயரை கூறிய நொடி சரத்குமார் நடித்த தென்காசிப்பட்டினம் படத்திலிருந்து “தேனுக்குற கூட்டுக்குள்ள” என்று தொடங்கும் பாடல் ஒலிக்க பெற, முதலில் அதன் இசைக்கு பெண்கள் மூவரும் இடுப்பை வளைத்தாட்டி சுற்று சுற்றியவர்கள், பெயர் வாசித்த அடுக்குப்படி ஆடவர்களுடன் இணைந்து கொண்டு ஆடினார்கள்.
சம்யுக்தா பிரசன்னா தேவிபிரியா தேவா விக்கி ஶ்ரீ நிதி என்ற வரிசை முறையில் உடலை வளைத்து பாட்டுக்கு ஏற்ப ஆறுவருமே அழகாகயாட, முப்பது வினாடிக்கு மேல் பிரசன்னா அருகே இருக்க முடியாத சம்யுக்தா ஆடியவண்ணமே விக்கி வலதுபுறம் மாறி அவனுக்கு இணையாக ஆட தொடங்கி விட்டாள்.
ஒரு நிமிடம் கடந்த, பின் தான் சம்யுக்தா மாறியதை கவனித்த ஶ்ரீநிதி தேவா மற்றும் தேவிபிரியாவின் இடையிலிருந்த இடைவெளிக்கு வந்து விட, அதன் பின் தன்னவன் இடது பக்கம் இடம் காலியானதை உணர்ந்த தேவிபிரியா நகர்ந்து அவனுடன் இணைந்து கொண்டாள்.
தேவிபிரியாவை தவிர மீதி இருவரும் ஜோடியை மாறி நின்றதாக நினைத்திருக்க, இறுதியில் ஜோடியுடன் கை கோர்த்து சுற்றும் போது தான் அவர்கள் தங்கள் மனம் கவர்ந்தவர்களின் அருகே நின்றது பேதை இருவருக்கும் விளங்கியது.
தேவாவும் பிரியாவும் தன்னவர்கள் உடன் இணைந்ததில் புன்னகை முகமாக நிற்க, சம்யுக்தா விக்கி இருவருக்கும் மனதில் அம்மகிழ்வு இருந்தாலும் வெளியே தங்களின் ஜோடியை முறைத்தப்படி நின்றனர்.
இதில் மாறாக பிரசன்னா ஶ்ரீநிதி இருவரின் மனதும் இதை எதிர்பாராமல் உள்ளம் மகிழ்ந்திருக்க, வெளியே ரெண்டு பேருமே பிடிக்காதது போல் தான் காட்டிக் கொண்டனர்.
இதில் பாடல் முடிந்த மறுநிமிடம் தேவிபிரியாவின் தந்தை சுபாஷ் வரிசையாக ஆடவர்களின் கண்ணை கட்டி விட,
பிறகு ரேவதி மூன்று பெண்களின் கைகளிலும் லெகங்கா போன்ற உடையிருந்த பெட்டியை அவர்களிடம் கொடுத்து மாற்றி கொண்டு வர கூறி அனுப்பி வைத்து விட, அடுத்த கால் மணிநேரத்தில் அவ்வுடை அணிந்து அழகாக வந்த பெண்களை கண்டு திருஷ்டி முறித்த ரேவதி அவர்களின் முன் திரை போட்டு வைத்தார்.
அதன் பிறகு ஆடவர்களுக்கான மூன்று உடை பெட்டியை முன்னே வைத்த ரேவதி கணவனுக்கு கண்ணை காட்ட,
அவரும், அவர்களின் கண்ணை அவிழ்த்து விட்டதும் “ஓகே பாய்ஸ்.. நான் த்ரீ டூ ஒன் சொல்லவும் மூணு பேரும் ஒரே நேரத்துல ஒரு பாக்ஸ் பக்கம் வந்திரணும்” என்றவர் “ரெடி காய்ஸ் 3..2..1” என்க,
அடுத்த நொடி மூவரும் ஒவ்வொரு உடையிருந்த பாக்ஸ் முன் வந்து நின்று விட, ரேவதியோ “ஓகே சேஞ்ச் பண்ணிட்டு கண்ண கட்டிட்டே வாங்க.. சாங் பிளே பண்ணி அப்புறம் ஐஸ் ஓபன் பண்ணும் போது பக்கத்துல நிக்கிற ஜோடிய பாருங்க.. அப்போ தான் சர்ப்ரைஸா இருக்கும்.. சோ கெட் ரெடி” என்று விட, அவர்களும் அதனை ஏற்று கொண்டு உடை மாற்றி சுபாஷின் உதவியுடன் கண்ணை கட்டியவண்ணமே மேடையில் வந்து நின்றிருந்தனர்.
இதில் மூவருக்குமே தங்கள் மனகவர்ந்தவர்கள் வருவார்களா என்ற மிகுந்த எதிர்பார்ப்பு, இதிலும் விக்கி மற்றும் பிரசன்னா தன்னவர்கள்
வர கூடாது என்று மூளையை உறுதியாக வைத்திருந்தாலும் மனமோ அவர்களே தனக்கு இணையாக வர வேண்டுமென்று ஆர்பரித்தது.
அதன் பிறகு ஆடவர்களுடன் ஒன்றுப்பட்ட உடை அணிந்த பெண்களை அழைத்து கொண்டு ரேவதி நிற்க வைத்திருக்க, ஆறுவரின் கையிலும் கோலாட்டம் கொடுக்கப்பட்டிருக்க, காதல் தின திரைபடத்திலிருந்து “தாண்டியா ஆட்டமுமாட” என்று தொடங்கும் பாடல் ஒலிக்க பெற, ஆடவர்கள் கண்களை கட்டியவண்ணமே பாடலுக்கு ஏற்ப சரியாக தங்கள் அருகிலிருந்த பெண்களுடன் கோலடித்து கொண்டார்கள்.
தாண்டியா ஆட்டமுமாட என்று வரிகளில் தொடங்கும் அடுக்குகள் இரு முறை முடிந்து, அதன் பின் இசை முடியும் வேலையில் ரேவதி சுபாஷ் இருவரும் சேர்ந்து மூன்று ஆடவர்களின் ஒன்றாக அவிழ்த்திருக்க,
சரியாக “உன்னைக்கண்டு எண்ணம் யாவும் மெல்ல..” இவ்வரி தொடங்கும் வேலையில் மூன்று ஆடவர்களும் தங்கள் ஜோடியுடன் நேருக்கு நேராக பார்த்தப்படி, இருவரின் கோலடியையும் இணைத்த வண்ணம் திரைப்படத்தில் காட்டுவது போல் சில வினாடி தங்களின் முகத்தை காதலாக இமைக்க மறந்து நோக்கியப்படி நின்றனர்.
*****
மூன்று ஆடவர்களுமே எதிர்பாராமல் தான் கண்கட்டு அவிழ்த்திருந்தனர்.
விக்கி தனக்கு ஜோடியாக நின்றிருந்த தேவிபிரியாவை கண்டு அதிர்ச்சி கலந்த மகிழ்வில் நோக்க, பெண்ணவளோ ஆடவனை பார்த்து கண்ணடித்து அவனை வெட்கப்படவே வைத்து விட்டாள்.
தேவாவோ தன்னவள் தான் என்ற உறுதியா நம்பிக்கையுடன் இருந்தவன், அவளே ஜோடியாக மாறியதில் கண்ணடித்து இதழ் குவித்து முத்தமிட்டு பெண்ணவளை பதற வைத்திருக்க, அவனை கண்டதுமே சிரகில்லாமல் பறக்கும் மனதை அடக்கி நின்றிருந்தவள், ஆடவனின் செயலில் வெட்கத்தோடு குடும்பத்தினர் முன்னிலை என்ற சங்கடமும் ஒட்டி கொண்டது.
இறுதியாக பிரசன்னாவிற்கோ தன் நிதியை கண்டதும் கட்டியணைக்க பரபரத்த கைகளை கட்டுப்படுத்தி கண்களில் ஆயிரம் கதை பேசியவன், தன் வாழ்க்கை விஷயத்தை உறுதியான முடிவையும் எடுத்திருக்க, ஶ்ரீநிதி வழமை போல் அவனுடன் நிகழும் நிகழ்வுகளை உள்ளுக்குள் ரசித்து வெளியே உணர்வை காட்டிகொள்ளாமல் நின்றாள்.
அதன் பின் தங்கள் இணைகளுடன் அப்பாடல் மூன்று நிமிடம் முடியவும் மாறி விட, மூன்று ஜோடிகளும் கையிலிருந்த கோலாட்ட தடியை கீழே போட்டுவிட்டு, அப்பாட்டுடன் தொடர்ந்து ஒலித்த காற்று வெளியிடை திரைப்படத்திலிருந்து “சரட்டு வண்டியிலே சிரட்டொலியில..” என்று தொடங்கும் பாடல் ஒலிக்க, மூன்று ஜோடியுமே அழகாக ஆட,
அவர்களின் குடும்பத்தினருக்கு மூன்று ஜோடிகளின் பொருத்தம் நிறைவாகவே இருக்க, அவர்களை இணைத்து வைக்க கடவுளையும் வேண்டி கொண்டனர்.
போட்டி முடிந்ததும் ரேவதி “அடடே என்ன ஒரு அழகு.. மூணு ஜோடிகளுமே வெற்றி வாகை சூடி விட்டார்கள்..” என்று அவர்களுக்கு தாங்கள் வாங்கி வந்த சிறிய பரிசை ஆறு பேருக்கும் கொடுத்திருந்தார்கள் தேவிபிரியாவின் பெற்றோர்.
இவர்கள் ஜோடியை கண்டு குருமூர்த்தி எரிச்சலாகினார் என்றால் விஷ்வநாதனிற்கு தன் மருமகன் பிரசன்னாவிற்கு தன் இளைய மகள் மேல் விருப்பமோ என்று கேள்வி தோன்ற, அதனை குருமூர்த்தியிடம் கேட்டும் வைக்க அவரோ இவரின் மண்டையை கழுவி சம்யுக்தாவை இவனுடன் இணைக்க தான் முடிவு எடுக்க வைத்திருந்தார்.
இப்படியாவது தங்களின் விருப்பத்தை பெற்றோர் உணர்வு பூர்வமாக உணர வேண்டுமென்றே இத்தகைய விளையாட்டை தேவிபிரியா சிந்தித்திருந்தாள்.
அவர்களுக்கு மட்டுமல்ல தாங்கள் ஆறுவரின் மனதிலும் ஏதேனும் குழப்பங்கள் இருந்தால் கூட இவ்விளையாட்டு அனைத்தையும் உடைத்து,
தங்கள் மனதிலுள்ள காதலின் ஆழத்தை உணர்த்தி தங்களின் துணைகளையும் உணர செய்வார்கள் என்றவளுக்கு இத்தகைய எண்ணம் தன்னை பிடித்திருந்தும் வெளியே காட்டிக் கொள்ளாமல் மறுத்த விக்கிகை கண்டு தான், தன்னோடு சேர்த்து மீதி இரு பெண்களின் நலனுக்காகவும் விளையாட்டை பகடையாக எடுத்தவள் பெற்றோரை வைத்து செயல் படுத்திருந்தாள்.
அவளின் எண்ணம் போல் இந்த விளையாட்டு ஆறுவரின் காதலையும் ஜோடிகளாக அவர்களை அறியாமலே ஒருவருக்கு ஒருவர் கண்களிலே உணர்த்திருந்தனர்.
அதோடு காதலை ஏற்க மறுத்தவர்கள் மனதிலும் தங்கள் மனகவர்ந்தவர்களுடன் இணைத்த இந்நிகழ்வு பிணைப்பை ஏற்படுத்தியது.
பார்க்கலாம் தேவிபிரியாவின் நாரதர் களகம் அவளின் காதலோடு, மற்ற இறு ஜோடிகளும் ஒன்று இணையுமா?
***
விசேஷம் முடிந்து ரெண்டு நாள் கடந்திருக்க, ஆறுவர் மனதிலும் அன்றைய நாள் நிகழ்வின் தாக்கம் சிறிதும் குறையவில்லை.
இதில் வெளிப்படையாக தேவாவை தவிர யாரும் காதலை உரைத்திருக்கவில்லை.
தேவிபிரியா எங்கே ஆடவன் மறுத்து விடுவானோ என்று தயங்கி விட, விக்கி ஏதோ கதை கூற முடியாமல் திக்கு முக்காட வைத்தது, இதே நிலை தான் ஶ்ரீநிதிக்கும் அவனுடைய காதலை உணர்ந்தும் கூட ஏதோ ஒன்று அவளை அவனிடம் இணைக்கவிட வில்லை.
பிரசன்னாவிற்கோ அக்காவிற்கு சம்மதம் கூறி, இப்போது அவளின் தங்கை உன்னை தான் பிடித்திருக்கிறது என்று கூறினால் என்று கொள்வாளா? என்று ஆடவன் தயங்க,
இவர்களின் மனம்படும் பாடோ
“காதல் என்னை
பிழிகிறதே கண்ணீா்
நதியாய் வழிகிறதே
நினைப்பதும் தொல்லை
மறப்பதும் தொல்லை
வாழ்வே வலிக்கிறதே” இத்தகைய நிலையில் தான் தத்தளித்து கொண்டது.
***
அன்று மாலை போல் வழக்கதிற்கு மாறாக மொத்த பேரும் வீட்டியிலே இருந்திருக்க, இன்றைய இரவு தேடுதலை விட்ட இடத்தில் தொடங்க முடிவு செய்திருந்த இரு பெண்கள் மதியம் உணவு முடித்துவிட்டு அறையில் அடைந்தவர்கள் நன்றாக உறங்கி எழுந்து மாலை ஆறு மணிபோல் தான் எழுந்து அறையை விட்டு வெளியே வந்தனர்.
அவள் அறையைவிட்டு வெளியே வரவே காத்திருந்தது போல் குருமூர்த்தியுடன் தொழில் விஷயம் பேசியப்படி இருந்தவர் மகளை கண்டு “உனக்காக தான் காத்துருக்கேன்டா.. அப்பா உன்கிட்ட பேசணும்” என்றதை கேட்டு அவரின் யூகமறிந்தே எதிரே அமர்ந்தவள் “அத்தமா காபி” என்க,
அவள் கண்டு கொள்ளாததில் “உன்கிட்ட பேசணும் சொன்னேன்”
“காபி குடிச்சிட்டு பேசிக்கலாம்” என்றவள் கீதாராணி கொடுத்த தேனீரை பருகி முடிக்கவும் குடும்பத்தினர் மொத்த பேரும் அங்கே தான் கூடியிருந்தனர்.
பின் தேவாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு தந்தையிடம் சம்யுக்தா “என்ன விஷயம்”
“உன் கல்யாணம் விஷயம் தான்.. உனக்கும் பிரசன்னாவுக்கும் கல்யாணம் ஏற்பாடு பண்ண இருக்கேன்டா” என்றவர் அடுத்து மகள் கூறிய பதிலை கேட்டு உறைந்து நிற்க, தேவாவே அப்பதிலை எதிர்பார்க்காமல் அதிர்ந்து விட்டான்.
- துயர் தொடரும்...

Author: STN - 95
Article Title: துணை - 12
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.