துணை - 14

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

STN - 95

Member
May 5, 2026
53
43
18
அவனின் இத்தகைய அதிரடியை முதலில் புரியாமல் விழித்த தேவிபிரியா, பின் சுயம் பெற்று அவனின் மார்பில் கைவிட்டு தள்ளி விட்டு அவனை முறைத்து வைக்க,

அவளின் தேன்வுண்ட கிறக்கத்திலிருந்த ஆடவன் என்ன “ரியா பேபி.. இப்போ நம்புறியா”

“முடியாது போடா” என்றதும், அவளை தன்னோடு இறுக்கி கொண்டவன் “அப்போ இன்னொரு முறை நம்ப வைக்கவா” என்று கேட்டவனின் பார்வை ஏற்கனவே ருசி கண்ட பூனையாக இதழில் மெய்யவிட்டிருந்தான்.

அவனின் கள்ளபார்வை உணர்ந்து வெட்கித்த பார்வை இதழ் கடித்து அடக்கியவண்ணம் அவனை மீண்டும் தள்ளிவிட்டு அவனின் செயலுக்கு தடை விதித்தவள், அவனின் பார்வை எதிர்கொள்ள முடியாமல் திரும்பி நிற்க, பின் அவன் சீண்டியதில் முறைத்துவிட்டு கதவை திறந்து தோழியை காண வந்தாள்.
****
தன்னை போகவிடாமல் தடுத்து நின்றவனை ஏறிட்ட சம்யுக்தா “இப்போ என்ன டிராமா போட வந்திருக்க”

“டிராமாவா மனச தொட்டு சொல்லு என்னோட காதல்ல உண்மை தெரியலயா.. இல்ல தெரிஞ்சும் தெரியாத மாதிரி நடிக்கிறியா” என்றவன்.

அவளின் பார்வையில் “ஆமா ஒத்துக்குறேன் உன்கிட்ட என் உண்மையான காதல மறைச்சு.. உன் அப்பன் கூட போட்ட சாவல ஜெயிக்க தான்.. நான் நினைச்சேன் ஆனா அதயும் மீறி என் காதல் வெளிய வந்துச்சு.. உனக்கு காட்டுல ஆபத்து பார்த்து என் மனசு துடிச்சுது.. அதோட உன் பேச்சு தைரியம் வீரம் எல்லாத்தையும் ரசிச்சேன்.. காதலையே சொல்ல கூடாதுன்னு தான் நினைச்சேன்.. என்ன அறியாம அதையும் கொட்டிட்டன்..”

“ஆமா காதல சொன்ன ஆனா யுதான்னு சொல்ல வந்து யுக்தான்னு நீ சொன்னதா.. உன் காதல் உண்மைன்னா நீ மனசுல இருந்த பெயர தான் சொல்லிருப்ப.. அந்த பெயர மறைச்சுருக்கன்னா காதல் விட சாவல் தான் முக்கியமா பட்டிருக்கு” என்று நியாயமான கேள்விகளை தொடுக்க,

தான் அழைத்த பெயரை வைத்தே, அவள் தன்னை யார் என்று கண்டு கொண்டால் என்ற நிதர்சனம் உணர்ந்த தேவாவிற்கோ,

அடுத்தடுத்து அவள் கேட்டா கேள்வி உண்மை என்பதால் முதல் தயங்கியவன் “எனக்கு புரியுது நீ என்ன யாருன்னு கண்டுபிடிச்சுட்டன்னு.. உண்மை தான் காதல மறைச்சு சவால்ல ஜெயிக்க நினைச்சேன் அதுனால தான் பெயர மாத்தி சொன்னேன்.. ஆனா அதுக்கு காரணம் கடந்த காலத்துல நீ பண்ணின விஷயம் என்ன உன்ன தப்பா பாக்க வச்சிது.. அந்த கோபத்துல உன்ன வெறுக்க நினைச்சி ஒவ்வொரு தடவையும் தோத்து தான் போனேன்” என்றதில் தடுமாறியவள்

“நீ என்ன சொல்லுற.. நான் என்ன பாஸ்ட் லைஃப்ல பண்ணினேன்” என்றவளுக்கு தன்னுடைய கடந்த காலம் நினைவில் வந்து உடலை வேர்க்க செய்ய, ஆடவனுக்கு உண்மை தெரிந்திருக்குமோ என்று ஒரு நொடி பதறி தான் போனாள்.

அவள் பதற்றத்தை குறைக்கும் விதமாக ஆடவன் “உனக்கு தெரியும் நினைக்கிறேன் என் அம்மா ஜெயிலுக்கு போனது.. அதுக்கு ஒரு வகைல நீயும் காரணம் தான்.. நீ நடந்தத சொல்லியிருந்தா என் அம்மா ஈஸ்யா வெளிய வந்திருப்பாங்க.. ஆனா நீ கொஞ்சம் கூட அக்கறை இல்லாம மொத்தமா காலி பண்ணி போயிட்ட.. ஆனா என் அம்மா எவ்வளவு வலி அனுபவிச்சாங்க தெரியும்..

சத்தியமா சொல்லுறேன் அன்னைக்கு என்ன நடந்துச்சுன்னு உண்மை எனக்கு இப்போவர தெரியாது.. அம்மட கேட்டும் வாய திறக்கல.. அந்த கோவத்துல தான் உன்ன வெறுக்க டிரை பண்ணினேன்.. ஆனா அன்னைக்கு காட்டுல ரெண்டு ரெண்டு பேரா பிரியும் போது நானும் விக்கியும் காதுல ப்ளூடூத் இயர் பட்ஸ் வச்சிட்டு கால் கனெக்ட் பண்ணியிருந்தோம்.. அப்போ தான் தேவி அவன்ட உன்ன பத்தி சொல்லிட்டு இருக்கும் போது.. பத்து வருஷமா நீ இறுக்கமா இருக்கிறதா சொன்னா..

சோ அன்னைக்கு ஏதோ விஷயம் உன்னையும் பாத்திச்சுருக்குன்னு என்னால புரிஞ்சிக்க முடிஞ்சுது.. சோ வெறுப்புலாம் விட்டுட்டு உன்கிட்ட அப்புறம்லாம் உண்மையான காதலோட பழகினேன்.. பட் நானே நடிச்சேன் சொன்னாலும் என்னோட காதல நீ உணர்ந்திருப்ப.. அப்போ எப்படிடி நான் டிராமா பண்றேன் சொல்லுற” என்க,

அவனின் வார்த்தையில் பழையவை தன் மண்டைக்குள் ஆட்சி செய்தாலும், மனதோ தான் எதுவும் கூறாமலே தன்னை உணர்ந்து விட்டானே என்று பேதையவளுக்கு வியப்பாவே இருந்தது.

அதில் கலங்க துடிக்கும் கண்களை கூட அணைபோட்டவளுக்கு அவனின் காதலின் ஆழம் புரிந்தும் ஏற்று கொள்ள முடியா சூழ்நிலை.

அதோடு பத்து வருடங்கள் முன் பூத்த காதலாக இருந்தாலும், அந்நினைவோடே நாட்களை தள்ளியவளுக்கு ஒருமுறை அவனின் முகம் பார்த்து விடவேண்டுமென்ற ஏக்கமே சொந்த ஊரை மிதிக்க மனமில்லாமலும் மிதிக்க வைத்திருந்தது.

தன் காதலின் ஆழத்தை அவனிடம் உணர்த்த முடியவில்லை என்றதில் உள்ளம் ரணமாக எரிய,

அவளின் கையை பற்றியவன் “இப்போவும் சொல்லுறேன் எனக்கு உன்னோட கடந்த கால கஷ்டம் தெரியும்ன்னு தான் ஆனா நீ சொல்லாம நான் எப்போவுமே கேட்க மாட்டேன்.. ஒருவேளை நீ அதுலயிருந்து வெளிய வந்தா அப்படியொரு விஷயம் உன்கிட்ட கேட்க நினைச்சிருந்தத கூட மறந்துருவேன்..

பட் என் கடைசி மூச்சு நிக்கிற வரை நீ வேணும் யுதா.. உனக்காக பத்து வருஷமா வெயிட் பண்ணிருக்கேன்.. நான் மட்டுமில்ல நீயும் தான் இந்த காத்திருப்பு நீடிக்குறதும்.. நம்ம காதல் சேருறதும் உன் கைல தான் இருக்கு.. ஆனா உன்ன தவிர என் லைஃப்ல எந்த பொண்ணுக்கும் இடம் இல்ல..

அப்படி என்ன உன்ன என்கிட்ட சேர விடாம தடுக்குதுன்னு சொல்லுடி என்னால அத சரி செய்ய முடியும்” என்றவன் பால்கனியில் இதழ் முத்தம் நடத்தி கொண்டிருந்த ஜோடிகளை கண்டு

“நம்ம சேருறது தான்.. அவங்க காதலுக்கும் பதில்.. விக்கி தேவி ரெண்டு பேருமே நமக்கு முக்கியமானவங்க.. நம்ம இப்படிருக்கும் போது கண்டிப்பா அவங்களும் காதல் இருந்தும் விலகி நிப்பாங்க.. அண்ட் உன் தங்கச்சி ஶ்ரீமா காதல் கூட உன் கைல தான் இருக்கு”

“பிரசன்னாவா” என்றதுக்கு ஆடவன் ஆமென்று தலையாட்டி “உனக்காக பத்து வருஷம் சடங்கை தள்ளி வச்சவ.. காதலயும் உனக்காக மறைப்பா.. நம்ம ரெண்டு பேரும் புருஷன் பொண்டாட்டியா வாழனாலும் அவங்களுக்காக நடிக்கலாம்.. உன் விருப்பம் இல்லாம நான் உன்ன தொட மாட்டேன்.. என்ன நீ நம்பலாம்” என்றதை கேட்டு ஏதோ கூற வந்தவளை தடுத்தவன்

“ஐ லவ் யூ யுதாமா.. நீ என்ன சொல்ல போறேன் எனக்கு தெரியும்.. ஆனா எதுவும் இப்போ சொல்ல வேண்டாம்.. ரெண்டு நாள் யோசி” என்றவன் சகோதரன் ஜோடியாக உள்ளே நுழைந்ததை கண்டு “பியூட்டி நீயும் உன் பிரென்ட்டும் மிஷன் போக தயாராகி வாங்க.. நாங்க வழக்கமான இடத்துல வெயிட் பண்றோம்”

“ம்ம்” என்று வெறுப்பாக வார்த்தையிலயே புரிந்து கொண்டான். தோழிக்காக பெண்ணவள் தன்மேல் கோவமாக இருக்கிறாள் என்று புன்னகைத்துவிட்டு தம்பியுடன் வந்த வழியாக சென்று வெளியே அவர்களுக்காக காத்து கொண்டு நின்றனர்.

அவன் சென்ற திசையை வெறித்த சம்யுக்தா பிறகு தான் நினைவு வந்தவளாக, அவர்கள் ஏன் பால்கனியே ஏறி வந்தார்கள் என்ற காரணத்தை தோழியிடம் கேட்டு தெரிந்து கொண்டவளின் மனமோ அவனின் காதலை ஏற்கவும் முடியாமல் விளக்கவும் முடியாமல் தவித்தது.
***
அவர்களுக்காக காத்திருந்த இருவரும் வெவ்வேறு சிந்தனையில் இருக்க, தேவாவோ தன்னவளை பற்றிய கவலை நிலையில் உழன்று கொண்டிருக்க, விக்கியோ அவள் கொடுத்த போதையை நினைத்தப்படி முகம் கொள்ள புன்னகை பூசியிருந்தது.

அதில் தானும் புன்னகைத்து அவனின் தோளில் கைபோட்டவன் “என்னடா துண்டில் சிக்கிச்சு போல..” என்றதுக்கு விக்கி அசடு வழிய,

“அது சரி அன்னைக்கு யாரோ.. அவ என் ஆளு இல்ல சரியான அடங்காபிடாரின்னு சொன்ன போல இருந்துச்சு.. ஆனா இன்னைக்கு கதைல டுவிஸ்ட் அடிச்சிட்ட” என்றதை பதறி அவள் வந்துவிட்டாளா என்று பார்த்த விக்கி “ஆமாடா.. என் மனச கொள்ளை கொண்ட அழகான அடங்காபிடாரி”

“முத்தி போச்சு” என்று இருவரும் சிரிக்கும் போதே இரு பெண்களும் தோள் பையுடன் வந்திருக்க, வழக்கத்துக்கு மாறாக அவர்கள் முகத்தை மறைக்காததில் விக்கி தான்

“என்ன அதிசயம் எப்போவும் திருட்டு கும்பல் கெட்அப்ல தான வருவீங்க.. இன்னைக்கு என்ன பாரு என் முகத்த பாருன்னு காட்சி கொடுக்குறீங்க”

“கூட தான் நீங்க இருக்கீங்களே மாட்டினா.. மறைக்காத உங்க முகமே எங்கள காட்டி கொடுக்க தான் போகுது.. அதுக்கு எதுக்கு போர்த்திக்கிட்டுன்னு தான்” என்றப்படி தன்னவனின் வண்டியில் ஏறிக்கொள்ள, சம்யுக்தாவும் அமைதியாக தேவாவின் பின்னே அமர்ந்து கொண்டாள்.
***
நால்வரும் குகைக்குள் நுழைந்து விட, விக்கி “அன்னைக்கு போல தேடலாமா” என்க,

தேவிபிரியா “இல்ல விச்சு நால்வரும் ஒன்னாவே தேடலாம்.. அப்போ தான் ஒருத்தர் கண்ணுக்கு சிக்காதது.. இன்னொருத்தருக்கு சிக்க வாய்ப்புருக்கு” என்க,

ஏனோ அதுவே மற்றவர்களுக்கு சரியென பட, நால்வரும் ஒரே பாதையில் நடந்தப்படி தங்கள் பார்வையில் கூர்மையை ஏற்றி கொண்டனர்.

அரைமணி நேரம் தேடுதலுக்கு நின்றிருந்த பாதையை முடித்து, அடுத்த பாதை செல்வதற்காக திரும்ப தேவாவோ கால் தடுமாறி விழ போய் விட,

அதனை கொண்டு பாத்து “வேந்து” என்று அவனின் கையை பற்றிருந்தார்.

தன்னவளின் அழைப்பில் வானை வென்றுவிட்டது போல் உணர்ந்த தேவாவோ பெண்ணவளை பார்த்து கண்ணடித்தான். அதில் தான் அவனை எப்படி அழைத்தோம் என்று உணர்ந்து முறைத்து வைத்தாள்.

இவர்களின் இந்த நிலையை கண்டு தலையில் அடித்து கொண்ட தேவிபிரியா, அவன் கால் தட்டிய இடத்தை குனிந்து பார்க்க அங்கிருந்த பெட்டியை கண்டு கொண்டவள் “ஏய் காய்ஸ்.. இங்க பாருங்க ஏதோ பெட்டி இருக்கு” என்றதும் மூவருமே ஒளியை அதன் பக்கம் காட்டி கண்டுகொண்டனர்.

நொடியில் தேவிபிரியா அதனை திறன்விட உள்ளேயிருந்ததை கண்டு அதிர்ந்து, பின் பதறி விக்கியின் இடுப்பில் ஏறிக் கொண்டு, அவனின் உடை இழுத்து முகத்தை அதில் புதைத்து கொண்டாள்.
***
தேவிபிரியா பெட்டியை திறந்ததும் பின்னே ஒளிருந்த பாம்பு ஒன்று எட்டி பார்த்திருக்க, உள்ளே உள்ளதை அதிர்ந்து பார்த்தவள் பாம்பை கண்டு பயத்தில் விக்கியை தொற்றி கொண்டாள்.

இவளின் செயலை ஒரு மாதிரி பார்த்தவர்கள், அப்போது தான் அப்பெட்டியை சுற்றிய வட்டமிருந்த பாம்பை கண்டு தான் அவளின் பயத்தின் காரணம் உணர்ந்திருந்தனர்.

பின் அவளை இறக்கிவிட்டு விக்கி கையை பற்றி நின்றுக்கொள்ள, அதில் பெருமூச்சு விட்ட தேவிபிரியா “இப்போ என்ன பண்றது பங்கு” என்க,

அவளோ அப்பெட்டிக்குள் வட்ட வடிவில் தங்க நிறத்தில் மிளிர்ந்து கொண்டிருந்த ரெண்டு சக்கரங்கள் என்னவென்று புரியாமல் “பங்கு உள்ள ரவுண்ட்டா இருக்கிறது.. என்னடி” என்றவளுக்கு கடவுள் நம்பிக்கை சிறிதும் இல்லாததால் எப்போதும் அதனை பற்றிய ஆராய்ச்சிகளை மற்றும் தள்ளி வைத்து விடுவாள்.

தேவிபிரியாவிற்கு இவை பற்றிய ஆர்வம் இருந்ததால் கேட்டிருக்க, அவளும் “இது கால சக்கரம்டி.. ரிசன்ட்டா நான் வாங்கின புக்ல படிச்சன்.. ஆனா இது மூணு இருக்கணும் ரெண்டு தான இருக்கு.. ஒன்னு மிஸ் ஆகுதே” என்றதை கேட்டு,

சம்யுக்தா “வெயிட் வெயிட்” என்று அப்பெட்டியில் நடுவிலிருந்து சின்னத்தை பார்த்து தாடையை தடவியவள் “ஏய் பங்கு இந்த சிம்பில் எங்கையோ பாத்து இருக்கேன்டி” என்று யோசிக்க, மூவரும் கூட அதனை பற்றிய யோசனையில் தான் இருந்தனர்.

விடை கண்டுபிடித்த விக்கி “ஹே காய்ஸ்.. இந்த சிம்பில்ல இத விட கொஞ்சம் பெரிய பெட்டி காட்டம்மன் சிலைக்கிட்ட பாத்தோமே.. சம் உன் மொபைல்ல பிக் எடுத்தியே”

“அட ஆமா” என்று தோள்பையிலிருந்த தன் திறன்பேசியை தேட, அதுவோ இல்லாததில் “ஷிட் போன வீட்டுல மிஸ் பண்ணிட்டேன்” என்றவள் “அப்போ அந்த காலியான பெட்டில.. இந்த பெட்டி தான் இருந்திருக்குமா” என்க,

தேவா “அதான் கன்பார்ம் தெரியலையே.. அந்த பிக் பாத்தா தெரியும்..” என்று யோசனை வந்தவனாக “ஏய் பியூட்டி அன்னைக்கு உன் ஃபோன்லயும் எடுக்க சொன்னா தான.. உன் ஃபோன் கொடு” என்றதும்,

அவளும் வேகமாக தன்னுடைய திறன்பேசிலிருந்த, அந்த புகைப்படத்தை இதனோடு ஒப்பிட்டு பார்த்தவள் “பங்கு அதே சிம்பில் தாண்டி.. பட் எப்படி இங்க வந்திருக்கும்”

“அதான் நானும் யோசிக்கிறேன்.. சரி நீ சென்னைலயிருந்து கிளம்பும் முன்ன இந்த காட்டம்மன் பத்தி சர்ச் பண்ணியா”

“ம்ம்.. ஆமாடி அதாவது ரிஷி முனிவர்கள்லாம் வாழ்ந்த காலத்துல தீய சக்திகள் அதிகம் நடமாடி மக்களை அளித்து அல்லது.. அதோட சக்தியால சில மக்களை தன்னோட தீய கைப்பாவைகளா மாத்திட்டு நம்ம மண்ணையே மொத்தமா நாச்சமாக்க முயற்சி பண்ணிருக்கு.. அப்போ தான் சக்தி வாய்ந்த ரிஷிக்கள் முனிவர்கள் அவங்க கூட அத தடுக்க முடியாம.. இந்த காட்டு குகைக்குள்ள தாய் பார்வதி தேவிக்கு யாகம் வளத்து விரதம் இருந்து.. அதுல உருவானது தான் மூன்று காலச் சக்கரம்..

அதே நேரம் இந்த காட்டுல பார்வதி தேவி காட்சி கொடுத்து ‘இன்று பொளர்ணமி இரவு போல் இக்கால சக்கரங்களை என் பாதத்தில் வைத்து விரதமிருந்து விடிய விடிய பூஜை செய்து.. அதனை பொழுது விடியும் வேலையில் சூரிய வெளிச்சத்தில் காட்டினாள்.. அதன் ஒளி காலச்சக்கரத்தில் பட்டு எத்திசைகளிலும் பரவ தீய சக்திகள் அழிந்து பிரபஞ்சம் பழமை போல் காட்சியளிக்கும்..

அதே போல வருடம் வருடம் விரதமிருந்து ஒவ்வொரு பொளர்ணமியும் இரவு போல சில நிமிடம் பூஜை செய்தால் இனியும் கெட்ட சக்திகள் இப்புவியை அண்டாது.. நினைவில் வைத்து கொள்வது என்னவென்றால் மூன்றுமே ஒன்றாக இருந்தால் மட்டுமே சக்திகள் வேலை செய்யும் பூஜையையும் பயன் பேரும்..

இவ்விடத்தில் எழுந்த என்னை காட்டம்மானாக போற்றுங்கள்’ இப்படி சொல்லிட்டு அவங்க அங்க சிலையாக பார்வதி தேவி சொன்னது போல காட்டம்மனா வணங்க தொடங்கினாங்க.. அதுலயிருந்து பூஜை தொடர்ந்து நடக்குதுன்னு புக்ல இருந்துச்சு.. பட் இப்போ கால சக்கரம் இங்க இருக்கும் போது எப்படி பூஜை பண்றாங்க”

“வாட் எவர் பங்கு.. இந்த காலச் சக்கரம் தான் நம்மள காக்குதுன்னா நாட்டுல பல கொல ரேப் செஞ்சிட்டு வெளியே திரியுற தீய சக்திகள்லாம் உயிரோட தான இருக்காங்க.. அண்ட் தப்பு தான் நடக்காம இருக்கா.. இதெல்லாம் வெறும் கட்டு கதை” என்றதுக்கு

தேவா “அப்படி சொல்ல முடியாது யுதா.. நமக்கு மேல இருக்கிற தெய்வ சக்தி உண்மை தான்.. அதோட சில விஷயம் விதிப்படி காரணமா தான் நடக்கும்.. ஒருவேளை பிரியா சொன்ன கதை போல இந்த சக்கரத்தை பாதுக்காக்காம இருந்தா யாராவது இந்த சக்திய மிஸ் யூஸ் பண்ணி மக்கள அடிமைப்படுத்தி நாட்டை சுடுகாடா மாத்திருவாங்க.. சோ அது அது அங்க இருக்கிறது நல்லது.. அண்ட் இப்போ இது கையலயும் கிடைக்க முன்னாடி இருந்த இடத்துக்கே வச்சிட்டா சேப்” என்க,

விக்கியோ “அது சரி தான்.. இதுல ரெண்டு தான இருக்கு.. ஒன்னு இல்லாம எப்படி” என்று விக்கியின் கேள்விக்கு சம்யுக்தா அளித்த பதிலில் மூவரும் திகைத்து விட்டனர்.

- துயர் தொடரும்...
 

Author: STN - 95
Article Title: துணை - 14
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Like
Reactions: ஷமீம்

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,290
384
83
Chennai
இந்த குகை குள்ள ஏதோ ஆபத்து, something இருக்குனு முதல் எபிலா சொன்னிங்க.....
பட் இப்பவரை இவங்க அது மாறி ஏதும் ஃபேஸ் பண்ணலயே🤔🤔🤔🤔🤔

காட்டில் காட்டு யானை இருப்பது இயல்பு.....மத்தபடி ஒன்னும் இல்லையே ரைட்டர்
 

STN - 95

Member
May 5, 2026
53
43
18
இந்த குகை குள்ள ஏதோ ஆபத்து, something இருக்குனு முதல் எபிலா சொன்னிங்க.....
பட் இப்பவரை இவங்க அது மாறி ஏதும் ஃபேஸ் பண்ணலயே🤔🤔🤔🤔🤔

காட்டில் காட்டு யானை இருப்பது இயல்பு.....மத்தபடி ஒன்னும் இல்லையே ரைட்டர்
🫣🫣Adutha epila varum.. nandri akka