பேத்திகள் இருவரின் அதிர்வையும் கண்டுகொள்ளாத பாட்டியோ ஆடவர்களை அறிமுகப்படுத்தும் நோக்கில் “இவனுங்க கீதா பசங்க” என்று சிவப்பு சட்டைக்காரனை கைக்காட்டி “இவன் தேவேந்திரன்.. இவன் விக்னேஷ்வரன்” என்று கருப்பு சட்டைக்காரனை அறிமுகப்படுத்தி முடித்து வைக்க,
ஏற்கனவே அவனை கண்டு அதிர்விலிருந்த தேவிபிரியா ‘எதெய் அத்தமா பையனா இவன்’ என்று நினைத்தபடி அவன் தன்னை முறைப்பதை கண்டு அசடு வழிந்து பெண்ணவள் நழுவ பார்க்க,
அவள் கையை பற்றி தடுத்த முதியவர் “அடியே எங்க போற.. ஐஸ் கிரீம் சாப்பிட ஆசைப்பட்ட தான இவனுங்க கூட போய் சாப்பிட்டு அப்படியே சாப்பிட்ட சாப்பாடுக்கு காலாற நடந்துட்டு வா”
‘ஆத்தி.. இந்த கிழவி வேற நேரம் காலம் தெரியாம யார்கிட்ட வந்து கோர்த்து விடுது.. வேண்டாம் பிரியா சிக்கின சின்னா பின்னமா சிதைச்சிடுவான் அப்படியே ஜகா வாங்கிடுடி கைப்புள்ள’ என்று தனக்குள்ளே நொந்த தேவிபிரியா “அய்யோ ரூப்ஸ்.. எதுக்கு அவங்கள டிஸ்டர்ப் பண்ணிட்டு நம்ம ஊரு தான நானும் பங்கும் காலாற நடந்து போய் வாங்கிக்குறோம்”
“அடியே ஊர் முன்மாதிரி இல்ல நிறைய மாறிட்டு.. எது எங்க இருக்குன்னு உனக்கு எப்படி தெரியும்.. அவனுங்கள கூட்டிட்டு போய் வாங்கிக்க” என்றவர் பேரன்கள் புறம் திரும்பி “டேய் பிள்ளைங்கள கூட்டிட்டு போய்.. என்ன கேக்குறாங்களோ வாங்கி கொடுங்கடா” என்றதில் மிராண்ட தேவிபிரியா உறைந்து நின்ற தோழியை உலுக்கி “ஏய் பங்கு என்ன காப்பாத்துடி” என்க,
அதில் சுயம் பெற்ற சம்யுக்தா “அதெல்லாம் வேண்டாம் ரூப்ஸ்.. எங்களுக்கு பாளையங்கோட்டை பக்கம் ஒரு வேலையிருக்கு அத முடிச்சிட்டு வரும் போது எங்களுக்கு வேண்டியத நாங்களே வாங்கிக்கிறோம்”
“இன்னைக்கு தான பயணத்த முடிச்சி வந்திருக்கீங்க.. அதுக்குள்ள எதுக்கு அம்புட்டு தூரம் போய்கிட்டு”
“நாங்க வேல விஷயமா சேத்து தான் வந்திருக்கோம்.. அதையும் பாக்கணும்ல” என்றதும் தடுக்க தோன்றாத முதியவர்
“சரி சொன்னா கேட்கவா போறீங்க.. ஆனா தனியாலாம் போகவா வேண்டாம் அவனுங்க உங்கள கார்ல கூட்டிட்டு போவானுங்க” என்றதை கேட்டு இடைபுகுந்த விக்னேஷ்வரன் “இல்ல பாட்டி.. தேவா கூட்டிட்டு போவான் எனக்கு கொஞ்சம் வயல்ல வேலை இருக்கு” என்றவன் தேவிபிரியாவை மேலிருந்த முறைப்பு பார்வை மட்டும் மாற்றவேயில்லை.
அவன் வரவில்லை என்று கூறியதில் நிம்மதியடைந்த தேவிபிரியா ‘இவன் என்ன முறைச்சே எரிக்க டிரை பண்றான்.. இதெல்லாம் அவன பாத்து நம்ம தான பண்ணனும்.. இவன் முறைச்சா நான் எதுக்கு பயப்படனும் என்மேல தான் தப்பில்லயே’ என்று நினைத்தப்படி தோளை உலுக்கி கொள்ள,
அவனின் தோளில் கைபோட்ட இழுத்த தேவாவோ “அதெல்லாம் அங்கயிருக்கிற ஆளுங்க பாத்துப்பாங்க.. நீ என்கூட வாடா வெண்ணெய்” என்றவன் தேவிபிரியாவின் புறம் திரும்பி “ஓய் பியூட்டி போலாமா” என்றதில் விழித்தவள் “இப்போ என்ன எப்படி கூப்பிட்டீங்க”
“பியூட்டின்னு கூப்பிட்டேன்.. அழகா இருக்கிற பொண்ண அப்படி கூப்பிடுறது தப்பா என்ன”
“தப்பே இல்ல.. ஆனா உங்க பிரதர் பார்வையாலயே லைட் விட்டுட்டு இருக்கார் கொஞ்சம் குறைச்சிக்க சொல்லுங்க.. இல்லன்னா எரிஞ்சிடுவேன்” என்று இருவரும் மாறி மாறி ஜொள்ளு விடுவதில் மீதி இருவருக்கும் கடுப்பாகி விட, வேண்டா வெறுப்பாக பற்களை கடித்தவண்ணம் நின்று கொண்டிருந்தனர்.
இதில் சகோதரனை மேலும் எரிச்சலுட்டும் விதமாக தேவா “நீ விடு பியூட்டி அவனுக்கு பொம்பள பிள்ளைங்ககிட்ட எப்படி பழகனும் தெரியாது.. நான் அவனுக்கு கத்து கொடுக்கிறேன்.. நீ ப்ரெண்ட்ட கூட்டிட்டு வா” என்றதில் இப்போது சகோதரனின் முறைப்பு பார்வை தன்புறம் திரும்பியதை பொருட்டுப்படுத்தாமல் அவனை இழுத்து கொண்டு காருக்கு சென்று விட, ரூபாவதியும் கூட பெண்களுக்கு பத்திரம் கூறி அங்கிருந்து விடை பெற்றார்.
அவனின் பேச்சில் முத்து பற்கள் தெரிய புன்னகைத்த தேவிபிரியாவோ தோழியின் கரத்தை பற்றி “வாடி நம்ம மாமா வெயிட் பண்றார் போலாம்”
“நீ வேணா உன் மாமா கூட போ.. நான் வர மாட்டேன்.. அவன் ஆளும் மூஞ்சும் அவன பாத்தாலே பத்திக்கிட்டு வருது”
“எதேய் பத்திக்கிச்சா” என்று ஒரு மார்க்கமாக பார்ப்பவளை கண்டு
“அடியே நானே செம கடுப்புல இருக்கேன்.. நீ வேற டபிள் மீனிங் கண்டுபிடிச்சி உசுற வாங்காம போடி”
“பிளீஸ் பங்கு.. இன்னைக்கு தான் நம்ம ஊரு பையன சைட்டடிக்க வாய்ப்பு கிடைச்சிருக்கு.. ஆனா அவர் கூட இஞ்சி தின்ன குரங்கு ஒருத்தன் இருக்கான்ல.. அவன் தான் இன்னைக்கு ஸ்டேஷன்ல துப்பட்டா புடிச்சி இழுத்ததுடி.. நான் அடிச்சதுல வெறியாகி எப்போ என்ன குழில தள்ளி பழி வாங்கலாம்ன்னு காத்துட்டு இருக்கான்.. அந்த விஷ கிருமிக்கிட்டயிருந்து உன் பங்க காப்பாத்த கம்பனி கொடுடி” என்று வராத கண்ணீரை துடைத்து ஃபீல் செய்ய,
“என்னடி சொல்லுற இவனா.. நீ நினைக்கிற மாதிரி கிடையாதுடி விக்கி.. நீ தான் ஏதோ தப்பா புரிஞ்சிக்கிட்ட” என்றதை கேட்டு அவளுக்கும் அதே தோன்றினாலும் ஏனோ ஏற்று கொள்ளாமல் “நான் பொய் சொல்லுறேன் சொல்லுறியா.. அது சரி இத்தன வருஷம் அவன் கூட இருந்த போல சர்டிஃபிகேட் கொடுக்குற.. ஆனா கூடயிருந்தவள நம்ப மாட்டிக்க” என்று மறுபடியும் ஃபீல் செய்ய,
அதில் தலையிலடித்து கொண்ட சம்யுக்தா “உன்னோட எனக்கு பெரிய இம்சையா இருக்குடி.. நம்பி தொலையுறேன்” என்றதை கூட பொருட்படுத்தாமல் மறுக்க மறுக்க அவளை இழுத்து சென்றாள்.
***
இங்கு சம்யுக்தாவை போல் தான் காரில் சகோதரனுடன் பெண்களுக்காக காத்திருந்த விக்னேஷ்வரணும் “இப்போவும் ஒன்னும் கெட்டு போகல நான் இறங்கி போயிடுறேன்.. அவள பாக்கவே பிடிக்கலடா”
“விடு ப்ரோ.. நம்ம குடும்பத்து பொண்ணுங்க ரொம்ப வருஷம் கழிச்சி ஊர் பக்கம் வந்திருக்காங்க.. அவங்கள பாதுக்காப்பா கூட்டிட்டு போகுறது.. நம்ம கடமை தான” என்று நல்லவன் போல் பேசியவனை கண்டு
சந்தேகமாக தாடையை தடவிய விக்னேஷ் “டேய் டேய்.. நீ யாரு உன் பிளான் என்னன்னு எனக்கு தெரியும் உன் நல்லவன் வேஷத்த உன் பியூட்டியோட வச்சிக்க.. என்கிட்ட நடிப்ப போடாத” என்றதை கேட்டு கண்சிமிட்டிய தேவேந்திரன் இதழை வில்லாக வளைத்து வில்லங்கமாக புன்னகைத்தான்.
பின் பெண்கள் இருவரும் வருவதை கண்டு முகத்தை மாற்றி கொண்ட தேவா காரின் பின்னே ஏறி கொண்டவர்களை கண்டு அமைதியாக சிறிது தொலைவு சென்று காரை நிறுத்தியவன் பார்வையை பெண்கள் பக்கம் திருப்பி
“இப்படி ரெண்டு பேரும் பின்னால இருந்தா போகிற இடத்துக்கு வழி.. என் மாமனா சொல்வான்” என்றதை கேட்டு பெண்ணவள் முறைக்க, தேவிபிரியாவோ “வெயிட் வெயிட் இந்த இடத்தில உன் அப்பனான்னு தான டயலாக் வரும்..”
“அவ அப்பன் சொன்னா என்ன.. என் மாமன் சொன்னா என்ன ரெண்டு பேரும் ஒன்னு தான” என்றவன் யாருமறியாவண்ணம் சம்யுக்தாவை பார்த்து கண்ணடிக்க,
அதனை கண்டு கொள்ளாமல் தாடையை தடவி சிந்தித்த தேவிபிரியா “வேலிட் பாய்ன்ட் தான்” என்ற தோழியை பார்வையால் அடக்கிய சம்யுக்தா “பின்னால இருந்தே என்னால வழி சொல்ல முடியும்”
“ஆனா என்னால கேதர் பண்ண முடியாதே.. சோ பிளீஸ் கொஞ்சம் முன்னால வா மாமா பொண்ணு” என்றவனின் பேச்சை மதிக்காத சம்யுக்தா திறன்பேசியை விக்கியிடம் நீட்டி “விக்கி இந்த லொகேஷன் பாத்து உன் பிரதருக்கு சொல்லு” என்றதை கேட்டு,
அவன் விழித்ததும் சுதாகரித்த சம்யுக்தாவோ “என்ன அப்படி பாக்குற உன் பேரு அதான.. நான் தப்பா சொல்லலயே ரூப்ஸ் கூட அந்த பெயரு சொன்னுச்சு” என்றும் கூட ஆடவன் வியப்பு மாறாமலே திறன் பேசியை கையில் வாங்கி இருந்தான்.
பெண்ணவள் பெயரை கூறியதால் வந்த வியப்பு அல்ல, பல வருட பழக்கம் போல் உரிமையாக ஒருமையில் பேசியதால் வந்த திகைப்பு தான் அது.
இவன் இப்படி என்றால் தேவிபிரியாயோ ஆச்சாரியமாக பார்த்திருந்தாள்.
பின்ன ஆண்களிடம் அரவே முகம் கொடுத்து பேசுவதை தவிர்க்கும் தோழி, பழகாத ஒருவனிடம் எப்படி இயல்பாக பேசுகிறாள் என்று வியப்பாகவே இருக்க,
அவளின் மனமோ அவளின் குடும்பத்தினார் என்பதால் வந்த இயல்பாக இருக்கலாம் அல்லவா என்று தோழிக்காக பரிந்து பேச, அதனை தேவிபிரியா ஒத்து கொள்ளும்படி இருந்தாலும் ஏனோ பெண்ணவளின் மூளை குழப்பத்தில் ஆழ்ந்தது.
இக்கேள்வி தேவாவை ஆட்கொண்டாலும் அதனை தூர விளக்கியவன் சகோதரனின் கையிலிருந்த திறன்பேசியை பிடுங்கி “மாமா பொண்ணே.. இங்க டவர் பிராப்ளம் ரொம்ப இருக்கும்.. சோ லொகேஷன் நம்ப முடியாது”
“என் ஃபோன்ல அந்த பிராப்ளம் வராவே வராது.. சோ கார எடு மேன்” என்றதும் பல்லை கடித்த தேவா ‘மகாராணி கூப்பிட்டா முன்னாடி வர மாட்டா.. பாருடி வரும் போது உன்ன முன்னால ஏற வைக்கிறேன்’ என்று தனக்குள் சபதம் போட்டுவிட்டே சகோதரனிடம் மறுபடியும் திறன்பேசியை கொடுத்துவிட்டு, அவன் கூறிய திசைப்படி பயணத்தில் கவனம் செலுத்தினான்.
***
தமிழக அரசு தொல்லியல் துறை என்று பொரிக்கப்பட்ட அலுவலகத்திற்கு முன் காரின் மேல் சாய்ந்தப்வாக்கில் புகைத்து கொண்டு உள்ளே சென்ற பெண்களுக்காக காத்து கொண்டிருந்தனர்.
பெரிய அதிகாரி முன் மரியாதையாக நின்ற பெண்களிடம் “இது ரொம்ப ஆபத்தான மிஷன்.. ரெண்டு மூணு தடவ அங்க போய் பயந்து பாதிலயே பின் வாங்கி கைய விரிச்சிட்டு திரும்பி வந்தாங்க.. அந்த குகை பழங்காலத்துல முனிவர்கள் ரிஷிக்கள் வாழ்ந்த இடமா இருக்கு சோ கண்டிப்பா அங்க எதாவது கிடைக்கும்.. சோ சீக்ரெட்டா உங்கள இந்த மிஷன்ல இறக்கிறோம்.. அதோட நீங்க கண்டிப்பா எதாவது உலகத்துக்கு புதுசா காட்டுவீங்க நம்புறேன்” என்று ஒரு கோப்புவை பெண்கள் கையில் கொடுக்க,
அதை வாங்கி கொண்டவர்கள் “நாங்க பாத்துக்குறோம் சார்..” என்றப்படி அவரின் அறையை விட்டு வெளியே வந்திருக்க, சம்யுக்தாவோ “இன்னைக்கு நைட்டே ஸ்டார்ட் பண்றோம்”
“எதே நைட்டா.. எத்தன தடவ சொல்லிருக்கேன் அதிகமா நைட்டுக்கு எந்த பிளானும் போடாதன்னு”
“நம்ம என்ன மறுவீட்டுக்கா போறோம் காலைல போய் மதியம் விருந்து சாப்பிடுறதுக்கு.. சார் சொன்னத கேட்டல சோ நைட் தான் சரியா இருக்கும்” என்றதை கேட்டு சிந்தித்த தேவிபிரியா “அப்போ ஒரு டைம்பாஸ்க்கு தேவா மாமாவும் கூட்டிட்டு போவோம்” என்க,
அதில் தோழியை தீயாக முறைத்த சம்யுக்தா, எதுவும் கூறாமல் வெளியே வந்தவள் புகைத்து கொண்டிருந்த தேவாவை முறைத்துவிட்டு காரின் முன் பக்கம் ஏறிக்கொள்ள,
தான் அமர வேண்டிய இடத்தில் பெண்ணவள் அமர்ந்ததும் கையிலிருந்த சிகரெட்டை கீழே போட்ட விக்கி “ஹலோ அது என் சீட்” என்றதும் இருக்கையை சுற்றி பார்த்தவள் “இந்த சீட்ல எங்கேயும் விக்னேஷ்வரன்னு உன் பெயரு இல்லையே” என்றதும் தேவா கிளுக்கென்று சிரித்து விட,
அவனை முறைத்த விக்கி “வரும் போது பின்னாடி தான வந்த”
“அப்போ போகும் போதும் பின்னாடி தான் இருக்கணும்ன்னு எதாவது ரூல்ஸ் போட்டு இருக்கீங்களா என்ன.. சரி விடு பின்னாடி தான் உன் ஆளு உக்காருவா சோ.. அவ கூட உக்காரு” என்றதில் பற்களை கடித்த விக்கி,
இதற்கு மேல் பேசினால் அவள் எதாவது பேசி மேலும் கடுப்பாக்கி விடுவாள் என்று தோழியே தீர்ப்பை மாற்றி விடு என்பது போல் கெஞ்சல் பார்வை பார்க்கும் தேவிபிரியாவை முறைத்துவிட்டு பின்னயே ஏறிக்கொள்ள,
தன்னுடைய டிரைவர் சீட்டில் அமர்ந்த தேவாவோ ‘பரவால நம்மலே எதாவது பிளான் பண்ணி முன்னால அவள ஏற வைக்க நினைச்சா.. செல்லகுட்டி நமக்கு வேலை வைக்காம அவளே ஏறிட்டா..’ என்று உள்ளுக்குள் குஷியான தேவா அப்போது மறுத்தவள் இப்போது எப்படி மாறினாள் என்றெல்லாம் ஆடவன் சிந்திக்கவில்லை.
பின் தான் தேவிபிரியா ஏறாமல் நின்றதை கண்டு “ஓய் பியூட்டி கார்ல ஏறு” என்றதும் தோழியை முறைத்துவிட்டு நொந்து காரில் ஏறியவள் ‘அடிப்பாவி அங்கேயே அவன கூட்டிட்டு போக நோ சொல்லாம.. இப்போ என்ன அவன் கூட பின்னாடி உக்கார பழி வாங்குறியே துரோகி’ என்று உள்ளுக்குள் அவளுக்கு வசவு பாடியவள், தன் அருகில் இருந்தவனை பார்க்க,
அவனோ கடுகடுவென்று அமர்ந்திருக்க, இருவரின் நினைவும் அவர்களின் முதல் சந்திப்பை நோக்கி இருந்தது.
***
ரயில் நிலையத்தில் தங்களை அழைத்து செல்ல வந்த காரை நோக்கி போகும் போது தேவிபிரியாவோ “பங்கு.. நீ கார் பக்கம் போ.. நான் ரெஸ்ட் ரூம் போயிட்டு வரேன்” என்று தோழியை அனுப்பி வைத்துவிட்டு கழிவறை சென்று வந்தவள்,
பயணத்தால் முகம் சற்று வாடி போய் இருந்ததால் ரயில் நிலையத்திலிருந்த தண்ணீர் பைப்பில் முகத்தை சோஃப் போட்டு கழுவி கொண்டிருக்க, பெண்ணவளின் துப்பாட்டா கழுத்தைவிட்டு இழுத்து சென்று விட்டது.
சோப்பாக இருந்ததால் முகத்தை அடித்து கழுவிய முடித்தவள் “எந்த நாய் துப்பாட்டவ இழுத்துச்சுன்னு தெரியல” என்று அதனை தேடியப்படி, சற்று முன் நடந்தவளின் கண்ணில் ஒரு ஆடவன் தன் துப்பாட்டாவை கையில் சுற்றிப்படி இருந்ததை கண்டு ருத்ரகாளியாகியாக மாறிய தேவிபிரியா அவனருகில் சென்று ஆடவனை இழுத்து கன்னத்திலே சப்பென்று வைத்தாள்.
அவள் அடித்ததில் முதலில் அதிர்ந்தவன் பின் வெறியாகி “ஏய் யாருடி நீ எதுக்குடி அடிச்ச”
“டி போட்டு பேசினா பல்ல உடைச்சுருவேன்டா நாயே_ என்றபடி அவனின் கையிலிருந்த துப்பாட்டவை பிடித்து இழுத்தவள் “பொறுக்கி..” என்று முறைத்தபடி அங்கிருந்து விலக, பின் தான் அது பெண்ணவளின் துப்பட்டா என்றும் அதோடு அவள் தன்னை தவறாக நினைத்துவிட்டாள் என்பதையும் ஆடவனால் உணர முடிந்தது.
ஆனாலும் பெண்ணவள் அடித்ததில் வலியுடன் கோவத்தையும் கொடுக்க செல்லும் அவளை கடுகடுவென்று பார்த்திருந்தான்.
அப்போது அவனின் தோளில் கைபோட்ட தேவா “என்னடா வந்த வேலைய விட்டுட்டு சைட் அடிச்சிட்டு இருக்க” என்க,
ஏற்கனவே கடுப்பில் இருந்தவன் இன்னும் வெறியாகி “என்ன பாத்தா சைட் அடிச்சா மாதிரியா இருக்கு” என்று சகோதரனை பாய,
அதில் விளையாட்டை விட்ட தேவா “அதுக்கு ஏன்டா என்ன குதருற..” என்றவன் அவன் கன்னத்தில் கைவைத்திருக்கும் நிலையை கண்டே யூகித்து “எதுக்கு அவ உன்ன அடிச்சா” என்றதுக்கு ஆடவன் நடந்ததை கூறினான்.
- துயர் தொடரும்..