தேவேந்திரன் விக்னேஷ்வரன் இருவருமே விவசாயம் அழிந்து விட கூடாது என்பதற்காக, அதன் சம்பந்தபட்ட படிப்பை தேர்ந்தெடுத்து வெற்றிகரமாக படித்து முடித்த்திருந்தனர்.
பின்னர் தங்களுக்கென்று சொந்தமாக நிலம் வாங்கி, தாங்களே சொந்தமாக அரிசி கோதுமை சில வகை காய்காரி பழங்கள் என்று விளைச்சல் செய்பவர்கள், தாங்களே பெரிய பெரிய இடத்தில் மொத்தமாக விற்பனை செய்து, நல்ல வருமானத்துடன் வளம் வருகிறார்கள்.
அதன் விற்பனை விஷயமாகவே ரயில் நிலையம் வந்திருந்தவனின் தோள்பையில் எதிர்பாரா விதமாக பெண்ணவளின் துப்பட்டா மாட்டிக் கொள்ள, அதை சற்று தள்ளி வந்தே கண்டு கொண்டவன் யாருடையதாக இருக்கும் என்று சுற்றி தேடியப்படி தன்னை மறந்து கையில் சுற்றி கொண்டான்.
அவன் கையிலிருந்த தன்னுடைய துப்பட்டாவை கண்டு தான் ஆடவனை தவறாக எண்ணி அடித்துவிட்டாள் என்று நடந்தவையை சகோதரனிடம் கூற, வரும் போது தூரத்திலே தேவிபிரியாவை கண்ட தேவாவோ “சரி விடு.. நம்ம வீட்டுக்கு தான் வருவா.. ஒரு கை பாத்துக்கலாம்”
“என்னடா சொல்லுற.. அவள பாத்தியா”
“ம்ம்.. அவ சம்யுக்தா ப்ரெண்ட் பிரியா” என்க,
அப்பெயரில் ஒருநொடி தடுமாறியவன் “இது வேறயா.. வீட்டுக்கு போயும் அவ மூஞ்சில தான் முழிக்கணுமா” என்றப்படி இருவரும் வந்த வேலையை பார்க்க செல்ல, அதே வேளையில் கடுப்புடன் காரருகில் வந்த தோழியிடம் சம்யுக்தா என்னவென்று விசாரிக்க,
தேவிபிரியாவோ தான் தவறாக புரிந்து கொண்டதை அவளிடம் கூற, அதில் கோவம் கொண்ட சம்யுக்தா “என்னடி சொல்லுற.. உன்கிட்ட தப்பா நடந்துருக்கான் சும்மாவா விட்டு வந்த.. எங்க அவன்” என்றவளை அடக்கியவள் “நீ வாடி.. ஏற்கனவே இழுத்து ஒன்னு வச்சிட்டு தான் வந்திருக்கேன்” என்றபடி தோழியை சமாதானம் படுத்திவிட்டே அங்கிருந்து கிளம்பினார்கள்.
இருவருமே தங்களின் சந்திப்பின் நினைவைவிட்டு வெளியே வந்து ஒருவரை ஒருவர் மாறி மாறி வீடு வருவரை முறைத்தப்படியே அமர்ந்திருக்க,
தேவாவோ காரை ஓட்டியப்படி ஓரக்கண்ணில் பெண்ணவளை சைட் அடித்து கொண்டிருந்தான்.
அதனை உணர்ந்த சம்யுக்தாவும் கண்டும் காணதது போல் ஜன்னல் புறம் பார்வையை செலுத்திருந்தாள்.
***
மாலை நேரம் இரு பெண்களும் தங்களின் அறையில் தேனீர் பருகியப்படி பேசி கொண்டிருக்க,
அப்போது கதவை சரட்டென்று திறந்து கொண்டு வந்த ஒரு பெண் நொடியில் சம்யுக்தாவை தாவி அணைத்திருக்க, அது தன் தங்கை என்று அறிந்த சம்யுக்தாவும் மகிழ்வுடன் அணைப்பை ஏற்றிருந்தாள்.
அதில் புன்னகைத்த தேவிபிரியா “அடியே.. நானும் இங்க தான் இருக்கேன்” என்றதும் அவளை இழுத்து சேர்த்து அணைத்து கொண்டவள் “ரியலி நீங்க ரெண்டு பேரும் இந்த வீட்டுல இல்லன்னு எவ்வளவு மிஸ் பண்ணினேன் தெரியுமா.. இன்னைக்கு எனக்காக நீங்க வந்ததுக்கு ரொம்ப ஹேப்பியா இருக்கேன்” என்க,
அவளின் அணைப்பிலிருந்து விலகிய தேவிபிரியா “நடிக்காதடி.. அவ வந்தது வேணா ஹேப்பின்னு சொல்லு நம்புறேன்.. நான் உனக்கு இம்சையா தான தெரியுவேன்” என்று தங்கையை வம்பிழுக்க,
அதில் செல்லம் கோபம் கொண்டவள் “பாருக்கா இவள.. ஆமா இம்சை தான் என் செல்ல இம்சை” என்றபடி தேவிபிரியாவை அணைத்து முத்தமிட்டாள்.
“அடியே நான் பொண்ணுடி.. உன் பாய் ஃப்ரெண்ட்ன்னு நினைச்சி.. எனக்கு கிஸ் அடிக்கிற” என்று கன்னத்தை துடைத்தவளை கண்டு “ச்சீ பே” என்று மூக்கு விடைக்க முறைத்து தள்ளினாள்.
அவர்களின் அழும்பில் சிரித்த சம்யுக்தா “அவள விடு ஶ்ரீமா.. உனக்கு ஸ்டடீஸ் எப்படி போகுது.. ஆரியர்லாம் இருக்குன்னு கேள்விப்பட்டேன் ஒழுங்கா படிக்கிறியா இல்லையா”
“அது ஒரு ட்ராக்ல போகுது.. தங்கச்சி ஆசையா பேச வந்தா எப்படி இருக்க இல்ல ஏன்டி சரியா சாப்பிடுறது இல்லையா மெளிஞ்சா மாதிரி தெரியுற அப்படின்னு சென்டி சீன் போடுவியா.. அத விட்டுட்டு வந்துட்டா ஹெட்மாஸ்டர் மாதிரி கேள்வி கேட்டுட்டு” என்றுதுக்கு கிலுக்கென்று சிரித்த தேவிபிரியா
“அதான் அபிமா உனக்கு மூணு வேலை சோறு போட்டு மாடு மாதிரி தான வளத்து வச்சிருக்காங்க.. நல்லருக்குறவள எதுக்கு நல்லா இருக்கியான்னு கேட்டு டயலாக் வேஸ்ட் பண்ணிக்கிட்டுன்னு நினைச்சிருப்பா இல்ல பங்கு” என்று தோழியையும் கூட்டு சேர்க்க, அவளோ ஹைஃபை கொடுத்து கொண்டாள்.
அதில் கடியாகிய அவர்களின் தங்கை ஶ்ரீமா என்றழைக்கப்படும் ஶ்ரீநிதி தமக்கைகள் இருவரையும் மொத்தி எடுத்துவிட்டாள்.
அப்போது அவ்விடம் கீதாராணியுடன் வந்த அபிராமி மூவரையும் பிரித்துவிட்டு “வந்ததும் ஆரம்பிச்சிட்டியா” என்றதுக்கு ஶ்ரீ மூக்கை உறிஞ்சியப்படி “இந்த பிரியா என்ன மாடுன்னு சொல்லுறாமா_ என்று குற்றபத்திரிக்கை வாசிக்க,
“உண்மைய தான சொல்லிருக்கா.. போ ஏதோ ஆசைன்மெண்ட் இருக்குன்னு சொன்ன தான அத முடிக்கிற வேலைய பாரு.. இல்லன்னா அந்த ஒருநாள் தவிர எக்ஸ்டரா லீவ் எடுக்க விட மாட்டேன்”
“உனக்கு உன் செல்ல பொண்ணுங்க தான முக்கியம்.. நான் போறேன் எனக்கு ஸ்நாக்ஸ் எடுத்து வா” என்று செல்லமாக கோபித்து முகத்தை வெட்டிக்கொண்டு சென்றாள்.
அதில் தலையிலடித்து கொண்ட அபிராமி இளைய மகளுக்கு தின்பண்டம் கொடுக்க சென்று விட, இரு பெண்களின் அருகில் அமர்ந்த கீதாராணியோ “உங்களுக்கு என்னடி ஆச்சு.. என் மகனுங்க ரெண்டு பேரையும் முறைச்சிட்டே திரியுறீங்க” என்க,
சம்யுக்தாவோ “ஏன் அவனுங்க முறைக்கிறது.. உன் கண்ணுக்கு தெரியலயா” என்றதுக்கு தேவிபிரியாவும் “அதான” என்றாள்.
“சரி என்ன தான் நடந்துச்சு” என்றதுக்கு தேவிபிரியா “முதல் சந்திப்பே முட்டிக்கிச்சி அத்தமா” என்றவள் தோழியின் புறம் திரும்பி “அடியே நான் கூட கேக்கணும் நினைச்சி மறந்துட்டேன்.. உனக்கும் தேவா மாமாக்கும் என்ன தகராறு” என்றதை கேட்டு தோழி மற்றும் அத்தையை ஒரு பார்வை பார்த்தவள் இன்று காலை நிகழ்ந்தவையை கூறினாள்.
***
காலை கீதாராணி அறையில் விட்டு சென்றதும் பழைய நிகழ்வுகளில் உழன்று கொண்டிருந்தவளின் எண்ணத்தை கலைக்கவே பெண்ணவளின் திறன்பேசி அலற, அழைப்பை ஏற்றவள் உள்ளே சரியாக சிக்னல் கிடைக்காததில் அறையை விட்டு வெளியே வந்து அங்கிருந்த பால்கனி பக்கம் சென்று பேச,
மறுமுனையில் என்ன கூறப்பட்டதோ அதனை கேட்டுக்கொண்டு “ஓகே சார்.. வேலைய சீக்கிரம் முடிச்சிட்டு ரிசல்தோட வரேன்.. சீ யூ சூன்” என்று அழைப்பு துண்டித்து விட்டு திரும்பியவள் பின்னே இளநீர் உடன் நின்றவனை கண்டு பதறி தடுமாறி விட,
ஒரு கையில் இளநீரையும் மற்றொரு கையில் பெண்ணவளை விழாதப்படி இடையோடு சேர்த்து தாங்கி பிடித்தான் தேவேந்திரன்.
சில வினாடி, அவனின் கண்ணை பார்த்திருந்த சம்யுக்தா பின் சுதாகரித்து அவனைவிட்டு விலகி அறிவில்ல “இப்படி தான் பக்கத்துல வந்து நிக்கிறதா”
“இளநீர் கொடுக்க சொல்லி சொன்னாங்க.. அதான் வெட்டி கொண்டு வந்தேன்” என்றவன் தலையில் கட்டியிருந்த துண்டை ஒருமுறை பார்த்த பெண்ணவள் “அது தள்ளி நின்னு கூப்பிட்டு கொடுக்க வேண்டி தான.. வேலைக்காரன் நீ இப்படி தான் இந்த வீட்டு பொண்ணு பக்கத்துல நிப்பியா.. ச்சீ கொஞ்சம் கேப் கிடைச்சாலும் பொண்ண உரசிட வேண்டியது” என்று அறுவெறுப்பு பார்வை பார்க்க,
அதில் எழும் கோபத்தை அடக்கிய தேவாவோ பெண்ணவள் தன்னை தவறாக புரிந்து கொண்டால் என்று அமைதி காத்து இளநீரை நீட்ட,
அதனை அழுத்தமாக பார்வை பார்த்தவள் “இப்போ இத உன்ன நம்பி நான் குடிச்சா.. பின்னாடி நீ என்கிட்ட எதாவது கலந்து கொடுத்து என்கிட்ட அட்வாந்தேஜ் எடுத்துக்க மாட்டன்னு என்ன நிச்சயம்.. சோ எனக்கு இது வேண்டாம்” என்றவளை நக்கலாக ஏறிட்ட தேவா “பின்னாடி ரொம்ப வருத்தப்படுவீங்க மேடம்”
“நான் எதுக்கு வருத்தப்படனும்.. விசுவாசமா இருக்கிற போல நடிக்கிற ஆம்பளைங்கள நான் நம்பவே மாட்டேன்.. சோ உன் வேலைக்கார நடிப்ப என்கிட்ட காட்டாத” என்று அவன் கையிலிருந்த இளநீரை தட்டிவிட்டு செல்ல,
அவளின் உதாசினத்தில் கடுப்பான தேவாவோ “அவ அப்பன் புத்தி இருக்க தான செய்யும்” என்றபடி கோவத்தை கம்பியை அழுத்தி கட்டுப்படுத்தி கொண்டான்.
பின் ‘நம்மள பார்த்தா வேலைக்காரன் மாதிரியா இருக்கு’ என்று எண்ணியபடி கையிலிருந்த திறன்பேசி மூலம் தன்னை கண்டவன் நெற்றியில் கட்டிருந்த துண்டை எடுத்துவிட்டு ‘தலையில துண்டு கட்டினதுக்குலாம் வேலைக்காரனா ஆக்கிட்டா.. முத கெட்டப் மாத்துவோம்” என்றப்படி ஆடையை மாற்றிவிட்டே அடுத்த வேலையை பார்க்க கிளம்பினான்.
இரு பெண்களையும் ஆடவனுக்கு தெரிந்திருப்பத்தை போல் சம்யுக்தாவிற்கு அவளின் பாட்டி அறிமுகப்படுத்தும் வரை ஆடவர்கள் இருவரும் யாரென்று விஷயம் தெரியவில்லை என்று கீதாராணியிடமும் தன் தோழியிடமும் நடந்ததை கூறி முடித்தாள்.
அவளின் உணர்வுகள் புரிந்த கீதாராணியும் “சரி விடு பப்பு.. உனக்கு அவன் யாருன்னு தெரியாம பேசிட்டன்னு புரிஞ்சிப்பான்”
“ஆனா அத்தமா உங்க பையன பத்தி உங்ககிட்ட சொல்லுறேன் நினைக்காதீங்க.. எனக்கு அவன பாத்தாலே பிடிக்கல” என்றவளின் தலையில் செல்லமாக தட்டியவர்
“என்ன இப்படி சொல்லிட்ட.. உன்ன அவனுக்கு கட்டிக் கொடுக்கணும் கனவு கண்டுட்டு இருக்கேன்”
“அத்தமா” என்று பெண்ணவள் முறைக்க,
“சரி முறைக்காத சும்மா தான் சொன்னேன்.. ஆனா என் பையன் ரொம்ப நல்லவன் தான் பழகிப்பாரு நீயே அவன்கிட்ட நட்பு பாராட்டுவ” என்றவர்,
அவளை அடுத்து பேச விடாமல் தேவிபிரியாவின் புறம் திரும்பி “உனக்கும் என் இன்னொரு மகனுக்கும் என்ன பிரச்சினை” என்றதுக்கு ரயில் நிலையத்தில் நிகழ்ந்தவையை கூறினாள்.
அதில் கிலுக்கென்று சிரித்தவர் “ஹாஹா.. எது அவன் உன் ஷால புடிச்சி இழுத்தானா.. ரெண்டு பேரும் நல்ல சொல்லுறீங்கடி கதை”
“அத்தமா.. அப்போ நான் பாத்தது பொய்ன்னு சொல்லுறீங்களா” என்றவளை பார்த்து,
மறுபடியும் சிரித்தவர் “ஏன்டி கண்ணால பாக்குறது கூட பொய்ன்னு கேள்விப்பட்டது இல்ல” என்றதுக்கு அவள் முறைக்கவும் “இங்க பாரு.. நீ நினைக்கிற மாதிரி அவன் இல்ல.. உனக்கு சந்தேகமா இருந்தா என்ன நடந்துச்சுன்னு அவன்கிட்டயே கேக்கலாமே.. இங்க இருக்க போற கொஞ்ச நாளைக்கு நல்லா ஜாலியா பேசி வச்சி இருக்காம ஆளுக்கு முறைச்சிட்டு இருந்தா விஷேசம் நேரம் நல்லாவா இருக்கும்” என்றதை கேட்டு தேவிபிரியாவிற்கு ஏனோ அது சரியெனப்பட, நாம் தான் தவறாக புரிந்து கொண்டோமோ என்று தோன்றாமல் இல்லை.
தோழியின் சிந்தனை பதிந்த முகத்தை பார்த்துவிட்டு கீதாராணியை பார்த்தா சம்யுக்தா “விக்கி பரண்ட்ஸ் என்னாச்சி” என்றதும் முகம் வாடியவர் “அவங்க ரெண்டு பேருக்கும் கார்ல போயிட்டு இருக்கும் போது ஆக்சிடென்ட் ஸ்பாட் அவுட்.. அதுலயிருந்து என்கூட தான் இருக்கான்” என்க,
அதை கேட்டு வருத்தமடைந்த சம்யுக்தா “எப்போ”
“நீ இந்த ஊரவிட்டு போன கொஞ்ச நாள்லயே.. அதுலயிருந்து துரு துருன்னு இருக்கிறவன் ரொம்ப அமைதியாகி ஆயிட்டான்..” என்றதை கேட்டு தேவிபிரியாவிற்கு ஒரு மாதிரியாகி விட்டது.
இதிலும் அவன் கீதாராணியின் மகன் என்று நினைத்த; தேவிபிரியாவிற்கு அவன் பெற்றோரை இழந்து விட்டான் என்று தெரிந்ததில், ஏனோ இந்நிமிடம் அவனை காண சொல்லி மனது உந்தியது.
பின் முகத்தை மாற்றி கொண்டு எழுந்தவள் “வந்ததுலயிருந்து வீட்டுல பேசவே இல்ல.. நீங்க பேசிட்டு இருங்க” என்றப்படி திறன்பேசியை எடுத்து கொண்டு நழுவி விட, அவள் எங்கே செல்கிறாள் என்பதை உணர்ந்த சம்யுக்தா தலையாட்டி சிரித்து கொண்டாள்.
தேவிபிரியா சென்றதும் அவளின் கையை பற்றிய கீதாராணி “நாளைக்கு வொர்க் விஷயமா வெளிய போன அண்ணன் உன் முத்த மாமா.. அவர் பையன் மூணு பேரும் வராங்க” என்க,
இவ்வளவு நேரமிருந்த இதம் நீங்கி பெண்ணவள் முகம் இறுகி “அந்த ஆளு ஒன்னும் என் மாமா இல்ல.. என் டார்லிங் தவிர இனி என் வாயில யாரையும் மாமான்னு கூப்பிட மாட்டேன்” என்றவள் நொடியில் கண்கள் கலங்கி “விஜி அத்தைய பாக்கணும் அத்தமா.. இங்க தான் இருக்காங்க தெரியுது.. ஏனோ அவங்கள பாத்தா உடைஞ்சி அழுதுருவேன் பயமா இருக்கு”
“தேவையில்லாம யோசிக்காத பப்பு”
“அத்தமா நான் விஜி அத்தைய பாக்கணும் கூட்டிட்டு போங்க” என்றதை கேட்டு தயங்கிய கீதாராணி வேறுவழியின்றி, அவள் கையை பற்றி அழைத்து கொண்டு தன் தமக்கை விஜி என்றழைத்த விஜிதாவின் அறைக்குள் சென்றார்.-
- துயர் தொடரும் ...